gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

காயத்திரி மந்திரங்கள்! (23)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

######

விநாயகர் காயத்திரி மந்திரங்கள்!

(விநாயகர், விக்ன விநயகர், கணபதி, வல்லப கணபதி,)

######

 

ஸ்ரீ விநாயகர் காயத்ரீ
(முயற்சிகளில் வெற்றி பெற)

”ஓம் வக்ர துண்டாய வித்மஹே
ஏகதந்தாய தீமஹி
தன்னோ கணேச பிரசோதயாத்”

(ஒற்றை தந்தம் உடையாய் போற்றி துதிக்கை பெற்றாய்
பெரியோய், வற்றாக் கருணை கணேசா போற்றி)

######

 

ஸ்ரீ கணபதி காயத்ரீ
(செயல்களில் வெற்றி பெற)

”ஓம் ஏக தந்தாய வித்மஹே
லம்போதராய தீமஹி
தன்னோ தந்திப் பிரசோதயாத்”

(ஒற்றை தந்தம் உடையவனே, உலகை உதரத்தில்
கொண்டவனே, பார்வதியின் பாலகனே உன் பாத மலர் போற்றி.)

######

 

ஸ்ரீ விக்ன விநயகர் காயத்ரீ
(தடைகள் நீங்க)

”ஓம் மூஷிக வாகனாய வித்மஹே
மேதஹ ஹஸ்தாய தீமஹி
தன்னோ விக்ன பிரசோதயாத்”

(மூஞ்சூறு வாகனனே, மோதகப் பிரியனே,
விக்னங்களைப் போக்கிடும் விநாயகனே போற்றி)

######

 

ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ
(முயற்சிகளில் வெற்றி பெற)

”ஓம் தச ஹஸ்தாய வித்மஹே
வல்லபை நாதாய தீமஹி
தன்னோ தந்தி பிரசோதயாத்”

(பத்து கரம் உடையாய், வரமருள் வல்லபை நாயகா,
சிரம் தாழ்த்தி பணிந்தேன், என் சிரமம் தீர்ப்பாய் கணபதியே.)

######

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 19:22

மஹா காயத்திரி

Written by

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

######

மகாகாயத்திரி மந்திரம்! 

பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட 
பிரம்மனின் முகத்திலிருந்து காயத்ரீ மந்திரமாகிய 
இருபத்திநான்கு எழுத்துகள் உண்டாயின. இதன் 
அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான மந்திரங்கள் 
சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின் 
காயத்திரி என அழைக்கப்பட்டன.

##### 

தனது காயத்தை-உடலை திரியாகவைத்து 
இருகைகள், இரு கால்கள், தலை என 
ஐந்து உறுப்புகளை குத்து விளக்கின் 
ஐந்து திரிகளாக போட்டு அதில் 
சுடரினை ஏற்றி தவம் செய்தார் கௌசிகன். 
அதன் பலனாக கௌசிகன் ஒளிக்கடவுளுக்குரிய 
காயத்திரி மந்திரத்தை அறிந்தார். 
அது மஹா காயத்திரி எனப்படும். 
உலக உயிர்களுக்கு நன்மை தரும் 
இந்த மந்திரத்தை கண்டறிந்ததால் 
கௌசிகன் என்ற அவர் பெயர் 
விஸ்வாமித்திரன் என்றானது. 
விஸ்வம்-உலகம், மித்திரன்-நண்பன். 
இதன் பிறகு ஒவ்வொரு தெய்வத்திற்குரிய 
காயத்திரி மந்திரங்கள் வெவ்வேறு 
முனிவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

#####

ஸ்ரீ மஹா காயத்ரீ

(அறிவு, ஆரோக்கியம், ஆயுள்)

”ஓம் பூர்புவஸ்ஸூவ தத் ச விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ந ப்ரசோதயாத்”

(பூ உலகம், புவர் லோகம், ஸீவர் லோகம் ஆகிய மூன்று
உலகங்களும் உருவாகக் காரணமானவரும்
ஒளி பொருந்திய வணக்கத்திற்குரிய எது நம்
அறிவைத் தூண்டி நம்மைச் செயல்படவைக்கின்றதோ
அந்தச் சுடர் ஒளியை-ஜோதியை தியானிப்போம்!

பரம்பொருளைக் குறிப்பிடுவதால்-பிரம்ம காயத்ரி என்றும் சூரியனைக்
குறிப்பிடுவதால் சூரிய-காயத்ரி என்றழைக்கப்படும் இந்த மஹா
காயத்ரியை தினமும் 11 முறை சொல்லுவது அறிவு, ஆரோக்கியம்,
ஆயுள் அனைத்தையும் தந்து மேலான நன்மைகள் அடைந்திட உதவும்.)

#####

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 19:41

சிவன் காயத்திரி மந்திரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்

######

சிவன் காயத்திரி மந்திரங்கள்!
(சிவன், சங்கரன், ருத்ரன், ம்ருத்யுஞ்ஜய,
தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், சரபேஸ்வரர்)

######

 

ஸ்ரீ சிவன் காயத்ரீ
(நீண்ட ஆயுள் பெற)

”ஒம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ஈச ப்ரசோதயாத்”

(தேவர்கள் தலைவா, பாவங்கள் போக்கும் பரமா,
மூவரில் முதல்வா, முக்கண்ணா சரணம்.)

######

 

ஸ்ரீ சங்கரன் காயத்ரீ
(சங்கடங்கள் விலக)

”ஒம் சர்வேஸ்வராய வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ சங்கர ப்ரசோதயாத்”

(திரிசடை தெய்வமே, கங்கையை விரிசடையில் கொண்டவனே,
நெற்றிக் கண்ணால் சங்காரம் செய்பவனே, சங்கரா சரணம்.)

######

 

ஸ்ரீ ருத்ரன் காயத்ரீ
(அபயம் அளித்து காத்து அருள் வழங்கிட)

”ஒம் பார்வதி நாதாய வித்மஹே
பரமேஸ்வராய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்”

(வேதம் போற்றும் மெய்ப்பொருளே, வேதவல்லி மணவாளனே,
உலகின் ஈசனே, நாதவடிவான நமசிவாயமே சரணம்.)

######

 

ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய காயத்ரீ
(யம பயம் நீங்க)

”ஒம் ம்ருத்யுஞ்ஜயாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்”

(காலனை வென்றிட்ட காலகாலா, கனகத்தின் நிறமுடைய கங்காதரா,
காலன் வரும் வேளையில் தவறாமல் என்னைக் காப்பாய், சரணம்.)

######

 

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காயத்திரீ
(ஞானமும், கல்வியும், குரு கடாட்சமும் பெற்றிட)

’ஓம் தட்சிணாமூர்த்தியே ச வித்மஹே
த்யான ஹஸ்தாய தீமஹி
தந்தோ ஈஸ பிரசோதயாத”

(தட்சினாமூர்த்தியே, தியானங்களுக்கு அரசே உன்னை
தியானிப்போர்க்கு ஞானம் அளிப்பாய் குருவே.)

”ஒம் ஞானேஸ்வராய வித்மஹே
தத்வபோதாய தீமஹி
தந்னோ தேவ ப்ரசோதயாத்”

(சின் முத்திரை காட்டும் ஞானேஸ்வரனே, தத்துவங்களை
போதித்து மன்னுயிர்க்கு ஞானம் அளிப்பாய் போற்றி.)

”ஒம் வாகீசாய வித்மஹே
தட்சிணாமூர்த்தியே தீமஹி
தந்னோ ஈஸ ப்ரசோதயாத்”

(தென்முக தட்சிணாமூர்த்தியே, யாவர்க்கும் குருவே,
உன்னருள் ஈவாய் உமாபதியே போற்றி போற்றி.)

######

 

ஸ்ரீ வீரபத்திரர் காயத்ரீ
(தொழிலில் முன்னேற்றம் பெற)

”ஒம் பஸ்மாயுதாய வித்மஹே
சம்ஹார ரூபாய தீமஹி
தன்னோ வீரபத்ர ப்ரசோதயாத்”

(பஸ்மாயுதம் பெற்றவனே, துஷ்டர்களை சம்ஹாரம் செய்பவனே, அரளிமாலை
அணிந்த செந்நேத்திரனே, பணியிலே உயர்வளிப்பாய் மகாவீரபத்ரா சரணம்.)

######

 

ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்திரீ
(துர் சக்திகளும் தீவினைகளும் அகல)

”ஒம் சாலுவே சாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்னோ சரப ப்ரசோதயாத்”

(சரசரவென்ற தீமை, பரபரவெனும் பாவம், அரஅர என போக
ராஜபட்சி உருவான சரபேசனே காத்திடுவாய் சர்வேசா போற்றி.)

######

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 19:47

பைரவர் காயத்திரி மந்திரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே

######

பைரவர் காயத்திரி மந்திரங்கள்!
(பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஸ்வர்ண பைரவர், கபால பைரவர்,
சண்ட பைரவர், உன்மத்த பைரவர், அஸிதாங்க பைரவர், குரு பைரவர்,
குரோதன பைரவர், ஸம்ஹார பைரவர், பீஷண பைரவர்)

######

 

ஸ்ரீ பைரவர் காயத்திரீ
(பயணங்கள் பாதுகாப்பானதாக இருக்க)

“ஒம் க்ஷேத்ரபாலாய ச வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்டராய தீமஹி
தந்னோ பைரவ் ப்ரசோதயாத்”

(சேத்ரபாலனே, தட்டில்லா பயணம் செல்ல துணையிருப்பாய்
மட்டில்லா மகிமை மிக்க சர்வேசா போற்றி.)

“ஒம் திகம்பராய வித்மஹே
கால நிர்ணயாய தீமஹி
தந்னோ பைரவ ப்ரசோதயாத்”

(எட்டு திக்குகளை ஆடையாக அணிபவனே,
சட்டெனக் காலம் மாறிடச் செய்யும் திகம்பரனே,
தொட்டு வரும் துயர் யாவும் போக்கிடுவாய் பைரவனே போற்றி.)

######

 

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரீ
(பொன் பொருள் சேர்ந்திட)

ஒம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரம்ஹாத் மஹாய தீமஹி
தந்னோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்

”ஒம் ஸ்வர்ண ரூபாய வித்மஹே
ருத்ர அம்சாய தீமஹி
ன்னோ பைரவ ப்ரசோதயாத்”

(பசும் பொண்ணின் உருவனே, ருத்ர பசுபதியின் வடிவே,
குறைவில்லா பொன்னருளவாய் பைரவா சரணம்)

######

 

ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் காயத்திரீ
(சூரிய கிரக தோஷம் நீங்க)

”ஒம் ஹேம ரூபாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ண பைரவ ப்ரசோதயாத்”

(பொண் நிற பைரவனே, குறைவில்லா அருளைத் தரும்
ஆகர்ஷண பைரவா, உன்னருள் தவறாமல் தந்திடுவாய்)

######

 

ஸ்ரீ கபால பைரவர் காயத்திரீ
(சந்திர கிரக தோஷம் நீங்க)

”ஒம் கபால ஹாராய வித்மஹே
காலதண்டாய தீமஹி
தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத்”

(கபால மாலை தரித்து, கால தண்டம் ஏந்தி ஞாலம்,
புகழ், வீரம், சீலம் தந்து வாழ்விக்கும் கபால பைரவரே போற்றி.)

######

 

ஸ்ரீ சண்ட பைரவர் காயத்திரீ
(செவ்வாய் கிரக தோஷம் நீங்க)

”ஒம் சர்வசத்ரு சம்ஹாராய வித்மஹே
மஹா தீராய் தீமஹி
தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்”

(சகல எதிரிகளையும் அழித்த மாஹா தீரனே போற்றி
உன்னைத் துதிப்போர்க்கு துணையாய் இருப்பாய் போற்றி.)

######

 

ஸ்ரீ உன்மத்த பைரவர் காயத்திரீ
(புதன் கிரக தோஷம் நீங்க)

”ஒம் மந்த்ர ரூபாய வித்மஹே
தண்டினி மனோகராய தீமஹி
தன்னோ உத்தம பைரவ ப்ரசோதயாத்”

(மந்த்ர பொருளாய் நிற்கும் மகேசனே, மாதா வராஹியின் மனம் கவர்ந்தவரே
போற்றி. வருவாய் வந்து நல்லருள் தருவாய் உன்மத்த பைரவரே போற்றி.)

######

 

ஸ்ரீ அஸிதாங்க பைரவர் காயத்திரீ
(குரு கிரக தோஷம் நீங்க)

”ஒம் ஞான ஸ்வரூபாய வித்மஹே
வித்ய கடாட்சாய தீமஹி
தன்னோ அஸிதாங்க பைரவ ப்ரசோதயாத்”

(கலைஞான வடிவனே, மலையெனக் கல்வி ஞானம்
அளிப்பாய், மோனத்திரு உருவே அஸிதாங்க பைரவரே போற்றி.)

######

 

ஸ்ரீ குரு பைரவர் காயத்திரீ
(சுக்கிர கிரக தோஷம் நீங்க)

”ஒம் ஆனந்த ரூபாய வித்மஹே
சர்வ ப்ரகாசாய தீமஹி
தன்னோ குரு பைரவ ப்ரசோதயாத்”

(ஆனந்த வடிவானவனே,அற்புதச் சுடரின் ஒளியே,
குரு பைரவரே உன் பொற்பாதம் பணிந்தேன். போற்றி.)

######

 

ஸ்ரீ குரோதன பைரவர் காயத்திரீ
(சனி கிரக தோஷம் நீங்க)

”ஒம் கபில வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தன்னோ குரோதன பைரவ ப்ரசோதயாத்”

(கருமையான நிறம் கொண்டவரே, திரு அருள் தரும்
தெய்வமே பொற்றி, மறை குரோதன பைரவரே போற்றி.)

######

 

ஸ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்திரீ
(ராகு கிரக தோஷம் நீங்க)

”ஒம் மங்கள ரூபாய வித்மஹே
சண்டிகா ப்ரியாய தீமஹி
தன்னோ ஸ்ம்ஹார பைரவ ப்ரசோதயாத்”

(மங்களத்தை தரும் மகேசனின் வடிவமே, சங்கரி சண்டிகை உள்ளம்
கவர்ந்தவரே, பணிந்து வணங்கினேன் உனை சங்கார பைரவரே போற்றி.)

######

 

ஸ்ரீ பீஷண பைரவர் காயத்திரீ
(கேது கிரக தோஷம் நீங்க)

”ஒம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸர்வானு க்ரஹாய தீமஹி
தன்னோ பீஷண பைரவ ப்ரசோதயாத்”

(த்ரி சூலத்தை கரத்தில் வைத்திருப்பவரே, சூது, வாது, சூழ்
வினைகள யாவற்றையும் போக்கும் பீஷ்ண பைரவரே போற்றி.)

######

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

######

முருகன் காயத்திரி மந்திரங்கள்!
(முருகன், குகன், சிங்காரவேலன், சரவணன்,
ஸ்கந்த, குமரன், ஷண்முகன், வேல்)

######

 

ஸ்ரீ முருகன் காயத்ரீ
(உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க)

”ஒம் பார்வதி புத்ராய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தன்னோ ஷண்முகப் ப்ரசோதயாத்”

(பார்வதி பாலா, சீலா, தேவர் சேனைத் தலைவா,
வேலால் காப்பாய் ஷண்முகா சரணம்)

######

 

ஸ்ரீ குகன் காயத்ரீ
(நண்பர்களிடையே ஒற்றுமை ஓங்க)

”ஒம் ஷன்முகாய வித்மஹே
ஷடாட்சராய தீமஹி
தன்னோ குஹப் ப்ரசோதயாத்”

(ஆறு உரு ஆனவனே, ஆறெழுத்தினால் அருள்வாய்,
எனக்கு ஆதரவாய் அருள்செய்வாய் குகனே! ஆறுமுகா சரணம்.)

######

 

ஸ்ரீ சிங்காரவேலன் காயத்ரீ
(குழப்பங்கள் தீர)

”ஒம் சிகி வாகனாய வித்மஹே
சிங்கார வேலாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”


(மால் போற்றும் மயில் வாகனா, வேல் வாங்கி
வெற்றி சூடிய வேலவா சேவல் சரணம்,
செவ்வேள் சரணம், செயல் யாவும் சீராக அருள்வாய் சிங்கார வேலனே)

######

 

ஸ்ரீ சரவணன் காயத்ரீ
(சங்கடங்கள் நீங்க)

”ஒம் சரவணபவாய வித்மஹே
சங்கரீ புத்ராய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(சரவணத்தில் உதித்தவனே, தேவி சங்கரியின் புதல்வனே,
சங்கடங்கள் தீர்ப்பாய் சரவணபவனே சரணம்.)

######

 

ஸ்ரீ ஸ்கந்த காயத்ரீ
(சகோதர உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க)

”ஒம் சுரபதி மருகாய வித்மஹே
வள்ளி நாதாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(தேவர்கோனின் மருமகனே, மான்மகள் வள்ளி மணவாளா,
மாறாத அருள்புரிவாய் மயில்வாகனா ஸ்கந்தனே சரணம்.)

”ஒம் குக்குட த்வஜாயே வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(கோழிக் கொடி கொண்டவனே, உமையின்
பாலனே, உழியிலும் காப்பாய் ஸ்கந்தனே சரணம்.)

######

 

ஸ்ரீ கார்திகேயன் காயத்ரீ
(குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க) 

”ஒம் கார்திகேயாய வித்மஹே
தெய்வானை நாதாயா தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(கார்திகேயனே, தெய்வானையின் மணாளனே,
எப்போதும் காப்பாய் ஸ்கந்தனே சரணம்.)

######

 

ஸ்ரீ குமரன் காயத்ரீ
(எதிரிகளின் பயம் நீங்க) 

”ஒம் உமா சுதாய வித்மஹே
குக்குட த்வஜாய தீமஹி
தன்னோ குமர ப்ரசோதயாத்”

(சேவற்கொடியுடைய செவ்வேளே, மலைமகள் குமரா, மால்மருகா,
அழைக்கழிக்கும் பாதகம் அழித்தருள்வாய் சரணம்.)

######

 

ஸ்ரீ ஷண்முகன் காயத்ரீ
(புகழ் பெற) 

”ஒம் ஷ்டாட்சராய வித்மஹே
சக்தி ஹஸ்தய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்”

(ஆறெழுத்து மந்திரம் கொண்டவனே, கூர்வேல் கொண்டு
தாக்கும் குமரா, பார் போற்ற வாழ வைப்பாய் உன் பாதமலர்ச் சரணம்.)

######

 

ஸ்ரீ வேல் காயத்ரீ
(அச்சங்கள் அகல)

”ஒம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே
கோடி சூர்ய பிர்காசாய தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்”

(நெருப்பின் நெருப்பான கோடி சூர்ய ஒளியுடன் பிரகாசிக்கும் வேலே.
கந்தனின் கையிலிருந்து எல்லா வேளையும் காத்திடுவாய் கதிர்வேலே சரணம்.)

######

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 20:40

விஷ்ணு காயத்திரி மந்திரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

######

விஷ்ணு காயத்திரி மந்திரங்கள்!
(மகாவிஷ்ணு, ஸ்ரீநிவாசன், திருமால், கிருஷ்ண,
நரசிம்மர், பூவராஹர், ராமர், பரசுராமர், கோதண்டராமர்,
ஹயக்ரீவர், கூர்மம், கோபாலன், வாமனர், தன்வந்த்ரி)

######

 

ஸ்ரீ மகாவிஷ்ணு காயத்ரீ
(குறையாத செல்வம் சேர)

”ஓம் நாரயாணாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

(அலைகடலில் துயிலும் அரியே, கலை உயர்
வாசுதேவ மைந்தா, அலைமகள் நாதா அருள்வாய்.)

######

 

ஸ்ரீ நிவாசன் காயத்ரீ
(திருமகள் அருள் கிடைக்க)

”ஓம் நித்ய மங்களாய வித்மஹே,
சத்ய ரூபாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாஸ ப்ரசோதயாத்”

(மங்களம் நிறைந்திட்ட மாதவா, எங்கும் தர்மம்
காப்பாய், நிலையான செல்வம் அருள்வாய்.)

######

 

ஸ்ரீ திருமால் காயத்ரீ
(செல்வ வளம் செழிக்க)

”ஓம் லக்ஷ்மி வல்லபாய வித்மஹே,
சேஷ சயனாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

(திருமகள் மனம் மகிழ் திருமாலே, சேஷனின்மீது
சயனம் கொண்டவனே, அருள் தரும் விஷ்ணுவே போற்றி.)

”ஓம் லக்ஷ்மீ காந்தாய வித்மஹே,
சக்ர தாராய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

(அலைமகள் நாதனே, கரத்தில் சக்கர்ப்படைக் கொண்டவனே,
அகிலம் போற்றும் அரங்கனே விஷ்ணுவே போற்றி.)

”ஓம் தாமோதராய வித்மஹே,
வாசு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

(உலகை உன்னுள் கொண்டவனே, அரக்கர் சேனை
அழித்தவனே அரியே, நன்மையருள்வாய் நாரணனே சரணம்.)

######

 

ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ
(குழந்தைப்பேறு கிட்ட)

”ஓம் தேவகி நந்தனாய வித்மஹே,
திவ்ய மங்களாய வாசுதேவாய தீமஹி
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்”

(உத்தமி தேவகி பாலனே, உலகை உனக்குள் காண்பித்த
உத்தமனே, குலம் தழைக்க வரமருள்வாய் கோவிந்தா சரணம்.)

######

 

ஸ்ரீ நரசிம்மர் காயத்ரீ
(தீவினைகள், தீயசக்திகள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)

”ஓம் வஜ்ர நகாய வித்மஹே,
தீஷனே தம் ஷட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹ ப்ரசோதயாத்”

(நகமே ஆயுதமாய் கொண்ட ஆளரியே, மாறாத துயரங்கள்
அழித்து, சீரான வாழ்வளிப்பாய் சிங்கபிரானே சரணம்.)

”ஓம் ஸ்தம்ப ஸம்பவாய வித்மஹே,
உக்ர ரூபாய தீமஹி
தந்நோ நரஸிம்ஹ ப்ரசோதயாத்”

(தூணிலே தோன்றி பக்தர் துயர் துடைத்தவனே,
தூய நரசிங்கபிரானே உன் திருவடி சரணம்.)

######

 

ஸ்ரீ பூவராஹர் காயத்ரீ
(தாவர சங்கம சொத்து பிரச்சனைகள் தீர)

”ஓம் ஹிரண்ய கர்ப்பாய வித்மஹே,
பூவ ராஹாய தீமஹி
தந்நோ க்ரோடஹ ப்ரசோதயாத்”

(பூவுலகைக் காத்திட்ட புண்ணியனே, பூமாதா துயர் துடைத்த
மாயவனே, செல்வமெலாம் தா எனக்கு பூவராஹா சரணம்.)

######

 

ஸ்ரீ ராமர் காயத்ரீ
(தாம்பத்யத்தில் ஒருவருக்கு ஒருவர் என்றிருக்க)

”ஓம் தசரத புத்ராய வித்மஹே,
சீதா நாதாய தீமஹி
தந்நோ ராமசந்த்ர ப்ரசோதயாத்”

(பத்துரதன் புதல்வா, சீதை மணவாளா, எத்தினமும்
என்னைக் காப்பாய் ஏகதீரா, உத்தம குணராமா சரணம்.)

”ஓம் சத்ய ரூபாய வித்மஹே,
ஏக பத்னி விரதாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்”

(சத்தியத்தின் வடிவாய் நிற்பவனே, நித்தியமும்
பதி தர்மம் காக்கும் உத்தம ராமனே சரணம்.)

######

 

ஸ்ரீ கோதண்டராமர் காயத்ரீ
(நல்லவை நடந்திட)

”ஓம் கோதண்ட ஹஸ்தாய வித்மஹே,
ஜகன் நாதாய தீமஹி
தந்நோ ஸ்ரீராம ப்ரசோதயாத்”

(கோதண்டம் ஏந்திடும் கோமகனே, அயோத்தி
மன்னவனே, உன் அடிபணிந்தேன், ஸ்ரீராமா சரணம்.)

######

 

ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்திரீ
(கல்வி அறிவு பெற்றிட)

”ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹய்க்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரஸோதயாத்”

(கல்வியின் அதிபதியே, குருவே, ஞான ஹயக்ரீவா,
என மூச்சினுள் கலந்து அருள்புரிவாய்.)

”ஓம் அச்வ ரூபாய வித்மஹே
வாகீச்வராய தீமஹி
தந்நோ ஹயக்ரீவ ப்ரஸோதயாத்”

(கலை வாணியின் குருவே வாகீசா, ஞானத்தின் பேரருளே
அருள்வாய் விரையமாகா கல்வியருள் ஹயக்ரீவா போற்றி.)

######

 

ஸ்ரீ கூர்மம் காயத்ரீ
(எதிர்பாரா ஆபத்துக்கள் நீங்க)

”ஓம் கச்சப ரூபாய வித்மஹே,
கருணா சாகராய தீமஹி
தந்நோ கூர்ம ப்ரசோதயாத்”

(அலைகடலில் கூர்மமாக அமர்ந்தவனே, மலையாக வரும் துயரம்
நீக்கிடுவாய், நிலையான நிம்மதியை தந்திடுவாய் நின்னடி போற்றி.)

######

 

ஸ்ரீ கோபாலன் காயத்ரீ
(கால்நடை வளம் பெருக)

”ஓம் தாமோதராய வித்மஹே,
ருக்மணீ வல்லபாய தீமஹி
தந்நோ கோபால ப்ரசோதயாத்”

(அகிலத்தை உருவாகக் கொண்டவனே, ருக்மணியின் மணாளனே,
ஆநிரை வளம் பெற அருள்வாய் அச்சுதனே கோபாலனே போற்றி.)

######

 

ஸ்ரீ வாமனர் காயத்ரீ
(நல்ல பிள்ளைகள் பிறக்க)

”ஓம் த்ரிவிக்ரமாய வித்மஹே,
விஸ்வரூபாய தீமஹி
தந்நோ வாமன ப்ரசோதயாத்”

(விண்ணிற்கும் மண்ணிற்கும் உருக்கொண்டவனே,
திருவிக்ரமனே, வருவாய் அருள்வாய் வாமனரே நின்னடி போற்றி.)

######

 

ஸ்ரீ சுதர்சனமூர்த்தி காயத்திரீ
(விபத்துக்கள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)

”ஒம் சக்ர ராஜாய வித்மஹே
சகஸ்வர ஜ்வாலாய தீமஹி
தந்னோ சக்ர ப்ரசோதயாத்”

(விஷ்ணுவின் கரங்களில் சுழலும் சக்கரமே, கவலைகளின்
இருளை நீக்கும் கனலே, பகை அச்சம் தீர்ப்பாய் சுதர்சனா போற்றி..)

######

 

ஸ்ரீ தன்வந்த்ரி காயத்திரீ
(நோய்களிலிருந்து விடுபட)

”ஒம் தத்புருஷாய வித்மஹே
வைத்ய ராஜாய தீமஹி
தந்னோ தன்வந்த்ரி ப்ரசோதயாத்”

(மகா புருஷனே, வைத்தியர்களுக்கெல்லாம் அரசனே,
இன்பமுடன் வாழ ஆரோக்கியம் அருள்வாய் தன்வந்த்ரி பகவானே.)

”ஓம் ஆதிவைத்யாய வித்மஹே,
அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி
தந்நோ தன்வந்த்ரி ப்ரசோதயாத்”

(ஆதி வைத்தியனே, அமிர்த கலசம் கையில் கொண்டிருப்பவனே
ஆயுளுடன் ஆரோக்கியமும் தருவாய் தன்வந்த்ரி பகவானே.)

######

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 10:22

அம்மன் காயத்திரி மந்திரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

######

அம்மன் காயத்திரி மந்திரங்கள்!
(சரஸ்வதி, கலைவாணி, அன்னபூரணி, மாரியம்மன், சரதா தேவி,
சந்தோஷிமாதா, மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி,
பாலா த்ரிபுரசுந்தரி, மீனாட்சி, ராதா, ஸாகம்பரி, காமதேனு)
######

 

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ
(கல்வியில் சிறந்து விளங்க)

”ஓம் வாக்தேவயை ச வித்மஹே
விரிஞ்சி பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்”

(நாவின் ஒலிக்கு மூலகாரணமானவளே,
நான்முகனின் நாயகியே, தினமும் உன்னை
பணிகின்றேன் சரஸ்வதி தேவியே சரணம்.)

######

 

ஸ்ரீ கலைவாணி காயத்ரீ
(சங்கீத ஞானம் பெற)

”ஓம் நாத ரூபிண்யை ச வித்மஹே
வீணா தரணீ ச தீமஹி
தந்நோ கலாவாணி ப்ரசோதயாத்”

(வேதங்களின் வடிவான வாணியே,
வீணையை வைத்திருப்பவளே,
கலைமகளே சரணம்.)
######

 

ஸ்ரீ அன்னபூரணி காயத்ரீ
(இல்லத்தில் அன்னம் நிறைந்திருக்க)

”ஓம் பகவத்யை காசிவாசின்யை ச வித்மஹே
மாஹேச்வர்யை ச தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்”

(பஞ்சமிலா வாழ்வுதரும் பகவதியே, உலக உயிர்களுக்கு
அன்னமளிக்கும் மகேசுவரியே, காசி
அன்னபூரணி தாயே அருளவாய்.)

######

 

ஸ்ரீ மாரியம்மன் காயத்ரீ
(வெம்மை நோய் பாதிப்பு குறைய)

”ஓம் மங்கள காரணீ ச வித்மஹே
மனோகர ரூபிணீ ச தீமஹி
தந்நோ மாரி ப்ரசோதயாத்”

(மங்கள காரணியே, மகிழ்வருளும்
அன்னையே, மண்ணுலக உயிர்களைக்
காக்கும் மாரித்தாயே போற்றி.)

######

 

ஸ்ரீ சரதா தேவி காயத்ரீ
(கலைகளில் மேன்மை பெற்றிட)

”ஓம் ஞான ரூபாய ச வித்மஹே
புத்தி தாராயை ச தீமஹி
தந்நோ சாரதா ப்ரசோதயாத்”

(ஞானத்தின் வடிவமே, அறிவான அறுபத்தி
நான்கு கலைகளையும் அறிந்தவளே
உன்பதம் பணிந்தேன் சாரதையே சரணம்.)

######

 

ஸ்ரீ சந்தோஷிமாதா காயத்ரீ
(வாரிசு வாழ்விற்கு நன்மை ஏற்பட)

”ஓம் கணேச புத்ரீ ச வித்மஹே
சுப லாப சோதரீ ச தீமஹி
தந்நோ சந்தோஷி ப்ரசோதயாத்”

(தும்பிக்கையான் புதல்வியே, சுபன் லாபன்
தமக்கையே நம்பிக்கையுடன் தொழுதேன்
நலம் புரிவாய் சந்தோஷி போற்றி.)

######

 

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி காயத்ரீ
(துயரம் நீங்கி செல்வம் பெருக)

’ஓம் மகிஷாசுரமர்த்தினி ச வித்மஹே,
விஸ்வ விநோதின்யை க்ருஷ்ணப்ரியாய ச தீமஹி
தந்நோ துர்க்கா ப்ரசோதயாத்”

(மகிஷனை அழித்த விஷ்ணுவின்
பத்தினியே வறுமை துயரம்
துடைப்பாய், வரமருள் துர்க்கையே.)

######

 

ஸ்ரீ மகாலட்சுமி காயத்ரீ
(வறுமை நீங்கி செல்வம் பெருக)

’ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே,
விஷ்ணு பத்னியை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்”

(மகாதேவியே, லட்சுமியே, விஷ்ணுவின்
பத்தினியே உன் பார்வை
என்மீது விழட்டும், வரமருள் தாயே.)

’ஓம் கமலவாஸின்யை ச வித்மஹே,
பத்ம லோசன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்”

(தாமரை மலர்மீது அமர் தாயே, உன்
பதும விழி என்னையும் பார்க்கட்டும்,
வறுமை விலக வரமருள் தாயே.)

######

 

ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி காயத்ரீ
(குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு)

”ஓம் பால ரூபாயை ச வித்மஹே
ஸதாநவ வர்ஷாயை தீமஹி
தந்நோ பாலா ப்ரசோதயாத்”

(மழலை வடிவான மாதாவே, அழல்கண்
அரனின் தேவியே, கருணை மழை
பொழியும் பலா திரிபுரசுந்தரியே போற்றி.)

######

 

ஸ்ரீ மீனாட்சி காயத்ரீ
(வாழ்வில் உயர்வுகள் பெற்றிட)
”ஓம் த்ரீநேத்ரிணீ ச வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ மீனாக்ஷி ப்ரசோதயாத்”

(முக்கண்ணனின் பத்தினியே,
உன் அருளால் நாளும் மண்ணுயிர்
காக்கும் மீனாட்சியே போற்றி.)

######

 

ஸ்ரீ ராதா காயத்ரீ
(பிடித்த மணவாளன் அமைந்திட)

”ஓம் க்ருஷ்ண மோஹின்யை ச வித்மஹே,
விஸ்வ ஜனன்யை ச தீமஹி
தந்நோ க்ரிஷ்ணப்ரேமி ப்ரசோதயாத்’

(ஸ்ரீ கிருஷ்ணன் மேல் மாறா அன்பு
கொண்டவளே, நல்லோர்க்கு நல்வாழ்வு
தந்திடுபவளே, க்ருஷ்ண ப்ரியையே போற்றி.)

”ஓம் கோபால மோஹின்யை ச வித்மஹே,
கிருஷ்ணாங்கார்த்த சரீரிண்யை தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்’

(கோபாலன் மேல் மாறா அன்பு கொண்டவளே,
சரீரம் உள்ளவரை க்ருஷ்ணனை மறவாத ராதையே
மாபாதகம் போக்கும் மாதவத்தோய் போற்றி.)

######

 

ஸ்ரீ ஸாகம்பரி காயத்ரீ
(பயிர்கள் செழித்து விளைச்சல் பெருகிட)

”ஓம் கால ரூபிண்யை ச வித்மஹே,
தான்ய பல வ்ருத்திகாயை ச தீமஹி
தந்நோ ஸாகம்பரி ப்ரசோதயாத்’

(உரிய காலத்தில் தானியங்களை விருத்தி செய்பவளே,
கனிவோடு காத்து அருள் புரிந்து தானியங்கள் செழித்து
பஞ்சமில்லா வாழ்வு அருள்வாய் ஸாகம்பரியே.)

######

 

ஸ்ரீ காமதேனு காயத்ரீ
(எண்ணங்கள் நிறைவேற)

”ஓம் ஸூரப்யை ச வித்மஹே
மனோ ரஞ்சிதாய தீமஹி
தந்நோ தேனு ப்ரசோதயாத்”

(கோரிக்கைகள் பலித்திட அருள் புரிந்து நேர்
வழியில் வாழ பாரினில் வழிபடுவோர்க்கு
அருளும் கோமாதாவே போற்றி.)

######

ஸ்ரீ மகாமேரு காயத்ரீ
(அனைத்துகுறைகளும் நீங்க)

”ஓம் யந்த்ர வித்மஹே
மஹா யந்த்ராய தீமஹி
தந்தரா யந்திர ப்ரசோதயாத்”

”ஓம் மந்த்ர ராஜாய வித்மஹே
மஹா மந்த்ராய தீமஹி
தந்தோ மந்திர ப்ரசோதயாத்”

(மந்திர, யந்திரங்களின் தலைமை சக்தி, ராஜாவாக திகழும்.)

#####

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும்
தொடர்ந்த வினைகளே! அப்பமும் பழம் அமுதும்
செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

######

சப்த மாதா காயத்திரி மந்திரங்கள்!
(ப்ராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி,
இந்த்ராணி, பத்ரகாளி/சாமுண்டா, துர்கை, பகவதி)

######

 

ஸ்ரீ ப்ராஹ்மி காயத்ரீ
(தோல் நோய் நீங்கி முக எழில் பெற)

”ஓம் ப்ரஹ்ம சக்த்யை ச வித்மஹே,
பீதவர்ணாயை ச தீமஹி
தந்நோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்’

(மஞ்சள் பட்டு அணிந்த தேவியே, கஞ்சனின்
சக்தியே, நெஞ்சில் வைத்தேன், உன்னைத்
தஞ்சமடைந்தேன் ப்ராம்மி தாயே.)

######

 

ஸ்ரீ மஹேஸ்வரி காயத்ரீ
(மங்களங்கள் பெருக)

”ஓம் மஹேஸ்வர ஹம்சாயை ச வித்மஹே,
சூல ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’

(வெண்பட்டு அணிந்த முக்கண்ணன்தேவியே, சூலம்
கரத்தில் ஏந்திய மஹேஸ்வரி தாயே, முக்காலமும்,
தஞ்சமடைந்தேன் மஹேஸ்வரி தாயே.)

######

 

ஸ்ரீ கௌமாரி காயத்ரீ
(ரத்த உறவுகள் நலமுடனிருக்க)

”ஓம் சிகிவாஹனாய வித்மஹே,
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ கௌமாரி ப்ரசோதயாத்’

(மயில் வாகனம் கொண்டவளே வடிவேலன்
துணையை பெற்றவளே, சீரான அருள்
தாராயோ கௌமாரி தாயே.)

######

 

ஸ்ரீ வைஷ்ணவி காயத்ரீ
(எதிர்பாரா ஆபத்துக்கள் விலக)

”ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே,
சக்தி ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்’

(சங்கடங்கள் நீங்க, சக்கரத்தை கரத்தினில்
கொண்டு விரைந்து வருவாய், உன்னை
சரணடைந்தேன் வைஷ்ணவி தாயே.)

######

 

ஸ்ரீ வராஹி காயத்ரீ
(தடைகள் அகன்று ஏற்றமான வாழ்வு கிட்ட)

”ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”

(தண்டமுடன் கலப்பையை ஏந்தி சண்டையிடும்
தீவினைகளை அகற்றுவாய் சியாமளாதேவியே
பணிந்து வேண்டினேன் வராஹி தாயே.)

”ஓம் மகிஷத்வஜாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”

(எருமைக் கொடியுடையவளே உன் பெருமை
பரவி நிற்க தொழுதவர் வாழ்வில் கருமை
வினைநீங்க அருள்வாய் வராஹி தாயே.)

######

 

ஸ்ரீ இந்த்ராணி காயத்ரீ
(இல்லறம் சிறந்திட)

‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்”

(கருமைநிற இந்திரையே, வஜ்ரத்தை ஆயுதமாக
கொண்டவளே, அரு நலம்தான் உன்னருளே, பெருங்குணம்
கொண்டு காப்பாய் நிழல் தரு இந்திராணி தாயே.)

######

 

ஸ்ரீ பத்ரகாளி/சாமுண்டா- காயத்திரீ
(நரம்புக் குறைகள் நீங்க)

“ஓம் க்ருஷ்ண-தூம வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ, சாமுண்டா ப்ரசோதயாத்.

(கரு நீலப் புகை கிருஷ்ணனின் நிறத்தைக் கொண்டவளே,
சூலத்தை ஆயுதமாக ஏந்தியவளே, சாமுண்டி தாயே,
பத்ரகாளியே என்னை காத்து அருள்வாய்.)

######

 

ஸ்ரீ துர்கை காயத்திரீ
(மாங்கல்ய பாக்யம் நிலைத்திட)

’ஓம் காத்யாயனாய வித்மஹே,
கன்னியாகுமார்யை ச தீமஹி
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்”

(காத்யாயன முனியின் மகளே, காத்திடுவாய்
மாங்கல்யம், கன்னிகையே மாத்திடுவாய்
மனத்துயரையே மாதாவே சரணம்.)

######

 

ஸ்ரீ பகவதி காயத்திரீ
(எதிர்ப்புகள் நீங்க)

‘ஓம் பூஹா சூலின்யை ச வித்மஹே
மகா துர்க்காயை தீமஹி
தன்னோ பகவதி ப்ரசோதயாத்”

(சிவனின் உக்ரவடிவான சூலினியே, சரபேஸ்வரரின்
இறக்கையில் இருப்பவளே, எதிர்களின்
தாக்குதல்களிலிருந்து காப்பாய் பகவதி தாயே!)

######

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 10:56

நவகிரக காயத்திரி மந்திரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

######

நவகிரக காயத்திரி மந்திரங்கள்!
(சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,
குரு/வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது)

######

 

நவகிரக சூரிய பகவான் காயத்திரீ
(பார்வை பலம்பெற, ஆரோக்கியம் சிறக்க)

”ஓம் அச்வத் வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய பிரசோதயாத்”

(சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும்
ஞாயிறே போற்றி, சூரியா போற்றி சுந்திரா
போற்றி வினைகளைக் களைவாய் வீரியா போற்றி.)

”ஓம் ஏகசக்ராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய பிரசோதயாத்”

(ஒற்றைச் சக்ரத்தில் உலகை ஊர்ந்து சுழலன்று
சூழ்வினைகளைச் சுட்டுப் போக்கி சுடரெளியால்
அகிலம் காக்கும் ஆதியத்தனே போற்றி.)

######


நவகிரக சந்திர பகவான் காயத்திரீ
(மனம் ஒரு நிலைப்பட, சோம்பல் விலக)

”ஓம் பத்வத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னோ ஸோம பிரசோதயாத்”

(குறைகள் தீர்க்கும் திங்களே, தாமரை மலரைத் தாங்கி
தரணியெங்கும் தண்னொளி தருபவனே,
தாழ்விலா மனம் தரும் தண்ஒளி மதியே போற்றி.)

######


நவகிரக செவ்வாய் பகவான் காயத்திரீ
(வீடு மனை பிரச்சனைகள், சகோதர வேற்றுமைகள் தீர)

”ஓம் வீரவத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம பிரசோதயாத்”

(சிறப்புறுமணியே செவ்வாய்த் தேவே குணமுடன் வாழ
குறையிலாதருள்வாய் மங்களச் செவ்வாய் மலரடிபோற்றி,
அங்காரகனே அவதிகளை நீக்குவாய்.)

”ஓம் பூமி புத்ராய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம பிரசோதயாத்”

(புவித்தாயின் புதல்வனே, தவிப்போர் துயர் நீக்கும்
தீரனே, அங்காரகனே, கரம் குவித்து உன்னைப்
பணிந்தேன் போற்றிப் போற்றியே.)

######

 

நவகிரக புதன் பகவான் காயத்திரீ
(ஞாபக சக்தி அதிகரித்து படிப்பில் உயர்வு அடைய)

”ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்”

(இதமுற வாழ இன்னல்கள் நீக்கி சுகம் தரும்
புதபகவானே, யானையை கொடியில் கொண்டவனே பதம்
தந்தருளவாய் உதவி அருளும் உத்தமனே.)

######


நவகிரக ஸ்ரீ குரு/வியாழன் பகவான் காயத்திரீ
(கோடி நன்மைகள் பெற்றிட)

’ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத”

(இடபக்கொடி கொண்டவனே, தடங்கல் தடைகள்
தகர்ப்பவனே, ப்ருஹஸ்பதி வியாழப் பரமகுரு நேசா
க்ரஹதோஷ மின்றி கடாட்சித் தருள்வாய்.)

######


நவகிரக சுக்கிர பகவான் காயத்திரீ
(கல்யாணத் தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமையாக வாழ)

”ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர பிரசோதயாத்”

(அசுவக் கொடியுடைய அசுர குருவே, சுபமிகு தருவாய்,
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே வக்கிரமின்றி
வரமிகு அள்ளிக் கொடுப்பாய் அருளே.)

######

 

நவகிரக சனி பகவான் காயத்திரீ
(நோய்கள் நீங்க, தொழிலில் முன்னேற்றம் அடைய)

”ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த பிரசோதயாத்”

(காகத்தை வாகனமாக கொண்ட சனி பகவானே
கட்க ஆயுதத்தால் மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
குறையின்றி வாழ இன்னருள் தா சனீபகவானே.)

######

 

நவகிரக இராகு பகவான் காயத்திரீ
(காலசர்ப்ப தோஷம் நீங்க)

”ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹூ பிரசோதயாத்”

(அரவக்கொடியுடைய ராகு அய்யனே. கஷ்டங்கள் நீக்கித்
தொடர் அருள்புரிவாய், அனைத்திலும் வெற்றி பெற
அருள் தருவாய் ராகுவே சரணம்.)

######

 

நவகிரக கேது பகவான் காயத்திரீ
(ஞானமும் வீடு பேறும் அடைய)

”ஓம் அச்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுவே பிரசோதயாத்”

(பரியினைக் கொடியில் கொண்ட கேதுவே கீர்த்தித் திருவே.
பாபம் தீர்ப்பாய். வாதம் வம்பு வழக்குகளின்றி
ரக்ஷிப்பாய் கேதுவே சரணம்.)

#####

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

######

இறை வாகன காயத்திரி மந்திரங்கள்!
(மயில், நந்தி, கருடன்,)

######

 

ஸ்ரீ மயில் காயத்ரீ
(விஷக்கடி ஆபத்துகள் நீங்க)

”ஒம் மயூராய வித்மஹே
சுக்ல பாதாய தீமஹி
தன்னோ சிகி ப்ரசோதயாத்”

(வடிவேலன் வாகனமான மயிலே,
பணிந்திட்டேன், விஷக்கடியிலிருந்து என்னைக்
காப்பாய் மயிலே சரணம்.)

######

 

ஸ்ரீ நந்தி காயத்திரீ
(சிவ கடாட்சம் பெற)

ஒம் தத் புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்னோ நந்தி ப்ரசோதயாத்!

(தேவ புருஷனே, ஒரே எண்ணம்
கொண்ட சிவ பக்தனே, சிவ கடாட்சம்
பெற்றவரே, நந்தி தேவரே அருள்புரிவாய்!)

######

 

ஸ்ரீ கருடன் காயத்ரீ
(மரண பயம் நீங்க)

”ஓம் பட்சி ராஜாய வித்மஹே,
விஷ்ணு வாகனாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்”

(பட்சிகளின் அரசே, பெருமாளின் வாகனமாய்
இருக்கும் கருடபகவானே, உள்ளத்தில் காலன் பயம்
ஒழித்து கள்ளமிலா பக்தர் தமை காத்திடுவாய்.)

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27042419
All
27042419
Your IP: 18.223.0.53
2024-04-19 19:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg