குருஜி - வைரவாக்கியம்

ஒளிமிக்கவர்களே, எல்லாம் வல்ல ஆத்மாக்களே, விழித்திடுங்கள். எல்லா சக்திகளும் உங்களுள் அடங்கியிருக்கின்றது. உணருங்கள். செயல்படுங்கள். எல்லாம் உங்கள் வசப்படும்.

தகவல்கள்

108-ன் சிறப்பு

108-ன் சிறப்பு
வேதங்கள் உட்பிரிவு-108(ரிக்-10,யஜுர்-50,சாம-16,அதர்வன-32),
ஆன்மா-பிரயாணம்-108கட்டங்கள்,
உபநிஷதங்கள்-108கட்டங்கள்,
காலஅளவு-108உணர்வுகள் (கடந்தகாலம்-36, நிகழ்காலம்-36, எதிர்காலம்-36),
உடலில்-108மர்ம ஸ்தானங்கள்,
சூரியன் விட்டம் பூமியைப்போல் 108மடங்கு,
ஸ்ரீயந்திரத்தில் 3கோடுகள் ஒன்றையொன்று வெட்டுவதாக 54 இடங்கள்-ஒரு வெட்டு இடத்தை ஆண், பெண் குணாதிசயமாக கொண்டால் 54x2=108 (இந்த புள்ளிகள் மனித உடலை வடிக்கின்றது)
ஜபமாலை-108

12சிவபீடங்கள்

12சிவபீடங்கள்
1.மதங்கேசுவரர்-தத்புருஷபீடம்-நாராயணமூர்த்தியாக வழிபாடு(திருநாங்கூர்)
2.ஆரண்யேஸ்வரர்-அகோரபீடம்-பார்த்தசாரதியாக வழிபாடு(தி.தே.39)
3.யோகநாதர்-வாமதேவபீடம்-அண்ணன்பெருமாளாக வழிபாடு(தி.தே.38)
4.சொர்ணபுரீசுவரர்-சத்யோதபீடம்-பேரருளாபெருமாளாகவழிபாடு(தி.தே.31)
5.ஜுரஹரேசுவரர்-சோமபீடம்-குடமாடும்கூத்தனாக வழிபாடு(தி.தே.29)
6.நாகநாதர்-சர்வபீடம்-பள்ளிகொண்டபெருமாளாக வழிபாடு(தி.தே.36)
7.நம்புவார்க்கன்பன்-மகாதேவபீடம்-புருஷோத்தமப்பெருமாளாகவழிபாடு(தி.தே.30)
8.கைலாசநாதர்-பீமபீடம்-வைகுந்தபெருமாளாகவழிபாடு(தி.தே.33)
9.சுந்தரேசுவரர்-பவபீடம்-திருமேனி அழகராகவழிபாடு()
10.ஐராவதேசுவரர்-பிரான்பீடம்-மாதவப்பெருமாளாக வழிபாடு(தி.தே.35)
11.கலிக்காமேசுவரர்-ருத்ரபீடம்-நரசிம்மமூர்த்தியாக வழிபாடு(தி.தே.34)
12.நயனார்ப்பணேசுவரர்-பாசுபதபீடம்-லட்சுமிநாராயணனாக வழிபாடு()

14 லோகங்கள்

14லோகங்கள்-

1.பூலோகம், 2.புவர்லோகம், 3.ஸுவர்லோகம், 4.சத்யலோகம், 5.மகாலோகம், 6.தபலோகம், 7.அதலம், 8.விதலம், 9.சுதலம், 10நிதலம், 11.தராதலம், 12.ராசதலம், 13.மகாதலம், 14பாதளலோகம்

1கடிகை

1கடிகை=1நாழிகை=24நிமிடம்.தவம்-கார்யசித்தி மோட்சதலங்கள்- 1.திருக்கடிகை(சோளிங்கர்)-(தி.தே-64), 2.கடிநகர்-தேவப்ப்ரயாகை(தி.தே-99), 3.திருக்கடித்தானம்(தி.தே-70)

27-நட்சத்திரங்களுக்குரிய தலங்கள்

27-நட்சத்திரங்களுக்குரிய தலங்கள்
1.அஸ்வினி-திருத்துறைபூண்டி,
2.பரணி-நல்லாடை,
3.கார்த்திகை-கஞ்சநகரம்,
4.ரோஹினி-காஞ்சி-பாண்டவதூதர்,
5.மிருகஷீரிடம்-எண்கண்,
6.திருவாதிரை-(பட்டுக்கோட்டை),
7.புனர்பூசம்-(ஜோலார்பேட்டை),
8.பூசம்-பேராவூரணி,
9.ஆயில்யம்-திருவிசநல்லூர்,
10.மகம்-(திண்டுக்கல்),
11.பூரம்-திருவரங்குளம்,
12.உத்திரம்-இடையாற்றுமங்கலம்,
13.ஹஸ்தம்-கோமல்,
14.சித்திரை-குருவிதுறை,
15.சுவாதி-சித்துக்கோடு(பூந்தமல்லி-பட்டபிராம்),
16.விசாகம்-செங்கோட்டை,
17.அனுஷம்-திருநின்றியூர்,
18.கேட்டை-பசுபதிகோயில்,
19.மூலம்-மப்பேடு,
20.பூராடம்-கடுவெளி,
21.உத்திராடம்-கீழம்பூங்கொடி,
22.திருவோணம்-திருபாற்கடல்,
23.அவிட்டம்-கொற்கை,
24.சதயம்-திருப்புகலூர்,
25.பூரட்டாதி-ரெங்கநாதபுரம்,
26.உத்திரட்டாதி-தீயத்தூர்,
27.ரேவதி-காருகுடி

5வகை ஸ்நானம்

5வகை ஸ்நானம்
1.ஆக்னேயம்-உடல் முழுவதும் விபூதி பூசிக்கொள்ளுதல்,
2.வாருணம்-ஜலத்தில் மூழுகுவது,
3.பிரம்மஸ்நானம்-கலசநீர் போன்ற மந்திர நீரில் முழுகுதல்,
4.வாயவ்யம்-பசுவின் காலில் பட்டு தெறிக்கும் தூளி தம்மேல் படுமாறு செய்தல்,
5.திவ்யம்-வெய்யில் அடிக்கும்போது பெய்யும் மழை நீரில் நீராடுதல்

8 எழுத்து

8எழுத்து மந்திரவடிவம்-3நிலை அஷ்டாங்கவிமானம்
மதுரை-கூடழகர்(90), சிவகங்கை-திருக்கோஷ்டியூர், உத்திரமேரூர்-சுந்தரவரதப் பெருமாள், மன்னார்குடி-ராஜமன்னார், சேரன்மாகாதேவி-ராமசாமிகோவில், திருபாற்கடல்-பாற்கடல்வண்ணன்(விண்ணுலகம்).

9-நவகைலாயங்கள்

9மலர்கள் வழிகாட்டிய இடத்தில் உரோமசமுனி லிங்கம்வைத்து வழிபட்டது-நவகைலாயங்கள்
1.பாவநாசம்(அம்பை)-சூரியன் பரிகாரத்தலம்,
2.சேரன்மாதேவி(அம்பை)-சந்திரன் பரிகாரத்தலம்,
3.கோடகநல்லூர்(அம்பை)-செவ்வாய் பரிகாரத்தலம்,
4.திருவேங்கடபுரம்(திருநெல்வேலி)-இராகு பரிகாரத்தலம்,
5.முறப்பநாடு(திருநெல்வேலி)-குரு பகவான் பரிகாரத்தலம்,
6.ஸ்ரீவைகுந்தம்(திருநெல்வேலி)-சனி பரிகாரத்தலம்,
7.தென்திருப்போரை(ஸ்ரீவைகுந்தம்)-புதன் பரிகாரத்தலம்,
8.ராஜபதி(ஸ்ரீவைகுந்தம்)-கேது பரிகாரத்தலம்.
9.சேர்ந்தபூமங்கலம்(தூத்துக்குடி)-சுக்கிரன் பரிகாரத்தலம்

32லட்சணங்கள்

32லட்சணங்களுடன்-பிறப்பு
1.கிருஷ்ணன்,
2.அர்ச்சுனன,
3.அரவான்.

அகோரமூர்த்தி

அகோரமூர்த்தி-43/64.தக்கன்யாகத்தை அழிக்க சென்ற வீரபத்ரக்கோலம்-சத்ருஜெயம்-திருவெண்காடு-65.

அங்காரகபகவான்

அங்காரகபகவான்-

சிவன் உமையைப்பிரிந்து யோகத்தில் கல்லால மரத்தின்கீழ் அமர்ந்தபோது அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஓர் நீர்த்துளி விழுந்து தோன்றியவர்-பூமாதேவியின் புத்திரர். அங்காரகன் முருகனின் சகோதரர்-அம்சம்.குஜன்,மங்கலன் வேறுபெயர்கள். மாலினி, சுசீலினி இரு மனைவிகள்.சிவப்பு நிறம்.பெருந்தன்மை,நேர்மை,துணிவு குணங்கள் அளிப்பவர். 8சிவப்பு ஆடுகள் இவர் ரதத்தை இழுக்கின்றன்.செவ்வாய்கிழமை வழிபடின் கடன் தொல்லை நீக்கி, வளங்களைத் தருபவர். வியழன், சந்திரன், சூரியன் நண்பர்கள். புதன் பகைவர்.அதிதேவதை-பூதேவி, பிரத்யதேவதை-சுப்ரமண்யர்.வாகனம்-ஆடு.


அட்சதை

அட்சதை-தாத்பர்யம்.

அட்சதை-முனைபழுதுபடாத முழு அரிசி.பழுதுபடாத அரிசியைப்போல் வாழ்வு பழுது படாமலிக்க ஆசி.(ஷதம்-பழுது,அஷதம்-பழுதற்றது).


அட்சய திரிதை

அட்சய திரிதை-அட்சயம்- குறைவற்ற. சித்திரை திங்கள் வளர்பிறை மூன்றாம் நாள் அட்சய திருதியை

அமாவாசைக்குப் பின்வரும் 3ம்நாள் த்ரிதியைதிதி. சித்திரைமாத அமாவாசைக்கு பின்வரும் திரிதியை அட்சய த்ரிதியை. அட்சயம்-வளர்வது.அள்ள  அள்ள குறையாது. இந்நாளில் செய்யும் காரியங்களுக்கு நற்பலன். திருமகள், திருமால் திருமார்பில் இடம்பிடித்த நாள். பிரம்மதேவன் உலகசிருஷ்டியை ஆரம்பித்த நாள்.பிட்சாடனராக ஈசுவரன் அன்னபூரணியிடம் பிட்சை பெற்ற நாள்.ஐஸ்வர்ய லட்சுமி,தான்ய லட்சுமி அவதார தினம். குபேரன் ஐஸ்வர்யநிதி பெற் நாள். சாகம்பரிதேவி காய்கறிகளையும், மூலிகை மரங்களையும் உருவாக்கிய நாள். பித்ரு வழிபாடு சிறப்பு. கங்கை வானிலிருந்து பூமிக்கு வந்த நாள். மதுரை மீனாட்சியை சுந்தரேசர் மணந்தநாள். திரௌபதிக்கு கிருஷ்ணர் வஸ்திரம் அளித்தநாள்.


அட்சரபீடம்

அட்சரபீடம்-சரஸ்வதி

திருவாரூர்(204).கூத்தனூர்.


அந்தராலம்

அந்தராலம்-

இது இறைவனின் கழுத்துப்பகுதி.கோவிலில் இந்தப்பகுதியில் வலம் வரக்கூடாது.


அந்தர்மண்டலம்

அந்தர்மண்டலம்-

இது இறைவனின் கழுத்திற்கு அடுத்தப்பகுதி. கோவிலில் இந்தப்பகுதியில் வலம் வரலாம். இங்குதான் கோவிலின் இறை அதிர்வுகளை நாம் பெறலாம்.


அபய,வரத முத்திரைகள்

அபய,வரத முத்திரைகள்-

1.அபய ஹஸ்தம்(முத்திரை)-இறையின் வலது கைவிரல்கள் மேல்நோக்கி நீட்டிய நிலையில் உள்ளங்கை பக்தர்களை நோக்கி இருத்தல்-நான் இருக்க பயம் ஏன் என்று. 2.வரத ஹஸ்தம்(முத்திரை)-இறையின் இடது கைவிரல்கள் பாதங்களை நோக்கியும் உள்ளங்கை பக்தர்கள் பக்கம் இருத்தல்-என் திருவடிகளைப் பற்றினால் முக்தி என்று.


அபிஷேக தத்துவம்

அபிஷேக தத்துவம்-

நதிகள் கடலில் கலக்கும்போது தன் பெயரை வடிவத்தை வேகத்தை இழந்து விடுகின்றன.அதேபோல மனிதன் தன்னை இழந்த போது பரமாத்மாவிடம் ஒன்றி கலந்து விட வேண்டும்-இதை உணர்த்துவதே அபிஷேக தத்துவம்.


அபிஷேக பலன்

அபிஷேக பலன்
1.தண்ணீர்-மனஅமைதி,
2.பால்,வாசனை திரவியம்-ஆயுள்விருத்தி,
3.வாசனைகலந்த தண்ணீர்-ஆணவம்,மாயை அழித்தல்,
4.சந்தனம்,பஞ்சாமிர்தம்-செல்வப்பெருக்கு,
5.சந்தனாதிதைலம்-சுகவாழ்வு,லட்சுமிகரம்,
6.நெய்-சொர்க்கம்,முக்தி,
7.இளநீர்,தயிர்-புத்திரபேறு,போகம்,
8.தேன்-இசையில் நாட்டம்,இனியகுரல்,
9.கரும்புசாறு-நித்யசுகம்,பிணிநீக்கம்,
10.மாதுளை,சர்க்கரை-பகைநீங்கும்,
11.மஞ்சள்பொடி-வசீகரம்,
12.வாழைப்பழம்-பயிர்வளர,விவசாயம் பெருக,
13.பலாப்பழம்-உலகவசியம்,
14.மாம்பழம்-தீர்த்தயாத்திரை,
15.எழிமிச்சை-நோய் நீவாரணம்,
16.பச்சைக்கற்பூரம்-பயம்நீங்க,
17.கஸ்தூரி-வெற்றி,
18.பன்னீர்-நல்லபுத்தி,
19.அன்னம்-ஆரோக்யம்,
20.பஞ்சகவ்யம்-ஆன்மசுத்தி,
21.எண்ணெய்-சுகம்,
22.விபூதி-அமைதியானமனம்(விநாயகர்,முருகன்,சிவனுக்கு மட்டும்).

அம்பாள் சாஸ்திரப்படி

அம்பாள் சாஸ்திரப்படி

1.காலை-சிவப்பு, 2.மாலை-நீலம்/பச்சை, 3.அர்த்தசாமம்-சிவப்பு/பச்சை உடைகள்


அம்பிகை முதல்தரிசனம்

அம்பிகை முதல்தரிசனம்-

ஈசனுக்கு வலப்புறம் அன்னையின் சன்னதி அமைந்தால் முதலில் அம்பிகையை தரிசனம் செய்துபின் ஈசனை வணங்குவது சம்பிரதாயம்.


அம்பிகை இருவடிவம்

அம்பிகை இருவடிவம்
1.காசி-விசாட்சி,பார்வதி-அன்னபூரணி,
2.ஆவூர்-அம்பாளாம்பிகை,பங்கஜவல்லி,
3.திருநாகேஸ்வரம்-பார்வதி-பிறையணிநுதலால்,கிரிகுஜாம்பிகை,
4.பக்தபீஷ்டதாயிணி(தவம்),அநூபமஸ்தினி (மணம்),
5.பூவனூர்-பார்வதி-ராஜராஜேஸ்வரி,கற்பகவல்லி,
6.திருமீயச்சூர்-சவுந்தரநாயகி,லலிதாம்பிகை,
7.கருவூர்-சௌந்தரவல்லி,அலங்காரவல்லி

அமுதம்

அமுதம்-சிவலிங்கமாக(சு)-பால்வண்ணநாதர்-

திருப்பாலைவனம்( ), திருக்கழிப்பாலை( ), கரிவலம்வந்தநல்லூர்(சங்கரன்கோயில்), பேட்டை(திருநெல்வேலி)


அவதூதம்

அவதூதம்-

எதன்மேலும் பற்றற்ற நிலை. திகம்பரகோலம்- நிர்வாணம்.


அரசு மரம்

அரசு மரம்-

பொதுவாக பகலில்தான் வணங்க வேண்டும். செவ்வாய், வியாழன் வணங்க கூடாது.
1.ஞாயிறு சுற்றினால்-நோய் அகலும்,
2.திங்கள் சுற்றுதல்-சுபம் தேடி வரும்,
3.செவ்வாய் சுற்றுதல்-வெற்றிகிட்டும்,
4.புதன் சுற்றுதல்-தொழில் வளரும்,
5.வியாழன் சுற்றுதல்-வலம் கல்வி, ஞானம் வளரும்,
6.வெள்ளி சுற்றினால்-சகல சௌபாக்யங்களும் கிடைக்கும்,
7.சனியன்று வலம்-லட்சுமிதேவி வாசம்-அவளின் அருள்-அன்று தொட்டு கும்பிடலாம்,மற்றநாட்களில் தள்ளி வலம் வர வேண்டும்.                                           3முறை சுற்றினால் நினைத்ததும், 5முறை சுற்றினால்-நற்குணம் வளரும், 9முறை சுற்றினால்-அறிவாளியான குழந்தை பிறக்கும்,11முறை சுற்றினால்-நீண்ட ஆயுள், 13முறை சுற்றினால்-செல்வச்செழிப்பும்,15முறை சுற்றினால்-தன,தான்ய விருத்தியும், 108முறை சுற்றினால் அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும் என்கிறது புராணங்கள்.


அரங்கேற்றத் தலங்கள்

அரங்கேற்றத் தலங்கள்.
1.கம்பராமாயாணம்-ஸ்ரீரங்கம் ரங்கசாமிகோவில்-மேட்டு அழகியசிங்கர் சன்னதி.
2.திருக்குறள்/மீனாட்சி பிள்ளைத்தமிழ்-மதுரை மீனாட்சியம்மன் கோவில்.
3.பெரிய புராணம்-சிதம்பரம் நடராஜர் கோவில்,
4.கந்த புராணம்-காஞ்சி குமரகோட்டம்,
5.லலிதா சகஸ்ரநாமம்-திருமீயச்சூர் கோவில்,
6.அபிராமி அந்தாதி-திருக்கடவூர்.

அரிய மூலிகைகள்

அரிய மூலிகைகள்:
1.மிருத சஞ்சீவினி- இறந்தவர்களை பிழைக்கவைக்கப் பயன்படும்.
2.சந்தான் கரணி- போரில் துண்டிக்கப்பட்ட கை, கால் உருப்புக்களை ஒட்டவைக்க பயன்படும்.
3.விசல்யகரணி: உடலில் தங்கிய ஈட்டி போன்ற இரும்பு ஆயுதங்களை கரைத்திட உதவும்.
4.சாவர்ணி கரணி: காயம் பட்ட இடத்தில் தோலில் ஏற்படும் நிறத்தை மாற்றவல்லது.

அற்புத நடராஜர்

அற்புத நடராஜர் கலையம்சம் நிறைந்த 5சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டது.
1.சிதம்பரம்(55),
2.செப்பறை(திருநெல்வேலி),
3.கரிசூழ்ந்தமங்கலம்( ),
4.கருவேலங்குளம்(நாங்குனேரி),
5.கட்டாரிமங்கலம்(திருச்செந்தூர்).

அறிவு

அறிவு
1.ஓரறிவு-ஸ்பரிச அறிவு மட்டும்-மரம்,செடி,கொடிகள்.
2.ஈரறிவு-ஸ்பரிச அறிவுடன் சுவையறிவு உயிர்கள்-நத்தை,சிப்பி,சங்கு.
3.மூன்றறிவு-ஸ்பரிச அறிவு,சுவையறிவு,மணத்தை அறியும் அறிவு-கறையான்,எறும்பு.
4.நாலறிவு-ஸ்பரிச அறிவு,சுவையறிவு,மணத்தை அறியும் அறிவு,பார்வையறிவு-வண்டு.
5.ஐந்தறிவு-ஸ்பரிச அறிவு,சுவையறிவு,மணத்தை அறியும் அறிவு,பார்வையறிவு,செவியுணர்வு அறிவு-விலங்குகள்,பறவைகள்.
6.ஆறறிவு-ஸ்பரிச அறிவு,சுவையறிவு,மணத்தை அறியும் அறிவு,பார்வையறிவு,செவியுணர்வு அறிவு,பகுத்தறியும் அறிவு-மனிதன்.

அளவு-அணு

அளவு-அணு முதல் விரல்-

8பரமாணு=ஒரு தேர்த்துகள்,

8தேர்த்துகள்=ஒரு மயிர்நுனி அகலம்,

8மயிர் நுனி=ஒரு ஈறு,

8ஈறு=ஒரு பேன்,

8பேன்=ஒரு நெல்(யவை),

8யவை(நெல்)=ஒரு விரல்(அங்குலம்)


அஷ்டதிக்பாலகர்கள்

அஷ்டதிக்பாலகர்கள்-

இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயி, குபேரன், ஈசானம்-தகடூரில் உருவ வடிவில், திருஅண்ணாமலையில் அருவமாக.

அஷ்டபரிவாரம்

அஷ்டபரிவாரம்-சிவனைவிட்டு நீங்கா 8பேர்-அஷ்டபரிவாரம்.
1.நந்தி,
2.பிருங்கி முனிவர்,
3.கணபதி,
4.அந்தர்,
5.மகாகாளன்,
6.உமா,
7.விருஷபர்,
8.சண்டீஸ்வரர்.

அஷ்டபுஜகாலபைரவர்
 

அஷ்டபுஜகாலபைரவர்-

திருவண்ணாமலை-அண்ணாமலையார்கோவில்


அஷ்டபைரவர்

அஷ்டபைரவர்-வாகனம்-மனைவி
1.அசிதாங்கபைரவர்-6கரங்கள்.அன்னவாகனம்.சக்தி-பிராம்மி,
2.குருபைரவர்-4கரங்கள்,காளைவாகனம்,சக்தி-மஹேஸ்வரி,
3.சண்டபைரவர்-4கரங்கள்,மயில்வாகனம்,சக்தி-கௌமாரி,
4.குரோதபைரவர்-4கரங்கள்,கருடவாகனம்,சக்தி-வைஷ்ணவி,
5.உன்மத்தபைரவர்-4கரங்கள்,குதிரைவாகனம்,சக்தி-வராஹி,
6.கபாலபைரவர்-4கரங்கள்,யாணைவாகனம்,சக்தி-ஐந்த்ரீ,இந்திராணி,
7.பீஷணபைரவர்,சிம்மவாகனம்,சக்தி-சாமுண்டி,
8.சம்ஹார(வடுக)பைரவர்-8கரங்கள்,நாய்வாகனம்,சக்தி-சண்டிகை.

அஷ்டமி-தேய்பிறை

அஷ்டமி-தேய்பிறை
1.சித்திரரை-மகாதேவாஷ்டமி,
2.வைகாசி-சதாசிவாஷ்டமி,
3.ஆனி-பசுபதாஷ்டமி,
4.ஆடி-நீலகண்டாஷ்டமி,
5.ஆவணி-சம்புகாஷ்டமி,
6.புரட்டாசி- ,
7.ஐப்பசி-ஈஸ்வராஷ்டமி,
8.கார்த்திகை-ருத்திராஷ்டமி,
9.மார்கழி-சங்கராஷ்டமி,
10.தை-தேவதேவாஷ்டமி,
11.மாசி-மகேச்வராஷ்டமி,
12.பங்குனி-திரியம்பகாஷ்டமி,

அஷ்டாங்கவிமானம்

அஷ்டாங்கவிமானம்-சுமக்கும் 8தேவருலக கஜங்கள்.
1.ஐராவதம்,
2.புண்டரீகம்,
3.வாமனம்,
4.குமுதம்,
5.அஞ்சனம்,
6.புஷ்பதந்தம்,
7.சார்வபௌமம்,
8.சுப்பிரதீகம்.

அஸ்திவாரம்

அஸ்திவாரம்-3வகை
1.ஜலாந்தம்-நீர் தட்டுப்பட்டால்,
2.சிலாந்தம்-பாறை தட்டுப்பட்டால்,
3.வாலுகந்தம்-மணல் தட்டுப்பட்டால்.(அந்தம்-அடிப்பகுதி)

அன்னப்ராசனம்

அன்னப்ராசனம்-

குழந்தைபிறந்த 150வது நாளிலிருந்து 180வது நாளுக்குள் நல்ல நேரத்தில் முதலில் அரிசி உணவு ஊட்டவேண்டும்.உடல் உறுப்புக்களின் பாங்கான வளர்ச்சிக்கு அன்னம்.


அவசரம்-சுபசரம்

அவசரம்-சுபசரம்.

சரம்-மூச்சு/இயக்கம், மூச்சினியக்கம். ஒழுங்கு முறையற்று தாறுமாறாக விரைந்தோடித் திரிகின்ற மூச்சின் இயக்கம் அவசரப்போக்கு, அவசரம். ஒழுங்கு முறை தவறாமல் நிதானமாக பரபரப்பின்றி நிகழும் மூச்ச்சின் இயக்கம் சுபசரம்.


ஆகமங்கள்

ஆகமங்கள்.
1.சிவவழிபாடு-சைவஆகமம்(காமிக,காரணம்),
2.திருமால் வழிபாடு-வைகாசன ஆகமம்,பஞ்சராத்ர ஆகமம்.
இவைகள் சிவனின் சதாசிவ வடிவத்திலிருந்து வெளிப்பட்டவை-28 வகைப்படும்.அவை சிவபேத ஆகமங்கள், ருத்ரபேத ஆகமங்கள் என இருவகைப்படும். சிவன் அருளிய ஆகம முறைகள்(அருட்செல்வர்கள்-ஸாலோகம், சாமீப்யம், ஸாரூபம், ஞானபாதம் ஆகிய 4பேறுகள்+அறம், பொருள், இன்பம், வீடு என்ற 4புருஷார்தங்களையும்+நயனம், ஸ்பரிசம், வாசகம், பாவனை, சாஸ்திரம், யோகம், ஒளத்ரீ என்ற 7தீட்சைகளையும் அடையவும்). வைகாசன,  பஞ்சராத்ர ஆகமம் விஷ்னு வழிபாட்டிற்கு.

ஆகமவிதி-பூஜை முறை

ஆகமவிதி-பூஜைமுறை
1.காரணகாமிக ஆகமம்.
2.காமிக ஆகமம்,
3.வைகாசன ஆகமம்,
4.பஞ்சராத்ர ஆகமம்

ஆதர்ச குடும்பம்
 

ஆதர்ச குடும்பம்
உலகில் ஆதர்ச குடும்பம் என்பதற்கு முதலுதாரணம் சிவகுடும்பமாகும். நாம் இருவர் நமக்கு இருவர் என்பதற்கேற்ற குடும்பம்.
சிவன்-பிறை சூடிய பித்தன். ஆடை-புலித்தோலிலால் ஆனது. வசிப்பது-அதிகமாக இடுகாட்டில். தோழர்கள்-பிசாசுகள், பூதகணங்கள். ஆபரணங்கள்-மண்டையோடு,விஷப்பாம்புகள். உடம்பில்-சாம்பல் பூச்சு. வாகனம்-நந்தி என்ற காளைமாடு. உடுக்கையடித்து தாண்டவமாடுவதில் பிரியர்.
பார்வதி-ஆபரணங்கள்-முத்துக்களும், வைரங்களும் இழைத்தது. ஆயுதங்கள்-கையில். ஆடை-அழகான பட்டுச் சேலை. வாகனம்-சிம்மம்.
விநாயகர்-ரித்தி சித்தி அளிப்பவர். விக்னங்களை-தடைகளை நீக்குபவர். லட்டு மேதகத்தின்மேல் தீரா பசி கொண்டவர். வாகனம்-மூஞ்சுறு
முருகன்-அசுரர்களை வதம் செய்ய பிறந்தவர். தேவர்களின் சேனாபதி. வாகனம்-முதலில் யானை பின்னர் மயில்.
பரமசிவனாரின் வாகனம் காளைக்கு பார்வதியின் வாகனம் சிம்மம் பகை. சிவனின் ஆபரணம் பாம்பிற்கு முருகனின் மயில் ஜென்ம விரோதி. விநாயகரின் வாகனம் மூஞ்சுறு சிவனின் பாம்பிற்கு இயற்கையான உணவு.
சித்தன்போக்கு சிவன் போக்கு என்றிருக்கும் சிவனும், அமைதியும் அழகு மிளிரும் பார்வதியும், ஞானியும் போஜனப் பிரியனுமான விநாயகரும், போர்வீரனாகிய முருகனும் ஆகிய ஒவ்வொரு குணாதிசயங்களையுடைய நால்வரும் ஒரே இடத்தில் கயிலாயத்தில் ஆனந்தமாக வசிக்கின்றனர்.
சிறப்பு என்னவெனில் யாரும் யாருக்கும் எதைப்பற்றியும் எந்த பழக்க வழக்கங்கள்பற்றியும் விமர்சித்தோ நகையாடியோ எதுவும் கூறுவதில்லை. சிங்கம் நந்தியைத் தாக்குவதில்லை. பாம்பு மயிலைப் பார்த்து அஞ்சுவதில்லை. பாம்பு எலியை விழுங்க முயற்சிப்பதில்லை. மாறுபட்ட கருத்துடையவர்களும் வேறுவேறு குணமுடையவர்களும் ஒன்றாக இயல்பாக இருக்கின்றனர்.
அந்தச் சூழலில் அன்பு ஒன்றே பேணப்படுகின்றது. மற்றவர்கள் விசயத்தில் தலையிடுவதில்லை. இப்படி பல்வகை குணங்களை உடையவர்கள் எந்த பிரச்சனைகளும் இன்றி கூடிவாழ்வதைவிட வேறு என்ன ஆதர்ச குடுப்பத்திற்கு அடையாளம் வேண்டும்.

ஆதிநாயகன்

ஆதிநாயகன் சிவன் ஆவுடையார்+சிவலிங்கம்
1.நெல்லை,
2.கயிலை,
3.வாராணாசி,
4.கேதாரம்,
5.லட்சுமிகிரி,
6.காளஹஸ்தி,
7.தில்லை(சிதம்பரம்),
8.காஞ்சி,
9.ஆலவாய்(மதுரை).

ஆதிஷேசன்,வாயு

ஆதிஷேசன்,வாயுபோட்டி
1.சிவப்புமணி-திருவண்ணாமலை(54),
2.மரகதமணி-திருஈங்கோய்மலை(117),
3.மாணிக்கம்-இரத்தினகிரி(118),
4.நீலமணி-திருப்பொதிகைமலை,
5.வைரம்-கொடுமுடி(264)

ஆறு கால பூஜை

ஆறு காலபூஜை சிறப்புதலங்கள்
1.காலைசந்தி-இராமேச்சுவரம்(252),
2.திருவனந்தல்(த்வீதியகாலசந்தி)-திருக்குற்றாலம்(257),
3.உச்சிக்காலம்-திருஆணைக்கா(114),
4.சாயரட்சை-திருவாரூர்(204),
5.இராக்காலம்-மதுரை(245),
6.அர்த்தசாமம்-தில்லை(சிதம்பரம்)(55).

ஆறு ஆதாரம்

ஆறு ஆதாரநிலைகள்(உடலின்-சக்கரங்கள்)
1.மூலாதாரம்,
2.ஸ்வாதிஷ்டானம்,
3.மணிபூரகம்,
4.அநாகதம்,
5.விசுக்க்தி,
6.ஆக்ஞை.

ஆறு முகன்

ஆறு முகனின்-பெயர்கள்
1.முருகன்-முருகு-அழகு,
2.கந்தன்-கந்து-நடுவே(வேதத்தின் பொருளாக நடுவே இருப்பவன்),
3.சரவணன்-சரவணம்-நாணல் நிறந்த பொய்கையில் தோன்றியவன், ச-மங்களம், ர-ஒளி, வ-அமைதி, ண-போர்த்திறம், பவன்-உதித்தவன்.
4.ஷடாட்சரன்-சரவணபவ-6எழுத்திற்கு உரியவன்,
5.குகன்-இதயமாகிய குகையில் உறைபவன்,
6.குமாரன்-கு-அறியாமை,மாறன்-மாற்றுபவன்,
7.ஆறுமுகன்-சிவனின் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜதம் முகங்களுடன் தேவியின் அதோமுகமும் சேர்ந்து அவதாரம்.
8.விசாகன்-வி-பறவை,சாகன்-சஞ்சரிப்பவன்,
9.சுப்ரமண்யன்-சு-குற்றமில்லாத, ப்ரம்மண்யன்-பிரம்மத்துவம் உடையவன்,
10.கார்த்திகேயன்-கார்த்திகை பெண்கள் வளர்ப்பு,
11.வேலவன்-வேலினை ஏந்தியவன், அஞ்ஞானத்தை அகற்றி ஞானம் அளிப்பவன்.

இசைத்தூண்கள்

இசைத்தூண்கள்-

மதுரை-மீனாட்சியம்மன் கோவில், சுசீந்திரம், ஆழ்வார்திருநகரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி-நெல்லையப்பர், களக்காடு ஆகிய கோவில்களில்.


இடபாரூடமூர்த்தி

இடபாரூடமூர்த்தி
திருமால் விருப்பப்படி இடபவாகனமாக்கி தன்தேவியுடன் வீற்றிருக்கும்மூர்த்தி-பொற்கிழி-திருவாடுதுறை.

இருதயம்

இருதயம்-

ஹிருதி(இதயம்)+அயம்(பரமன்)-ஹிருதயம்(பரமன் இருக்குமிடம்).


இராகுபகவான்

இராகுபகவான்-

விப்ரசித்தி-சிம்ஹிகையின் மகன்.மோகினி உருவத்தில் மகாவிஷ்னு அமுதத்தை பங்கீடு செய்ய இடையில் இராகு, தேவரைப்போல் சென்று அமிர்தம் உண்ண இதை சந்திர, சூரியர்கள் விஷ்னுவிடம் சொல்ல அவர் இராகுவின் தலையை துண்டித்தார். அமிர்தம் உண்டதால் இறக்காமல் விஷ்னுவை வேண்ட இராகுவிற்கு பாம்பு உடலை அமைத்து கிரஹப்பதவி தந்தார். சந்திர சூரியர்களை பலம் இழந்து ஒளி குன்றும் படியான கட்டுப்படுத்தும் ஆற்றல். மனைவி-சிம்ஸி, மகன்-அமுதகடிகன். எந்நாளும் வழிபடின் தந்தைவழி பாட்டனார் ஞானம், அன்னிய நாட்டு வாசம், பெருமை ஏற்படும். அங்கஹீனம், வலிப்பு, பைத்தியம் வராமல் தடுப்பவர்.


இறை வழிபாடு-6வகை

இறை வழிபாடு-6வகை
1.சௌரம்-சூரியவழிபாடு,
2.சைவம்-சிவவழிபாடு,
3.சாக்தம்-சக்திவழிபாடு,
4.வைணவம்-விஷ்னுவழிபாடு,
5.காணாபத்தியம்-விநாயகர்வழிபாடு,
6.கௌமாரம்-முருகன்வழிபாடு.

உகந்தநாள்-உரியதெய்வங்கள்

உகந்தநாள்-உரியதெய்வங்கள்
1.விநாயகர்=ஞாயிறு-சூரியன்,ராகு,கேது.
2.சிவன்=திங்கள்-சந்திரன்,
3.முருகன்=செவ்வாய்-செவ்வாய்.
4.விஷ்னு=புதன்-புதன்.
5.தட்சிணாமூர்த்தி=வியாழன்-குரு.
6.அம்பாள்=வெள்ளி-சுக்ரன்.
7.கண்ணன்=சனி-சனி.

உடல் வடிவில் ஆலயம்

உடல் வடிவில் ஆலயம்
1.மூலாதாரம்=32முதுகுதண்டு-கோடிமரம்-32வளயங்கள்,
2.தொப்புள்ஸ்தானம்=நந்திபிரதிஷ்டை-எண்ணங்களை அடக்கி மனதை தூய்மைப் படுத்த சிந்தனை,
3.இதயம்=பலிபீடம்-காமம், பொறாமை, ஆணவம் நீங்க,
4.பிரம்மகபாலம்=கர்ப்பகிரகம்-மூலஸ்தானம்,
5.புருவமத்தி=லிங்கம்-ஆண்மஒளி,
6.1000இதழ்கொண்டமூளை=1000கால் மண்டபங்கள்,
7.மூளையின்நீர்நிலை=தீர்த்தம்,
8.தலை=கர்பகிரகம்,
9.முகம்=அர்த்தமண்டபம்,
10.கழுத்து=அந்தராணமண்டபம்,
11.மார்பு=மகாமண்டபம்,
12.வயிறு=மணிமண்டபம்,
13.தோள்கள்=உள்சுற்று,
14.கைகள்=வெளிசுற்று,
15.ஆன்மா=மூர்த்தங்கள்,
16.கண்=கருவறைத்தூண்,
17.விலாஎழும்புகள்=சுவர்கற்கள்,
18.எழும்புகள்=தூண்கள்.

உடலின் 6(7)சக்கரங்கள்

உடலின் 6(7)சக்கரங்கள்
1.மூலாதாரம்-சிகப்பு.குண்டலினிபற்றி முழுமை. உடல்,மூச்சு,மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல். நோயற்ற உடல்.தியான வேளையில் ஸ்தூல உடல் புவி ஈர்ப்பில் இருந்து அந்தரத்தில் மிதக்கும். எலும்புகளின் நலம், செயல்களில் மன உறுதிக்கு காரணம். பஞ்சபூத பூமிக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நிலைப்படுத்துவது.
2.சுவாதிட்டானம்-ஆரஞ்சு. ஸ்தூல-சூட்ம மன உணர்வுகளை அறியும் ஆற்றல், நீரினால் பாதிப்பு இல்லை. பஞ்சபூத நீரை ஆற்றலாக மாற்றுகிறது. உயிர்களின் பிறப்பு உறுப்புக்களையும் சிறுநீரக உறுப்புகளையும் சீராக இயங்க வைத்தல். உடலில் திரவ வடிவ அனைத்தின் இயக்கம். கற்பனை ஆற்றல், செயல் திறனை ஊக்குவித்தல்.
3.மணிபூரகம் மஞ்சள். மனித உடல் அமைப்பு பற்றிய முழு அறிவு. நோயற்ற உடல். அக்னியின் பாதிப்பு இல்லை. அட்ரீனல் சுரப்பி, கணையம், கல்லீரல், நரம்புகள் அனைத்து வயிறு சார்ந்த உறுப்புகளின் இயக்கம். பஞ்சபூத அக்னியை உஷ்ண ஆற்றலாக மற்றுதல்.
4.அனாகதம்-பச்சை.பிராணனைக் கட்டுப்படுத்தல். இதயத்தின் இயக்கத்திற்கு உரிய ஆற்றல். பஞ்சபூத காற்றை ஆற்றலாக மாற்றுதல். இதயம், ரத்த ஓட்டம், அனுக்களின் எதிர்ப்பு சக்தி, நாளமில்லாச் சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல். அன்பு, காதல், பாசம், ஆசை ஆகிய எண்ண உணர்ச்சிகளுக்கு காரணமானது.
5.விசுக்தி.-நீலம்.பஞ்சபூத ஆகாயத்தின் இயக்கமாக உடலுக்கு ஆற்றல்.பேச்சுக்கும் மூச்சுக்கும் ஆதாரம். நுரையீரலையும் குரல் நாணையும் இயங்கவைத்தல். சுவாச உறுப்புக்கள், தைராட் சுரப்பி, மர்பெழுலும்புக்கூடு இதன் கட்டுப்பாட்டில்.
6.ஆக்ஞா-கருநீலம். மூளையின் இயக்க ஆற்றல். மூன்றாவது கண்ணான அறிவுக்கண். ஒளியை ஆற்றலாக்கி தருகிறது. ஞானம், அறிவு, பக்தி நாட்டம் இந்த ஒளிசக்தியால்.
7.சகஸ்ராரம்-வெண்மை/ஊதா. கடவுளை அடைய பாலம். உச்சந்தலையில்-கபால மோட்சம் எனப்படுவது.

உடலின் கண்-ஏழு ஆறாதாரத் தலங்கள்

உடலின் கண் ஏழு ஆதாரங்கள்- ஆறாதாரத் தலங்கள்
1.மூலாதாரம்-திருவாரூர்(204),
2.சுவாதிட்டானம்/தொப்புள்-திருஆனைக்கா(114),
3.மணிபூரகம்-திருவண்ணாமலை(54),
4.அநாகதம்/இருதயம்-திருத்தில்லை(சிதம்பரம்)(55),
5.விசுக்தி/கண்டம்-திருக்காளத்தி(19),
6.ஆக்கினை/புருவமத்தி-காசி(ஜோதிர்)
7.சகஸ்ராரம்.நம் உடலில் உள்ள பஞ்சபூத தன்மைகளை ஆற்றலாக மாற்றி ஆரோக்யமாக இருக்க இந்த ஆறு சக்கரங்களும் உதவுகின்றன.ஏழாவது உச்சந்தலையில்-இந்த வாயில் திறக்கும் வழி-கபால மோட்சம்.

உத்தராயண காலம்

உத்தராயண காலம்-தைமுதல் ஆனிமுடிய-இந்தகாலம் தேவர்களுக்கு ஒருபகல் காலம். சூரியனின் வடதிசை பயணம்-இந்த காலமே சுப நிகழ்ச்சிகள் நடத்த உயர்ந்த காலம். சூரியனின் தென்திசைப்பயணம்-தட்சிணாயணம்.

உபநிடதம்-உபநிஷத்

உபநிடதம்-உபநிஷத்-அருகில் அமர்.(குருவின் அருகில் அமர்ந்து கேட்ட அரிய பெரிய தத்துவங்கள்) மெய்ஞானம், தத்துவம், மெய்ப்பொருள் ஆகியனபற்றிய உண்மைகளை சொல்வது மொத்தம் 108உபநிடதங்கள். அவைகளில் முக்கியமானவை-
1.ஈசாவாஸ்யம்-2வழிகளை சொல்வது.1.ஞானம்,2.ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிப்பது,
2.கேனம்-உளநூற் பாகுபாடுகளைச் சொல்லி பரம் பொருளின் நிலைமை அறியச் செய்வது,
3.கடம்-வேதாந்தத்தின் உயர்ந்த கோட்பாடுகளை மறை தத்துவத்தை விளக்குகிறது,
4.பிரச்சினம்-குரு பிப்பிலாதனிடம் 6இளஞ்சீடர்கள் சந்தேகங்களை கேட்டு ஐயங்கள் தீர்த்தனர்,
5.முண்டகம்-துறவிகளின் ஞான வாழ்க்கை,கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றியது,
6.மாண்டுக்யம்-12மந்திரங்கள் மட்டுமே கொண்டது,
7.தைத்தரீயம்-சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்,
8.ஐதரேயம்-நாம் உண்ணும் உணவே பிரம்மம், உயிரைக் காப்பாறக்க்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் எனச் சொல்வது,
9.சாந்தோக்யம்-மூச்சுக்கலை எனும் பிராண வித்தையைப்பற்றியது,
10.பிரகதாரணியம்-6அத்தியாயங்கள். முதல்2 மதுகாண்டம், அடுத்த2 யாக்ஞவல்கிய காண்டம். உபதேசம், விளக்கம், உபாசனை அடங்கியது.

உயரமான ஆஞ்சநேயர்

உயரமான ஆஞ்சநேயர்
165'-பாரிட்டாலா-ஆந்திரா,
110'-நான்தோரா-மகாராஷ்டிரா,
36'-பஞ்சவடி-புதுச்சேரி,
32'-நங்கநல்லூர்-சென்னை,
27'-மகாலட்சுமிலேஅவுட்-பெங்களூர்,
25'-பென்னூர்-குண்டூர்-ஆந்திரா,
18'-நாமக்கல்,
18'-சுசீந்திரம்,
14'-லிவர்மோர்-கலிபோர்னியா,வடஅமெரிக்கா.

உயிரிணங்கள் வழிபட்டதலம்

உயிரிணங்கள் வழிபட்டதலம்
ஆந்தை-கூகேஸ்வரர்-கூகையூர்,
ஆமை-கச்சபேஸ்வரர்-காஞ்சி.
உடும்பு-மாகறலீஸ்வரர்-மாகறல்.
ஒட்டகம்-நெடுங்களேஸ்வரர்-நெடுங்களம்.
கரிக்குருவி(வலியன்)-வலிதாயேஸ்வரர்-வலிவலம்,திருவலிதாயம்.
கிளி-சுகவனேஸ்வரர்-சேலம்,
குதிரை-ஹயவந்தீஸ்வரர்-மங்கலக்குடி.
குயில்-கோகிலேஸ்வரர்-திருக்கோழம்பம்,
குரங்கு-வாலீஸ்வரர்,சுக்ரீஸ்வரர்,ஹனுமீஸ்வரர்-வடகுரங்காடுதுறை,தென்குரங்காடுதுறை,குரக்குத்தளி,குரங்கனில்முட்டம்.
கீரி-நகுலேஸ்வரர்-ஈழநாடு(கீரிமலை).
சக்ரவாகப்பறவைகள்-சக்கரவாகேஸ்வரர்-சக்கரப்பள்ளி,
சிலந்தி+யாணை+பாம்பு-காளத்தீஸ்வரர்-திருக்காளத்தி.
சேவல்-கோழீஸ்வரர்-உறையூர்.
நண்டு-கர்க்கக்டேஸ்வரர்-திருந்துதேவன்குடி.
பறவைகூட்டம்-பட்சீஸ்வரர்-புறவார்பனங்காட்டூர்,திருவோத்தூர்,எறும்பூர்.
முத்துசிப்பி-சிப்பீஸ்வரர்-காஞ்சி.
மான்-ஸ்ருங்கேச்வரர்-மப்பேடு.
மீன்-மச்சேஸ்வரர்-காஞ்சி.
மயில்-மயூரேஸ்வரர்-மயிலாப்பூர்.

உஷத்

உஷத்-இரவும் பகலும் சந்திக்கும் அதிகாலைவேளை-உஷத் காலம்.பகல் பொழுதின் முகம். அதிதேவதை-சூரியனின் மனைவி உஷா.

எமன் சன்னதி

எமன் சன்னதி-1.ஸ்ரீவாஞ்சியம்,2.திருப்பைஞ்சீலி

எண்கள்-பெயர்

எண்கள்-பெயர்
1-ஏக,
10-தச,
100-சத,
1000-சகஸ்ர,
10,000-அயுத,
1,00,000-பிரயத,
100,00,000-கோடி,
10,00,00,000-அபுர்த,
100,00,00,000-விருத்த.

எண்குணத்தான்

எண்குணத்தான்-சிவனை குறிப்பது.
1.முக்கண்ணன்,
2.அம்பலத்தாடுபவன்,
3.நீலகண்டன்,
4.சுடலைகாத்தான்,
5.அருகன்,
6.நெற்றிக்கண்ணன்,
7.நீறுபூசியோன்,
8.மாறியாடும் பெருமான்.

ஏகபாதமூர்த்தி

ஏகபாதமூர்த்தி-பிரளயத்தின் முடிவில் 14 உலகங்களும் சிவனால் சம்ஹாரம் செய்யப்படு முன் நிலையில் திருமாலும், பிரம்மாவும சிவனிடம் ஒடுங்குவர். பல்வேறு மூர்த்தங் களிருந்தாலும் சிவன் ஒருவரே என உணர்த்த ஒற்றைக்காலில் நின்றகோலம்-திருஆலவாய்-245, திருவொற்றியூர்-20, திருவானைக்கா-114, குடவாயில்-211, கீழ்வேளூர்(201)

ஏழு சிவதாண்டவ தலங்கள்

ஏழு ஸ்வரங்களை ஒப்ப சிவதாண்டவ தலங்கள்
1.ச-படைத்தல்-காளிகாதாண்டவம்-திருநெல்வேலி(258),
2.ரி-காத்தல்-கௌரிதாண்டவம்-திருப்புத்தூர்(250),
3.க-காத்தல்செயல்-சந்தியாதாண்டவம்-திருஆல்வாய்(மதுரை)(245),
4.ம-அழித்தல்-சங்கரதாண்டவம்-திருஆல்வாய்(மதுரை)(245),
5.ப-மறைத்தல்-திரிபுரதாண்டவம்-திருக்குற்றாலம்(257),
6.த-அருளல்-ஊர்த்துவதாண்டவம்-திருவாலங்காடு(15),
7.நி-ஐந்தொழில்-ஆனந்த்தாண்டவம்-திருத்தில்லை(சிதம்பரம்)(55).

ஏழு கீழ்லோகங்கள்

ஏழு கீழ்லோகங்கள்
1.அதலம்,
2.விதலம்,
3.நிதலம்,
4.சுதலம்,
5.தலாதலம்,
6.ரஸாதலம்,
7.பாதாளம் என்று பூமிக்கு கீழுள்ள ஏழு ரசாதலங்களும்

ஐவகை வேள்விகள்

ஐவகை வேள்விகள்
1.பிரம்மயக்ஞம்(நான்மறை ஓதுதல்),
2.தேவயக்ஞம்(வேள்வி வளர்த்தல்),
3.மணுஷ்யயக்ஞம்(விருந்தோம்பல்),
4.பித்ருயக்ஞம்,
5.பூதயக்ஞம்.
 
ஓம்சாந்தி 3முறை ஏன்!

ஓம்சாந்தி 3முறை ஏன்: மனித வாழ்வில் சந்திக்கும் இடர் துன்பங்களுக்கு மூலகாரணங்கள் மூன்று
1.ஆதிதெய்வீக- நம் கட்டுப்பாட்டில் இல்லாத தெய்வீக சக்திகளால் ஏற்படும் புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள்,
2.ஆதி பௌதிக-மனிதருக்குள் ஏற்படும் துன்பம், போராட்டம், கலவரங்கள், ஆசை காரணமாக ஏற்படும் ஆபத்துகள்,
3.ஆத்யாத்மிக- மனித உடல், மனம் சார்ந்த நோய்கள், பிரச்சனைகள். ஆகிய இம்மூன்றினாலும் தடைகள் இடற்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதால் மூன்றுமுறை ஓம் சாந்தி சொல்லப்படுகின்றது.

ஒரே நாளில் பஞ்சாரண்யதலங்கள்

ஒரே நாளில் வழிபட வேண்டிய தலங்கள்-பஞ்சாரண்யதலங்கள்
1.உஷத்காலம்-வைகறை-திருக்கருகாவூர் (முல்லைவனம்)(135),
2.காலசந்தி-காலை-அவளிநல்லூர் (பாதிரிவனம்)(217),
3.உச்சிக்காலம்-நன்பகல்-அரதைபெரும்பாழி (வன்னிவனம்)(216),
4.சாயரட்சை-மாலை- திருஇரும்பூளை (ஆலங்குடி) (பூளைவனம்)(215),
5.அர்த்தயாமம்-அர்த்தசாமம்-கொள்ளம்புதூர் (வில்வவனம்)(230).

ஒரேநாளில் குடந்தை தலங்கள்

ஒரேநாளில்வழிபடவேண்டிய குடந்தை தலங்கள்
1.காலை-குடந்தைகீழ்க்கோட்டம்(144),
2.நண்பகல்-திருநாகேச்சுரம்(146),
3.மாலை-திருபாம்புரம்

ஒரேநாளில் அம்மன்தலங்கள்

ஒரேநாளில்வழிபடவேண்டிய அம்மன்தலங்கள்
1.பெளர்ணமி காலை-மேலூர்(திருவுடைநாயகி).
2.பெளர்ணமி மதியம்-திருவெற்றியூர் (வடிவுடைநாயகி) (தி.த-20),
3.பெளர்ணமி மாலை-(வட) திருமுல்லை வாயில் (கொடியிடைநாயகி) (தி.த-22)

ஒரேநாளில் முக்தி தலங்கள்

ஒரேநாளில்வழிபடவேண்டிய முக்தி தலங்கள்
காலையில்-கடம்பந்துறை-கடம்பர்,
பகலில்-சிவமலைசொக்கர்-அய்யர்மலை-ரத்னகிரீசுவரர்,
மாலையில்-திருவேங்கிநாதர்-திருஈங்கோய்நாதர்

ஒரேநாளில் சேலம் பஞ்சாட்சரதலங்கள்

ஒரேநாளில்வழிபடவேண்டிய சேலம் பஞ்சாட்சரதலங்கள்
1.சேலம்-சுகவனேஸ்வரர்,
2.உத்தமசோழபுரம்-கரபுரநாதர்,
3.பில்லூர்-வீரட்டானேசுவரர்,
4.பரமத்தி-வீமேஸ்வரர்,
5.இடையார்-திருவேலிநாதர்.

ஒரேநாளில் குடந்தை பஞ்சாட்சரதலங்கள்

ஒரேநாளில்வழிபடவேண்டிய குடந்தை பஞ்சாட்சரதலங்கள்
1.தர்மேஸ்வரம்,
2.பட்டீஸ்வரம்,
3.சோழமாளிகை,
4.சிவசக்திமுத்தம்,
5.ஆலயவடதளி.

ஒரேநாளில் பஞ்சபைரவர் தலங்கள்

ஒரேநாளில்வழிபடவேண்டிய பஞ்சபைரவர் தலங்கள்
1.நல்லூர்.
2.வலஞ்சுழி,
3.சக்திமுத்தம்,
4.பட்டீச்சரம்,
5,ஆவூர்(பஞ்ச பைரவர்கள் அருள்)

ஒரே நாளில் மதுரை பஞ்சலிங்கத்தலங்கள்

ஒரே நாளில் வழிபட வேண்டிய மதுரை பஞ்சலிங்கத்தலங்கள்
1.தி்ருஆப்புடையார்கோவில்,
2.திருஆவினன்குடி,
3.இன்மையில்நன்மைதருவார்,
4.முக்தீஸ்வரர்,
5.பழைய சொக்கநாதர்.

ஒரேநாளில் பிரதிஷ்டை தலங்கள்

ஒரேநாளில்பிரதிஷ்டை வழிபடவேண்டிய தலங்கள்
வைக்கம்,கடுதுருத்தி,ஏற்றுமானூர் ஆகிய இடங்களில் ஒரே நாளில் லிங்கம் பிரதிஷ்டை-ஒரே நாளில் தரிசனம் சிறப்பு.

ஒரேநாளில் மகாசிவராத்ரி தலங்கள்

ஒரேநாளில்-மகாசிவராத்ரியன்று வழி படவேண்டிய தலங்கள்
1.முதல்காலம்-குடந்தைகீழ்க்கோட்டம்(144)-நாகேஸ்வரர்,
2.இரண்டாம்காலம்-திருநாகேச்சுரம்(146)-நாகநாதர்,
3.மூன்றாம்காலம்-திருபாம்புரம்-பாம்புரேஸ்வரரையும்,
4.நான்காம்காலம்-நாகூர் நாகேஸ்வரரையும்-உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.

ஒரேநாளில் நவகைலாயங்கள்

ஒரேநாளில் வழிபடவேண்டியதலங்கள் நவகைலாயங்கள்.
1.சேர்ந்தபூமங்கலம்,
2.இராசபதி,
3.தென்திருப்பேரை,
4.வைகுண்டம்,
5.முறப்பநாடு,
6.குன்றத்தூர்,
7.கோடகநல்லூர்,
8.சேரன்மாதேவி,
9.பாபநாசம்.

ஒரேநாளில் வைகுண்ட ஏகாதசியன்று-நவதிருப்பதிகள்.

ஒரேநாளில்-வழிபடவேண்டியதலங்கள் வைகுண்ட ஏகாதசியன்று-நவதிருப்பதிகள்.
1.ஸ்ரீவைகுண்டம்(80)-சுக்கிரனுக்குரிய தலம்,
2.திருவரகுண்மங்கை(81)-சூரியனுக்குரிய தலம்,
3.திருப்புளிங்குடி(82)-சந்திரனுக்குரிய தலம்,
4.திருத்துலைவில்லி மங்களம்(83)-(இரட்டைத்திருப்பதி) -ராகு-கேதுக்குரிய தலம்,
5.திருக்குளந்தை(84)-செவ்வாய்க்குரிய தலம்,
6.திருக்கோளூர்(85)-குருபகவானுக் குரியதலம்,
7.திருப்பேரை(86)-சனிபகவானுக்குரிய தலம்,
8.திருக்கூர்(87)-(ஆழ்வார்திருநகரி)-புதனுக்குரிய தலம்.

ஒரேநாளில் ஆத்தூர் தலங்கள்

ஒரேநாளில்-வழிபடவேண்டியதலங்கள் ஆத்தூர்.
1.போளூர்-தான்தோன்றீஸ்வரர்,
2.ஏத்தப்பூர்-சாம்பமூர்த்தீச்வரர்,
3.ஆத்தூர்-காயநிர்மலேஸ்வரர்,
4.ஆறகழூர்-காமநாதீஸ்வரர்,
5.கூகையூர்-சுவர்ணபுரீஸ்வரர்,

கங்காளமூர்த்தி

கங்காளமூர்த்தி-திரிவிக்ரமராக அவதரித்து மகாபலியை பாதாளத்தில் அழுத்திய திருமால் கர்வம் கொண்டதால் அவரை அடக்கிய கோலம்.
1.பிரளயகாலருத்ரர்-குடந்தை நாகேஸ்வரசுவாமி.
2.விரிஞ்சிபுரம்-மார்க்கபந்தீஸ்வரர் கோவில்.
3.சுசீந்திரம்,
4.திருச்செங்காட்டாங்குடி,
5.தென்காசி,
6.தாராசுரம்,

கரக்கோயில்

கரக்கோயில்-சக்கரக்கோயிலின் குறுக்கம். கருவரைப்பகுதி தேர்வடிவில் சக்கரங்களுடன். மேலக்கடம்பூர் சிவாலயம், குடந்தை-சாரங்கபாணி,

கங்கை

கங்கை
1.அமர்கங்கா-12000'உயரத்தில் அமர்நாத் குகையருகே,
2.நீலகங்கா-சிவன் கங்கையில் முகம் கழுவ நிறம் மாறியது. அமர்நாத்,
3.காளிகங்கா-கயிலை மானசரோவர் வழியில்,
4.ராம்கங்கா-உ.பி.யில் காசிப்பூர் அருகில்,
5.ஜடகங்கா-உ.பி.யில் குமாயூன் மண்டல்-பித்தோராகர் பகுதியில்,
6.கோரிகங்கா-வெள்ளை நீர்-குமாயூன் மண்டலின் தார்சூலா கிராமம்,
7.கருடகங்கா-உ.பி.அல்மோரா-பைஜ்நாத் சேத்திரம் அருகில்,
8.பாணகங்கா-வைஷ்ணவி கோவில் அருகில்-ஜம்மு.
9.பாலகங்கா-கட்ரா பகுதியில் வைஷ்ணவிதேவி கூந்தலை அலசியதால் பால்(கூந்தல்) கங்கா,
10.ஆகாசகங்கா-கயிலாய மலையை பரிக்ரமா செய்யும் போது, காணப்படுவது,
11.பாதாளகங்கா-ஆந்திரா-ஸ்ரீசைலம் அருகில்,
12.தேவகங்கா-மைசூர்-சாமுண்டி மலைக்கு கிழக்கே,
13.துக்தகங்கா-துக்தம்-பால்-கேதார்நாத் அருகில்,
14.வாமன்கங்கா-ஜபல்பூர்-பேடாகாட் அருகில்,
15.கபில்கங்கா-நர்மதை பரிக்ரமா பாதயில் தம்கட் லிருந்து 5கி.மீ,
16.கராகங்கா-சோணபத்திரை நதி உற்பத்தி ஸ்தானத்திற்கு தெற்கில்-பிருகு கமண்டலில்,
17.மோஷகங்கா-நர்மதை பரிக்ராமாவில் சூலபாணேஷ்வர் சேத்திரம் அருகில் உள்ல மோக்கடி அருகில்.

கரு/பிண்டம்

கரு/பிண்டம்-கரு தோன்ற மூலகாரணம் ஆணிடமுள்ள தாது-சுக்கிலம் எனும் இந்த தாதுவில் 84 அம்சங்கள் உள.1/3=28 அம்சங்கள் ஆண் அருந்தும் நீர், உணவு ஆகியவற்றால் தோன்றுகிறது. மீதி 56 அம்சங்களில் 21-தந்தையிடமிருந்தும், 15-பாட்டனாரிட மிருந்தும், 10-முப்பாட்டனாரிட மிருந்தும், 6-4ஆம் தலைமுறை மூதாதையரிட மிருந்தும், 3-5ஆம் தலைமுறை மூதாதையரிடமிருந்தும், 1-அம்சம் 6வது தலைமுறை மூதாதையரிட மிருந்தும் கிடைக்கிறது. அதிக அளவில் தந்தை-21 +பாட்டனார்-15 +முப்பாட்டனார்-10=46 அம்சங்கள் தருவதால் அவர்கள் நினைவாக பிண்டம் கொடுக்கிறோம். திருமண உறுதியின் போது கூட தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் ஆகியோரை நினைவு கூறி மரியாதை செய்கிறோம்.

கல்-3வகை

கல்-3வகை
1.புருஷ சிலா(ஆண் கல்),
2.ஸ்திரி சிலா(பெண் கல்),
3.நபும்சக சிலா(அலி கல்).
உறங்காத அக்னி உறையுமிடம்-கல்.இந்தவகை கல்லில் செய்வதால் லிங்கத்திற்கு-அபிஷேகம் குளிர்விக்க.
நீரிலே சயனம் செய்பவன்-நாராயணன்-இந்தவகை கல்லில் குளிர்ச்சியிருப்பதால்-அலங்காரம்.

கல்கருடன்

கல்கருடன்
1.ஸ்ரீரங்கம்,
2.நாச்சியார்கோயில்.
3.அரியக்குடி.

கலசங்கள்

கலசங்கள்(கோபுர)தாமிர கலசங்கள்-3முதல் 13வரை-நெல்,கோழ்வரகு தான்யங்களால் நிரப்புவர்-இடியின் சக்தியை தன்னுள் இலுத்துக் கொள்ளும் தன்மை பெற்ற தானியங்கள்.

கலாகர்ஷ்ணம்

கலாகர்ஷ்ணம்-இறை அருட்சக்தியை பிம்பத்திலிருந்து கும்பத்திற்கு மாற்றுவது

கஜயுக்தமூர்த்தி

கஜயுக்தமூர்த்தி-தருகாபுரத்து முனிவர்கள் உருவாக்கிய யானையை அழித்து அதன் தோலை போர்த்திய தலம்-சிவன் பில்லி சூன்யம் நிவர்த்தி-திருவழுவூர்.

காஞ்சி

காஞ்சி-4கோட்டங்கள்
1.புண்ணியகோட்டம்-ஸ்ரீவரதராஜபெருமாள்,
2.ருத்ரகோட்டம்-ஏகாம்பரநாதர்,
3.குமரகோட்டம்-சுப்ரமணியர்,
4.காமக்கோட்டம்-காமாட்சி.

காசி,கயா,பிரயாகை,ராமேஸ்வரம் நீராடல்

காசி,கயா,பிரயாகை,ராமேஸ்வரம் நீராடல்-பலன்
திருவாரூர்-கமலாலயத்திருக்குளம்-காசிபோல 64தீர்த்த கட்டங்களுடையது,
கயா தீத்தம்-கயாபோல நீத்தார் கடன் ஆற்றிட உகந்ததலம்
திருப்பள்ளி முக்கூடல் தீர்த்தம்-பிரயாகை,காசி,இராமேஸ்வரம் போல 16மடங்கு சிறந்தது.10கி.மீ. சுற்றில் பயன்.

காசி-இராமேஸ்வரம் யாத்திரை

காசி-இராமேஸ்வரம் யாத்திரை-என்பது முதலில் இராமேஸ்வரம் கடலில் நீராடித் ராமநாதரைத் தொழுது மணல் எடுத்துக் காசிசென்று கங்கையில் கரைத்து நீராடித் விஸ்வநாதரைத் தொழுது கங்கை தீர்த்தத்துடன் ராமேஸ்வரம் வந்து இராமசாமிக்கு அபிஷேகம் செய்து வணங்கவும்.பின் சேதுவில் மூழ்கி எழவும்.

காசிக்கு இனையாண தலங்கள்

காசிக்கு இனையாண திருத்தலங்கள்
1.திருச்சாய்க்காடு(சாயாவணம்)(63),
2.திருவெண்காடு(65),
3.திருவையாறு(105)
4.திருவிடைமருதூர்(147)
5.திருமயலாடுதுறை(மாயூரம்)(156),
6.திருவாஞ்சியம்(187)
7.திருராமேஸ்வரம்(252)
8.திருமுதுகுன்றம்(விருத்தாசலம்)(41)
9.திருக்கோகர்ணம்(267)

காமகோடிபீடம்

காமகோடிபீடம்-காஞ்சி

காமபாணம்

காமபாணம்
1.காதல் நினைவாக இருத்தல்-தாமரை,
2.அதனால் புலம்பல்-அசோகு,
3.சோகம்-முல்லை,
4.மோகம்-மா,
5.மரணம்-நீலம் எனும் 5வகை மலர்களை அம்பாகக் கொண்டு கரும்பை வில்லாக வளைத்து மன்மதன் தொடுக்கும் பாணம்.

காற்று-வகை உடலில்

காற்று-10வகை-உடலில்
1.பிராணன்-உடலில் தோன்றி பலவிதங்களில் இயக்குவது
2.அபானன்-மூச்சு வழியாக உடலில் புகுந்து மூலாதரம்வரை செல்வது,
3.வியானன்-உடல் முழுவதும் வியாபிப்பது,
4.உதானன்-உந்தியிலிருந்து மேல்நோக்கிப் போகும் வாயு,
5.ஸமானன்-உணவைச் சீரணிக்கச் செய்வது,.
6.நாகன்-நீட்டி முடக்கவும்,பேசவும்,விக்கலுக்கும் உதவுவது
7.கூர்மன்-விழித்தல்,இமைத்தல்,மயிர் சிலித்தல் ஆகியனச் செய்வது
8.கிரிகரன்-தும்மல்,இருமல்,வெம்மை,சினம் இவற்றை உண்டாக்குவது
9.தேவதத்தன்-ஓட்டம்,இளைப்பு,வியர்வை,கொட்டாவி ஆகியவற்றிற்கு உதவுவது
10.தனஞ்சயன்-உடல் இறந்தபிறகு மண்ணுடன் கலக்கச் செய்வது

காலசர்ப்பதோஷம்

காலசர்ப்பதோஷம் தலம்
1.திருகாளஹஸ்த்தி,
2.உத்தமபாளையம்,

காலபூஜை

காலபூஜை
1.உஷத்காலம்,
2.பிரதாக்காலம்,
3.காலசந்தி,
4.த்விதீயகாலசந்தி,
5.மத்யசந்தி,
6.மத்யானம்,
7.சாயங்காலம்,
8.இரவுசாந்தி,
9.அர்த்தஜாமம்,
10.பூதராத்திரி,
11.காலராத்திரி,
12.மகாநிசி.

காலபைரவர்

காலபைரவர்-பொதுவாக சிவன் கோவில்களில். அதியமான்கோட்டை-தர்மபுரி,

கிருஷ்ணாரண்யம்

கிருஷ்ணாரண்யம்
1.திருக்கண்ணமங்கை(16),
2.திருக்கண்ணபுரம்(17),
3.திருக்கண்ணங்குடி(18),
4.திருவழுந்தூர்(23),
5.திருநாறையூர்.

கிருஷ்ணர் பட்டமகரிஷிகள்
 

கிருஷ்ணர் பட்டமகரிஷிகள்-1.ருக்மணி, 2.சத்யபாமா, 3.காளிந்தி, 4.ஜாம்பவதி, 5.விக்ரவிந்தை, 6.சத்யவதி, 7.பத்திரை, 8.லட்சுமணை, 9.ராதை.


கும்பமேளா

கும்பமேளா-அமிர்தம் எடுக்க நடந்த போரின் முடிவில் மகாவிஷ்னு மோகினி அவதாரம் எடுத்து அக்கிரமங்கள் மேலும் பலம் பெறக்கூடாது என்பதால் அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் இருக்கவும் தேவர்களுக்கு கிடைக்கவும் செய்தார்.அப்போது சிலதுளிகள் பூமியில் விழுந்த இடங்கள்தாம் 1.பிரயாகை, 2.ஹரித்துவார், 3.உஜ்ஜயினி, 4.நாசிக். தேவர்-அசுர போர்க்காலமே-தேவர்களுக்கு 12நாட்கள்-12 ஆண்டுகள். அமுததுளிகள் விழுந்த இடம் ஜீவ நதிகள்.

கும்பமேளா-நான்கு

கும்பமேளா-4இடங்களில் 12வருடங்களுக்கு ஒருமுறை
1.சூரியன்-மேஷராசி+பிரஹஸ்பதி-கும்பராசி=ஹரித்துவார்(கங்கை-உத்ரகாண்ட்)
2.சூரியன்-மகரராசி+பிரஹஸ்பதி-விருஷபராசி=பிரயாகையில்(அலகாபாத்-உ.பி-கங்கை, யமுனை, சரஸ்வதி-திரிவேணி சங்கமம்) சிறப்பு-மகரசங்கராந்தியிலிருந்து41நாட்கள்),
3.பிரஹஸ்பதி+சந்திரன்+சூரியன்-சிம்மராசி/விருச்சிகராசி-அமாவாசை-கோதாவரி-த்ரியம்பகத்தில். (நாஸிக்-மகாராஷ்டிரா),
4.கார்த்திகை- பௌர்ணமி- ஷீப்ராநதிக்கரை- உஜ்ஜயினி- ம.பி.கும்பமேளா- சிங்ஹஸ்த் -10யோகங்கள் கூடிவரும் பருவம் (பௌர்ணமி, சுக்லபட்சம், சோமவாரம், சுவாதி நட்சத்திரம், மேஷ ராசியில் சூரியன், சிம்மராசியில் சந்திரன், துலாமில் இல்லாதவேளை, வைகாசி மாதம், கேது உதயகாலம்.)

கும்பாபிஷேகம் எத்தனை வகை!

கும்பாபிஷேகம் எத்தனை வகை!
அனாவர்த்தம்-ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் பூஜை இல்லாமலும் இருக்கும் கோவிலை நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது அனாவர்த்தம்.
ஆவர்த்தம்-புதிதாக ஆலயம் அமைத்து பிரதிZடை செய்யப்படும் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுவது.
புனராவர்த்தம்-கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியவற்றை பழுது நீக்கி புதுப்பித்து மூர்த்திகளுக்கு பாலாலயம் செய்து அஷ்டபந்தனம் சாத்தி, மீண்டும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
அந்தரிதம்-கோவிலினுள் தகாதவைகள் நேர்ந்துவிடின் அதன் பொருட்டு செய்யப்படும் சாந்தி.

குமரகோட்டம்
 

குமரகோட்டம்.
குமரகோட்டமிரண்டு.1.காஞ்சி,(பிருதிவி தலம்), 2.திருவாரூர்.(பிருதிவி மூலாதார சேத்ரம்)

குரு
 

குரு-இரண்டுபேர்
1.தேவர்களுக்கு குரு-பிரகஸ்பதி,
2.அசுரர்களுக்கு குரு-சுக்ரபகவான்,


குரு பகவான்

குரு பகவான் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் ஆசாரியான். பிருஹஸ்பதி. சந்திரன், அங்காரகன்,சூரியன்-நண்பர்கள். புதனும், சுக்கிரனும்-பகைவர்கள். அதிதேவதை-இந்திர மருத்துவான். பிரத்யபதி தேவதை-பிரம்மா. வாகனம்-யானை.

குருபரிகாரத்தலங்கள்

குருபரிகாரத்தலங்கள் (வேத அறிவு,3காலங்களை உணரும் ஆற்றல்,ஜோதிட சாஸ்திரம்)
ஆலங்குடி-பிரதானகுருஸ்தலம், இலம்பையங்கோட்டூர், எண்கண், எறும்பூர், எறையூர், ஒமாம்புலியூர், காஞ்சி-பிள்ளையார்பாளையம், குச்சானூர். கெழுவத்தூர், கொடும்பாளூர், கோலியனூர், கோவிந்தவாடி-அகரம், சுருட்டப்பள்ளி, சென்னை-திரிசூலம், தக்கோலம், திருக்கண்டீஸ்வரம். திருக்கோளூர், திருச்செந்தூர், திருத்தண்டிகை.(எஸ்.புதூர்), திருநாவலூர், திருப்புலிவனம், திருப்பூந்துருத்தி, திருவலிதாயம், திருவையாறு, திருவையாறு, திருவொற்றியூர், தென்குடித்திட்டை, தேவூர், தேனி, பட்டமங்கலம், பெரம்பலூர், போரூர், மகேந்திரப்பள்ளி, மயிலாடுதுறை, முறப்பநாடு, மூவலூர், மேல்பதி, லால்குடி, வள்ளலார்கோயில். வாணியம்பாடி,

கோசங்கள்

கோசங்கள்-5வகை.
1.உணவால்ஆன அன்னமயகோசம்,
2.பிராணனால்ஆன பிராணமயகோசம்,
3.அறிவால்ஆன விஞ்ஞானமயகோசம்,
4.மனதால்ஆன மனோமயகோசம்,
5.ஆனந்தமய கோசங்கள்.

கோபுரங்கள்

கோபுரங்கள்-உயரம்.1.ஸ்ரீரங்கம்-256', 2.ஸ்ரீவில்லிபுத்தூர்-165'. 3.குடந்தைசாரங்கபாணி-146'

கேதுபகவான்

கேதுபகவான்-விப்ரசித்தி-சிம்ஹிகையின் மகன்-ஸ்வர்பானு. மோகினி உருவத்தில் மகாவிஷ்னு அமுதத்தை பங்கீடு செய்ய இடையில் இராகு தேவரைப்போல் சென்று அமிர்தம் உண்ண இதை சந்திர, சூரியர்கள் விஷ்னுவிடம் சொல்ல அவர் இராகுவின் தலையை துண்டித்தார். அமிர்தம் உண்டதால் இறக்காமல் விஷ்னுவை வேண்ட இராகுவின் உடம்பிற்கு பாம்பு தலை அமைத்து-கேது-கிரஹப்பதவி தந்தார். சந்திர சூரியர்களை பலம் இழந்து ஒளி குன்றும் படியான கட்டுப்படுத்தும் ஆற்றல். வாகனம்-தவளை. கரும்பச்சை நிறமுடையவர். எந்தநாளும் வழிபடின் தாய்வழி பாட்டனார் ஞானம் அளிப்பார். விஷநோய், வெண்குஷ்டம், வயிற்றுவலி வராமல் தடுப்பார். மனைவி சித்திரலேகா. சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சூரியன், செவ்வாய், சந்திரன் பகைவர்கள். உச்சவீடு-விருச்சகம். நீச்சவீடு-ரிஷிபம். அதிதேவதை-சித்ரகுபதன், பிரத்யதி தேவதை-பிரம்மா.

கேதுபரிகாரத்தலங்கள்

கேதுபரிகாரத்தலங்கள்-உத்தமபாளையம், கீழ்பெரும்பள்ளம், சித்ரகுப்தர்-காஞ்சி, சேதுபுரம், தாமல், திருகாளத்தி, திருபாம்புரம், திருதுலைவில்லிமங்கலம், நாகப்பட்டினம், மணல்மேடு, ராஜபதி, லிங்கப்பர்தெரு-காஞ்சி,

கோதண்டராமர்,சீதா,லட்சுமணன்

கோதண்டராமர்,சீதா,லட்சுமணன்-அதம்பார், முடிகொண்டான், தில்லைவிளாகம், வடுவூர்-சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டது.

கோவிலில் இறைவன் சயனம்

கோவிலில் இறைவன் சயனித்து இருக்கும்போது
ராஜகோபுரம்-பாதம்,
பலிபீடம்-முழங்கால்,
கொடிமரம்-இனக்குறி,
மண்டபம்-வயிறு,உதரம்,
பிரகாரம்-கைகள்,
கருவரை-திருமுகம்,கழுத்து,
விமானம்-சிகரம்,தலை,
கலசம்-சிகை.

கையால் உணவு

கையால் உணவு பழக்கம்
1.மனிதன்,
2.யாணை,
3.குரங்கு.

கொடிமரம்

கொடிமரம்-தீய சக்திகளை அகற்றுதல், இறை ஆற்றலை அதிகரித்தல்,கோவில் மற்றும் பக்தர்களை பாதுகாத்தல்.கொடிமரத்தை சூக்கும லிங்கமாக பாவித்து வணங்க வேண்டும். கொடிமரம்-மும்மூர்த்திகளின் முத்தொழில்களை உணர்த்தும்.கொடிமரம் 33கனுக்கள் உடையதாய் இருக்கவேண்டும். ஐந்தில் ஒரு பங்கு பூமியில் இருக்கவேண்டும். அடியிலிருந்து 7பாகமாக்கி சதுர,கோண,விருத்த வடிவங்களாக அமைக்க வேண்டும். அடி-சதுரம்-பிரம்மபாகம்-இறைவனின் படைப்பு தொழில்.அதன்மேல் எண்கோணம்-விஷ்னு பாகம்-காத்தல் தொழில்.அதன்மேல் உருண்ட நீண்டபாகம்-உருத்திரன் பாகம்-சங்காரத் தொழில்.கொடிமரபீடம்-பத்ரபீடம்.மனத்தின் பாசக்கட்டு அறுமாறு வேண்டி மனத்தை பலியிடவேண்டும்.

கொடிமரம் வகை

கொடிமரம் வகை
உத்தம கொடிமரம்-சந்தனம்,தேவதாரு,செண்பகம்,வில்வம்,மகிழம்.
மத்திம கொடிமரம்-பலா,மா.
அதம கொடிமரம்-கமுகு,பனை,தெங்கு.

தனுர் சங்கராந்தி

தனுர் சங்கராந்தி-சூரியன் தனுசு ராசியில் நுழையும் நாள்-மார்கழி பிறப்பு-ஒருகலசத்தில் சுத்தமான நீரை நிரப்பி அதில் சூரியனின் பிம்பம்/பிரதிமையை போட்டு தானம். எளியவர்களுக்கு உணவு.-கிரகதோஷங்கள் விலகும்

சங்கராந்தி-வழிபாடு

சங்கராந்தி-வழிபாடு-பலன் சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பிரவேசிக்கும் நேரத்தில் தமிழ் மாதங்களின் பிறப்பு.
தான்ய சங்கராந்தி-சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாள்-சித்திரை பிறப்பு-தானிய வகைகள் தானம்-1000 யாகங்கள் செய்த பலன்.
தாம்பூல சங்கராந்தி-சூரியன் ரிஷப ராசியில் நுழையும் நாள்-வைகாசி பிறப்பு-வெற்றிலை, பாக்கு, பழம், தட்சணை வைத்து வயதான தம்பதியருக்கு தானம்-நற்பலன்கள்.
மனோரத சங்கராந்தி-சூரியன் மிதுன ராசியில் நுழையும் நாள்-ஆனி பிறப்பு-குடத்தில் வெல்லம் நிரப்பி வேதம் கற்றவருக்கு உணவளித்து தானம்-நியாமான விருப்பங்கள் நிறைவேறும்.
அசோக சங்கராந்தி-சூரியன் கடக ராசியில் நுழையும் நாள்-ஆடி பிறப்பு-ஆதித்யஹ்ருதயம் சொல்லவோ கேட்கவோ வேண்டும்.முன்னோர்களை வணங்க வேண்டும்-சோகங்கள் நாசமாகும்.
ரூப சங்கராந்தி-சூரியன் சிம்ம ராசியில் நுழையும் நாள்-ஆவனி பிறப்பு-பாத்திரதில் நெய் நிரப்பி வழிபட்டு தானம்-நோய்கள் நீங்கும்.
தேஜ சங்கராந்தி-சூரியன் கன்னி ராசியில் நுழையும் நாள்-புரட்டாசி பிறப்பு-நெல்,அரிசி மீது கலசம் வைத்து வழிபட்டு மோதகம் நிவேதனை-காரிய தடைகள்கள் நீங்கும்.
ஆயுர் சங்கராந்தி-சூரியன் துலாம் ராசியில் நுையும் நாள்-ஐப்பசி பிறப்பு-கும்பத்தில் பாலோடு வெண்ணெய் சேர்த்து வழிபட்டு வேதியர்க்கு தானம்-ஆயில் பலம்.
சௌபாக்ய சங்கராந்தி-சூரியன் விருச்சக ராசியில் நுழையும் நாள்-கார்த்திகை பிறப்பு-சிகப்புநிற துணிசார்த்தி அர்ச்சனை செய்து மங்கள பொருட்கள்,ஆடை தானம்-தடைகள் விலகி எண்ணியது ஈடேறும்.

சக்கரங்கள்

சக்கரங்கள்-தலங்கள்
1.சிதம்பரம்-இரகசியம் இடம்-'திருவம்பலச்சக்கரம்'-எனும்'சிதாகாச சக்கரம்',
2.திருக்கடையூர்-காலசம்ஹார மூர்த்தி சன்னதி-'மிருத்யுஞ்ஜய யந்திரம்',
3.கங்கைகொண்ட சோழபுரம்-8கோள்கள்-12ராசிகள்-'கமலயந்திரம்-சூரியசக்கரம்',
4.மாங்காடு-மூலக்காமாட்சி-'மூலிகைகளான அர்த்தமேரு',
5.திருப்போரூர்-கந்தசாமி-'ஸ்ரீசக்கரம்',
6.காஞ்சிபுரம்-காமாட்சியம்மன்-'ஸ்ரீசக்கரம்',
7.திருத்தணி-முருகன்பாதம்-'சடாட்சரச்சக்கரம்',
8.விழுப்புரம்-அனந்தபுரம் தண்டாயுதபாணி-ஸ்ரீசக்கரம்,
9.திருவானைகாவல்-அகிலேண்டேஸ்வரி செவியின் தாடங்கள்-ஸ்ரீசக்கரம்,
10.திருச்செந்தூர்-முருகன் மார்பில்-'ஷ்டாட்சரம்',
11.திருவாரூர்-தியாகராஜர்மார்பு-'ஸ்ரீசக்கரம்',
12.சிதம்பரம்-அன்னாகர்ஷண யந்திரம்.
13.மூகாம்பிகை-ஸ்ரீஸ்ரீசக்கரம்,
14.திருவிடைமருதூர்-ஸ்ரீஸ்ரீசக்கரம்,
15.திருவொற்றியூர்-ஸ்ரீஸ்ரீசக்கரம்,
16.விழுப்புரம்-ஸ்ரீஸ்ரீசக்கரம்,
17.காருகுடி-திடசிந்தனை-காலசக்கரம்.

ஸ்ரீசக்கரம்-9நிலை

சக்கரம் ஸ்ரீ-9நிலை ஒன்பது படி நிலைகள்.
1.மூன்று கோடுகளுடன் கோயில்கதவு போன்ற 4வாசல்களுடன் கூடிய சதுரவடிவம்-த்ரைலோக்ய மோஹன சக்கரம்' இதன் கிரகம்- வியாழபகவான்.முதல் ஆவாரணத்தை ஆராதிப்பவர்களுக்கு எந்தசக்தியாலும் இடையூறு கிடையாது.நினைவாற்றல் பெருகும்.
2.தாமரை இதழ்கள் 16 இருக்கும். இதில் இருக்கும் காமாகர்ஷிணி முதல் சரீராகர்ஷிணி வரை பதினாறு யோகினிகள் பூஜை செய்பவரின் மன அழுக்கை நீக்குகின்றன.
3.தாமரை இதழ்கள் 8.இதில் வாசம் செய்யும் தேவதைகள் பூஜிப்பவருக்கு தியானம், பூஜை இவற்றில் பரிபூரண ஈடுபாட்டை அளிக்கும்.
4.பதினான்கு கோணங்களில் 14யோகினிகள் வாசம். இந்த ஆவாரணத்தில் தேவி சந்திரனாக இருக்கின்றாள்.பலனாக புத்திர பாக்யம்.
5.சர்வதிப்ரா முதல் சர்வ சௌபாக்யதாயிணி வரை பத்து யோகினிகள் பத்து கோணங்களில் வாசம்.இது சனீஸ்வரரின் ஆட்சிக் குட்பட்டது.இந்த ஆவரண பூஜை தேகம், மனம் ஆகியவற்றிற்கு ஆத்மபலம் அளிக்கும்.
6.பத்து கோணங்கள்.தேவி சூர்ய ஸ்வரூபமாய் பிரகாசம்.இந்த ஆவரண பூஜையில் காம, குரோத, மதமாச்சரியம் நீங்கும். பொறாமை குணம் விலகும்.
7.எட்டு முக்கோணங்கள்.எட்டு தேவதைகள் பிரசண்ணம்.புதன் இங்கு வீற்றிருக்கின்றார். ஆனமஞானம், புத்திசாதுர்யம், நாவண்மை உண்டாகும்.
8.தேவி மஹாதிரிபுர சுந்தரியாய் இருக்கின்றாள்.அவளின் அங்குசம், பாசம், கரும்பு, வில், பாணம் ஆகிய நான்கும் வழிபடப்படுகின்றன. கரும்புவில்,பாணம் மன்மதனின் காமசக்தியை அழிக்க, அங்குசம் நம் மனதில் திய எண்ணங்களை அழிக்கும்.பாசம் அன்னையிடம் மனதை நிலைக்கச் செய்யும்.
9.இந்த கோணத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கின்றார்.அனைத்து ஆனந்தங்களுக்கும் உறைவிடமாய் திகழும் பேரின்பம் எனும் பரபிரம்ம நிலையில் ஒன்ற வைக்கும் நிர்விகல்ப சமாதிநிலை ஆகும்.

சகுனங்கள்

சகுனங்கள்-
1.சுப சகுனங்கள்-பசு, யாணை, குதிரை, காளைமாடு, கன்றுடன்பசு, சவம், தயிர், புஷ்பம், சந்தனம், தானியம், பொரி, எள், சலவைத்துணி, மாமிசம், நெய், பால், சங்குஒலி, சுபவார்த்தை, கருடன்சப்தம், காடை, காக்கை இடமாக பறத்தல்.
2.அசுப சகுனங்கள்-பாம்பு, பன்றி, முயல், எண்ணெய்த்தலை, அவிழ்ந்ததலை, ஈரத்துணி, அரளி, கனகாம்பரம் போன்ற சிவந்த புஷ்பங்கள்.

சதாசிவ தத்துவங்கள்

சதாசிவ தத்துவங்கள்-5
1.சிவ சதாக்யம்-ஈசன்,
2.அமூர்த்தி சதாக்யம்-ஈசானம்,
3.மூர்த்த சதாக்கியம்-பிரம்மா,
4.காத்ரு சதாக்கியம்-ஈஸ்வரன்,
5.கர்ம சதாக்கியம்-சதாசிவம்.

சண்டீச பதம்

சண்டீச பதம்
1.உமாதேவி,
2.விநாயகர்,
3.முருகவேள்,
4.சண்டீஸ்வரர்.

சண்டேசஅனுக்கிரகமூர்த்தி

சண்டேசஅனுக்கிரகமூர்த்தி-சிவபூசை சிதைத்த தந்தையை தண்டித்த விசாரசருமரின் பூஜை ஏற்று சிவன் தொண்டர்களின் தலைவனாக்கி சடையில் இருந்த கொன்றை மாலையை சூட்டி பதவியருளல்-சிவப்பதம்-திருவாய்ப்பாடி

சண்டேசர் பதவி

சண்டேசர் பதவி-அன்பு நெறியின் மூலம் வழிபட்டால் இறைஅம்சம் பெறலாம்-சண்டேஸ்வர தத்துவம்.
1.விநாயகர்-கும்பேதர சண்டேஸ்வரர்,
2.சிவன்-த்வனி சண்டேஸ்வரர்,
3.முருகன்-சுமித்ர சண்டேஸ்வரர்,
4.அம்பிகை- தாரிகா சண்டேஸ்வரர்,
5.சூரியன்-தேஜஸ் சண்டேஸ்வரர்.

சந்திரபகவான்

சந்திரபகவான்-சுபகிரகம்-சிவனின் இடது கண்ணாக திகழ்பவர். சுகபோஜனம், வஸ்திரம், நித்திரை, புகழ் வழங்குபவர். அத்தி முனிவருக்கும் அனுசூயாக்கும் பிறந்தவர். தக்கனின் 27மகள்களை அசுவதி முதல் ரேவதி வரை மணந்து அவர்களில் ரோகினி, கார்த்திகை ஆகியோர்மீது மட்டும் அன்பாக நடந்ததால் சாபம் பெற்று சிவனை வழிபட்டு 15நாள் தேய்ந்தும் 15நாள் வளர்ந்தும் வருகிறார். சிவனின் தலையை அலங்கரிப்பவர்-10வெண் குதிரை பூட்டிய பத்துசக்ர தேரில் பவனி வருபவர்.திங்கள்-வழிபட சிறந்த நாள். வழிபடின் உடல் ஆரோக்யம், தனம், சுபகாரியங்கள், தாயின் நலன் அளிப்பவர்.

சந்திரன்பரிகாரத்தலங்கள்

சந்திரன்பரிகாரத்தலங்கள்-சேர்ந்தபூமங்கலம், சேரன்மாதேவி, சோமங்கலம், திருபுளியங்குடி, தில்லைவிடங்கன், புட்டிரெட்டிபட்டி, வெள்ளைகுளம்-காஞ்சி.

சப்தகோடி மகாமந்திரங்கள்

சப்தகோடி மகாமந்திரங்கள்-சப்த-ஏழு.கோடி-முடிவு.
1.நமஹ-வேண்டுதல்,வணங்குதல்,
2.ஸ்வாஹா-திருப்திசெய்தல்,அழைத்தல்,
3.வஷட்-வசப்படுத்துதல்,நீர்விடுதல்,
4.ஹும்-காமம்நீக்குதல்,கூட்டுதல்,
5.வௌஷட்-அழைத்தல்,அசைவின்றீஇருத்தல்,
6.பட்-இடையூறுஅகற்றல்,அழித்தல்,
7.ஸ்வதா-வசீகரித்தல்,கொடுத்தல்.
இந்த நமஹ,ஸ்வாஹா,ஹூம்,வஷட்,வௌஷட்,பட்,ஸ்வதா ஆகிய 7சொற்களை முடிவாக கொண்டுள்ள உயர்ந்த மந்திரங்கள் சப்தகோடி மகாமந்திரங்கள்.

சப்தராம ஷேத்திரம்

சப்தராம ஷேத்திரம்
1.திருஅயேத்தி(96),
2.திருபுல்லாணி(94),
3.சீர்காழி(28),
4.திருப்புள்ளபூதங்குடி(10),
5.திருவெள்ளீயங்குடி(22),
6.திருபுட்குழி(57),
7.திருஎவ்வுள்(திருவள்ளூர்)(59).

சப்ததுறைகள்

சப்ததுறைகள்-சப்தரிஷிகள்-வசிஷ்டர், அகத்தியர், பரத்வாஜர், பராசரர், கவுதமர், காசிபர், கவுசிகர்-நீவாநதியின்(வெள்ளாறு) 7துறைகளில் பாவம்தீர நீராடியது.

சப்தமாதாக்கள்

சப்தமாதாக்கள்
1.சாமுண்டா-மஹிஷாசுரமர்த்தினி/சிவகாளீ-பராசக்தி உடலில் தோன்றிய ப்ராஹ்மீ, வைஷ்ணவி, இந்த்ராணி, மாஹேஸ்வரி, கௌமாரி, வாராஹி தேவியர் அறுவரும் மஹிஷாசுரனுடன் போரிடும்பேது பல்லாயிரக்கணக்காணவர்கள் தோன்ற ஈசனால் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவள் பத்ரகாளி-கோபம்தணிந்து சாமுண்டா-சாமுண்டாவின் மனைவி.
2.ப்ராஹ்மீ-வாக்வாதீனீ,சரஸ்வதி, சாவித்ரி, வர்ணமாத்ருகா-பிரம்மனின் படைப்பு தொழிலுக்கு உதவி, அமுதல் ஷவரை 51அட்சரங்களின் வடிவு.வாகனம்-அன்னப்பறவை. பிரம்மனின் மனைவி.
3.வைஷ்ணவி-ஸ்வேதர்ணா/லட்சுமி/பூதேவி-திருமாலின் பரிபாலனத்திற்கு உதவி. வாகனம்-கருடன். திருமாலின் மனைவி.
4.இந்த்ராணி-ஐந்த்ரீ-தேவலோகத்தையாலும் இந்திரனுக்கு உதவி-வாகனம்-வெள்ளையானை. இந்திரனின் மனைவி.
5.மாஹேஸ்வரி-பார்வதி/கங்கை-சிவனுக்கு உதவி-வாகனம்-நந்தி. சிவனின் மனைவி.
6.கௌமாரி-தேவசேனா/வள்ளி-முருகனுக்கு உதவி.வாகனம்-மயில்.முருகனின் மனைவி.
7.வாராஹி-வீர்யவதி/தண்டினி-ராஜராஜேஸ்வரியின் சேனாநாயகி-திருமாலின் வராஹ அவதாரத்தின் அம்சம். திருமாலின் மனைவி.

சப்தரிஷிகள்

சப்தரிஷிகள்-
1.கௌசிகர்,
2.காசிபர்,
3.பரத்வாஜர்,
4.கௌதமர்,
5.அகத்தியர்,
6.அத்ரி,
7.பிருகு

சப்தவிடங்க நடனங்கள்

சப்தவிடங்கத்தலங்களில் இறை ஆடிய நடனங்கள்
1.வீதிவிடங்கர்-அஜபாநடனம்-சுழுமுனை சுவாசம்போல்-திருவாரூர்(204),
2.அவனிவிடங்கர்-பிருங்கநடனம்-மலருக்குள் வண்டு குடைவதுபோல்-திருக்குவளை(240),
3.நாகவிடங்கர்-உன்மத்தநடனம்-பித்து பிடித்தவன்போல்-திருநள்ளாறு(169),
4.சுந்தரவிடங்கர்-பாராவரதரங்கநடனம்-கடல் அலைகளைப்போல்-திருநாகை(199),
5.ஆதிவிடங்கர்-குக்குடநடனம்-கோழியின் நடையைப்போல்-திருக்காறாயில்(236),
6.நீலவிடங்கர்-கமலநடனம்-பொய்கையில் ஒற்றைக்காலில் நின்றாடும் தாமரை மலர்போல்-திருவாய்மூர்(241),
7.புவனிவிடங்கர்-ஹம்சவாதநடனம்-அன்னப்பறவை நடனம்போல-திருமறைக்காடு(242).

சப்தகரைகண்டம்
                              

சப்தகரைகண்டம்-வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தவமிருந்த 7அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்த பிரமஹத்தி பாவம் தீர சேயாற்றின் வடகரையில் 7சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு-சப்தகரைகண்டம்.

சப்தகைலாயங்கள்

சப்தகைலாயங்கள்-வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல,ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தவமிருந்த 7அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்த பிரமஹத்தி பாவம் தீர சேயாற்றின் வடகரையில் 7சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு-சப்தகரைகண்டம். இதே தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள்.


சப்த ஸ்தான தலங்கள்

சப்த ஸ்தான தலங்கள்(ஏழூர்)-திருவையாறு
1.திருப்பழனம்-தி.த-104.
2.திருச்சோற்றுத்துறை-தி,த-130,
3.திருவேதிக்குடி-தி.த-131,
4.திருக்கண்டியூர்-தி.த-129,
5.திருப்பூந்துருத்தி-தி.த-128,
6.திருநெய்த்தானம்-தி.த-106,
7.திருபுள்ளமங்கை.தி.த-133

சப்த விடங்க தலங்கள்

சப்த விடங்க தலங்கள்(ஏழூர்)
1.திருவாரூர்(204),
2.திருக்குவளை(240),
3.திருநள்ளாறு(169),
4.திருநாகை(199),
5.திருக்காறாயில்(236),
6.திருவாய்மூர்(241),
7.திருமறைக்காடு(242).

சமயங்கள்

சமயங்கள்
1.சைவம்-சிவன்,
2.வைணவம்-விஷ்னு,
3.கானாபத்யம்-விநாயகர்(சைவத்துடன் ஒன்றியது),
4.கௌமாரம்-முருகன்(சைவத்துடன் ஒன்றியது),
5.சௌரம்- ,
6.சாக்தம்-சக்தி(சைவத்துடன் ஒன்றியது),

சயனத் திருக்கோலங்கள்

சயனத் திருக்கோலங்கள்-8
1.உத்தான சயனம்-திருக்குடந்தை,
2.தர்ப்பசயனம்- திருப்புல்லாணி,
3.தலசயனம்-மாமல்லபுரம்,
4.புஜங்கசயனம்-திருவரங்கம்,திருஅன்பில்,திருஆதனூர்,திருவள்ளூர்,திருக்கரம்பனூர்,திருக்கவித்தலம்,
5.போகசயனம்-திருசித்ரக்கூடம்,
6.மாணிக்கசயனம்-திருநீர்மலை,
7.வடபத்ரசயனம்-திருவில்லிபுத்தூர்,
8.வீரசயனம்-திரு இந்தளூர்.

சரஸ்வதி

சரஸ்வதி மூலவர்-
1.கூத்தனூர்,பிரகாரத்தில்
2.மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெளிபிரஹாரம்,
3.ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் சன்னதிவாசல்,
4.கங்கைகொண்ட சோழபுரம்,
5.பத்மநாபபுரம் அரண்மணை,
6.தஞ்சை சரஸ்வதி கோயில்.
தம்பதிசமேதராய்-1.கண்டியூர் சிரகண்டீஸ்வரர், 2.ராஜஸ்தான்-(புஷ்கரம்). 3.வடஇந்தியா-காஷ்மீர், 4.மல்லிகார் ஜுனம், 5.செகந்தரபாத், 6.ஐதராபாத், 7.பாசாரா(ஆந்திரா).

சன்னதி மறைத்தல்

சன்னதி மறைத்தல்-ஜீவாத்மா கருவரையில் உள்ள பரமாத்வாவை பார்க்கும்போது பார்வையும் எண்ணங்களும் ஒன்றுபட்டு இறைவனை சென்றடைய வேண்டும் என்ற கடவுளை நினைப்பவர்களின் எண்ணங்களை தடைசெய்வது, மறைப்பது-தெய்வ நிந்தனையாகும். எனவே நந்தி-இறைவன் இடையேயும் நிற்கக்கூடாது.

சனிபகவான்

சனிபகவான்-சூரியனின் மனைவி சஞ்ஞகையின் மகன் வைவஸ்தமனு, யமன், மகள்-யமுனை. சூரியனின் வெப்பம்தாங்காமல் தன்நிழலை சாயாதேவியாக்கி தந்தை வீடு செல்ல அவளுக்கு சாவர்ணி-மனு, சனைச்சரன்-சனி, என்ற 2மகன்களும், பத்திரை-பெண்னும் பிறக்க சாயாதேவி மூத்தாள் பிள்ளைகளை கொடுமை படுத்த யமன் சித்தியை உதைக்க வர, கால்முறிய சாபம். யமனை சூரியன் காப்பாற்றி சாயாதேவி யாரென அறிந்து தவத்திலிருந்த சஞ்ஞீகையையும் அழைத்து இருவரோடு வாழ்ந்தான். மனுவை மன்னனாகவும், யமனை காலனாகவும், யமுனையை நதியாகவும், சனியை கிரகங்களுள் ஒன்றாகவும் இருக்குமாறு செய்தான். யமன் இரண்டாந்தாயின்மீது கொண்ட கோபத்தால் சனியை அடிக்க சனியின் கால் நொண்டியானது. தஷயாகத்தில் ஒர் கண்ணையிழந்தார். சனி காசி விசுவநாதரை வழிபட்டு தன் பதவிக்குரிய வலிமையை பெற்றான். 2வலக் கைகளில் வர, தான் முத்திரையும் 2இடக்கைகளில் வில்லும், சூலமும் உடையவர். நண்பர்கள்-புதன், குரு, சுக்கிரன்.பகைவர்கள்-சூரியன், சந்திரன், செவ்வாய். மனைவி-ஜ்யேஷ்டாதேவி. தனது மனைவியின் விரகதாபத்தை தீர்க்கமுடியாமல் போனதால் அவளின் சாபம் பெற்றவர். இந்தசாபம் சனியின் பார்வை வக்கிரகமாக தீமைதருவதாக அமைந்தது. நிறம் கருப்பு.ஈஸ்வரன் என பட்டம் பெற்றவர். மகன்-குளிகன். நீலா, மந்தா என மேலும் 2மனைவிகள். வாகனம்-காகம். தானியம்-எள், மரம்-வன்னி, சுவை-கசப்பு,

சனிபரிகாரத்தலங்கள்

சனிபரிகாரத்தலங்கள்-இலாத்தூர், எட்டியதளி, குச்சானூர்(சு), கோலியனூர், திருக்கொள்ளிக்காடு(232), திருகச்சிநம்பிதெரு-காஞ்சி, திருநள்ளாறு(169), திருவட்டத்துறை, தென்திருப்போரை, தெள்ளாறு, நிம்மேலி, மொரட்டாண்டி, பொழிச்சலூர், ஸ்ரீவைகுந்தம்.

சார்த்தூலஹாரமூர்த்தி

சார்த்தூலஹாரமூர்த்தி-தருகாபுரத்து முனிவர்கள் உருவாக்கிய புலியை அழித்து அதன் தோலை போர்த்திய தலம்-சிவன் பில்லி சூன்யம் நிவர்த்தி-திருவழுவூர்

சாளக்கிரமங்கள்

சாளக்கிரமங்கள்-அவந்திதேசம்-நேபாளம்-இமயமலை அடிவாரம்-அரிபர்வதம்-சக்கரதீர்த்தம்-கண்டகிநதி-சாளக்கிரமம்-தெய்வீகம் நிறைந்த கற்கள்-திருமால் வஜ்ரகீரிடம் என்னும் பூச்சியுரு கொண்டு இந்த கற்களில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.
1.வெண்மை நிற சாளக்கிரமம்-வாசுதேவ க்ஷேத்திரம்,
2.கருமை நிற சாளக்கிரமம்-விஷ்ணு க்ஷேத்திரம்,
3.பச்சை நிற சாளக்கிரமம்-ஸ்ரீநாராயண க்ஷேத்திரம்,
4.பசும்பொன்/மஞ்சள் கலந்த சிவப்புநிற சாளக்கிரமம்-ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரம்,
5.மஞ்சள் நிற சாளக்கிரமம்-ஸ்ரீகிருஷ்ண க்ஷேத்திரம்.
6.நீலம்-தாமோதர சாளக்கிரமம்.
7.அதசிப்பூ நிறம்- வாமன சாளக்கிரமம்.
8.பல நிறங்கள் கலந்தது-அனந்த சாளக்கிரமம்.

சித்தர்கள்

சித்தர்கள்-1.கோரக்கர், 2.அகஸ்தியர், 3.மச்சமுனி, 4.சுந்தரானந்தர், 5.தன்வந்திரி, 6.பதஞ்சலி, 7.காகபுஜண்டர், 8.கருவூரார், 9.பாம்பாட்டிசித்தர், 10.குதம்பைசித்தர், 11.சிவவாக்கியர், 12.போகர், 13.கமலமுனி, 14.திருமூலர், 15.இராமதேவர், 16.கொங்கணர், 17.இடைக்காடர், 18.சட்டைநாதர்.

சித்திகள்

சித்திகள்-6
1.அதிரிச்சியம்-கண்முன்தெரிவதை மறையச்செய்வது,
2.ஆகர்ஷ்ணம்-தொலைவில் உள்ளதை அருகினில் இழுத்தல்,
3.அஞ்சனம்-மறைந்துள்ள பொருளை வெளிக்காட்டுவது,
4.வசியம்-பகைவரை வசியப்படுத்துதல்,
5.ரசவாதம்-இரும்பை பொன்னாக்குதல்,
6.வயத்தம்பம்-முதியோர் இளையவராதல்,இளையோர் முதியோராதல்.

சிற்ப சாஸ்திர நூல்கள்

சிற்ப சாஸ்திர நூல்கள்
1.விஸ்வதர்மம், 2.விஸ்வேசம், 3.விஸ்வசாரம், 4.விர்த்தம், 5.தாவட்டம், 6.நளம், 7.மயம், 8.ஹனுமந்தம், 9.பானுசாஸ்திரம், 10.கற்பாரியம், 11.ஸ்ருஷ்டம், 12.மானசாரம், 13.வித்யாபதிவாஸ்து, 14.பராசரீயம், 15.ஹரிஷிகம், 16.வாஸ்துபோதம், 17.சயித்தகம், 18.விஸ்தாரம், 19.ஐந்தரம், 20.வஜ்ரம், 21.சௌமம், 22.விஸ்வகாசிபம், 23.விசாலம், 24.சித்ரம், 25.மகதந்தரம், 26.காபிலகாலயூபம், 27.நாமசம்ஹிதை, 28.சாத்திகம். 29.ஆதிசாரம், 30.விஸ்வபோதம், 31.பஹுஸ்ருதம், 32.மானபேதம்.

சிரஞ்சீவிகள் ஏழுபேர்!

சிரஞ்சீவிகள் ஏழுபேர்!
1.அஸ்வத்தாமன். 2.பரசுராமர், 3.மார்க்கண்டேயன், 4.ஹனுமான், 5.வீபீஷ்ணன், 6.மாபலி சக்ரவர்த்தி, 7.வியாசர்.

சிரோன்மணி

சிரோன்மணி-சிவயோகிகளின் யோகசக்தியால் உயிரனுக்கள் ஊர்த்துவரேதஸாக மேலே சென்று நின்றால் அந்த உயிரனுக்கள் 'சிரோன்மணி' யாக மாறும்.கால் பகுதியில் வைத்து படுத்தால் நகர்ந்து தலைப் பகுதிக்கு வந்து விடும் தன்மையுடையது.

சிலை செய்யும் பொருட்கள்

சிலை செய்யும் பொருட்கள்
1.களிமண், 2.சுட்டமண்(செங்கல்), 3.சுதை-கலவை, 4.கடுசர்க்கரை(சுக்கான்), 5.தாரு(மரம்), 6.கல்-, 7.உலோகம்-, 8.தந்தம்-, 9.வண்ணம்-, 10.ரத்தினங்கள்-

சிவன்-சக்தி

சிவன்-சக்தி-சிவன்-நன்மை,
சக்தி-உண்மை,
உமை-சக்தி பிரணவம்

சிவ அர்ச்சனை

சிவ அர்ச்சனை-வில்வ தலைகளால் சிவனை அர்சனை செய்வது சிறப்பு. சோமபிரதோஷம் என்ற திங்கட்கிழமை வரும் பிரதோஷ நாளில் துளசி மாலை அணிவித்து துளசி தலைகளால் அர்ச்சனை செய்யலாம் என்கிறது புராணம்.

சிவாலயஓட்டம்

சிவாலயஓட்டம்-1.திருமலை-ல் ஆரம்பித்து, 2.திக்குறிச்சி, 3.திற்பரப்பு, 4.திருநந்திக்கரை, 5.பொன்மலை, 6.கூத்தநல்லூர், 7.பத்மாபுரம், 8.மேலாங்காடு, 9.திருவிடைக்கோடு, 10.திருவிதாங்கோடு, 11.திருபன்றிக்கோடு, 12.திருநாட்டாலம் வரை சிவராத்திரியன்று ஓடுவது.

சிவகுமாரர்கள்

சிவகுமாரர்கள்-1.விநாயகர், 2.முருகன், 3.சாஸ்தா, 4.வீரபத்ரர், 5.பைரவர்.

சிவ நடனம்-பஞ்ச சபைத்தலங்கள்

சிவ நடனம் 5வகை சபை-பஞ்ச சபைத்தலங்கள்
1.இரத்தினசபை-திருவாலங்காடு(15),
2.வெள்ளி(ரஜத)சபை-மதுரை(245),
3.சித்திரசபை-திருக்குற்றாலம்(257),
4.தாமிரசபை-திருநெல்வேலி(258),
5.பொற்சபை-திருத்தில்லை(சிதம்பரம்)(55).

சிவதாண்டவம்

சிவதாண்டவம் 108ல் முக்கியமானவை
1.அற்புதத் தாண்டவம்-உயிர்களின் அறிவிற்குக்காரணமான-சிருஷ்டி தொழில் புரிய
2.ஆனந்தத் தாண்டவம்-உயிர்களுக்கு தேவையானதுகிடைத்து இன்பமாயிருக்க.வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி ஆடுவது. இடதுகாலை ஊன்றி வலதுகாலைத் தூக்கி ஆடுவது மாறுகால் தாண்டவம்.
3.அனவரத தாண்டவம்-சுவாச இயக்கம் நடைபெற நில்லாமல் ஆடும் நடனம்,
4.பிரளயத் தாண்டவம்-உயிர்களுக்கு உறக்கம் தந்து ஓய்வினை தரும் நடனம். ஊழிக்கால முடிவில் உயிர்கள் யாவும் இரைவனிடத்தில் ஒடுங்க.
5.சங்கரத்தாண்டவம்-உலக உயிர்களுக்கு பக்குவத்தை உண்டாக்கி தன்னுள் அனைத்தல்.
6.சிருங்காரத் தாண்டவம்-சிவனும் பார்வதியும் நவரசங்களை காட்டி ஆடுவது.
7.திரிபுரத் தாண்டவம்-பூமியையும் ஆகாயத்தையும் அடக்கி ஆளும் நடனம். மூவுலகையும் இயக்கும் நடனம்.
8.சந்தியா தாண்டவம்-தாளவாத்தியங்கள் முழங்க சந்தியா வெளையில் ஈசன் ஆடுவது.
9.முனி தாண்டவம்-முனிவர் வேண்டுதலுக்காக சிதம்பரத்தில் பதஞ்சலி முனி தாளம் போட ஈசன் ஆடியது.
10.உக்ர தாண்டவம்-அசுரர்களை வதைத்தபோது ஆடியது.
11.ஊர்த்துவ தாண்டவம்-காளையின் சினத்தை அடக்க இடதுகாலை தலைக்குமேல் தூக்கி ஒரே நேர்கோட்டில் அமைவது போன்ற நடனம்.
12.சம்ஹாரத் தாண்டவம்-திருக்கடவூரில் மார்க்கண்டேயரைக் காப்பாற்ற சம்ஹார மூர்த்தியாக நடனம்.
13.பூதத் தாண்டவம்-யாணைத்தோல் போர்த்தி ஆயுதங்கள் ஏந்தி உடலை முறுக்கி வளைத்து ஆடும் ஆட்டம்.
14.சதா தாண்டவம்-முனிவர்களுக்காக் சதா சர்வகாலமும் தெய்வீகத் தாண்டவம்.
15.புஜங்க தாண்டவம்-பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகாலத்தின் கொடுமையிலிருந்து தேவர்களை காப்பாற்ற ஆடியது.

சிவராத்திரி

சிவராத்திரி- மாத, மகா, முக்கோடி, யோக, நித்ய, பட்ச, உத்தம சிவராத்திரிகள்.
1.மாதசிவராத்திரி-கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி/சுக்கிலபட்ச தேய்பிறை சதுர்த்தசி.
2.மகாசிவராத்திரி-நான்கு யுகத்திலும் உலகம் தோன்றிய தினம்.மாசி கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி-ஜோதிர்லிங்கத்தல வழிபாடு கோடி புண்ணியம். இந்நாளில் இரவு 1130 முதல் 0100 மணிவரை உள்ள காலம் லிங்கோத்பவ காலம். இந்த நேரத்தில்தான் சிவன் ஜோதிலிங்கமாக ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் தோன்றி முழுமுதற் கடவுள் என உணர்த்தினார். பன்னிருகோடி லிங்க தரிசனம் தரும் பலனை சிவராத்திரியன்று ஒரு லிங்கத்தை பூஜிப்பதால் பெறலாம்.
3.யோகசிவராத்திரி-திங்கட்கிழமை சிவராத்திரி வந்து அன்று அமாவாசை திதியும் சேர்வது. திங்கள் சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய் காலை சூரிய உதயம் வரை வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி-3கோடி விரதபலன்.
4.நித்யசிவராத்திரி-கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி,சுக்லபட்ச வளர்பிறை சதுர்த்தசி திரயோதசியுடன் சேராமல் இருக்கும் இரவுகள்.
5.பட்சசிவராத்திரி-தை கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி முதல் மாசி மகாசிவரரத்திரி வரை சிவபூஜை.                                                                                 6.முக்கோடி சிவராத்திரி-மாசிமாத தேய்பிறை சதுர்தசி செவ்வாய் அல்லது ஞாயிறு அன்று அமைந்தால் அது முக்கோடி சிவராத்திரி என்பர்.                               7.உத்தம சிவராத்திரி-மார்கழி மாத சதுர்தசி திருவாதிரை நாளில் அமைந்தால் அது உத்தம சதுர்தசி ஆகும். 

சிவராத்திரி சிறப்புகள்

சிவராத்திரி சிறப்புகள்-
1.ஒவ்வொரு கல்பத்திலும் பிரளயத்தின்போது உயிர்கள் அனைத்தையும் தன் வயப்படுத்திக் கொள்ளும் சிவன் யோக சமாதியில் ஆழ்ந்துவிட சக்தி பூஜை செய்து எழுப்ப வழிபட்ட வேளை-சிவராத்திரி.
2.பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு தியாகராஜராக தோன்றிய காலம்-சிவராத்திரி.
3.பார்வதி கண்ணை மூடியதால் ஒளி இழந்த சூரியன்,சந்திரன்,அக்னி மூவரும் ஒளி பெற்ற இரவு-சிவராத்திரி.
4.வில்வ இலைகளை லிங்கத்தின் மேல் உதிர்த்ததால் குரங்கு-முசுகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருள் பாலித்த இரவு-சிவராத்திரி.
5.ஜோதிவடிவாக லிங்கோத்பவமூர்த்தியாக ஈசன் தோன்றியநாள்.
6.பரமனின் பாதி இடத்தை பார்வதி பிடித்தநாள்.
7.உமா மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றநாள்.
8.கண்ணப்ப நாயனாரின் கண்ணைப்பெற்று அவர் பக்தி வெளிப்பட்டநாள்.
9. பகீரதனால் கங்கை பூமிக்கு வந்தநாள்.
10.மார்கண்டேயன் என்றும் 16என வரம் பெற்றநாள்.
11.கிருஷ்னர் நரகாசுரனை வதம் செய்த நாள்.
12.கிரகங்கள் இயங்கத் தொடங்கிய நாள். குருதீட்சை பெற்றிட சிறந்த நாள்.

சிவராத்திரி-சிவன் நாமங்கள்

சிவராத்திரி நாளில் சிவன் நாமங்கள்
1.பவாயநம, 2.ருத்ராயநம, 3.உக்ராயநம, 4.பசுபதயேநம, 5.பீமாயநம, 6.மகாதேவாயநம, 7.சர்வாயநம, 8.சிவாயநம, 9.ஈசனாயநம, 10.சம்புவேநம, 11.சதாசிவாயநம.

சிவராத்திரியன்று சிறப்பு

சிவராத்திரியன்று சிறப்பு
1வதுஜாமம்-அம்பிகை சிவபூஜை செய்த அடையாளமாக பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம்,அர்ச்சனை,பச்சைப்பயறு பொங்கல்/பால்சாதம் நிவேதனம், ரிக்வேத பாராயாணம். சந்தன தூபம்.
2வதுஜாமம்-முருகன் வழிபட்ட காலம்-சர்க்கரை, பால், தயிர், நெய்கலந்த ரஸபஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம். தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயாசம், யஜூர்வேத பாராயணம். குங்கிலியதூபம்.
3வதுஜாமம்-கணபதி பூஜித்த காலம்-தேன்அபிஷேகம், பச்சைக்கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ/அறுகு அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சாமவேத பாராயணம். சாம்பிராணி தூபம்.
4வதுஜாமம்-மகாவிஷ்னு சிவபூஜை காலம்.கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர், அல்லி, நீலோற்பல மலர் அலங்காரம், அர்ச்சனை,நிவேதனமாக சுத்தமான அன்னம், அதர்வணவேத பாராயாணம். அகில்புகை தூபம்.

சிவராத்திரி வழிபட்ட தெய்வம்

சிவராத்திரி(மாத) வழிபட்ட தெய்வம்
1.சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி-உமாதேவி,
2.வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி-சூரியன்,
3.ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி-தன்னைத்தானே,
4.ஆடி மாத தேய்பிறை பஞ்சமி-முருகன்,
5.ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி-சந்திரன்,
6.புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி-ஆதிசேக்ஷன்,
7.ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி-இந்திரன்,
8.கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி+தேய்பிறை அஷ்டமி-சரஸ்வதி,
9.மார்கழி வளர்பிறை+தேய்பிறை சதுர்தசிகள்-லட்சுமி,
10.தைமாத வளர்பிறை த்ரிதியை-நந்திதேவர்,
11.மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி-தேவர்கள்,
12.பங்குனி மாத வளர்பிறை த்ரிதியை-குபேரன்.

சிவராத்திரி-தரிசன தலங்கள்

சிவராத்திரியன்று சிறப்பு தரிசன தலங்கள்
1.ஓமாம்புலியூர், 2.காஞ்சிபுரம், 3.காளஹஸ்தி, 4.கோகர்ணம், 5.திருக்கடவூர், 6.திருக்கழுக்குன்றம், 7.திருவண்ணாமலை, 8.திருவைகாவூர், 9.ஸ்ரீசைலம், 10.தேவிகாபுரம்.

சிவலிங்கங்கள் தேவர்கள் வழிபட்டது

சிவலிங்கங்கள் தேவர்கள் வழிபட்டது
1.இந்திரன்-பதுமராகலிங்கம்,
2.எமன்-கோமேதகலிங்கம்,
3.விஷ்னு-இந்திரலிங்கம்,
4.வாயு-பித்தளைலிங்கம்,
5.சந்திரன்-முத்துலிங்கம்,
6.குபேரன்-சொர்ணலிங்கம்,
7.வருணன்-நீலலிங்கம்,
8.பிரம்மன்-சொர்ணலிங்கம்,
9.நாகர்கள்-பவளலிங்கம்,
10.ருத்திரர்கள்-திருவெண்ணீற்றால் ஆனலிங்கம்,
11.மகாலட்சுமி-நெய்யினால் ஆனலிங்கம்,
12.சரஸ்வதி-சொர்ணலிங்கம்,
13.அசுவினிதேவர்கள்-மண்ணால் ஆனலிங்கம்.

சிவன் அபிஷேகம்

சிவன் அபிஷேகம்
1.பஞ்சகவ்வியம்-பசுவிலிருந்து கிடைக்கும் 5பொருட்கள்,
2.பஞ்சாமிர்தம்-5.பழவகைகளின் கலவை,
3.பஞ்ச உதகம்-5வகையானநீர்.(வில்வம்ஊறியநீர், ரத்தினங்களிட்டநீர், வெட்டிவேர்ஊறிய நறுமணநீர், தர்ப்பைப்புல் ஊறிய நீர், பழச்சாறு கலந்தநீர்) அல்லது(கடல்மண், கங்கை-காவேரி ஆற்றுமண், மலைமண், வில்வமரத்தடிமண், புற்றுமண் இவைகள் கரைத்த நீர்)

சிவன் நைவேத்தியம்

சிவன் நைவேத்தியம்
1.அன்னம்-வெள்ளைசோறு,
2.சித்ரான்னம்-பருப்பு, பொங்கல், சர்கரைப்பொங்கல், மிளகுசாதம், புளியோதரை, தயிர்சாதம், கடுகுசாதம், எள்சாதம், உளுந்துசாதம், பாயாசம்.
3.பால்-நெய்,காய்ச்சியபால்,தயிர்.
4.கனிகள்-மா,பலா,வாழை.
5.காய்கள்-கறிவகைகள்.
6.அபூயம்-மோதகம்,பிட்டு,அப்பம்,வடை,தேன்குழல்,அதிரசம்,தோசை,இட்லி.
7.பானீயம்-ஏலம்,சர்க்கரை,பச்சைக்கற்பூரம்,பாதிரிப்பூ,செங்கழுநீர்பூ கலந்தநீர்,
8.வெற்றிலைப்பாக்கு.
9.பாகையம்-புளியும்சர்க்கரையும் கலந்தகரைசல்.

சிவ சின்னங்கள்

சிவ சின்னங்கள்
திருநீறு, ருத்திராட்சம், வில்வம், ஸ்படிகலிங்கம், பஞ்சாட்சாரம்.

சிவ பூஜை மலர்கள்

சிவ பூஜை மலர்கள்
புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டை, செண்பகம், நீலோதபலம், பாதிரி, அலரி, செந்தாமரை

சிவனைப் போற்றும் புராணங்கள்

சிவனைப் போற்றும் புராணங்கள்
1.சிவபபுராணம்,
2.லிங்கபுராணம்,
3.ஸ்கந்த புராணம்,
4.மார்க்கண்டேயபுராணம்,
5.அக்னி புராணம்,
6.மத்ஸ்ய புராணம்,
7.கூர்ம புராணம்.

சிவனுக்குரிய விரதங்கள்

சிவனுக்குரிய விரதங்கள்
1.சோமவார விரதம்-திங்கள்,
2.உமாமகேஸ்வரர் விரதம்-கார்த்திகை பவுர்ணமி,
3.திருவாதிரை விரதம்-மார்கழி,
4.சிவராத்திரி விரதம்-மாசி,
5.கல்யாணவிரதம்-பங்குனி உத்திரம்,
6.பாசுபத் விரதம்-தைப்பூசம்,
7.அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,
8.கேதார விரதம்-தீபாவளி அமாவாசை.

சிவன்-அட்டவீரட்டதலம்

சிவன் வீரம் புரிந்த-அட்டவீரட்டதலம்
1.காமனை எரித்த தலம்-திருக்குறுக்கை(80),
2.பிரமன் தலை கொய்த தலம்-திருக்கண்டியூர்(129),
3.காலனை உதைத்த தலம்-திருக்கடவூர்(164),
4.அந்தகாசூரனை அழித்த தலம்-திருக்கோவலூர்(43),
5.தக்கனைசம்ஹரித்த தலம்-திருப்பறியலூர்(158),
6.சலந்தரனைசம்ஹரித்த தலம்-திருவிற்குடி(191),
7.திரிபுரத்தை எரித்த தலம்-திருவதிகை(39),
8.யாணை தோலை உரித்த தலம்-திருவழுவூர்.

சிவனின் 5முக அம்ச மூர்த்திகள்

சிவனின் 5முக அம்ச மூர்த்திகள்
1.வாமதேவமுகம்(திருக்காளத்தி)-சிவசாதாக்கியம்-ஈசன்-வடக்கு திசையில் சிவப்பு நிறம்-ஏகபாதர், சக்ரானர், சண்டசானுக்ரஹர், கங்காளர், கஜமுகானுகரர்,
2.தத்புருஷமுகம்(திருவையாறு) -அமூர்த்தசாதாக்கியம்-ஈசானனன்-கிழக்கு திசையில் குங்குமப்பூ நிறம்-காலந்தகர், பிஷாடனர், சேத்ரபாலகர், காமாரி, திருபுராரி.
3.சத்யோஜகமுகம்(திருவக்கரை)-மூர்த்த சாதாக்கியம்-பிரம்மா-மேற்கு திசையில் வெள்ளை நிறம்-உமாமகேஸ்வரர், சுகாசனர், அரியத்தர்.
4.அகோரமுகம்(திருவதிகை)-கார்த்ரு சதாக்கியம்-ஈஸ்வரன்-தெற்கு திசையில் கறுப்பு நிறம்-தட்சிணாமூர்த்தி, சிராதர், நீலகண்டர், வீரபத்ரர், கஜசம்ஹாரர்.
5.ஈசானமுகம்-கர்ம சதாக்கியம்-சதாசிவம்-நடுப்பகுதியில், உச்சியில்-ஸ்படிகநிறம் சோமாஸ்கந்தர், நடராஜர், சந்திரசேகர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர்

சிவனின் 5அம்ச சக்திகள்

சிவனின் 5அம்ச சக்திகள்
1.பராசக்தி-சாந்தியாதீதசக்தி,
2.ஆதிசக்தி-சாந்திசக்தி,
3.இச்சாசக்தி-வித்யாசக்தி,
4.ஞானசக்தி-பிரதிஷ்டாசக்தி,
5.கிரியாசக்தி-நிவர்த்திசக்தி.

சிவனின் 5முகத் தலங்கள்

சிவனின் 5முக மூர்த்திகள் அருளும் தலங்கள்
1.காசி, 2.காளஹஸ்தி, 3.கயிலை, 4.சித்தேஸ்வர் மகாதேவ், 5.திருவானைக்காவல், 6.ராசிபுரம். 7.நேபாளம்-காட்மாண்ட்.

சிவனின் 5முகம்-சிகரங்கள்

சிவனின் 5முகம்-சிகரங்கள்
1.கேதார நாதம், 2.பத்திரி நாதம், 3.பசுபதி நாதம், 4.அமரநாதம், 5.கைலாயநாதம்

சிவனின் 5முகம்-நமசிவாய-5எழுத்து

சிவனின் 5முகம்-நமசிவாய-5எழுத்து
ஈசசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜம், அகோரம். பிரளய காலத்தில் இனைந்து ஒரேவடிவாக மகாசதசிவமூர்த்தியாக-மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில்.

சிவனின் அதோமுகம்

சிவனின் 6வது முகம் அதோமுகம்- மேல்நோக்ய முகம்

சிவனுருவ திருமேனிகள்

சிவனுருவ திருமேனிகள்-64-சிறப்பு-26

சிவாலயங்களில் திருமால்

சிவாலயங்களில் திருமால்
1.கச்சிஏகம்பம்-நிலாத்துண்டபெருமாள்.
2.கொடிமாடச்செங்குன்றூர்-ஆதிகேசவப்பெருமாள்.
3.திருபாண்டிக்கொடுமுடி-அரங்கநாதர்.
4.சிக்கல்-கோலவாமணப்பெருமாள்.
5.சிதம்பரம்-கோவிந்தராஜபெருமாள்.
6.திருநாணா-ஆதிகேசவபெருமாள்.
7.திருநாவலூர்-வரதராஜபெருமாள்.
8.திருநெல்வேலி-நெல்லைகோவிந்தர்.
9.திருப்பத்தூர்-அரங்கநாதர்.
10.திருவக்கரை-வரதராஜர்.
11.திருவோத்தூர்-ஆதிகேசவபெருமாள்

சிவாலயங்களில் சடாரி

சிவாலயங்களில் சடாரி-1.திருநல்லூர்.தி.த-137. 2.போரூர்-இராமநாத ஈஸ்வரர்


சிரஞ்சீவிகள் ஏழுபேர்!
1.அஸ்வத்தாமன். 2.பரசுராமர், 3.மார்க்கண்டேயன், 4.ஹனுமான், 5.வீபீஷ்ணன், 6.மாபலி சக்ரவர்த்தி, 7.வியாசர்.

சிற்ப சாஸ்திரம்

சிற்ப சாஸ்திரம்
1.முழுவடிவம் புரிவதுபோல் அமைவது-சித்திரம்-வணங்குவது உத்தமபலன்,
2.வடிவத்தின் ஒருபுறம் மட்டும் தெரிவது-பாறைகளில்-சித்திரார்த்தம்(அர்த்தம்-பாதி)-வணங்குவது மத்திமபலன்,
3.படமாகத் தீட்டப்படுவது-ஓவியம்-சித்திரபாசம்-குறைவான பலன்.இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.

சின்முத்திரை

சின்முத்திரை-சுட்டுவிரல் நுனியை கட்டைவிரல் தொட மற்ற 3 விரல்கள் தனித்திருப்பது. க.விரல்-பரப்பிரமம், சு.விரல்-ஆண்மா, மற்ற 3விரல்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள். இவைகளை விட்டு ஆன்மா, பிரமத்தை சேர்தல் முக்திக்கு பாதை.

சுககாசனபைரவர்

சுககாசனபைரவர்-கோலார்-கோலராமர்கோவில்

சுக்கிரபகவான்

சுக்கிரபகவான்-வெண்ணிறமுடையவர்-அசுரர் குரு-மகாபலி 3'தானம் செய்யும்போது உண்மை அறிந்து வண்டு ரூபத்தில் நீரைத் தடுக்கும் போது வாமனர் ஒரு தர்பையினால் குத்த ஒருகண்ணை இழந்தார். திருமயிலையில் வழிபட்டு மீண்டும் கண்பெற்றார். தாமரை ஆசனம். வெள்ளைக் குதிரை பூட்டியதேர். வெள்ளிக்கிழமை வழிபடின் நல்ல மனைவி, மக்கள், வீடு, சங்கீததிறமை, அழகு, இளமை, செல்வம் கிட்டும். சனியும், புதனும் நண்பர்கள். குருவும் செவ்வாயும் சமமானவர்கள்.மற்றவர் பகைவர். அதிதேவதை-இந்திராணி. பிரத்யதிதேவதை-இந்திரன், வாகனம்-கருடன்.

சுக்கிரவார விரதம்

சுக்கிரவார விரதம்-
வெள்ளிக்கிழமை-மகாலட்சுமி-மாங்கல்யபாக்யம்.

சுக்கிரன்பரிகாரத்தலங்கள்

சுக்கிரன்பரிகாரத்தலங்கள்-
அரக்கோணம்சாலை-காஞ்சி, கஞ்சனூர், சீர்காழி-68, சேர்ந்தபூமங்கலம், திருஆடானை, திருநாவலூர், திருவெள்ளியங்குடி, பிரான்மலை, பெருவேளூர்(209)

சுப்ரமண்யசக்ரம்

சுப்ரமண்யசக்ரம்-திருப்போரூர்.
{slide title="சுயம்பு பெருமாள் சேத்திரம்" open="flase"}
சுயம்பு பெருமாள் சேத்திரம்
1.ஸ்ரீரங்கம்-தி.தே-1,
2.ஸ்ரீமுஷ்ணம்,
3.நைமிசாரண்யம்-
4.வணமாமலை-தி.தே-79,
5.பத்ரிகாச்சரம்-தி.தே-100,
6.சாளக்கிராமம்-தி.தே-101,
7.திருப்பதி-தி.தே-106,
8.புஷ்கர்.
9.மேல்கோட்டை,
10.காஞ்சி-தி.தே-43,

சூட்சம-ஸ்தூல

சூட்சம-ஸ்தூல
சூட்சமம்-காணமுடியாதது-சிவாய நம என மனதுக்குள் சொல்லி தியானைத்தால் மனதில் உறைவார்.
ஸ்தூல-கண்ணால் காணக்கூடியது. நமசிவாய என சொல்லி உச்சரித்தால் ஈசன் கண்களுக்கு புலப்படுவார்.

சூரியபகவான்

சூரியபகவான்-ஆதித்யபுராணம்
உலகம் தோன்றியபோது ஏற்பட்ட ஓம் என்ற ஓங்கார நாதத்திலிருந்து பிறந்தவர்-சூரியன்-கச்யபமுனியின் புத்திரர். விஸ்வகர்மா புதல்வி ஸுர்வர்சலாவை திருமணம் செய்தார்-வைவஸ்தாமனு(ஞானவடிவம்), யமன்(தர்மவடிவம்)என 2புதல்வர்கள், யமி/யமுனா (நீர்வடிவம்)-புதல்வி. 7வண்ணம்(ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வண்ணங்களின் சேர்க்கை வெண்மை) கொண்ட 7குதிரைகளை (காயத்திரி, ப்ருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்கதி) பூட்டிய ஒரு சக்கரமுள்ள தேர். சூரியன் தேர் செல்லும்போது சக்கரத்தின் சுவடுகள் பதியாது.வாயுவின் ஏழு மண்டலங்கள் ஓன்றன்பின் ஒன்றாக சூரியனை தம் தோள்களில் சுமந்து செல்வதாக ஐதீகம். அதுவே சூரியனின் தேர்க்குதிரைகள். பக்தர்களுக்கு ஆரோக்யம், புகழ், நிர்வாகத்திறன் அளிப்பவர். கணவனின் சூடு தாங்கமுடியாமல் தன் நிழலிருந்து பிரதி உஷாவை உருவாக்கி கணவனுக்கு மணமுடிக்க சனி, சாவர்ணுமனு, தபதி, விஷ்டி என்று 4குழந்தைகள். சூரியன் தன் வெப்பம் தனிய தவமிருந்த தலம் கொளப்பாக்கம். சூரியனை உதயத்தின்போது- இந்திரனும், மதியத்தில்-வாயுவும், அஸ்தமத்தில்-சந்திரனும், வருணனும், இரவில் மும்மூர்த்திகளும், நள்ளிரவில் குபேரணும் வணங்குவர்-

சூரியன் வழிபட்ட திருமுறைத்தலங்கள்

சூரியன் வழிபட்ட திருமுறைத்தலங்கள்
1.திருக்கண்டியூர்(129),
2.வேதிக்குடி(131),
3.குடந்தைகீழ்கோட்டம்(144),
4.திருத்தெளி ச்சேரி(167),
5.புறவார்பனங்காட்டூர்(52),
6.பரிதிநியமம்(218),
7.திருநெல்லிக்கா(234).

சூரியன்பரிகாரத்தலங்கள்

சூரியன்பரிகாரத்தலங்கள்-சூரியனார் கோவில், திருகோலக்கா-69, திருவரகுண மங்கை, பஞ்சுபேட்டை-காஞ்சி. பவநாசம், புட்டிரெட்டிபட்டி.

சூரியஒளி

சூரியஒளி-நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணங்கள் தோன்றும். 7வண்ணங்களின் சேர்க்கை சூரியஒளி. குதிரை-அசுவம்-வண்ணம். சூரியனுக்கு 7குதிரைகள் என வேதம் வர்ணிப்பதன் சூட்சமம்-வர்ணங்களையே!

சூரியனின்12 நாமங்கள்

சூரியனின்12 நாமங்கள்
1.லோலார்க்கர், 2.உத்திர அர்க்கர், 3.ஸாம்பாதித்யன், 4.திரௌபதி ஆதித்யன், 5.மயூகாதித்யர், 6.கஷோல்கா ஆதித்யர், 7.அருணாதித்யர், 8.விருத்தாதித்யர், 9.கேசவாதித்யர். 10.விமலாதித்யர், 11.கங்காதித்யர், 12.யம ஆதித்யர்.

சூரியனின் காரண பெயர்கள்

சூரியனின் காரண பெயர்கள்-
அஜன்-கர்பத்தில்வாசம் செய்யாமல் அவதாரம்,
அரியமான்-விரைவாக சஞ்சரிப்பதால்,
ஆதவன்-அதிதியிடமிருந்து பிறந்ததால்,
இந்திரன்-செல்வங்களைப் பெற்றிருப்பதால்,
சக்கரன்-உலகங்களை படைக்கும் வல்லமை,
சவிதா-ஒளி மழையாய் பொழிவதால்,
சித்ரபாணு-பல வண்ணங்களைக் கொண்டவர்,
சூரியன்-நாளும் உதயமாகி உலகை காப்பாற்றுவதால்,
திவாகரன்-3உலகங்களிலும் பயனித்து ஒளிதோற்றுவிப்பதால்,
பாஸ்கரன்-பிரகாசமான ஒளிக்கற்றைகளைப் பெற்றவர்,
பிரஜாபதி-உலகப் பிரஜைகளின் உற்பத்தி சூரியனிடமிருந்து தொடங்குவதால்,
புவனமித்ரன்-உயிர்களுக்கு அருள் பாலிப்பதால்,
பூஷ்வா-உலகங்களை போஷிப்பதால்,
மர்ஜன்யன்-மேகத்தின் மூலம் இடி முழக்கம் செய்வதால்,
மார்த்தாண்டன்-அண்டம் இரண்டாக பிளந்தபோது கஸ்யபர் ஆறுதல்,
வருணன்-கேட்ட வரத்தை அள்ளித் தருவதால்,
தேவர்களின் இதயத்தில் இடம்-விவஸ்வான்,

செவ்வாய்பரிகாரதலங்கள்

செவ்வாய்பரிகாரதலங்கள்
கோடகநல்லூர், சிறுகுடி, திருக்களந்தை, திருப்புனவாயில், திருவட்டத்துறை. பஞ்சுபேட்டை-காஞ்சி, மேலக்கடம்பு, வெள்ளிமலை, வைத்தீஸ்வரன்கோவில்-70,

சென்னை சக்தி-9

சென்னை சக்தி-9
1.மாங்காடு,
2.திருவேற்காடு,
3.பூவிருந்தவல்லி,
4.&5.திருமுல்லைவாயில்.
6.செம்புலிவரம்,
7.பஞ்சட்டி,
8.மேலூர்,
9.திருவெற்றியூர்.

சென்னை பாலாஜி-9

சென்னை பாலாஜி-9
1.கோயம்பேடு,
2.திருமழிசை,
3.திருநின்றவூர்,
4.ஸ்ரீபெரும்புதூர்,
5.பழையசீவரம்,
6.மலைவையாவூர்,
7.பொன்பாதர்கூடம்,
8.மாமல்லபுரம்,
9.திருவிடந்தை.

சொரூபம்

சொரூபம்-
1.சிவன்-நீலநிறம்,
2.விஷ்னு-பச்சை,
3.பிரம்மா-வெள்ளை

சொக்கப் பனை

சொக்கப் பனை
கார்த்திகை தீபமன்று தென்னை(உத்தமம்)/பனை(மத்திமம்) மரத்தை நட்டு உச்சியிலிருந்து அடிவரை படிப்படியாக நெருப்பு பந்தம் செய்வது. வழக்கில் சொக்கப்பானை ஆனது.

சோமாஸ்கந்த மூர்த்தி

சோமாஸ்கந்த மூர்த்தி
சிவனுக்கும் பார்வதிக்கு இடையில் குமரன் வீற்றிருக்கும் கோலம்-ஞானமுள்ள நற்புத்திரப்பேறு-திருவாரூர்-204.

ஸ்வாகா

ஸ்வாகா-
பிரம்மனின் இரு கூறில் 1.சுவாயம்பு மனு-71 சதுர் யுகங்கள் ஆட்சி. 2. சத்ரூபை.
சுவாயாம்பு மனுவின் மகள் பிரசூதிக்கும் தட்சனுக்கும் மகள்-ஸ்வாகா தேவி, எமன் காதல்-மணம். எழுமிச்சையாக்கி விழுங்கி தேவைப்படும்போது எடுத்து பெண் உருவமாக மாற்றி பின் மீண்டும் எழுமிச்சையாக்குவது வழக்கம். ஒருதடவை அசதியில் எழுமிச்சையாக்க மறந்தபோது, அங்கு வந்த அக்னிமீது ஆசைகொண்டு அவனை எழுமிச்சையாக்கி ஸ்வாகா தேவி விழுங்கி விட யமன் விழித்து அவளை எழுமிச்சையாக்கி விழுங்கி விட்டான். அக்னி மறையவே தேவர்கள் விஷ்னுவிடம் கூற அவர் யமனை ஸ்வாகாதேவியை வெளியேவிடக்கூற, ஸ்வாகாதேவியும் அக்னியை வெளியே விட்டாள். விஷ்னு ஸ்வாகாதேவியை அக்னிக்கு அளித்தார். பிரஜாபதியின் குமரரான அக்னி தேயோவதி பட்டணத்தில் ஸ்வாகாதேவியுடன் வாழ்ந்து வந்தான். அக்னியுடன் என்றும் இனைந்திருக்க வேண்டும் என கேட்க, பிரம்மா,'இனி அக்னிக்கு தனியாக சுட்டெரிக்கும் சக்தியில்லை. நீ அக்னியுடன் இனைந்து அவிசு-தேவர் உணவு பெறுவாய்' என்றார். அதனால்தான் இன்றும் வேள்வித் தீயில் 'ஸ்வாகா' என்ற வார்த்தையுடன் முடிகின்றவாறு மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றது.

தர்மத்தின் நிலை

தர்மத்தின் நிலை
1.சத்ய(கிருத)யுகம்-4பாகத்திலும் தர்மம்-சர்வாங்கபூர்ணம்-சத்யவான்கள் 400ஆண்டுகள் வாழ்ந்தனர்.
2.திரோதாயுகம்-3பாகம் தர்மம்-300ஆண்டுகள்,
3.துவாபராயுகம்-2பாகம் தர்மம்-200ஆண்டுகள்,
4.கலியுகத்தில்-தர்மத்தை அனுஷ்டிப்பவர்கள் மேலும் குறைந்து ஒரு பாதமானது-100 ஆண்டுகள் வாழ்வு.

தர்ப்பணம்-தலங்கள்

தர்ப்பணம்-தலங்கள்
கயா, கன்னியாகுமரி, காசி, காவிரிப்பூம்பட்டிணம், காவேரிக்கரைகள், கும்பகோணம், திருக்கோகர்ணம், திருவெண்காடு, திருவையாறு, திலதர்ப்பணபுரி, பத்ரிநாத், பவானி கூடுதுறை, முக்கொம்பு,ராமேஸ்வரம்,

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி
1.யோக-வேதாகம நுட்பங்கள் சனகாதியர்க்கு தெளிவு ஆகாததால் யோகநெறியால் ஞானம் கைகூடப்பெற்று நிஷ்டையும் கைகூடும் தன்மையை விலக்கியது.
2.வீணா-உலகம் பிரளயத்தில் மூழ்கும்போது வீணையை மீட்டுவர்.தும்புரு,நாரதர்,சுகர் ஆகியோருக்கு நுட்பங்களை வாசித்து விளக்கினார்.(திருப்பூந்துருத்தி,நஞ்சன்கூடு-மைசூர்,நாகலாபுரம்-ஆந்திரா,வெட்டுவான்கோவில்-சங்கரன்கோவில் அருகில்).
3.மேதா-ஞான-தன்னை வழிபடும் அடியார்களுக்கு ஞானம் வழங்கி அருள்.
4.வியாக்கியான-வேதத்தின் பொருள் விளங்காததால் ஆகம நுட்பங்களை உபதேசம்.

தட்சணாயண காலம்

தட்சணாயண காலம்-ஆடி முதல் மார்கழி முடிய-இந்தகாலம் தேவர்களுக்கு ஒரு இரவு காலம்.

தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர்-
அவதூதர்-உடல்,மனம்,புத்தி இவைகடந்து ஆன்மநிலை எட்டியவர். பார்வதி, லஷ்மி, சரஸ்வதி மூவரும் நாரதரின் தூண்டுதலால் அத்திரிமகரிஷி மனைவி அனுசூயையின் கற்பை சோதிக்க நினைத்து மும்மூர்த்திகளை வேண்ட-அவர்கள் நிர்வாணமாக வந்து பிச்சையிடவேண்ட அவர்களைத் தன்கற்பின் மகிமையால் குழந்தைகளாக்கி பாலூட்ட-கற்பின் மகிமை கண்ட மும்மூர்த்திகள் மூவர் அம்சம் நிறைந்த குழந்தை அருளினர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் வேதங்கள் நாய்களாக காலடியில். வாகனம்-காமதேனு. தத்தாத்ரேயர் கோயில்- சேங்காலிபுரம், சேத்தமங்கலம், சென்னை.

தாமரை

தாமரை-
புனிதத்திற்கு உவமை. இறவனின் பூஜைக்கு ஏற்றது.திருவின் உறைவிடம். கமலம், வத்சலம், பத்மம் என்றும் சொல்வர். நல்ல உள்ள எண்ணங்களின் இதயம் இதயகமலம் எனப்படும். திருமால் நாபிக்கமலம்-அம்புஜம் தாமரை. ஆதவனின் வரவில் மலர்ந்து மறைவில் குவிந்து மூடும். வெண்தாமரை-அரவிந்தம். நீலத்தாமரை-குவளை. ஹேமாம்போஜ-தங்கத்தாமரை மானசரோவர் ஏரியில். பாரதத்தின் உயர் விருதுகள் தாமரையை உவமைப்படுத்தி பெயரிடப்பட்டுள்ளது. பல இறைகளின் பீடமாக பத்மம் இருக்கின்றது.

தாமாக்கள்-4

தாமாக்கள்-4
இறைவன் தோன்றுமிடம்-தாமா-(இராமேஸ்வரம்,துவாரகை,பத்ரிநாத்,பூரி)

தாலமானம்-அளவு

தாலமானம்-அளவுமுறை-அனுவைவிடச் சிறியது-அதை பரமஅனு என அளவு கொண்டு இருந்திருக்கின்றார்கள்.சிறிய மயிர் நுனியில்1=64பரமனுக்கள் என பிரித்துள்ளனர்.பரமனு-மிகச்சிறிய அளவு.
8பரமனு-1தேர்த்துகள்,
8தேர்த்துகள்-1மயிர்நுனி,
8மயிர்நுனி-1ஈறு,
8ஈறு-1எள்,
8எள்-1யவை,
8யவை-1அங்குலம்,
24அங்குலம்-1அடி.

தானம்-பலன்கள்

தானம்-பலன்கள்
1.அன்னதானம்-தரித்திரம்,கடன் நீங்கும்.
2.வஸ்திரதானம்-ஆயுளைவிருத்தி செய்யும்.
3.பூமிதானம்-பிரம்ம லோகம்,ஈஸ்வர தரிசனம் கிடைக்கும்,
4.தேன் தானம்-புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
4.கோதானம்-ரிஷிக்கடன்,தேவகடன்,பிதுர்கடன் தீர்க்கும்,
5.நெல்லிக்காய் தானம்-ஞானம் உண்டாக்கும்.
6.தீபதானம்-கண் பார்வை தீர்க்கமாகும்,
7.நெய்தானம்-நோய் தீர்க்கும்,
8.பால் தானம்-துக்கம் நீங்கும்,
9.தேங்காய் தானம்-நினைத்த காரியம் வெற்றியாகும்,
10.பழங்கள் தானம்-புத்தியும்,சித்தியும் கிட்டும்,
11.தங்கம் தானம்-குடும்ப தோஷங்கள் விலகும்,
12.வெள்ளி தானம்-மனக்கவலை தீரும்.

தாணுமாலயன்

தாணுமாலயன்(மும்மூர்த்தி)
தாணு-சிவன்,மால்-விஷ்னு,அயன்-பிரம்மா

திதிக்குரிய கணபதி

திதிக்குரிய கணபதி
1.பிரதமை-பாலகணபதி,
2.துவிதியை-தருண கணபதி,
3.திரிதியை-பக்தி கணபதி,
4.சதுர்த்தி-வீரகணபதி,
5.பஞ்சமி-சக்தி கணபதி,
6.சஷ்டி-துவிஜ கணபதி,
7.சப்தமி-சித்தி கணபதி,
8.அஷ்டமி-உச்சிஷ்ட கணபதி,
9.நவமி-விக்ன கணபதி,
10.தசமி-ஷிப்ர கணபதி,
11.எகாதசி-ஹேரம்ப கணபதி.
12.துவாதசி-லட்சுமி கணபதி,
13.திரயோதசி-மகா கணபதி,
14.சதுர்த்தசி-விஜய கணபதி.
15.அமாவாசை,பௌர்ணமி-நித்யகணபதி.

தியகராஜ மூர்த்தங்கள்

தியகராஜ மூர்த்தங்கள்-
உளிகொண்டு செதுக்கப் படாதவை-ஸ்தாபிக்கப்பட்ட சப்தவிடங்கத்தலங்கள்-7.வலன் அசுரன் இந்திரலோகத்தை தாக்க தன் நண்பன் முசுகுந்தனின் உதவியோடு அசுரனை தோற்கடித்த இந்திரனிடம்,திருமால் வழிபட்ட அவனிடமுள்ள தியாகேசப் பெருமான்-சோமாஸ்கந்த மூர்த்தத்தை கேட்க அதைப்போல் 6மூர்த்திகளைசெய்து அதில் ஒன்றை எடுத்துக்கொள்ள கூற, முசுகுந்தன் திருமால் அருளோடு முதல் மூர்த்தத்தை கண்டு கேட்க, திகைத்த இந்திரன் நண்பனின் பக்திகண்டு 7மூர்த்தங்களையும் கொடுத்து விட்டான். அந்த 7தியாகேசர்கள்தான் இன்று சப்தவிடங்கதலம் என அழைக்கப்படும் தலங்களில் ஸ்தாபிக்கப்பட்ட மூர்த்தங்கள்.

தீர்த்தங்கள்

தீர்த்தங்கள்-
1.தேவதீர்த்தம்,
2.அசுரதீர்த்தம்,
3.ஆர்ஷ்தீர்த்தம்,
4.மானுஷ்தீர்த்தம்.

தீர்த்தங்கள்-வகை

தீர்த்தங்கள்-2வகை
1.பௌம்தீர்த்-திவ்ய பூமியுடன் தொடர்புடையவை,
2.நித்யதீர்த்-இறைவன் வாசம் செய்யும் தலங்கள்.(மோட்ச புரிகள்-அயோத்யா, காசி, துவாரகை, காஞ்சி, ஹரித்துவார், மதுரா, உஜ்ஜயினி ஆகிய சப்தபுரிகள்)

திரிபுராந்தகர்

திரிபுராந்தகர்-திரிபுரங்களை அழிக்க புறப்பட்ட கோலம்.
1.அம்பி-காஞ்சி,
2.பாளயங்கோட்டை-திருநெல்வேலி,
3.சிம்மாசலம்மலை-ஆந்திரா.

திருநீறு

திருநீறு-விபூதி
நீறு-பஸ்மம்-நம் பாவங்களை அழித்து இறைவனை நினைவூட்டும் ஒன்று(ப-பர்த்ஸ்னம் -அழித்தல், ஸ்ம-ஸ்மரணம்-நினைத்தல்) பஸ்மம்-ரக்ஷை-அணிபவரை நோயிலிருந்தும், தீயனவற்றிலிருந்தும் காத்தல்.

திருமுறை

திருமுறை-12
சைவமரபில் தெய்வத்தன்மை வாய்ந்த நூல்கள் 12எனப் பெரியோர்கள் தொகுத்தனர். அந்த திருமுறை ஆசிரியர்கள் 27பேர். பாடல்களின் தொகை-18267.
சம்பந்தர் பாடியது-முதலாவது, இரண்டாவது, மூன்றாவது,
அப்பர் பாடியது-நான்காவது, ஐந்தாவது, ஆறாவது,
சுந்தரர் பாடியது-ஏழாவது,
மாணிக்கவாசகர் பாடியது-எட்டாவது,
திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்தேவர், பூந்துருத்தி நம்பி, காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடொத்தமநம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது பேர் பாடியது-ஒன்பதாவது,
திருமூலர் பாடியது-பத்தாவது,
திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயவடிகள்காடவர்கோன், கழறிற்றறிவார், நம்பியாண்டார்நம்பி, திருவெண்காட்டுஅடிகள், சேரன்நாயனார், நக்கீரதேவநாயனார், கல்லாடதேவநாயனார், கபிலதேவநாயனார், இளம்பொருமான் அடிகள் உட்பட பன்னிருவர் பாடியது-பதினொன்றாவது
சேக்கிழார் பாடியது-பன்னிரண்டாவது.

திரிவேணிசங்கமம்

திரிவேணிசங்கமம்
1.திருப்பள்ளிமுக்கூடல்(காசி,கங்கை,ராமேஸ்வரம்,சேது),
2.பவானிமுக்கூடல்(பவானி,காவேரி,அமுதநதி)
3.ரிஷிகேஷ்,
4.அலகாபாத்(கங்கை,யமுனை,சரஸ்வதி),
5.தி.நர்சீபுரா,ஏகாதசபுரா(காவேரி,கபினி,ஸ்படிக சரோவர் சங்கமம்)
6.பால்க்சங்கமம்(சரஸ்வதி,ஹிரன்யா,கபிலா)

திரு நட்சத்திரங்கள்

திரு நட்சத்திரங்கள்
1.திருவாதிரை-சிவனுக்குகந்தது.
2.திருவோணம்-விஷ்னுக்குகந்தது.

திருநீரு வகைகள்

திருநீரு வகைகள்
1.கல்பம்-ஆரோக்கியத்துடன் கன்றுக் குட்டியுடன் கூடிய பசுவின் சானத்தை பஞ்ச, பிரம்ம மந்திரங்கள் ஓதி அக்னியில் எரிப்பதன் மூலம் கிடைப்பது.
2.அனுகல்பம்-தோட்டம்,காடுகளில் மேயும் பசுக்களின் சானத்திலிருந்து தயாரிப்பது.
3.உபகல்பம்-பசுக்கள் தங்கியிருக்கும் தொழுவத்திலிருந்து கிடைக்கும் சானத்திலிருந்து தயாரிப்பது.
4.அகல்பம்-பல பசுக்களின் சானத்தை ஒன்றாக்கி முறையான மந்திரம் ஓதாமல் தயாரிப்பது.

திருவாரூர் 64தீர்த்தங்கள்

திருவாரூர் 64தீர்த்தங்கள்
கிழக்குகரை-1.கணபதி, 2.தேவ, 3.முக்தி, 4.திரிசங்கு, 5.பஷ்ப, 6.முசுகுந்த, 7.தஷ, 8.உபமன்யு, 9.பித்ரு, 10.வைகுண்ட, 11.வால்மீகி, 12.பஞ்சநாத,
தென்கரை-1.இந்திரானி, 2.வேத, 3.வியாசர், 4.பகீரத, 5.அரிச்சந்திர. 6.துர்வாச, 7.நந்தி, 8.வீரபத்ர, 9.பதஞ்சலி, 10.அகஸ்திய, 11.சப்தரிஷி, 12.வியாக்ரபாத, 13.துருவ, 14.நவக்கிரஹ, 15.த்சரத, 16.பரசுராம, 17.வைனதேய, 18.ரோமச. 19.கங்கா, 20.சந்திர,
மேற்குகரை-1.விஷ்னு, 2.லஷ்மி, 3.ப்ருங்கி, 4.இந்திர, 5.துர்க்கா, 6.ஆதித்யா, 7.மகாகாளி, 8.நகுஷ, 9.அஸ்வத்தாம, 10.நாரத, 11.யக்ஞேஸ்வர, 12.நிரூப, 13.புலஸ்திய
வடகரை-1.வாயு, 2.காயத்ரி, 3.கம்ஸாரி, 4.பிப்பிலாத, .ஜனக, 6.கௌதம, 7.அகல்யா, 8.கந்தர்வ, 9.வனிதா, 10.துவகாலச, 11.ஹிமவத, 12.சுந்தரமூர்த்தி, 13.குபேர. 14.மங்கள். 15.ப்ரஹஸ்பதி, 16.ஓம்கார, 17.குமார, 18.ஸேதுசாகர, 19.பூர்ண ஆகிய 64தீர்த்த கட்டங்கள்.

திருவிடைமருதூர் பரிவாரத்தலங்கள்

திருவிடைமருதூர் பரிவாரத்தலங்கள்
1.விநாயகர்-திருவலஞ்சுழி,
2.முருகன்-திருவேரகம்,
3.நந்தி-திருவாவடுதுறை,
4.நவக்கிரகம்-சூரியனார்கோவில்,
5.சண்டேஸ்வரர்-திருவாய்ப்பாடி,
6.நடராசர்-தில்லை,
7.பைரவர்-சீர்காழி,
8.சோமாஸ்கந்தர்-திருவாரூர்,
9.தட்சிணாமூர்த்தி-இரும்பூளை.

திருமகள் வாசம்

திருமகள் வாசம்
1.வைகுண்டத்தில்-மகாலட்சுமி,
2.பாற்கடலில்-ஸ்ரீலட்சுமி,
3.இந்திரமண்டலம்-சொர்க்கலட்சுமி,
4.அரசர்களிடை-ராஜலட்சுமி,
5.குடும்பம்-கிரகலட்சுமி,
6.வீரர்களிடை-தைரியலட்சுமி,
7.பசுவில்-கோமாதா,
8.யாகத்தில்-தட்சினையாக,
9.தாமரையில்-கமலையாக,
10.அவிபாகத்தில்-ஸ்வாகாதேவி.

திருமலையின் மலைகள்

திருமலையின்7மலைகள்
1.சேஷாத்ரி,
2.அஞ்சனாத்ரி,
3.நாராயணாத்ரி,
4.விருஷபாத்ரி,
5.கருடாத்ரி,
6.வேங்கடாத்ரி,
7.நீலாத்ரி.
.

திருமணம்-வகை

திருமணம்-8வகை
1.பிரம்மவிவாஹம்-தகப்பன் சீலமுள்ள வரனுக்கு தாரைவார்த்தல்,
2.தைவம்-யாகம் நடக்கும்போது ருத்விக்குக்கு யாகதட்சணையாக,
3.ப்ராஜாபத்யம்-தர்மத்தை குறைவில்லாமல் அனுஷ்டியுங்கள் என ஆசிர்வதித்து பூஜித்து கொடுத்தல்.
4.ஆர்ஷம்-மணமகனிடம் ஒரு காளையையும் பசுக்களையும் வாங்கிக் கொண்டு விதிப்படி மணம்,
5.ஆசுரம்-மணமகன் தான் மணம் செய்யும் பெண்ணுக்கும்,தன் பந்துக்களுக்கும் தன்னால் இயன்ற தானம் கொடுத்து மணம்.
6.காந்தர்வம்-மணப்பெண்ணும் மணமகனும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம்.
7.ராக்ஷஸ-பெண்ணை கவர்ந்து சென்று விருப்பமின்றி மணம்.
8.பைசாசம்-பெண் உறங்கும்போதோ,மயங்கி கிடக்கும்போதோ சுயநினைவு இல்லா சமயத்தில் மணைவியாக்குதல்.

திருமூலட்டாணம்

திருமூலட்டாணம்-
1.சிதம்பரம்.2.திருவாரூர்-அர்த்தசாம வழி பாட்டுக்குப்பின் எல்லா கோயில்களிலுள்ள சிவகலைகள் அனைத்தும் மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் திருமூலட்டாணம்.

தில்லைபொன்னம்பலம்

தில்லைபொன்னம்பலம்-
உச்சியில் 9கலசங்கங்ள்-9சக்திகள்-நவசக்திகள். மனிதன் ஒரு நிமிடத்திற்க்கு 15வீதம் 1நாளில் 21600 முறை மூச்சு-குறிக்கும் வகையில்21600 பொன் ஓடுகள். மூச்சு பாதையின் ஆதார நாடிகள் 72000-குறிக்க 72000 ஆணிகள். இருதயம் இடப்புரத்தே-கருவறைசற்று தள்ளி. இரத்தம் இருதயம் பக்கவாட்டில் உள்ள குழாய்கள் மூலம் செல்வது போல் வழி நேராக இல்லாமல் இரு பக்கத்திலும்-பிரபஞ்சத்தின் இயக்க சக்தி அமைப்பு.மனித வடிவில் கோயில்-மனிதனுக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை குறிக்கின்றது.

துவார பாலகர்கள்

துவார பாலகர்கள்
1.சிவன்கோவில்-சண்ட,பிரசண்டன்,
2.பெருமாள்கோவில்-ஜயன்,விஜயன்,
3.அம்மன்கோவில்-ஹரபத்ரா,சுபத்ரா.

துர்க்கை

துர்க்கை-9
1.வனதுர்க்கா,கொற்றவை-கதிராமங்கலம்,தருமபுரம்(மயிலாடுதுறை),
2.சூலினிதுர்க்கா-சரபேஸ்வரரின் இறக்கையில் இருப்பவள்-அம்பர்மாகாளம்,
3.ஜாதவேதோதுர்க்கா-சிவனின் கண்ணில் தோன்றிய தீப்பொறிகளை கங்கையில் சேர்த்தவள்,
4.சாந்திதுர்க்கா-சாந்தி-அமைதி உருவாக்குபவள்,
5.சபரிதுர்க்கா-வேடுவப்பெண்ணாக உருவெடுத்த பராசக்தி,
6.ஜ்வாலாதுர்க்கா-எதிரிகள் தன்னை நெருங்காமல் இருக்க தன்னைச்சுற்றி நெருப்பு வட்டம் இட்டவள்.
7.லவணதுர்கா-லட்சுமணன் வழிபட்டு லவணாசூரனை அழித்தான்,
8.தீபதுர்கா-அஞ்ஞானம்கற்றி மெய்ஞான ஒளி வழங்கும் தீப லட்சுமி,
9.ஆசூரி துர்கா-காமம் அழித்து மோட்சம் அழைத்து செல்பவள்.

துறைக்கோவில்கள்

துறைக்கோவில்கள்
1.ஆதித்துறை(காரியனூர்),
2.திருவாலாந்துறை(கீழப்பழுவூர்)(109),
3.திருவட்டத்துறை (திட்டக்குடி),
4.திருநெல்வாயில் அரத்துறை(33),
5.திருக்கரந்துறை,
6.வடகுரங்காடுதுறை(103),
7.அன்பிலாந்துறை(111),
8.திருமாந்துறை(வடகரை)(112),
9.திருப்பாற்றுறை(113),
10.கடம்பந்துறை(119),
11.திருப்பராய்த்துறை(120),
12.திருச்சோற்றுத்துறை(130),
13.திருப்பாலைத்துறை(136),
14.தென்குரங்காடுதுறை(148),
15.திருவாவடுதுறை(153),
16.பேனுபெருந்துறை(181),
17.திருவண்டுதுறை(229).

துளசி பெயர்கள்

துளசியின் பெயர்கள்
அபேதராஷஸி, கிரம்யா, கிருஷ்ணஜீவிதா, சுரஸா, சூலாக்கினி, பகுபத்திரி, பகுமஞ்சரி, புஷ்பசாரா, பிருந்தா, பிருந்தாவதி, விஷ்வபவானி, விஸ்வபூஜிதா, விஷ்னுவல்லபா, நந்தினிபாவனி.

துளசி வகைகள்

துளசி வகைகள்
கருந்துளசி, கற்பூரதுளசி, கல்துளசி, காட்டுத்துளசி, சிறுதுளசி, செந்துளசி, நல்துளசி, நாய்த்துளசி, பில்வதுளசி, நிலத்துளசி, பூத்துளசி, பூதத்துளசி, பெருந்துளசி, முள்துளசி,

தென்கயிலை

தென்கயிலை
1.திருவவையாறு,
2.ஆவூர்,
3.திருநல்லூர்,
4.திருமறைக்காடு,
5.திருக்காளத்தி,
6.திரிகோணமலை.
7.திருநெடுங்களம்.

தேவலோக நடன மங்கைகள்ஏழு

தேவலோக நடன மங்கைகள் ஏழு!
1.ரம்பை, 2.திலோத்தமை, 3.மேனகை, 4.ஊர்வசி, 5.கெற்பை, 6.பரிமளை, 7.சுகேசி.

நடராஜர் தாண்டவ தலம்

நடராஜர் தாண்டவ தலம்
1.திருத்தளி(திருப்பத்தூர்)-லட்சுமி தாண்டவம்,
2.கீழ்வேளூர்-ஆனந்த தாண்டவம்(அகத்தியர்),
3.திருவாரூர்-அஜபா நடனம்(வீதி விடங்கர்),
4.கொழுமம்-நித்தம் நின்றாடுவார்(அக்னி),
5.திருகாறாயில்-குக்குட நடனம்(ஆதி விடங்கர்),
6.நாகப்பட்டிணம்-பாராவாரதரங்க நடனம்(சுந்தர விடங்கர்),
7.திருநள்ளாறு-உன்மத்த நடனம்(நாகவிடங்கர்),
8.திருக்குவளை-பிருங்கி நடனம்(அவனி விடங்கர்),
9.வேததரண்யம்-அம்சபாத நடனம்(புவனி விடங்கர்),
10.திருவாய்மூர்- கமலநடனம் (நீலவிடங்கர்),                                                                                                                                                                                          11.திருக்கடையூர்- காலசம்ஹார தாண்டவம்,                                                                                                                                                                                                 12.வழுவூர்- கஜசம்ஹார நடனம்,                                                                                                                                                                                                                13.திருவாலங்காடு- ஊர்த்துவ தாண்டவம்,                                                                                                                                                                                                   14.திருவலஞ்சுழி- வாசுகி அனுக்கிரஹ நடனம்,                                                                                                                                                                                                      15.ஓமாம் புலியூர்- வியாக்ரபாத முனிக்காக நடனம்,                                                                                                                                                                                                  16.மயிலாடுதுறை- கௌரி தாண்டவம்,                                                                                                                                                                                                                 17.கூவம் (சென்னை)- ரட்சா தாண்டவம்,                                                                                                                                                                                                                                18. கூடலையாற்றூர்- தாண்டவ தரிசனம் (பிரம்மா),                                                                                                                                                                                                          19. கொடுமுடி- சித்ர நடனம் (பரத்வாஜமுனி).

ந்யாஸம்

ந்யாஸம்-வணங்குமுறை
ஆதிபீஜாக்ஷரங்கள்-அட்சரசக்தியின் 51ரூபங்களை 'தேவி இந்த ஒலி வடிவத்தில் என் தேகத்தில் இந்தப் பகுதியில் இருக்கிறார்' என்று கைவிரல்களால் அந்த இடத்தை தொட்டு வணங்குவதாகும்.

நதி-புனிதம்

நதி-புனிதம்
1.கன்கல்/ஹரித்துவார்-கங்கைபுனிதம்,
2.குருசேத்திரம்-சரஸ்வதிபுனிதம்,
3.செல்லுமிடமெல்லாம்-நர்மதைபுனிதம்.

நந்தி

நந்தி-நந்திக்கொடி
சைவசமயத்தின் அடையாள சின்னம்-ரிஷிபக்கொடி/இடபக்கொடி/நந்திக்கொடி.தன்னை தரிசிப்போரின் கோரிக்கைகளை சுமந்து ஈசனிடம் சேர்க்கும் கருணைத் தேவன்-நந்தி. தர்மத்தை குறுக்கீடு செய்தல் பாவம்.எனவே நந்திக்கும் ஈசனுக்கும் குறுக்கே செல்லக் கூடாது. சரியை, கிரியை, யோகம் என்ற 3கால்களை மடித்து 4வது ஞானப்பாதத்தால் பரம்பெருளை நந்தி கண்டு கொண்டுருக்கிறது.

நந்தி-கோவில்களில்

நந்தி-கோவில்களில்
1.இந்திர நந்தி-போகநந்தி-தேவேந்திரன் இடபவடிவம் கொண்டு சிவனை தாங்கியது. கோவிலுக்கு வெளியே,கருவரையை நோக்கி,
2.வேதநந்தி/பிரம்ம நந்தி-பிரம்மன் இடபவடிவம் கொண்டு சிவனை தாங்கியது. பெரியதாக சுதையால் செய்து மண்டபத்தில்.
3.ஆத்மநந்தி-உலக ஆன்மாக்கள் சிவனை சார்ந்து இருக்க-கொடிமரத்தின் கீழ்-பிரதோஷ கால சிறப்பு வழிபாடு இதற்கே,
4.மால்விடைநந்தி-திரிபுர சம்ஹாரத்தின்போது தேவர்கள் செய்த தேர் முறிய திருமால் இடபவடிவம் கொண்டு சிவனை தாங்கியது.சக்திபதமான 2வது சுற்றில்,
5.தரும நந்தி-பிரளய காலத்தில் தர்மம் மட்டும் இடபவடிவம் கொண்டு சிவனை தாங்கும். இறைவனுக்கு அருகில்,மகாமண்டபத்தில்.
6.அதிகாரநந்தி.-உள்கோபுர வாயில் உட்பகுதியில் வடக்கு நோக்கி.

நர்மதா

நர்மதா-பரிக்ரமா பாதை நீளம்-2856.கி.மீ.
1.ருத்ரப்ரகியா பரிக்ரமா-நர்மதையின் தென் கரையில் ஓரிடத்திலிருந்து சங்கமம் வரை சென்று நதியை கடந்து மறுகரை வழியாக புறப்பட்ட இடத்தை அடைதல் (3வருடங்கள், 3மாதங்கள், 13தினங்கள்),
2.ஜில்ஹேரி ப்ரகியா பரிக்ரமா-மா கி பகியா வில் பூஜை முடித்து வடக்கு கரையில் ஆரம்பித்து சங்கமம் சென்று கடலை அடைந்து மீண்டும் அதே வழியில் மா கி பாகியாவை அடைந்து பூஜை முடித்து கரையை மாற்றி தென்கரைவழி சென்று கடலை அடைந்து மீண்டும் மாகி பகியாவில் பூஜை முடித்து பரிக்ராமாவை முடிவு செய்ய வேண்டும் (7ஆண்டுகள்). நதியை தாண்டாமல் கரையோரம் செல்ல வேண்டும். அப்போது 5நீர்வீழ்ச்சிகள், 25மலைப்பகுதிகள், 3ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கின்றனர். அவர்கள் நர்மதையின் புத்திரர்கள். 2செட் துணிகள்,நர்மதை விநாயகர் பிரதமைகள், லிங்கம், சந்தனம் ஆகிய பொருட்களுடன் பரிக்ரமாவை தொடங்கும் அவர்களுக்கு குறையின்றி வழிமுழுவதும் நர்மதா கவனித்துக் கொள்கிறாள்.நர்மதையில் கிடைக்கும் அனைத்து கற்களும் சிவன் எனப்படுகிறது.கோடையில் நீர் அளவு குறைந்துள்ள போது பாண லிங்கங்கள் கிடைக்கின்றது.
3.நர்மதை-14.5கோடி ஆண்டுகள் பழமையானது.நதியின் தரிசனம் பாவங்களை களையும்-மத்ஸ்ய புராணம். நர்மதை உற்பத்தியாகும் இடத்திலிருந்து சங்கமம் வரை 1312.கி.மீ சென்று ப்ரூச் என்ற இடத்தில் நதியை கடந்து மறுகரை வழியே தொடக்க இடத்திற்கு பிரதட்சணம் செய்வது-பரிக்கிரமா முறை.செல்லும் இடமெல்லாம் புனிதமானது. நீர்பிரவாகம் எப்போதும் எந்தசூழலிலும் கிழக்கு மேற்கு திசையில் பாய்கிறது. மத்யபிரதேசத்தில் அமர்கண்டில் உற்பத்தியாகி மஹாரஷ்டிரம் வழிசென்று குஜராத்தில் கடலில் கலக்கின்றது. ரேவா, மஹாகாலசுதா வேறு பெயர்கள்.

நர்மதை யாத்திரை பலன்

நர்மதை யாத்திரை பலன்
இல்லத்தில் செய்யும் நற்காரியங்களைவிட பசுக்கள் பராமரிப்பு பத்து மடங்கு பலன் தருகிறது;
இதைவிட ஆலயதரிசனமும் அங்கு செய்யும் தான தர்மங்களும் பத்துமடங்கு பலன்;
இதைவிட தீர்த்தயாத்திரை பத்து மடங்கு புண்ணியம்:
இதைவிட சிறந்த சிவாலயங்கள் பத்து மடங்கு பலன்:
இதைவிட நர்மதை நதியின் ஸ்நானம் அங்கு செய்யும் நற்காரியங்கள்1000மடங்கு பலன்:

நமசிவாய

நமசிவாய-
ந-சத்யஜோதிவடிவம்.
ம-விஷ்னுரூபமானது.
சி-தேயு,ருத்ர சொரூபம்,
வ-வாயு,மகேஸ்வர வடிவம்,
ய-ஆகாய வடிவானது,சிவ ரூபம்.
இதில் ந-க்குள் ம-வும், நம-க்குள் வ-வும், நமவ- குள் ய-வும், நமவய-க்குள் சி அடங்கும்.
இந்த 5 அட்சரங்களும் பஞ்சபூத பிரதிநிதிகள். நமசிவய, நமவசிய, வசியநம, சிவயநம, மநயவசி, சிவயவசி என்றும் வழங்கப்பெறும்.

நவக்கிரகஸ்தலங்கள்-காஞ்சிபுரம்

நவக்கிரகஸ்தலங்கள்-காஞ்சிபுரம்
ஞாயிறு-1.சூரியன்-சிவப்பு-பரிதீஸ்வரர்-பஞ்சுபேட்டை,
திங்கள்-2.சந்திரன்-வெள்ளை-சந்திரசேகரர்-வெள்ளைக்குளம்,
செவ்வாய்-3.செவ்வாய்-செவ்வந்தீஸ்வரர்-பஞ்சுபேட்டை,
புதன்-4.புதன்-பச்சை-சத்தியநாதீஸ்வரர்-திருக்காளிமேடு.
வியாழன்-5.குரு-மஞ்சள்-காயரோகனேஸ்வரர்-பிள்ளையார்பாளயம்,
வெள்ளி-6.சுக்கிரன்-வெள்ளை-சுக்லேச்வரர்-அரக்கோணம்சாலை,
சனி-7.சனி-கருப்பு-மணிகண்டேஸ்வரர்-டி.கே.நம்பிதெரு,
ஞாயிறு-8.ராகு-நீலம்-மாகாளேஸ்வரர்-காமாட்சியம்மன்கோவில்பின்புறம்,
ஞாயிறு-9.கேது-பலநிறம்-அனந்தபத்மநாபேஸ்வரர்,மாகாலிங்கேஸ்வரர்.

நவக்கிரகஸ்தலங்கள்-குடந்தை

நவக்கிரகஸ்தலங்கள்-குடந்தை
ஞாயிறு-1.சூரியன்-சிவப்பு-சூரியனார்கோவில்.
ஞாயிறு-8.ராகு-நீலம்-திருநாகேஸ்வரம்(146),
ஞாயிறு-9.கேது-பலநிறம்-கீழ்பெரும்பள்ளம்,
திங்கள்-2.சந்திரன்-வெள்ளை-திங்களூர்,
செவ்வாய்-3.செவ்வாய்-புள்ளிருக்குவேளூர்(வைத்தீஸ்வரன்கோவில்)(70),
புதன்-4.புதன்-பச்சை-திருவெண்காடு(65),
வியாழன்-5.குரு-மஞ்சள்-இரும்பூளை(ஆலங்குடி)(215),
வெள்ளி-6.சுக்கிரன்-வெள்ளை-கஞ்சனூர்(90),
சனி-7.சனி-கருப்பு-திருநள்ளாறு(169).

நவக்கிரகஸ்தலங்கள்-சென்னை

நவக்கிரகஸ்தலங்கள்-சென்னை
ஞாயிறு-1.சூரியன்-சிவப்பு-கொளப்பாக்கம்
திங்கள்-2.சந்திரன்-வெள்ளை-சோமங்கலம்
செவ்வாய்-3.செவ்வாய்-பூந்தமல்லி
புதன்-4.புதன்-பச்சை-கோவூர்
வியாழன்-5.குரு-மஞ்சள்-போரூர்
வெள்ளி-6.சுக்கிரன்-வெள்ளை-மாங்காடு,
சனி-7.சனி-கருப்பு-பொழிச்சலூர்.
ஞாயிறு-8.ராகு-நீலம்-குன்றத்தூர்
ஞாயிறு-9.கேது-பலநிறம்-கெருகம்பாக்கம்,

நவகிரகங்கள்-மனைவி

நவகிரகங்கள்-மனைவி
1.சூரியன்-உஷா,பிரத்யுஷா,
2.சந்திரன்-ரோகினி,
3.அங்காரகன்-சக்தி,
4.புதன்-ஞானசக்தி,
5.குரு-தாராதேவி,
6.சுக்கிரன்-சுகீர்த்தி,
7.சனி-நீளாதேவி,
8.ராகு-சிம்ஹிதேவி,
9.கேது-சித்ரலேகா.

நவ நாயகர்கள்

நவ நாயகர்கள்
1.இராஜா-குதிரைகளுக்கு(சந்திரன்),
2.மந்திரி-யானைகளுக்கு(குரு),
3.அர்காதிபதி-பக்ஷிக்களுக்கு(புதன்),
4.மேகாதிபதி-வருஷங்களுக்கு(புதன்),
5.ஸஸ்யாதிபதி-பிரஜைகளுக்கு(சூரியன்),
6.சேனாதிபதி-பசுக்களுக்கு(புதன்),
7.இரஸாதிபதி-சர்பங்களுக்கு(செவ்வாய்),
8.தானியாதிபதி-ஒட்டகைகளுக்கு(சுக்கிரன்),
9.நீராஸாதிபதி-கிரகங்களுக்கு(சூரியன்),
10.பசுநாயகர்-4கால் ஜீவராசிகள்,வனவிலங்குகளுக்கு(கோபாலன்).

நவ நிதிகள்

நவ நிதிகள்
1.வண்டோகை-உணவுப்பொருள்கள்,
2.மனோகை-போருக்குரிய4வகை படைகள்,அபூர்வமான பொறிகள்,
3.பிங்கலிகை-ஆண்கள்,பெண்களுக்குரிய ஆடைகள்,பரிவாரங்களுக்குரிய அணிகள்.
4.பதுமநிதி-பலநிறப்பட்டாடைகள்,பருத்தியாடைகள்,
5.சங்கநிதி-இசைக்கருவிகள்,முத்தமிழ்,காவியம்,ஓவியம்,படிமம்,மாடமாளிகை,
6.வேசங்கநிதி-வீடுகள்,பாசறகள்,அரண்கள் அமைந்த நகரங்கள்,பேரூர்,சிற்றூர்,
7.காளைநிதி-நிகழ்,சென்ற,எதிர் கால நிகழ்வுகளை உணர்த்துவது,
8.மாகாளை-பொன்,வெள்ளி,மாணிக்கம்,வைரம்,முத்து,பவளம்,
9.சவ்வாதம்-கிரகபதி, சேனனபதி, விசுவகர்மன், புரோகிதன், கரி, பரி, பெண், சக்கரம், குடை, வாள், தண்டாயுதம், சூடாமணி, தோல், காசினி ஆகிய ஜீவரத்தினங்கள்.

நவபாஷாணம்

நவபாஷாணம்-
சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரசக்கற்பூரம், வெள்ளைபாஷாணம், கௌரிபாஷாணம், தொட்டிபாஷாணம் ஆகிய ஒன்பது செர்ந்தது நவபாஷாணம்.

நவராத்திரி அம்மன்கள்

நவராத்திரி அம்மன்கள்
1ம் நாள்-ஷைலபுத்ரி-காளை வாகனம் -மங்களம் பெருகும்.
2ம் நாள்-பிரம்மசாரிணி-வெள்ளையாடை -சாதிக்கும்சக்தி.
3ம் நாள்-சித்ரகாண்டா-10கரங்கள், புலிவாகனம், சிவப்புஆடை -துஷ்டசக்திகள் விலகி தீவிரவாதம் கட்டுப்படும்.
4ம் நாள்-தடஷ்மாண்டா-8கரங்கள், சிறுத்தை வாகனம் -செல்வவளம்.
5ம் நாள்-ஸ்கந்தமாதா-4கரங்கள், கந்தன் மடியில் -குழந்தைவரம்.
6ம் நாள்-காத்யாயினி-துர்க்காதேவி, சிம்ம வாகனம் -எதிரிகள் பயமில்லை.
7ம் நாள்-ரௌத்திரி-4கரங்கள், கழுதை வாகனம் -துன்பங்கள் பஸ்பமாகி நன்மையடையும் நிலை.
8ம் நாள்-மகாகவுரி-அண்ணபூரணி, ரிஷப வாகனம் -பசிப்பிணிநீங்கும்.
9ம் நாள்-சித்தாத்திரி-4கரங்கள்,தாமரை மலர்மீது -சொர்க்கம்.
10ம் நாள்-மலரால் அலங்கரித்து பூஜை.

நவராத்திரி

நவராத்திரி
முதல் 3நாள் துர்கை,
அடுத்த 3நாள் மகாலட்சுமி,
அடுத்த 3நாள் சரஸ்வதி,கடைசி
10வதுநாள் விஜயதசமி. தேவர்களின் அம்சங்களுடன் அவதரித்த அம்பாள் 9நாள் தவமிருந்து 10வது நாள் மகிஷாசுரனை அழித்தாள் -அம்பிகை மகாலட்சுமியாக அவதரித்து 1.மகிஷாசுரனை அழித்ததாள்- மகிஷாசுரமர்த்தினி, 2.துர்க்கமன் அரக்கனை அழித்ததால் துர்க்கை.

நாகதோஷபரிகாரத்தலங்கள்

நாகதோஷபரிகாரத்தலங்கள்
ஆம்பூர், குன்றத்தூர், காஞ்சி-மகாகாளீஸ்வரர், காரைக்குடி, சதுரங்கப்பட்டிணம்(பெ), தாளக்கரை(பெ), திருதொலைவில்லிமங்கலம்(பெ), திருச்சிறுபுலியூர்(பெ), திருமங்கைசேரி(பெ), திருப்புத்தூர், திருபாம்புரம், நாகப்பட்டிணம், நாகூர், நாகம்பள்ளி, நயினார்கோயில், நெடுங்குடி, பாதாளேச்சுவரம், புட்டிரெட்டிப்பட்டி, பெருமாள்பட்டு, பேரையூர், மணல்மேடு, ராப்பட்டீஸ்வரம்,

நாக விஷம்

நாக விஷம்-
4பற்களில் மேல்1.காளி,2.கராளி,கீழ்3.காளராத்திரி,4.யமதுர்க்கை.
2பற்கள் பதிந்தால் உடனடி சிகிச்சை பலனளிக்கும்.
2க்குமேல் இருந்தால் பிழைப்பது அரிது.

நாடிகள்

நாடிகள்
1.இடகலை, 2.பிங்கலை. 3.சுழுமுனை

நற்பண்புகள்-10
{slide title="ஸ்வாகா" open="flase"}
நற்பண்புகள்-10 சாஸ்திரங்களில்
1.திரு்தி-மன உறுதி/விடாமுயற்ச்சி,
2.க்ஷமா-மன்னித்தல்/பொருத்துக்கொள்ளுதல்,
3.தமா-புலன்களின் கட்டுப்பாடு,
4.அஸ்தேயா-திருடாது இருத்தல்,
5.ஷௌச-உடல் தூய்மை,உள்ளத்தூய்மை,
6.ஆத்ம வினிக்ரஹம்-மனதைக் கட்டுப்படுதல்,
7.தீ-அறிவின் தூய்மை,
8.வித்யா-அறிவு(அபாரவித்யா,பரவித்யா),
9.சத்யா-நியாயம்,
10.அக்ரோதம்-சினத்தை கைவிடல்.

பிறப்பு

பிறப்பு-4-தோற்றம்,7-பிறப்பு,84-லட்சம் உறுப்புபேதம் 

4-தோற்றம்,1. முட்டையில்-பாம்பு, தவளை, முதலை, ஆமை, அரணை, உடும்பு, மீன், பறவை, பல்லி.
2.வேர்வையில்-கிருமி,பேன்,விட்டில் பூச்சி,
3.வித்துக்கள்,வேர்கள்-மரம்,செடி,கொடி,புல்,பூண்டு,
4.கருப்பை-4கால் மிருகங்கள்,மனிதர்,தேவர்.
7வகைப்பிறப்பு.-1.தேவர், 2.மனிதர், 3.விலங்கு, 4.பறவை, 5.ஊர்வன, 6.நீர்வாழ்வன, 7.தாவரம்.
உறுப்பு(யோனி)பேதங்கள்-84லட்சம்.
1.தாவரம்-19லட்சம்,
2.ஊர்வன-15லட்சம்,
3.தேவர்கள்-11லட்சம்,
4.நீர்வாழ்வன-10லட்சம்,
5.பறவைகள்-10லட்சம்,
6.மிருகங்கள்-10லட்சம்,
7.மனிதர்கள்-9லட்சம்,


நித்யசூரிகள்

நித்யசூரிகள்
பரமபதத்தில் நிலைத்திருந்து பகவானை தரிசித்தபடி கைங்கர்யம் செய்பவர்கள். 1.ஆதிசேஷன். 2.கருடன், 3.விஷ்வக்சேனர்.

நித்யபூஜை

நித்யபூஜை-3வகைப்படும்.
1.சாங்கம்-அபிஷேகம், பாதயம், ஆசமணீயம், அர்க்கியம், ஆடை, அணிகலன், சந்தனம், மலர்கொண்டு வழிபடுவது.
2.உபாங்கம்-தூபம், தீபம், திருநீறு அணிவித்தல், குடை, கண்ணாடி, சாமரம், விசிறி, நாட்டியம், ஜபம், கீதவாத்யம்.
3.பிரத்யங்கம்-நிவேதனம் செய்தல், பலியிடுதல், வேல்விசெய்தல், நித்யம்உத்சவம், கோதகதானம், வாழ்த்துரை வழங்கல்.

நிம்பகுசும பட்சணம்

நிம்பகுசும பட்சணம்
வேப்பம்பூ, பழுத்தும் பழுக்காமலிருக்கும் மாங்காய், வெல்லம், பச்சரிசி சேர்ந்த கலவை.

நீராடல்

நீராடல்
1.நித்யம்-தினமும் காலையில்,
2.நைமித்யம்-சவத்திற்குப்பின் சென்று குளிப்பது.
3.காம்யம்-குளத்தில் குளிப்பது,
4.கிரியாங்கம்-வழிபாடு செய்யுமுன் குளிப்பது,
5.மலாபகர்ஷணம்-எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.
6.க்ரியாஸனம்-புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பது.

நீராடல்-வகை

நீராடல்-வகை
1.அக்னைக ஸ்நானம்-சூரிய கிரணங்கள் நம் தேகத்தில் பட்டு தேகம் புனிதமடைதல்-இரு கைகளை உயரே தூக்கி கிழக்குதிசையில் நிற்பது.
2.மலஸ்நானம்-மண்ணைக் கொண்டு உடலை தூய்மை செய்தல்.
3.மகேந்திரஸ்நானம்-கோதூளி கொண்டு ஸ்நானம் செய்வது.
4.மனோஸ்நானம்-விஷ்னுக்குப்பிரியமான மந்திரத்தைக் கூறி மனதால் தியானிப்பது.

நீராடுவது-சிறப்பு

நீராடுவது-சிறப்பு
1.நதிகளில்-நதி நீர் வரும் திசை நோக்கி,
2.நீர்தேக்கங்களில்-காலையில் சூரியன் உதிக்கும் திசை நோக்கி, மாலை/இரவில் கிழக்கு/வடக்கு திசை நோக்கி,
3.ஆலய திருக்குளங்களில்-ஆலய கோபுரத்தை நோக்கி.

நிறமாறும் லிங்கம்

நிறமாறும் லிங்கம்-பஞ்சவர்ணேஸ்வரர்-
1.திருநல்லூர்(137)-பாபநாசம்-4,
2.முக்கீச்சுரம்(122)-உறையூர்-4

நீலரத்தினலிங்கம்

நீலரத்தினலிங்கம்-1.திருஆடானை.

நைசர்க்கபலம்

நைசர்க்கபலம்-
சனியைவிட செவ்வாயும்,
செவ்வாயைவிட புதனும்,
புதனைவிட குருவும்,
குருவைவிட சூரியனும்,
க்கிரனைவிட சந்திரனும்,
சந்திரனைவிட சூரியனும்,
இவர்கள் அனைவரையும் விட இராகுவும் கோதுவும் பலம் பொருந்தியவர்கள். சந்திர சூரியர்களை பலம் இழந்து ஒளி குன்றும்படியான கட்டுப்படுத்தும் ஆற்றல்.

நைனிடால் ஏரி

நைனிடால் ஏரி-
அடத்ரி, புலஸ்தியர், புலாகர் ஆகிய ரிஷிகள் மானசரோவரிலிருந்து நீர் கொண்டு உருவாக்கியது நைனிடால் ஏரி-த்ரிரிஷி- ஸ்ரோவர். சக்தி பீடம்-நைனாதேவி-கண்கள்

யுகங்கள்

யுகங்கள்- தோன்ற விரதம்
1.அம்பிகை சிவராத்திரி விரதம்-கிருதயுகம்,
2.முருகன் சிவராத்திரி விரதம்-திரேதாயுகம்,
3.கணபதி சிவராத்திரி விரதம்-துவாபரயுகம்,
4.மகாவிஷ்னு சிவராத்திரி விரதம்-கலியுகம்.

பங்குனி உத்திரம்
 

பங்குனி உத்திரம்-பல முக்கிய நிகழ்வுகள் நடந்த நன்னாள்.
சிவ கௌரி திருமணம்-காஞ்சிபுரத்தில். சாம்பலான மன்மதனை ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி உருவமற்றவனாக உயிர்ப்பித்தார் இந்நாளில். இது காமன்-ஹோலி பண்டிகையாக வடக்கில் கொண்டாடப்படுகின்றது.
முருகன் கிரவுஞ்சமலையாக இருக்கும் தாரகாசுரனை வெற்றிகொண்டநாள். அவன் சகோதரன் சூரபதுமனை அழித்து பரிசாக இந்திரன் மகள் தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் திருமணம்புரிந்த நாள்.
தேவர்களும் அசுரர்களும் பால்கடலை கடைந்தபோது உலக அழகெல்லாம் சேர்ந்து உருவான மாகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்தது இந்நாளில்தான்.
சரஸ்வதிதேவி பங்குனி உத்ர விரதமிருந்து பிரம்மாவின் நாவில் அமரும் பேறு பெற்றாள்.
ஆண்டாள் ரங்கமன்னார் திருமணமும் இந்நாளில்தான் நடந்தேறியது.
தேவர்களுக்கு அமுதத்தை அளிக்க மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுக்க சிவபெருமானுக்கும் அவருக்கும் ஐயப்பன் பிறந்தது இந்நாளில்தான்.
இச்சிறப்பானநாளில் செய்யும் தான தருமங்களின் பலன்கள் அளவிடமுடியாதது.

பக்தி-வகை

பக்தி ஒன்பதுவகை
1.ஸ்வரணம்,
2.கீர்த்தனம்,
3.ஸ்மரணம்,
4.பாதசேவனம்,
5.அர்ச்சனம்,
6.வந்தனம்,
7.தாஸ்யம்,
8.சக்யம்,
9.ஆத்ம நிவேதனம்(பூரண சரணாகதி).

பஞ்ச ஆரண்யங்கள்

பஞ்ச ஆரண்யங்கள்
1.கருகாவூர்(135)-முல்லைவனம்,
2.அவளிவணல்லூர்(217)-பாதிரிவனம்,
3.அரதைப்பெரும்பாழி(216)-வன்னிவனம்,
4.இரும்பூளை(215)-பூளைவனம்,
5.கொள்ளப்புதூர்(230)-வில்வவனம்.

பஞ்ச சிவத்தலம்

பஞ்ச சிவத்தலம்
ஒரே திருத்தலத்தில் ஐந்து சிவாலயங்கள் ஒவ்வொரு திசையிலும் அமைவது-கூகையூர்(சின்னசேலம்-12)

பஞ்ச துவாரகை

பஞ்ச துவாரகை
1.பத்ரிநாத்,
2.பூரி,
3.அயோத்தி,
4.துவாரகை,
5.பண்டரிபுரம்.

பஞ்ச நரசிம்ம ஷேத்திரம்

பஞ்ச நரசிம்ம ஷேத்திரம்
1.உக்கிர நரசிம்மரன்-குறையலூர்,
2.வீரநரசிம்மன்-மங்கைமடம்,
3.யோகநரசிம்மன்-திருநகரி(34),
4.ஹிரண்யநரசிம்மன்-திருநகரி(34),
5.லட்சுமி நரசிம்மன்-திருவாலி(34).

பஞ்ச பகவதி தலங்கள்

பஞ்ச பகவதி தலங்கள்
பரசுராமர் நிறுவி வழிபட்ட தேவிகள்.
1.கொல்லூர்-முகாம்பிகை,
2.வட்கரா-லோகாம்பிகை,
3.பாலக்காடு-ஹேமாம்பிகை,
4.கொடுங்கலூர்-பகவதி,
5.கன்யாகுமரி-பாலாம்பிகை.

பஞ்ச பேரர் விதானம்

பஞ்ச பேரர் விதானம்
வைகானச ஆகமம் த்ருவபேரம்-மூலவர்,
கௌதுக பேரம் மூலவர் போன்றே காட்சி,
உற்சவபேரம்-பஞ்சலோக மூர்த்தம்,
ஸ்நபன பேரர்-பஞ்சலோக விக்ரகம் அபிஷேகத்திற்காக
பலிபேரம்-நித்ய உற்சவ பிரம்மோற்சவ விக்கிரகங்கள்-உள்ள சன்னதி பஞ்சபேர விதானம்

பஞ்ச நாராயணத்தலம்

பஞ்ச நாராயணத்தலம்
1.ஆபரணதாரி-ஆனந்தநாராயணன்,
2.பெரியஆலத்தூர்-வரதநாராயணன்,
3.தேவூர்-தேவநாரயணன்,
4.கீவளூர்-யாதவநாராயணன,
5.திருக்கண்ணங்குடி(18)-தாமோரநாராயணன்.

பஞ்சமுகேஸ்வரர்

பஞ்சமுகேஸ்வரர்
1.திருவானைக்காவல்,
2.காட்மாண்ட்(1.சத்தியோஜதம்.2.அகோரம்,3.தத்புருஷம்,4.வாமதேவம்,5.ஈசானம்)

பஞ்சமூர்த்திகள்

பஞ்சமூர்த்திகள்
1.ஸ்ரீகணபதி,
2.ஸ்ரீசுப்ரமண்யர்,
3.ஸ்ரீசிவபெருமான்,
4.ஸ்ரீபார்வதி,
5.ஸ்ரீசண்டிகேஸ்வரர்.

பஞ்ச ரங்க ஷேத்திரம்

பஞ்ச ரங்க ஷேத்திரம்
1.ஆதிரங்கம்-ஸ்ரீரங்கபட்டிணம்,
2.அப்பாலரங்கம்-திருப்பேர்நகர்(6),
3.மத்யரங்கம்-ஸ்ரீரங்கம்(1),
4.சதுர்த்தரங்கம்-கும்பகோணம்,
5.மேலரங்கம்-இந்தளூர்(26),

பஞ்சகிருஷ்ணஷேத்திரம்

பஞ்சகிருஷ்ணஷேத்திரம்-(ஆறு,காடு,நகரம்,ஆலயம்,தீர்த்தம்-புகழ்-பஞ்சபத்ரா.)
1.திருக்கோவிலூர்(42),
2.திருக்கண்ணங்குடி(18),
3.திருக்கவித்தலம்(கபிஸ்தலம்)(9),
4.திருக்கண்ணபரம்(17),
5.திருக்கண்ணமங்கை(16).

பஞ்சகுரோசத் தலங்கள்

பஞ்சகுரோசத் தலங்கள்-தேவர்கள் பௌண்டரீக யாகம் குடந்தை வனத்தில் செய்தபோது கிடைத்த அமிர்தத்திற்கு இனையான திரவம் சிதறிய போது 5 துளிகள் விழுந்த இடங்கள்.குரோசம்-12 கி.மீ.
1.திருநாகேஸ்வரம்.
2.திருவிடைமருதூர்,
3.தாராசுரம்,
4.சுவாமிமலை,
5. திருப்பாடலவனம்/கொரநாட்டுக்கருப்பூர்.

பஞ்சகூடபுரம்

பஞ்சகூடபுரம்-
1.திருத்தெங்கூர்(233),
2.திருநெல்லிக்கா(234),
3.நாட்டியத்தான்குடி(235),
4.திருக்காறாயில்(236),
5.நமச்சிவாயபுரம்,

பஞ்சபாண்டவர் கோயில்கள்

பஞ்சபாண்டவர் கோயில்கள்
1.திருச்சிற்றாறு(தி.தே-71)-தருமன்,
2.திருஆரம்முளா(தி.தே-73)-அர்ஜுனன்,
3.திருப்புலியூர்(தி.தே-72)-பீமன்,
4.திருவண்வண்டூர்(தி.தே-74)-நகுலன்,
5.திருக்கடித்தானம்(தி.தே-70)-சகாதேவன்.

பஞ்சபிரம்ம ஸ்தலம்

பஞ்சபிரம்ம ஸ்தலம்-4பக்கம் 4லிங்க அமைப்பு-நடுவில் மூலஸ்தானம்-
திருவாரூர்(204),
திருப்புகலூர்(192),
திருமாகாளம்.

பஞ்ச பிதாக்கள்

பஞ்ச பிதாக்கள்
1.பிறப்பித்தவன்,
2.கல்வி கற்பித்தவன்,
3.மந்திர உபதேசம் செய்தவன்,
4.அன்னமிட்டவன்,
5.அச்சத்தைப் போக்கியவன்.

பஞ்ச பிரதிஷ்டை

பஞ்ச பிரதிஷ்டை
1.ஸ்தாபனா-நின்றகோலம்,
2.அஸ்தாபனா-இருந்தகோலம்,
3.ஸ்மஸ்தாபனா-கிடந்தகோலம்,
4.பரஸ்தாபனா-வாகனங்களில் பல வடிவங்களில்,
5.பிரதிஸ்டாபனா-சன்மார்ச்சையுடன்,

பஞ்ச மாதாக்கள்

பஞ்ச மாதாக்கள்
1.தாய்,
2.குருவின் மனைவி,
3.அரசனின் மனைவி,
4.அண்ணனின் மனைவி,
5.மனைவியின் தாய்.

பஞ்ச பூதத்தலங்கள்

பஞ்சபூத வடிவாக சிவன்-பஞ்ச பூதத்தலங்கள்
1.நிலம்-பிருதிவித்தலம்-கச்சி ஏகம்பம்(1), திருவாரூர்(204), சங்கரன்கோவில். மதுரை(இன்மையில் நன்மைதருவார்), சுகவனேஸ்வரர், தேவபாண்டலம்.
2.நீர்-அப்புத்தலம்-திருவாணைக்கா(114), திருஆப்பனூர்(246), தருகாபுரம், ராவத்தநல்லூர்,
3.தீ-தேயுத்தலம்-திருவண்ணாமலை(54), கரிவலம்வந்தநல்லூர், ஆத்தூர், பாக்கம்,
4.காற்று-வாயுத்தலம்-திருக்காளத்தி(19), தென்மலை, மதுரை(முக்தீஸ்வரர்), ஆரகளூர், கடுவனூர்,
5.ஆகாயம்-ஆகாசத்தலம்-திருத்தில்லை(சிதம்பரம்)(55), தேவதானம்(ராஜபாளயம்), மூக்கனூர். கூகையூர்(சின்னசேலம்-12)

பஞ்சபூத விஷ்னுதலங்கள்

பஞ்சபூத விஷ்னுதலங்கள்
1.மண்-பிருத்வி-திருக்கண்ணபுரம்,
2.நீர்-அப்பு-திருமாலிருஞ்சோலை,
3.நெருப்பு-தேயு-திருஆதனூர்,
4.காற்று-வாயு-திருவேங்கடம்,
5.ஆகாயம்-விசும்பு-திருவரங்கம்.

பஞ்சமங்கள ஷேத்திரம்

பஞ்சமங்கள ஷேத்திரம்
திருமங்கலக்குடி(92)(மங்களவிமானம், மங்களாம்பிகை, மங்களவிநாயகர், மங்களதீர்த்தம், மங்கலக்குடி)

பஞ்சவர்ணேஸ்வரர்

பஞ்சவர்ணேஸ்வரர்-1.திருநல்லூர்.தி.த.-137, 2.உறையூர்.தி.த.-122, (உதங்கமுனிவருக்கு இறைவன் 5 காலங்களில் காலை-ரத்தின,உச்சிக்காலத்தில்-ஸ்படிக, இரவு-வைர, அர்த்தசாமம்-சித்ர லிங்கமாகவும் பிரம்மாவிற்கு பொன், செம்மை, வெண்மை, கருமை, புகை ஆகிய5 வண்ணங்களோடு காட்சி.
ஒருநாளில் 6நாளிகைக்கு 1முறை என 5முறை மூலவர் நிறமாறுவது சிறப்பு.
06-0815-செம்பின் சிவப்பு,
0815-1130-சிவப்பு,
1130-1430-மஞ்சள்,
1430-17-பச்சை,
17-18-பவள வண்ணம்.

பஞ்ச பைரவத்தலங்கள்

பஞ்ச பைரவத்தலங்கள்-காலத்தை கட்டுப்படுத்தும் காலபைரவர் 5கோலங்களில். தோஷத்தால் பாதிக்காமலிருக்க பிறந்த நாளில் பைரவ வழிபாடு
1.நல்லூர்.
2.வலஞ்சுழி,
3.சக்திமுத்தம்,
4.பட்டீச்சரம்,
5,ஆவூர் (பஞ்ச பைரவர்கள் அருள்)

பஞ்சயாகங்கள்

பஞ்சயாகங்கள்
1.கர்மயாகம்-இறைவன் பூஜை,
2.தவயாகம்-விரதம் இருந்து உடலை மெலியச்செய்தல்,
3.ஜபயாகம்-மந்திரங்களை ஜபித்தல்,
4.தியானயாகம்-இறைவனை தியானத்தல்,
5.மந்திரயாகம்-ஞானநூல்களை பயிலுதல்.

பஞ்சஹோமங்கள்

பஞ்சஹோமங்கள்
1.கணபதி-தடையின்றி காரியசித்தி,
2.சண்டி-தரித்திரம்,பயம் நீங்க அம்பாளை வேண்டி,
3.நவக்கிரக-கிரக தோஷங்கள் நீங்க,
4.சுதர்ஸன-பில்லி சூன்யம் நீங்க,ஸ்ரீசக்கரத்தை வேண்டி,
5.ருத்ர-ஆயுள் விருத்தி,ஆரோக்கியம் வேண்டி.

பஞ்ச யக்ஞம்

பஞ்ச யக்ஞம்-வழிபாடு
1.தேவயக்ஞம்-இறைவனுக்கு பூஜை,
2.ரிஷியக்ஞம்-சாஸ்திரங்களைப் படித்து போதித்தல்,
3.பித்ருயக்ஞம்-முன்னோர்களுக்கு தர்பணம்,
4.நரயக்ஞம்-மனிததொண்டு,
5.பூதயக்ஞம்-பிற உயிர்களுக்கு உதவுதல்.

பஞ்சமுகபைரவர்

பஞ்சமுகபைரவர்-தாத்தையங்கார்பேட்டை-காசிவிஸ்வநாதர்கோவில்
{slide title="பஞ்சமுகவாத்தியம்" open="flase"}
பஞ்சமுகவாத்தியம்-ஐந்துமுக அபூர்வவாத்தியம்-4'8''சுற்றளவு.5முகங்கள்-பாம்புசுற்றியது போலஒன்று, ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஒன்று, தாமரைப்பூ அடையாளத்துடன் ஒன்று, அடையாள மில்லாமல் ஒன்று, நடுவில் உள்ளது பெரியமுகம் மான்தோலால் மூடியிருக்கும். சதாசிவனின் 5முகங்களிருந்து வந்ததாகவும் நந்திதேவர் சிவநடனத்தின்போது வாசிப்பார்-வாரிசாக பரசைவர்கள் இசைக்கிறார்கள்.

பஞ்ச லிங்கங்கள்

பஞ்ச லிங்கங்கள்-ஆதிசங்கரர்
சிவனிடம் கைலையில் பெற்ற பஞ்சலிங்கங்களை ஆதிசங்கரர் ஸ்தாபித்த தலங்கள்.
1.வரலிங்கம்-பசுபதிநாதர்,
2.முக்திலிங்கம்-கேதார்நாத்,
3.போகலிங்கம்-சிருங்கேரி,
4.யோகலிங்கம்-காஞ்சி,
5.மோட்சலிங்கம்-சிதம்பரம்,
                                                                                                                                                                                                                                           
பஞ்சகாக்கள்

பஞ்சகாக்கள்: திருவானைக்கா, திருநெல்லிக்கா, திருக்கோலக்கா, திருகுருக்கா, திருக்கோடிக்கா.

பஞ்சாமிர்த தலங்கள்

பஞ்சாமிர்த தலங்கள்
1.ஞனாமிர்தம்-ஸ்ரீரங்கம்-(1),
2.ஜீவாமிர்தம்-திருப்பதி(106),
3.தேவாமிர்தம்-காஞ்சி(43),
4.ராமாமிர்தம்-மேல்கோட்டை,
5.கீதாமிர்தம்-திருவல்லிக்கேணி(60).

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்- வாரம், திதி, நட்சத்திரங்கள், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்கள் சேர்ந்தது பஞ்சாங்கம்.
வாரம்- கிழமை- ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ,வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிழமைகள் சேர்ந்ததே வாரம்
திதி- சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் திதியாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் இனைந்து இருந்தால் அது அமாவாசை திதி. ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருந்தால் பௌர்ணமி திதி ஆகும். திதிகள் மொத்தம் 30. அமாவாசை முதல் பௌர்ணமிவரை 15 சுக்லபட்ச வளர்பிறை திதிகள்.. (அமாவாசை, பிரதமை, துவிதை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி) பௌர்ணமி முதல் அமாவாசை வரை 15 கிருஷ்ணபட்ச தேய்பிறை திதிகள். (பௌர்ணமி, பிரதமை, துவிதை, திரிதியை,, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி)
நட்சத்திரங்கள்- 27. சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ அந்த நட்சத்திரமே அன்றைய நாளின் நட்சத்திரமாகும். அதுவே அவரின் ஜென்ம நட்சத்திரம்.
யோகம்- என்றால் சேர்க்கை / அடைவது. சூரியன் செல்லும் தூரத்தையும் சந்திரன் செல்லும் தூரத்தையும் சேர்த்தால் யோகம் கிடைக்கும். மொத்தம் 27 யோகங்கள். (விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வ்யாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வ்யதீபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுக்கிலம், பிராம்ஹம், ஐந்திரம், வைதிருதி)
கரணம்- திதியில் பாதி கரணம். ஒரு திதிக்கு இரண்டு கரணங்கள். சரகரணங்கள் ஏழு, ஸ்திர கரணங்கள் நான்கு. அம்மாவாசையை ஒட்டிய நாள்களில்- அதாவது அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தசியின் இரண்டாம்பாதி+ அமாவாசை முழுவதும்+ மறுநாள் வரும் வளர்பிறை பிரதமையின் முதல்பாதி வரையிலும் 4ஸ்திரகரணங்கள் (சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம்) நடப்பில் இருக்கும். 7சரகரணங்கள் (பலம், பாலவம், கௌலவம், தைதுலை, கரஜை, வணிஜை, பத்திரை) பிற நாட்களில் சுழற்சி முறையில் மாறிமாறி வரும்.

படிகள்-சிறப்பு

படிகள்-சிறப்பு
1.வருடப்படிகள்-சுவாமிமலையில்-தமிழ் 60வருடங்களைக் குறிக்கும் வகையில்,
2.நாள்படிகள்-திருத்தணியில் 365நாட்களைக் குறிக்கும் வகையில்.
3.மாதப்படிகள்-திருக்காவளூர் முருகன்-பன்னிரண்டு மாதங்களை குறிக்கும் வகையில்,
4.அயணப்படிகள் இரண்டு-திருவெள்ளரையில் தட்சிணாயனம்,உத்திராயணம்,
5.18 படிகள்-பஞ்ச பூதங்கள், ஐந்து பொறிகள், புலன்கள் ஐந்து என ஆன்மீக15 தத்துவங்களுடன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய 3பாவங்காளை கடப்பது என்பதாகும்,
6.நவகிரக படிகள்-திருப்பைஞ்சீலி.(இராவணண்)

படுக்கும் திசை

படுக்கும் திசை
1.தன்னூர்-கிழக்கு(செந்த வீட்டில் கிழக்குத்திசை),
2.தங்கின ஊர்-மேற்கு(வெளியூரில் மேற்குத்திசை),
3.வேட்டான்-தெற்கு(விருந்தாளியாகச் செல்லுமிடங்களில் தெற்குத்திசை),
4.வேண்டாத ஊர்-வடக்கு(வடக்கு பக்கம் எப்போதும் படுக்கக்கூடாது).

பத்தும் பறந்து போகும்

பத்தும் பறந்து போகும்-பசி
1.மானம், 2.குலம், 3.கல்வி, 4.வண்மை, 5.அறிவுடைமை, 6.தானம், 7.தவம், 8.முயற்சி, 9.தாளாண்மை, 10.தேனின் கசிவந்த சொல்லியர் மேல்காமுறுதல்-இவைபத்தும் பசிவந்திடப் பறந்துபோம்.

பதிணாறு செல்வங்கள்

பதிணாறு செல்வங்கள்.
1.புகழ், 2.கல்வி, 3.வலிமை, 4.வெற்றி, 5.நன்மக்கள், 6.பொன், 7.நெல், 8.நல்லூழ், 9.அறிவு, 10.நுகர்ச்சி, 11.அழகு, 12.பொறுமை, 13.இளமை, 14.துணிவு, 15.நோயின்மை, 16.வாழ்நாள்.

பராசக்தி-ஞானபீடம்

பராசக்திபீடம்/ஞானபீடம்
1.குற்றாலம்(257)-குழல்வாய்மொழியம்மை.
2.திருவாரூர்(204)-கமலாம்பிகையம்மை,

பராசக்தி-தரணிபீடம்

பராசக்திபீடம்/தரணிபீடம்
தென்காசி-ஸ்ரீசக்ர தரணிபீடம்.

பரிமுகஹயக்கீரிவர்

பரிமுகஹயக்கீரிவர்
1.செட்டிபுண்ணியம்.
2.திருவஹிந்திபுரம்,
3.தேசிகர் ஆலயம்-மயிலை,
4.நங்கநல்லூர்.

பன்னிரண்டு

பன்னிரண்டு
1.மாதங்கள்,
2.ராசிகள்,
3.ஆதித்தியர்கள்,
4.ஜோதிர்லிங்கங்கள்.

பன்னிரண்டு சக்தி

பன்னிரண்டு சக்திதேவிகள்(திரிபுராமஹாத்மியம்)
1.காஞ்சி-காமாட்சி,
2.மலையப்ர்வதம்-ப்ராமரி,
3.கேரளா-குமாரி,
4.துவரகா-அம்பே,
5.கரவீர்கோலாப்பூர்-மகாலட்சுமி,
6.உஜ்ஜயினிமால்வா-காளிகா,
7.பிரயாகை-லலிதாதேவி,
8.விந்தியம்-விந்தியவாஸினி,
9.வாரணாசி-விசாலாட்சி,
10.கயா-மங்களவதி,
11.வங்கம்-சுந்தரிதேவி,
12.நேபாளத்தில்-குஸ்மஹேஸ்வரி

பாணலிங்கங்கள்

பாணலிங்கங்கள்-எரிநட்சத்திரம், தாதுக்கள் கலந்த கிரிப்டோ கிரிஸ்டலைன் படிகம். அதிர்வுகளை பன்மடங்கு பெருக்கும் ஆற்றல் மிக்கவை, உடலின் சக்கரங்களை திறந்து ஆன்மாவிற்கு வழி காட்டக்கூடியவை.நதியில் கிடைப்பவை-வழிபட ஆகம முறைகள் அவசியமில்லை.
1.ஸ்வயம்பு லிங்கம்-இளம் பழுப்பும் மஞ்சள் கலந்தது-யோகிகளிடம் உள்ளவை.
2.ம்ருத்யுஞ்ச லிங்கம்-பலநிறங்களில்-ஜடாமுடி குறிகள் இருக்கும்-இறைவர்களுக்கு உரித்தானவை.
3.நீலகண்ட லிங்கம்-நீள்வட்ட வடிவில் வெண்மை நிறத்தில் கரும்பொட்டுடன்.
4.திரிலோசன லிங்கம்-வெண்மை நிறத்தில் முக்கண் குறீடுகளுடன் உடல் ரோமம் போன்ற குறீடுகளுடன்-வழிபடுதல் அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது.
5.காலக்னிருத்ரலிங்கம்-அடர்நிறத்தில் ஜடாமுடி குறியுடன்-ஆவிகள் போற்றும் லிங்கம்,
6.திரிபுர லிங்கம்-தேன் நிறத்தில் பிறைச்சந்திரன்,தாமரை ஆகிய சின்னங்களுடன்.
7.ஈசானலிங்கம்-வெண்மை நிறத்தில் ஜடாமுடி மண்டை ஓட்டு மாலை திரிசூலம் ஆகிய குறியீடுகளுடன்.
8.அர்த்தநாரீஸ்வர லிங்கம்-பாதி வெண்மை நிறத்தில்,பாதி சிவந்த நிறத்தில் திரிசூலம், உடுக்கை வடிவங்களுடன்.
9.மஹாகால லிங்கம்-பருமணான இளம்சிவப்பு-வாழ்வின் வளத்திற்கு உகந்தவை.

பாதாளலிங்கேசுவரர்

பாதாளலிங்கேசுவரர்-
சித்தர்கள் வாழ்ந்த தலங்களில்மட்டும் பாதாளலிங்கேசுவரர் சன்னதி இருக்கும்.

பாஸ்கரத்தலங்கள்

பாஸ்கரத்தலங்கள்
1.காசி, 2.புஷ்பகிரி, 3.காஞ்சிபுரம்(1), 4.ஸ்ரீசைலம்(268), 5.சேது, 6.கேதாரம்(271), 7.திருக்கோகர்ணம்(267). 8.திருஅன்னியூர்(76). 9.ஏத்தாபூர், 10.ஆரகளூர், 11.மடவார்விளாகம்

சூரியஒளி லிங்கத்தின்மேல்

சூரியஒளி லிங்கத்தின்மேல்
கரூர், களக்காடு, கீழ்சூரியமூலை, குடந்தைநாகேஸ்வரம், சங்கரன்கோவில், செட்டிகுளம், செம்பனார்கோவில், தலைஞாயிறு, தாரமங்கலம், திட்டக்குடி, திருஆடானை, திருஇன்னம்பர், திருஈங்கோய்மலை, திருக்கச்சிஏகாம்பரம், திருக்கண்டியூர், திருச்சோபுரம், திருநெடுங்களம், திருபட்டூர், திருமாந்துறை, திருமீயச்சூர், திருவாய்மூர், திருவிற்குடி, தென்பொன்பரப்பி, நெய்குப்பை, பனையபுரம், பவானி, பூவிருந்தவல்லி, மடவார்விளகம், மதுரைஐராவதநல்லூர், மயேந்திரப்பள்ளி, முகாசாபரூர், ஐயம்பேட்டை, வில்லியனூர், வி.சூரக்குடி,

பிரதிமைகள்

பிரதிமைகள் நியதி-கடவுள் பிரதமைகளில்-
1.களிமண்-ஒவ்வொரு மாதமும்,
2.வண்ணம் பூசபட்டவை-ஒவ்வொரு வருடமும்,
3.மரம்-பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும்,
4.உலோகம்-ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறையும்,
5.கல்-பத்தாயிரம் வருடங்களுக்கு ஒரு முறையும் புதுப்பிக்கப்படவேண்டும் என்பது நியதி.

பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு
வளர்பிறை, தேய்பிறை-திரியோதசி திதியில் 1630-1800வரையிலான நேரத்தில் கலைவாணி வீணைவாசிக்க, லட்சுமி பாட, பிரம்மன் தாளம்போட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, திருமால் மிருதங்கம் வாசிக்க, தேவர்களும் முனிவர்களும் திருமுறை ஓத, நந்திதேவன் கொம்புகளுக்கிடையே சிவனும் உமையும் உயிர்களைக் காக்க ஆனந்த நடனம் ஆட, எல்லா தெய்வங்களும் சிவ வழிபாட்டில் இருப்பதால் மற்ற தெய்வங்களை வழிபடுவதால் பலன் இல்லை.

பிரதோஷ காலம்

பிரதோஷ காலம்
பகலும் இரவும் சந்திக்கும் மாலைப்பொழுது பிரத் உஷத்காலம்-அதிதேவதை-சூரியனின் இன்னொரு மனைவி-பிரத் உஷா-சாயா-எனவே சாயங்காலம்-உலக உயிர்களை ரட்சிப்பதால் சாயரட்சை.

பிரம்மமாவின் வாழ்நாள்

பிரம்மமாவின் வாழ்நாள்
கல்பம்-காலத்தின் அளவு கோல்.பிரமனுக்கு ஒரு கல்பம் என்பது ஒரு பகலும் இரவும் கலந்தது.100 கல்பநாட்கள் பிரம்மனின் வாழ்நாள்.1000 சதுர்யுகங்கள்-432,00,00,000 வருடங்கள். ஒருபகல்-864,00,00,000வருடங்கள். ஒரு நாள்-ஒவ்வொரு இரவும் அவாந்திர பிரளயம்-3லோகத்தையும் பாதிக்கும் (புவர்,ஸுவர்,பூ-லோகங்கள்)இப்படி 365நாட்கள் சேர்ந்த 100கல்ப வருடங்கள் ஆயுள்.

பிரம்மா சன்னதிகள்

பிரம்மா சன்னதிகள்
1.திருப்பாண்டிக்கொடுமுடி(264),
2.திருக்கரம்பனூர்(உத்தமர்கோவில்)(தி.தே-3),
3.திருக்கண்டியூர்(129)(தி.தே-7),
4.திருபட்டூர்,
5.புஷ்கர்.(அஜ்மீரருகில்),
6.பிரம்மதேசம்(திருநெல்வேலி)

பிரஹாரம்

பிரஹாரம்
3பிரஹாரம்-ஸ்தூல்-அன்னமயம்,சூட்சம-பிடாணமயம்,காரணம்-பிராணமயம் ஆகிய மூவகை உடம்புகள்,
5பிரஹாரம்-அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்ற ஐந்து விதபொறிகளை அடக்க வேண்டிய அவசியம்,
7பிரஹாரம்-ஐந்துபொறிகளுடன்+மனம்,புத்தியையும் சேர்த்து அடக்கவேண்டும்.

பிரார்த்தனை லிங்கங்கள்

பிரார்த்தனை லிங்கங்கள்
1.சுயம்பு-தானே தோன்றியது,
2.காண-விநாயகர்,வைரவர்,வீரபத்திரர் முதலிய சிவகனங்களால் நிறுவப்பட்டது.
3.தெய்வீக-திருமால்,அயன்,இந்திரன் போன்ற தேவர்களால் நிறுவப்பட்டது,
4.ஆரிட-முனிவர்களால் நிறுவப்பட்டது.
5.மானுட-மனு,ராமர்,பரசுராமர்,கன்னன் முதலியோர் மானுட பிறவியில் நிறுவியது.
6.கணிக-ஒருமுறை மட்டும் பூஜிக்க-மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், ருத்திராட்சம், சந்தனம், தர்பை, புட்பமாலை, சர்க்கரை, மா ஆகிய12ல் 3சேர்த்து செய்யப்படுவது,
7.பார்த்த/ஸ்தாவர/திர-சந்நித்தியிராயிருந்து ஆன்மாக்களுக்கு அருள்

பிருந்தாவனம்

பிருந்தாவனம்-வைனவத்தை சேர்ந்த மகான், ஜீவமுக்தி அடைய தேர்ந்தெடுத்த பகுதியில் தியான நிலையில் அமர்ந்திருக்க, அவர் திருவுடல் மூடப்பட்ட பின் அந்த இடத்திற்கு மேல் துளசிமாடம் பொருத்தப்படும் இடம்-பிருந்தாவனம்.

பிறவாப் பெருநிலை

பிறவாப் பெருநிலை
1.மானதம்-தர்மம்செய்தம்,உண்மையைமட்டும் பேசுதல்,இறைவனை தியானம்செய்தல், மனதைக் கட்டுப்படுத்தி ஆசைகளைக் குறைத்தல்,
2.வாகிசம்-'சிவாயநம'தினமும் ஓதுதல்,வேதநூல்களைப் படித்தல்,யாகங்கள் செய்வது,
3.காயிகம்-சிவனை வில்வத்தால் அர்ச்சனை,கோயிலை வலம் வருதல், தலயாத்திரை, தீர்த்தங்களில் நீராடுவது.(கடல்சங்கமிக்கும் இடம் சிறப்பு)

பீடங்கள்

பீடங்கள்
காமகோடிபீடம்-காமாட்சி,காஞ்சி
சிருங்கேரிபீடம்-சாரதா,
யோகபீடம்-பவநாசம்,
போகபீடம்-திருக்குற்றாலம்(257),
ஞானபீடம்-சிவசைலம்
வராகிபீடம்-திருவானைக்காவல்(114)
ஜ்யோதிர்மடம்-மஹாஷோடஸி

புதன்பகவான்

புதன்பகவான்
கல்விக்கு காரணமானவர்-வித்யாகாரகன்.சந்திரன்-தாரையின் மகன். சுபகிரகர். புதன் கிழமை வழிபடின் கல்வி, அறிவு, பேச்சுதிறமை, இசை, சோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம் மொழி புலமை அளிப்பவர். இளம் பச்சைநிறம் உள்ளவர். 4சிங்கங்கள் தேரை இழுக்கும். சூரியன் சுக்கிரன் நண்பர்கள். அங்காரகன், குரு, சனி சமமானவர்கள். சந்திரன் பகைவன். பிரத்யதி தேவதை-விஷ்னு, வாகனம்-சிம்மம்.

புதன்பரிகாரத்தலங்கள்

புதன்பரிகாரத்தலங்கள்
திருவெண்காடு-65,தென்திருப்போரை.கச்சிநெறிக்காரைக்காடு,ஆழ்வார்திருநகரி

புருஷர்கள் மூவகை

புருஷர்கள் மூவகை
1.அதமன்-தானின்பமுற அடுத்தவன் துன்பமுற்றாலும் பரவாயில்லை என்பவன்,
2.மத்திமன்-தானின்பமுறுதல்போலஅடுத்தவனும் இன்பமுறவேண்டும் என்பவன்
3.உத்தமன்-தான்துன்பமுற்றாலும் அடுத்தவன் இன்பமுறவேண்டும் என்பவன்.

புலிக்கால் முனிவர்

புலிக்கால் முனிவர் வழிபட்ட-ஐம்புலியூர்கள்
1.பெரும்பற்றப்புலியூர்-சிதம்பரம்(55),
2.திருப்பாதிரிப்புலியூர்-கடலூர்(50),
3.ஓமாம்புலியூர்(85),
4.எருக்கத்தம்புலியூர்(ராஜேந்திரப்பட்டிணம்)(36),
5.பெரும்புலியூர்(107)

புனிதநதிகள்

புனிதநதிகள்-7
பு.ந.7-கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவேரி, சிந்து, நர்மதா.
சரஸ்வதியில் தொடர்ந்து 3நாட்களும்,
யமுனையில் 7நாட்களும்,
கங்கையில் 1நாளும் ஸ்நானம் செய்தால் பாவங்கள் விலகும்.
நியதிப்படி ஒவ்வொரு திங்களும் நர்மதாவில் ஸ்நானம் செய்தால் வெண்குஷ்டம் நீங்கும்.
கங்கை, நர்மதை நதிகளில் இறந்தோரின் சாம்பலை கரைப்பது புண்ணியம்.
பரிக்கிரமா பிரதட்சணம்-உற்பத்தியாகும் இடத்திலிருந்து சங்கமம் வரைசென்று மறுகரை வழியே மறுபடியும் தொடக்க இடத்திற்கே வருதல். இந்த வகையில் நர்மதை-7கல்ப காலம் நீடித்திருக்க வல்லது-புனிதமானது-அது கடலில் கலக்கும் ப்ரூச் என்னுமிடத்தில் தாண்ட வேண்டும்-தரிசித்த மாத்திரத்தில் சகல வினைகளையும் போக்கவல்லது -2000கைகளுடைய பாணாசுரன் நாள்தோறும் 2000 லிங்கபூஜை. நர்மதையில்-லிங்கம் மூழ்கி எடுக்கும்போது கிடைப்பவை. சந்திரபாகா-பீமாநதி-திரிபுராசுரனை எரித்த சிவனின் வியர்வை வடிந்து பீமாவாகியது-ரெய்ச்சூர் அருகில் கிருஷ்ணாவில் கலக்கிறது. கோதாவரி-1440.கி.மீ.நீளம். த்ரியம்பகத்தின் அருகே பிரம்மகிரி மலையில் உற்பத்தி. பசுவைகொன்ற பாவம் நீங்க முனி தவம்-சிவன் சடையிலிருந்து பெருகிய நீரை தெளித்து பசு உயிர்பித்தார்-கோதாவரி.சிப்ரா-தூஷனைக்கொன்ற சிவன் மகாகாலேஸ் வரராக-ஜோதிர்லிங்கம்-உஜ்ஜெயினி.

புனேயின்-நவவிநாயகர்கள்

புனேயின்-நவவிநாயகர்கள்
1.லென்யாத்ரி, 2.ஓஜார், 3.ரஞ்ஜன்கான், 4.தேவூர், 5.மஹத், 6.&7.பாலி, 8.சித்தெட்டஹ், 9.மூர்கான்,

பூமிதேவி வழிபட்ட சிவன்

பூமிதேவி வழிபட்ட சிவன்-1.பூமிநாதர், 2.பூமிநாதேஸ்வரர், 3.பூலோகநாதர்.

பூஜைகள்

பூஜைகள்
1.ஆறுகாலபூஜை,
2.ஐம்பருவ உற்சங்கள்-தமிழ்மாதபிறப்பு, பவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை, பிரதோஷம்-இவை நித்யபூஜை,
3.ஆனி,மார்கழி மற்றும் குடமுழுக்கு (பெருஞ்சாந்திபெருவிழா) விழாக்கள் -நைமித்திக சிறப்பு பூஜை. (நித்யபூஜை குறைபாடுகள் நைமித்யபூஜை மூலம் நிறைவு செய்யப்படும்)

பெண்கள்-பவிஷ்ய குணம்

பெண்கள்-பவிஷ்ய குணம்
1.மயக்கம் தரும் பானம் அருந்துவது,
2.சாப்பிடக்கூடாததை சாப்பிடுவது,
3.பிற வீட்டு சம்பவங்களில் தலையிடுவது,
4. மந்திர தந்திரங்களில் ஆர்வம்,
5.வேண்டாதவர்களுடன் யாத்திரை செல்வது,
6.சாமியார்களுடன் சகவாசம்,
7.கணவனை விட்டு நீண்ட நாள் பிரிந்திருப்பது,
8.கணவன் வெளியே சென்ற சமயத்தில் அலங்கார அணிகலண்களை அவசியமின்றி அணிதல்,
9.கணவனை மதிக்காமல் இருத்தல்.
ஆகிய செயல்களும் அதிககோபம், பொறுமையின்மை, பயமின்மை, பொறாமை, கருமித்தனம் முதலிய குணங்களும் பெண்களுக்கு நன்மையைத் தராது.

பெரியவிநாயகர்

பெரியவிநாயகர்
1.பிள்ளையார்பட்டி-11',
2.மைசூர்-மசனகுடிவிநாயகர்-13',
3.பெங்களூர்-பசவன்குடி-தடாமணபதி-14',
4.கோவை-புலியகுளம்-முந்திவிநாயகர்-16.5'

பைரவர்

பைரவர்-
1.சம்ஹாரபைரவர்-சண்டிகை,
2.பீஸானபைரவர்-சாமுண்டிதேவி,
3.உன்மத்தபைரவர்-வாராகி,
4.குரோதன் பைரவர்-வைஷ்ணவதேவி,
5.சண்டபைரவர்-கவுமாரி,
6.கால பைரவர்-இந்திராணி,
7.குரு பைரவர்-மகேஷ்வரி,
8.அசிதாங்க பைரவர்-பிராமி.

பொம்மை கொலு

பொம்மை கொலு
அசுரர்களை அழிக்க அம்பிகை அவதாரம்-தேவர்கள் தங்களின் ஆற்றல், ஆயுதங்களை ஒப்படைத்து அம்பிகை அசுரர்களுடன் சண்டை போட்டபோது பொம்மைபோல் வேடிக்கை பார்த்ததின் நினைவாக ஏற்பட்ட ஐதீகம் பொம்மை கொலு.

மகாசதாசிவமூர்த்தி

மகாசதாசிவமூர்த்தி
25திருமுகங்கள்,50கரங்களுடன்-கயிலை

மகாபாரதம்

மகாபாரதம்-
ரிஷிகள் ஒன்றுகூடி வியாசர் சொன்ன பாரதத்தை ஒரு தட்டிலும் மறுதட்டில் நான்கு வேதங்களையும் வைக்க பாரதம் மகத்தானதாக இருந்ததால் மகாபாரதம் எனப் பெயர்.

மகாமந்திரபைரவர்

மகாமந்திரபைரவர்
சிவனை7-1/2 நாளிகை பிடிக்க சனி வந்தபோது ஈசன் விஸ்வநாத சுவாமியாக அரச மரத்தடியில் வேதாந்தநாயகி காவலிருக்க மறைந்தார்.தன்னை சனியால் பிடிக்க முடியவில்லை என சொன்ன ஈசனை,எனக்கு பயந்து7-1/2 நாளிகை ஒழிந்திருந்ததே தான் பிடித்திருந்ததற்குச் சமம் என அகங்காரமாய் பதிலளிக்க மகாமந்திரபைரவர் உருக்கொண்டு சனி கர்வத்தை அடக்கினார்(தேப்பெருமாநல்லூர்)

மகாமேரு-சக்தி

மகாமேரு-சக்தி
1.திருவிடைமருதூர்,
2.காஞ்சிகாமாட்சி,
3.மாங்காடு,
4.திருவானைக்கா,

மங்களங்கள்

மங்களங்கள்
தங்கம், அக்னி, பூரணகும்பம், தீபம், மஞ்சள், வெற்றிலை-பாக்கு, பசுமாடு, தேங்காய் என அனைத்து மங்களகரமான பொருட்களில் சொர்ணமான தங்கத்தை மட்டும்தான் அணிந்து கொள்ள முடியும். தங்கம் அணிவதால் மங்களகரமான எண்ணங்கள் தோன்றும் என வேதம் சொல்கிறது.

மங்களவார விரதம்

மங்களவார விரதம்
செவ்வாய்கிழமை-துர்க்கை-திருமணபாக்யம், மாங்கல்யபாக்யம்

மணத்தூண்கள்

மணத்தூண்கள்
பரமபதத்தில் 2மணத்தூண்கள்.தழுவியோர் நித்யசூரிகள்-அழிவில்லா போரின்பமயமான சூழ்நிலையில் பெருமானுக்கு பணிவிடைபுரியும் ஆத்மாக்கள். 1.ஸ்ரீரங்கம், 2.ஆதனூர்.

மத்தியார்ச்சுனர்

மத்தியார்ச்சுன மகாலிங்கபெருமான்-(திருவிடைமருதூர்-147)பரிவாரத்தலங்கள்
1.திருவழஞ்சுழி-142(விநாயகர்),
2.திருவேரகம்-சுவாமிமலை(முருகன்),
3.திருவாவடுதுறை-153(நந்தி),
4.சூரியணார்கோயில்-(நவக்கிரகம்),
5.சேய்ஞலூர்-திருவாய்ப்பாடி-95(சண்டேஸ்வரர்),
6.தில்லை-55(நடராசர்),
7.சீர்காழி-68(பைரவர்),
8.திருவாரூர்-204,205,206(சோமாஸ்கந்தர்),
9.ஆலங்குடி-215(தட்சிணாமூர்த்தி).

மரகதரங்கநாதர்

மரகதரங்கநாதர்-திருஇந்தளூர்.

மரகதலிங்கம்

மரகதலிங்கம்
1திருவாலங்காடு,
2.திருச்செங்கோடு,
3.திருஇடைச்சுரம்,
4.திருவாரூர் அறநெறி,
5.திருஈங்கோய்மலை,
6.திருச்செங்காட்டாங்குடி,
7.சிக்கல்,
8.உத்ரகோசமங்கை,
9.நஞ்சன்கூடு.

மரம்-வழிபாடு

மரம்-வழிபாடு-அரசு-மும்மூர்த்திகள், ஆல்-சிவன், வில்வம்-லட்சுமி, நெல்லி-அம்பாள், துளசி-பிருந்தா, மல்லிகை-இந்திராணி,

மருது,அர்ச்சுன தலங்கள்

மருது,அர்ச்சுன தலங்கள்
1.தலைமருது-மல்லிகார்ச்சுனம்-ஸ்ரீசைலம்(268),
2.இடைமருது-மத்தியார்ச்சுனம்-திருவிடைமருதூர்(147),
3.கடைமருது-புடார்ச்சுனம்-திருப்புடைமருதூர்(அம்பாசமுத்திரம் அருகில்)

மன்மதன் பாணம்

மன்மதன் பாணம்
1.தாமரை, 2.அசோகு, 3.மா, 4.மல்லிகை, 5.நீலோற்பலம்-ஐந்து மலர்களால் ஆனது

மனஅமைதி

மனஅமைதி-
சுயம்பு லிங்கதிருத்தலங்கள் தரிசனம்.

மனிதனின் கடமைகள்

மனிதனின் கடமைகள்-
1.பிதுர்யக்ஞம்,
2.தேவயக்ஞம்,
3.பூதயக்ஞம்(பசு,காக்கைக்கு உணவு அளிப்பது),
4.மனிதயக்ஞம் (சுற்றத்தார்,பிச்சைக்காரகள்,துறவிகள் ஆகியோருக்கு உணவு),
5.வேத சாஸ்திரங்களைக் கற்றல்.

மனோன்மணிபீடம்

மனோன்மணிபீடம்-திருஆலவாய்-மதுரை(245),திருராமேஸ்வரம்(252)

மஹாளயம்

மஹாளயம்-பித்துருக்களின் ஆராதனை எனப்படும்.
புரட்டாசி-தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை உள்ள 15திதிகள் மஹாளய பட்சம். இந்த 15தினங்கள் பித்ருதேவதைகள் அவர்கள் குடும்பத்தாருடன் தங்கி இருப்பர் என வேதங்கள் சொல்கின்றன.இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ(திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாக(தர்ப்பணம்)அளித்தல் நன்மை பயக்கும். இனம் புரியாத நோய்கள், குறையுடன் பிறக்கும் குழந்தைகள், தள்ளிப் போகும் திருமணங்கள், காரியங்களில் தடை, குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் கவனிக்காத குறை ஆகியவை நீங்க பரிகாரமானது இந்த மஹாளய பட்ச பித்ரு பூஜை. ஆறு, நதிக்கரை, குளக்கரை அல்லது வீட்டில் இருந்தபடியேயும் செய்யலாம்.

மஹாளயபட்ச பலன்கள்

மஹாளயபட்ச பலன்கள்
1.பிரதமை-செல்வம் பெருகும்(தனலாபம்),
2.துவிதியை-வாரிசு வளர்ச்சி(வம்ச விருத்தி),
3.திருதியை-திருப்திகரமான இல்வாழ்க்கை(வரன்),
4.சதுர்த்தி-பகைவிலகும்(எதிரிகள் தொல்லைநீங்கும்),
5.பஞ்சமி-விரும்பிய பொருள்சேரும்(சம்பத்துவிருத்தி),
6.சஷ்டி-தெய்வீகத்தன்மை ஓங்கும்(மற்றவர் மதிப்பர்),
7.சப்தமி-மேலுலகோர் ஆசி,
8.அஷ்டமி-நல்லறிவு வளரும்,
9.நவமி-ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத்துணை,
10.தசமி-தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்,
11.ஏகாதசி-வேதவித்யை,கல்வி,கலைகளில் சிறக்க.
12.துவாதசி-தங்கம் வைர ஆபரணங்கள்சேரும்,
13.திரியோதசி-நல்ல குழந்தைகள்,கால்நடைச் செல்வம்,நீண்ட ஆயுள்கிட்டும்,
14.சதுர்த்தசி- முழுமையான இல்லறம்(கணவன் மனைவிஒற்றுமை),
15.அமாவாசை-மூதாதையர்,ரிஷிகள்,தேவர்களின் ஆசிகிட்டும்.

மாங்கல்யசரடு

மாங்கல்யசரடு-வசந்தமான வாழ்க்கை-9இழை-
1.வாழ்கையைபுரிந்துகொள்ள,
2.மேன்மையடைய,
3.ஆற்றல்,
4.தூய்மை,
5.தெய்வபக்தி,
6.உத்தமநிலை,
7.விவேகம்,
8.தன்னடக்கம்,
9.தொண்டுசெய்தல்.

மாசிமககாலம்-மகாமககுளம்

மாசிமககாலம்-மகாமககுளம்
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, சரயு, காவிரி, மகாநதி, நர்மதை, பாலாறு என்ற 9நதிகளும் மாசிமக புண்ணியகாலத்தில்(அம்பிகை அவதாரநாள்)மகாமக குளத்தில் கூடுகின்றது.

மாடக்கோயில்கள்

மாடக்கோயில்கள்(கோச்செங்கட்சோழன் கட்டியவை)
1.நன்னிலம்-பெருங்கோயில்,
2.கடம்பூர்-கரக்கோயில்,
3.விளநகர்-ஞாழற்கோயில்,
4.கருப்பறியலூர்-கொகுடிக்கோயில்,
5.மீயச்சூர்-இளங்கோயில்,
6.திருக்கச்சூர்-ஆலக்கோயில்.

மாதங்களின் சிறப்பு

மாதங்களின் சிறப்பு
1.சித்திரை-சித்திரை நட்சத்திரம்-சிவ,சக்தி-சித்ரகுப்த வழிபாடு.
2.வைகாசி-விசாக நட்சத்திரம்-முருகன் அவதாரம்,
3.ஆனி-அனுஷ நட்சத்திரம்-சதுர்மாஸ்ய விரதம்.
4.ஆடி-பூர்வாஷாடம்-பூராடம் நட்சத்திரம்,உத்திராஷாடம்-உத்திராடம் நட்சத்திரம்-அம்மன் வழிபாடு.
5.ஆவணி-திருவோண நட்சத்திரம்-மகாவிஷ்னு அவதாரம்+விநாயகர் சதுர்த்தி,
6.புரட்டாசி-பூர்வப்ரோஷ்டபதம்-பூரட்டாதி நட்சத்திரம்,உத்திரப்ரோஷ்டம்-உத்திரட்டாதி நட்சத்திரம்-பெருமாளுக்கு சிறப்பு+நவராத்திரி,சூரியன் கன்னி ராசிக்குள் பிரவேசம்-பிதுர்களுக்கு 15நாட்கள் பூமிக்குச் செல்ல விடுதலை.
7.ஐப்பசி-அஸ்வினி நட்சத்திரம்-அன்னாபிஷேகம்-தீபாவளி,புண்ணியநதிகள் காவிரியில் சங்கமம்-நீராடல் சிறப்பு.
8.கார்த்திகை-கார்திகை நட்சத்திரம்-கார்த்திகை தீபம்.
9.மார்கழி-மிருகசீருடம்-ஆருத்ரா தரிசனம்,
10.தை-பூச நட்சத்திரம்-முருகனுக்குச் சிறப்பு,
11.மாசி-மகம் நட்சத்திரம்-புனித நதிகளில் நீராடல்.
12.பங்குனி-பூரம் நட்சத்திரம்-தெய்வத்திருமணங்கள்.

மாயானத்தலங்கள்

மாயானத்தலங்கள்
1.கச்சிமாயானம்(1),
2.கடவூர் மாயானம்(165),
3.காழிமாயானம்,
4.நாலூர்மாயனம்(213).

மாயையின் இரு அம்சங்கள்

மாயையின் இரு அம்சங்கள்
1.சிவனுக்கு-பார்வதி,கங்கை.
2.திருமாலுக்கு-நிலமகள்,பூமகள்.
3.பிரம்மாவிற்க்கு-சாவித்ரி,சரஸ்வதி.
4.விநாயகர்-சித்தி,புத்தி.
5.முருகனுக்கு-தெய்வானை,வள்ளி.

முக்கூடல்

முக்கூடல்-3நதிகள் சங்கமம்.
1.கூடலசங்கமா-கிருஷ்ணா.கட்டப்ரபா,மலப்ரபா சந்திக்கும்
2.திரிவேணி சங்கமம்-பிரயாகை-கங்கை,யமுனை,சரஸ்வதி
3.பவானிசங்கமம்-காவேரி,பவானி,அமுதநதி.

முக்தி தரும் தலங்கள்

முக்தி தரும் தலங்கள்-7
அவந்தி(காலடி),
காசி(மூக்கு),
காஞ்சி(இடுப்பு)
திருஅயோத்தி(தலை),
துவாரகா(தொப்புள்),
ஹரித்துவார்(மார்பு),
மதுரா(கழுத்து),

முக்தி தலங்கள்

முக்தி தலங்கள்
1.பிறக்க முக்தி-திருவாரூர்(204),
2.இறக்க முக்தி-வாரணாசி,திருநல்லூர்ப் பெருமணம்(59),
3.நினைக்க முக்தி-திருவண்ணாமலை(54),
4.தரிசிக்க முக்தி-சிதம்பரம்(55)

முக்தி தலங்கள்-விஷ்ணு

முக்தி தலங்கள்-விஷ்ணு
1.திருவரங்கம்(1),
2.ஸ்ரீமுஷ்ணம்,
3.திருப்பதி(106),
4.சாளக்கிராமம்(101),
5.நைமிசரண்யம்(97),
6.புஷ்கரம்,
7.நாராயணபுரம்,
8.திருநீர்மலை(61).

முக்திபெற-தானங்கள்

முக்திபெற துணைநிற்கும்தானங்கள்
ரவுப்பியபர்வத, லவனபர்வத, விச்வசக்ர, ஹேமவஸ்திர, பருத்திவஸ்திர, தானிய,பூ,மராடி, குடை, தீப, வஸ்திர, தில, கோ, இலவண, ஸ்வர்ண, இரண்யகர்ப்ப, இரண்யசவ, இரண்யசவரத, உபயகோமுகி, கனககல்பல்திகா, கனககாமதேனு, கல்பவிருட்ச, கர்ப்பஸா, கிருதபர்வத, கிருஷ்ணாஜின, குடதேனு, குடபர்வத, கோசகஸ்ர, சர்க்கராபர்வத, சப்தசாகரத, சுவர்ணபர்வத, திக்பாலக, திலபர்வத, துலாபுருஷ, பஞ்சலாங்கல், பிரமாண்ட, மகாபூதகட, ரதனதேனு, ரதனபர்வத.

முக்திபெறவழி

முக்திபெறவழி-நான்கு வழிகளை சொல்கின்றது வேதங்கள்.
1.சரியை(தாசமார்க்கம்)-பலதொண்டுகள் செய்து இறைவன் அருளை பெறுதல்.
2.கிரியை(சத்புத்ரமார்க்கம்-இறைவனை அகமும் புறமும் பூஜித்து அருளைப் பெருதல்.
3.யோகம்(சகமார்க்கம்)-தியானத்தின் மூலம் வீடுபேற்றை அடைவது.தகாது என்று வகுப்பது யமம், தகும் என்பது நியமம் என்ற விதிக்களுக்குட்பட்டது.
4.ஞானம்-(சன்மார்க்கம்)-குருவிடம் உபதேசம் பெற்று ஞானத்தால் ஆராதனை செய்து அருள். குருவின் மூலம் கற்பது-சிரவணம், கற்றவற்றை நினைவில் கொண்டுவருவது மனனம், அவற்றை தியானத்திருப்பது நிதித்தியாசனம் என 3 வித ஞான மார்க்கங்கள்.

முத்திரைகள்-ஆன்மீகம்

முத்திரைகள்-ஆன்மீகம்
1.ஆத்மாஞ்சலி, 2.ஞான, 3.தியானி, 4.பிருத்வி, 5.வருண, 6.சூர்ய, 7.வாயு, 8.அபான, 9.ஆகாய, 10.லிங்க, 11.சூன்ய, 12.பிராண, 13.முஷ்டி, 14.சங்கு, 15.மூட்டு, 16.குபேர.

முப்பத்திமூன்று கோடி தேவர்கள்

முப்பத்திமூன்று கோடி தேவர்கள்
ஆதித்யர்-12, உருத்திரர்-11, வசுக்கள்-8, அஸ்வினி-2=மொத்தம்33 பேர். ஒவ்வொரு வருக்கும் கோடி பரிவார தேவதைகள்.எனவே 33 கோடி தேவர்கள் என வழக்கத்தில்.

மும்மூர்த்திகள் தலம்

மும்மூர்த்திகள் தலம்
1.திருப்பாண்டிக்கொடுமுடி(தி.த-264),
2.திருக்கரம்பனூர்-உத்தமர்கோவில்(தி.தே-3),
3.சுசீந்திரம்.
4.திருநாவாய்(தி.தே-65)
5.திருக்கண்டியூர்(129)(தி.தே-7).
6.சிதம்பரம்(தி.த-55, திதே-40),
7.திருமுக்கூடல்,
8.திரிமூர்த்திமலை,
9.மோரூர்(சங்ககிரி)

மூலமூர்த்திகள்

மூலமூர்த்திகள்-பஞ்சாயதன பூஜை-இயற்கையாக கிடைப்பவை.
1.ஈஸ்வரன்-பாணலிங்கம்-நர்மதையின் ஓங்கார குண்டத்தில்,
2.அம்பிகை-ஸ்வர்ணமுகிலா என்கிற கல்-ஸ்வர்ணமுகி ஆறு(ஆந்திரா),
3.விஷ்னு-சாளக்ராமம்-கண்டகி நதி-நேபாளம்,
4.சூரியன்-ஸ்படிகம்-வல்லம் அருகில்-தஞ்சை,
5.விநாயகர்-சோனபத்திரக்கல்-கங்கையில் கலக்கும் சோனே ஆற்றில்.

முருகன்

முருகன்
1.ஒரு தலை முருகன்-நிறைய தலங்கள்.
2.இரண்டு தலைமுருகன்-சென்னிமலை.
3.மூன்று தலை முருகன்-காசிபாளயம்-ஈரோடு.
4.நான்கு தலை முருகன்-ஓதிமலை-மேட்டுப்பாளயம்.
5.ஆறு தலை முருகன்-பலதலங்கள்,
6.பத்து தலை முருகன்-இலஞ்சி-குற்றாலம்.
7.பதினொரு தலை முருகன்-பழனிமலை வடக்குபுற மண்டபம்.
7.5'உயர முருகன்-வல்லக்கோட்டை.
10'உயரமுள்ள முருகன்-வேளிமலை-கன்னியாகுமரி.

முருகன் பூஜை-சைவ ஆகமங்கள்

முருகன் பூஜை செய்த சைவ ஆகமங்கள்28-28லிங்கங்கள்
1.காமிகேசுவரர்-திருவடிகள், 2.யோகேசுவரர்-கனுக்கால்கள், 3.சிந்தியேசுவரர்-கால்விரல்கள், 4.காரணேசுவரர்-கெண்டைக்கால்கள், 5.அஜிதேசுவரர்-முழந்தாள்கள், 6.தீபதேசுவரர்-தாடைகள், 7.சூட்சுமேசுவரர்-குய்யம், 8.சகஸ்ரேசுவரர்-இடுப்பு, 9.அம்சுமானேசுவரர்-முதுகு, 10.சுப்பிரபேதேசுவரர்-தொப்புள், 11.விஜயேசுவரர்-வயிறு, 12.விசுவாசேசுவரர்-மூக்கு, 13.சுவாயம்பேசுவரர்-தனங்கள், 14.அகலேசுவரர்-கண்கள், 15.வீரேசுவரர்-கழுத்து, 16.ரௌரவேசுவரர்-காதுகள், 17.மகுடேஸ்வரர்-திருமுடி, 18.விமலேசுவரர்-கைகள், 19.சந்திரஞானேசுவரர்-மார்பு, 20.முகம்பிரேசுவரர்-முகம், 21.புரோத்கீதேசுவரர்-நாக்கு, 22.லளிதேசுவரர்-கன்னங்கள், 23.சித்தேசுவரர்-நெற்றி, 24.சந்தானேசுவரர்-குண்டலம், 25.சர்வொத்தமேசுவரர்-உபவீதம், 26.பரமேசுவரர்-மாலை, 27.கிரணேசுவரர்-ரத்திணஆபரணம், 28.வாதுளேசுவரர்-ஆடை.

முருகன்-குரு அம்சம்

முருகன்-குருஅம்சம்-1.சுவாமிமலை,2.திருச்செந்தூர்.

முருகன்-ஆறுபடைவீடு

முருகன்-ஆறுபடைவீடு
1.திருப்பரங்குன்றம்-(மூலாதாரம்)தேவேந்திரன் மகள் தெய்வானையை மணந்ததலம்.
2.திருச்செந்தூர்-(சுவாதிஷ்டானம்)சூரபத்மனை வதைத்து மக்களை காத்தல்.
3.பழனி-(மணிபூரகம்)திருவாவினன்குடி-மாங்கனியால் எல்லாம் துறந்த நிலை.
4.சுவாமிமலை-(அனாகதம்)தந்தைக்கு பிரணவத்தின் பொருள் கூறியதலம்.
5.திருத்தணி-(விசுத்தி)வள்ளியை மணந்ததலம்.
6.பழமுதிர்சோலை-(ஆக்ஞை)தேவியர் இருவருடன் தரிசனம்.

முருகன் வாகனம்

முருகன் வாகனம்-
1.மந்திரமயில்-மாங்கனிபெற உலகைசுற்றிவர உதவியது,
2.இந்திரமயில்-சூரபத்மனுடன் போர்புரிய செல்லும்போது இந்திரன் மயிலாக வந்து தாங்கியது.
3.மந்திரமயில்-சூரபத்மனை வென்று பிளந்து மயிலாக ஏற்றுக்கொண்டது.

முருகனின் 16வடிவங்கள்

முருகனின் 16வடிவங்கள்
1.சக்திதரன், 2.ஸ்கந்தன், 3.தேவசேனாபதி, 4.சுப்ரமண்யன், 5.கஜவாகனன், 6.சரவணபவன், 7.கார்திகேயன், 8.குமாரன், 9.ஷண்முகன், 10.தாரகாரி, 11.சேனானி. 12.பிரம்மசாஸ்தா, 13.வள்ளிகல்யாணசுந்தரன், 14.பாலசுவாமி, 15.கிரௌஞ்சபேதன், 16.சிகிவாகனன்.

முருகனின் நவசக்தி வீரர்கள்

முருகனின் நவசக்தி வீரர்கள்
1.மாணிக்கம்-வீரபாகுத்தேவர்,
2.முத்து-வீரகேசரி,
3.புஷ்பராகம்-வீரமகேந்திரர்,
4.கோமேதகம்-வீரமகேசுவரர்,
5.வைடூரியம்-வீரபுரந்தர்,
6.மரகதம்-வீரமார்த்தாண்டர்,
7.பவளம்-வீராந்தகர்,
8.நீலம்-வீரதீரர்,
9.வைரம்-

முருகனின் அருள் பெற்றவர்

முருகனின் அருள் பெற்றவர்
1.நக்கீரர்-திருப்பரங்குன்றத்தில் பூதத்திடம் சிக்கியபோது முருகன் காப்பாற்றினார்-திருமுருகாற்றுப்படை இயற்றினார்.
2.அகத்தியர்-முருகன் உபதேசத்துடன் அகத்தியம் இலக்கணம் படைத்தார்.
3.அருணகிரிநாதர்-பெண் மோகத்தில் சிக்கியவருக்கு முருகன் அருள்-திருப்புகழ் பாடினார். கந்தரலங்காரம், கந்தரந்தாதி எழுதினார்.
4.ஒளவையார்-சுட்டப்பழம் சுடாத பழம் கேட்டு அருள்.
5.குமரகுருபர சுவாமிகள்

முனிவர்கள்-ஆரோகரணம்

முனிவர்கள் காய உடலோடு ஆரோகரணம்-காயாகாரோணத்தலங்கள்
1.கச்சிக்காரோணம்(1),
2.குடந்தை காரோணம்(145),
3.நாகைக்காரோணம்(199).

மேதா தட்சிணாமூர்த்தி

மேதா தட்சிணாமூர்த்தி
1.திருநாங்கூர்,
2.திருநறையூர்,
3.திருவாரூர்(தி.த-204),
4.திருவெண்காடு(தி.த-65),
5.மாயூரம்(தி.த-156),
6.உத்ரமாயூரம்,
7.மூவலூர்,

யாகங்கள்

யாகங்கள்
1.அசுவமேத-100நடத்தினால் இந்திரபதவி,
2.புத்திரகாமஷ்டி-புத்திரபாக்யம் வேண்டி

யமகண்டம்

யமகண்டம்-நினைவுசொற்றெடர்
விளையாட்டாய்(வியாழன்-கா.6-7.30)
புண்ணியம்(பதன்-7.30-9)
செய்தாளும்(செவ்வாய்-9-1030)
திருவருளை(திங்கள்-1030-12)
ஞானமும்(ஞாயிறு-12-1.30)
சத்தியமும்(சனி-1.30-3)
வெளிப்படுத்தும்(வெள்ளி-3-4.30)
அல்லது வியாழன்,புதன்,செவ்வாய்,திங்கள்,ஞாயிறு,சனி,வெள்ளி என கிழமையை வரிசை படுத்தி கொள்க.
                                                                                       
யோக, போக, ஞான பீடம்
 

யோக,போக,ஞான பீடம்
யோகபீடம்-பவநாசம், போகபீடம்-திருக்குற்றாலம்(257), ஞானபீடம்-சிவசைலம்.

யோகம்,ஞானம்
 

யோகம்,ஞானம்
1.பக்தி யோகம்-சரியை-தேடுவது,
2.கர்ம யோகம்-கிரியை-தேடியதை அடைவது,
3.தியான யோகம்-யோகம்-தேடி அடைந்ததை உபயோகிப்பது,
4.ஞான யோகம்-ஞானம்-உபயோகித்ததால் ஏற்படும் தெளிவு. சத்குருவை தேடுவது சரியை, அவரிடம் உபதேசம் பெறுவது கிரியை, அதன்படி நடப்பது யோகம். அதனில் கிடைப்பது ஞானம்.


யோகபைரவர்

யோகபைரவர்-திருப்பத்தூர்-ஸ்ரீதளிநாதர்கோவில்.

யோகினிகள்

யோகினிகள்-அன்னையிடமிருந்து அஷ்ட மாத்ருகா-
1.பிராம்மணி(பிரம்மாவிடமிருந்து சக்தி),
2.வைஷ்ணவி(மகாவிஷ்ணுவிடமிருந்து சக்தி),
3.மஹேஸ்வரி(மகேஸ்வரனிடமிருந்து சக்தி),
4.இந்திராணி(இந்திரனிடமிருந்து சக்தி),
5.கௌமாரி(முருகனிடமிருந்து சக்தி),
6.வாராஹி(வராகப்பெருமானிடமிருந்து சக்தி),
7.நாரசிம்ஹி(நரசிம்மரிடமிருந்து சக்தி),
8.விகடானா(விநாயகரிடமிருந்து சக்தி).
அன்னையின் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலிருந்து 64பேரைத் தோற்றுவித்தாள்.
எட்டு பேராக பிரித்து அவர்களுக்கு ஒரு தலைவியாக இந்த எட்டுபேரையும் தோற்றுவித்தாள்.
அந்தந்த தெய்வங்கள் ஒவ்வொரு தலைவிக்கும் தங்கள் திவ்ய சக்திகளை வழங்கினார்கள்.
இந்த 64பேரும் யோகினிகள் எனப்பட்டனர். ஒவ்வொரு யோகினிக்குள்ளும் ஒருகோடி யோகினிகள்.
மொத்தம் 64கோடி யோகினிகள். இவர்கள் உலக இயக்கங்களுக்கு காரணமாகிறார்கள்.
சாக்தம் எனப்படும் சக்தி வழிபாட்டின் முக்கிய பரிவாரங்கள் இந்த யோகினிகள்தாம்.

ராகு பகவான்

ராகு பகவான்
அசுர ஸ்திரியின் கர்பத்தில் உதித்தவர். மோகினி உருவத்தில் மகாவிஷ்னு அமுதத்தை பங்கீடுசெய்ய இடையில் இராகு தேவரைப்போல் சென்று அமிர்தம் உண்ண இதை சந்திர, சூரியர்கள் விஷ்னுவிடம் சொல்ல அவர் இராகுவின் தலையை துண்டித்தார்.அமிர்தம் உண்டதால் இறக்காமல் விஷ்ணுவை வேண்ட இராகு தலைக்கு பாம்பு உடம்பு அமைத்து-ராகு-கிரஹப்பதவி தந்தார்.சந்திர சூரியர்களை பலம் இழந்து ஒளி குன்றும் படியான கட்டுப்படுத்தும் ஆற்றல். புதன், சுக்கிரன், சனி நண்பர்கள். குரு, சூரியன், சந்திரன் பகைவர்கள். வாகனம்-சிம்மம். கருப்பு நிறமுடையவர். அதிதேவதை-கோதேவதை, பிரத்யபதி-சர்பேஸ்வரன்.

ராகுபரிகாரத்தலங்கள்

ராகுபரிகாரத்தலங்கள்
உத்தமபளையம், ஊத்துக்காடு, உளுந்தூர்பேட்டை, குடந்தைநாகேஸ்வரம், சிரபுரம், திருகாளத்தி, திருதுலைவல்லி, திருநாகேஸ்வரம், திருபாம்புரம், திருவிடைக்கழி, திருவேங்கடநாதபுரம், நாகப்பட்டினம், மணல்மேடு, ராப்பட்டீசுவரம்,

ரங்க சேத்திரங்கள்

ரங்க சேத்திரங்கள்
1.ஆதிரங்கம்-ஸ்ரீரங்கபட்டிணம்,
2.அப்பாலரங்கம்-திருப்பேர்நகர்(6),
3.மத்யரங்கம்-ஸ்ரீரங்கம்(1),
4.மேலரங்கம்-இந்தளூர்(26),
5.கீழரங்கம்(கீழையூர்).
6.வடஅரங்கம்-?

ரத உற்சவம்

ரத உற்சவம்-
தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வந்து இறை மக்களுக்கு அருள்.ஆணவத்தை அழித்து ஞானத்தை தரவே இரத உற்சவம்.

ராமருடன் சுக்ரீவன்

ராமருடன் சுக்ரீவன்
கீழையூர், தஞ்சைபுன்னைநல்லூர், தலைஞாயிறு. தில்லைவிளாகம்.

ரிண-ருணவிமோச்சனர்

ரிண-ருணவிமோச்சனர்
1.திருவாரூர்,
2.திருச்சோறை.
3.ஏகந்தராமர் அருகில்-ருணவிமோசனதீர்த்தம்,
4.மன்னார்குடி.

லஷ்மி நரசிம்மர்-8

லஷ்மி நரசிம்மர்-8
1.சிங்கிரிகுடி(அபிஷேகப்பாக்கம்),
2.பூவரசம்குப்பம்,
3.பரிக்கல்,
4.அந்திலி,
5.சேளிங்கர்,
6.நாமக்கல்,
7.சிங்கபெருமாள் கோவில்,
8.சிந்தலவாடி.

லஷ்மி வாசம்

லஷ்மி வாசம்
1.இன்முகமும் ஒற்றுமையும் உள்ளமக்கள்,
2.நெல்லிமரம்,
3.தூய்மையான வீடுகள்,
4.தானியக் குவியல்கள்,
5.உணவை பகிர்ந்துண்ணும் மனிதர்கள்,
6.நாவடக்கம் உள்ளவர்கள்,
7.உண்பதற்கு அதிகநேரம் செலவிடாதவர்கள்,
8.வலப்புரிச்சங்கு,
9.பரிசுத்தமான ஆடை அணிகலன்கள் இவைகளில்

லிங்கங்கள்-எதனால்

லிங்கங்கள்-எதனால் செய்தது
1.தங்கம்-சொர்ணலிங்கம்(சிதம்பர ரகசியத்திற்குகீழே),
2.வெள்ளி-பூஜித்லிங்கம்(காட்மாண்ட்-பசுபதிநகர்-கோரக்கநாதர்ஆலயம்),
3.மரகதம்-(சிதம்பரம்,திருநள்ளாறு-தர்ப்பனேஸ்வரர்),
4.நீலம்-(திருவாடனை),
5.பச்சை-(திருஇடைச்சுரம்,திருஈங்கோய்மலை),
6.குங்கும்-(மஹாராஸ்டிரா-எல்லோராகுகை-குஸ்மேசம்),
7.நீர்-(திருவானைக்கா-சக்திநீரைஒன்றுதிரட்டிஉருவாக்கியது),
8.மண்-ப்ருத்வி(காஞ்சி,திருவொற்றியூர்மற்றும் நிறைய தலங்கள்)

லிங்கங்கள்-யாரால்

லிங்கங்கள்-யாரால்
1.திவ்யலிங்கங்கள்-தேவர்கள் அவதார புருஷர்களால் உருவாக்கப்பட்டு வழிபட்டது.
2.அசுரலிங்கங்கள்-அசுரர்கள் ஆணால் சிவபக்தி நிறைந்தவர்கள் நிறுவி வழிபட்டது.
3.அர்ஷ்லிங்கங்கள்-அகஷ்தியர் போன்ற முனிவர்களால் நிறுவி வழிபட்டது.
4.புராணலிங்கங்கள்-புராணகாலத்தில் இதிகாச புருஷர்களால் நிறுவி வழிபட்டது.
5.மானுஷ்யலிங்கங்கள்-அரசர்,பிரபுக்கள்,பக்திநிறைந்த மானிடர்கள் நிறுவி வழிபட்டது.
6.ஸ்வயம்பு லிங்கங்கள்-தானாகேவே தோன்றியவை.
[திவ்ய,புராண,ஸ்வய்ம்பு லிங்கங்கள்-ஊத்தமவகை,
ஆர்ஷ,அசுர லிங்கங்கள்-மத்யவகை,
மானுஷ்யலிங்கங்கள்-அதமநிலை சார்ந்தவை]
வடிவமைக்கப்பட்ட முறையில்
1.கிரித்ம-செயற்கையாக கரங்களால் உருவானவை.
2.அக்கிரித்ம-இயற்கையாக உருவானவை.
மேலும்1.நகர்த்தப்படக் கூடியவை-ஜங்கம/சலலிங்கங்கள்,
2.நிலையானவை-அசல/ஸ்தாவர எனப்படும்]

லிங்கத்தில் பட்டை

லிங்கத்தில் பட்டை சிறப்பு
4பட்டை=வேதலிங்கம்(ரிக், யஜுர், சமம், அதர்வன)-காரமடை, சக்கரப்பள்ளி,
8பட்டை=அஷ்டதாரா (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா)-கற்பகனார்குளம்,
16பட்டை=ஷோட்தாரா(பதிணாறு பேறுகள்)-சிதம்பரம் -நவலிங்கசன்னதி, பழையாறைமேற்றளி, திருபட்டூர், தென்பொன்பரப்பி-ஆத்தூர், மேலையூர், பூண்டி(போளூர்), பழங்கோயில்(போளூர்)
32பட்டை=தர்மதாரா-காஞ்சி-கைலாசநாதர்கோவில்,
64பட்டை=சதுஷ்சஷ்டி-(64கலைகள்)-காஞ்சி.

லிங்கம்-பகுதிகள்

லிங்கம்-பகுதிகள்
1.ருத்திரம்-ஆவுடைக்குமேல்பகுதி-சிவதத்துவம்,
2.விஷ்னு-ஆவுடைக்கு உட்புறம்-வித்யா தத்துவம்,
3.பிரம்மா-ஆவுடைக்கு கீழே பூமிக்குள்-பிரம்ம பாகம்-ஆன்மா தத்துவம்.

லிங்கம்ஆவுடையார்

லிங்கம்ஆவுடையாரோடு தோன்றியதலங்கள்(சு)-(9)
1.திருக்கச்சிஏகம்பம்-காஞ்சி(1),
2.தில்லை-திருச்சிதம்பரம்(55),
3.திருஆலவாய்-மதுரை(245).
4.திருநெல்வேலி(258),
5.திருக்கேதாரம்(271),
6.திருக்கயிலை(272),
7.லட்சுமிகிரி,
8.வாரணாசி,
9.திருக்காளஹஸ்தி.

லிங்கோத்பவருக்கு பதில் திருமால்

லிங்கோத்பவருக்கு பதில் திருமால்-அனுமன்-திருமால் இறைவனை வழிபட்ட தலங்கள்.

வணங்கும் முறை

வணங்கும் முறை 1.கோவிலில்,
1.கோபுரம்-நீ உடம்பு அல்ல ஆண்மா என உணர்ந்து வணங்கவும்.
2.பலிபீடம்-நீ இச்சையல்ல என உணர்ந்து இச்சைகளை பலிகொடுத்ததாக பாவித்து விழுந்து வணங்கவும்.
3.கோடிமரம்-நீ மனமல்ல தத்துவங்களுமில்லை என புரிந்து வணங்கவும்.
4.வாகனம்-இறைவனை வழிபட அனுமதி கேட்டு வணங்கவும்.
5.கர்ப்பகிரகம்-நீ ஜீவாத்மா என்பதை உணர்ந்து நான் எனது என்ற உணர்வுகளை நீக்கி இறைநினைவோடு இரண்டறக்கலந்து வணங்கவும்.
6.மூர்த்தங்கள்-வலம்வந்து வணங்கும்போது இயற்கைநிலை இன்னதென அறியவும். வடிவங்கள் மாறுபடுவதுபோல் மாறிடும் மனிதனின் குணமும் மாறுவதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.எண்ணங்கள் மாறுபட்டலும் தெய்வீகநிலை மாறக்கூடாது.
7.அமர்ந்துநிலை-உன்மிருகத் தன்மையை ஒதுக்கி தெய்வீக சிந்தனையுடன் சிந்தித்து அவசரமின்றி அமைதியுடன் நல்வழியில் செல்ல.                                             சிவனையோ, விஷ்ணுவையோ வணங்கும்போது தலைக்குமேல் 12 அங்குலம் கைகூப்பி வணங்கவும்.                                                                                               வணங்கும் முறை  2.மற்றவர்க்கு                                                                                                                                                                                                                                       

1.ப்ரதுதானா- எழுந்து நின்று வணங்கி வரவேற்பது.
2.நமஸ்காரா- நமஸ்தே/வணக்கம் என்று கூறி வணங்குதல்.
3.உபஸங்க்ரஹன்- பெரியோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதங்களை தொட்டு வணங்குதல்.
4.அஷ்டாங்க/ஸாஷ்டாங்க- இறைவன் மற்றும் பெரியோரின் முன்னே கால்கள், முழங்கால்கள், வயிறு, மார்பு, நெற்றி மற்றும் கைகள் நிலத்தில் படுமாறு கீழே விழுந்து வணங்குதல்.
5.ப்ரத்யபிவாதனா- பிறர் வணக்கத்திற்கு பதிலாக வணக்கம் கூறுதல்.

வயது-சாந்தி

வயது-சாந்தி
58-ல் உக்ரதசாந்தி,
61-ல் சஷ்டியப்தசாந்தி,
70-ல் பீமரதசாந்தி,
75-ல் சகஸ்ரநட்சத்திரசாந்தி,
80-ல் சதாபிஷேகம்,
80ஆண்டு+ 8மாதங்கள் சகஸ்சரசந்திர தரிசனசாந்தி(1000பிறைகள்),
100-ல் கனகாபிஷேகம்.

வராகிபீடம்

வராகிபீடம்-திருவானைக்காவல்(114)

வராஹஷேத்திரங்கள்

வராஹஷேத்திரங்கள்
1.திருமலை(106),
2.திருக்கடன்மல்லை(63),
3.திருவிடவெந்தை(62),
4.தஞ்சைமாமணிக்கோயில்(20),
5.ஸ்ரீவில்லிபுத்தூர்(88),
6.ஸ்ரீமுஷ்ணம்.
7.திருக்கவிதலம்(9),
8.சதுரங்கபட்டிணம்,
9.ஆழ்வார்திருநகரி.
                                                                                                                                                                                                                                                         

வருடத்தின் பருவங்கள்!

பருவங்கள் ஆறு(ஒரு வருடத்தின்)
1.வசந்தகாலம் / இளவேனில் காலம்- சித்திரை, வைகாசி- கோவில் விழாக்கள் கொண்டாடப்படும். இயற்கை செழிக்கத்துவங்கி மகிழ்ச்சியுடன் பக்தி பெருகும்.
2.முதுவேனில் / கோடைக்காலம்- ஆனி, ஆடி
3.கார்காலம் / மழைக்காலம்- ஆவணி, புரட்டாசி
4.கூதிர்காலம் / குளிர் காலம்- ஐப்பசி, கார்த்திகை
5.முன்பனிக் காலம்- மார்கழி, தை
6.பின் பனிக் காலம்- மாசி, பங்குனி
பூமி சூரியனைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையை 12 ஆகப் பிரித்து அவற்றை ராசிகள் என்றனர். 360 டிகிரியில் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி. முதல் ராசி மேஷம் 0 டிகிரியில் தொடங்கும். இதன்படி சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை. இது இளவேனில் காலம். எனவே இதிலிருந்து தமிழ் மாதங்கள் ஆரம்பிக்கும்.

வள்ளல் தலங்கள்

வள்ளல் தலங்கள் (மயிலாடுதுறை சுற்றியுள்ளன)
1.மயூரநாதவள்ளல்(மயிலாடுதுறை-156),
2.துறைகாட்டும்வள்ளல்(திருவிளநகர்-157),
3.வழிகாட்டும்வள்ளல்(மூவலூர்),
4.மொழிகாட்டும்வள்ளல்(பெருஞ்சேரி),
5.கைகாட்டும்வள்ளல்(உத்ர மயிலாடுதுறை)

வாயு-வாசி

வாயு-வாசி-10வகை
1.பிராணன்-உணவு ஜீரணமாகும்.இதன் அளவு நிலையாக இருந்தால் மூப்பு இல்லை.
2.அபானன்-கழிவு பொருட்களை வெளியேற்றும்.அன்னத்தின் சாரத்தை எல்லா பகுதிக்கும் கொண்டு சேர்ப்பது.
3.வியானன்-உறுப்புகளின் இயக்கம்,நீட்டல்,மடக்கல்.
4.உதானன்-அன்னசாரத்தின் சத்தை பிரிக்கும்.தேவையற்றதை வெளியேற்றும்.
5.சமானன்-எல்லா வாயுக்களை கட்டுப்படுத்துதல்.அறுசுவை,நீர்,அன்னம் ஆகியவற்றை சாறாக்கி உடலெங்கும் பரவச்செய்தல்.
6.நாகன்-கண்களை விழிக்கச் செய்வதும்,உடலை சிலிர்க்கச் செய்வதும்,
7.கூர்மன்-கொட்டாவிவிடல்,வாயை மூடல்,காட்சிகளை காணல்,கண்ணீர்விடல் செய்ய வைப்பது.
8.கிருகரன்-செரிமான நீர்களை சுரக்கச்செய்து பசியை தூண்டும்.தும்மல்,இருமல் உண்டாக்கும்.
9.தேவதத்தன்-சோம்பலைப்போக்கி சுறுசுறுப்பையுண்டாக்கும். சண்டையிடுதல், அடித்தல், வன்மையாக பேசுதல், கோபத்தை உண்டு பண்ணுதல், ஒன்றை தீர்மானித்தல் ஆகியவை இதன்செயல்.
10.தனஞ்செயன்-ஒலி எழுப்பச் செய்யும்.உடல் இறந்தபோது ஏனைய வாயுக்கள் உடனே சோர்ந்துவிடும்.இந்தவாயு 3நாள் வரை அல்லது தலை வெடிக்கும் வரை இருந்து பின்பே மறையும்.

விண்ணின்-பரமபதம்

விண்ணின்-பரமபதம் இனை-விண்ணகரம்
1.பரமேச்சுர விண்ணகரம்(56),
2.காழிச்சீராம விண்ணகரம்(28),
3.திருஅரிமேய விண்ணகரம்(29),
4.ஸ்ரீவைகுந்த விண்ணகரம்(80),
5.நந்திபுர விண்ணகரம்(21).

வியாழபகவான்

வியாழபகவான்-குருபகவான், பிரகஸ்பதி வேறு பெயர்கள். தேவர்களின் குரு. கல்வியில் சிறந்தவர். சுபக்கிரகர். பொன்னிறமானவர். இந்திரசபையில் அமைச்சர். ஆங்கீரசமுனி-வசுதாவின் 7வது மகன். தாரை, சங்கிலி 2மனைவியர். வாகனம் மீன்.வியாழன் வழிபடின் நல்அறிவு, புத்திக்கூர்மை, பொருள், புகழ் கிடைக்கும்.

விரதங்கள்-சித்திரை

விரதங்கள்-சித்திரை
1.வளர்பிறை சப்தமிதிதி-வாழ்வில் வளம்.
2.பௌர்ணமி-சிவன்-லட்சுமி கடாட்சம்,சகல சௌக்யம்.
3.பௌர்ணமி-சித்திரகுப்தர்-ஆயுள் பலம்.புண்ணிய பலம்.
4.சுக்கிலபட்சத்து சுக்ரவாரம் -வெள்ளி-பார்வதிதேவி -சர்க்கரை நிவேதனம் -இனியவாழ்வு அமைய.
5.பரணி நட்சத்திரம்-பைரவமூர்த்தி -தயிர்சாதம் நிவேதனம் -எதிரி பயம் போகும். தடைகள் விலகும்.
6.மூல நட்சத்திரம்-மகாலட்சுமி+நாராயணன் இஷ்டசித்திகள் -விஷ்னுலோகம் அடைய.
7.சுக்லபட்ச திரிதியை-உமா-மகேஸ்வரர்-தானம் செய்தல்-சிறப்பான வாழ்க்கை,சிவலோகம் அடைய.

விரதங்கள்-வைகாசி

விரதங்கள்-வைகாசி
1.பௌர்ணமி-சிவன்-சிவனருள்.
2.விருஷப-ரிஷபவாகனத்தில் இருக்கும் உமாமகேஸ்வரர்-நீண்ட ஆயுள்,பொருள்,தானியம்,கல்வி,வாகன யோகம்.
3.விசாகம்-முருகன்-முருகன் அருள்,மழலைச் செல்வம்.

விரதங்கள்-ஆனி

விரதங்கள்-ஆனி
1.வளர்பிறை சப்தமி திதி-துர்க்கந்தநாசன விரதம்-சருமநோய்கள் நீங்கும்.
2.ரம்பா த்ரிதியை-த்ரிதியை-விரதம்,சிவன் வழிபாடு-அரம்பையர்கள் வாழ்த்து,அழகு,செல்வம் நிறைந்து வாழ.
3.பௌர்ணமி-சிவன்-எண்ணியவை கைகூடும்

விரதங்கள்-ஆடி

விரதங்கள்-ஆடி
1.வளர்பிறை சப்தமி திதி-அபய சப்தமி விரதம்-சூரிய உலகில் இடம்.
2.பௌர்ணமி-சிவன்-பகை விலகும்-வரலட்சுமி-செல்வம்சேரவும்,மங்களங்கள் பெருகவும்.

விரதங்கள்-ஆவணி

விரதங்கள்-ஆவணி
1.வளர்பிறை சப்தமி திதி-சகல பாக்யம் கிட்டும்.
2.பௌர்ணமி-சிவன்-வேண்டியவை கிட்டும்.

விரதங்கள்-புரட்டாசி

விரதங்கள்-புரட்டாசி
1.ஜேஷ்டா-சுக்லபட்ச அஷ்டமி-சிவன்,விநாயகர் பூஜை-சந்ததி சிறப்பாக வளர.
2.மகாலட்சுமி-துவாதசிமுதல்16 நாட்கள்-லட்சுமி பூஜை-சகல நலமும் வளமும் பெற.
3.தசாவதார-சுக்லதசமியன்று.
4.கதளி,கௌரி-சுக்லபட்ச சதுர்த்தசி-உமாமகேஸ்வர பூஜை-இஷ்ட சித்தி.
5.அநந்த-பூர்வபட்ச சதுர்தசி-விஷ்னு பூஜை-காரியம் ஈடேற.
6.பிரதமை/நவராத்திரி பிரதமை -சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) -9நாள் தேவி பூஜை-தீயசக்திகாளின் தாக்கம் விலக.
7.ஷஷ்டி-சுக்லபட்ச ஷஷ்டி-பரமேஸ்வரி பூஜை-அம்பிகையின் அருளாசி.
8.வளர்பிறை சப்தமி திதி-அனந்தசப்தமி-கண்ணொளி பிரகாசிக்கும்.
9.பௌர்ணமி-சிவன்-பெருட்செல்வம் பெருகும்.
10.அமுக்தா-சுக்லபட்ச சப்தமி-உமாமகேஸ்வரர்-புத்ர,பௌத்ர விருத்தி.

விரதங்கள்-ஐப்பசி

விரதங்கள்-ஐப்பசி
1.தேய்பிறை ஏகாதசி-நரகத்தில் உழலும் முன்னோர்கள் நலம்.
2.வளர்பிறை ஏகாதசி-நம் பாபங்களைப் போக்கும்.
3.சரஸ்வதி-சப்த்மிதிதி-சரஸ்வதி பூஜை-சர்வ கலைகளிலும் சிறந்து விளங்க.
4.மகாஅஷ்டமி-அஷ்டமி-காளிதேவி பூஜை-எதிலும் வெற்றி,எதிரிகள் அழிவர்.
5.தசமி-விஜயதசமி-நினைத்த காரியம் வெற்றி,
6.நாகசதுர்த்தி-சதுர்த்தி திதி-விநாயகர் பூஜை-அனைத்து காரியங்கள் வெற்றி.
7.கேதாரேஸ்வர-கேதாரேஸ்வரி பூஜை-கணவன் மனைவிக்குள் ஒற்றுமை.
8.கேதார கௌரி-அம்மாவாசை-தீர்க்க சுமங்கலியாக இருக்க.
9.உமாசுக்கிரவார-உத்திரநட்சத்திரம்-உமாதேவி பூஜை-குடும்பத்தில் சுபிட்சம்.
10.கந்த சஷ்டி-அம்மாவாசைக்கு பின்வரும் பிரதமை முதல் 6நாட்கள்-சுப்ரமணியர் பூஜை-கந்தன் அருள் பெற.
11.வெள்ளி-முதல் வெள்ளி-முருகன்-அருள்.
12.பௌர்ணமி-சிவன் பூஜை-அன்னாபிஷேகம் காணல்-உணவுக்கு பஞ்சமில்லை, அறம், பொருள், இன்பம் கிட்டும்.
13.அமாவாசை-சிவன்பூஜை-நதி நீராடி பிதுர் பூஜை-நிம்மதியும் வளமும் கிட்டும்.
14.வளர்பிறை சப்தமி திதி-செல்வசெழிப்பு.
15.செவ்வாய்-வீரபத்ரர்-நன்மை.
16.சரஸ்வதி-சுக்லபட்சநவமி-கல்வியில் சிறக்க.
17.அசோகாதிராத்ர-சுக்லதிரயோதசி-காரிய சித்தி.
18.பரணி-பரணி-பைரவர் அருள்.

விரதங்கள்-கார்த்திகை

விரதங்கள்-கார்த்திகை
1.பௌர்ணமி-சிவன்-பிரமஹத்தி தோஷம் நீங்கும்.
2.ஏகாதசி-ரமா ஏகாதசி-விஷ்னு-உணவு அருந்தாமல்-புண்ணியம்.

விரதங்கள்-மார்கழி

விரதங்கள்-மார்கழி
1.தேய்பிறை சப்தமி திதி-முக்தி கிட்டும்.
2.வளர்பிறை சப்தமி திதி-மறுபிறவியில் உத்தமமான குடுப்பத்தில் பிறவி.
3.பௌர்ணமி-சிவன்-கீர்த்தி.
4.திருவாதிரை-ஆருத்ரா தரிசனம்-சிவன்-மாங்கல்ய பாக்யம்.
5.வளர்பிறை ஏகாதசி-ஸ்ரீவைகுண்டஏகாதசி-மோட்ச/முக்கோடி ஏகாதசி,
6.மூலநட்சத்திரம்-அனுமன் ஜெயந்தி-சிரஞ்சீவி பலன்.

விரதங்கள்-தை

விரதங்கள்-தை
1.வளர்பிறை சப்தமி திதி-அபயபட்ச சப்தமி-அரம்,பொருள்,இன்பம் 3உடன் வீடுபேறும்.
2.பௌர்ணாமி-சிவன்-நீண்ட ஆயுள்.

விரதங்கள்-மாசி

விரதங்கள்-மாசி
1.பௌர்ணமி-சிவன்-உடல்நலம் பெறும்.
2.காரடையான் நோன்பு-சிவன்-தாலிபாக்யம்

விரதங்கள்-பங்குனி

விரதங்கள்-பங்குனி
1.வளர்பிறை சப்தமி திதி-விரதம்-தீய எண்ண சகவாசம் விலகும்.
2.பௌர்ணமி-சிவன்-தயிர் அபிஷேகம், மஞ்சள் பட்டாடை, வஜரமணீமாலை, மகிழம்பூ -16செல்வம் பெருகும்.
3.உத்திரநட்சத்திரத்தன்று-சிவன்-கல்யாண சுந்தர விரதம்-இனிய மணவாழ்க்கை. முருகன்-விரதம்,பூஜை-பிறவிப்பயன்.48ஆண்டுகள் உத்திர விரதம்-அடுத்தபிறவி அருள்பிறவி.
4.பௌர்ணமி,அமாவாசை,துவாதசி தினம்-துளசி தேவிக்கு தீபம்-பால்,நெய்,சர்க்கரை கலந்து நிவேதனம்-பிறப்பு இறப்பு அற்ற மோட்சம்.
5.கிருஷ்னபட்ச ஏகாதசி-விஜயா-விரதம்-பெருந்துயரக்கடலை கடிந்தேறும் நல்வழி.
6.சுக்லபட்ச ஏகாதசி-ஆமலகீ-விரதம்.பசுவவதானம் செய்தபலன்.
7.பிரதோஷகாலம்-தீபம்-ஞானம் அடையலாம்.

விரதங்கள்-செவ்வாய்

விரதங்கள்-செவ்வாய்
செவ்வாய் அல்லது வெள்ளி தொடங்குதல் சிறப்பு.வைகறையில் நீராடி,சுத்தமான இடத்தில் நெல்லைப்பரப்பி அதன்மீது நீருடன் கலசம் வைத்து முருகன் திருவுருவத்தை அதன்மேல் எழுந்தருளச் செய்து பூஜை செய்யவும்.மாலை ஆலயம் சென்று வழிபட்டு முருகனுக்கு நிவேதனம் செய்தவற்றை உட்கொள்ளவேண்டும்

விரதங்கள்-சுக்ர

விரதங்கள்-சுக்ர
உதயத்திற்குமுன் குளித்து வெளிர் நீல ஆடையுடன் அம்மன் கோவிலில் வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை.

விரதங்கள்-சனி

விரதங்கள்-சனி
அதிகாலையில் குளித்து கறுப்பு நிற ஆடையுடன் பெருமாளை வழிபட்டு வெல்லமும் எள்ளும் கலந்து இடித்து காக்கைகளுக்கு போட்டு மாலை சனீச்வரரை கருங்குவளை மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடல்

விரதங்கள்-ராகு

விரதங்கள்-ராகு
அதிகாலையில் குளித்து காளி கோவிலில் வேப்பெண்ணேய் விளக்கேற்றி மந்தார மலர்களால் அர்ச்சனை உளுந்து பலகாரம் நிவேதம்-கறுப்பு உடை தானம்.

விரதங்கள்-கேது

விரதங்கள்-கேது
அதிகாலையில் குளித்து விநாயகருக்கு செவ்வரளி மாலையணிவித்து கொள்ளு கொழுக்கட்டை நிவேதனம்.கேது பகவானை வணங்கவேண்டும்.

விரதங்கள்-சஷ்டி

விரதங்கள்-சஷ்டி
ஐப்பசிமாத சுக்கிலபட்ச சஷ்டி தொடங்கி ஓராண்டில் வரும் 24சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கவேண்டும்.

விராடபுருஷன்-உலகம்

விராடபுருஷன்-உலகம்
மூலாதாரம்-திருவாரூர்,
தொப்புள்-திருவானைக்காவல்,
மணிபூரகம்-திருவண்ணாமலை,
கண்டம்-காளத்தி,
புருவமத்தி-காசி,
இருதயம்-சிதம்பரம்.

வில்வம்

வில்வம்.
பஞ்சவில்வம்(வில்வம்,கிளுவை,நொச்சி,மாவிலங்கு,விளாமரம்). மற்றும் 21தளங்கள் கொண்ட மஹாவில்வம்-(ஒவ்வொருகாம்பிலும் 9தலைகள்)-மூக்கனூர்(கள்ளக்குறிச்சி)-(9,16,27தலைகள்)-கோவூர்.

விஸ்வகர்மா

விஸ்வகர்மா
விஸ்வம்-உலகு-இறைவன் படைக்கின்றான்.உலகில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கர்மாக்களை நினைவுபடுத்த, உதவி செய்ய, மற்றவற்றை உருவாக்குபவன்-ஸ்தபதி-விஸ்வகர்மா.

விஸ்வரூப அனுமன்

விஸ்வரூப அனுமன்
1.சுசீந்திரம், 2.நாமக்கல், 3.நங்கநல்லூர், 4.சின்னாளப்பட்டி, 5.பரிட்டாலா

வெற்றிலை

வெற்றிலை
வெற்றிலையின் நுனியில் லட்சுமி, நடுவில் சரஸ்வதி, காம்பில் பார்வதி. வெற்றிலை வைத்து நிச்சயம் செய்தல்-தாம்பூல சத்தியம்.

வேதங்கள் கூறும்-உணவு

வேதங்கள் கூறும்-உணவு
1.ஒஷதி-அறுவடையானதும் அழிந்துவிடும்.(நெல்,வாழை போன்றவை)
2.வனஸ்பதி-பருவம் தோறும் அறுவடை.(மா,தென்னை போன்றவைகள்)
இந்த இரண்டு வகைகளிலிருந்து கிடைக்கும் அறுசுவையைத்தான் நாம் பயன்படுத்தி நம்மை வளர்க்கவேண்டும் என்கிறது வேதம்.

வேதங்களின் தூண்கள்

வேதங்களின் தூண்கள்
1.திருவானைக்கா(114),
2.திருவாரூர்(204),
3.திருமகேந்திரபள்ளி(60),
4.திருவண்ணாமலை(54)

வேள்விகள் ஐந்து

வேள்விகள் ஐந்து
1.தேவயக்ஞம்-இறையிடமிருந்து நாம் பெற்றதை மீண்டும் இறைவனுக்கு திருப்பி கொடுப்பது,
2.ரிஷியக்ஞம்-சாத்திரங்கள் படித்தல்,கற்பித்தல்,ரிஷிகளிடமிருந்து பெற்ற அறிவை சரியான முறையில் உபயோகித்தல்.
3.பித்ருயக்ஞம்-பெற்றோருக்கான கடமைகளைச்செய்து,முன்னோர் பெருமையறிந்து பித்ருதேவதைகள் மூலம் திருப்பி அளித்தல்,
4.பூதயக்ஞம்-இயற்கையிடமிருந்து பெற்றதை உயிரினங்களுக்கு திருப்பித் தருதல்.
5.நரயக்ஞம்-உதவி கேட்டு வருபவர்க்கு நம்மால் இயன்ற உதவிகளை உடலால், உள்ளத்தால், பொருளால் செய்வது.

வைணவ சம்பிரதாயம்

வைணவ சம்பிரதாயம்
1.ஸ்ரீரங்கம்-மேல்வீடு-வாநிலா முற்றம்,
2.திருகண்ணபுரம்-கீழ்வீடு-நீள்நிலா முற்றம்,
3.திருக்குடந்தை-நடுவீடு-தூநிலா முற்றம்.

வைப்புத்தலம்

வைப்புத்தலம்-
அடியார்கள் ஒரு தலத்தைப் பற்றி பாடும்போது அந்தப்பாட்டினுள் அருகில் உள்ள தலத்தைப் பற்றியும் சேர்த்து பாடப்பட்டதலங்கள்.

ஜலந்தரவதமூர்த்தி

ஜலந்தரவதமூர்த்தி
இந்திரனை தெடர்ந்த ஜலந்திரனை கயிலையில் முனிவராக வந்த சிவன் யார் எனக் கேட்க சிவனுடன் போருக்கு வந்ததாக சொல்ல முனிவர் தரையில் காலால் கீறி சக்கரம் வரைந்து அதை பெயர்த்தெடுத்து தலைமேல் தாங்க சொல்ல நகைப்புடன் அவ்வாறு செய்ய சக்கரம் அவனை இருகூராக்கியது,1.திருவிற்குடி.

ஜன்மநட்சத்திர சாந்திகள்

ஜன்மநட்சத்திர சாந்திகள்
1.அப்தபூர்த்தி-ஓர் ஆண்டு நிறைந்த குழந்தைக்கு.
2.பீமாசாந்தி-55ஆண்டு நிறைவு.
3.உக்ரசாந்தி-60ஆண்டு ஆரம்பமாகும்போது.
4.ஷஷ்டிதமாப்த பூர்த்தி-60ஆண்டு நிறைந்து 61ஆண்டு ஆரம்பிக்கும்போது.
5.பீமரதசாந்தி-70ஆண்டு ஆரம்பத்தில்.
6.ரதசாந்தி-72ஆண்டு ஆரம்பமாகும்போது.
7.விஜயசாந்தி-78ஆண்டு ஆரம்பமாகும்போது.
8.கனகாபிஷேகம்/ப்ரபௌத்ரசாந்தி-தன் பிள்ளைக்கு பிள்ளைவயிற்றுபேரன்/கொள்ளுப்பேரன் பிறந்தால்.
9.சதாபிஷேகம்-81ஆண்டு முடிந்தபின்.
10.ம்ருத்யுஞ்சய சாந்தி-85ஆண்டுக்குமேல் 90ஆண்டுக்குள்.
11.பூர்ணாபிஷேகம்-100ஆண்டுக்குப்பின்.
12.பௌஷ்டிகம்-120ஆண்டுக்குப் பின்

ஜ்யோதிஷசாஸ்திரம்

ஜ்யோதிஷசாஸ்திரம்/ஸ்ரீமத்பாகவதம்-காலசக்கரம்
ஸப்தகல்ப்-மயூர், கூர்ம, பக், கௌஷிக், மத்ஸ்ய, த்விரத், வராஹ. கல்ப்காலப்பகுதி-
14மன்வந்திரம்(ஸ்வாயம்பூவா, ஸ்வரோசிஷா, உத்தமா, தமாசா, ரைவதா, சக்க்ஷுஷா, வைவஸ்தா, ஸவர்னி, தக்க்ஷஸவர்னி, பிரம்மஸவர்னி, தர்மஸ்வர்னி, ருத்ரஸ்வர்னி, ரௌச்சஸ்வர்னி, இந்திரஸ்வர்னி.)
மன்வந்தரம்-71முறை சதுர்யுகங்களின் சுழற்சி
சதுர்யுகம்-கலி,துவாபர,த்ரோதா,சத்ய
கலியுகம்-4,32,000வருடங்கள்=1,200திவ்யx360மனித வழக்கவருடங்கள்
துவாபரயுகம்-8,64,000வருடங்கள்=2,400திவ்யx360மனித வழக்கவருடங்கள்
த்ரோதயுகம்-12,96,000வருடங்கள்=3,600திவ்யx360மனித வழக்கவருடங்கள்
சத்யயுகம்-17,28,000வருடங்கள்=4,800திவ்யx360மனித வழக்க வருடங்கள்
சதுர்யுகசுழற்சி-12,000திவ்ய=12,000x360மனிதவழக்கவருடங்கள்.(43,20,000 ஆண்டுகள்)
நாம்வராஹ கல்ப்பிரிவில்-28வது சதுர்யுக சுழற்சியில் கலியுகத்தில் வசிக்கிறோம்
காலசக்கரம்=7கல்ப்x14மன்வந்திரம்x71சதுர்யுகசுழற்சிx43,20,000ஆண்டுகள்
அல்லது(கலி-1200திx360ம+துவாபர-2400திx360ம+த்ரோத-3600திx360ம+சத்ய-4800திx360ம)=3005,85,60,000ஆண்டுகள்.
பிரளயம்=14*71*4320000ஆண்டுகள்=429,40,80,000
பித்ருக்களுக்கு பகல்,இரவு கொண்ட ஒருநாள் மனிதர்களுக்கு ஒருமாதம்.
பித்ருக்களுக்கு சுக்லபட்சம்-இரவு,கிருஷ்ணபட்சம்-பகல்.
தேவர்களுக்கு பகல் இரவு கொண்ட ஒருநாள் மனிதர்களுக்கு ஒருவருடம்.
தேவர்களுக்கு உத்ராயணம்-பகல்,தட்சிணாயணம்-இரவு.
சூரியன் வடபுலத்தில் சஞ்சரிப்பது-உத்ராயணம்,
தென் புலத்தில் சஞ்சரிப்பது -தட்சிணாயணம்.
1000 திவ்ய வருஷங்கள் ஒரு தேவயுகம்.
1000 சதுர்யுகங்கள் கொண்டது பிரம்மதேவனுக்கு1பகல்,அதே அளவு 1இரவு.

ஜோதிர்லிங்கதலங்கள்

ஜோதிர்லிங்கதலங்கள்-12(த்வாதச ஜோதிர்லிங்கங்கள்)
1.சோமநாத்-சோமநாடதர்,
2.ஸ்ரீசைலம்-மல்லிகார்ஜுன்(268),
3.உஜ்ஜெய்ன்-மகாகாளேஸ்வர்,
4.ஓங்காரேஸ்வர்-அமலேஸ்வர்,
5.பரளி-வைத்தியநாத்,
6.பீமசங்கர்,
7.இராமேஸ்வரம்-இராமநாதசுவாமி(252),
8.ஆண்ந்த-நாகேஸ்வரர்,
9.வாரணாசி-விஸ்வநாத்,
10.திருயம்பகேஸ்வரர்,
11.கேதார்நாத்(271),
12.வெருள்-கிருஷ்ணேஷ்வர்.

ஸ்படிகலிங்கம்

ஸ்படிகலிங்கம்
1.சங்கரன்கோவில்,
2.திருவாலங்காடு,
3.திருவெண்காடு,
4.சிதம்பரம்,
5.உத்ரகோசமங்கை,
6.இராமேஸ்வரம்,
7.ஏகாந்தராமர்,
8.திருகாளத்தி,
9.வடசென்னை-தங்கசாலை.

ஸ்நானங்கள்

ஸ்நானங்கள்
1.சூரியஸ்நானம்.
2.அக்னைகஸ்நானம்-மழை நீரில்,
3.மலஸ்நானம்-மண்ணில்,
4.மகேந்திரஸ்நானம்-கோதூளி,
5.நீரில்,
6.மனோஸ்நானம்-மனதால்

க்ஷடாராண்ய சேத்திரங்கள்

க்ஷடாராண்ய சேத்திரங்கள்
க்ஷட்-ஆறு,ஆரண்யம்-காடு.ஆறுகாடுகள்-
ஆற்காடு சுற்றியுள்ள 6கோவில்கள் சிவராத்திரியன்று வழிபடுதல் சிறப்பு.
1.வேப்பூர்,
2.மேல்விஷாரம்,
3.புதுப்பாடி,
4.குடிமல்லூர்,
5.வன்னிவேடு,
6.காரை(3)

ஸ்ரீசக்ர/தரணி பீடம்

ஸ்ரீசக்ர/தரணி பீடம்-40முக்கோணங்கள்
உலகம்மை-தென்காசி,
காமாட்சி-காஞ்சி,
கோமதியம்மை-சங்கரன்கோவில்.
சிவகாமியம்மை-மடவார்விளாகம்,
புவனேசுவரி-புதுக்கோட்டை,
திருக்கழுக்குன்றம்,
கரூர்,

ஸ்ரீமந்நாராயணன்-5நிலை

ஸ்ரீமந்நாராயணன்-5நிலை
1.பரம்(வைகுந்தத்தில் இருக்கும்நிலை)-ஸ்ரீமத்நாரயணன், பூமிதேவி, நீளாதேவி உடன் கருடன், அநந்தர், விஷ்வக்கேஷனர் சூழ-சுத்த சத்துவமான ஞான, திவ்ய மங்கள வாசுதேவர் வடிவம்,
2.வ்யூஹம்(திருபாற்கடலில் கண்வளர்தல்)-வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், ஷங்கர்ஷணன் ஆகிய 4வடிவங்கள்-உலகத்தை படைக்க, காக்க, அழிக்க, தியானிக்க, பூஜை செய்ய,
3.விபவம்(மண்ணுலகில் அவதரித்தது)-தன்வந்திரி, ஹயக்கிரீவர், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்ம, வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர்-தருமத்தை காப்பாற்றவும்,நல்லோர்க்கு அருளவும்,தீயோரை தண்டிக்கவும் அவதாரங்கள்,
4.அந்தர்யாமி(ஒவ்வெருவர் உள்ளத்திலும் உறைவது)-பரமாத்மாவாக எல்லா ஜீவராசிகளுக்குள்ளே உறைபவராகவும், ஜீவாத்மாவாக உடலினுள் உயிர்போல் இதயத்துள் வாழ்பவராயும், ஜீவனின் குற்றங்கள், குறைகளால் பாதிக்கப்படாதவராயும் இருப்பவர்.
5.அர்ச்சை(ஆங்காங்கே கோயில்கொண்டு உறைவது)-கல், பொன், செம்பு, ஐம்பொன், மரம், சுதை போன்றவற்றால் செய்த அர்ச்சா-அடையாள மூர்த்தங்கள்.

ஸ்ரீமந்நாராயணன்-நாமங்கள்

ஸ்ரீமந்நாராயணன்-நாமங்கள்-
சீனிவாச, கேசவநந்தா, ஸ்ரீஸ்ரீவர்த்தா, வேங்கடகிருஷ்ணா, பார்த்தசாரதி, பாண்டுரங்க, விட்டலவிட்டல, ஜனார்த்தனா, ராமசந்திரனே, ஹரேராமஹ்ரேகிருஷ்ண, தீர்த்தகோவிந்த, நந்தகோபாலனே, பத்மநாபனே, கேசவநந்தனே, ஏழுமலையானே, ரூபநந்தனே, ரிஷிகேசனே.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3475753
All
3475753
Your IP: 54.83.81.52
2018-01-21 08:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...