gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான்.!

எண் மூன்று (குரு)

Written by

3.எண் மூன்று (குரு)

பிறவிஎண்-3

டிசம்பர்15முதல் ஜனவரி 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 3, 12, 21, 30 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-3

எண்ணின் அதிபதி-

குருபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

3, 12, 21, 30

அதிர்ஷ்ட கிழமைகள்-

வியாழன், வெள்ளி, செவ்வாய்

ஒற்றுமையான எண்கள் –

மூன்று எண்ணுள்ளவர்களுக்கு 6, 9 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

6, 9 வரக்கூடிய 6, 9, 15, 18, 24, 27 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

20 வயதில் மகிழ்வான நிகழ்வுகள் நடக்கும். 30 லிருந்து 39 வரை வாழ்க்கை சிறப்படையும் நல்ல வருடங்களாக அமையும்.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,2,4,7,9 பகை-5,6 சமம்-8 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொதுபலன்-

குருபகவான் அன்பிற்கும் ஆதரவுற்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவராதலால் மக்கள்தொடர்பு, குடும்பமாட்சி, சமூக உறவு ஆகியவற்றில் சிறந்து விளங்குவர். பாராட்டுதல்களைப் பெறும் காந்தசக்தி இவர்களுக்கு உண்டு. உழைப்பையும் ஊக்கத்தையும் அளித்து பரோபகார சிந்தையுடன், தேசபக்தி உடையவராக இருப்பார்கள். துன்பங்களையும் துயரங்களையும் விரைவில் மறந்து விடுவார்கள். தாக்குதல்களை மனோ வலிமையுடன் எதிர்த்து நிற்பார்கள், சபலங்கள் ஏற்பட்டாலும் தவறான வழிக்குச் செல்லமாட்டார்கள். பேச்சினால் மற்றவர்களை மயக்கிவிடுவர். இவர்களுடன் பழகியவர்களுக்கு இவர்களைப் பிரிய மனம் வராது. காதலில் வெற்றி தோல்வி கலந்துவரும். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

ஆரோக்யம் குறைந்தால் தோல் நோய்கள் ஏற்படும். கீழ்வாதமும் வரலாம்.

உடை-

கத்திரிப்பூ வண்ணமும், மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த வண்ணங்கள் சிறப்பானவை. ஆரஞ்சு, ரோஸ் வண்னங்கள் நன்மை தரும்.

 

பெயர் எண் மூன்று- பலன்கள்

இவர்கள் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை மிக்கவர்கள். மற்றவரை மயக்குவதில் திறமைசாலியானவர். கவர்ச்சியான தோற்றம், கலகலப்பான சுபாவம் ஆகியவற்றால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். கல்நெஞ்சக்காரனும் இவரின் பேச்சை கேட்டு உருகுவான். கலாரசனை மிக்கவர்கள். சிந்தனையாளர், சிறந்த எழுத்துலகச் சிற்பி. சமூகசேவை என்பது இவர் மூச்சு. உடல் உழைப்பின்றி முன்னேற்றம் காண்பர். நேர்மையும் ஒழுக்கத்தையும் இவர்கள் கடைபிடிக்கவில்லை எனில் மிகவும் துன்பத்திற்குள்ளாவார்கள். எவ்வளவு வருமானம் கிடைத்தாலும் மேலும் மேலும் வருமாணம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். மனசாட்சிப்படி நடப்பர். யார் செய்யினும் குற்றம் குற்றமே என்பார். பலர் இவர்களை கெட்டவர் என்பர். நல்ல அதிர்ஷ்டசாலி பணவசதியுடன் வாழ்வார்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-.

மேலே உள்ள 3, 9, 12, 18, 21, 27, 30 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். விவாகம் தொழில் ஆகிய காரியங்களைத் தொடங்கும்போது அந்த தேதி, மாதம் வருடம் ஆகிய மூன்றையும் கூட்டினால் 3,9 வந்தால் அந்த தினம் மிகச் சிறப்பானது. அவைகள் வியாழன், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் மூன்றிற்கு உரிய திசை- வடகிழக்கு. கிழமை- வியாழன், வெள்ளி, செவ்வாய்

அதிர்ஷ்ட நவரத்தினம்-

புஷ்பராகம்-பல நிறங்களில் பிரகாசிக்கும். வெள்ளையாக இருக்கும். ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியதாக சிறிது மஞ்சள் கலந்து இருக்கும். சற்று கடினமானது. அணிந்தால் சத்ருக்களை வெல்வர். கோபதாங்கள் குறையும். சந்தான பாக்யம் ஏற்படும்.பதவி உயரும். விபத்துக்களிருந்து பாதுகாப்பு கிடைக்கும். தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி.

உடல் பாதிப்பு வயது-

நரம்பு பாதிப்புகள் வரும். 18, 37, 45, 59 வயதில் உடலில் கீழ்வாயு பாதிப்புக்கள் வரும்.

உடலுக்குகந்த பொருள்கள்-

கிராம்பு, இலவங்கப்பட்டை, குங்குமப்பூ, ஜாதிக்காய், ஆப்பிள், நெல்லி, அண்ணாசி, கோதுமை ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி உணவில் சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் மூன்று வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 3, 12, 15, 18, 21, 30, 39, 75, 84, 93, 102 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15578964
All
15578964
Your IP: 172.69.63.189
2020-02-22 15:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg