குருஜி - வைரவாக்கியம்

காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.

6-3.பூக்கள் பூத்தபூமி!

Written by

பூக்கள் பூத்தபூமி!                                                                                                                                                                                                                                                                  உலக உருண்டை பல கோடி விண்மீன்களுக்கிடையே எப்படி சுற்றிச் சுழலுகிறது. பருவங்கள் மாறி, இரவு பகல் என்று மாறி, மழை வெய்யில் என்று மாறி நிகழ்வுகளை பூமியில் அவ்வப்போது நிகழ்த்துகின்றது யார்! விதையிலிருந்து மரம், செடி கொடிகள் என வருவதும், ஓர் விந்திலிருந்து இத்தனை உறுப்புகளுடன் பலவிதமான உருவங்கள் தோன்றுவதும் எப்படி!
பிறப்புக்கும், இறப்புக்கும், அழிவுக்கும், தோற்றுவித்தலுக்கும் காரணம் என்ன! இன்பதுன்பங்கள் ஏன்! இதெல்லாம் இயற்கையா! அதன் பின்னனி எது! இவற்றுக்கொல்லாம் எளிய தெளிவான விளக்கங்கள் யாரிடம் உள்ளது! இந்த பிரபஞ்சத்தின் இரகசியம் அது. அதை முற்றிலும் அறிய முற்பட்டு ஒன்றும் பலனில்லை. அரிதிலும் அரிதான ஒன்று அது.
மனித சக்திக்கு மீறிய எல்லையில்லா அந்த பிரபஞ்ச ஆற்றலை சிறிதளவாவது தேர்ந்து தெளிய ஆன்மாக்களுக்கு ஞானம் வேண்டும். அது ஆத்மீகஞானம்.
ஆன்மாக்கள் ஞானத்துடன் வாழும் இடம் ஆனந்த பூமியாக, இன்பம் நிறைந்த உலகமாக, மாறவேண்டும். இந்த உலகில் ஆனந்தம் பூக்களாகப் பூத்துக் குலுங்கி இன்பம் மணமாக வீசவேண்டும்.
அதற்கு எல்லா ஆன்மாக்களும் அந்தந்த உடலுடன் செய்யும் செயல், எண்ணங்கள் பிற உயிர்க்கு பாதிப்புகள் வராமல் செயல்படவேண்டும். இத்தகைய இயக்கத்தை இப்புவி கொண்டால் தான் ஆனந்தபூமியின் அடையாளமாகும்.
‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’ என்கிறது வேதம். முதலில் தனக்கு சுகம் அளிக்கவேண்டும், இரண்டாவது அடுத்தவர் சிரமம் குறைக்கவேண்டும், மூன்றாவது மற்றவர் மகிழ்ச்சியை மகிழ்ச்சியாக காணவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒவ்வெருவரும் உங்கள் கர்மத்தின் பலனை உணர்ந்து, உங்கள் கோபத்தால் ஆவது என்ன! செயலால் மாறுவது என்ன! என்பதை புரிந்து கொண்டு நல்லதை நினைத்து, நீங்கள் சந்தோஷமாக இருக்க, மற்றவர்கள் சந்தோஷத்தை கெடுக்காமல் மனித நேயத்துடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.
மற்ற மனங்களை புண்படுத்தாமல் இருங்கள். கடுஞ்சொற்களை அள்ளி வீசாமல் இருங்கள். வெறுப்புகலந்த பார்வையை, பேச்சை விட்டு கனிவுடன் நோக்கப் பழகுங்கள். அன்புடன் மனித நேயம் கொண்டு நோக்குங்கள். அனைவருக்கும் உங்களால் முடிந்த அளவிற்கு ஆதரவு கரம்நீட்டி பிறர் நலம் பேனுங்கள்.
கோபம், பொறாமை, பதற்றம், எரிச்சல், ஆத்திரம், சந்தேகம், பயம், இவைகளின் தாக்கங்கள் உங்களுள் ஏற்படும்போது நீங்கள் நரகத்தின் விளிம்பிற்குச் சென்றுவிடுவீர்கள். அன்பு, அடக்கம், ஆனந்தம், அமைதி, நிம்மதி, சந்தோஷம் இவற்றில் நீங்கள் அமிழ்ந்து இருக்கும்போது சொர்க்கத்தின் இன்பத்தினை உணரமுடியும்.
இந்த பூமியில் கிடைக்காத அற்புதம் ஏதும் சொர்க்கத்தில் இல்லவே இல்லை! இருப்பதாக எங்கும் கூறப்படவில்லை.
மனதில் செயல்களை நிரப்பிக் குழம்பாதீர்கள். அவ்வப்போது தோன்றும் பிரச்சனைகளை அப்போதே சிந்தித்து தீர்த்துக் கொள்ளுங்கள். மனதில் நிகழ்வுகளின் உலைச்சலின்றி நிம்மதி இருந்தால் உங்களுக்கு சந்தோஷம்.
இதே நிலை அனைவருக்கும் ஏற்பட்டால் எங்கும் சந்தோஷம். ஆனந்த பூக்கள் பூக்கும் உலகமெங்கும். ஆனந்த நிலையடைந்து இன்பம் நிறைந்த உலகமாக மாறும் இப் பூ உலகம்.
அந்த ஊரின் ஓரிடத்தில் காலைப்பொழுதில் தூரத்திலுள்ள ஒரு நிலையான பொருளைப்பார்த்து நின்றால் கீழேவிழும் உன் நிழலுக்கு அடியில் ஒரு பொக்கிஷம் உள்ளது எனக் கேள்விப்பட்டவன் ஒருகாலைப்பொழுதில் அந்த இடத்தை அடைந்தான். குறிப்பிட்ட இடத்திலிருந்து தூரத்தில் தெரிந்த நிலையான மலையைப்பார்த்து நின்றான். அவன் நிழல் அவனுக்குப்பின்னால் நீண்டு விழுந்திருந்தது. நிழல் பகுதியை நன்கு அடையாளம் கொண்டு தோண்ட ஆரம்பித்தான்.
தோண்டத் தோண்ட சூரியன் மேலெழுவதால் நிழல் சுருங்கிக்கொண்டு வந்தது. நண்பகலில் அவன் காலடியில் நுழைந்தது. வேறு நிழலே இல்லை. தோண்டித் தோண்டி களைப்புதான் அடைந்தான். ஏமாற்றம் அழுகையை வரவழைத்தது. அவ்வழிவந்த பெரியவர் ஏன் அழுகின்றாய் எனக்கேட்டபோது அவரிடம் இது பற்றிக்கூறினான். அவர் நீ கேள்விப்பட்டது சரி. உன் நிழல் பொக்கிஷம் இருக்கும் சரியான இடத்தைதான் காண்பித்துள்ளது.
நீதான் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நீதான் அந்தபொக்கிஷம். அது உன்னுள்ளேதான் இருக்கின்றது என்றார். ஆன்மாக்களே! நீங்கள் தேடும் எல்லாம் உங்களிடமே இருக்கின்றது. புரிந்து கொள்வதில் தான் சிரமம் உள்ளது.
அன்பார்ந்த ஆன்மாக்களே! நான் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்க ஒருவர் முழுமனதுடன் இருந்தால் கூடப்போதும். பெரிய கூட்டம் கூட்டி சொற்பொழிவு நடத்த வேண்டும், எல்லோரும் கேட்கவேண்டும் என்பதுமில்லை. கூட்டத்தில் ஒருவர் கவனித்து கேட்டாலும், புரிந்து கொண்டாலும், இந்த கருத்துக்களைச் சொல்லியதின் பயன் உண்டு. புராண நிகழ்வுகளைப்போல் பலநிகழ்வுகள் உலக வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் அந்தபகுதி அல்லது அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதாலும், புராண இதிகாச நிகழ்வுகள் எல்லோராலும் அறியப்பட்டவை என்பதாலும், அதிலிருந்து மேற்கோள்கள் சொல்லப்பட்டுள்ளன.
பாரதப்போரில் கன்னபிரான் அர்ச்சுனனுக்கு கீதா உபதேசம் சொல்வதாக வருகின்றது. அது எவ்வளவு பெரிய உயர்ந்த தத்துவம் அது, அந்த விஷயத்தைக் கண்ணன் ஒரு கூட்டத்தைக் கூட்டிவைத்துக் கொண்டு சொல்லவில்லை. அப்போதைக்கு அந்த உபதேசம் அர்ச்சுனனுக்கு தேவையாயிருந்தது. அது அர்ச்சுனனை அடைந்தது. அவர் மனம் வாங்கிய அந்த நிகழ்வு இன்று நம் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது. உண்மைகளைப் புரிந்து போற்றி பாராட்டி ஏற்றுக் கொள்கின்றோம்.
ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல ஒரு பெரிய கூட்டமல்ல ஒருசிலர் இருந்தாலே போதுமானது. என்ற எண்ணத்தில் எழுதிய இப்புத்தகம் எத்தனை கைகளில் தவழ்ந்தது, எத்தனை உள்ளங்களில் உண்மைகளை உணர்த்தியது, எத்தனை உயிரின் ஆன்மாக்களுக்கு வாழ்வின் பயணத்தின் பாதையைப் பற்றி புரியவைத்தது, என்பது போதுமானது.
அவர்கள் மூலம் இந்த மனித குலத்தின் மற்றவர்க்கு பரவட்டும். கேட்டாலும் கேட்காவிட்டாலும் தெரிந்ததை ஆன்மாக்களுக்கு ஏன் சொல்லவில்லை என்ற எண்ணம் வரக்கூடாது. கடமையை நான் செய்ய வேண்டும். எனவே கேட்ட, படித்த அனைவரும் 'சந்தோஷப் பூக்களாய் மலரட்டும்’, ஆனந்தத்தை அனுபவிக்ககூடும் என்ற நம்பிக்கையில் ஆசிரியன் முடிவுரை கொள்கின்றான்.
ஆனந்த பூக்கள் பூத்த பூமியாக மாற்ற வாருங்கள்”, நீங்களும் மாறுங்கள், மற்றவர்களையும் மாற்றுங்கள். வாருங்கள் புதிய ‘சந்தோஷ பூக்கள்’ பூத்த உலகிற்கு. அடையுங்கள் பிறவியின் பயனாகிய ‘’சந்தோஷத்தை”. வாழ்க சந்தோஷ வளமுடன்!-அன்புடன் குருஜி 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3457010
All
3457010
Your IP: 54.227.6.156
2018-01-17 08:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...