குருஜி - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்.

கொங்கணர் சித்தர்

Written by

கொங்கணர் சித்தர்

 

கேரளாவில் கொங்கண தேசத்தில் சித்திரைமாத உத்தர நட்சத்திரத்தில் புளியர் குடியில் கொங்கனர் பிறந்தார். கொங்கணரின் குரு போகர். சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறை மந்திரங்களை போகர் சொல்லித்தந்தார். போகரை வணங்கிவிட்டு மலை உச்சியில் அமர்ந்து அம்பிகை மந்திரங்களைச் சொல்லித் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது மனதிற்குள் தோன்றியவாறு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான யாகத்தை செய்ய ஆரம்பித்தார். கௌதமர் அவர்முன் தோன்றி கொங்கணரே தவம் செய்துதான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விட்டு தவம் செய் என்றார்.

தில்லை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகம் செய்து சித்திகள் கிடைக்க அதன்மூலம் நிறைய குளிகைகள் உண்டாக்கினார். திருமழிசை ஆழ்வாரிடம் செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றைக் கொடுத்து ‘இது காணி கோடியை போதிக்கும்’ என்றார். ஆழ்வார் தம் உடம்பின் அழுக்கை திரட்டிஇரசவாதக் குளிகை இது காணியை கோடியாக்கும்” என்றார். இருவரும் நட்பு கொண்டனர்.

கொங்கணர் கடுந்தவம் செய்தார். இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தை செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். பிச்சை எடுத்த உணவையே உண்டார். தவம் செய்யும் போது ஒருநாள்மரத்தின் மேலிருந்த கொக்கு இவர் மேல் எச்சத்தை இட்டது. இவரதைப் பார்க்க அது எரிந்து சாம்பலாகியது. தன் சக்தியை நினைத்து பெருமை கொண்டார்.

திருவள்ளுவர் வீட்டில் பிச்சைகேட்டு வந்தார். வாசுகி அம்மையார் உணவு படைத்துக் கொண்டிருந்ததால் உடன் வந்து பிச்சையிட முடியவில்லை. சினங்கொண்டு இவ்வளவு நேரம் காக்கவைத்தாயன்றோ என விழித்து நோக்கினார். ஒன்றும் ஆகவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்க்க வாசுகி அம்மை நகைத்து ‘கொக்கென நினைத்தாயோ கொங்கணவா’’ என்றார். தான் காட்டில் செய்தது இவருக்கு எப்படித்தெரியும் என வியந்து அவர் கற்பின் மகிமையை வணங்கினார்.

அங்கிருந்து கிளம்பி பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் வீட்டிற்குச் செல்ல அவன் வந்து வணங்கி, சுவாமி, வாசுகி அம்மையார் நலமா என்றான். கொங்கணருக்கு மேலும் வியப்பு. நான் அங்கிருந்துதான் வருகின்றேன் என்று உனக்கு எப்படித் தெரியும் என்றார். சுவாமி நான் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து செயல்படுவதால் எங்களுக்கு ஏதோ சக்தி இருக்கின்றது என்றான். கொங்கணர் அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியன மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாகும் என அறிந்தார்.

போகரை சந்திக்க செல்லும் வழியில் பல சித்தர்களை சந்தித்தார். பின் குரு போகரை அணுகி ஆசி பெற்றார். அவர் திருமாளிகைத்தேவர் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ. உனக்கு அமைதி கிடைக்கும் என்றார். கொங்கணரை எதிர் கொண்டழைத்த திருமாளிகைத்தேவர் அவருக்கு சில ரகசியமான சாதக முறைகளை உபதேசித்து சமய தீட்சை, நிர்வாண தீட்சை முதலியன உபதேசித்தார்.

கொங்காணர் திருவேங்கடமலை சென்று தவம் செய்தார். அங்கு வலவேந்திரன் என்ற சிற்றரசன் கொங்கணரின் சீடரானான். திருவேங்கடமலையில் சமாதியடைந்தார்.

கொங்கணர் வாதகாவியம் 3000, முக்காண்டங்கள் 1500, தனிக்குணம் 200, வாதசூத்திரம் 200, தண்டகம் 120, ஞான சைதன்னியம் 109, சரக்கு வைப்பு 111, கற்ப சூத்திரம் 100, வாலைக்கும்பி 100, ஞானமுக்காண்ட சூத்திரம் 80, ஞான வெண்பா சூத்திரம் 49, ஆதியந்த சூத்திரம் 45, முப்பு சூத்திரம் 40, உற்பத்தி ஞானம் 21, சுத்த ஞானம் 16 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

கொங்கணசித்தர் தியானப்பூசைக்கு

“கொக்கை எரித்த கொங்கணரே அம்பிகை உபாசகரே

ஸ்ரீகௌதமரின் தரிசனம் கண்டவரே

இரசவாதம் புரிந்த திவ்யரே

உங்கள் திருப்பாதம் சரணம்,”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கருவூரார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வம், சாமந்தி, அரளி ஆகிய மலர்களால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

அம்பிகைப் பிரியவரே போற்றி

அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி

கம்பீரமான தோற்றம் உடையவரே போற்றி

கருணா மூர்த்தியே போற்றி

காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி

குலம் விளங்கச் செய்பவரே போற்றி

கொங்கு தேசத்து இரசவாத சித்தரே போற்றி

செல்வங்களைத் தருபவரே போற்றி

தீய கனவுகளிலிருந்து காப்பவரே போற்றி

நோய்களை அழிப்பவரே போற்றி

மாயையை அகற்றுபவரே போற்றி

வறுமையை அழிப்பவரே போற்றி

நிவேதனமாக பழம், கல்கண்டு, தயிர்சாதம் இவற்றுடன் மஞ்சள் அல்லது சிகப்பு வஸ்திரம் வைத்து வெள்ளிக்கிழமை வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

கேது கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக கேது தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். திருமணத்தடை மற்றும் களத்திற தோஷம் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடக்கும். போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகுதல் புகை பிடித்தல் குடிப்பழக்கம் நீங்கும். ஆன்மீக எண்னங்கள் தோன்றும். உறவினர்களின் பலம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகமாகும். சகவாச தோஷம் நீங்கும். மன வளர்ச்சி அபிவிருத்தி அடையும்.

“ஓம் ஸ்ரீகொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி”

                                         ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

 

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3456443
All
3456443
Your IP: 54.226.41.91
2018-01-17 04:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...