gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நிகழ்வுகள் சிந்தனைக்கு

ஓம் சிவாயநமக!

பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!

   0=0=0=0=0=0

நிகழ்வுகள் சிந்தனைக்கு

எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.

விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 12:10

சூர்ய நமஸ்காரம்!

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!

###### 

சூர்ய நமஸ்காரம்!
(ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற)

”ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத் விதிகராய தீமஹி
தன்னோ சூர்யப் பிரசோதயாத்”

(உலகிற்கு ஒளியூட்டும் பாஸ்கரனே,
கோள்களையெல்லாம் கட்டுக்கோப்பாக
வைத்திருப்பவனே, சூரிய பகவனே,
எல்லா வளங்களும், பெற அருள்வாய்!)

#####

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 12:02

மந்திரங்கள்!

ஓம்நமசிவய!

கரியாதியெலாம் விகடர் காக்க! என்றிவ்வாறிது
தனை முக்காலுமும் ஓதிடின், நும்பால்
இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள், அறிமின்கள்,
யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர் தேகம்
பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்!
ஓம் நமசிவய! சிவயநம! சிவநம! ஓம்
#########

பிறவித் தன்மையை ஒழிக்கும்
தெய்வத் தன்மை பொருந்திய மந்திரங்கள்!

இந்தப் பகுதியில் காணப்படும் மந்திரங்கள் அரியன.
மந்- நினைப்பவரை என்றும், திர-காப்பது என்றும் பொருள்.
எனவே மந்திரம் என்பது மறை பொருளாக இருந்து அதை
நினைப்பவரைக் காப்பது எனப் பொருள் கொள்ளவேண்டும்.
குரு மந்திர தீட்சை பெற்று குரு ஆலோசனையின் பேரில்
எதற்கு ஏன் எனத் தெரிந்து கொண்டு மனனம் செய்து
உருயேற்றி நல்லன நினைத்து
உச்சாடனம் செய்தால் உரிய பலன் கிட்டும்.
மனதில் தியானிப்பதை மானஸம் என்றும்,
தான் மட்டும் கேட்கும்படியாக
மூலமந்திரத்தை ஜபிப்பது வாசிகம் என்றும்,
விக்ரஹ, யந்திர வடிவமாக பூஜிப்பது காயிகம் எனப்படும்.
ஆலோசனை பெறவிரும்பும் ஆத்மாக்கள்
குருஸ்ரீ பகோராயை தொடர்புகொண்டு
காலத்தையும் இடத்தையும் நிர்ணயம் செய்து
நேரில் தொடர்பு கொள்ளவும்.

######

தீட்சை பெற தகுதியான மாணாக்கன்/ சீடன் நிலை:
உத்தம ஜென்மம்,
வித்யையை கற்பவன்,
சாந்த சற்குணம்,
பற்றில்லாதவன்,
காம சங்கற்பம் இல்லாதவன்,
கோபத்தை வென்றவன்,
சத்திய தருமத்தை விரும்புவன்,
குரு பணியில் விருப்பம்,
மாதா பிதாக்களை உபசரிப்பவன்,
கிருகத்தில் இருப்பவன்,
நல்ல ஒழுக்கம் உடையவன்,
மனப் பக்குவம் அடைந்தவன்
ஆகிய இந்நிலைகளைக் கொண்டவனே
மந்திரங்கள் மனனம் செய்து பியோகிக்க தகுதியுடையவன்.
தகுதியில்லாமலும் குரு தீட்சை பெறாமலும்
மந்திரங்கள் பிரயோகம் பலனுக்குப் பதில் பாதகம் விளைவிக்கும்.
வீண் முயற்சி விபரீத விளைவுகளை
ஏற்படுத்தும் என்பதனை அறிக!

#####

 

ஸ்ரீ கணபதி துதி

'சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயோத் ஸர்வ விக்னோப சாந்தயே!"

(பிரகாசமான வெண்மை நிறத்தில் நான்கு கரங்களுடன் புன்முருவல் பூத்து
முழு நிலவினைப் போல் அமைதி தவழும் முகத்துடன் ஆனந்தமாய்
பிரகாசிப்பவனே அடியேனது அனைத்து முயற்சிகளும்
வெற்றியாக அருள் புரிவாய்!)

"மூசிஸ வாகன வேதக ஹஸ்த ஸாமர கர்ண விளம்பர சூத்ர
வாமண ரூப மகேஸ்வர புத்ர விக்ன விநாயகா பாதம் நமஸ்துதே!"

(மூசிகனை வாகனமாகக் கொண்டவனே வேதங்களை அறிந்தவனே,
வாமண ரூபனே, மகேஸ்வரரின் புத்திரனே, விக்னங்களைக் களையும்
விநாயகப் பெருமானே உன் பாதம் பணிந்து வணங்கினேன் அருள் புரிவாய்.)

#####

 

1.சூர்ய நமஸ்காரம்!
(ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற)

2.ஓங்கார மந்திரம்!
(பிரபஞ்ச, சிவ, பஞ்சாட்சார, சிவ, சிவகுரு, ம்ருத்யுஞ்ஜய)

3.மூலமந்திரமங்கள்!
(சூரியன், விஷ்ணு, முருகன், ஷடாட்சார, மகாலட்சுமி, துர்க்கை, துளசி,
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிஸ்வர்ணாகர்ஷண பைரவர், குபேர சிந்தாமணி, நவக்கிர)

4.காயத்திரி மந்திரங்கள்!
(விநாயகர், மகாகாயத்திரி, சிவன், பைரவர், முருகன்,
விஷ்ணு, அம்மன், சப்த மாதா, நவகிரக, இறை வாகன,
லட்சுமி குபேரர், ப்ரம்மா, மன்மதன், ஆதிசேஷன், சுதர்சனமூர்த்தி,
ஆஞ்சநேயர், நாகராஜன், ராகவேந்திரர், கார்த்த வீர்யார்ஜுனர்,
தத்தாத்ரேயர், வாஸ்து பகவான், துளசி, ஸ்ரீசாஸ்தா.)  

5.தாந்திர மந்திரங்கள்!
(மஹா கணபதி, கணபதி, உடல் கட்டுதல்,
காலனில்லை! கல்தேகம்-பிராணாயாமம் செய்ய,

சக்தி, பைரவர், சரஸ்வதி, வீரபத்ரகாளி,
சிவ அடைப்பு- திறப்பு, “மந்திர பீஜாக்ஷரங்கள்”,

நாக பாம்பு தீண்டாதிருக்க, வித்யை- தாராதேவி)

######

 

ஓம்நமசிவய!

மதி, ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ், குலம்,
வண்சரீரம், முற்றும் பதிவான தனம், தானியம், கிருகம்,
மனைவி, மைந்தர், பயில் நட்பாதிக் கதியாவும் கலந்து
சர்வாயுதர் காக்க! காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும்
விரும்பிக் காக்க! வென்றி, சீவிதம் கபிலர் காக்க!

 

அன்னாபிஷேகம்! சோறுகண்ட இடம் சொர்க்கம்!


உயிர்கள் உயிர்களுக்குப் பல தான தருமங்களைச் செய்யச் சொல்லியிருந்தாலும் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றே சாஸ்திரங்கள் பகர்கின்றன. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தார் என இலக்கியங்களும் போற்றும் உயர்ந்த நிலையில் உள்ள அந்த அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு.
சிவன் பிம்ப ரூபமாக இருக்கிறார். உயிர்கள் அனைத்தும் அவரது பிரதி பிம்ப ரூபம். உயிர்கள் உணவு உண்டு பிரதி பிம்பத்தை திருப்தி செய்கின்றது. பிம்பம் திருப்தியானால் மட்டுமே பிரதி பிம்பத்தால் இயங்க முடியும். எனவே பிம்பத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து திருப்தி படுத்த முயல்கின்றோம். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாரக இருக்கும் பருவகாலம் ஐப்பசி. அப்போது அந்த புதிய நெல்லைக் குத்தி அந்த அரிசி கொண்டு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் அதுவே வழக்கமானது.
மேலும் பஞ்ச பூதங்கள் இறைவனுள் அடக்கம் என்பதால், நீராலும், மண்ணாலும்,, ஆகாயத்தாலும் உருவான அரிசியை, நெருப்பாலும், காற்றாலும் அன்னமாக்கி இறைவனுக்கு அபிஷேகம் செய்விக்கின்றோம். அந்த பஞ்ச பூதங்களால் உருவான அன்னம் அவற்றைப் படைத்த இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றது. பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களால் உருவான அரிசி-அன்னம் எப்படி இறைவனுக்குப் போய்ச் சேருகின்றதோ அப்படியே பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்களை உள்ளடக்கிய உயிர்களும் ஒருநாள் இறைவனிடம் போய்ச் சேரவேண்டும் என்றால் அரிசி பக்குவப்பட்டு உணவாகி சேருமிடம் சேருவதுபோல் உயிர்களும் பக்குவப்பட்டு சேருமிடம் சேரவேண்டும் என்பதே அன்னபிஷேகத்தின் தத்துவம்.
அபிஷேகம் செய்த பாணலிங்கத்தின்மேல் உள்ள அன்னம் மிகுந்த வீரியம் உடையதால் அதனை நீர்வாழ் உயிரினங்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உணவாக நீர் நிலைகளில் சேர்க்க வேண்டும். ஜூவகாருண்யத்தில் அன்பே சிவம் என்ற உச்ச நிலை இதுவாகும். மற்ற பாகங்களில் உள்ள அன்னத்தை தயிருடன் சேர்த்து பிரசாதமாக வழங்க வேண்டும். செல்வம், ஆரோக்கியம், மக்கட்பேறு ஆகியவற்றை அளிக்கக்கூடிய பிரசாதம் இது.
அன்னாபிஷேகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்கமாகக் கருதப்படுவதால் அன்னாபிஷேகத்தை பார்ப்பது என்பது கோடி லிங்க தரிசனத்திற்கு நிகரானதாகும். ’சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது பழமொழி. அதாவது சோறு அன்னம் அபிஷேகத்தைக் கண்டவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பதே இதன் பொருள்.

&&&&&

ஓம்நமசிவய!

இச்சைகள் அளிப்பாய் போற்றி இன்னல்கள் ஒழிப்பாய் போற்றி
இமயவர் தலைவா போற்றி ஈசனார் மகனே போற்றி
ஈடிலாக் களிறே போற்றி ஈண்டுவார் நிழலே போற்றி
ஈசானத் திறையே போற்றி ஈறிலா முதலோய் போற்றி

ஒரே நிகழ்வுகள் எப்படி வேறுவேறு தலங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது! மன்வந்திரம் என்றால் என்ன!

கிருத, திரேதா, துவாபாரா, கலி ஆகிய நான்கு யுகங்களும் சேர்ந்து ஓரு சதுர்யுகம் (மகாயுகம்). இப்படி 18 மகாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம்(4x18)-72. 72 மன்வந்திரங்கள் இந்திரன் ஆயுள் காலம். 270 இந்திர ஆயுள் சேர்ந்த காலம் பிரமனுக்கு ஒருநாள். இப்படி 365 நாட்கள் சேர்ந்தது பிரம்மனுக்கு ஒரு வருடம். இதில் 100 வருடம் பிரம்மனின் ஆயுட் காலம். அப்படி 360 வருடங்கள் சென்றால் ஆதி பிரமனுக்கு பிரளய காலம். இந்த பிரளயம் 100 சென்றால் ஒரு விஷ்ணு கல்பம். இது போன்று பல கல்பங்கள் உண்டு. எனவே ஒவ்வொரு மகாயுகமும் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் சுழன்று வருவதால் அதே நிகழ்வுகள் ஒரு யுகத்தில் ஒரு தலத்திலும் அடுத்த யுகத்தில் வேறொரு தலத்திலும் நிகழ்ந்திருக்கும் என்பது ஆன்மீக பெரியவர்களின் கருத்து. ஒரே நிகழ்வுகள் இப்படித்தான் வேறு வேறு தலங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது! மனத் தெளிவுடன் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மேன் நிலை அடைய முயலுங்கள்-குருஸ்ரீ பகோரா

&&&&&

ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 20:23

தண்டம் சமர்ப்பித்தல்!

ஓம்நமசிவய!

ஆதியாம் தேவே போற்றி ஆகம முடியே போற்றி
இந்தொழிற் சடையாய் போற்றி இலங்குமோர் கொம்பாய் போற்றி
இருள்கடி சுடரே போற்றி இதயத்துள் இனிப்பாய் போற்றி
இடரெல்லாம் களைவாய் போற்றி இளயானை முகத்தாய் போற்றி

தண்டம் சமர்ப்பித்தல்! 

தண்டம் என்றால் கோல் அல்லது கழி எனலாம். கையில் பிடித்திருக்கின்ற கோலை விட்டு விட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். ஒன்றுக்கும் உதவாத பொருளையும் தண்டம் என்பர். ஒரு உடலில் உள்ள ஆத்மா நீங்கிவிட்டால் அது வெறும் பிண்டம். அது தண்டம். இந்த தண்டத்தை தூக்கிப் பிடித்து ஆட்டுகின்ற சக்தி இறைவன் அளித்தது ஆகும். நாம் தூக்கி நடத்துகின்றோம் என்ற அகந்தையை விட்டு விட்டதற்கு அடையாளமாக ஈசன்முன் சரீரத்தை கீழே போடவேண்டும் என்பதையே தண்டம் சமர்ப்பித்தல் ஆகும். இந்த உடம்பை பாதுகாக்கும் பொறுப்பை பூரணமாக உன்னிடம் போட்டேன் என்பதற்கு அடையாளம்தான் சரீரத்தை தரையில் போடுவதாகும். அதாவது அஷ்டாங்கமும் நிலத்தில் படுமாறு வழிபடுதல்.

&&&&&

ஓம்நமசிவய!

அரன் முதன்மகனே போற்றி ஆனைமா முகனே போற்றி
ஆதாரப் பொருளே போற்றி ஆனந்த வடிவே போற்றி
ஆருயிர்த் துணையே போற்றி ஆறணி சடையாய் போற்றி
ஆக்கமே தருவாய் போற்றி ஆரண முதலே போற்றி

சிவலிங்க வழிபாடு செய்பவர்கள் அறிய வேண்டியது!

சிவலிங்கத்தில் ஆவுடை சக்தியையும், லிங்கம் உண்மைச் சொரூபமாகிய பரவெளியையும் குறிக்கும் பரவெளி 36 தத்துவங்களையும் கடந்தது. பரவெளியில் தான் சிவன் நடராஜராக நடனம் புரிந்து ஐந்தொழில்களை இயக்கி எல்லா சராசரங்களையும் இயக்குகின்றார். இந்த பரவெளி நடராஜ நடனத்தத்துவமே சிதம்பரத்தின் இரகசிய தரிசனம். பரவெளி என்பது ஆகாயம் அது ஆனந்தம். அப்பரவெளியில் ஆடும் கூத்து ஆனந்தக்கூத்து. அனைத்துப் பொருள்களும் ஆகாயத்திலிருந்தே தோன்றி லயமாகின்றது.

லிங்கம் ஆவுடையாரை ஊடுருவி இருப்பது பரவெளியாகிய சிவம் என்ற நாதம். சக்தி அதாவது விந்துவை ஊடுருவி வியாபித்து ஒன்று மற்றொன்றை பிரியாமல் சேர்ந்திருக்கின்றது என்பதை உணர்த்தும். 
ஆவுடை  லிங்கத்தின் கீழ் அடங்கி யிருப்பது சக்தி சிவத்திற்குள் அடங்கித் தொழில் செய்வதைக் குறிக்கும். 

ஆவுடையாரின் மேல் பாகத்தில் வெளியே நீண்டிருக்கும் கோமுகி உயிர்களுக்கு செய்யும் தண்ணொளியாகிய இரக்கம் / கிருபை யைக் குறிக்கும். ஆலய வழிபாடு செய்யும் அடியார்கள் கோமுகி வழியாகப் பாயும் அபிஷேக தீர்த்தங்களில் இறைவனின் திருவருள் சுரப்பதாக மதித்து கையால் ஏந்தி தலையில் விட்டு சிவனருள் பெற்றதாக மகிழ்கின்றனர். 

ரிஷபம்-விடை-காளை மாடு என்பது சாஸ்திரங்களின்படி தர்ம தேவதையைக் குறிக்கும். சிவலிங்கத்தின் முன்பாக காணப்படும் நந்தி என்பதற்கு ஆனந்திப்பது என்று பொருள். வெண்மையான மாடாதலால் சாத்வீகத்தையும் பரம் பொருளாகிய இறைவனிடம் கொண்டு சேர்க்கும் சாத்வீக குணங்களாகிய சமம், விசாரம்/ஆலோசனை, சந்தோஷம், சாதுசங்கம்/சத்வகுணம் ஆகிய குணங்களை உணர்த்துவதாகும்.

நந்தியின் அனுமதி பெற்றுதான் சிவதரிசனம் பெற வேண்டும் என்பது மேற்கூறிய சமம், விசாரம்/ஆலோசனை, சந்தோஷம், சாதுசங்கம்/சத்வகுணம் ஆகிய நான்கு ஆத்ம குணங்களைக் கொண்டிருக்காவிடில் ஒரு ஆத்மா உடலுடையவன் கடவுளை சச்சிதானந்த அறிகுறி ரூபமாக உணர்தல் முடியாது என்ற வேதம் கூறும் இரகசியத்தைக் சொல்வதாகும்.

நந்திக்கும் லிங்கத்திற்கும் இடையே செல்லக்கூடாது என்பது ஆத்மா சச்சிதானந்த அனுபவத்திலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்ச விவகாரத்திற்குள் வரும்போது மேற்கூறிய ஆத்ம குணங்கள் வழியாக அனுபவம் சேரும்போது அந்த வழிக்கு எதிரான குணங்களைக் கொள்ளாமல் அந்த ஆத்ம குணங்களிலேயே நிற்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
சிவநேயர்கள் இந்த லிங்க தத்துவத்தை உணர்ந்து வழிபட்டால் சிறப்பான நன்மை பெறக்கூடும்.
சிவன் கோவில்களில் வரவு செலவுகள் சண்டேசுவரர் பெயரில் எழுதுவது பண்டைய வழக்கம். இது அறங்களைச் செய்யும் போது நான் செய்தேன் என்னும் தன் சிறப்பு இன்றி இறைவனது திருவருளே அறத்தைச் செய்வித்தது என எண்ணிச் செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் தத்துவம்.

சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல் வல்லான், சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கி காட்சியளிப்பார்கள். சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவவழிபாட்டின்போது சிவனுக்கு அணிவித்து பெறும் பூமாலை, பரிவட்டம் முதலிய பொருட்களை சண்டேசர் சந்நிதியில் சேர்த்து சிவதரிசனப் பலனைத் தரவேண்டும் என பிராத்தனை செய்து அங்கு விபூதி பெற்று அணிய வேண்டும் என்பதே முறை. இடையறாத தியானத்தில் இருக்கும் சண்டேசருக்கு நமது வருகையை தெரிவிக்கவே அவரது சந்நிதியில் நின்று மெள்ளத் தட்டுதல் வேண்டும். அவரது சன்னதியை முழுமையாக வலம் வராமல் வலப்புறமாக சென்று தரிசித்து வந்த வழியே அரைவட்டமாக திரும்ப வேண்டும். சிவ புண்னிய பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் கொண்டவர் சண்டேசுவரர். முதலில் விநாயகரையும் இறுதியில் சண்டேசுவரரையும் வழிபடுதல் வேண்டும் அப்போதுதான் சிவ வழிபாடு முழுமை பெறும். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்பது- விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டேசுவரர் என்பதாகும். சண்டேசர் மானிடராய் பிறந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்.

உகந்த நாட்கள்-
சிவராத்திரி, மகாசிவராத்திரி, ஆருத்ர தரிசனம், திங்கட்கிழமை, பௌர்ணமி, பிரதோஷ தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்-
தும்பை, செம்பருத்தி, முல்லை, மருது, மல்லி, வில்வம், சங்கு சிறப்பு. தாழம்பூ தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்

மகாகும்பமேளா-
பொதுவாக சூரியன் மேஷராசிக்கும், குருபகவான்-பிரஹஸ்பதி கும்பராசியிலும் பிரவேசிக்கும் போது கும்பமேளா நடைபெறும். பிரஹஸ்பதி, சூரியன் இரண்டும் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாள் மாகா கும்பமேளா நாளாகும். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் அசுரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பெருமாள் எடுத்துக்கொண்டு ஓடினார். 12நாட்கள் (நமக்கு 1நாள் ஒருவருடம்) அசுரர்கள் துரத்தினர். அப்படிச் செல்லும்போது சில துளிகள் கீழே சிந்தின. அவை விழுந்த நான்கு இடம் அலகாபாத்-பிரயாகை (திரிவேணிசங்கமம்), நாசிக் (கோதாவரி), உஜ்ஜயினி (ஷிப்ரா நதி), ஹரித்துவார் (கங்கை). அமுதம் விழுந்த நீர் நிலைகளில் அன்றைய தினம் அமுதம் பொங்குவதாக ஐதீகம். 6 வருடத்திற்கு ஒருமுறை அலஹாபத்தில் நடப்பது அர்த்த கும்பமேளா எனப்படும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பது பூர்ண கும்பமேளா. மகா கும்பமேளா என்பது 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு ஒருமுறை வருவது. இது அலகாபாத்தில் மட்டுமே நடக்கும். அன்றைய தினம் சிவன் குருவாக இருந்து பிரமனுக்கும் தேவர்களுக்கும் உபதேசம் செய்கிறார்.

மகாமகம்-
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமாத மகநட்சத்திர நாளில் குருபகவான் சிம்மராசிக்கு வருவார். அன்று புண்ணிய நதிகள் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய அனைத்தும் தங்களின் பாவங்களைப் போக்க கும்பகோணம் மகாமகக் குளத்தில் வந்து நீராடுவர். அன்று அங்கு நீராடல் சிறப்பு. 144 வருடத்திற்கு ஒரு முறை மாமாங்கமாகும்.

மாசிமகம்-
மாசிமாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் அமையும். மாசிமாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம். சிம்மராசிக்கு உரிய மகநட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது விசேடம். இறைவனை கடலில் நீராட்டுவது வழக்கம். அடியவர்களும் நீராடி புண்ணியம் சேர்த்தலாகும். அன்றுதான் அம்பிகை அவதரித்த நாளாகும்.

&&&&&

ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 20:14

வேதங்களில் சொல்லப்பட்ட தவங்கள் !

ஓம்நமசிவய!

அகரமாய் எழுந்தாய் போற்றி அறிவாக மலர்ந்தாய் போற்றி
அகிலத்தின் புகலே போற்றி அறுகினை உவப்பாய் போற்றி
அறுமுகன் அண்ணா போற்றி அமுதமே அனையாய் போற்றி
அரசடி அமர்வாய் போற்றி அன்பர்கள் அகத்தாய் போற்றி

வேதங்களில் சொல்லப்பட்ட தவங்கள் !

1.மானத தவம்- மனதில் செய்யப்பட்ட பெரும் தவம் மானத தவமாகும் தவம் செய்வதில் விருப்பம் கொண்டு சிரத்தையாகச் செய்தல், உண்மையை பேசுதல், மௌனமாக மஹேஸ்வரனை தியானித்தல், ஐம்பொறிகளை அடக்குதல் ஆகும்.
2.வாசிக தவம்- இது வாக்கால் செய்யப்படும் தவம் வாசிகம். ஐந்தெழுத்தை ஜபிப்பது, ஈசானம், பஞ்ச பிரம்ம உருத்திர மந்திரங்கள், உபநிஷதப் பகுதிகளை ஓதுதல், ஸ்தோத்திரப்பாடல்களைப் பாடுதல், தர்மங்களைச் செய்தல் ஆகியனவாகும்.
3.காயிக தவம்-இது உடலால் செய்யப்படுபவை. சிவபெருமானைப் பூஜித்தல், திருக்கோவில் வலம் வருதல், அண்ணல் முன்பு அடி தொழுதல், திருப்பதிகள் தோறும் சென்று தரிசித்தல், திருப்பணி புரிதல், உடல் வருந்த புனித நதிகளில் நீராடுதல் ஆகியவையாம்.
எல்லாவற்றிலும் சிறப்பானது காயிக தவம். சிவ தீர்த்தங்களுக்குச் சென்று நீராடுவது சிறந்தது. அதைவிட சிறந்தது கங்கையில் நீராடுவதும் மற்ற நதிகளில் நீராடுவதும் ஆகும். நதிகள் எல்லாம் கடலில் சங்கமிப்பதால் கடலில் நீராடுவது எல்லாவற்றையும்விட சிறப்பு. அப்படி கடலில் நீராடும்போது கணவனுடைய கை, மகனுடைய கை அல்லது பசுங்கன்றின் வால் என்ற ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கொண்டு நீராடுவதே சரியான முறை.

&&&&&

ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 20:11

லிங்க பூஜை பலன்கள்!

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

லிங்க பூஜை பலன்கள்!
மண்லிங்கம் -பூஜை விருப்பங்கள் நிறைவேறும்.மலர்களால் அர்சினை-சித்தி
ரத்தினலிங்கம் -பூஜை லட்சுமிகடாட்சம். 
பவழலிங்கம் -பூஜை நிலையான செல்வங்கள்.
உலோகலிங்கம்-பூஜை தர்மம் செய்தபலன்கள்.
சிவலிங்க பிரதிஷ்டை செய்தவர்கள் முக்தி
சிவலிங்க பிரதிஷ்டையைப் பார்த்து தானும் அவ்வாறு சிவலிங்க பிரதிஷ்டை செய்ய நினைத்தால் அவர்களின் பாவங்கள் அக்கணமே மறையும்.

&&&&&

ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 20:05

சிவனுக்குரிய விரதங்கள்!

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

சிவனுக்குரிய விரதங்கள்! 

1.சோமவார விரதம்- திங்கள், 
2.உமாமகேஸ்வரர் விரதம்- கார்த்திகை பவுர்ணமி, 
3.திருவாதிரை விரதம்- மார்கழி, 
4.சிவராத்திரி விரதம்- மாசி, 
5.கல்யாணவிரதம்- பங்குனி உத்திரம், 
6.பாசுபத விரதம்-தைப்பூசம், 
7.அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி, 
8.கேதார விரதம்-தீபாவளி அமாவாசை.

&&&&&

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீக் களிப்பாம்.

மீண்டும் பிறவி! ஆவுடையார் என்றால் என்ன!

ஆத்மா ஈசனுக்குச் சொந்தமானது. ஆதனால்தான் ஆ என்ற ஆத்மாவை உடையவர் என்பதால்தான் ஈசனை ஆவுடையார் என்கின்றோம். ஈசனை அடைய வேண்டுமானால் அந்த உயிர் ஆத்மா மாசு மருவற்றிருக்க தூய்மையானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஈசனை சேரமுடியாது. ஆத்மாவை ஆணவம் என்ற மலம் பீடித்தால் அது மாசு அடைந்து விடும். அந்த மலம் நீங்கும் வரை அது மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துத்தான் ஆகவேண்டும். இதுவே மீண்டும் பிறப்பதின் ரகசியம். எனவே எல்லா உயிர்களும் ஆணவம் நீங்க முயன்று பிறவி பொருங்கடல் நீந்தி கரை சேர்வீர்.
இறைவன் உயிர்களைப் படைத்து அவை உடம்பு வழியாக வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்கின்றான். உலகத்தில் உழன்று தளர்ச்சியடையும் உயிர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க உயிரை உடம்பிலிருந்து பிரித்து மீண்டும் புதியதாய் பிறக்க வைக்கின்றான். பிறவி பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்குட்பட்டது. பாவம் செய்தவர்கள் ஒன்று முதல் ஐந்தறிவு பிறவிகளாகவும், பாவம் செய்யாதவர்கள் சொர்க்கத்திற்கும், பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்கள் மானிடமாக ஆறறிவுள்ளவராகப் பிறப்பர். தேவர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் மீண்டும் மானிடராய்ப் பிறப்பர். செய்த வினைக்கு ஏற்ப வினைவட்டத்திலிருந்து தப்பிப் பிழைக்க புண்ணியங்கள் செய்திடல் வேண்டும்.
மூச்சுக் காற்றை ஒரே தடவையில் முழுமையாக உள்ளே இழுத்தால் நுரையீரல்கள் நிரம்பிவிடும். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என்று இழுப்பவர்கள் முதல் முறையில் முழுமையாக செயல்பட்டு மூச்சை உள்ளே இழுக்கவில்லை என்று அர்த்தம். உயிர்கள் மனதில் எண்ணங்களைப் பதியவைக்கும்போது எண்ணங்களின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றவாறு முழுமையாக பதிய வைக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அரை குறையாகப் பதித்துவிட்டு தோன்றும் போதெல்லாம் அதில் மாற்றங்களை செய்து கொண்டிருப்பதால் எண்ணங்களும் அது சம்பந்தப்பட்ட திட்டங்களும் முழுமையடைந்து முழு வெற்றியைத் தராது.
எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டு நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் அந்த உயிருக்கு சாதகமாக வேறேதேனும் ஒரு வழியில் திரும்பிவரும் நல்ல பயன் விளையும். மாறான எதிர்மறை எண்ணங்களான கெடுதல் கொண்டிருந்தால் அது அந்த உயிருக்கு கெடுதலான வழி வந்து கெடுதல் புரியும். கெடுதல் கொண்டு தேடினால். அதுவே கிடைக்கும் உயிர்கள் நீங்கா.நினைவு கொண்டால் அதுவாகவே ஆகிவிடும் என்று வேதங்கள் சொல்கின்றன. கர்மா என்பது பழைய நல்ல+தீவினைகள் என்றாலும் இப்பிறவியில் உயிர்களின் எண்ணங்களே கர்மா ஆகிவிடும். எனவே கர்மா புண்ணியங்கள் நிறைந்த்தாக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு தீவினைகள் குறைந்து வாழ்வில் நனமை பயக்கும்.

&&&&&

அதிர்ஷ்டம்! அநாதை ஒரே துணை! அந்த இன்னொன்று! கற்பனை பயம்! அனுபவ அறிவு! அனுபவம் பாடம் அது தீர்வல்ல அன்னாபிஷேகம்! சோறுகண்ட இடம் சொர்க்கம்! அன்பின் அனுபவம்! அன்புடன் கலந்தது! அன்பே இன்பம்! அமைதி, ஆனந்தம்! அருட்பார்வை அறம், கொடை, அன்னதானம் மீது பற்று! அலட்சியம் நஷ்டம்! அவன் செயல்! அவர் ஒரு சமுத்திரம்! அவர் சொன்னார்! இவர் சொன்னர்! ஆணவத்தின் பணிவு! ஆணவம்! ஆதாரம்! அரவணப்பு! ஆத்மார்ந்த நம்பிக்கை! ஆனந்த சந்தோஷம்! ஆனந்தமாக இருக்க வழி! ஆனந்தம்அன்புகருணை! ஆன்மாவை வளமுடன் வைத்திருங்கள்! ஆன்மீகமழை! ஆன்மீகம்! ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும்! ஆலோசனைக்கு பில்! இகழ்தல்! தன்புகழ்! தற்கொலை! இடைப்பட்ட ஞானம் பயம் இருக்கும் இடத்தைவிட்டு! இறக்கும்போதும் இறை சிந்தனை! இறைமீது குற்றம்! இறைவனை உணர்வது எப்படி! இலக்கில்லா பயணம்! இளமைஆசைபேராசை! இழந்த மகிழ்வு! அதிர்ஷ்டத்தின் மர்மம்! உண்மை சந்தேகம்! உண்மை நேரில் வந்தால்! உண்மையான குரு! உதவி செய்து தேடிய குழப்பம்! உன்னை நீ எண்ணிப்பார்! உபதேசங்களின் பயன்! உயிரே ஆற்றலை உணர்வாய்! உரிமை கொண்டாடுவதே துன்பத்திற்கு காரணம்! உருவ வழிபாடு! உலக நியதி! உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்! உழைப்பின் அருமை! எங்கே போகப்போகிறோம்! எண்ண அலைகள்! பிரதிபலிப்பு! எண்ணங்களில் உயர்வு! எதிரியின் சக்தி! எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்புகள்! எது இடைஞ்சல்! செயலில் கவனம்! எது உன்னுடையது! எது சரி! எது தவறு! எல்லாம் மோகமே! ஏமாறாதே! ஏமாளியாகாதே! ஒன்று அன்புடன் இரண்டானது! ஒரு நிகழ்வு, இரண்டு மாறுபட்ட எண்ணங்கள்! ஒரே கண்ணோட்டம்! கடந்தது கடந்ததுதான்! கடமை! கடமையானாலும் பாவங்களில் பங்கு! கடவுளால் முடியாதது ! கடவுள் இருக்குமிடம்! கடுஞ்சொற்கள்! கடைசரணாகதி! கண்பார்வையற்றவர்கள்! கற்பின் மகிமை! கலி தோஷம்! கல்லான பணம்! கள்வனின் மகன், கள்வன்! காரடையான் நோன்பு காலம்காலமாக தொடரும் வன்மம்! கீழே போடு! குரங்குப்பிடி! குருடும், குருடற்ற மணமகன்! குருவைத் தேடி! குறை காண்பது! குழப்பம்! கூலி! ஓர் தங்க காசு! ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவாய்! கொண்டு வந்ததுமில்லை கொண்டு போவதுமில்லை! கோபத்திற்கு காது! கோபம்! கோபம்ஞானம் ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது கோபம் வேண்டம்ஆறாவது அறிவு! கோவில் இருக்கும் இடம்! சனி பற்று! சரியாகச் செயல்படுத்துங்கள்! சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்! சுயநலம்! என்குழந்தை! சூரிய சந்திரன்! செடியில் காய்க்கும் பணம்! செயலில் கவனம் சிறப்பு! செல்வச்சீரழிவு! சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு! சொர்க்கமும் நரகமும் நீங்களே! சொல்லவந்தது! சொல்லவிடுங்கள்! சொல்லிவிடுங்கள்! ஞானம்பிகை சொல்லிய ஞானம்! ஞானிக்கு ஞானம்! ஞானியின் நிறைவு! தங்கத்தில் திருப்தி இல்லை! தன்னம்பிக்கை! தமிழ் வள்ளல்! தர்மத்தின் வழிநீதிமான்! தர்மத்திற்கு சாபம்! தர்மத்திற்கு நன்மை! தர்மம் கைவிடலாகாது! தானத்தின் மதிப்பு அறியாமை தானம்புகழ்பெற்றது திசை மாற்றிய ஆசை! தியானம்! திருடனுக்கு தெரிந்த மரியாதை! திருடியது மனித மாண்பை! திருப்பிப்பார்! திரும்பதிரும்ப சொல்லும் அன்பு! தீயவை கேட்கின் தீமை! துன்பத்தால் இகழக்கூடாது! துறவி! குடும்பஸ்தன்! யார் உயர்ந்தவர்! தெய்வபலம்! தெய்வ வேறுபாடு வேண்டாம் தெளிவான முடிவு இறுதியில்! தெளிவு! தேவை எது! தேவையற்றது எது! தேவை நிம்மதி! தொடர்பு ஏற்படுத்துங்கள்! நட்பு! நம்மை கவனிப்பதே பெரிய வேலை! நரியா! சிங்கமா! நல்ல முயற்சிக்குத் தெய்வம் துணை நிற்கும்! நாவின் சொற்கள்! நித்ய பிரம்மச்சாரி, நித்ய உபவாசி! நினைத்தாலே போதும்! நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்! நிம்மதி எங்கே? நிம்மதி தேடி நிராகரிப்பின்கொடுமை நிழல் மாயை! நீங்கள் ஒளியாகுங்கள்! நீதிமேல் பற்று! நீயும் ஒரு நாள் பார்க்கலாம்! நீயே பொக்கிஷம்! பகைமை வெல்ல! பட்டினிபோட்ட பாவம்! பயம் விலக்கி பக்தி நம்பிக்கை பரிகசித்தால் பாவங்களில் பங்கு! பறந்த பஞ்சு! கரைந்த பாவம்! பற்றற்ற துறவி! பழகியமனம்அநிச்சைசெயல்இயல்பு நிலை! பழங்களில்லை! விதைகள்தான் விற்பனைக்கு! பழிவாங்குதல்! பாதிப்புகளை விட்டு விடு! பாவம்! யார் கணக்கில் எழுதுவது? பாவம் போக்க இரண்டு தகடு! பிடித்தது யார்! பிடிப்புபற்றுதல்! பிரமாண்டம்! பிரிவுஅதிக அன்பு! பிறர் மகிழ்வு தன் மகிழ்ச்சி! பீஷ்மரின் விதி புண்படுத்தாத பண்பு! புதிய பாதை! பேராசை! பொறாமை! போனமுறை விழுந்த இடம்! போலி! மகான்களை மகான்களே புரிவர்! மகிழ்ச்சி, நிம்மதி! மகிழ்வுடன்வாழப்பழகுக! மன அமைதி! மனங்கோணா தர்மம்! மனதின் சுமை மனத் திருப்தி மனப்பக்குவம்! மனம் உருகி நன்றி கூறுதல்! மனம் நிறைந்த அன்பு! மனிதநேயம்! மனிதநேயம்அன்பு! மனிதனாக மாறுவாய்! மனிதாபிமானம்! மரண முயற்சி! மாறுவேடம்! மாற்றம் நிச்சயம்! அவை லீலைகள்! முதல் ஒளி முன்னேறு! கழுதையின் ஞானம்! முயற்சி! முயற்சிக்கு உரியபலன்! முயலுக்கு 3கால்! மைனாவின் நன்றி யாசித்தல்! யாரை எப்படி நம்புவது! யார் காப்பாற்றுவது! யார் தவறு! யார் நீ! விழிப்பே விடியல்! வணங்குதல் சிறப்பு! வரட்டு கவுரவம்! வழிகாட்டிய புண்ணியம்! வாழ்க்கை ரகசியம்! வாழ்விற்கான அர்த்தம்! வாழ்வில் வெற்றி! வாழ்வு முறை! வாழ்வே சொர்க்கம், அதுவே நரகம்! விசாரிக்காமல் நம்பாதே! விதி வலியது! விலகிவந்தால் புரியும்! ஆபத்து! விலங்குபோல! விழிப்புணர்வு! விவேகம்புத்திசாலித்தனம்! வெற்றி,தோல்வியா! சந்தோஷ ஆரோக்கியமா! வெற்றிக்கு பொறுமை வேண்டும்! வெற்றிவாய்ப்பு தேர்வு செய்வதில்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952066
All
26952066
Your IP: 3.234.143.63
2024-03-29 19:04

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg