gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- மன்னிக்கலாம்.திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்-மன்னிப்பு இல்லை.நீ செய்வது தவறா, பாவமா.!

குதம்பைச் சித்தர்

Written by

குதம்பைச் சித்தர்

 

யாதவ குலத்தின் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாகத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அது பெண் குழந்தையைப்போல் அழகாக இருக்க அதற்கு குதம்பை எனப் பெயர் வைத்தனர். காதில் குதம்பை என்ற அணியையை அணிவித்தனர். குதம்பை தினமும் காலையிலும் மாலையிலும் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.

குதம்பையருக்கு 16 வயதில் ஞான உபதேசம் செய்ய மாதவர் வந்தார். மாதவர், குதம்பை நீ போன பிறவியில் உய்வையடையும் பொருட்டு தவம் செய்தாய். தவம் முழுமையடையும் முன்பே காலம் முடிவடைந்ததால் நீ இறந்து போனாய். அந்த தவத்தின் பயனாய் இந்த பிறவியில் என்னிடம் ஞான உபதேசம் பெற்றாய். இதன் பலனை நீ உன் அனுபவத்தில் தெரிவாய் என்றார்.

ஒருநாள் இரவு யாருக்கும் தெரியாமல் குதம்பை காட்டுக்குள் சென்று அங்குள்ள ஒரு மரத்தின் பொந்தில் அமர்ந்து தவ நிலையை அடைந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார்.மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். தன் பாடல்களில் பெண்கள் அணியும் காதனி குதம்பையை முன்வைத்து குதம்பாய் என பாடியுள்ளார்.

குதம்பைச்சித்தர் தியானப்பூசைக்கு

“சூலம் ஏந்திய சுந்திர மூர்த்தியே அத்திமரம்

அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்தியே

சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்

நல்லாசி தருவாய் குதம்பை பெருமானே”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கருவூரார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து மலர்களால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

அபயம் அளிக்கும் தேவரே போற்றி

இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி

இதய சுத்தம் உள்ளவரே போற்றி

ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுபவரே போற்றி

ஓம் என்ற பீஜாட்சராமாய் வாழ்பவரே போற்றி

சிவனை பூஜிப்பவரே போற்றி

சோதி சொரூபரே போற்றி

சூலாயுதம் உடையவரே போற்றி

மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி

நாட்டியப்பிரியரே போற்றி

விபூதி அலங்காரப்பிரியரே போற்றி

வாக் பந்தனம் செய்பவரே போற்றி

நிவேதனமாக பால், பழம் இவற்றுடன் பல வர்ண வஸ்திரம் வைத்து வெள்ளிக்கிழமை வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

கேது கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக கேது தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். சித்தபிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்த நிலை அகலும். மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண்பிரமை, தனக்குத்தானே பேசுதல் அகன்று தெளிவு ஏற்படும். திருமணத்தடை மற்றும் களத்திற தோஷம் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடக்கும். போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகுதல் புகை பிடித்தல் குடிப்பழக்கம் நீங்கும். ஆன்மீக எண்னங்கள் தோன்றும்.

“ஓம் ஸ்ரீ குதம்பைச் சித்தரே போற்றி”

******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17767788
All
17767788
Your IP: 162.158.79.13
2020-07-06 07:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg