குருஜி - வைரவாக்கியம்

அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன் படுத்தாமல் பேராசையால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற பிரார்த்தனைகள் மேற்கொளவது சரியன்று. பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் மற்றவர்களை பாதிக்காத நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.

குருஜி

வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:23

மகான்கள்

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

$$$$$

மகான்கள்

பூ உலகின் மானிடராய் பிறந்து உயிர்கள் மேல் நிலையடைய பந்தங்கள் துறந்து பணியாற்றிய மகான்கள் பற்றிய தொகுப்பு.

1. ஆதிசங்கரர்
2. தாயுமானவர்
3. துளசிதாசர்
4. மண்டனமிச்ரர்

&&&&&

வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:10

மண்டனமிச்ரர்

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

$$$$$

மண்டனமிச்ரர்

தேவலோகத்தில் துர்வாசர் வேதம் சொல்லியபோது உச்சரிப்பில் சிறிது தடுமாறினார். கோபம் கொண்டால் சபித்து விடுவாரென அஞ்சி அனைவரும் அமைதியாயிருக்க கலைவாணி மட்டும் சிரித்துவிட்டாள். பிரம்மாவும் அமைதியாக இருந்தார். சீற்றமடைந்த துர்வாசர் மானிடராய் பிறந்து இருவரும் சிலகாலம் வாழவேண்டும் எனச்சாபமிட்டார்.
ஒருவரின் அறியாமையை எள்ளி நகையாடியது தவறு என வருந்தினாள் சரஸ்வதி. கனிவுடன் சொல்லி சரி செய்வதற்குப் பதிலாக தவறு செய்துவிட்டோமே என்று நினைத்து துர்வாசரிடம் பணிவுடன் சாப விமோசனம் வேண்டினாள். சிவன் ஆதிசங்கராக அவதரிக்கும்போது அவர் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். துர்வாசரால் சாபம் பெற்ற பிரம்மாவும் சரஸ்வதியும் மண்டனமிச்ரர், சரஸவாணியாக மாகிஷ்மதி நகரில் பிறந்திருந்தனர். மண்டனமிச்ரரைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரது மீமாம்ச தத்துவத்தை வென்று அத்வைதத்தை ஸ்தாபிக்க சங்கரர் அங்கு வந்தார்.
மண்டனமிச்ரர் வீடு பூட்டியிருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி உபதேசித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க நிமிர்ந்து நிற்கும் பொருட்கள் வளையும் என்ற முறையில் மண்டனமிச்ரர் வீட்டின் தென்னை வளைய அதை பிடித்துக் கொள்ள அம்மரங்கள் மீண்டும் உள்ளே வளைய இல்லத்தின் உள்ளே இறங்கினார் சங்கரர். வியப்புடன் சங்கரைப் பார்த்த மண்டனமிச்ரர் அன்னப்பிச்சை வேண்டுமா எனக்கேட்டதற்கு வாத பிட்சை என்றார். வாதபிட்சை ஆரம்பித்தது. சரஸவாணியின் ஆலோசனைப்படி இருவர் கழுத்திலும் மலர்மாலை சூட்டப்பட்டது. தோல்வியடைந்து விடுவோமோ என்ற நினைப்பில் வந்த உஷ்ணமூச்சால் மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்தமாலை வாடத் துவங்கியது.. சரஸ்வாணி திகைப்படைந்தாள். முழுதும் வாடினால் தோற்றவராவர். எனவே குறுக்கிட்டு இல்லற தர்மப்படி எங்கள் இருவரையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாகும் எனக்கூறி கணவரை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தாள். போட்டிதொடர்ந்தது. 15 நாட்கள் முடிவில்லாமல் போட்டி தொடர சங்கரர் ஞானக்கண்ணால் தன் முன்னே அமர்ந்திருப்பது சரஸ்வதி என்பதை அறிந்தார். நெற்றியில் வியர்வை படர்ந்தது. போட்டியில் சங்கரர் வென்றால் தன் கணவர் துறவறம் ஏற்கவேண்டும் என்பதால் துறவியிடம் கேட்ககூடாத இல்லற இன்பம் என்றால் என்ன என்று கேட்டாள்.
திகைத்த சங்கரர் ஞானதிருஷ்டியால் பதில் சொல்லமுடியும். ஆனால் மக்களுக்கு அவரது துறவு நிலையில் சந்தேகம் வரும். பதில் சொல்லவிடில் வாதத்தில் தோற்றதாக ஆகும். ஒரு மாதம் தவணை தருகிறேன் அதற்குள் பதிலைத் தெரிந்து கொண்டுவாருங்கள் என்றாள் சரஸவாணி. சங்கரரும் அவரது சீடர்களும் கானகம் சென்றனர்.
அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து தன் உடல் தூய்மைக்கு பாதிப்பு இல்லாமல் சரஸவாணியின் கேள்விக்கு விடை அறிந்து கூற மண்டனமிச்ரர் நிபந்தனைபடி துறவியாகி சங்கரர் பின் சென்றார். கண்ணீர்மல்க கணவருக்கு விடைகொடுத்தாள் சரஸவாணி.

$$$$$

வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:08

துளசிதாசர்

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே

$$$$$

துளசிதாசர்

தத்துவஞானி ஆத்மாராமின் குழந்தை ராம்போலாவிற்கு பிறந்தபோதே 32 பற்கள் இருந்தன. பிறந்ததிலிருந்து அழவே இல்லை. திடிரென்று ராம் ராம் எனச் சொன்னது அக்குழந்தை. அதனால்தான் ராம்போலா எனப்பெயரிட்டனர். வலிபவயதை எட்டியவுடன் தாசி வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தான். அவனைத்திருத்த ரத்னாவளி என்றபெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப்பின் மனைவியை ஒருகணமும் பிரியாமாலிருந்தான். அவன் தந்தை பாதுஷாவிடம் சொல்லி ஏற்பாடு செய்த வேலைக்கு யார் சொல்லியும் செல்லாமல் மனைவியுடனே இருந்தான். பக்தனாகப் பார்க்க விரும்பிய மகன் மனைவி பக்தானாக மாறிவிட்டானே என மனம் வருந்திய ஆத்மாராம் தவம் செய்ய கானகம் சென்றார். அப்போது பாதுஷா கட்டாயம் அவனைக் கூட்டி வர ஆள் அனுப்பியதால் பாதுஷாவை பார்க்கச் சென்றான் ராம்போலா. அதுசமயம் ரத்னாவளியின் மாமியார் அவளை கொஞ்சநாள் அவளின் தந்தை வீட்டில் இரு, ராம்போலா ஒழுங்காக வேலைக்கு சென்றுவரட்டும் என்றாள்.
ரத்னாவளியின் பெற்றோர் விபரம் அறிந்தனர். ரத்னாவளி அம்மாவிடம் நான் மேலே சென்று ஒய்வு எடுக்கின்றேன். அவர் வந்தால் நான் இல்லை எனச்சொல்லி கட்டாயம் திருப்பி அனுப்பிவிடு என்றாள். வெளியில் காற்றுடன் கனத்த மழைபெய்து கொண்டிருந்தது. திடிரென்றுகதவு தட்டும் சப்தம் கேட்டது. யாரும் கதவு திறக்கவில்லை. அதுநின்றதும் மாடியில் ஜன்னல் தட்டப்பட்டது. எரிச்சலுடன் யார் எனக்கேட்டுத் திறக்க ஜன்னல் வழி ராம்போலா உள்ளே வந்தான். மனைவியைப் பிரிந்து அவனால் இருக்க முடியவில்லை. ரத்னாவளி துயருற்றார். குழந்தைபோல் அடம்பிடிக்கும் ராம்போலா நல்லவர். ஆனால் பெண்பித்து பிடித்து அலைவது கஷ்டமாயிருந்தது.
எப்படி மாடிக்கு வந்தீர்கள் என்ற ரத்னாவளிக்கு ஒரு கயிறை கட்டியிருந்தது. அதை பிடித்து வந்தேன் என்பதை நம்ப முடியால் விளக்கு ஒளியால் அதை பார்க்க இருவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது அதுஒரு மலைப்பாம்பு.. நல்லவேளை தன்னுடைய தாலி பாக்யத்தால் தப்பித்திருக்கின்றான் என நினைத்தாள். அதுசரி ஆற்றை எப்படி தாண்டி வந்தீர்கள் இந்நள்ளிரவில் என்றாள். ராம்போலா படகு ஏதுமில்லை. ஒரு கட்டை மிதந்தது. அதைபிடித்துக்கொண்டு வந்தேன் என்றாள்.அங்கு சென்று பார்த்தபோது அது ஆற்றில் மிதந்து வந்த ஒரு பிணமாக இருக்கக் கண்டு மிகவும் வேதனைகொண்டு தன் கணவனை மனம் போனபோக்கில் கடும் வார்தைகளால் திட்டினாள். என்றாவது இறக்கும் இந்த உடல்மீது இவ்வளவு ஆசை கொண்ட நீங்கள் இதில் ஒரு பகுதியாவதை ராமர்மேல் வைக்கக்கூடாதா எனக்கூறி அழுத அழுகை ராம்போலாவின் மனதை என்னவோ செய்தது. ரத்னாவளியின் கால்களில் வீழ்ந்து நீயே என்குரு. என்ஞானக்கண்ணை திறந்தாய் எனக்கூறி விடுவிடு என்று நடந்தான்.
கணவன் திருந்தவேண்டும் என நினைத்த ரத்னாவளி அவன் தன்னை விட்டு நிரந்தரமாய் போய்விடுவான் என நினைக்கவில்லை. அன்று சென்றவன் காசியில் ராமப்பித்து பிடித்து துறவியாய் அலைவதை தெரிவித்தார்கள். அவன் தந்தை மிகமகிழ்ந்து ராம ஸ்மரணையில் இருந்த அவனை கட்டித் தழுவிய அடுத்த கணம் அவரின் ஆவி பிரிந்தது. கணவனின் இறுதிக் கடன்களை நிறைவேற்றிய பின் அவன் தாய் கங்கையில் குதித்து மறைந்தாள். நிறையச் சொத்து வந்தது ரத்னாவளிக்கு. அதைக் கொண்டு காசியில் ஓர் மடம் நிறுவி அன்னம் பரிபாலித்து வந்தாள். துறவிகளுடன் வரும் கணவனுக்கும் அன்னம் பரிமாறி கண்களைத் துடைத்துக் கொள்வாள். கொஞ்ச காலத்தில் அவளும் காலமானாள்.
ரத்னாவளியை குருவாகக்கொண்டு துறவியான ராம்போலா, கவிஞராக மாறி ராமசரிதமானஸ் காப்பியம் எழுதியதையோ துளசிதாசர் என்ற மகானாய் போற்றப்பட்டதையோ அவள் அறிய வாய்ப்பில்லாமல் கடைசி காலத்தில் கணவனுக்கு அன்னமிட்ட திருப்தியுடன் விண்ணில் மறைந்துவிட்டாள்..

$$$$$

வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:05

தாயுமானவர்

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்

$$$$$

தாயுமானவர்

வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டில் கேடியப்ப பிள்ளையின் இராண்டாவது மகனாகப் பிறந்தார். மிகவும் பேரழகு கொண்ட இவர் கவிதை இயற்றும் ஆற்றலுடன் பக்தியில் நாட்டமும் கொண்டிருந்தார். திருச்சியை ஆண்ட நாயக்க மன்னன் கேடியப்ப பிள்ளையின் மறைவிற்குப்பின் அவர் மகனை அதே பெருங்கணக்கர் பணியில் அமர்த்தினார். சில காலத்தில் மன்னர் இறக்க அரசி பொறுப்பேற்றுக் கொண்டார். ஓர் நாள் மாலை அரசி அவரிடம் வந்து தாயுமானவரிடம் தன் உள்ளக்கிடங்கை எடுத்துறைத்தாள். என்ன சொல்லியும் அரசியை சமாதானப்படுத்த முடியவில்லை. தான் அழகாக இருப்பதால் வந்த தீவினை என நினைத்து அங்கிருந்து நல்லூர் சென்று தவமிருந்தார். விபரம் அறிந்த அரசி மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் அவரின் தவ நிலைக்கு இடையூறு செய்து வசியம் செய்ய முனைந்தாள். தாயுமானவர் அந்த மந்திரவாதியின் மனதை தம்பால் திருப்பி அரசிக்கு அறிவுரை சொல்ல வைத்தார்.
தாயுமானவரின் உறவினர்கள் வந்தனர். திருமணம் புரிய வற்புறுத்தினர். தவறான உறவிற்கு இந்த தர்மமான உறவு எவ்வளவோ மேல் என்று நினைத்தார் தாயுமானவர். தாய் அவர் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள். திருமணம் முடிந்து ஓர் ஆண்டில் ஓர் ஆண்மகன் பிறந்ததும் மனைவி இறந்தாள். மகனை கனகசபாபதி என நாமமிட்டு வளர்த்தார். அவரின் தாயும் இறைவனடி சேர்ந்தாள். சில நாட்கள் சென்றன. தன் மகனை வரவழைத்து தனக்கு துறவில் நாட்டம் என்றும் எந்த உறவும் நிலையானதில்லை, இனி நீ உன் வழி நட என அமைதிப்படுத்தினார். அப்போது அவரின் வீட்டிற்கு, முன்பு ஒரு சமயம் தாயுமானவர் துறவு வேண்டி நின்றபோது, நீ திருமணம் வேண்டாமென்றாலும் உனக்குத் திருமணம் நடைபெறும். உனக்கு ஒரு மகன் பிறப்பான் .அதன் பின்னரே உனக்கு துறவு எனக்கூறிய மௌனகுரு வந்தார். அவரின் பின்னே தாயுமானவர் அமைதியாகச் சென்றார் தன் துறவுப் பணியினை தொடர…

$$$$$

புதன்கிழமை, 14 March 2018 19:58

ஸ்ரீ சாஸ்தா காயத்திரீ

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

&&&&&

ஸ்ரீ சாஸ்தா காயத்திரீ
(பயங்கள் நீங்க)

”ஓம் பூதநாதாய வித்மஹே
பச நந்தநாய தீமஹி
தன்னோ சாஸ்தா பிரசோதயாத்”

(ஐம்பூதம் அடக்கும் ஐயனே சரணம்.
ஐயமில்லா வாழ்வருளும் சாஸ்தாவே
சரணம், உய்ய நலம் தருவாய் ஐயப்பனே சரணம்.)

$$$$$

வெள்ளிக்கிழமை, 09 March 2018 10:22

சபை

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
&&&&&

ஓம் சிவபர தத்துவத்தை சொல்லாமல் சொல்லும் அற்புத ஆலயம்
மூலிகை வனநாதர் ஆலயம்
&&&&&

யுகங்கள்-யுகதர்மங்கள்

கிருதயுகம்- மக்கள் ஈசன் திருவடியை எப்பொழுதும் போற்றித் துதி செய்த வண்ணம் இருப்பர். தருமதேவதைக்கு நான்கு கால்கள். அனைவரின் வாழ்நாளும் ஒரே மாதிரியாக இருக்கும். பேதங்களின்ரி மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
திரேதாயுகம்- சிரந்த யாகங்கள் புரிவர். தரும் தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார். மழை நன்கு பொழிந்து மரம் செடி கொடிகள் நன்கு வளரும். காய் கனிகள் குறைவின்றி கிடைக்கும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் என்ரு ஆசைப்பட்டு மக்கள் கோபமுடன் சண்டையிடுவர். இளம் பெண்கள் இன்பமுடன் வாழ்வர்.
துவாபரயுகம்- மக்கள் கோபம், போட்டி, சண்டை, சச்சரவு என்றிருப்பர். தரும தேவதை இருகால்களை இழந்து இரண்டு கால்களில் நிற்கும். மக்கள் பாப புண்ணியங்கள் தெரியாமலும் தரும நெறியை அறிவதிலும் குழம்பித் தவிப்பர். வியாசர் தோன்றி வேதங்களை நான்காக பகுப்பார். புராணங்களை இயற்றுவார்.
கலியுகம்- மெய்ஞானம் விளங்கி மக்கள் தானம் புரிவர். தரும தேவதை ஒரு காலுடன் நிற்கும். அதர்மம் தலை தூக்கி இருக்கும். பொய், சூது, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியன தழைத்தோங்கும். வணிகர்கள், அந்தணர்கள், ஆளுநர்கள் பலவகை இன்னல்களுக்கு ஆளாகுவர். ஒழுக்கம் தவறி நடப்பர். வேதம் வேள்வியின்றி போகவாழ்வு வாழ முயற்சிப்பர்.

கோவில்கள் இயற்கை எழிலும், ரம்யமான சூழலும் கொண்டிருக்க வேண்டும். ஏரிகள், குளங்கள், கிணறுகள், பூக்கள், மரங்கள், அன்னப்பட்சிகளின் இனிமையான சத்தங்கள், இசையொலிகள் போன்ற அருமையான சூழலில் கோயில் கொண்டிருக்கத்தான் தெய்வங்கள் விரும்பும். குளங்கள் வெட்டுவது மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் சேர்த்த புண்ணியம். கோவில் கட்டும் பணியானது யாகங்கள் நடத்துவது போன்ற புண்ணியங்களைத் தரும். எனவே அப்படிபட்ட ஓர் அற்புதமான கோவிலை இறையருள் முழுமையாக நிறைந்த வண்ணமாக மூலிகை வனநாதர் ஆலயம் அமைக்க விரும்பும் எண்ணத்தை அடியேனுக்கு இறைவன் அருளியுள்ளான்.

யுகதர்மங்கள் எப்படி யிருந்தாலும் மக்கள் மெய்ஞானத்தில் நாட்டம் கொண்டு தங்களின் பிறவியை நன்னிலைப் படுத்த ஆன்மீக வழியில் பயனிக்க ஆன்மீக முறைகளை தெரிந்துகொள்ள உதவியாய் அமையட்டும் இந்த மூலிகை வனநாதர் ஆலயம்- ஒவ்வொரு தெய்வத்திற்கும் சபை ஏற்படுத்தி அதில் அவர்கள் மக்கள் நல் வாழ்விற்காக எடுத்த உருவங்கள், அதன் சிறப்புக்கள், பயன்கள் ஆகியவற்றை முடிந்தவரையில் அடியேன் தேடித் தெளிந்து தெரிவித்துள்ளேன். இந்த எண்ணங்களுக்குச் சொந்தக்காரார் அடியேனில்லை. என்னுள்ளே இருக்கும் பரம்பொருளே. அவன் அருளால் அனைத்து உயிர்களும் இந்த ஆன்மீக தெளிவுகளைத் தெரிந்து ஆனந்தம் அடைய வேண்டும் என்பதே அடியேன் விருப்பம் பண்டைய மன்னர்கள் மக்களின் நாகரீகம் வாழ்முறைகளுக்கு உதவிகரமாய் இருக்கவே ஆலயங்களை கட்டுவித்தனர். அந்த முறையில் வருங்கால சந்த்தியினர் புரிந்து கொள்ளும் விதமாக நம் கலாச்சார பண்பாடுகள் உணர்த்தப்பட வேண்டும். அதற்கான முதல் தொடர் முயற்சி இது. அன்புடன் -குருஜி.

சபைகள்!

1. விநாயகர் சபை
2. லட்சுமி சபை
3. திருவடிகள் சபா
4. பராசக்தி-(பரமேஸ்வரன்) சபை
5. பைரவ சபை
6. ஞான பண்டிதன் சபை
7. சூரிய சபா
8. நடராஜர் சபை
9. பத்ரகாளி சபை
10. நாரயணர் அவதார சபா
11. குபேரன் சபை- 12 ராசிக்குரியவர்.
12. சண்டிகேஸ்வரர்
13. பிரம்மன்
14. பூமாதேவி
15. தத்தாத்ரேயர்
16. ஐயப்பன்
17. சிவன்

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 15:20

ரேவதி

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

 

ரேவதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

நட்சத்திரத்தின் அதிதேவதை சனி
வழிபடவேண்டிய பைரவர் தலம் சம்ஹாரபைரவர்-தாத்தையங்கார்பேட்டை
வழிபடவேண்டிய தெய்வம் கைலாசநாதர்-கருணாகரவல்லி.காருகுடி,துறையூரருகில், தாத்தாயங்கார்பேட்டை-2,
பலன்கள் ஜலரோக நிவாரண மூலிகை- நீர் சம்பந்தமான நோய் நீங்க வழிபாடு
நட்சத்திரத்திற்குரிய மரம் வேலம்
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- குரோதன பைரவ பக்த
வழிபட வேண்டிய சித்தர்கள் ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 15:17

உத்திரட்டாதி

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

 

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

நட்சத்திரத்தின் அதிதேவதை காமதேனு
வழிபடவேண்டிய பைரவர் தலம் வெண்கலஓசைபைரவர்-சேங்கனூர்
வழிபடவேண்டிய தெய்வம் சகஸ்ரலஷ்மீஸ்வரர். தீயத்தூர்,ஆவுடையார்கோவில்-திருப்புனவாசல்சாலை
பலன்கள் ஆயுட்காலத்தில் மகாலட்சுமிகடாட்சம் வழிபாடு.
நட்சத்திரத்திற்குரிய மரம் வில்வம்
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- ருருரு பைரவ சேவக
வழிபட வேண்டிய சித்தர்கள் உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் , மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் –குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 15:03

பூரட்டாதி

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

நட்சத்திரத்தின் அதிதேவதை குபேரன்
வழிபடவேண்டிய பைரவர் தலம் அஷ்டபுஜபைரவர்-கொக்கராயன்பேட்டை,தஞ்சை
வழிபடவேண்டிய தெய்வம் திருஆனேஸ்வரர்-காமாட்சி. ரங்கநாதபுரம். திருக்காட்டுப்பள்ளி அருகில்
பலன்கள் ஆயுட்காலத்தில் நல்வாழ்க்கை வழிபாடு.
நட்சத்திரத்திற்குரிய மரம் மருதம்
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- கோரரூப
வழிபட வேண்டிய சித்தர்கள் பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி.– திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் –திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம், ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் –பந்தனம்திட்டா. 
பூரட்டாதி 4 (மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 14:59

சதயம்

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

சதயம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

நட்சத்திரத்தின் அதிதேவதை எமன்
வழிபடவேண்டிய பைரவர் தலம் சர்ப்பபைரவர்-சங்கரன்கோவில்
வழிபடவேண்டிய தெய்வம் அக்னீஸ்வரர்-கருந்தார்குழலி. திருப்புகலூர்,நன்னிலம்-நாகைசாலை.
பலன்கள் வாகீச சக்தி பெற திங்கள் ஹஸ்தம், அவிட்டம், சதயம் நட்சத்திரநாள் வழிபாடு
நட்சத்திரத்திற்குரிய மரம் விலா
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- பேருண்ட
வழிபட வேண்டிய சித்தர்கள் சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

$$$$$

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

பொருளடக்கம்

4596355
All
4596355
Your IP: 172.68.65.202
2018-03-22 01:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...