Print this page
சனிக்கிழமை, 09 September 2017 10:26

சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏகதந்தர் பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்கு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!


சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்!

 

சிவபெருமானைக் காண கயிலை வந்த பிரம்மன் வழியிலிருந்த முருகனைக் கண்டும் காணததுபோல் செல்ல அந்த ஆணவப் போக்கினை போக்க முருகன் பிரம்மனை தன்னிடம் அழைத்தார். அருகில் வந்ததும் நீ யார்! நீ செய்யும் தொழில் யாது! எனக்கேட்க நான் பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்கின்றேன் என்றான் பிரம்மன். நீ எவ்வாறு படைப்புத் தொழிலைச் செய்கின்றாய்! வேதங்கள் எல்லாம் தெரியுமா! என்றதற்கு பிரம்மன் வேதாகமங்களில் சிறிதறிவேன் என்றான். அப்படியெனில் ரிக் வேதம் ஓதுக! என்றார் முருகன். ஓம் என்று தொடங்கி வேதத்தை ஓதத் தொடங்கினான். அப்போது முருகன் நீ ஓதிய ஓம் என்பதற்கு என்ன பொருள் என மடக்கிக் கேட்க பிரமன் விழித்தான். வேதத்தின் முதல் சொல்லுக்கே பொருள் தெரியாத நீ எப்படி படைத்தல் தொழிலைச் செய்வாய் எனச் சினந்து பிரமனை சிறையில் அடைத்தார் முருகன்.
பிரமனை சிறையில் அடைத்ததால் படைப்புத் தொழில் பாதிக்காமல் இருக்க முருகனே படைப்புத் தொழிலை செய்தார். இதை அறிந்த திருமால் பிரம்மனை சிறையிலிருந்து விடுவிக்க தேவர் முனிவர்களுடன் கயிலை சென்று சிவபெருமானை வணங்கி, மகாதேவா தங்களின் புதல்வன் முருகன் பிரணவப் பொருளைக் பிரம்மனிடம் வினவி அவர் கூறாமையால் அவரைச் சிறையிலிட்டுள்ளார். தாங்கள் அருள் கூர்ந்து பிரம்மனை விடுவிக்க வேண்டும் என முறையிட்டார்.
சிவபெருமான் நந்தியெம்பெருமானை நோக்கி எமது கட்டளையைக் கூறி பிரம்மனை விடுவித்துவா என்றார். ஆறுமுகன் வேதாவை விடுவதற்கில்லை. இங்கிருந்தால் உன்னையும் சிறையிலிடுவேன் என்றார். இதைக் கேட்ட சிவன் சிரித்து அனைவரும் புடைசூழ முருகன் இருக்குமிடம் வந்து பிரம்மனை சிறை விடுவிக்கச் சொன்னார். ஆணைப்படி பிரம்மன் விடுவிக்கப்பட்டார். அப்போது பிரவணத்திற்குப் பொருள் தெரியாததால் பிரம்மனை நீ சிறையிலிட்டாய் . உனக்கு அதன் பொருள் தெரியுமா என்றார் சிவன்.
அதற்கு முருகப் பெருமான் எனக்குத் தெரியும். கேட்கும் முறைப்படி கேட்டால் அதனைக் கூறவும் தயாராய் உள்ளேன் என்றார். கந்த பெருமானை மேலிடத்தில் அமர்த்தி தான் கீழிருந்து சீடன் பாவனையில் இருக்க முருகப் பெருமான் குருபோல இருந்து ஓம் என்ற பிரணவத்தின் பொருளைக் கூறி சிவகுருநாதன் எனும் பெயரினைப் பெற்றார்.
சிவனைக் கானவந்த பிரமனை ஓம் எனும் பிரணவத்தின் பொருள்கேட்டு உறைக்கவில்லை என்று சிறையிலடைத்த பின் அவரை விடுவிக்க வந்த சிவனுக்கு குருவாக இருந்து ஓம் என்ற பிரணவத்தின் பொருளைக் கூற சிஷ்ய பாவனையில் இருந்து சிவன் கேட்ட வடிவம் சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்!

#####

Read 5818 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 05:01
Login to post comments