gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 08 September 2017 03:09

மகாசதாசிவம்!

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளே ஒப்பிலாப் போற்றி!
உயர்வற உயர்நலப் புகலே போற்றி!
எண்தோனவனின் செல்வா போற்றி!
இமயச் செல்விமகனே போற்றி!
காங்கேயன் மகிழ் தமையா போற்றி!
கற்பக மூர்த்தியாம் கடவுளே போற்றி!


மகாசதாசிவம்!

 

ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து முகத்தில் ஒவ்வொன்றுக்கும் ஐந்து முகங்கள் என 25 மகேஸ்வர வடிவ முகங்களுடன் சிவனின் அளவிலா ஆற்றலை உணர்த்துதல். துய்மையின் சிகரமாக விளங்கும் மகாசதாசிவர் 25 முகங்கள் 50 திருக்கைகள் கொண்ட போக, அதிகாரம் அடங்கிய மூர்த்தியாவார். கயிலையில் மலர்ந்த தாமரைமேல் எண்ணற்ற சூரியர்களிடத்தில் காணப்படும் பேரொளியை உடையவராய், வெண்ணீறு பூசி, பாம்பு பூணூல் அணிந்து, ஒவ்வொரு முகத்திலும் முக்கண்ணுடன் அமர்ந்திருப்பார். கயிலையிலிருந்து அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவர். அவரது 25 வலது கைகளில் அபயம், சக்கரம், சூலம், உளி, அம்பு, கதை, தாமரை, கத்தி, தோமரம், சத்தி, பிராசம், பரசு, பாம்பு, கலப்பை, அங்குசம், அக்கமாலை, சுரிகை(சிறுகத்தி), கொடி, தண்டம், வச்சிரம், குந்தம், அஸ்திகம் ஷட்ரம், ரம்பம், பிண்டி, பாலம் ஆகியனவும் 25 இடது கைகளில் வரதம், வில், மான், சங்கம், கேடயம், பாசம், கோடாரி, முத்தகம், உடுக்கை, மணி, சுவடி, உருத்திர வீணை, கபாலம், முண்டம், கட்வாங்கம், பூசுண்டி, பரிகம், பலகை, பட்டசம், பிரம்பு, கமண்டலம், அனல், கத்தரிக்கோல், உலக்கை, மயில்தோகை ஆகியனவும் வைத்திருப்பார். காட்சி: கோபுரங்களில் சுதைவடிவில்-மதுரை, காஞ்சிபுரம், வைத்தீஸ்வரன்கோவில், தில்லை.

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 03:06

சதாசிவம்!

ஓம்நமசிவய!

வரத விநாயகா போற்றி!
ஜோதி விநாயகா போற்றி!
விஜய விநாயகா போற்றி!
வினைதீர் விநாயகா போற்றி!


சதாசிவம்!

 

உச்சியில் ஈசானம் சுத்த பளிங்கு நிறத்துடனும், கிழக்கில் தத்புருடம் கோங்கின் பூ நிறத்துடனும், தெற்கில் அகோரம் கருநிறத்துடன் அவிழ்த்த தாடியுடனும், வடக்கில் வாமதேவம் செம்பவள நிறத்துடன் பெண்முகத் தோற்றத்திலும், மேற்கில் சத்யோசாதம் பால் நிறத்துடன் குழந்தை முகத்தோற்றத்திலும் வெளிப்படையாக ஐந்து முகங்களைக் கொண்டு முகங்கள் தோறும் மூன்று கண்களுடனும் 10திருக்கரங்களுடன் சிவ ஆகமத்தை உபதேசிப்பவர்.
திருமுடிகளில் கொன்றை மாலையையும், பிறைச்சந்திரனையும் சூடி கழுத்தின் கீழ் சுத்த பளிங்கின் நிறத் திருமேனியும் வலப்பக்க ஐந்து கைகளில் அபயம், சூலம், வேல், மாத்திரைக்கோல், தமருகம் ஆகியனவும், இடப்பக்க ஐந்து கைகளில் வரதம், மாதுளம்பழம், நாகம், செபமாலை, நீலோத்பலம் ஆகியவற்றுடன் இரு திருவடிகள் கொண்டு பதுமாசனத்தில் எழுந்தருளியிருப்பார்.
சிவ வடிவத்தில் சதாசிவ வடிவமே எல்லா வடிவங்களுக்கும் பிறப்பிடமகும். ஆகமம் என்பதில் ‘ஆ’ என்பது ஞானமும், ‘க’ என்பது மோட்சமும், ‘ம’ என்பது ஆணவ நாசமும் ஆகும். உலக உயிர்களின் ஆணவத்தை நாசம் செய்து அனைத்து உயிர்களையும் உய்விப்பதற்காக தொன்றியவையே ஆகமங்கள். ஆகமங்களை அருள தோன்றிய வடிவம் சதாசிவம். அவரிடமிருந்துதான் 28 சைவ ஆகமங்கள் தோன்றின. அவைகள் காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூட்சமம், சகஸ்ரம், அம்சுமத், சுப்ரபேதம், விசயம், நிச்வாசம், வாயம்புவம், அனலம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோத்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனப்படும்.
மேலும் அவரிடமிருந்துதான் நான்மறை வேதங்களும் தோன்றின. வேதமும் ஆகமங்களும் சதாசிவபெருமானால் அருளப்பட்டதால் அவை தம்முள் சிறிதும் பேதமின்றி இயங்கும் தன்மையுடையவை. காட்சி: மதுரை, சுதைவடிவில்- மதுரை, திருவிடை மருதூர், தஞ்சை.

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 03:03

முகலிங்கம்!

ஓம்நமசிவய!

வெற்றி விநாயகா போற்றி!
வேத விநாயகா போற்றி!
வீர கணபதியே போற்றி!
வைர விநாயகா போற்றி!


முகலிங்கம்!

 

உருவ வழிபாட்டில் மூர்த்தங்களின் வழி எளிதாக இறைவனை அறிந்து பயன்பெற ஒன்று முதல். ஐந்து வரை பூசாபாகத்தில் முகம்- அமைதல் மரபு. அவை 4வகை. 1.ஆட்யம்- லிங்கத்தின் சிவ பாகத்தில் 1000 முகங்களுடன் இருப்பது. 2.அநாட்யம்- முகம் எதுவும் இல்லாதது. 3.சுரேட்யம்- பூசா பாகத்தில் 108 முகம் உடையது. 4.சர்வசம்- இது முழு உறுப்புகளுடன் ஒருமுக (கிழக்கு நோக்கிய தத்புருட முகம்) இரண்டுமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், மேற்கு நோக்கிய சத்யோசாதம்), மூன்றுமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம்), நான்குமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம், மேற்கு சத்யோசாதம்), ஐந்துமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம், மேற்கு சத்யோசாதம் உச்சியில் ஈசானம்) என்ற ஐந்து வகை முகங்களுடையது.
இவ்வகை லிங்கங்களை கருவரையில் வைக்கும்போது 4கோபுரங்களை உடைய கோவிலில் 4/5 முகலிங்கங்களையும், 3கோபுரங்களை உடைய கோவிலில் 3 முகலிங்கங்களையும், 2கோபுரங்களை உடைய கோவிலில் 2 முகலிங்கங்களையும், 1கோபுரத்தை உடைய கோவிலில் 1 முகலிங்கத்தையும் அமைக்க வேண்டும்.
8- முகம் அஷ்டதார
16- முகம் சந்திரதாரா
32- முகம் தர்மதாரா
64- முகம் சகுசஷ்டி- சிவலீலா சம்த்த லிங்கம்

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 02:52

சிவலிங்கம்!

ஓம்நமசிவய!

விக்னேஸ்வரா போற்றி!
வினை தீர்க்கும் விநாயகா போற்றி!
விஷ்னு விநாயகா போற்றி!
வீம விநாயகா போற்றி!


சிவலிங்கம்!

 

இலிங்கத் திருவடிவம்- குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனை வழிபாடும் பொருட்டு ஒரு குறியின்கண் (அடையாளமாக) வைத்து வணங்குவது இலிங்கவடிவம் ஆகும். ஒன்றும் புலப்படாத அருவுருவிற்கும், புலப்படும் ஓர் அண்ட வடிவமான பிழம்புருவானது பற்றி உருவமும் கை, கால் முதலிய உருப்புகள் எவையும் புலப்படாமை பற்றி அருவமும் ஒன்றாக காணப்படுவதால் சிவலிங்கம் ‘அருவுருவத் திருமேணி எனப்படும்.

ஆக்கமும் அறிவுமாகிய சம்சாரமானது லயத்தை அடையும்போது பூதாசலங்கள் யாவும் சிருஷ்டி காலத்தில் எவ்வாறு தோன்றியதோ அவ்வாறே லயத்தை அடைகின்றன. சிவலிங்கம் அவற்றை படைக்கும் தன்மை வாய்ந்ததால் லிங்கம் எனப்பட்டது. நிட்களமாயும் சாந்தமாயும், மனதிற்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டதுமான அது சம்சாரசாகரத்தில் உழலும் சகல பூதாசலங்களுக்கும் முக்தியைக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. எல்லாவற்றிலும் வியாபித்து அவற்றுள் மறைந்து தன் செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றது. சிவலிங்கத்திலிருந்து சாந்தி தத்துவமும் அதிலிருந்து சக்தி தத்துவமும் அதிலிருந்து நாதமும் தோன்றியது. லிங்கம், சாந்தி, சக்தி மூன்றும் நிட்களம் எனப்படும் உருவமற்றவையாகும்.

சிவலிங்கம் சகலம்-எல்லாம் எனப்பட்டால் நாதம் பிந்து இரண்டும் மிச்சரம் எனப்படும். நாதம் லிங்க- சிவ வடிவமென்றால் பிந்துவே பீடம்- சக்தி வடிவம். லிங்கமும் பீடமும் ஒன்று சேர்ந்து இருப்பதால் எப்படி நெருப்பும் அதனுடே வெப்பமும் இருப்பதுபோலச் சிவமும் அதனுள்ளே சக்தியும் இருக்கின்றது.

"லிம்’ என்பது லயத்தையும் (ஒடுங்குவது) ‘கம்’ என்பது வெளிவருதலையும் குறிக்கும். எனவே லிங்கம் என்றால் சித்தரித்தல் எனப் பொருள்படும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களாலும் பிரபஞ்சத்தை சிவன் சித்தரிக்கின்றபடியால் சிவலிங்கம் எனப்பெயர். உலகத்தே தோன்றிய அனைத்துப் பொருள்களும் சிவ வடிவக்கூறுகளே என்பது அருளாளர்களின் கருத்து. அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே என்பதுபோல பஞ்ச பூதங்களைத் தன்னுருவாக கொண்ட சகுணப் பர சிவத்தை உலக நன்மைக்காக இலிங்க வடிவமாக்கினர்.

இலிங்கத்தின் அடிப்பாகம் நாற்கோணவடிவமாய் நிலத்திற்குத் தலைவனான படைப்புக் கடவுள் பிரம பாகத்தை உணர்த்துவதாகும். மத்திய பாகம் எட்டுப் பட்டைகளையுடைய எண்கோண வடிவமாய், வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவீகரணி, பலப்பிரதமனி, சர்வப்பூததமனி, என்ற திருமாலின் எட்டு சக்திகளுடன் மனோன்மணி சக்தியும் சேர்ந்து உணர்த்தும் விதமாக அடிப்பாகத்தினோடு பொருத்தப்படும். நீருக்கு அதிபதியான காத்தல் ஸ்திதித் தலைவன் விஷ்ணுபாகம்- ஆவுடை எனப்படும். மேலுள்ள பாகம் நெருப்பிற்கு தலைவனின் சிவபாகமாகும். நிலம்-பூமிக்குள் மறைந்து ஒடுங்கியும்,, நீர்- அபிசேட நீரைத் தாங்கி விரிந்து நின்றும், நெருப்பு-மேலோங்கி சோதிபோல் ஒளியுடனிருக்கும். இந்த மூன்றும் சேர்ந்த அருவமும் உருவமும் அற்ற ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி வடிவம் சிவலிங்கம். எனவே ஒரு லிங்க வடிவம் என்பது பிரம்மன், விஷ்ணு, சிவன் -மகா உருத்திரன் ஆகிய மூவரின் ஒட்டு மொத்தமான ஓர் உருவமாகும்.லிங்காபரணத்தில் சிவனுடன் உமாதேவியும் –உமையொரு பங்கனாக சேர்ந்தே உள்ளார்.

பொதுவாக இலிங்கங்கள் ஆறுவகை.
அண்டலிங்கம்- அண்டம்- உருண்டையாக இருப்பதால் உலகம் அண்டம் எனப்பட்டது. எழுத்து, பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை ஆகிய ஆறும் உயிர்களின் இன்ப துன்ப நுகர்ச்சிக்கும் முக்திக்கும் வழியாக இருக்கும் இவைகள் அத்துவாக்கள் எனப்பட்டது. இந்த அத்துவாக்களை லிங்கத்தின் பகுதிகளாக கருதி வழிபடுவது அகண்டலிங்க வழிபாடு.
பிண்டலிங்கம்-அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. எனவே மேலே கூறிய ஆறு அத்துவாக்களும் மனித உடலில் உள்ளபடியால் உடலின் உள்ள ஆறு ஆதாரங்களில் அவற்றை நினைந்து வழிபடும் அகவழிபாடு பிண்டலிங்க வழிபாடு ஆகும்.
சதாசிவலிங்கம்- இறைவனின் சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகிய ஐந்து பஞ்சபிரம மந்திரங்கள் வடிவமாக கொண்டுள்ளது. இம்மந்திரங்கள் அருவமாய் ஓர் உடல் இரு திருவடி 5 திருமுகங்கள், 10 திருக்கரங்கள், 15 திருக்கண்கள், உடைய சதாசிவ திருமேனியில் பதிவு பெறுவதால் அந்நிலையில் வழிபாடு செய்வதால் சதாசிவலிங்கம் அருவுருவமானது.
ஆன்மலிங்கம்- அண்டம், பிண்டம், சதாசிவம் போன்று மும்மலங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு தூயதாய் நிற்கும் உயிர் சிவனாகும். இது ஆன்ம லிங்கம் என்றாகும். சிவயோகியர் வழிபடுதலுக்குரியது..
ஞானலிங்கம்- ஞானமே உருவான சக்தியும், சிவனும் ஒன்றித்து ஒருவரை மற்றவர் பிரியாது நின்று உயிர்களுக்குச் சிவஞானத்தை நல்கும் நிலையை உணர்த்துவது ஞானலிங்கம். சிவனின் பதமாகிய ’சி’ காரத்தை முன் நிற்குமாறு சொல்லி பின்னர் பார்வதியின் பதமாகிய ‘வ’ காரத்தைச் சொல்லி ‘சிவ’ எனும் மகாகாரணத்தின் உண்மையை உணர்ந்து அது உணர்த்தும் ஞான நிலையில் செபித்தால் ஞான லிங்கம் வேளிப்பட்டு பேரோளியாய் காட்சியளிக்கும். சிவ ஞானிகள் வழிபாட்டுக்குரியது.
சிவலிங்கம்- பரமசிவம் எனும் இந்த லிங்கம் சிவன், சக்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பது வடிவங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. சிவலிங்கம் பேரானந்தத்தை அனுபவிக்குமாறு அருள்பாலிப்பது மட்டுமல்லாமல் ,இஃது அன்றும் இன்றும் என்றும் அருள் பாலிப்பது என்றும் இதுவே அயன் முதல் சிவன் வரையுள்ள ஒன்பது வடிவங்களுக்கும் முதலாவது என திருமூலர் கூறியுள்ளார். அதி தீவிர பக்குவம் அடைந்த சிவ ஞானிகளுக்கு காட்சியளித்து சிவானந்தத்தை தரும். சிவலிங்கம் இருவகைப்படும்.
1. சலலிங்கம் (சலம்- புடை பெயர்வது) மண், கல், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், சந்தனம், வன்னி முதலிய மரங்களாலும் செய்யப்படுபவை.
2. அசலலிங்கம் (அசலம்- புடை பெயராதது) ஒன்பது வகைப்படும். 1.சுயம்பு லிங்கம்.-தான்தோன்றி லிங்கம். எவராலும் தோற்றுவிக்கப் பெறாமல் இயற்கையாகத் தாமே தோன்றிய லிங்கங்கள். 2.தைவீகலிங்கம்- திருமால், நான்முகன் ஆகியோர்களால் நிறுவப்பட்டு வழிப்படப்படும் லிங்கங்கள். 3.காணலிங்கம்- கணபதி, முருகன் முதலான தேவகணங்களால் நிறுவப்பட்டு பூசை செய்யப்பட்டு வருபவை. 4.மானுடலிங்கம்- மானிடர்களால் நிறுவப்பட்டு வழிப்படப்படும் லிங்கங்கள். இவை அட்டோத்திரலிங்கம் (108சிவலிங்கங்களை உடையது), சகஸ்ரலிங்கம்(1008 வரைகோடுகளில் காண்பது), தாராலிங்கம் (பூசா பாகத்தில் 64 பட்டைகளுடன் தீட்டிய நிலை, முகலிங்கம் (உருவ வழிபாட்டின் மூர்த்தங்களின் வழி இறைவனை அறிந்து பயன் பெறமுன்னோடி) என 4வகைப்படும். 5.ஆரிடலிங்கம்- முனிவர்களால் நிறுவப்பெற்று வழிபடப் படுபவை. 6.அசுரலிங்கம்- அசுரர்களால் நிறுவப்பட்டவை. 7.சுரலிங்கம்- தேவர்களால் நிறுவப்பட்டு வழிபட்டது. 8.பாண லிங்கம்- பாணாசுரன் நிறுவி வழிபட்டது. இது சுயம்பு லிங்கத்திற்கு இனையானவை.-காமிக ஆகமம். 9.சணிகலிங்கம்- மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், நாணல், மலர்மாலை, சர்க்கரை, அரிசிமாவு, திருநீறு, பழம், தண்ணீர், தயிர் ஆகிய 16 பொருள்களால் செய்து நிறுவப்பட்டுபூசை செய்ததும் கைவிடப்படுபவை.

லிங்க பூஜை பலன்கள்!
மண்லிங்கம் -பூஜை விருப்பங்கள் நிறைவேறும்.மலர்களால் அர்ச்சனை-சித்தி
ரத்தினலிங்கம் -பூஜை லட்சுமிகடாட்சம்.
பவழலிங்கம் -பூஜை நிலையான செல்வங்கள்.
உலோகலிங்கம்-பூஜை தர்மம் செய்தபலன்கள்.
சிவலிங்க பிரதிஷ்டை செய்தவர்கள் முக்தி
சிவலிங்க பிரதிஷ்டையைப் பார்த்து தானும் அவ்வாறு சிவலிங்க பிரதிஷ்டை செய்ய நினைத்தால் அவர்களின் பாவங்கள் அக்கணமே மறையும்.
சிவனுக்கு கோயில் எழுப்புவர்கள் தங்களது நூறு தலைமுறையில் உள்ள பிதுர்களுக்கு சிவபதி அடையும் பாக்கியம்.
கருங்கல்லால் கோயில் எழுப்புவர்கள் அத்தனை ஆயிரம் ஆண்டுகள் சிவலோகத்தில் இருக்கும்பேறு என ஆகமங்கள் பகர்கின்றன

சகஸ்ரலிங்கம்!-
உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தவம் புரிந்த ஆயிரம் முனிவர்களுக்கு காட்சியளித்து தன்னிடமிருந்த சிவ ஆகமங்களை தந்து தான் திரும்பி வரும் வரை பாதுகாக்கும்படி சொல்லி மறைந்தார். குழந்தை வடிவில் தன்னை தரிசிக்க விரும்பி தவமிருந்த மண்டோதரிக்கு அருள்புரிய இலங்கை சென்று காட்சி அருளியபோது வந்திருப்பது யார் என்பதை அறிந்த மண்டோதரி ஆனந்தப்பட்டு சிவ குழந்தையை எடுத்துக் கொஞ்ச அங்கு வந்த சிவநேசனான இராவணன் உண்மையறிந்து - குழந்தையை எடுக்க முற்படும்போது இறைவன் மேனியை இலங்கேஸ்வரன் தீண்டிய உடன் மறைந்து இங்குத் தீர்த்தக் குளத்தில் தீப்பிழம்பாக தோன்ற ஒரு முனிவர் நீங்கலாக 1000 முனிவர்கள் பரவசமடைந்து குளத்தில் குதிக்க, அந்த முனிவர் இறைவனின் ஆகமங்களைக் காப்பது தன் கடமை என அப்படியே அமர்திருந்தார். அவர்க்கு ரிஷிபாரூடராக காட்சி. அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்ய அருள் - அவரே மாணிக்கவாசகர். குளத்தில் குதித்த முனிவர்கள் லிங்கங்களாய் மாற அவர்களின் நடுவே தானும் லிங்கமாய் வீற்று சகஸ்ரலிங்கமாய் காட்சி அருள்.


ஜோதிர்லிங்கங்கள்!
குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டு திகழ்ந்திருப்பது சிவலிங்கமாகும். சிவம் என்ற சொல்லுக்கு நன்மை, முக்தி, மங்களம், செம்மை, உயர்வு, களிப்பு, அருவுருவ நிலை எனப் பலப்பொருள் கூறலாம். செம்மையும், நன்மையும், மங்கலமும் உடையான் என்பதற்காகச் சிவனைச் சிவம் என அழைத்தனர். எண் குணத்தானாகிய சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் ஆவான். நான்முகனும் திருமாலும் அடிமுடி காணாதவாறு அனைத்து அண்ட உலகங்களையும் அளந்து நின்ற அரும் பெரும் ஜோதிதான் லிங்கம்! சோதி வடிவினனாகச் பரஞ்சோதியாய் சிவன் தோன்றிக் காட்சி கொடுத்த தலங்களே ஜோதிர்லிங்கத் தலங்கள். அவை திரியம்பகம், குசுமேசுவரம், நாகேசுவரம், வைத்தியநாதம், பீம்சங்கரம், மகாகாளம், ஓங்காரேசுவரம், கேதாரம், விசுவேசம், சோமநாதம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் ஆகும்.

#####

வியாழக்கிழமை, 07 September 2017 19:38

சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்!

ஓம்நமசிவய!

வக்கிர துண்ட விநாயகா போற்றி!
வாதாபி கணபதியே போற்றி!
விகட கணபதியே போற்றி!
விக்கின விநாயகா போற்றி!


சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்!

 

நான்முகனின் மகன் தக்கன்-தட்சன். தன் 27 நட்சத்திரப் புதல்வியரை சந்திரனுக்கு மணம் முடிக்க சந்திரன் அந்த 27-வரில் ரோகினி, கார்த்திகை ஆகிய இருவரிடம் மட்டும் காதல் கொண்டிருந்தான். மற்ற பெண்கள் இதனை தன் தந்தையிடம் சொல்ல அவன் சந்திரனுக்கு தேய்ந்துபோக சாபமிட்டான். சந்திரன் சிவனிடம் சரணடைந்தான். எத்தனை பாவங்கள் செய்தாலும் மன்னிப்பு வேண்டினால் மன்னித்து அருளும் சிவன் காலில் விழுந்த சந்திரனை தன் தலையில் சூடிக்கொண்டார்.
இந்த வடிவம் 1.கேவல சந்திரசேகரர், 2.உமாசகித சந்திர சேகரர், 3.ஆலிங்கன சந்திரசேகரர் என மூவகைப்படும்.
1.கேவல சந்திரசேகரர்- உமை அருகில் இன்றி சிவன் மட்டும் பிறைசூடிய நிலை இதுவாகும். கேவல என்றால் தனித்து நிற்றல் என்பதாகும். நான்கு கரங்கள். வலக்கரங்கள் இரண்டிலும் டங்கமும், அபயமும் கொண்டிருப்பார். இடக்கரங்களில் மானும், வரதமும் விளங்கும். வலப்புறம் / இடப்புறம் தலையில் பிறை திகழும்.
2.உமாசகித சந்திர சேகரர்- நின்றகோலத்தில் பின் இருகரங்களில் மான் மழு ஏந்தி, முன் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகள் திகழக் காட்சி. இடப்பக்கம் உமா நின்ற கோலத்தில் வலக்கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி இடக்கரத்தை தொங்கவிட்டவாறு காட்சி.
3.ஆலிங்கன சந்திரசேகரர்- 1.சந்திர சேகரரின் இடது கை தேவியின் இடது மார்பகத்தின் அருகில் தழுவியபடியும், தேவியின் வலது கையில் சிவந்த தாமரை மலர் இருக்கும். 2.தேவியின் வலக்கரம் சிவனின் வலது மார்பகப்பகுதியை தழுவியபடியும் இடது கரம் தமரை மலருடனும் அல்லது 3.சிவன் உமை இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடியும் மூன்று நிலைகளில் இருக்கும். எல்லா நிலைகளிலும் இறைவன் பிறை சூடி இருப்பார்.
பொருந்திருவிழாக்களில் காலையில் சந்திர சேகரரும் இரவில் சோமாஸ்கந்த மூர்த்தியும் உலா வருவார். கொடியேற்றம் இல்லாத விழாக்களில் சந்திரசேகர் வலம் வருவார். முன்வினை அற்றுப்போகச் செய்பவர் சந்திர சேகரர். காட்சி: மதுரை, திருவாவடுதுறை, மருதாந்த நல்லூர், கோயிலூர்

&&&&&

வியாழக்கிழமை, 07 September 2017 19:35

கல்யாணசுந்தரர்-மணவழகர்!

ஓம்நமசிவய!

லம்போதர கணபதியேபோற்றி!
வல்லபை விநாயகா போற்றி!
வரசக்தி விநாயகா போற்றி!
வன்னி விநாயகா போற்றி!


கல்யாணசுந்தரர்-மணவழகர்!

 

ஞானமே வடிவாக விளங்கும் இறைவியைச் சத்தியமே வடிவான இறைவன் கூடுவதையே- சத்ய ஞான இனைப்பே இறைவன் திருமணம். எங்கு சத்தியமும் ஞானமும் இனைகிறதோ அங்கு ஆனந்தம் கிட்டும். அருள் சத்தியோடு உலகம் இன்புற்றிருக்க ஞானசிவன் கொண்ட இனைப்பின் ஆனந்த வடிவம் கல்யாணசுந்தரர். திருமணத்தடை விலக அருள்.
இறைவனும் உமாதேவியும் கிழக்கு நோக்கி இருப்பர். கன்னிகாதானம் செய்துதர சகோதரன் திருமால் தன் இரு மனைவியருடன் எழுந்தருளியிருப்பர். மணமக்கள் அழகுக்கு அழகு செய்தாற்போல் அலங்கரிக்கப்பட்டிருப்பர். திருமால் தங்க கலசத்தில் நீருடன் தாரைவார்த்துக் கொடுக்க காத்திருப்பர். உமாதேவியர்க்கு இருபுறமும் சேடியர்களாக திருமகளும் மணமகளும் நிற்க நான்முகன் திருமணவேள்வி செய்வார். சுற்றிலும் அட்ட வித்தியேசுவரர், எண்திசைக் காவலர், சித்தர்கள், யட்சர்கள், முனிவர்கள், கந்தருவர், சப்தமாதர் மற்றும் உள்ள தேவருலகினர் மகிழ்ச்சியுடன் காத்திருப்பர். சிவபெருமான் தனது வலக்கரம் நீட்டி உமையின் திருக்கரம் பற்ற ஆயத்தமாக நிற்பர். அவரது இடக்கரம் வரத முத்திரை கொண்டிருக்கும். பின் கரங்களில் மானும் மழுவும் விளங்கும். தலையில் சடாமகுடமும், பிறைசூடி, மாலை, கேயூரம், பூனூல், பாம்புகுண்டலம் அணிந்து அழகுடன் இருப்பர். பாம்பு தட்சனை அரையிலும் புட்கரனை மாலையாகவும் அணிந்திருப்பார். அன்னை தனது வலக்கரத்தை நீட்டி பெருமானுடைய கரம் பற்ற ஆயத்தமாக இருப்பார். இடக்கரம் நீலோற்பல மலரை ஏந்தியிருக்கும்.
இல்லறமாகிய நல்லறத்தை மானிடர்களுக்கு உணர்த்த தத்துவப் பொருளாய் மணவழகராகத் திருமேனி கொண்டு பல்வேறு திருத்தலங்களில் அருள் புரிந்தவர் சிவபெருமான். காட்சி:கள்ளழகர் நீர் வார்க்க சுந்தரர் மீனாட்சி கலியாணம்- மதுரை, காந்திமதி அம்மையார் திருமணம்-திருநெல்வேலி, அல்லியங்கோதை திருமணம்-திருவாரூர், யாழைப்பழித்த இன்மொழியாள் திருமணம்- திருமறைக்காடு, அறம்வளர்த்த நாயகி திருமணம்-திருவையாறு, பெருநலமுலையம்மை திருமணம்-திருவிடை மருதூர், காமாட்சி திருமணம்-காஞ்சி, மங்களநாயகி திருமணம்- குடந்தை ஆகியன சிறப்புடையவை.

#####

ஓம்நமசிவய!

மோதக விநாயகா போற்றி!
யாணை முகத்தனே போற்றி!
ரத்தின விநாயகா போற்றி!
ராஜகணபதியே போற்றி!


இடபாரூடர்-ரிஷபாரூடர், விருஷபவாகனன்,!


முப்புரங்களை அழிக்க சிவபெருமான் நினைத்தபோது விண்ணோர் அனைவரும் தங்களுடைய ஆற்றல்களுக்கு ஏற்ப உதவியாய் நின்றனர். சூரியனும் சந்திரனும் சக்கரங்களாய், பூமி தேராகவும், மேரு வில்லாகவும், கொண்டு போருக்குச் செல்லும்போது விநாயகர் வழிபாடு செய்யாததால் தேரின் அச்சு முறிந்தது. இந்நிலையில் திருமால் காளை (இடபம், விடை) வடிவங்கொண்டு சிவனைத் தாங்கி நின்றார். இந்நிலையே விடையேறுச் செல்வர் திருவடிவமாகும்.
சிவன் நின்றகோலத்தில் வலக்கால் நேராகவும் இடக்கால் சற்று வளைந்தும், வலக்கரத்தில் ஒரு விரல் தடிப்புள்ள மூன்று வளைவுகள் கொண்ட வச்சிரதண்டாயுதமும் பின்வலக்கரத்தில் உடுக்கை, இடக்கரத்தில் மானும் மழுவும், தலையில் சடாமகுடமும் அருகிலுள்ள தேவியின் வலக்கரத்தில் நீலோற்பல மலரும் இடக்கரம் தொங்கிய வாறும் இருக்கும். இந்தக் கோலவடிவமே சிவன் அடியார்களுக்கு காட்சி அருளி கருணையுடன் பாதுகாப்பு அளிப்பார். அம்மையும் அப்பனும் தருமத்திற்கே எந்தக் காலகட்டத்திலும் வெற்றியினை அருள்வார்கள் என்பதை நமக்கு நினைவு படுத்தும் வடிவம்-இடபாரூடர்-ரிஷபாரூடர், விருஷபவாகனன்,!. விடையேறிய விமலர் காட்சி: மதுரை, திருவாவடுதுறை,விராதனூர்(மதுரை)

&&&&&

வியாழக்கிழமை, 07 September 2017 19:27

நடராஜர்!

ஓம்நமசிவய!

மயூர விநாயகா போற்றி!
முக்கண் விநாயகா போற்றி!
முக்குருணி விநாயகா போற்றி!
முச்சந்தி விநாயகா போற்றி!

#####


நடராஜர்!

 

நடராஜர்

அம்பலத்தில் ஆடும் நடராஜரின் இயக்கத்தினால் உலகம் இயங்குகின்றது. ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் உயிர்களுக்கு அருள் செய்யவே! அந்த ஆட்டத்தை நிறுத்தினால் உலக இயக்கம் நின்று விடும் என்ற தத்துவத்தை விளக்க முன்னோர்கள் ‘உலகு அம்பல விதம்’ எனக் கூறியது மருவி ‘உலகம் பலவிதம் என்றானது.

உலகை இயக்கும் அந்த இறைவனை வழிபடும் முறை மூன்று வகைப்படும். புறத்தேயிருந்து வழிபடுவது அபரம் எனப்படும். தெய்வம் வேறு தான் வேறு என நினையாமல் வழிபடுவது பரம் எனப்படும். அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் வழிபடுவது பராபரம் எனப்படும்.

இந்த மெய்ப்பொருள் அறிவாகிய ஞானம் அபரஞானம் என்றும் பரஞானம் என்றும் இருவகைப்படும். அபரம்- ஆரம்ப படிநிலை. பரம்- முடிவான உயர்நிலை. மெய்ப்பொருளை ஒருவன் உண்மையாக உணர்ந்து அதனைக் கண்டு அதன் தன்மையில் தான் அழுந்தி நிற்றலேயாகும். அதாவது மெய்ப்பொருளை அனுபவமாக உணர்ந்து அதன் இன்பத்தில் திளைத்திருத்தலே ‘பரஞானம்’. அனுபவ ஞானம் எளிதில் எவருக்கும் முதலிலேயே வந்துவிடாது என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.

அபரஞானம், பரஞானம் இரண்டும் அஞ்ஞானத்தை போக்குபவையாயினும், அபரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குதல் என்பது ஒரு விளக்கு இருளைப் போக்குவது போன்றதாகும். அதேசமயம் பரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குவது என்பது சூரியன் இருளைப் போக்குவதற்கு ஒப்பானதாகும். எனவே அபர ஞானம் அஞ்ஞானத்தை முழுவதும் நீக்காமல் இருக்க, பரஞானமே அஞ்ஞானத்தை முற்றிலும் நீக்க வல்லது.

அந்த இறைவனை ஈசர், ஈஸ்வரன், ஈசானன் என்று சொல்வதுண்டு. ஈசர்- என்றால் ஆளுகின்றவர், ஈஸ்வரன்- என்றால் எல்லாம் உடையவன், ஈசானன்- என்றால் உலகங்களை உண்டாக்கி ஆளுபவன் என அர்த்தமாகும்.

ஈ என்றால் உச்சி என்பதாகும். அதாவது எல்லாவற்றிற்கும் உயரத்தில் இருப்பவன் மேலானவன். நம்மை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்துச் செல்பவன்.

சித்தர்களின் இஷ்ட தெய்வம் சிவனே! லிங்க வழிபாடு நடந்தாலும் ரூபமாக நோக்கின் நடராஜர் தோற்றமே புலனாகும். இந்த தோற்றம் உலகின் இயக்கத்தினை உணர்த்துவதாகும். நடராஜரின் ஒவ்வொரு நெளிவு சுளிவுக்குப் பின்னால் ஒரு பெரும் பொருள் இருக்கின்றது. அவரின் நாட்டியத்தின் முத்திரை ஒவ்வொன்றும் பூவுலகில் பலவித மாற்றங்களை குறிக்கும். அதில் வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு.

அமைதி, தவம், யோகம் என்று சதா காலமும் சிவனே என்றிருக்கும் ஈசன் பிரமாதமாக ஆடுவார் என்பதையும் முதன் முதலில் உணர்ந்தவர் திருமால். அந்த ஆடலை தன் அகத்திலே கண்டு ஆனந்தித்தபோது அதை உணர்ந்த ஆதிசேஷன் பதஞ்சலியாகப் பிறந்து திருநடனத்தை தில்லையில் கண்டார். அடுத்தடுத்து தேவர்களும் முனிவர்களும் மகேசனை வேண்டித் தவமிருந்து அந்த நடனத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.

நடராஜர் உருவம் இருக்குமிடத்தில் இயகக்கதி சுறுசுறுப்பாக இருக்கும். சுறுசுறுப்பும் விறு விறுப்பும் இல்லாத மந்தகதியில் இயங்கும் ஓர் வீட்டினுள் நடராஜர் சிலாரூபம் நுழைந்தால் அந்த இல்லத்தில் ஒர் விசைப்பாடு தோன்றி பல் வினைகளாக செயலாக்கம் தொடங்கும்.

சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தை ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தை தட்சிணாயணக் காலம் என்றும், வடதிசை நோக்கிய பயணமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலத்தை உத்ராயணக் காலமென்றும், என்பர். இந்த இரு காலங்களும் சேர்ந்த சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் தட்சிணாயணத்தின் இறுதி மாதமான மார்கழி அவர்களின் அன்றைய அதிகாலைப்பொழுதாகவும், உத்ராயணத்தின் இறுதி மாதமான ஆனி தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகும். தேவர்களின் ஒருதினப்பொழுதின் சந்தியாகாலமாக விளங்கும் ஆனிமாதமும் மார்கழியும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்கள்.

மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா காலத்தில்தான் விஷ்ணுவிற்கும், சிவனுக்கும் பள்ளி எழுச்சி நடைபெறும். அதையே நாம் திருப்பாவை, திருவெம்பாவை என பாடித் துதிக்கின்றோம்.
தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கும் இருகோள்களான சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே

சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.

அதேபோன்று மார்கழியில் திருவாதிரை விழா நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்திலும், வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தில் திருவாரூரிலும் தரிசித்துள்ளனர்

நடராஜருக்கு சிதம்பரத்தில் வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம். 1.மாசிமாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி காலசந்தியில். 2.சித்திரை- திருவோண நடசத்திரம்- உச்சிக்காலம், 3.ஆனி- உத்திரம்- பிரதோஷகாலம்- ஆனித்திருமஞ்ஞனம், 4.ஆவணி மாதம் - சதுர்த்தசி திதி- சாயரட்சைகாலபூஜை, 5.புரட்டாசி- வளர்பிறை சதுர்தசி-அர்த்த ஜாமம், 6.மார்கழி- திருவாதிரை நட்சத்திரம் நள்ளிரவு,

நூற்றியெட்டு வகையான ஆடல்களை இறைவன் எம்பெருமான் ஆடியிருந்தாலும் மிகவும் போற்றப்படுவது எட்டு வகைத் தாண்டவ பேதங்கள், கர்ணங்கள் எனப்படும். தனது ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்கின்றார் எம்பிரான்.

ஏழு ஸ்வரங்களை ஒப்ப சிவ தாண்டவ தலங்கள்

1.-படைத்தல்-காளிகாதாண்டவம்-திருநெல்வேலி (258) அன்னை உமை காளியாகி கோபம் கொண்டபோது அவரது கோபத்தைத் தணித்து அவரும் தானும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்த ஆடிய தாண்டவம்- காளிகா தாண்டவம். வலக்கரங்கலில் உடுக்கை, மணி, அக்கினியும், இடக்கையில் அபய ஹஸ்தமும், கஜஹஸ்தமும் காட்டி எட்டு திருக்கரங்களுடன் காட்சி. இந்தவகை நடனம் திருநெல்வேலி தாமிரசபையிலும், திருவாலாங்காட்டிலும் காட்சி.
இந்த நடனக்கோல இறைவனைத் தரிசித்தால் கர்மவினைகள் நீங்கி வாழ்வில் இன்பம் மலரும், கடன் தொல்லைகள், தழ்வு மனப்பான்மை ஆகியன நீங்கும்

2.ரி-காத்தல்-கௌரிதாண்டவம்-திருப்புத்தூர் (250), தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க பிட்சாடன மூர்த்தியாய் அந்த சிவனும், மோகினியாக வந்த பெருமாளும் ஆடிய நடனம். தன்னுடன் எப்போதும் இனைந்து ஆடும் சிவன் தனியாக ஆடிய நடனத்தைக்கான வேண்ட சிவன் கையில் பாம்புடன் ஆடியது கௌரி தாண்டவம் எனப்படும்.

3.க-காத்தல்செயல்-சந்தியாதாண்டவம்-திருஆல்வாய் (மதுரை) (245), தேவர்கள் அசுரர்கள் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உலக நன்மை கருதி ஈசன் அருந்தி செயலிழந்தபோது தேவர்கள் மனமுருகி வேண்ட கண்விழித்த சிவன் உயிர்கள் மகிழ்ச்சியடைய பிரதோஷ காலத்தில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம்.

4.ம-அழித்தல்-சங்கரதாண்டவம்-திருஆல்வாய் (மதுரை) (245),

5.ப-மறைத்தல்-திரிபுரதாண்டவம்-திருக்குற்றாலம் (257),

6.த-அருளல்-ஊர்த்துவதாண்டவம்-திருவாலங்காடு (15), தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கோபம்கொண்ட காளியை சமாதானம் செய்து மீண்டும் சிவகாமியாக மாற்ற காளியுடன் போட்டியிட்டு ஆடினார். இருவர் நடனமும் சமமான நிலையில் இருந்தது. அப்போது சிவன் தன் காதிலிருந்த காதணியை கீழெ விழச் செய்து அதை தன் காலால் எடுத்து நடனமாடியபடியே காதில் அணிந்து கொண்டார். அந்தக் கோலமே ஊர்த்துவ தாண்டவம் எனப்படும்.
7.நி-ஐந்தொழில்-ஆனந்ததாண்டவம்-திருத்தில்லை (சிதம்பரம்) (55). பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இறைவன் ஆடிய திருநடனம் ஆனந்த தாண்டவம். ஐந்து தொழில்கள், ஐம்பூதங்கள், ஒருநாளின் ஐந்து பொழுதுகள் ஆகியவற்றை இது குறிக்கின்றது. தில்லைக்கூத்தர், அம்பலக்கூத்தர் எனப்பெயர்., தாண்டவங்கலில் மிகச் சிறந்தது இதுவே.
இந்த தோற்றத்தில் இறைவனைத் தரிசிக்க வாழ்வில் இன்பம் நிலைக்கும்

சப்த விடங்க தலங்கள்(ஏழூர்) -திருவாரூர்

1. வீதி விடங்கர்-அஜபா நடனம் (சுவாச ரூபம்) திருவாரூர் (204),-
2. -அவனி விடங்கர்- பிருங்க நடனம் (வண்டு நடனம்) திருக்குவளை (240),
3. - நாகவிடங்கர்- உன்மத்த நடனம் திருநள்ளாறு (169),
4. -சுந்தர விடங்கர்-பாராவார தாங்க நடனம் (கடல்அலை நடனம்) திருநாகை (199),
5. -ஆதிவிடங்கர்- குக்குட நடனம் (கோழி நடனம்) திருக்காறாயில் (236),
6. -நீல விடங்கர்- தாமரை நடனம் திருவாய்மூர் (241),
7. புவனி விடங்கர்-ஹம்சபாத நடனம்- திருமறைக்காடு (242).

பிரபஞ்ச அண்டை வெளித் தத்துவம் எங்கும் எப்படி ஒரே நேரத்தில் பரவி இருக்கின்றதோ அவ்வாறே காலமும் பரவி இருக்கின்றது. நடராஜர் கைகளில் உள்ள மழு காலத்தையும், உடுக்கை சர்பத்தையும் குறிக்கும். சிவநாதரின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்திலிருந்துதான் பிரபஞ்சங்களில் உற்பத்தி நடக்கின்றன.

#####

வியாழக்கிழமை, 07 September 2017 19:11

சோமாஸ்கந்தர்!

ஓம்நமசிவய!

முத்து கணபதியே போற்றி!
முழுமுதற் கோமானே போற்றி!
மூலப் பொருளே போற்றி!
மூஷிக வாகனா போற்றி!


சோமாஸ்கந்தர்!

 உமை கந்தன் உடனாகிய சோமாஸ்கந்தர் வடிவம் நற்புத்திரப் பேறு மற்றும் சந்தான விருத்தி தரவல்லது. சிவ(சைவவழிபாடு), சக்தி(சாக்த வழிபாடு), முருக(கௌமார வழிபாடு) ஆகிய மூன்றும் சேர்ந்த வடிவம். இறைவனை இல்லறத்தானாக, இனிய கணவனாக, பாசம் மிக்கத் தந்தையாக தனயனுடன் ஒரே இருக்கையில் ஒருங்கிணைந்து காட்டும் திருவடிவம். சத்து, சித்து, ஆனந்தம் என்றால் சச்சிதானந்தம் என்பர். உண்மையாகிய சிவனும் அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது ஸ்கந்தன் என்ற இன்பம். அதாவது உண்மையும் அறிவாகிய நன்மையும் சேர்ந்தால் கிடைப்பது இன்பம் என்ற தத்துவத்தைச் சொல்லும் வடிவம்.
சுகாசன மூர்த்தி போன்றே சிவன் அமர்ந்து தேவியின் பக்கம் முகம் சிறிது சாய்ந்திருக்க அதே ஆசனத்தில் உமை வலப்பாதம் மடங்கியவாறும் இடப்பாதம் கீழே தொங்கவிட்டு இடக்கையில் வரதமுத்திரையும், வலக்கையில் குவளை மலரையும் வைத்திருப்பார். இருவருக்குமிடையே கந்தப் பெருமான் தேவியின் கழுத்தளவு உயரம் நின்றிருப்பார். அவரது இடக்கையில் கனியும் வலக்கையில் சுட்டும் குறிப்பும் வைத்திருப்பார்.
திருமால் இம்மூர்த்தியைத் தன் மார்பிலே வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபட்டு வந்துள்ளார். இந்திரன் அவுணர்களின் துன்பத்திலிருந்து மீள திருமாலிடம் இம்மூர்த்தியைப் பெற்று இந்திரலோகத்தில் வைத்து பூசித்து வந்தான். அசுரர்களை முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியோடு வென்றான். இம்மூர்த்தியைக் கண்ணுற்ற முசுகுந்த சக்ரவர்த்தி விரும்பிக் கேட்க இது விஷ்ணுவுடையது அவர் சம்மதமில்லாமல் நான் தரமுடியாது என இந்திரன் சொல்ல முசுகுந்த சக்ரவர்த்தி திருமாலிடம் கேட்டு அவர் சம்மதத்தைப் பெற்றான். இந்திரனுக்கு இம்மூர்த்தத்தை விட்டு பிரிய மனமில்லாததால் இதைபோன்றே ஆறு வடிவங்களைச் தேவ சிற்பி கொண்டு செய்து முசுகுந்தரிடம் காட்டி இதில் இது வேண்டுமோ அதை எடுத்துக் கொள் என்றான். இறையருளால் சரியான மூர்த்தத்தை கண்டு அதை எடுக்க இந்திரன் மற்ற ஆறு திரு வடிவங்களையும் அவரிடமே கொடுத்து பூவுலகில் நிறுவிப் பூசனை செய் என்றார்.
முசுகுந்தன் திருமால், இந்திரன் பூசித்த சோமாஸ்கந்த மூர்த்தியை திருவாரூரில் நிறுவி மற்ற ஆறு மூர்த்திகளையும் திருநாகைக் காரோணம், திருநள்ளாறு, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருக்கோளிலி ஆகிய தலங்களில் நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்தான். சோமாஸ்கந்த மூர்த்தியே இத்தலங்களில் தியாகராசர் என்ற பெயருடன் விளங்குகின்றார். இத்தலங்கள் சப்த விடத்தலங்கள் எனப்படும். இத்தலங்களில் சிவபெருமானின் பெயரும் அவர் ஆடிய நடனமும் வேறு வேறானவை.
திருவாரூர்- வீதி விடங்கர் அசபா நடனம்
திருநாகைக்காரோணம்- சுந்தர விடங்கர் பாராவார தரங்க நடனம்
திருநள்ளாறு- நக விடங்கர் உன்மத்த நடனம்
திருக்காறாயில்- ஆதி விடங்கர் குக்குட நடனம்
திருவாய்மூர்- நீல விடங்கர் கமல நடனம்
திருமறைக்காடு- புவனி விடங்கர் அம்ச நடனம்
திருக்கோளிலி- அவனி விடங்கர் பிரமா நடனம்
விடங்கர் என்றால் திருவீதியில் உலா வரும் திருமேனியாகும். டங்கம் என்றால் உளி என்று பொருள். விடங்கம் என்றால் உளி கொண்டு செதுக்கப்படாமல் தானே தோன்றியது எனப் பொருள் படும்.
துறவறத்தைவிட இல்லறத்திலிருந்தே வீடுபேறு அடையலாம் என விளக்கும் இந்த சோமாஸ்கந்த மூர்த்தம் மனையறம், மக்கட்பேறு என்ற இரு உயரிய கருத்துக்களைக் கொண்டது. சோமாஸ்கந்தரை வழிபடுவோர் கணவனும் மனைவியுமாய் இல்லறத்தில் இனையில்லா இன்பம் துய்த்து நல்ல மகப்பேறும் குல வளர்ச்சியும் பெற்று இம்மையில் சிறந்து வாழ்ந்து மறுமையில் வீடுபேறும் அடைவர். சோமாஸ்கந்தர் வடிவக் கோயில்கள்: திருக்கருகாவூர், வைத்தீஸ்வரகோவில், சிக்கல், காஞ்சிபுரம், திருக்கள்ளில் ஆகியன.

#####

ஓம்நமசிவய!

மகா கணபதி போற்றி!
மங்கள கணபதி போற்றி!
மந்திர விநாயகா போற்றி!
மணக்குள விநாயகா போற்றி!


கிராதகர்-கிராத மூர்த்தி-வேட்ருவர்!

 

துரியோதனால் வஞ்சிக்கப்பட்ட பாண்டவர்கள் நாடு நகரம் இழந்து கானகம் சென்றனர். அங்கு எழுந்தருளிய வியாச பகவான் தனக்கு ஏற்படும் பாதகங்களை எல்லாம் ஒருவன் சாதகமாக மாற்றிக் கொள்ளவேண்டும். அறிவாளிகள் சோர்வு கொள்ளாமல் செயலாற்றிக் கொண்டே இருப்பார்கள். கால வித்தியாசத்தால் மன்னாதி மன்னர்களும் துயரத்தை அடைந்திருக்கின்றார்கள். காலம் வரும்வரை பொருமை காத்தல் சிறப்பு என்று ஆறுதல் கூறி காட்டில் இருக்கும் காலத்தில் உங்களை நீங்கள் பலப் படுத்திக் கொள்ளவேண்டும். அர்ச்சுனா நீ சிவபெருமானைக் குறித்து தவம் செய்து பலம் வாய்ந்த அஸ்த்திரங்களைப் பெறுவாய் என ஆலோசனை கூறினார்.
வியாசமுனிவர் ஆலோசனைப்படி வெள்ளிமலையின் மேற்புறத்தே சிவனை நோக்கித் ஒற்றைக்காலில் நின்று கடுந்தவமிருந்தான் அர்ச்சுனன். அவன் தந்தை இந்திரன் ஊர்வசி, இரம்பை முதலிய ஆடலரசிகளை அனுப்பியும் அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க முடியவில்லை. நேரில் தோன்றிய இந்திரன் தன் மகனைப் பாராட்டி சிவபெருமான் வருவார் உனக்கு அருள் புரிவாரென்று ஆசிவழங்கினான்.
தோழியர்கள் வாயிலாக அர்ச்சுனன் தவத்தைக் கேட்ட உமை சிவனிடம் அர்ச்சுனனுக்கு அருள் புரிய வேண்டினாள். தவமியற்றும் அர்ச்சுனனைக் கொல்ல பங்காளி துரியோதனன் முகாசூரனை அனுப்பியுள்ளான். அவன் வந்து தொல்லை கொடுக்குமுன் யாம் அங்கிருப்போம் என்று நந்தி தேவரை அழைத்து யாம் பன்றி வேட்டைக்குச் செல்லவிருக்கின்றோம் நீங்கள் அதற்குத்தக்கவாறு உருமாருங்கள் என்றார். உமை வேட்டுவச்சியாகவும் முருகன் குழந்தையாகவும், வேதங்கள் வேட்டை நாய்களாகவும், பூதகணங்கள் வேடுவர்களாகவும் மாறிச் சென்றனர்.
முகாசூரன் உறுமல் கேட்ட அர்ச்சுனன் பன்றியின்மீது அம்பைத் தொடுக்க அது பன்றியின் முகத்தில் பாய்ந்து பின்புறமாக வெளியேறி அர்ச்சுனனிடம் வந்தது. அதேசமயம் அங்கு தோன்றிய சிவனும் பன்றிமேல் அம்புவிட அது பன்றியின் பின்புறம் புகுந்து முன்புறமாக வெளிவர பன்றி இறந்தது.
யார் பன்றியைக் கொன்றது என்பதில் வேடனுக்கும் அர்ச்சுனனுக்கும் வாக்கு வாதம் எழுந்து முற்றி சண்டையில் ஆரம்பித்தது. வேடன் அர்சுனனின் வில்லின் நாணை அறுக்க அர்ச்சுனன் அந்த வில்லால் வேடன் தலையில் அடிக்க அந்த அடி அனைத்து உலக உயிர்கள்மீதும் பட்டது. சிவபெருமான் சினங்கொண்டவர் போல் நடித்து மல்யுத்தம் செய்தார். சிறிது நேர விளையாட்டிற்குப்பின் தெவர்கள் சூழக்காட்சிதந்து முகாசூரனால் உனக்கு தீங்கு நேரக்கூடாது என வேடனாக வந்தேன் என்று அருள்புரிந்து அர்ச்சுனன் கேட்டபடி சக்திவாய்ந்த பாசுபத அஸ்த்திரத்தை அளித்து அதை உபயோக்கிக்கும் முறையைச் சொல்லி நடக்க இருக்கும்போரில் வேற்றி பெறுவாய் என ஆசி வழங்கினார். சிவனைக் கண்டு அவரைத் தொட்டு மல்யுத்தம் புரிந்த ஒரே மானிடன் அர்ச்சுனன். அவனின் சிறப்புப் பெயர் ‘சவ்வியாசி’- என்றால் இரு கரங்களாலும் அம்பு தொடுக்கும் வல்லமை பெற்றவன்
 இறைவன் நான்கு /இரு திருக்கரங்களுடன் வில்லையும் அம்பையும் கொண்டு காணலாம்.
அருச்சுனன் தவம் செய்கையில் அவனைக் கொல்ல துரியோதனன் அனுப்பிய முகாசூரனை கொல்ல வேட்டுருவம் கொண்ட சிவன் கிராதக மூர்த்தி எனப்பட்டார்.. காட்சி: பாசுபதம் பெற்ற முதன்மைத் தலம் திருவேட்களம், திருவேட்டக்குடி, கும்பேசுவரர் ஆலயம் (குடந்தை), திருவைகாவூர்

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930508
All
26930508
Your IP: 52.91.67.23
2024-03-28 20:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg