gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 06 June 2018 12:24

பஞ்சமி திதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

&&&&&

பஞ்சமி திதி!

திதிக்குரிய விநாயகர்- சக்தி கணபதி., பழம் சாப்பிடவும்- பிரம்மா பாம்புகள் வசிக்க நாகலோகம் அனுப்பியதால் புளி உண்ணாமல் பாம்பிற்கு பால் வார்த்து பூஜை. புரட்டாசி சுக்லபட்ச பஞ்சமியன்று ஆரம்பித்து ஒருவருடம் செய்யவும். இந்த பூமியில், ஆகாயத்தில், சுவர்க்கத்தில், சந்திர, சூரிய கிரஹண காலங்களில் சரோவர்களில், ஏரி, கிணறு, குளங்களில் பிரசன்னமாயிருக்கும் எல்லா நாகங்களுக்கும் நமஸ்காரம் என வணங்க வேண்டும்.

காமவிரதம். தைமாத சுக்லபட்ச பஞ்சமி திதியில் கந்த பெருமாளை நளன் வழிபாடு செய்தான்.

சாந்தி விரதம்- கார்த்திகை மாத சுக்லபட்ச பஞ்சமி திதியில் சாந்தி விரதம் இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் நீங்கி சாந்தி நிலவும். நியதி என்னவென்றால் ஓராண்டு காலத்திற்கு சூடான உணவைத் தவிர்த்தல் நன்மை பயக்கும். விரத நாள் முடிவில் பாம்பு-சேஷன் பிரதிமை செய்து தானம் வழங்க வேண்டும்.

மாசி மாதம் பஞ்சமி அன்று சரஸ்வதி விரதம் வைகுண்டலோகம் பிராப்தம்.

பூஜையின் பலன்- மிகச் சிறந்த நாகங்களான வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், த்ருதராஷ்ட்ரன், கார்க்கோடன், அனந்தன், தனஞ்செயன் ஆகியவை சர்ப்ப வடிவிலிருந்து அபயம் தருவதுடன் செல்வங்களை வாரிவழங்கும். நாக தோஷங்கள் நீங்கும்.

விநதையும் கத்ருவும் சகோதரிகள். காஸ்யப முனிவரின் மனைவியான விநதை காஸ்யபரிடம் வரம் கேட்க சக்திவாய்ந்த அருணன், கருடனும் பிறந்தனர். கருவில் குறைபாடு ஏற்பட்டதால் ஊனமான அருணன் அதற்கு தன் தாயே காரணம் என நினைத்து பல ஆண்டு காலம் கத்ருவின் அடிமையாக இருக்க தாய்க்குச் சாபமிட்டு இரண்டாவது முழுமையான கருவினால் இந்த சாபம் நீங்கும் என விமோசனம் அளித்தான். அருணன் தவமிருந்து சூரியனின் தேரோட்டியானான் இன்னொரு மனைவி கத்ரு காஸ்யபரிடம் வரம் பெற்று வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், த்ருதராஷ்ட்ரன், கார்க்கோடன், அனந்தன், தனஞ்செயன் உள்பட 1000 பாம்புகளைப் பெற்றாள்.

உலா வரும்போது உச்சைச்வரசுவைப் பார்த்த இரு சகோதரிகள் அதன் வாலின் நிறம் வெண்மையா, கருப்பா என நடந்த போட்டியில் வெற்றிபெற சூழ்ச்சி செய்ய நினைத்த கத்ரு தன் பாம்புக் குழந்தைகளை அழைத்து குதிரையின் வாலில் சுற்றிக்கொள்ள சொல்ல அது சரியில்லை, பாம்புகளின் தர்மம் அதுவல்ல, அன்னையைவிட சத்தியம் முக்கியம், நாகங்கள் சத்தியத்தை மீறக்கூடாது என சில பாம்புகள் மறுக்க அவைகளை பாண்டுவின் வம்சத்தில் ஒருவன் செய்யும் சர்ப்ப யாகத்தில் அழியும்படி சபித்தாள். இதனால் கலக்கமுற்ற பாம்புகள் பிரம்மாவின் ஆலோசனைப்படி அவர்களது சகோதரியை ஜரத்காரு என்பவருக்கு மணமுடிக்க அவருக்குப் பிறந்த ஆஸ்திக மகரிஷி ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை பாதியில் நிறுத்தினதால் மீதி பாம்புகள் தப்பின.

விநதைக்கு மகன் அருணனின் சாபம் இருந்ததால் பந்தயத்தில் தோற்று கத்ருவுக்கு அடிமையானாள். விநதைக்கு கருடன் பிறந்ததும் அவனுக்கு பாம்புகள் உணவாகும் என பிரம்மா வரம் அளித்தார். கருடன் தன் தாயின் அடிமைத்தளை போக்க இந்திரலோகம் சென்று இந்திரனை வென்று அமிர்தம் கொண்டுவரும்போது அவனின் செயல் சரியில்லை என விஷ்ணுகூற இருவருக்கும் 21 நாள் போர். இறுதியில் பெருமாள் அவனிடம் நாகங்களுக்கு அமிர்தம் கொடுப்பது தர்மமாகாது. அதற்குப் பதிலாக என்ன வரம் வேண்டும் என்று கேட்க, நீ யார் எனக்கு வரம் தருவது, உனக்கு நான் வரம் தருகிறேன் கேள் என கருடன் அகங்காரத்துடன் சொல்ல, நீ எனக்கு வாகனமாக பணிபுரியும் வரத்தை தா என பெருமாள் கேட்டார். இதனால் கருடனின் கர்வம் அழிந்து விஷ்ணுவை வணங்கி வாகனமானான். விநதையின் மகனானதால் கருடனுக்கு வைநதேயன் என்ற பெயர் ஏற்பட்டது

இந்திரனிடமிருந்து பெற்ற அமிர்தத்தை தர்ப்பைகளின்மீது ஊற்றி மீதியை தேவேந்திரனிடம் கொடுத்தான். அந்த தர்ப்பைகளை நாகங்கள் நக்க அவற்றின் நாக்கு இரண்டாக பிளந்தது. விஷமில்லா நாகங்கள் பலகாலம் வாழவும் விஷமுள்ள நாகங்கள் சிலகாலமும், நல்ல நாகங்களை மனிதர்கள் பூஜித்து வாழவும் அருள். கருடன், விநதை ஆகியோர் அடிமை தளையிலிருந்து விடுபட்டனர்..

பாம்புகளின் மீது பகைகொண்டு கொன்று புசித்த கருடனிடம் தலைமை பாம்பான வாசுகி நியாயம் கேட்க தொடர்ச்சியாக கொல்லவில்லை, ஆனால் தினமும் ஒரு பாம்பு தனக்கு இறையாக வர ஒப்புக்கொண்டான் கருடன். அதன்படி தினமும் ஒவ்வொன்றாக பாம்புகள் கருடன் குறிப்பிட்ட பாறைமீது சென்று கருடனுக்கு இறையாகின.

அப்பகுதியை ஆண்ட மன்னன் ஜீமூதவாகனன் பதேர்வாவுக்கு வந்து வாசுகியுடன் நண்பரானார். ஜீமூதவாகனன் செல்வம் துறந்து காட்டிற்குச் சென்றபோது நாக கன்னிகையின் அழுகுரல் கேட்டு அவளை விசாரிக்க ஒவ்வொரு நாளும் பட்சி ராஜாவுக்கு ஒரு பாம்பு இறையாக கட்டளை உள்ளது. அதன்படி இன்று என் மகன் சங்க சூடன் முறை என்பதால் துயரம் தாங்க முடியவில்லை என்றதைக் கேட்ட ஜீமூதவாகனன் அந்த பாம்பிற்குப் பதிலாக தானே சென்று பாறை மீது படுக்க, மன்னனின் தியாக உணர்வைப் பாராட்டி கருடன் அன்றிலிருந்து பாம்புகளை கொல்வதை கைவிடுவதாகக்கூறி இதுவரை தனக்கு இறையான பாம்புகளின் எழும்புக் கூட்டிலிருந்து அந்த பாம்புகளை உயிர்பித்துக் கொடுத்தான்.

பிரம்மா வாசுகி முதலிய நாகங்களுக்கு அபயமளித்ததும் ஆஸ்திக முனிவர் நாகங்களை வேள்வித்தீயிலிருந்து காப்பாற்றியதும், கருடன் வரமளைத்ததும் இந்த பஞ்சமி திதியில்- அதனால் நாகங்களுக்கு உகந்த நாள்.

$$$$$

Read 16869 times Last modified on வியாழக்கிழமை, 29 October 2020 10:16
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27051294
All
27051294
Your IP: 3.15.229.226
2024-04-20 19:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg