குருஜி - வைரவாக்கியம்

வாழ்வில் சொல்லை விட்டுக் கெட்டவனையும், மண்னாசையை விடாது கெட்டவனையும், தன்னைத் தொட்டுக் கெட்டவனையும், சாபத்தால் தொடாமல் கெட்டவனையும் புரிந்து தெளிந்து பயனித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாகும்.

நிகழ்வுகள் சிந்தனைக்கு

ஓம் சிவாயநமக!

பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!

   0=0=0=0=0=0

நிகழ்வுகள் சிந்தனைக்கு

எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.

விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஜி.

ஆனந்த சந்தோஷம்!

Written by

ஆனந்த சந்தோஷம்!
பல லட்சங்கள் செலவு செய்து ஒரு பிளாட்டை வாங்குகின்றோம் அதில் எதுவும் நமக்கு செந்தமில்லை என்பதை புரிந்திருக்கின்றோமா!. சுற்றியிருக்கும் சுவர்கள் மேல் தளம் கீழ்தளம் எதையும் நாம் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற முடியாது. ஏனெனில் அது சுவருக்கு அடுத்த பக்கத்தில் நம்மைப் போன்று வீடு வாங்கி யிருப்பவருக்கும் அந்தச் சுவற்றில் உரிமை உள்ளது. அப்படியானால் நாம் கொடுத்த லட்சங்களுக்கு அந்த சுவர்களுக்கிடையே உள்ள காற்று நிரம்பிய காலி இடத்தை உபயோகித்துக் கொள்ளும் உரிமைதான் நமக்கு. இதற்குத்தான் நாம் அத்தனை லட்சம் செலவு செய்திருக்கின்றோம் என்பதை உணரவேண்டும்.
இதைப் போன்றே இப்புவியில் பிறந்த அனைவருக்கும் எந்த உறவாயிருந்தாலும் எவ்வளவு பணம் செலவு செய்திருந்தாலும் எதுவும் சொந்தமில்லை. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்காள், தங்கை, மனைவி என எதுவும் உங்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற உறவிற்கும் சொந்தமானவர்கள். உங்களின் பாசமான எந்த உறவையும், நீங்கள் அரும்பாடுபட்டு சேர்த்த சொத்தையும் நீங்கள் போகும்போது ஒரு குண்டுமணி அளவுகூட கொண்டு செல்ல முடியாது. அப்படியானால் நிரந்தரமாக இங்கிருந்து இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியுமா என்றால் அதுவுமில்லை.
உண்மையான யதார்த்தம் இப்படி இருக்க நமக்கு ஏன் கோபம் ,போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்! இவைகளை விட்டு இருக்குமிடத்தில் இருக்கும் வரை ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்க முயல்வோம். மற்ற உயிர்களை நேசித்து அவர்களும் ஆனந்தப் படும்படி ஏதாவது செய்ய முயலுங்கள். அதுவே இருக்கும்வரை நீங்கள் ஆனந்த சந்தோஷமாக இருக்க நல்வழி-

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2650106
All
2650106
Your IP: 23.20.64.16
2017-08-21 10:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...