Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 20:20

மச்ச சம்ஹாரமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!


மச்ச சம்ஹாரமூர்த்தி!

 

சோமுகாசுரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரம் பெற்றதனால் அகந்தைக் கொண்டு பிரம்மன் முன் தோன்ற, அசுரனைக் கண்ட பிரம்மன் அஞ்சி நிற்க உன் வலிமை இவ்வளவுதானா எனக்கேட்டு அவர் கையிலிருந்த நான்மறைகள் நான்கினையும் பறித்துக்கொண்டு கடலிற் சென்று மறைந்தான்.
என்ன செய்வது என அறியாமல் பிரமன், திருமாலிடம் முறையிட, கோபங்கொண்ட திருமால் மீன் வடிவமெடுத்து கடலினுள் புகுந்து சோமுகாசுரனைக் கண்டு அவனுடன் சண்டையிட்டு அவனுடைய ரத்தத்தைக் குடித்து நான் மறைகளையும் மீட்டார். பிரம்மனிடம் அவைகளை ஒப்படைத்தார். ஆனால் அதன் பின்னரும் ஆவேசம் அடங்காமல் ஏழு கடலையும் ஒன்றுகூட்டி கலக்கினார். இதனால் உலக உயிர்கள் துன்பமடைந்தன. தேவர்கள் இதனை சிவபெருமானிடம் கூற மீன்பிடி வலைஞராக உருவெடுத்து ஏழு கடலையும் மறைக்கத் தக்கவாறு வலை வீச அந்த மீன் அகப்பட்டது. அதன் விழிகளைப் பறித்து அதன் வலிமையைக் குன்றச் செய்தார். தேவர்கள் விருப்பப்படி அந்த மீனின் கண்களை திருமேணியில் கையில் மோதிரமாக அணிந்தார். கண்ணிழந்த மீன் வடிவம் பெற்ற திருமால் தன் உணர்வு அடைந்து வைகுந்தம் சேர்ந்தார்.
பிரம்மனிடமிருந்து நான்மறைகள் நான்கையும் கவர்ந்த சோமுகாசுரனை அழிக்க மச்ச அவதாரம் கொண்ட திருமால் அசுரனை அழித்த பின்னும் ஆவேசம் அடங்காமல் இருக்க மீன்பிடிக்கும் வலைஞராக உருவெடுத்து மச்சத்தைப் பிடித்து அதன் வலிமைதனைக் குன்றச் செய்த வடிவம் மச்சாரி/ மச்ச சம்ஹார மூர்த்தி.

#####

Read 6944 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:56
Login to post comments