குருஜி - வைரவாக்கியம்

மீண்டும் மீண்டும் ஆசை கொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் எல்லாம் நிறைவேறவேண்டும் என நினைப்பது, 'கடல் நீரைப் பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்ள நினைப்பது போலாகும்'.

குருஜி

வியாழக்கிழமை, 11 January 2018 11:19

இறைவனை உணர்வது எப்படி!

இறைவனை உணர்வது எப்படி!

கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பவர். உன்னுள்ளேயும் இருக்கின்றார் என்று தான் சொன்னதை புரிந்து கொள்ள இயலாத சீடனுக்கு விளக்கங்கள் எதைச் சொல்லியும் புரியவைக்க முடியவில்லை ஆதலால் தன் ஞானக் குருவிடம் அந்த சீடனை அனுப்பி வைத்தார் குரு. குருவின் குருவிடம் சென்ற சீடன் கடவுளைப் பற்றிய சந்தேகங்களை அறிந்து கொள்ள என்னை என் குருநாதர் அனுப்பிவைத்தார் என்றான்.
குருவின் குரு அவனிடம் தண்ணீரில் இருக்கும் மீனுக்கு பல நாட்களாக தாகம் தீரவில்லை ஏன் என்பதுபற்றி உனக்குத் தெரியுமா என்றார்.
மீன் தன்னைச் சுற்றி இருக்கும் நீரைக் குடிக்க வேண்டியதுதானே என்றான். சீடன்.
குருவின் குரு சொன்னார். உன்னை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றார். ஏன் உன்னுள்ளேயும் இருக்கின்றார். தண்ணீரிலே உள்ள மீனுக்கு தன்னைச் சுற்றி நீர் இருப்பது தெரியாததுபோல உன்னைச் சுற்றியிருக்கும் இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை உன்னால். கடவுளை உணர நீ முயற்சிக்க வேண்டும். உலக ஆசைகளைத் திசை திருப்பி கடவுளின்மேல் செலுத்து. உலக விஷயங்கள்மேல் இருக்கும் எண்ணத்தை இறைவன்மேல் திருப்பு நீ கடவுளை உணர்வாய் என்று கூறி ஆசி புரிந்தார்.

######

திங்கட்கிழமை, 08 January 2018 04:13

இறைமீது குற்றம்!

இறைமீது குற்றம்!

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை பூர்வ ஜென்ம பலனால் பார்த்து களித்த ஓர் உயிர் உடல் இறைவனிடம் ஓர் சந்தேகத்தை கேட்டது. உலக படைப்பில் ஏழை. பணக்காரன் இல்லை என்று சொல்லிவிட்டு உன்னை தரிசிப்பதற்கு கட்டணத்தை வைத்திருப்பது நியாமா என்றான்!
புன்னகைத்த இறைவன், தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்லியும் உலக உயிர்கள் அதன் படி நடப்பது இல்லை. மேலும் அவர்களை பாதுகாக்காமல் தனி இடத்தில் விட்டு விடுகின்றீர்கள். தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்றேன். அதையும் நம்பவில்லை. உலக உயிர்களை நேசித்து பசியாற்றுங்கள் என்றேன். உற்றாருக்குகூட உதவ மறுக்கின்றீகள் அன்பே சிவம் என்றேன். அன்பையே மறந்து விட்டீர்கள். என்னை தரிசிப்பதற்கு கட்டணத்தை ஏற்படுத்திய நீங்கள் உங்கள் தவறை மறைக்க எல்லாவற்றிற்கும் கர்ம பலன் என்று சொல்லி என்னை குறை சொல்வதை பழக்கமாக்கிக் கொண்டீர்கள் என்றார்.
உணர்வு பெற்று இறையை வணங்கினான் காட்சி கண்டவன். மற்ற உயிர்கள்மேல் குற்றம் குறை காண்பதைவிட்டு எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசம்காட்டி மூத்தோர்களை மதித்து எழியோருக்கு உதவி செய்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வழிபடுதல் சிறப்பு என்பதை புரிந்து செயல் பட உறுதி கொண்டான்.

######

வியாழக்கிழமை, 21 December 2017 16:11

அவர் சொன்னார்! இவர் சொன்னர்!

அவர் சொன்னார்! இவர் சொன்னர்!

சிற்பி ஒருவர் தன் சீடனிடம் களி மண்னால் ஆன சிலை ஒன்றைச் செய்து வரச் சொன்னார். சிலை செய்வதற்கான களிமண்ணைத் தேடி இறுதியில் ஒரு தோட்டத்தில் கண்டு பிடித்தான். அந்த விவசயிடம் சிலை செய்ய களிமண் வேண்டுமென்று கேட்க விவசாயி சிலையை என் தோட்டத்திலேயே நீ செய்வதானால் நான் தர சம்மதிக்கின்றேன் என்றான். குருவின் அனுமதி வாங்கி அந்த தோட்டத்திலேயே சிலை செய்ய முயற்சித்தான்.
களிமண்ணை எடுத்து நன்கு பிசைய ஆரம்பித்தான். அதைப் பர்த்துக் கொண்டிருந்த விவசாயி இவ்வளவு இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் நீர்விட்டு இளக்கமாகப் பிணைந்து எப்படி மிதிக்க வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னான். பின்னர் மண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிலை செய்ய முயற்சித்தான். விவசயி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எப்போது செய்து முடிப்பது நிறைய எடுத்து அப்பி பின் சரி செய் என்றார். அதன் படி செய்தபோது நிறைய இளகிய மண் பாரம் தாங்காமல் சரிந்து சரிந்து விழ்ந்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து முடியாமல் போகவே களைப்படைந்தான்.
சீடன் எவ்வாறு சிலை செய்கின்றான் என்பதைப் பார்க்க வந்த சிற்பி தன் சீடனுக்கு விவசாயி ஆலோசனைகள் வழங்குவதால் சீடன் தன் செயல் முறைகளை அடிக்கடி விவசாயின் ஆலோசனைக்கேற்ப மாற்றிக் கொண்டிருப்பது கண்டார். விவசாயிடம் நீங்கள் களிமண் சிற்பங்களைச் செய்து இருக்கின்றீர்களா என்றார். நான் சிலைகளைச் செய்ததில்லை. ஆனால் களிமண்ணை எப்படிப் பக்குவப் படுத்துவது என்பது தெரியும் என்றார்.
சிற்பி சீடனிடம் நீ சிலை செய்ய வந்தயா! விவசாயம் கற்றுக் கொள்ள வந்தாயா என்றார். சிற்பக் கலையைக் கற்கவே விரும்புகின்றேன் என்றான், சீடன். அப்படியானால் நான் சொல்லிக் கொடுத்தபடி செய்யாமல் ஏன் இவர்சொல்லியபடி செய்து கொண்டிருக்கின்றாய் என்றார். இவருக்கு களிமண்ணைப் பற்றி பல விபரங்கள் தெரிந்திருப்பதால் அவர் சொன்னபடி செய்தேன் என்றான். அவருக்கு களிமண்ணைப் பற்றிய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். அவைகள் விவசாயம் பண்ண உதவியாய் இருக்கும். அந்த விஷயங்களை வைத்து சிற்பம் செய்ய முடியாது. களிமண்ணில் சிற்பம் செய்யும் முறைவேறு. உனக்கு கற்பித்தபடி செய்து சிலையை முடி என்றார் சிற்பி.
அவர் சொன்னார்! இவர் சொன்னர் என்று சிலர் சொல்வதையெல்லாம் கேட்டு உங்கள் முறைகளை தேவையின்றி மாற்றி அவதியுறாதிர்கள். எல்லா விஷயங்களுக்கும் வழிகாட்ட ஆலோசனை சொல்ல பலர் இருப்பர். உங்கள் செயலுக்கு யார் சரியான வழிகாட்டி என்று அறிந்து அதன்படி செயல் படுங்கள்.

######

வியாழக்கிழமை, 21 December 2017 05:40

சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு!

சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு!

காட்டில் கிளி ஒன்று மரப்பொந்தில் கூடு அமைத்திருந்தது. அதில் முட்டையிட்டு பாதுகாத்து வந்தது. வளர்ச்சியடைந்த முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்த குஞ்சு மரத்திலிருந்து கீழே விழுந்தது. அந்தப் பகுதிக்கு வந்த வேட்டைக்காரன் அந்த கிளிக்குஞ்சைப் பார்த்து அதை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்து வந்தான். காட்டில் பர்ணசாலை அமைத்து தவம் புரிந்தவந்த முனிவர் வரும் வழியில் அந்த மரத்திலிருந்து இன்னொரு கிளிக்குஞ்சு ஓட்டை உடைத்து வெளிவந்திருந்தது. மரத்தின் கீழ் இருக்கும் கிளிக்குஞ்சை பார்த்து அதை எடுத்துச் என்று வளர்த்து வந்தார். வேடனும் முனிவரும் அந்த கிளிக் குஞ்சுகளுக்குப் பேசவும் கற்றுக் கொடுத்தனர்..
அந்தப் பகுதிக்கு வேட்டைக்கு வந்த அரசன் வரும்வழியில் வேட்டைக்காரன் குடில் அருகில் கிளி இருக்க கண்டார்.. குடிலுக்கு அருகில் வந்தவுடன், டேய்! யார் நீ என்று அதிகாரமாகப் பேசியது கிளி. அதன் ஆரம்ப பேச்சு அரசனுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் அங்கிருந்து விரைவில் கிளம்பி விட்டார். தொடர்ந்து காட்டிற்குள் சென்றவர் பர்ணசாலையைக் கண்டு அங்கே சென்றார். அங்கு இருந்த கிளி வணக்கம். யார் நீங்கள் .என்று அன்புடன் வரவேற்றது. அந்தச் சூழலில் மனம் ஆனந்தம் அடைய மன்னன் மகிழ்ந்தான்.
இரண்டு கிளிகளும் ஒரே கிளியின் குஞ்சுகள்தாம். ஆனால் அவற்றின் வளர்ப்பில் சுற்றுச் சூழலில் வித்தியாசம் தென்படுவதால் அதன் குணாதிசயங்கள் மாறுபட்டிருக்கின்றன.
கரு மேகங்கள் தரும் நீர் சுத்தமானதாக இருந்தாலும் அது சேரும் இடத்தைபோல் நிறம் கொள்கின்றது. சுவையை அடைகின்றது.
பிறப்பில் அரக்கனாய் இருந்தாலும் இராமருடன் செர்ந்ததால் விபீஷணன் நல்ல மனம், குணமடைந்தான். தர்மவானாகிய கர்ணன் துஷ்டன் துரியோதனுடன் நட்பு கொண்டமையால் அவப் பெயர் அடைந்தான்.
எனவே உயிர்களே சேருமிடம் சேருங்கள்! நலமடையுங்கள்!

######

செவ்வாய்க்கிழமை, 19 December 2017 10:46

ஆனந்தமாக இருக்க வழி!

ஆனந்தமாக இருக்க வழி!

அன்பையும் பாசத்தையும் விலக்காதீர்கள்1

அந்த தோட்ட வீட்டின் அருகில் ஒரு பெரிய ஆலமரம் கிளைத்து தழைத்திருந்தது. விடுமுறைக் காலங்களில் அந்த தோட்டத்து உரிமையாளரின் நண்பர்களும் சுற்றத்தினரும் வந்து அந்த ஆலமரத் தடியில் கூடி குலவி பொழுதை இனிமையாக கழிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். எந்த விடுமுறையாக இருந்தாலும் யாராவது வந்த வண்ணம் இருந்து ஆனந்தித்து செல்வர். அங்கு வருபவர்கள் பலவிதமான பறைவகளின் கூடாரமாக இருந்த அந்த இடத்தில் பறவைகளின் ஒலியைக் கேட்டு இன்புறுவர்.
ஒரு விடுமுறை நாளில் அந்த உரிமையாளரின் பேரன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு பறவையின் எச்சம் அவன் மேல் விழுந்தது. அதனால் கோபம் கொண்ட உரிமையாளர் அந்த பறவைகளையெல்லாம் விரட்டச் சொன்னார். வேலையாட்கள் விரட்ட பறவைகள் தோட்டத்தில் உள்ள மற்ற இடத்தில் தங்கின. அங்கிருந்தும் விரட்டப்பட்ட பறைவைகள் புதிய இடம் தேடித் தங்கின. அடுத்த சில நாட்களில் பறவைகளின் ஒலியின்றி அமைதியாக இருந்தது அந்த தோட்டத்தில். உள்ள ஆலமரம் பழுத்து இலைகளை உதிர்த்தது. நாளடைவில் அந்த தோட்டத்தில் மாயன அமைதி தென்பட்டது. நண்பர்களே சுற்றத்தினரோ அங்கு வருவதில்லை. ஒர் ஒதுக்கப் பட்ட இடமாக மாறியிருந்தது அந்த தோட்டம்.
பசுமையாக அழகாக, ஆரவாரமாக ஆனந்தமாக இருந்த நம் தோட்டம் இப்படி ஆனதற்கான காரணத்தை யோசித்த உரிமையாளர், பறவைகளை விரட்டச் செய்தற்கு வருந்தினார். கூண்டுகள் செய்து அணில் ,முயல் ஆகியவற்றை வாங்கி வந்து வளர்த்தார். அவைகளத் தொடர்ந்து சிட்டுக் குருவிகளுக்கு தீனி அளித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் அங்கு பறவைகளின் ஒலி அதிகரிக்க சோகமாய் இருந்த மரங்கள் எல்லாம் துளிர்விட்டு மீண்டும் பசுமையை பரப்ப அந்த தோட்டம் மீண்டும் ஆனந்தத்திற்கு திரும்பியது.
வாழ்வில் பறவை எச்சத்தை போன்ற நிகழ்வுகள் தொல்லையாய் தோல்வியாய் வரக்கூடும். அவற்றைத் துடைத்துவிட்டு எதிர்மறையாக சிந்திக்கமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற ஆக்க பூர்வமாக எண்ண வேண்டும்.

ஆனந்தமாக இருக்க வழி!அன்பையும் பாசத்தையும் விலக்காதீர்கள்1

######

ஞாயிற்றுக்கிழமை, 10 December 2017 11:33

மனிதனாக மாறுவாய்!

மனிதனாக மாறுவாய்!

கடன் பெற்றவர் வீட்டிற்குச் சென்று எப்படியாவது கடனை வசூலிப்பதில் கெட்டிக்காரர். வீடு தேடிவந்து வசூலித்ததால் தன் செருப்பு தேய்ந்துவிட்டது எனக் கூறி அதற்கும் காசு வாங்கும் கந்து வட்டிக்காரர் அவர். சாலையில் அவர் செல்வதை பார்த்தால் கடன் பெற்றவர்கள் பயந்து ஒளிந்து கொள்வர். விளையாடும் சிறுவர்கள் கூட வட்டிக்காரர் வருகின்றார் என்று தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓரமாக நிற்பார்கள்.
கெட்டியான வட்டிக்காரர் கடனை வசூலிக்க ஒரு வறியவர் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். திறக்கவில்லை. எனவே மீண்டும் கதவை கோபத்துடன் தட்டினார். இவரிடம் கடன் பெற்றவரின் மனைவி வந்து கதவைத் திறந்தாள். இறை வழிபாடு செய்து கொண்டிருந்ததால் உடன் கதவைத் திறக்கவில்லை என்று மன்னிப்பு கோரினாள். அதை கவனியாமல் எங்கே உன் கணவன் என்றார். உடல் நலமில்லா தன் தாயைப் பார்த்துவர சென்றுள்ளார் என்றாள். வட்டிப்பணம் கொடுத்துள்ளாரா! என்று அதை எடுத்துவரச் சொல்லி அதிகார தோரணையில் சொன்னார். வீட்டில் இருந்த பணத்தை தாயின் மருத்துவ செலவிற்கு எடுத்துச் சென்றுள்ளார் நாளை உங்களை வந்து பார்ப்பதகாச் சென்னார் என்றாள்,
கோபமடைந்தவர் உன் வீட்டிற்கு பணம் வாங்க வந்த என் செருப்பு தேய்ந்ததற்கான கூலியை கொடு என்றார். அவர் வாங்கி வைத்துவிட்டுப்போன காய் கறிகளைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லை, வேண்டுமென்றால் அதை எடுத்துப் போங்கள் என்று சொன்னவளிடம் பச்சைக் காய்கறிகளை வைத்து பிரமச்சாரி நான் என்ன செய்வது அவற்றைச் சமைத்துக் கொடு என்றார். அடுப்பைப் பற்ற வைக்க விறகும் சமைப்பதற்கு மற்றப் பொருட்களும் ஏதுமில்லை. நீங்கள் அவற்றை வாங்கி தந்தீர்களானால் நான் சமைத்து தருவேன் என்றாள். சரி வாங்கித் தருகின்றேன் அந்த செலவை வட்டியுடன் தரவேண்டும் என்பதற்கான உறுதிமொழியைப் பெற்று கடைக்குச் சென்று வாங்கி வந்து அப்பெண்ணிடம் கொடுக்க அவள் சமைக்க ஆரம்பித்தாள். கந்துவட்டிக்காரர் இன்று மதிய உணவிற்கு கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. குறைந்த செலவில் வீட்டுச் சாப்பாடு கிடைத்து விட்டது என எண்ணங்களை.வழிநடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வீட்டின்முன் தள்ளாடியபடி வந்த முதிய யாசகர் உணவுப்பிச்சை வேண்டினார். காதில் பிச்சை கேட்ட குரல் ஒலித்ததும் வீட்டுப் பெண்மணி வெளியில் வந்து சிறிது நேரம் கழித்து வா! சமையல் ஆகிக்கொண்டிருக்கின்றது என்றாள். இதைக் கேட்ட வட்டிக்காரர் யாருடைய பணத்தை யாருக்கு பிச்சை போடுவது என்று அப்பெண்ணை நோக்கி சப்தமிட்டுவிட்டு பிச்சைக் காரனை நோக்கி, இப்படி பிச்சை எடுப்பவருக்கெல்லாம் வாரி வழங்கினால் நானும் உன்போல் பிச்சைக்காரன் ஆகவேண்டியதுதான் என்று கூறி அவனை அங்கிருந்து போகச் சொல்லி விரட்டினார். மகராசி கொடுக்க நினைத்தாலும் உன்னை போன்றவர்கள் அதை கெடுப்பதற்கே இருக்கின்றீகள் என்று சொல்லி விட்டு என்னைப் போன்றவர்களுக்கு பிச்சை இடுவதால் நீ ஒன்றும் பிச்சைக்காரன் ஆகமாட்டாய். மனிதனாக மாறுவாய் என சொல்லிச் சென்றான்.
அது போன்ற வார்த்தைகளை இதுகாறும் கேட்டிராத வட்டிக்காரர் உறைந்து போனார். வீட்டுப் பெண்மணி சமைத்த உணவை கொண்டுவந்து வட்டிக்காரரிடம் கொடுக்க, அதை வாங்காமல் கண்ணில் நீர்மல்க தன் இருப்பிடம் நோக்கிச் சென்றார். வழியில் தன்னைப் பார்த்து பயந்தவர்களையும் ஒளிந்தவர்களையும் பார்த்து ஒளியவேண்டிய மனிதன் நான்தான் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். அன்று முதன் முதலாக கோவிலுக்குச் சென்றார். அங்கு நடந்து கொண்டிருந்த ஞானியின் சத்சங்கத்தைக் கேட்டார். தெளிவடைந்தார். அவரின் நிலைப்பாடுகள் அன்றிலிருந்து மாறத் தொடங்கின.
தன்னிடமிருப்பதைக் கொண்டு தான தர்மங்கள் செய்தார். மன நிறைவு அடைந்தார். ஞானியின் சொற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் கேட்டார். தான தர்மங்கள் செய்வதால் தான் ஒருபோதும் பிச்சைக்காரன் ஆகமாட்டோம் என நம்பினார். மனதில் ஏழ்மையின்றி செல்வந்தனாக மனித நேயத்துடன் மனிதனாக வலம் வந்தார்.

$$$$$$

சனிக்கிழமை, 09 December 2017 05:28

உண்மை நேரில் வந்தால்!

உண்மை நேரில் வந்தால்!

தன் தொழில் நிமித்தம் வெளியூர் சென்றிருந்தவன் திரும்பி வந்தபோது திருடர்களால் வீடு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்படிருந்தது. வீட்டில் எரிந்த நிலையில் பிணங்களே தென்பட்டது. அருகில் கிடந்த ஒரு சிறுவனின் பிரேதத்தை தன் மகன் பிரேதம் என நினைத்து அதைக் கட்டியழுது அதை எரியூட்டி அந்த சாம்பலை எடுத்து ஓர் பையில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார். எரிந்த வீட்டை செம்மைப் படுத்தி வழ்ந்திருந்தார். அந்த சாம்பல் பையைப் பார்த்து பார்த்து தன் மகனை நினைவு கூர்ந்து அடிக்கடி வேதனை அடைந்திருந்தார்.
ஒருநாள் தன் மகனின் நினைவில் கரைந்து அந்த சாம்பல் பையைப் பார்த்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த நேரம் கதவு தட்டப்பட்டது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு யார் என்றார். அப்பா நான்தான் உங்கள் மகன் வந்திருக்கின்றேன் என்ற குரலைக் கேட்டு நம்பவில்லை. கதவைத் திறக்கவும் இல்லை. மீண்டும் கதவு தட்டப்பட்டது. அதே குரல் அப்பா உங்கள் பையன் வந்திருக்கின்ரேன் என்றது. பையன் இறந்து விட்டான் என்ற கலக்கமான மன நிலையில் கேட்ட குரலை அடையாளம் காண முடியாத நிலையில் தன் மகன் இறந்துவிட்டான் என்று நம்பிக்கை கொண்டிருந்ததனாலும் மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டு குரல் ஒலித்தும் கதவை திறக்கவில்லை. தட்டுவது யார் என்றும் நேரில் பார்க்க முயற்சிக்கவில்லை. இப்படி பலமுறை கதவு தட்டப்பட்டு ஒலித்த குரல் நின்றது. கதவு தட்டப்படுவதும் நின்றது. கதவைத் தட்டிய சிறுவன் போய்விட்டான். மகனும் தந்தையும் சந்திக்கும் சூழல் மீண்டும் ஏற்படவே இல்லை.
இப்படித்தான் உயிர்கள் சில நேரங்களில் பொய்யான் ஒன்றை உண்மை என நம்பிக்கொண்டு அதையே தொடர்ந்து பற்றிக் கொண்டு இருக்கின்றது.. உண்மையே நேரில் வந்தாலும் அந்த உயிரால் அதைக் கண்டு கொள்ள இயலாமல் போய்விடுகின்றது. ஓர் ஏணியில் ஏறும்போது பாதியில் நின்று கொண்டு அவ்வளவுதான் உயரம். உச்சிக்கு ஏறிவிட்டோம் என்று தவறாக கணக்குப் போட்டு நம்பிக்கை கொண்டால் உயிர்களால் அடுத்த படிகளைக் கடந்து உச்சிக்கு செல்ல முடியது. உயிர்களே! தவறான பார்வைகளை அது பற்றிய முடிவான முடிவுகளை மேற்கொள்ளுதல் நலன் பயக்காது! என்பதைப் புரிதல் வேண்டும்!

$$$$$$

கொண்டு வந்ததுமில்லை. கொண்டு போவதுமில்லை.!

வேட்டையாட வனத்திற்குச் சென்றவன் எதிரில் யானை தென்பட்டது. அருகில் இருந்த பாறை மீதேறி அதை நோக்கி தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த அம்பை எய்தினான். கோபம் கொண்ட யானை வேடனைத் தாக்க அருகில் வரும்போது அங்கிருந்த புற்று சேதமடைய அதிலிருந்த வெளிப்பட்ட பாம்பு வேடனைத் தீண்டியது. வேடன் தன்னிடமிருந்த கத்தியால் பாம்பை வெட்டினான். பாம்பு இறந்தது. விஷம் ஏறிய வேடன் இறந்தான். விஷ அம்பு தைத்த யானையும் இறந்தது.
உணவிற்காக அலைந்து கொண்டிருந்த நரியின் கண்ணில் இறந்துகிடந்த மூன்று உடல்கள் தென்பட நரி ஆனந்தப்பட்டது. பாம்பின் உடல் இன்றைய பொழுதிற்கும், வேடன் உடல் ஒருவாரத்திற்கும் யானையின் உடல் ஒரு மாதத்திற்கும் உணவாகும் என ஆசையுடன் கணக்குப் போட்டது. கர்ம விதியின் கணக்கைத் தெரியாத அந்த நரி அப்போதைய பசிக்கு வில்லில் உள்ள தோல்வரை சாப்பிட நினைத்து வில்லின் நாணைக் கடிக்க இழுத்து வளைவாக கட்டியிருந்த வில்லின் நாண் அறுபட வேகத்துடன் நிமிர்ந்த வில் நரியின் தொண்டையில் பாய்ந்து நரியும் இறந்தது. மூன்றுடல் நான்கானது பொதுவாக எந்த உயிரும் மற்ற உயிர்களைத் தாக்கக் நினைக்கக் கூடாது. அதிக ஆசை கொள்ளக்கூடாது.
தனக்கு கிடைத்த உணவை மற்ற பிரணிகளும் உண்ணட்டும் என்று எண்ணாமல் தானே அனுபவிக்க நினைத்த நரி இறந்துபட்டது. இதைப்போன்றே வாழ்வில் நமக்கு கிடைக்கும் செல்வத்தினை நாமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும்.. செல்லுமிடமெல்லாம் எடுத்தும் செல்லமுடியாது. கொண்டு வந்ததுமில்லை. கொண்டு போவதுமில்லை. இருக்கும்வரை அறச்செயல்களை செய்து நற்பயன் அடைதல் சிறப்பு.

$$$$$$

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 19:02

வித்யை மந்திரம்!

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே போற்றி!
நரிச்செயலார் பால் நண்ணாய் போற்றி!
செந்தாமரைத்தாள் தேவா போற்றி!
நந்தா மணியே நாயக போற்றி!
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி!
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி!

######

 

வித்யை மந்திரம்!

வாழ்க்கை மிகவும் சந்தோஷமானதாக, நிம்மதியானதாக,
எல்ல வளங்களும் நிறைந்ததாக பதினாறு பேறுகளும் பெற்று
வாழ அம்பிகையின் பரிபூரண ஆசி வேண்டும்.
உலகியல் நன்மைக்காக அம்பிகை பத்து உருவங்களில் தோன்றி
அவைகள் பத்து வித்யைகள் என்றும் அவ்வடிவங்களை
வழிபடுவதால் ஏற்படும் நற்பயன்களையும் கூறியுள்ளாள்.
அத்திருவுருவங்கள் தாரா, திரிபுரபைரவி, சின்ன மஸ்தா,
தூமாவதி, பகாளாமுகி, கமலாத்மிகா, புவனேஸ்வரி,
மாதங்கி, காளி, திரிபுரசுந்தரி எனப்படும்.
விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களுக்கும்
இந்த பத்து வித்யைகளே சக்தியாக உதவியுள்ளன.

தாராதேவி நாமாக்கள் 30 ஐயும் உச்சாடனத்தில் தவறு இல்லாமல்
ஆசாரத்துடன், பயபக்தியுடன் உச்சரித்து வந்தால்
ஆற்றல்கள் பல வந்தடையும்.

ஓம் அனகாயை நம:
ஓம் ஆனந்தாயை நம:
ஓம் காலரூபாயை நம:
ஓம் காளிகாக்யாயை நம:
ஓம் கோர ரூபாயை நம:
ஓம் தரணி ரூபாயை நம:
ஓம் தரளாயை நம:
ஓம் தாராயை நம:
ஓம் தத்வஞான பராயை நம:
ஓம் தத்வஞான ப்ரதாயை நம:
ஓம் தாரணியை நம:
ஓம் தமோ ரூபாயை நம:
ஓம் த்ரிரூபாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் பயானகாயை நம:
ஓம் ப்ரஹ்மாணியை நம:
ஓம் பத்ரகாளியை நம:
ஓம் மகாசாத்வியை நம:
ஓம் மகாமாயாயை நம:
ஓம் மகாலயாயை நம:
ஓம் ரமணீயாயை நம:
ஓம் ரஜோ ரூபாயை நம:
ஓம் ரக்தாங்கியை நம:
ஓம் ரக்தவஸ்தராயை நம:
ஓம் ரக்தமாலா ப்ரோவிநாயை நம:
ஓம் ஸதவிரூபாயை நம:
ஓம் ஸர்வ ஸஜ்ஜன பாலிகாயை நம:
ஓம் சித்தி லக்ஷ்மீயை நம:
ஓம் ஜகத்வித்வம்ஸகாரிகாயை நம:
ஓம் ஜகத்வ்ருஷ்டி கரியை நம:

#####

*       

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 18:55

நாக பாம்பு தீண்டாதிருக்க!

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா போற்றி!
ஆவா எங்களுக்கு அருள்வாய் போற்றி!
தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய் போற்றி!
அமிழ்தாய் எம் அகத்தானாய் போற்றி!
மழவிளங்களிறே மணியே போற்றி!
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

######

 

நாக பாம்பு தீண்டாதிருக்க!

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில்
நாக பாம்பு தீண்டாதிருக்க ஒரு மந்திரத்தை அருளியுள்ளார்.

ஊணிப்பா ரரவமது வாய்தான்கட்ட
உண்மையுள்ள மந்திரமது ஒன்றுகேளு
பேணிப்பார் நங்கிலி சீ ஓம் என்றாக்கால்
பெரிதான நாகமது வாய்தான்கட்டும்
பூணிப்பார் தன்னகமே சாட்சியாகப்
புத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்
ஆணிமாத் தந்தமதி னொளிபோல்மைந்தா
ஆதிதொடுத் தந்தமதின் சித்தியாமே.
- அகத்தியர்

ஒருவரை நாக பாம்பு தீண்ட வந்தால் "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை
உச்சரிக்க பாம்பால் தீண்ட முடியாது அதன் வாய் கட்டிப் போய்விடும் என்கிறார்.
இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க
வேண்டியது அவசியம். "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு
தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகும். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461194
All
3461194
Your IP: 54.227.6.156
2018-01-18 07:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...