gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:08

அதிதியாக!

ஓம்நமசிவய!

நாற்றிசை போற்றும் தலைவா போற்றி!
நானற்றவிடமே நிற்பாய் போற்றி!
அல்லல் களையும் அருளே போற்றி!
எல்லாம் வல்ல இறைவா போற்றி!

அதிதியாக!

சுதரிசனன் உத்தமமானவர். புண்ணிய புருஷர். மனைவி மகாபதிவிரதை. பக்தியில் சிறந்தவள். கணவன் மனைவி இருவரும் விருந்தோம்பலில் அறநிலை தவறாமல் அதிதிக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நியமத்தைக் கடைபிடித்தனர்.
அன்று தன் இல்லம் வந்த அடியவரை சுதரிசனன் வரவேற்று இல்லத்தினுள் அழைத்துச் சென்றான். அவர் மனைவி அருஞ்சுவை உணவு தயாரித்து வைத்திருந்தாள். அடியவரும் சுதரிசனும் புஷ்கரணியில் நீராடி திருநீரணிந்து ருத்திரமாலைகள் தரித்து இல்லம் வந்தனர். சுதரிசனன் அடியவரை ஆசனத்தில் அமர்த்தி பாதபூஜை செய்து தீர்த்தத்தை தங்கள் தலையில் புரோஷித்தனர். தலைவாழை இலை போட்டு அறுசுவை அமுது படைக்க அதிதி ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
அச்சமயம் சுதரிசனருக்கு அவசர வேலை ஒன்று வர, அதிதியிடம் அவசர வேலை நிமித்தமாக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் என்னை மன்னிக்க வேண்டும் எனது துணைவி தங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பாள் எனக்கூறி விடை பெற்றான். அதிதி எந்தக் குறையின்றி உணவு ஊண்டார். சுதரிசனரின் மனைவி அவருக்கு தாம்பூலம் அளித்தாள். பின்பு சுவாமி தாங்கள் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என பணிவுடன் கூறினாள். அப்போது அதிதி, பெண்ணே! உனது விருந்து உபசாரத்தால் உள்ளம் மகிழ்ந்தது. அதேபோல் உடல் சுகத்தாலும் உள்ளம் மகிழவேண்டும். அதற்கு உன் சம்மதம் வேண்டும் என்றார். இதைக் கேட்டவள் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு வந்து கணவன் அதிதியின் மனம் கோணாமல் நடந்து கொள் எனக் கூறியது நினைவுக்கு வர, பூவுலகில் வாழ்ந்த பதிவிரதா பெண்மணிகளை வரித்து சிவநாமத்தை சொல்லியபடி, சுவாமி, உங்கள் சித்தம் எதுவோ அதுவே என் பாக்யம் எனக் கூறி அடியவர் படுத்திருந்த இடத்தருகே உள்ளம் நடுங்க உணர்வுகள் பதற என்ன நடக்கப் பொகிறதோ என்ற அச்சத்துடன் நின்றாள். அப்போது வெளியே சென்றிருந்த சுதரிசனன் வீட்டினுள் வந்தான். அடியவர் சுதரிசனைப் பார்த்து கண் மலர்ந்தார். அன்பரே நீ பெரும் பாக்கியசாலி. உனக்கு பெண் இரத்தினமாக இந்த உத்தமமான பெண் பத்தினி கிடைத்திருக்கின்றாள். இவள் அளித்த அற்புதமான அறுசுவை போஜனம் என் உள்ளத்தைக் குளிரவைத்தது. அத்தோடு இவள் எனது விருப்பதிற்கு இணங்கியதால் எனது உடலும் குளிர்ந்தது. பெண்களின் திலகமான இவள் கற்புடைய பெண்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவள் என்றார்.
சுதரிசனன் இதைக்கேட்டு மனைவிபால் கோபமோ வெறுப்போ அருவருப்போ கொள்ளவில்லை. ஆனால் சுதரிசனனின் மனைவிக்கோ துக்கம் தொண்டையை அடைத்தது. நடக்காத ஒன்றை இந்த அடியவர் நடந்ததாகச் சொல்லி முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் பேசியுள்ளாரே என கலங்கினாள். சுதரிசனன் அடியவரைப் போற்றி வணங்கி சுவாமி தாங்கள் தீண்டியதால் இவள் தங்களுக்கு உடையவளாகி விட்டாள். இவளை இனி என் மனைவியாக நினைப்பதே பாவம். இனி இவள் உம்முடையவள். இவளை உம்முடன் அழைத்துச் செல்லுங்கள் என்றார். ஆனால் நங்கை நல்லாள் துடிதுடித்து துவண்டாள். நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறும் இவருடன் எப்படிச் செல்ல முடியும்! அப்போது மேலும் சோதிக்க விரும்பாமல் அடியவராக வந்த எம்பெருமான் அந்தர் தியானமானார். சுதரிசனரும் அவர் மனைவியும் அதிதியைக் காணாமல் விழித்தனர். எங்கும் பிரகாசமாய் ஜோதி பரவியது. ஈசன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பிகை சமேதராய் காட்சியளிக்க தம்பதியர் இருவரும் நிலம் கிடந்து வணங்கினர்.
#####

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:05

தாயாய் எழுந்தருளிய தயாபரன்

ஓம்நமசிவய!

கணேசனே காப்பாய் போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி
கங்கையாள் புதல்வா போற்றி கணநாதா போற்றி போற்றி
மூவுலகாளும் முதல்வா போற்றி! முக்குணங்கடந்த நாதா போற்றி!
கற்பகக் களிரே குருவே போற்றி! நாலிறு புயத்தாய் நாயகா போற்றி!

தாயாய் எழுந்தருளிய தயாபரன்!

சீராப்பள்ளி என்ற தலத்தில் பத்மாவதி என்ற பெண் தன் கணவனோடு வாழ்ந்து வந்தாள். சிவபெருமானிடம் பக்தியுடன் இருந்தவள் மகப்பேறு அடைந்தாள். குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியதால் வேதனை மிகக் கொண்டாள். இதுகாறும் துணையாயிருந்த தாய் அக்கரையில் இருக்கும் ஊருக்கு சென்றிருந்தாள். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மாலை சீராப்பள்ளி வரவேண்டியவள் இரவு அந்த ஊரிலேயே தங்க வேண்டியதாயிற்று. பத்மாவதி தாயின் துனையின்றி பிரசவவேதனையுடன் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தாள். தம்பால் பத்மாவதி கொண்ட பக்திக்காக சிவபெருமான் அவர் தாயின் உருக்கொண்டு அன்று இரவு அருகிலிருந்து குழந்தைப் பிறப்பில் உதவினார். மறுநாள் காலை வெள்ளம் வடிந்தவுடன் தன் மகள் எப்படியிருக்கின்றாளே என்ற கவலையில் தாய் ஒடோடி வந்தாள். இதுவரை தாயாக இருந்த சிவபெருமான் மறைந்தார். தாய் வந்து விசாரனை செய்ததும் இதுகாறும் அங்கிருந்தது தான் வணங்கும் ஈசனே தாயாய் எழுந்தருளி தயாபரன் என்பதை பத்மாவதி அறிந்தாள்.

#####

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் போற்றி!
ஏங்கா துயிர்க்கருள் இயற்கை போற்றி!
எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய் போற்றி!
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் போற்றி!
அருவே உருவே அருவுருவே போற்றி!
பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி! போற்றி!

புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவ வடிவங்கள்(10)

1.கஜாரி-ஆணை உரி போர்த்த அண்ணல்

தாருகாவனத்து முனிவர்கள், அவர்களின் பத்தினியர்களின் அகந்தையை அழிக்க சிவபெருமான் பிச்சை உகுக்கும் பெம்மானாகவும், திருமால் மோகினியாகவும் வடிவங்கள் கொண்டு தாருகாவனம் வந்தனர். ஆடையற்றுப் பிச்சை உகுக்கும் கோலம் கொண்டவரின் அழகில் முனிபத்தினியர் மயங்கியதால் அவர்களின் கற்பு நெறி கெட்டது. மோகினியின் அழகில் மயங்கியதால் முனிவர்களின் ஒழுக்கமும், தவமும் கெட்டன. இதற்கு காரணமான பிச்சை உகுக்கும் பொம்மான் மீது கோபம் கொண்டு அபிசார வேள்வி செய்து அதிலிருந்து தோன்றிய பல்வேறு பொருட்களை அவர்மீது ஏவினர்.
அவை எல்லாம் அவருக்கு ஆடையாகவும், அணிகலனாகவும், படைகளாகவும் மாறியதைக் கண்ட முனிவர்கள் பயந்து ஒரு மதயானையை வேள்வித் தீயிலிருந்து வரவழைத்து ஏவினர். சிவபெருமான் அனிமா சக்தியால் சிற்றுருவமாய் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கலக்க யானை வலிதாங்காமல் அலறியது. பெருமான் யானை வயிற்றுக்குள் இருந்த காலம் உலகம் இருண்டது. ஐயனைக் காணாமல் அம்பிகை அஞ்ச பெருமான் யானை வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவந்தார். யானையின் தோலை உரித்து தன் உடம்பின்மேல் போர்த்தி வீர நடனம் செய்தார். முருகன் தந்தையை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்ட முனிவர்கள் அறிவு மயக்கம் தெளிந்து பெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.
எட்டு திருக்கரங்களில் வலது கைகள் பாசத்தையும், யானையின் தோலையும், திரிசூலம், வாள் ஆகியவற்றுடனும் இடக்கைகள் மண்டையோடு, கேடயம், மணி, யானையின் தோலையையும் பற்றியிருக்க, இடது திருவடி யானைத் தலையை உறுதியாக மிதித்துக் கொண்டும் மற்றொரு காலை தொடைக்குமேல் உயர்த்தி வளைந்து கஜசம்ஹார நடனமாடியபடி இருப்பர். அனைத்து அணிகலன்களுடன் கருஞ்சிவப்பு வண்ணத்துடன் காட்சி. அருகில் குமரனுடன் பெருமானின் உக்கிரம் கண்டு நடுங்கிய நிலையில் அம்பிகை. காட்சி: வழுவூர், திருச்செங்காட்டங்குடி, விருத்தாசலம், திருத்துறைப் பூண்டி, பேரூர், காஞ்சி, தஞ்சை கோவில்களில்.

2.கஜமுக அனுக்கிரக மூர்த்தி-விநாயகருக்கு அருளியது.

உமையுடன் சிவபெருமான் பொழில்கள் நிறைந்த பகுதியில் உலாச் சென்றபோது ஆண்யானையும் பெண்யானையும் இனைந்து இருக்கும் சித்திரத்தைக் கண்டு அதிலேயே லயித்திருக்க அப்போது ஓங்கார வடிவினராகிய ஆனைமுகன் தோன்றி பணிந்து வணங்கினார். அப்போது பெருமான், மகனே கணங்களுகெல்லாம் தலைமையேற்று கணபதி என்று போற்றப்படுவாயாக, எல்லோரும் உன்னைப் போற்றிய பின் எந்தச் செயலையும் தொடங்குவர். உன்னை வழிபடுவோரின் துன்பங்களைக் களைந்து அருள் புரிவாய். மேலும் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் அளிக்கும் கஜமுகாசூரனை கொன்று அவர்களின் துயர் துடைப்பாய் என அருளினார்.
மாகதர் என்ற முனிவருக்கும் விபுதை என்பவருக்கும் பிறந்தவன் அசுரன் கஜமுகாசூரன். சிவபெருமானை தியானித்து தவமிருந்து தேவர்களை வெல்லும் ஆற்றல் பெற்றான். நவ நிதிகள், பஞ்சதருக்கள் ஆகிவற்றை தனக்கு பணிவிடைகள் செய்யப் பணித்தான். தேவர்கள் தன்னை தினமும் வணங்க வேண்டுமென ஆணையிட்டான். வணங்கும்போது மூன்று முறை தலையில் குட்டிக்கொண்டு தோப்புக் கரணம் போட வலியுறுத்தினான்.
இந்திரன் முதலான தேவர்களின் துன்பத்தை போக்க படையுடன் கணபதி புறப்பட்டார். கஜமுகாசூரனும் எதிர்த்துப் போரிட்டான். இறுதியில் கணேசர் தனது கொம்பில் ஒன்றை ஒடித்து ஆயுதமாக்கி கஜமுகாசூரன்மேல் வீச அது அவன் மார்பை பிளந்து கடலில் நீராடி கணபதியிடம் வந்து சேர்ந்தது. தந்தத்தால் தாக்கப்பட்ட கஜமுகாசூரன் பெரிய பெருச்சாளியாக மாறி ஓடிவந்தான். கணபதி அதைப் பிடித்து அதன்மேல் ஏறி அமர அதன் ஆணவம் அடங்கி மெய்யறிவு தோன்றியது. கஜமுகன் வீழ்ந்த இடத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார் கணபதி. அந்த இடமே கணபதீச்சரம் எனப்படும். கஜமுகாசூரனின் இரத்தம் அப்பகுதியை செங்காடாக மாற்றியதால் அந்தப் பகுதி செங்காட்டாங்குடி என்றானது.
மூன்று கண்கள், நான்கு திருக்கரங்கள், சடாமுடியுடன், தமது முன் வலக்கையை மடியில் அமர்ந்திருக்கும் விநாயகரின் தலைமேலும், இடக்கை வரத முத்திரையுடன், ஏனைய கைகள், மான், மழு தாங்கியிருக்க இடப்புறம் உமை சர்வ அலங்காரத்துடன் வலக்கையில் நீலோத்பல மலர், இடக்கரத்தில் வரத முத்திரையுடன் அமர்ந்த கோலம். விநாயகப் பெருமான் கிரீடம் தாங்கி இருகரம் குவித்து அஞ்சலி முத்திரை காண்பித்து அமர்ந்திருக்க அவரின் பின்னிரு கைகளில் பாசம், அங்குசம் இருக்கும்.
கஜமுகாசூரனை வணங்கும்போது தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டபடியே தங்களை வணங்கும்போதும் அவ்வாறு செய்ய அனுமதிக்க தேவர்கள் விரும்பிக் கேட்க கணபதி அருள். அனைவரும் கயிலை சென்றனர். கணேசரை மடிமீது அமர்த்தி இவன் விக்னஹந்தன்- விக்னங்களைப் போக்குபவன். என பெருமான் கணேசருக்கு அருளிய கோலமே கஜமுக அனுக்கிரஹ மூர்த்தி / விக்னப் பிரசாத மூர்த்தி வடிவம். காட்சி: மதுரை, காஞ்சி.

3.இராவணனுக்கு அருளிய வடிவம்- இராவண அனுக்கிரக மூர்த்தி

பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் தென்னிலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லவல்ல தேரினை உடையவன். ஒரு முறை கயிலை மலை வழியாக தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதியாமல் மலையைப் பெயர்க்க கருதி மலையை அசைக்க உமை அஞ்சினாள். இதை உணர்ந்த பெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர், நீண்ட ஆயுள், வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார்.
தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. காட்சி: திருவிடைமருதூர் உட்பிரகாரத்தில், தஞ்சை பெரிய கோவில் கருவறையின் சுவரில்

4.ஹரிவிரிஞ்சதாரணர்

பேருழிக்காலத்தில் எல்லோரைப்போல் தாங்களும் அழிவோம் என்று கருதிக் கலங்கிய பிரம்மனையும், திருமாலையும் தம் தோளின் மீதேற்றிக் காத்தருளிய வடிவம் ஹரிவிரிஞ்சதாரணர்

5.ஏகாதச ருத்திரர்

பிரமதேவனுக்கு படைப்புத் தொழிலில் உதவுவதற்காக சிவன் படைத்து உதவிய பதினோரு உருத்திரர்கள் ஏகாதசருத்திரர் எனப்படுவர். காட்சி: காஞ்சி கைலாசநாதர் கோவில்.

6.முயலகவத மூர்த்தி

அசுரன் முயலகனின் ஆணவத்தை அடக்கித் தம் காலடியில் அவனைக் கொண்ட தாண்டவ வடிவம் முயலக மூர்த்தி.

7.சர்வ சம்ஹாரர்

ஊழிக்காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் தம் திருவடிக்கீழ் இருத்திப் பின்னர் அவரவர் வினைகளுக்கேற்ப மீளவும் உயிர்ப்பிக்கும் சிவ வடிவம் சர்வ சம்ஹாரர்.

