gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 06 June 2018 12:07

த்விதீய / துவிதையை திதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!


$$$$

 

த்விதீய / துவிதையை திதி!

திதிக்குரிய விநாயகர்- தருண கணபதி, உப்பைத் தவிர்க்கவும்-அஸ்வினி குமார்களுக்கு தேவர்கள் என்ற அங்கீகாரமும் அவிர்பாகமும் கிடைத்த நாள் இது. தேவலோக மருத்துவர்கள் அசுவனி தேவர்கள் பூஜைக்குரிய நாள். கார்த்திகை மாதம் சுக்லபட்சம் த்வீதியை அன்று துவங்கி ஒருவருட காலம் தொடர்ந்து அனுஷ்டிக்கவும்-

அஸ்வினி குமாரர்கள் தேவர்கள் அந்தஸ்து பெற்றது எப்படி! த்வீதிய விரத பலன்- சியவன முனிவர் பலகாலம் கங்கை கரையில் தவமிருந்து வந்தார். அவரைச் சுற்றி புற்று வளர்ந்திருந்தது. சத்யாதி என்ற மன்னன் கங்கையில் நீரட வந்தான். அவர் மகள் சுகன்யா இங்கே வா என்ற குரல் கேட்டு அத்திசையில் சென்று பார்க்க புற்றில் இரண்டு மின்மினி பூச்சிகள் ஜொலிப்பதுபோலிருக்க ஒர் குச்சி எடுத்து அதை குத்தினார். மன்னர் சத்யாதிக்கும் அவருடனிருந்தவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டது. அப்போது மகள் ஆஸ்ரமத்தின் பின்னால் சென்ற விபரம் கேட்டு அங்குச் செல்ல அங்கு சியவன முனி தவம் செய்வது கண்டு உண்மை அறிந்து தன் மகளை மன்னிக்க வேண்ட சியவன முனி அவளை மன்னித்தார். ஆனால் அவளை தனக்கு மணம் முடித்து வைக்க கூற மாமுனிவரின் விருப்பப்படி உடன் திருமணம் நடந்தது. சுகன்யாவும் அரச கோலத்தை களைந்து மரவுரி தரித்து முனிவருக்கு பணிவிடைகள் செய்து வந்தாள்.

வசந்த காலம் வந்ததும் முனிவர் வம்சவிருத்தியை விரும்பி சுகன்யாவை அழைத்து விருப்பத்தைக் கூறினார். தங்களின் விருப்பத்தை நிராகரிக்க என்னால் முடியாது இருப்பினும் என் விருப்பம் தாங்கள் சுந்தரரூபத்துடன் இளவயதினராக காட்சியளிக்க வேண்டினாள். இந்த சுகத்திற்காக இவ்வளவு காலம் செய்த தவத்தின் பயனை இழக்க விரும்பவில்லை எனக்கூறி தவத்தில் ஆழ்ந்தார். சுகன்யாவும் தன் பணிவிடைகளைத் தொடர்ந்தாள்.

வனத்தில் அழகி சுகன்யாவைக் கண்ட அஸ்வினி குமாரர்கள் இந்த வயதான கணவருடன் எப்படி உன்னால் இன்பம் அனுபவிக்கமுடியும். எங்களில் ஒருவரைத் தேர்ந்தெடு என்றனர். பதிவிரதையான நான் எப்படி உங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றாள். அஸ்வினி குமாரர்கள் பெண்ணே உன் கணவருடன் நாங்கள் கங்கையில் மூழ்கி எழுகின்றோம். மூவரும் ஒரே சுந்தர ரூபத்துடன் இருப்போம். நீ எங்களில் யாரைக் கணவராகத் தேர்ந்தெடுக்கின்றாயோ பார்ப்போம் என்றனர். சியமனி முனிவரிடம் சொல்ல அவர் வந்து அஸ்வினி குமாரர்களே நீங்கள் சுந்தர ரூபத்தைக் கொடுங்கள் என் மனைவி என்னை சரியாகக் கண்டு பிடிப்பாள் என்றார்.

மூவரும் கங்கையில் மூழ்கி எழுந்திருக்கும்போது ஒரே மாதிரி அச்சில் வார்த்ததுப்போல் அழகுடன் இளைஞராக இருக்க சுகன்யா தடுமாறினாள். அப்போது சுகன்யா தன் கணவரைத் தவிர வேறு யாரையும் தன்னால் கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது .இதற்கு அஸ்வினி குமாரர்களே உதவி செய்ய வேண்டும் என எண்ணி வணங்கி அவர்களை உற்று நோக்கினாள். அஸ்வினி குமார்கள் கால்கள் தரையில் பாவவில்லை. ஒருவர் கால் மட்டும் தரையில் இருக்க அவரே தன் கணவர் சியவன முனி எனக் கண்டு வணங்க பூமாரி பொழிய தம்பதியராயினர். அப்போது சியவன முனி, அஸ்வினி குமாரர்களே நீங்கள் எனக்கு பேருதவி செய்துள்ளீர்கள். என் தவபலம் வீனாகமல் என் மனைவி விரும்பிய சுந்தர ரூபத்தை அளித்தமைக்கு நன்றி. என்ன கைமாறு செய்ய வேண்டும் எனக்கேட்க நீங்கள் வேள்வி செய்யும்போது எங்களுக்கும் தேவர்கள் போல் அவிர்பாகத்தை கொடுக்க வகை செய்யுங்கள் என்றனர்.

சத்யாதி மன்னர் தன் மருமகன் அழகு ரூபம் பெற்றது கேள்விப்பட்டவுடன் அவரைச் சந்திக்க வந்தார். சியவன முனிவரின் விருப்பப்படி பெரிய வேள்வி ஒன்றை துவக்கினார். சியவன முனிவர் ஒவ்வொரு தேவர்களாக அழைத்து அவிர்பாகத்தைக் கொடுத்தார். அஸ்வினி குமாரர்களை அழைத்து அவிர்பாகம் கொடுக்க முயலுகையில் இந்திரன் அவர்கள் தேவர்களின் வைத்தியர்கள்தான். தேவர்களல்ல என ஆட்சேபிக்க, அஸ்வினி குமாரர்கள் தனக்கு செய்த உபகாரத்திற்காகவே இந்த வேள்வி நடத்துகின்றோம் எனச் சொல்லியும் இந்திரன் ஏற்காததால் சியவன மகரிஷி அவர்களுக்கு அவிர்பாகத்தைக் கொடுக்க இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்து முனிவரை அடிக்க ஓங்க அந்நிலையிலேயே இந்திரனை ஸ்தம்பித்து நிற்கச் செய்தார்.

அப்போது அங்கு பிரம்மா வந்தார். மகரிஷியே இந்திரன் எவ்வளவு காலம் இப்படி கட்டுண்டு இருக்க முடியும் அவனை விடுவியுங்கள் எனச் சொல்ல சியவனமுனி இந்திரனை விடுவித்தார். பிரம்மா சொன்னார், முனிவரே அஸ்வினி குமரர்கள் இனி தேவர்களுக்கு இனையாக அவிர்பாகம் பெறுவர். என்றார். த்வீதிய விரதத்தின் பலனாகவே அஸ்வினி குமாரர்களுக்கு தேவர்கள் என்ற அங்கீகாரம் கிடைத்தது.

$$$$$

Read 17320 times Last modified on புதன்கிழமை, 06 June 2018 15:33
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952332
All
26952332
Your IP: 54.91.51.101
2024-03-29 19:40

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg