gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நட்சத்திரங்கள்! (28)

புதன்கிழமை, 07 March 2018 09:45

அஸ்வினி

Written by

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி

வழிபடவேண்டிய பைரவர் தலம் ஞானபைரவர்- பேரூர்

வழிபடவேண்டிய தெய்வம் பிறவிமருந்தீஸ்வரர்(சு), திருத்துறைபூண்டி,

பலன்கள் விசாலமான அறிவு, தெளிவு ஏற்படும்

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் தன்வந்திரி பகவான்- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், அரப்பளீச்வரர்- கொள்ளிமலை

வழிபடவேண்டிய கிரகம் கேது

நட்சத்திரத்திற்குரிய மரம் எட்டி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளங்கள்-செய்யூரில்- நாகாயுதபாணி

வழிபட வேண்டிய சித்தர் அசுவினி-(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

வழிபட வேண்டிய நாயன்மார்கள் உருத்திரபசுபதி நாயனார், திருமூல நாயனார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 10:32

நட்சத்திரங்கள்

Written by

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் போற்றி!
பாங்கார் இன்பப் பராபர போற்றி!
கற்றவர் விழுங்கும் கனியே போற்றி!
மற்றவர் காணாமலையே போற்றி!
சொல்லொடு பொருளின் தொடர்பே போற்றி!
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி!

நட்சத்திரங்களின் நன்மை!

இப்பூவுலகில் பிறந்துள்ள அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்பதே சாஸ்திர நியதியாகும். அவ்வாறு பிறந்த உயிர்கள் முதலில் தான் இவ்வுலகில் ஜன்னம் எடுக்க காரணமாயிருந்த தாய் தந்தையரை வணங்கவும். பின் அவர் குலதெய்வத்தை வணங்க வேண்டும் பின்னர் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய அதிதேவதை, பைரவர், தெய்வம் ஆகியவற்றை தொடர்ந்து அந்த நட்சத்திர நாளில் வழிபட்டு வந்தால் அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கர்ம பாவங்கள் குறைந்து நன்மைகளைப் பெறுவார்கள். இடவசதியிருந்தால் நட்சத்திரக்காரர்கள் தங்கள் நட்சத்திற்குரிய மரத்தை நட்டு நீர் ஊற்றி வளர்த்து வழிபடுதல் சிறப்பு.

மரம் என்றால் எதாவது ஒரு மரத்தை நிழலுக்காக அல்லது கட்டிடத்தின் முன் அழகு படுத்த வளர்க்கலாம். ஆனால் இங்கே சொல்லப்படுவது ஒருவருடைய நட்சத்திரத்திற்குரிய மரத்தை தன் சொந்த இடத்தில் நட்டு வளர்க்க வேண்டும். அதன் பலன்கள்- அந்த மரம் வளர வளர அவருடைய வாழ்வு வளம் பெரும். மரம் வளர்ப்பவருடைய பாவக் கதிர்களைக் கிரகித்துக்கொண்டு ஓர் ஒப்பற்ற அற்புதமான ஆன்மீகத் தொடர்பை செய்ய வல்லது. அவருடைய தோஷங்களை அந்த மரம் ஈர்க்கும் தன்மையுடையது. அந்த மரம் பூத்துக் குழுங்கும்போது அவரின் வாழ்வு செழிப்பான நிலையில் இருக்கும். கர்ம வினைகள் குறைந்து விடும்.

சித்தர்களின் ஜீவசமாதி தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்கு மேல் இயங்கும் துவாத சாங்க சக்கரத்திற்கும் வானில் உள்ள நட்சத்திரம், நவகோள்களுக்கும், பன்னிரு ராசிகளின் வீடுகளுக்கும் உள்ள தொடர்புகள் என்னாளும் எந்த நிலையிலும் மாறுவதில்லை. அதனால்தான் பிறந்த நட்சத்திரம், ராசி, லக்னத்திற்கு ஏற்ற ஜீவசமாதி ஐக்கிய நிலைகளுக்குச் சென்று வழிபட்டு சித்தர்களின் ஆசி பெற்று வழமுடன் வாழ்த்தும் குருஸ்ரீ பகோரா

மற்ற உயிர்களிடம் அன்பு செய்யுங்கள் ஆனந்தம் அடைவீர். மேலும் நாயன்மர்களை வழிபடுதல் சிவ வழிபாட்டிற்கு ஈடானது. அடியார்க்கும் அடியேன் என்ற கூற்றுப்படி மேம்பட்டது அடியார்களை தொழுபவர்களை காத்து அருள் புரிவர் சிவபெருமான் என்பது மரபு. எனவே அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தாங்கள் ஜன்ம நட்சத்திரப்படி பிறந்த தினத்தன்று அல்லது அந்த நட்சத்திரதிற்கு உரிய நாயன்மார்களது குருபூஜையன்று அந்தந்த நயன்மார்களுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து அர்ச்சித்து ஆரதனை செய்து வழிபட்டால் வாழ்வில் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள். -குருஸ்ரீ பகோரா.

######

நட்சத்திரங்கள் 27

 

ஸ்வினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருகஷீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:21

பரணி

Written by

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

 

பரணி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை துர்க்கை

வழிபடவேண்டிய பைரவர் தலம் மகாபைரவர்- பெரிச்சியூர்

வழிபடவேண்டிய தெய்வம் அக்னீசுவரர், நல்லாடை,

பலன்கள் தீய எதிரிகள் பயம் விலகும்.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் திருநெல்லிவனநாதர்-திருநெல்லிக்கா, சோமநாதர்-கீழ்பழயாறை,வேலாயுதசுவாமி-திருஆவினன்குடி, துர்க்கை,-பட்டீஸ்வரம்,கருநெல்லிநாதர்-சிவகாசி, யமன்-ஸ்ரீவாஞ்ஞியம், அசலதீபேஸ்வரர்-மோகனூர்.

வழிபடவேண்டிய கிரகம் சுக்கிரன்

நட்சத்திரத்திற்குரிய மரம் நெல்லி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளங்கள்-செய்யூரில்- வஜ்ரதாரி

வழிபட வேண்டிய சித்தர்கள் பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கைநல்லூர்-நாகப்பட்டிணம், ஸ்ரீபோகர், பழனி

வழிபடவேண்டிய நாயன்மார்கள் சிறுத் தொண்ட நாயனார், கழற்சிங்க நாயனார், நின்ற சீர் நெடுமாற நாயனார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:28

கார்த்திகை

Written by

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

 

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி

வழிபடவேண்டிய பைரவர் தலம் அண்ணாமலைபைரவர்- திருவண்ணாமலை

வழிபடவேண்டிய தெய்வம் கார்த்திகைசுந்தரேசுவரர்,கஞ்சநகரம்

பலன்கள் அக்னி/தீயின் பாதிப்புகள் அகலும்

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் அத்திவரதர்-காஞ்சி, அக்னீஸ்வரர்-திருப்புகலூர், சிவலோகநாதர்-கீரனூர்(புதுக்கோட்டை), செந்திலாண்டவர்-திருச்செந்தூர், வன்மீகநாதர்-திருவெற்றியூர், பதஞ்சலீஸ்வரர்-கானாட்டுமுள்ளூர்

வழிபடவேண்டிய கிரகம் சூரியன்

நட்சத்திரத்திற்குரிய மரம் அத்தி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளங்கள் செய்யூரில்- வைராக்கிய

வழிபட வேண்டிய சித்தர்கள் கார்த்திகை1(மேஷம்) =ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி; ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம் ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி,; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் மூர்த்தி நாயனார், இடங்கழி நாயனார், புகழ்ச் சோழ நாயனார், கணம்புல்லர் நாயனார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:32

ரோகிணி

Written by

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

 

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை பிரம்மன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் பிரம்மசிரகண்டீஸ்வரர்-கண்டியூர்,

வழிபடவேண்டிய தெய்வம் பாண்டவதூதர்- காஞ்சி

பலன்கள் நல்ல நண்பர் அமைவர்.எல்லா நிலைகளிலும் அவரின் உதவி கிட்டும்

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் பக்தவச்சலப் பெருமாள்-திருக்கண்ணமங்கை, ஜம்பைநாதர்-ஜம்பை-விழுப்புரம், ஜம்புநாதர்-கழுகுமலை, ஜம்புகேஸ்வரர்-செம்பாக்கம், ஜம்புகேஸ்வரர்-கொரட்டூர், ஜம்புநாதர்-நெல்லிச்சேரி, ராஜகோபாலசுவாமி-மன்னார்குடி, வேணுகோபாலன்-பெருமாள்அகரம்(கொரடாச்சேரி), ரங்கநாத பெருமாள்-திருவரங்கம் (திருக்கோவிலூர்), கிருஷ்ணன்-திருக்கண்ணபுரம்,   கிருஷ்ணன்- திருக்கண்ணங்குடி.,பாண்டவதூதர்-காஞ்சிபுரம்.

வழிபடவேண்டிய கிரகம் சந்திரன்

நட்சத்திரத்திற்குரிய மரம் நாவல்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளங்கள் செய்யூரில்- கட்கதாரி

வழிபட வேண்டிய சித்தர்கள் ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் நந்தணார், திருநாளைப் போவார், நேச நாயனார், மங்கையர்கரசி நாயனார்.

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:49

மிருகஷீரிடம்

Written by

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

 

மிருகஷீரிடம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சந்திரன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் சேத்ரபாலபைரவர்- சேத்திரபாலபுரம்

வழிபடவேண்டிய தெய்வம் ஆதிநாராயணப்பெருமாள்- எண்கண்

பலன்கள் மிருகண்டுமகரிஷியை தியானித்து வழிபாடு-நல்லவேலை

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் மகாகாளேஸ்வரர்-அப்பர்மாகாளம், சந்திரசூடேஸ்வரர்-ஒசூர், சந்திரமௌலீச்வரர்-முசிறி, சந்திரமௌலீச்வரர்- தாழமங்கை(தஞ்சை)

வழிபடவேண்டிய கிரகம் செவ்வாய்

நட்சத்திரத்திற்குரிய மரம் கருங்காலி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளங்கள் செய்யூரில்- ஞான

வழிபட வேண்டிய சித்தர்கள் மிருகசீரிடம் 1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். திருவலம்.
மிருகசீரிடம் 2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி, ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,, மருதமலை, சங்கரன்கோவில்.
மிருகசீரிடம் 3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை சங்கரன் கோவில்.
மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் கண்ணப்ப நாயனார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:55

திருவாதிரை

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

 

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சிவன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் வடுகபைரவர், வடுகூர்

வழிபடவேண்டிய தெய்வம் அபயவரதீஸ்வரர்-சுந்தரநாயகி- பட்டுக்கோட்டை

பலன்கள் த்ரிநேத்ரசக்திகொண்டதலம்

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சோழீஸ்வரர்-சோங்காலிபுரம்,(குடவாசல்), நடராஜர்-சிதம்பரம், அபயவரதீஸ்வரர்-அதிராமாபட்டினம்.

வழிபடவேண்டிய கிரகம் ராகு

நட்சத்திரத்திற்குரிய மரம் செங்காலி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-தோமர

வழிபட வேண்டிய சித்தர்கள் திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் கூற்றுவ நாயனார், சடைய நாயனார், கணநாத நாயனார், விறன்மிண்ட நாயனார், அரிவாட்ட நாயனார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:59

புனர்பூசம்

Written by

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

 

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை அதிதி

வழிபடவேண்டிய பைரவர் தலம் விஜயபைரவர்-பழனி

வழிபடவேண்டிய தெய்வம் அதிதீஸ்வரர்-வாணியம்பாடி-ஜோலார்பேட்டை-17

பலன்கள் நல்லவாக்குசக்தி,அதிதி தானத்தால் சந்ததி வளர்ச்சி.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் பிரம்மபுரீஸ்வரர்-சிர்காழி, வீர்ராகவப் பெருமாள் திருவள்ளூர், நெல்லையப்பர்-திருநெல்வேலி, பாசூர்நாதர்- திருப்பாசூர், கிருபாபுரீஸ்வரர்- திருவெண்ணெய் நல்லூர்.

வழிபடவேண்டிய கிரகம் குரு(வியாழன்)

நட்சத்திரத்திற்குரிய மரம் மூங்கில்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-வக்ரதந்த

வழிபட வேண்டிய சித்தர்கள் புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 20:02

பூசம்

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

 

பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை பிரகஸ்பதி

வழிபடவேண்டிய பைரவர் தலம் ஆசினபைரவர்-ஸ்ரீவாஞ்சியம்

வழிபடவேண்டிய தெய்வம் அட்சயபுரீஸ்வரர்-அபிவிருத்திநாயகி-விளங்குளம் பேராவூரணிஅருகில்.

பலன்கள் அன்னதானம்-சனிகிரகபலன்கள் நன்மை.திருமண பிராப்தி.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சாரநாதப் பெருமாள்-திருச்சேறை, அரிசிலிநாதர்-ஒலிந்தியாப்பட்டு, பசுபதீஸ்வரர்-ஆவூர்(குடந்தை), உமாமகேஸ்வரர்-கோனேரிராஜபுரம், பருத்தியப்பர்-பரிதிநியமம், திருமேனிநாதர்-திருச்சுழி, பரமசுவாமி-அழகர்கோவில்.

வழிபடவேண்டிய கிரகம் சனி

நட்சத்திரத்திற்குரிய மரம் அரசு

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- விசால நேத்ர

வழிபட வேண்டிய சித்தர்கள் பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

வழிபடவேண்டிய நாயன்மார்கள் நமிநந்தி நாயனார் , சக்தி நாயனார், முனையடுவார் நாயனார், செருத்துணை நாயனார், சேக்கிழார்

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 08:59

ஆயில்யம்

Written by

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

 

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை ஆதிசேஷன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் பாதாளபைரவர்-காளஹஸ்தி

வழிபடவேண்டிய தெய்வம் கற்கடேசுவரர்-அருமருந்துநாயகி- திருவிசநல்லூர்-2,

பலன்கள் ஆயில்யம்,அஷ்டமி,தேய்பிறை 3ம் சேரும்நாள் நோய் நிவாரணசக்தி.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சாட்சிநாதர்- திருப்புறம்பயம், கற்கடேஸ்வர்ர்-திருந்து தேவன்குடிநாட்டான்கோவில், சங்கரலிங்க சுவாமி-சங்கரன்கோவில், விருத்தபுரீஸ்வரர்-திருப்புனவாயில், வல்வில்ராமன்-திருபுள்ளபூதங்குடி, ஆதிவராகப் பெருமாள்-திருவிடந்தை.

வழிபடவேண்டிய கிரகம் புதன்

நட்சத்திரத்திற்குரிய மரம் புன்னை

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-ஆனந்தபைரவ பக்த

வழிபட வேண்டிய சித்தர்கள் ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை,பாபநாசம்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் அதிபத்த நாயனார், புகழ்துணை நாயனார், சோமாசி மாற நாயனார்

$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27016862
All
27016862
Your IP: 3.133.146.143
2024-04-16 11:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg