குருஜி - வைரவாக்கியம்

வாழ்வில் சொல்லை விட்டுக் கெட்டவனையும், மண்னாசையை விடாது கெட்டவனையும், தன்னைத் தொட்டுக் கெட்டவனையும், சாபத்தால் தொடாமல் கெட்டவனையும் புரிந்து தெளிந்து பயனித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாகும்.

1-1.எதை நோக்கி!

Written by

எதை நோக்கி!                                                                                                                           

தன் விருப்பிற்கு பிறவா கரு-உடல்-ஆன்மா தன்னைச் சுற்றியுள்ள ஆன்மாக்களுக்கு ஆனந்தம் அளிக்கின்றது. அதன் அடுத்தடுத்த வளர்ச்சி குழந்தை பருவம் முழுவதும் அதன் செயல்கள் அனைவரையும் கவர்ந்து மயக்கி மோனநிலை ஆனந்தத்தை வாரி வழங்குகின்றது, தன் நிலை உணரும் பருவம் வரை அது ஒருவரைச் சார்ந்து இயங்குகின்றது.

தன்நிலை உணர்ந்த பருவம் எய்திய உடன் தான், எனக்கு என்ற எண்ணங்கள் வளர வளர அது தன் சந்தோஷம், தனக்கு சந்தோஷம் தரும் செயல்களை தெரிவு செய்து, ஈடுபாட்டுடன் நாட்டம் கொண்டு செயல்பட ஆரம்பிக்கின்றது.
எல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம். சந்தோஷத்தை அடைய இடற்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அவையெல்லாம் கடந்து சந்தோஷம் காணும்போது, கடந்து வந்த இடற்பாடுகள் மறைந்து ஆனந்தம் ஏற்படுகின்றது. வாழ்வின் முடிவுவரை இந்த தேடல் தொடர்கிறது. இடற்பாடுகள், இன்னல்கள் கடந்து அடைந்த ஆனந்த சந்தோஷம் அளவில்லாதது.
நல்ல உணவு உண்டு, நல்ல நீர் அருந்தி, தீயப் பழக்கங்களைவிட்டு, நல்ல பழக்கங்களுடன் இருந்தால் எப்போதும் உயிருடன் இருக்கமுடியுமா! எப்போதும் யாரும் உயிருடன் இருக்க முடியாது. பிறகு உன் வாழ்நாளையாவது நீட்டிக்க முடியுமா! அதுவும் சாத்தியமில்லை! நீடித்து என்னபயன்! எதிர்கால சுகங்களும், இறந்தகால மகிழ்ச்சியும் உனது அனுபவமே! அப்படியானால் நான் என்னை அழித்துக் கொள்ளலாமா! தேவையில்லை! 
வாழும் ஆசையில் தொடங்கி பேராசையில் வளர்த்து சிக்கலில் சிக்கித் தவிக்கும்போது உடலிலிருந்து உயிரை பிரிக்கும் எண்ணங்கள் தோன்றி வாழ்வு வட்டமாகி ஆரம்பித்த இடத்திற்கு வந்து முடிவாகின்றது. எனவே உயிரை பிரிக்கும் எண்ணங்களை விடுத்து வரும்போது வரட்டும் என வாழ்க்கைப் பாதையில் இணைந்து செல்! ஒவ்வொரு உயிருக்கும் உலக வாழ்க்கையில் வாழும் ஆசைவேண்டும். வாழ்தலின் மீது ஓர் மரியாதை உணர்வு வேண்டும். தன்மீது சுயமதிப்பு கொள்ள வேண்டும்.
நமக்கு ரோஜா மலர் வேண்டும். அதன் மனம் வேண்டும். அழகுவேண்டும். ஆனால் அதை பறிக்கும்போது அதன் முட்கள் நம்மை தீண்டும். வேதனைப்படுத்தும். அதைப்புரிந்து அதிலிருந்து விடுபட்டு நாம் மலரை நம் உணர்வுகளுக்காக, நமக்குள் ஏற்படும் சந்தோஷத்திற்காக பறிக்கின்றோம். அதுபோன்றே வாழ்வில் நமக்கு வேண்டியது வசந்தம். துன்பங்களையும், துயரங்களையும் நீக்கி வசந்தம் தரும் சந்தோஷங்களை தேடித்தேடிக் கண்டுபிடித்து, அடையவேண்டும். 
பல பருக்கைகள் கொண்ட உணவை நாம் எடுத்து உண்கின்றோம். ஒரு கல் இருந்தால் உணவில் கல் என்கின்றோம். 1000 இன்பங்களிடையே ஒரு துன்பம் வந்தாலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றது. வாழ்வே சலிப்பு என்கின்றோம். அது சரியில்லை. கல் நீக்கி உணவு உண்பதுபோல், சலிப்பை நீக்கி வாழ்வில் சந்தோஷம் காணவேண்டும்.
சந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை. எல்லா உயிர்களும் அந்த அளவில்லா சந்தோஷத்தை நோக்கியே செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. கஷ்டங்களைத் தாண்டியும் அந்த சந்தோஷத்தை அடையத்தான் நினைக்கின்றன. இது எல்லா உயிருக்கும் பொதுவான உலக நியதி.
அந்த சந்தோஷங்களை நாம் எவ்வாறு இழக்கின்றோம். ஏன் இழக்கின்றோம்! எப்படி அதை அடைய முயலுவது என்பதன் சிந்தனையே இந்த “சந்தோஷப்பூக்கள்”. ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகில் சந்தோஷம் காணலாம்’ என்ற கவிஞரின் கூற்றின் உண்மையை விளக்கி, உங்களிடையே மறைந்துள்ள திறன்களை வெளிக்கொணர்ந்து, செயலாக்க, வாழ்வில் சந்தோஷம் அடைதல் என்பதை உணர்த்துவதே இதன் குறிக்கோள்.
ஒவ்வொரு உயிரின் ஆன்மாவும் வாழ்வின் ரகசியமான சந்தோஷத்தை நோக்கியே பயனிக்கின்றது. இன்னல்களிடையே தோன்றும் அந்த சந்தோஷம் அந்த ஆத்மாவின் பயணத்திற்கு வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு உயிரும் அதை அடைய மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டியாக அமையட்டும் “சந்தோஷப்பூக்கள்” என்ற இந்த தொகுப்பு என்பதே இந்நூலின் ஆசிரியனின் நோக்கம்! எந்த நிலையிலும் ஆனந்தமாக இருப்பது என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது.
உலகில் உலவும் எந்த ஆன்மாவிற்கும் புத்தியோ அறிவுரையோ கூறி அவர்களை சங்கடப்படுத்த எண்ணமில்லாமல், அவர்கள் தம் வாழ்வின் சூழ்நிலையை, நிலையாமையை புரிந்துணர்வு கொண்டு, மனு தர்மத்தின் வெற்றி ரகசியங்களையும் தெரிந்து, அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, வாழ்வில் வெற்றி கொள்ள வேண்டும், வாழும் வலிமை அடையவேண்டும். சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்பதுதான்-- “சந்தோஷப்பூக்கள்”-குருஜியின் நோக்கம்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

பொருளடக்கம்

4585759
All
4585759
Your IP: 172.68.65.166
2018-03-21 14:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...