8.யக்ஞேசுவரர்

வேள்விகளின் தலைவராய் வீற்றிருந்து வேள்வியின் பலன்களை உரியவர்களுக்கு அருளும் வடிவம் யக்ஞேசுவரர்.

9.உக்கிரர்

இறைவன் உயிர்களுக்கு அருளும் கருணை அறக்கருணை, மறக்கருணை என இரண்டு வகைப்படும். தீமைகள் உலகில் பரவிப் பெருகாமல் அவற்றை அழித்து உயிர்களைக் காப்பாற்றி அருள்பவர் உக்கிரர்.

10.அந்தகாசூரனை அழித்த அம்மான்

உமை விளையாட்டாக சிவபெருமானின் மூன்று கண்களையும் பொத்தியதால், உலகம் இருண்டது. அது ஒரு கணம் என்றாலும் உலகிற்கு ஒரு ஊழிக்காலமானது. அந்த காலத்தில் ஓர் அசுரன் உருவானான். இருளில் பிறந்து கரிய நிறம் உடையவனாக இருந்ததால் அவன் அந்தகன் என்று அழைக்கப்பட்டான். சிவனிடம் தான் பெற்ற வரங்களினால் அகந்தை கொண்டு அமரர்களைத் துன்புறத்த அவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவகணங்களுக்கு ஆணையிட்டு அந்தகனை அழிக்கச் சொன்னார். சிவகணங்களால் அந்தகனை அழிக்க முடியவில்லையாதலால் பெருமானே போர் தொடுத்தார். தரையில் வீழ்ந்த அந்தகன் குருதியிலிருந்து ஆயிரக்கணக்கான அந்தகர்கள் தோன்றி யுத்தம் புரிந்தனர். அவ்வாறு தோன்றியவர்களைத் தம் சக்ரப்படையால் திருமால் கொன்றார்.
அந்தகன் உடம்பிலிருந்து விழும் குருதியினை தடுத்து நிறுத்த பெருமான் யோகேசுவரியை உண்டாக்க அவருள் சப்தமாதர் (பிராமி, மகேசுவரி, வைணவி, வராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி) என்ற ஏழு சக்திகளும் உறைந்து அந்தகனின் இரத்தம் பூமியில் விழாமல் அழித்தது. சூல நுனியால் குத்தப்பட்டு துன்பமுற்ற அந்தகன் தன் பிழை பொறுக்க வேண்டியதால் அவனுக்கு சிவஞானத்தை அளித்து சிவகணத்தின் தலைவனாக்கினார்.
நான்கு கைகளில் பின்னிரு கைகளில் மானும், மழுவும் இருக்க முன்னிரு கைகளில் அசுரனைக் கொல்ல சூலம் ஏந்த உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும். சடாமகுடம் தாங்கி திரிபங்க நிலையில் நிற்க காலடியில் அந்தகாசுரன்
அஞ்ஞானமாகிய இருள் அகன்றாலன்றி ஞானமாகிய ஒளியைக் காண இயலாது. இறைவனை, உலக இருளை அகற்றி ஒளிபரப்பும் ஞாயிறுவுடன் ஒப்பிடுவர். இருளில் தோன்றிய அந்தகனை அஞ்ஞானமாகவும் அவனை, இறைவன் வென்றதை, அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியை பரப்பியதாக புரிய வேண்டும் என்பதே தத்துவம். நிகழ்வு நடந்த தலம்: திருக்கோவிலூர். காட்சி: காஞ்சி-முக்தேசுவரர் கோவில், தஞ்சை புள்ளமங்கை பசுபதி கோவில்.

#####

செவ்வாய்க்கிழமை, 19 September 2017 19:31

உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்!

உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்!

வீடு கட்டும் நிறுவனத்தில் அவர் மேஸ்திரியாகப் பணியாற்றி வந்தார். குறித்த நேரத்தில் சென்று குறித்த காலத்தில் வேளைகளைச் சீராக செய்து நல்ல பெயர் எடுத்திருந்தார். ஒருநாள் தனக்கு வயது ஆகிவிட்டது என்று நினைத்தார். இனிமேல் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் எனநினைத்து அதை தன் முதலாளியிடம் சொன்னார். ஒரு நல்ல திறமையான நேர்மையானவர் பணியிலிருந்து நிற்பது என்பது முதலாளிக்கு வருத்தத்தைக் கொடுத்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டவர் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு இன்னும் கொஞ்ச நாள் .அந்த ஒரு கட்டுமானத்தை முடித்துவிட்டு நீங்கள் தாராளமாக ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்றார். ஒப்புக்கொண்ட மேஸ்திரி எப்போதும் போல தன் பணியைத் தொடர்ந்தார்.
அந்த புதிய விட்டின் கட்டுமானத்தை செய்யும்போது இந்த கட்டிடத்துடன் தான் வேலையை விட்டு நிற்கப்போகின்றோம் என்ற எண்ணம் அவருள் தோன்றியதால் அவரால் தன் முழுக்கவனத்தை கட்டிடத்தின் மேல் முன்புபோல் செலுத்த முடியவில்லை. சின்ன சின்ன குறைகளுடன் கட்டிடப் பணி பூர்த்தியானது.
கட்டிடம் முடிந்ததும் முதலாளியிடம் சென்று தான் அடுத்த நாள் முதல் நின்று கொள்வதாகக் கூறியபோது, நீங்கள் இதுவரை விசுவாசமாக என்னிடம் வேலை பார்த்ததிற்கு பலனாக நீங்கள் கடைசியாக கட்டின வீட்ட உங்கள் பெயருக்கே பதிவு செய்துவிட்டேன். இந்தாருங்கள் என்று பத்திரம் மற்றும் சாவியை முதலாளி கொடுத்தார். சிறிது இன்ப அதிர்ச்சி அடைந்த மேஸ்திரி, இந்த வீடு எனக்கு என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். வேலை விட்டு நிற்கப் போகின்றேன் என்று ஏனாதானோவென்று கட்டி விட்டேனே என்று மனதில் நினைத்து வருந்தினார். .
தன் வேலையில் உளம் ஒன்றி செய்ததற்காகக் கிடைத்த பலனில் அவர் உளம் ஒன்றாமல் செய்ததே பரிசானது. பல உயிர்கள் இந்த நிலையைத்தான் மேற்கொள்கின்றன. நம் வாழ்க்கையை நாமே வடிவமைக்க கடவுள் பல சந்தர்ப்பங்களை சுற்றுச் சூழல்களை ஏற்படுத்திக் கொடுத்த போதும் அதை புரிந்து கொள்ளாமல் அலட்சியத்துடன் நம் வாழ்க்கையை.நாமே சரியாக கட்டமைப்பதில்லை. ஏனோ தானோ என்று இருந்துவிட்டு பின்னாளில் இப்படி ஆகுமென்று தெரியாமல் போய்விட்டதே என்று புலம்புவது வேடிக்கையானது.
எந்தச் செயலாக இருந்தாலும் அதில் மனம் ஒன்றி நல்ல நினைவுகளுடன் திறம்பட செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்து செயலாக்கம் கொண்டால், நல்லதை செய்தோம், நல்லது நடந்துள்ளது என்று மனம் நிறைவுகொள்ளும் அளவிற்கு நற்காரியங்கள் நடைபெறும். எதையும் மனம் ஒன்றி செயலாற்றுங்கள்-குருஸ்ரீ பகோரா.

செவ்வாய்க்கிழமை, 19 September 2017 19:28

நீயும் ஒரு நாள் பார்க்கலாம்!

நீயும் ஒரு நாள் பார்க்கலாம்!

சந்நியாசி ஒருவர் புனித தலங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். அப்படிச் சென்ற போது ஒரு பழம் பெரும் கோவிலில் அவரைப் பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் வணக்கம் சாமி. தாங்கள் இந்த ஊருக்கு புதிது போலத்தெரிகின்றதே என்று பேச்சை ஆரம்பித்தார். பலத் தலங்களுக்கு பல வருடங்களாக யாத்திரை செல்லும் நீங்கள் கடவுளை பார்தது உண்டா என்றார். இல்லை என்று சொல்ல பின் எதற்காக இவ்வாறு மீண்டும் தொடர்ந்து பயணம் மேற்கொள்கின்றீர்கள் என்றார். அப்போது அங்கு ஒரு ஆட்டு மந்தையை ஒருவன் ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.
சந்நியாசி சொன்னார், அந்த ஆட்டு மந்தையை காவல் காப்பதற்கு மனிதனுடன் ஒரு நாயை வளர்ப்பர். திருடனையோ மற்ற மிருகங்களையோ கண்டதும் அந்த நாய் குரைக்கும். உடன் காவல் காப்போன் எழுந்திருக்க நரியோ/ திருடனோ மறைந்தோ அல்லது ஒடிப் போவது இயற்கை. பொதுவாக காவல் காப்போன் எதையும் காணும் முன்னே நாய் கண்டு சப்தமிடுவதைக் கொண்டுதான் காவல்காரனல் ஆட்டு மந்தைக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. ஒரு நாய் குரைத்தால் மற்ற நாய்களும் சேர்ந்து குரைக்கும். அது ஏன் குரைத்தது என்று மற்ற நாய்க்கு தெரியாது. முதலில் குறைத்த நாய்க்கு மட்டும்தான் அது ஏன் குரைத்தது என்று தெரியும்.
அதைபோல இறைவனை நால்வர்கள், அறுபத்தி மூவர்கள் போன்ற இறை அனுபூதி பெற்றவர்கள் கண்டு இருக்கின்றார்கள். அவர்கள் சொன்னதை நம்பி அவர்தம் வழி சென்று இறுதியில் இறைவனை ஒருநாள் காணலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நீயும் நம்பிக்கை கொண்டு பயணித்தால் ஒருநாள் இறையைக் காணலாம் என்றார்.-குருஸ்ரீ பகோரா

ஓம்நமசிவய!

ஏகதந்தர் பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்கு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!


சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்!

 

சிவபெருமானைக் காண கயிலை வந்த பிரம்மன் வழியிலிருந்த முருகனைக் கண்டும் காணததுபோல் செல்ல அந்த ஆணவப் போக்கினை போக்க முருகன் பிரம்மனை தன்னிடம் அழைத்தார். அருகில் வந்ததும் நீ யார்! நீ செய்யும் தொழில் யாது! எனக்கேட்க நான் பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்கின்றேன் என்றான் பிரம்மன். நீ எவ்வாறு படைப்புத் தொழிலைச் செய்கின்றாய்! வேதங்கள் எல்லாம் தெரியுமா! என்றதற்கு பிரம்மன் வேதாகமங்களில் சிறிதறிவேன் என்றான். அப்படியெனில் ரிக் வேதம் ஓதுக! என்றார் முருகன். ஓம் என்று தொடங்கி வேதத்தை ஓதத் தொடங்கினான். அப்போது முருகன் நீ ஓதிய ஓம் என்பதற்கு என்ன பொருள் என மடக்கிக் கேட்க பிரமன் விழித்தான். வேதத்தின் முதல் சொல்லுக்கே பொருள் தெரியாத நீ எப்படி படைத்தல் தொழிலைச் செய்வாய் எனச் சினந்து பிரமனை சிறையில் அடைத்தார் முருகன்.
பிரமனை சிறையில் அடைத்ததால் படைப்புத் தொழில் பாதிக்காமல் இருக்க முருகனே படைப்புத் தொழிலை செய்தார். இதை அறிந்த திருமால் பிரம்மனை சிறையிலிருந்து விடுவிக்க தேவர் முனிவர்களுடன் கயிலை சென்று சிவபெருமானை வணங்கி, மகாதேவா தங்களின் புதல்வன் முருகன் பிரணவப் பொருளைக் பிரம்மனிடம் வினவி அவர் கூறாமையால் அவரைச் சிறையிலிட்டுள்ளார். தாங்கள் அருள் கூர்ந்து பிரம்மனை விடுவிக்க வேண்டும் என முறையிட்டார்.
சிவபெருமான் நந்தியெம்பெருமானை நோக்கி எமது கட்டளையைக் கூறி பிரம்மனை விடுவித்துவா என்றார். ஆறுமுகன் வேதாவை விடுவதற்கில்லை. இங்கிருந்தால் உன்னையும் சிறையிலிடுவேன் என்றார். இதைக் கேட்ட சிவன் சிரித்து அனைவரும் புடைசூழ முருகன் இருக்குமிடம் வந்து பிரம்மனை சிறை விடுவிக்கச் சொன்னார். ஆணைப்படி பிரம்மன் விடுவிக்கப்பட்டார். அப்போது பிரவணத்திற்குப் பொருள் தெரியாததால் பிரம்மனை நீ சிறையிலிட்டாய் . உனக்கு அதன் பொருள் தெரியுமா என்றார் சிவன்.
அதற்கு முருகப் பெருமான் எனக்குத் தெரியும். கேட்கும் முறைப்படி கேட்டால் அதனைக் கூறவும் தயாராய் உள்ளேன் என்றார். கந்த பெருமானை மேலிடத்தில் அமர்த்தி தான் கீழிருந்து சீடன் பாவனையில் இருக்க முருகப் பெருமான் குருபோல இருந்து ஓம் என்ற பிரணவத்தின் பொருளைக் கூறி சிவகுருநாதன் எனும் பெயரினைப் பெற்றார்.
சிவனைக் கானவந்த பிரமனை ஓம் எனும் பிரணவத்தின் பொருள்கேட்டு உறைக்கவில்லை என்று சிறையிலடைத்த பின் அவரை விடுவிக்க வந்த சிவனுக்கு குருவாக இருந்து ஓம் என்ற பிரணவத்தின் பொருளைக் கூற சிஷ்ய பாவனையில் இருந்து சிவன் கேட்ட வடிவம் சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்!

#####

ஓம்நமசிவய!

விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ்வு தீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!


இரத்தபிக்ஷாப் பிரதான மூர்த்தி!

 

சிவபெருமானை இகழ்ந்த பிரமனது நடுத்தலையைக் நகநுனியால் கிள்ளி எடுத்தார் பைரவர். பிரம்மனைப் போல மற்றவர்களும் ஆணவம் கொள்ளக்கூடாது என்பதால் அனைவரிடமும் இரத்தம் ஏற்கும்படிச் சிவபெருமான் ஆணையிட்டார். அதன்படி இறைவனால் அனுக்கிரகிக்கப்பட்ட காலவேகன், கனன்முகன், சோமகன், ஆலகாலன், அதிபலன் ஆகிய கணத்தலைவர்களுடன் சிறந்த தவசிகள் வசிக்கும் வனங்களை அடைந்து தன் சூலப்படையால் அவர்களைக் குத்தி இரத்தத்தைக் காபாலத்தில் ஏற்றார். அவ்வாறு இரத்தம் கொடுத்தோரில் உயிர் துறந்தோரை உடனே எழுப்பி அவர்களது அகந்தையை அழித்து அருள் புரிந்தார்.
உலகம் முழுவதும் சுற்றி பின் மாயவன் இருக்கும் வைகுந்தம் வந்தார். திருமாலின் சாயலிலே தண்டு, கோதண்டம், சங்கு, சக்கரம், கொண்டு இருக்கும் திருமாலின் முதற் காவலன் விஷ்வக்சேனன் பைரவரின் பெருமையை அறியாமல் தடுக்க பைரவர் அவனைச் சூலத்தில் குத்தி தன் தோள்மீது சாய்த்தார். பூமகள், நிலமகள் இருபுறமிருக்க ஆதிசேஷன் பாம்புப் படுக்கையில் இருந்த திருமால் முன் சென்றார் பைரவர். படுக்கையிலிருந்து எழுந்து பைரவரை வணங்கிய திருமால் எம்பெருமான் இங்கு எழுந்தருளியிருப்பது யாது காரணம் எனக் கேட்க பலிக்கு வந்தோம் உமது இரத்தத்தை உடனே தருக எனச் சொல்ல திருமால் தானே முன்வந்து தமது நெற்றியில் உள்ள நரம்பை பிளந்து பெருகிய இரத்தை கபாலத்தில் சொரியும்படி விட்டார்.
இரத்தம் அதிகமாக வெளியேறியதால் திருமால் மயக்கமானார். திருமகளும் நிலமகளும் கலங்கி பைரவரை வணங்கினர். பைரவர் திருமாலை மயக்கத்திலிருந்து எழுப்பினார். திருமால் கேட்டுக் கொண்டதன் பேரில் விஷ்வக்சேனனை தன் சூலத்திலிருந்து விடுவித்தார். பின் தேவர்கள், முனிவர்கள் அகந்தை களைந்து அண்டங்கள் தோறும் சென்றார்.
சர்வ சங்கார காலமாகிய யுகங்கள் தோறும் வேதமே நாயாக அதன் மீது உலாவருவார். ஆணவம்தான் நம்முடைய எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும். ஆணவம் காரணமாகவே நாம் மற்றவர்களை அவமதிக்கின்ரோம். தெய்வத்தை நிந்தை செய்கின்றோம். சகோதர மக்களுக்குத் தீமைகள் செய்கின்றோம். அதனால்தான் கர்ம வினை எனும் சங்கிலியால் கட்டப்படுகின்றோம். இதனை நீக்கவே சிவபெருமான் பைரவர் வடிவம் கொண்டு எல்ல இடங்களிலும் இரத்தப் பலி கொண்டார் என்பதாகும்.
தேவர்களின் அகந்தையை அழிக்க இரத்தப் பிச்சை எற்கத் தோன்றிய வடிவம் இரத்த பிட்சாப் பிரதான மூர்த்தி. நிகழ்வு நிகழ்ந்த தலம்: காசி.

#####

சனிக்கிழமை, 09 September 2017 10:21

பிரார்த்தனா மூர்த்தி!

ஓம்நமசிவய!

கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென் திசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!


பிரார்த்தனா மூர்த்தி!



தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவஞானிகள், தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத் தரும் என்றும் அவரின் பத்தினியர் தாமே கற்பில் சிறந்தவர்கள், தங்களின் கற்பின் ஆற்றலால் எதையும் சாதிக்க முடியும் என்று அகந்தை கொண்டிருந்தனர். இவர்களின் ஆணவத்தை அழிக்க எண்ணிய பெருமான் பிச்சை உகக்கும் பெம்மனாகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் மோகினியைக் கண்டதும் காமம் மேலிட, ஒழுக்கத்தையும் தவத்தையும் விடுத்து மோகினியிடம் சல்லாப வார்த்தைகளைப் பேசி மயங்கினர்.
ஒரு ஆடவன் அழகாக இருக்கின்றான் என ஒரு பெண் நினைத்தாலே அப்பெண் தன் கற்பினை இழந்ததற்குச் சமம் என்ற சூழலில் ஆடையின்றி பேரெழில் கொண்ட திருமேனியுடன் வந்த பெருமானின் அழகில் மயங்கி தத்தம் இல்லங்கள் விட்டு அவர் பின்னே சென்றனர். ஊர் எல்லையைக் கடந்ததும் அங்கே தன் கணவர்கள் மோகினியின் அழகில் மயங்கி இருப்பதைக் கண்டனர்.
தங்களது தவமும் யாகமும் ஒழுக்கமும் தமது மனைவியரின் கற்பு நெறியும் கெடக் காரணமாய் இருந்த திகம்பரன் மீது கோபங்கொண்டு அவனை அழிக்க அபிசார வேள்வி செய்து அதில் தோன்றிய நெருப்பு, புலி, மான், மழு, பாம்பு ஆகியவற்றையும் முயலகனையும் திகம்பரன்மீது ஏவபாம்புகள் அணிகலன்களாயின. புலியின் தோல் ஆடையானது. முயலகனை கால் கீழ் அழுத்தி நடனம் புரிந்தார். முனிவர்களுக்கு ஞானம் அளித்து கயிலை அடைந்தார்.
உமாதேவி தாம் சக்தியாய் இருக்கையில் இறைவன் மாலாகிய மோகினியை உடன் அழைத்துச் சென்றும், தான் உடன் இல்லாத சமயத்தில் தாருகாவனத்தில் நடனம் செய்தது கண்டும் ஊடல் கொண்டார். அதைப் போக்க நினைத்த பெருமான், உமையே எனது ஒரு சக்தியே நீயாகவும், திருமாலாகவும், காளியாகவும், துர்கையாகவும் இருக்கின்றது என்பதை நீ அறிவாய். மனைவியாக இருக்கும்போது நீயாகவும், ஆணுருவாகையில் திருமாலாகவும், கோபம் அடையும்போது காளியாகவும், போர் முனையில் துர்க்கையாகவும் விளங்குகின்றீர்கள். இதற்காக கோபமும் ஊடலும் கொள்ள வேண்டாம் என்றார். உமையின் ஊடலைத் தணித்த வடிவம். பிரார்த்தனா மூர்த்தி,
உடனே உமை அத்திருநடனத்தை தரிசிக்க விரும்பினார். அப்போது சிவன் ஆடிய தாண்டவமே கௌரி தாண்டவம் எனப்படும்.
உமையின் ஊடலைத் தணித்த வடிவம். தன்னை விடுத்து மோகினி உருகொண்ட கண்ணனுடன் தருகாவனம் சென்றது கண்டு ஊடல் கொண்ட சக்தியை துதித்து போற்றிய வடிவம், உண்மையை உணர்ந்து இறைவி இறைவனை பிரார்த்தனை செய்த வடிவம் இரண்டும் கலந்த வடிவம் பிரார்த்தனா மூர்த்தி.

#####

சனிக்கிழமை, 09 September 2017 10:18

வராக சம்ஹாரமூர்த்தி!

ஓம்நமசிவய!

இருபதம் ஏக தந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபுரகர் காக்க!
கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!


வராக சம்ஹாரமூர்த்தி!

 

இரனியாக்கன் என்ற அசுரன் நான்முகனை நோக்கித் தவம் செய்து பல வலிமை மிக்க வரங்களை வேண்டி பெற்றதனால் ஆணவம் கொண்டு உலகத்தை பாய்போல் சுருட்டிக் கடலில் மறைத்தான். தேவர்கள் திருமாலிடம் முறையிட அவர் வராக வடிவமெடுத்து கடலினுள் புகுந்தார். வராக வடிவம் மலயைவிட இரட்டிப்பு உயரத்துடன் அதன் கால்களுக்கு இடைப்பட்ட தூரம் 1000காத தூரம் கொண்டு அது விடும் மூச்சுக் காற்று உலகை உலுக்குவதாகவும் வடவாமுகாக்கினி போன்ற பார்வையுடன் இருந்தது. வடவாமுகாக்கினி என்பது கடலினுள் இருக்கும் பெரிய நெருப்புப் பகுதி. கடலின் நீர் அதிகமாகாமலும் குறையாமலும் இருக்கச் செய்வது இந்த நெருப்புதான் என்கின்றது நமது புராணங்கள்.
வராகம் கடலைக் கலக்கி இரணியனைக் கண்டு அவனை கொம்பினால் குத்தி அவனிடமிருந்த பாய்போல சுருண்டிருந்த உலகை தன் கொம்பினால் கொண்டுவந்து ஆயிரம் தலையுடைய ஆதிசேஷன் தலைமீது விரித்தார்.
இந்த வெற்றியினால் வராகம் அகந்தைக் கொண்டது. மலைகளை இடித்து கடலைக் கலக்கி உயிர்களுக்குத் துன்பம் தர தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். பெருமான் வேடுவனாக வடிவமெடுத்து தமது கரத்தில் உள்ள முத்தலை வேலினால் வராகத்தின் நெற்றியில் குத்தி நிலத்தில் அழுத்தினார். அதன் கொம்புகளில் ஒன்றைப் பறித்தார். அதனால் வராகத்தின் அகந்தை அகன்றது. தேவர்களின் வேண்டுதலின் பேரில் அக்கொம்பை தன் உடலில் அணிகலனாக அணிந்தார். அகந்தை அகன்ற திருமால் சிவனைத் துதித்து வைகுந்தம் சென்றார்.
இரணியாக்கன் தன் வலிமையால் பூமியை பாய்போல்ச் சுருட்டி கடலினுள் ஒளித்து வைக்க திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை அழித்து பூமியை மீட்டும் ஆவேசம் தனியாமல் இருக்க வேடுவனாக வராகத்தை அடக்கிய வடிவம் வராக சம்ஹார மூர்த்தி.

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 20:20

மச்ச சம்ஹாரமூர்த்தி!

ஓம்நமசிவய!

தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!


மச்ச சம்ஹாரமூர்த்தி!

 

சோமுகாசுரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரம் பெற்றதனால் அகந்தைக் கொண்டு பிரம்மன் முன் தோன்ற, அசுரனைக் கண்ட பிரம்மன் அஞ்சி நிற்க உன் வலிமை இவ்வளவுதானா எனக்கேட்டு அவர் கையிலிருந்த நான்மறைகள் நான்கினையும் பறித்துக்கொண்டு கடலிற் சென்று மறைந்தான்.
என்ன செய்வது என அறியாமல் பிரமன், திருமாலிடம் முறையிட, கோபங்கொண்ட திருமால் மீன் வடிவமெடுத்து கடலினுள் புகுந்து சோமுகாசுரனைக் கண்டு அவனுடன் சண்டையிட்டு அவனுடைய ரத்தத்தைக் குடித்து நான் மறைகளையும் மீட்டார். பிரம்மனிடம் அவைகளை ஒப்படைத்தார். ஆனால் அதன் பின்னரும் ஆவேசம் அடங்காமல் ஏழு கடலையும் ஒன்றுகூட்டி கலக்கினார். இதனால் உலக உயிர்கள் துன்பமடைந்தன. தேவர்கள் இதனை சிவபெருமானிடம் கூற மீன்பிடி வலைஞராக உருவெடுத்து ஏழு கடலையும் மறைக்கத் தக்கவாறு வலை வீச அந்த மீன் அகப்பட்டது. அதன் விழிகளைப் பறித்து அதன் வலிமையைக் குன்றச் செய்தார். தேவர்கள் விருப்பப்படி அந்த மீனின் கண்களை திருமேணியில் கையில் மோதிரமாக அணிந்தார். கண்ணிழந்த மீன் வடிவம் பெற்ற திருமால் தன் உணர்வு அடைந்து வைகுந்தம் சேர்ந்தார்.
பிரம்மனிடமிருந்து நான்மறைகள் நான்கையும் கவர்ந்த சோமுகாசுரனை அழிக்க மச்ச அவதாரம் கொண்ட திருமால் அசுரனை அழித்த பின்னும் ஆவேசம் அடங்காமல் இருக்க மீன்பிடிக்கும் வலைஞராக உருவெடுத்து மச்சத்தைப் பிடித்து அதன் வலிமைதனைக் குன்றச் செய்த வடிவம் மச்சாரி/ மச்ச சம்ஹார மூர்த்தி.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27037042
All
27037042
Your IP: 3.145.64.132
2024-04-19 01:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg