gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத்தேட உரிமை உண்டு, வாழ்வின் இரகசியம் அது! அது அற்புத இலக்கணம்!

எண் ஒன்பது (செவ்வாய்)

Written by

9.எண் ஒன்பது (செவ்வாய்)

பிறவிஎண்-9

ஏப்ரல் 15 முதல் மே 14 வரையிலும், நவம்பர் 15 முதல் டிசம்பர் 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 9, 18, 27 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-9

எண்ணின் அதிபதி-

அங்காரபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

9, 18, 27

அதிர்ஷ்ட கிழமைகள்-

செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டமானது. வியாழன், வெள்ளி நன்மை

ஒற்றுமையான எண்கள் –

ஒன்பது எண்ணுள்ளவர்களுக்கு 3, 6 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

3,6,9 வரக்கூடிய 3,6,9,12,15,18,21,24,27, நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

9,18,27,36,45,54,63,72 அடுத்து 15,24,33,42,51,60,69 அடுத்து 12,21,30,39,48,57 அதிர்ஷ்டமான வயதுகள். 40 லிருந்து 49 க்குள் வாழ்வு மேன்மை அடையும்.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,3,4,7 பகை-2,5 சமம்-6,8 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

துணிவும், வல்லமையும், உறுதியும் கொண்டவர்கள். நீதிக்காகப் போராடுபவர்கள். மன்னிக்கும் தன்மையுடையவர்கள். ராஜீய அதிபதியாகவும், பெரும் பணக்காரராகவும் விளங்க வாய்ப்புண்டு. தர்ம வழிகளில் மனத்தை செலுத்தக் கூடியவர்கள். ஆண்மை சுபாவமும் கண்டிப்பும் மிகுந்த இவர்கள் ஆரோக்கியம், சக்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழ்வார்கள். கட்டுப்பாடும் கண்ணியமும் இவர்களின் உடன் பிறப்பு. தன் வழியை விட்டுத் திரும்பினால் அழிவுசக்தியாக இருப்பர். பொது வாழ்வில் பிரகாசிப்பார்கள். எத்தொழில் செய்தாலும் வெற்றி காண்பார்கள். வாழ்வில் போராடிக்கொண்டே இருப்பார்கள். நிம்மதி இருக்காது. செய்தொழிலிலேயே கவனம் செலுத்தி அமைதி பெறுவர். எதற்கும் கலங்க மாட்டார்கள். தோல்வியை வெற்றியாக மாற்ற பாடுபடுபவர்கள். தோல்வியினால் மனச்சோர்வு அடையார். வாழ்நாளில் உடலில் வடு ஏற்படாமல் ஒருவர் இருந்தால் அது அதிசயமாகும். அடிக்கடி காயங்கள் ஏற்பட்டு இரத்தம் பார்ப்பர். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

இரத்தக்கட்டிகள், குடற்புண்கள், இரத்தம் விஷத்தன்மையடைதல், மூலம் ஆகியன வரவாய்ப்புண்டு. நெருப்புக்காயங்களும் விபத்துகளும் ஏற்படும்.

உடை-

சிகப்பு, கருஞ்சிகப்பு ஆடைகள் சிறந்தவை. நீல நிற ஆடையின் கரையிலாவது செந்நிறம் இருக்க வேண்டும்.

 

பெயர் எண் ஒன்பது- பலன்கள்

பலபேர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். சிறந்த சிந்தனையாளர்கள். விவாதத்தில் வெல்ல முடியாது. பரந்தமனப்பான்மையுடையவர். என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற கொள்கை உடையவர்கள். இரக்கமனப்பான்மை கொண்டவர்கள். எளிதில் செயல்படமாட்டார். உதவி என்பது உடன் பிறந்த செயல். மற்றவர்கள் பேச்சினால் இவர்களை ஏமாற்றமுடியாது. பிடிவாதக்காரர்கள். மற்றவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற மனப்பான்மை கொண்டவர்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை மிகவும் விரும்புவர். தன் சொந்தங்களை நேசிக்கமாட்டார். சிறிது வெறுப்புடன் நடப்பார்கள். எந்த வியாபாரம் தொழில் சம்பந்தமான கணக்குகள் எல்லாவற்றிலும் புள்ளி விபரங்கள் தொழில் நுணுக்கங்களில் சிறந்து விளங்குவர். இவர்கள் மனதை அறியமுடியாது. மிகுந்த தந்திரசாலிகள். தம் காரியங்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை உடையவர்கள். மற்றவர்கள் உள்ளக்குறிப்பை நன்கு அறிபவர்களாயிருப்பார்கள். திடீர் பணக்காரராக இருப்பார்கள். எதிர்பாரா மாற்றங்கள் நடந்தபின் மனப்போக்கை மாற்றிக்கொண்டு நல்லவிதமான் வாழ்க்கை வாழ்ந்திடுவார்கள். வாழ்வின் பிற்பகுதி மனைவி மக்கள் உதவி கிட்டும். கலைத்துறையில் இருந்தால் குறுக்கு வழியில் வெற்றியடைய விரும்புவர். மற்றவர்களை நம்புவதற்கு அதிக நாட்களாகும்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 9, 18, 27 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். இந்த தேதிகள் வியாழன் வெள்ளிக் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் ஒன்பதிற்கு உரிய திசை- தெற்கு. கிழமை- செவ்வாய், வியாழன், வெள்ளி,

அதிர்ஷ்ட நவரத்தினம்-

பவழம்- வெண்மை கலந்த சிவப்பு நிறமே நல்ல பவழம். ஒளி ஊடுருவாது. கணமாகவும் குண்டாக சற்று நீண்டிருக்கும். எளிதில் உடைக்க முடியாது. கடன் தொல்லைகள் நீங்கும். கோபக்காரரை சாந்தமானவராக மாற்றிவிடும். முகத்தில் ஒளியையும் கவர்ச்சியையும் உண்டு பண்ணும். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். போலி கல்லினால் சீரழிவு ஏற்படுமாதலால் பரிசோதித்து வாங்கவும்.

உடல் பாதிப்பு வயது-

உஷ்ணஜுரங்கள், அம்மைநோய், குடல்புண், கான்சர் ஆகிய நோய்கள் வரலாம்.

உடலுக்குகந்த பொருள்கள்-

கொழுப்பு பதார்த்தங்களைத் தவிர்க்கவும். மதுபானம் அருந்தக்கூடாது. வெண்பூண்டும் வெங்காயமும் அடிக்கடி சேர்க்கவும். புளிச்சக்கீரை நன்மை பயக்கும். முருங்கைகீரை சேர்த்துக்கொள்ளலாம். பச்சைபருப்பு, சுரக்காய், மொச்சைக்காய், வெண்டைக்காய், சீதாப்பழம், மாதுளம்பழம், நாவற்பழம், தேன், பனங்கிழங்கு, பசுவின் நெய் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு அதிகமாக தினசரி சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் ஒன்பது வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 9,18,27,36,45,54,63,72,81,90,108 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12778903
All
12778903
Your IP: 172.68.65.125
2019-09-21 04:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg