gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:18

அதிபத்தநாயனார்

1.  அதிபத்தநாயனார்

நாகப்பட்டினம் மீனவ குலத்தில் பிறந்தார் அதிபத்தர். அவர் அக்குலத்தின் தலைவராக இருந்தார். வலைவீசி எடுக்கின்ற மீன்களில் ஒன்றை நடமாடும் எம் பெருமானுக்கு என கடலில் போட்டு விடுவார். தொடர்ந்தாற்போல் பல நாள் போராடியும் ஒரு மீன் கூட வலையில் சிக்கவில்லை. அனைவரும் சோர்ந்து போனர்கள். அதிபத்தர் இறைவனுக்கு அமுது படைக்க மீன் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.

ஒருநாள் பொன்னொளி வீசும் ஒரு மீன் கிடைத்தது. அதைப் பிடித்து என்னை ஆளும் சிவனுடைய பொன்னடிகள் போய்ச் சேரட்டும் என கடலில் வீசினார். அவருடைய அதிபக்தியைக் கண்ட பெருமான் தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்.  

நாகப்பட்டணம்- சிவன் கோவில்- அதிபக்திநாயனார் கோவில் என வழங்கப்படுகிறது.

 

அறுபத்துமூவர்

2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார் / 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார் / 10.உருத்திரபசுபதி நாயனார் / 11.எறிபத்த நாயனார் / 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார் / 13.ஏனாதிநாத நாயனார் / 14.ஐயடிகள் நாயனார் / 15.கணநாத நாயனார் / 16.கணம்புல்ல நாயனார் / 17.கண்ணப்ப நாயனார் / 18.கலிக்கம்ப நாயனார் / 19.கலிய நாயனார் / 20.கழற்றறிவார் நாயனார் / 21.கழற்சிங்க நாயனார் / 22.காரிய நாயனார் / 23.காரைக்காலம்மை நாயனார் / 24.குங்குலிக்கலை நாயனார் / 25.குலச்சிறை நாயனார் / 26.கூற்றுவ நாயனார் / 27.கோச்செங்கட்சோழ நாயனார் / 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

 

 

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:17

அப்பூதியடிகள் நாயனார்

2.  அப்பூதியடிகள் நாயனார்

திருவையாறிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர் பெருமானை பார்க்காமலேயே அவரைத் தன் குருவாக ஏற்று அவரின் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். அமைதி வடிவானவர். பொய், களவு, காமம், கோபம் இவற்றையெல்லாம் நீக்கியவர்.

ஒருநாள் திங்களூர்வந்த அப்பரடிகள் தன் பெயரிலேயே கல்விச் சாலைகள், சோலைகள், தண்ணிர்பந்தல் ஆகியவை கண்டு ஆச்சரியப்பட்டு அங்கிருந்த பணியாளரை யார் இது போன்று தொண்டு செய்வது என வினவினார். அப்பூதியடிகள் என்று தெரியவந்ததும் அவரைச் சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றார். அப்பூதியடிகள் யார் என்றார். எதிரில் வந்த அப்பூதியடிகள் அடிகளார் என நினைத்து வீழ்ந்து வணங்கி எழுந்தருளிய காரணம் கேட்டார். திருப்பழநாதனை வழிபட்டு வரும் வழியில் உம் தண்ணீர் பந்தல் பார்த்தோம். தாங்கள் புரியும் அறங்கள் கேட்டு உம்மைக் காண வந்தோம் என்றார். உங்கள் பெயரை எழுதாமல் வேறு ஒரு பெயர் எழுதக் காரணம் யாது என்றார்.

தவச்செல்வர் என வணங்கியவர் காதில் வேறு ஒருவர் என்பது பேரிடியாகக் கேட்டது. மிகுந்த வருத்தத்துடன் சமணர்களும் மன்னனும் சேர்ந்து செய்த சூழ்ச்சியினை தம் தொண்டினாலே வென்ற பெயர் வேறு ஒரு பெயரா. அதுவே என் தராக மந்திரம். அது எனக்கு முக்தி தரும் ஐந்தெழுத்து. எப்படி புரியாமல் சொன்னீர்கள் என்றார். கடலிலே மிதந்த பெருமான், அவரை தெரியாதா. நீர் என்ன சமணர் கூட்டத்தினரா,நீர் யார் என்றார்?.

அப்பூதியடிகளே, என்னைக் கடைத்தேற்ற எவ்வழியும் காணது அதிகைப் பெருமான் கொடுஞ்சூலையினால் ஆட் கொள்ளப்பட்டு சிவனருளை உணர்ந்த சிறியோன் நான் என்றார். இதைக் கேட்ட அப்பூதியடிகள் அடைந்த ஆனந்தம் அளவிடமுடியாது. யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் எனக் கருதி தவம் புரிந்தாரோ மந்திரம் ஜெபித்தாரோ அப்பெருமான் முன்னிற்க செய்வது தெறியாது திகைத்தார். ஆடினார். பாடினார், எல்லோரையும் பெருமான் காலடியில் வீழச் செய்து வழிபட்டார். வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாத பூசை செய்தார். வீடில் அமுது உன்ன வேண்டினார்.

நாவுக்கரசர் அமுது செய்ய இசைந்தார், நல்ல சுவையான தூய அமுது தயாரானது. தன் மூத்த பிள்ளை திருநாவுக்கரசை வாழை இலை கொண்டுவரப் பணித்தார். நல்ல குருத்திலையைத் தேடி அறுக்கும்போது அங்கு குடியிருந்த நாகம் தீண்ட அடியவர் அமுது உன்பது தன்னால் காலதாமதம் ஆகக்கூடாது என்று ஓடிவந்து தாயினிடம் இலையைக் கொடுத்து காலடியில் வீழ்ந்தான். வீழ்ந்த மகனைப் பார்த்த தாயும் தந்தையும் நீலம்பாய்ந்த உடலைக் கண்டு உண்மையறிந்து அதனால் அடியவர் அமுது செய்வது தடைபடக்கூடாது என்று மகனை ஒரு பாயில் சுற்றி கட்டி வைத்துவிட்டு நாவுக்ரசர் திருவடியில் வீழ்ந்து அமுது செய்ய அழைத்தனர்.

வணங்கியவருக்கு திருநீறு கொடுத்துவிட்டு மூத்த திருநாவுக்கரசு எங்கே, அவனுக்கும் திருநீறு பூச வேண்டும் என்றார். தன் குருமுன் சென்று உண்மையை உரைத்தால் அவர் அமுது செய்வது தடைப்படும் என்று அப்பூதியடிகள், ‘இப்போது அவன் இங்கு உதவான்’ என்றார். இந்த பதிலை என் உள்ளம் ஏற்கவில்லை. அவன் எங்கே என்றார். இனி மறுக்க இயலாமல் உண்மையை உரைக்க, பாயில் இருக்கும் பாலகனை கொண்டுவரச் சொல்லி நீலகண்டன் அருள் தரும் படியான பத்து பாடல்களைப் பாட பாலகன் உறங்கி எழுபவன் போல் எழுந்தான். அவனுக்கு திருநீறு வழங்கினார் அப்பரடிகள்.

அனைவரும் அமர்ந்து அமுது உண்டனர். பலநாள் அங்கு தங்கியிருந்து அருகிலிருந்த தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடினார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார் /  3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார் / 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார் / 10.உருத்திரபசுபதி நாயனார் / 11.எறிபத்த நாயனார் / 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார் / 13.ஏனாதிநாத நாயனார் / 14.ஐயடிகள் நாயனார் / 15.கணநாத நாயனார் / 16.கணம்புல்ல நாயனார் / 17.கண்ணப்ப நாயனார் / 18.கலிக்கம்ப நாயனார் / 19.கலிய நாயனார் / 20.கழற்றறிவார் நாயனார் / 21.கழற்சிங்க நாயனார் / 22.காரிய நாயனார் / 23.காரைக்காலம்மை நாயனார் / 24.குங்குலிக்கலை நாயனார் / 25.குலச்சிறை நாயனார் / 26.கூற்றுவ நாயனார் / 27.கோச்செங்கட்சோழ நாயனார் / 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

 

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:15

அமர்நீதிநாயனார்

3.  அமர்நீதிநாயனார்

கும்பகோணத்தின் ஒரு பகுதியாகிய தாராசூரம் அருகில் உள்ள பழையாறை என்ற ஊரில் பிறந்தார் அமர்நீதியார். வணிகர் குலத்தில் அவதரித்தவர் வணிகம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்தார். அவர் சித்தத்தில் கொண்டிருந்த கொள்கைகள் இரண்டு. ஒன்று சிவன் சிந்தனையை சித்தத்தில் பதித்து வழிபாடு செய்வது. மற்றது சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து கீழுடை மற்றும் கோவணம் விரும்பியதை அளித்து வணங்கி மகிழ்வது.

பக்கத்தில் உள்ள நல்லூரில் கோவில் விழாவிற்கு குடும்பத்துடன் சென்று மடம் அமைத்து அன்பர்களுக்கு அமுது படைத்து அளித்து வந்தார். அப்படிக் கோவணமும் சீருடையும் அன்பர்களுக்குத் தந்து  தொண்டு செய்துவரும் அமர் நீதியாருக்கு கோவணத்தின் பெருமைகாட்டி அருள்கொடுக்க எம்பெருமாண் மறையவர் குலத்து பிரம்மச்சாரி வேடம் தாங்கி வந்தார். அவரை மனத்திலும் முகமிக மலர்ந்து வரவேற்றார் அமர்நீதியார்.

ஐயா, நான் தெய்வத்தன்மை மிகுந்த காவிரியில் நீராடி வருகின்றேன். மழைவரினும் வரும் தண்டிலே உள்ள இந்த உலர்ந்த கோவணம் ஒன்றினை உம்மிடம் கொடுக்கின்றேன். கோவணம் என அலட்சியமாக இருக்க வேண்டாம். நான் குளித்துவரும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்ட அமர்நீதியாரும் ஒப்புக்கொண்டார்.

அமர்நீதியார் அடியவர் முக்கியத்துவம் கொடுத்த கோவணத்தை மற்றவைகளிடையே வைக்காமல் தனியாக பத்திரமாக வைத்தார். இறைவன் கோவணத்தை போக்கிவிட்டு மழையையும் பொழிய வைத்தார். அடியவர் மழையில் நனைந்து வந்து, என் கோவணம் நீரில் மூழ்கியதாலும், தண்டில் இருந்த கோவணம் மழையாலும் நனைந்து விட்டது, நான் கொடுத்த கோவணத்தை தாருங்கள் எனக் கேட்டார். அமர்நீதியார் உள்ளே சென்று பார்த்தபோது வைத்த இடத்தில் அந்த கோவணம் இல்லை. பதறிவிட்டார். இந்த அதிசயம் என் வாழ்நாளில் கண்டதில்லை. தங்களுக்கு வேறு ஒரு கோவணம் புதியதாகத் தருகின்றேன் என்றார்.

அமர்நீதியாரே. உமது செயல் நன்றாக இருக்கின்றது. நல்ல கோவணம் தருகின்றேன் என்று பல நாளும் பலரைச் சொல்ல வைத்தது என்னுடையதை வைத்துக்கொள்ள நாடகமா. பழையதாக இருந்தாலும் பரவாயில்லை. என்னுடையதுதான் வேணும் என்றார். அமர்நீதியார் அடியவரே அதற்குப் பதிலாக பொன்னும் மணியும் தருகிறேன் என்றதையும் மறுத்து கோவணமே வேண்டும் என்றார் அடியவர். என்னிடம் காணாமற் மறைந்த கோவணத்தைக் கேட்டால் எப்படி. அதற்கு மாற்று சொல்லுங்கள் என்றார் அமர்நீதியார்.

நான் உடுத்தியிருக்கின்ற கோவணம் தவிர, உம்மிடத்திலே கொடுத்து நீர் தொலைத்த கோவணம் தவிர அதற்கு நிகரான தண்டிலே உள்ள இந்தக் கோவனத்திற்கு சமமான கோவணம் வேண்டும் என்றார். அதற்கு சம்மதித்த அமர்நீதியார் தன்னிடமிருந்த எல்லா கோவணத்தையும் வைத்தும் தராசு சமநிலை அடையவில்லை. அதிசயப்பட்ட நீதியார் தன்னிடமிருந்த பொன் பொருள் அனைத்தையும் வைத்தார். அப்போதும் தராசு சமநிலைக்கு வரவில்லை.

வேறுவழி தெரியாமல் அமர்நீதியார் அந்த தராசை மனைவி மகனுடன் வலம்வந்து ‘நாங்கள் அடியவர்களுக்குச் செய்த அன்பில் இறைவனுடைய திருநீற்று மெய்யடியில் தவறு செய்ய வில்லை என்றால், தராசே நீ நேர் நிற்க’’ எனச் சொல்லி நல்லூர் இறைவனை வணங்கி ஐந்தெழுத்து ஓதி தராசில் ஏறி நின்றார். தராசு துலை நேர் நின்றது. இறைவன் உமையோடு காட்சிதந்து தம்முன் எப்போதும் தொழுதிருக்ககூடிய இன்ப பேற்றினை அருளினார்  

*********

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார் / 2.அப்பூதியடிகள் நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார் / 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார் /9.இளையான்குடிமாற நாயனார் / 10.உருத்திரபசுபதி நாயனார் / 11.எறிபத்த நாயனார் / 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார் / 13.ஏனாதிநாத நாயனார் / 14.ஐயடிகள் நாயனார் / 15.கணநாத நாயனார் / 16.கணம்புல்ல நாயனார் / 17.கண்ணப்ப நாயனார் / 18.கலிக்கம்ப நாயனார் / 19.கலிய நாயனார் / 20.கழற்றறிவார் நாயனார் / 21.கழற்சிங்க நாயனார் / 22.காரிய நாயனார் / 23.காரைக்காலம்மை நாயனார் / 24.குங்குலிக்கலை நாயனார் / 25.குலச்சிறை நாயனார் / 26.கூற்றுவ நாயனார் / 27.கோச்செங்கட்சோழ நாயனார் / 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார் / 31.சத்திய நாயனார் / 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார் / 34.சிறுத் தொண்ட நாயனார் / 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார் / 37.சோமாசிமாற நாயனார் / 38.தண்டியடிகள் நாயனார் / 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார் / 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் / 41.திருநாவுக்கரசு நாயனார் / 42.திருநாளைப்போவார் நாயனார் / 43.திருநீலகண்ட நாயனார் / 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் / 45.திருநீலநக்க நாயனார் / 46.திருமூல நாயனார் / 47.நமிநந்தியடிகள் நாயனார் / 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார் / 51.புகழ்ச்சோழ நாயனார் / 52.புகழ்த்துணை நாயனார் / 53.பூசலார் நாயனார் / 54.பெருமிழலைக்குறும்ப நாயனார் / 55.மங்கையர்க்கரசி நாயனார் 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார் / 58.முனையடுவார் நாயனார் / 59.மூர்க்க நாயனார் / 60.மூர்த்தி நாயனார் / 61.மெய்ப்பொருள் நாயனார் / 62.வாயிலார் நாயனார் / 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

                                             

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:14

அரிவாட்டாயநாயனார்

4. அரிவாட்டாயநாயனார்

கணமங்கலம் என்ற புள்ள மங்கலம் ஊரில் தாயர் தோன்றினார். வேளான் குடியைச் சார்ந்தவர். மிகுந்த பொருட் செல்வம் உடையவர். ஆண்டன்மேல் மாறாத அன்பு கொண்டவர். அவர்தம் துணைவியரும் கணவர் குறிப்பறிந்து நடக்கும் தன்மையானவர். இருவரும் திருக்கோவிலுக்குச் சென்று செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அமுதூட்டி வணங்குவார்கள். அவர்களின் பணி செம்மையாக நடைபெற்று வந்தது.

தாயரின் தொண்டின் சிறப்பு உலகறியவும் அவரை ஆட்கொள்ளவும் கருதினார் சிவபெருமான். அதன் விளைவாக தாயரின் செல்வம் நாளுக்கு நாள் குறந்தது. செல்வம் இல்லா நிலை ஏற்பட்டபோது தாயர் நெல் அறிந்து தரும் கூலி வேளைக்குச் சென்றார். கூலியாகப் பெற்ற நெல்லில் செந்நெல்லை பெருமான் வழிபாட்டிற்கும் கார்நெல்லைத் தனக்கும் பயன்படுத்தினார். ஊரில் எங்கும் செந்நெல்லே விளந்தது. கார் நெல்லே இல்லை. கார் நெல் கிடைக்காமையால் உணவுக்கு தட்டுப்பாடு வந்தது. கிடைக்கும் கீரைகளை சமைத்து சாப்பிட்டனர். எப்படியிருப்பினும் இறை வழிபாட்டிற்கு செந்நெல் கிடைக்க மகிழ்வுடன் தொடர்ந்து அமுது படைத்து வழிபட்டார்.

நாட்கள் கடந்தன. கீரையும் கிடைக்கா நிலை. கணவன் மனைவி இருவரும் தண்ணீரையே அருந்தி வாழ்ந்தனர். பலநாள் உணவு இல்லாமையால் உடல் சேர்ந்தது. உள்ளம் தளராமல் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் பஞ்ச கவ்வியமும் எடுத்துக் கொண்டு கோவில் நோக்கி சென்றனர். வயல்வெளி குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி தாயர் கீழே சாய்ந்தார். வயல் வெளியில் ஆண்டவனுக்கு வைத்திருந்த செந்நெல்லும் செங்கீரையும் சிதறிக்கிடந்தது.

இனி கோவிலுக்குப்போய் என்ன செய்யப் போகின்றோம் என் வழிபாடும் திருத்தொண்டும் இன்றோடு முற்றுப் பெற்றது. இனி வாழ்ந்து என்ன பயன் எனக் கருதிய தாயர் அரிவாளைக் எடுத்து தன் கழுத்தை அறுக்க முயன்றார். அப்போது ஒருகரம் தாயரின் கையைத் தடுத்தது. பெருமான் விடைமேல் தோன்றி “நீ புரிந்த செயலால் நாம் மகிழ்வுற்றோம், நீயும் உன் மனைவியுடன் என்றும் நம் உலகில் வாழ்வாயாக” என அருள் செய்து அருளினார். அரிவாளால் தன் ஊட்டியை அரிந்ததால் அரிவாட்தாயர் என்ற பெயர் உண்டாயிற்று.

                                   ****** 

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/  5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:13

ஆனாயநாயனார்

5. ஆனாயநாயனார்

மழவநாட்டின் ஒருபகுதியான திருமங்கலம் லால்குடி அருகே உள்ள ஊர். அவ்வூரில் இடையர்- ஆயர்கள் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை ஊரை அடுத்த காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து பச்சைப் புல் வெளியில் மேய விட்டு நல்ல நீர் பருகச் செய்து கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காக்கும் பணியை செவ்வனே செய்து வந்தார். அப்போது எம்பெருமானை துளைக்கருவியான புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்து தானும் இன்புறுவார்.

உள்ளம் ஒன்றிய இசையால் பெருமானோடு தினமும் ஒன்றிப்போவார் ஆனாயர். தினமும் ஆநிரைப்பணியும் குழல் வழிபாடும் இனிது நடந்தது. ஒருநாள் கொன்றை மரம் ஒன்றைப் பார்த்து அவ்விடம் சென்றார். கொன்றைமலர் ஐந்து இதழ்களைக் கொண்டது. அதன்மேலிருக்கும் மலர்குழல் ஓங்காரம் போலிருக்கும். அது கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கியிருப்பதை பார்த்த ஆனாயர் அந்த மரத்தை சிவமாகக் கருதினார்.

தான் சிவமாக கருதிய கொன்றை மரத்தின் முன் நின்று ஒன்றிய மனத்துடன் தன் அன்பையும் இசையையும் இணைத்து மடைதிறந்த வெள்ளம்போல் புல்லாங்குழலால் ஐந்தெழுத்தை வைத்து இசைத்தார். அப்பகுதி எங்கும் இசை வெள்ளம் பரவியது. வலியவரும் மெலியவரும் தம் முன் பகை விடுத்து அன்புடன் நட்பு பாராட்டியது. அப்பகுதி உயிரினங்கள் தன்னை மறந்தன. அந்த இசை எம்பெருமான் செவி அருகேயே செல்ல பெருமான் விடைமீதேறி அவ்விடம் வந்து சேர்ந்தார். “இந்நிலையிலேயே நம் உலகை அடைவாய் அங்கும் உன் குழல் ஒலிக்கட்டும்” என அருள் செய்தார்.

லால்குடி- திருமங்கலம்-சிவன் கோவிலில் ஆனாயநாயனார் புல்லாங்குழல் வாசிப்பதுபோல்.

                                         ****** 

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:11

இசைஞானி நாயனார்

6. இசைஞானி நாயனார்

திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:10

இடங்கழிநாயனார்

7. இடங்கழிநாயனார்

கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். ஆதித்த சோழன் மரபில் வந்த மன்னர். சைவ நெறியையும் தர்ம நெறியையும் பேணிப் பாதுகாத்தார். திருக்கோவில்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார். அடியவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார்,

அந்த ஊரில் சிவனந்தன் என்ற அடியார் மகேசுவர பூசைசெய்து அடியவர்களுக்கு அமுது செய்து வந்தார். ஒருநாள் அதற்கான பொருள் இல்லாமையால் என்ன செய்வது என தடுமாறினார். மன்னர் இடங்கழியார் பண்டாரத்தில் நிறைய நெல் மூட்டைகள் உள்ளது எனத்தெரிந்து அதை திருட முடிவு செய்தார். திருத்தொண்டு செய்ய திருடுவதைத்தவிர  வேறில்லை என்ற நிலையில் நடுஇரவில் பொக்கிஷ அறையில் புகுந்து நெல் மூட்டையை திருட முயற்சித்தார்.

வீரர்களிடம் மாட்டிக்கொண்டார். மன்னர் முன் நிறுத்தப்பட்டார். உம்மைப் பார்த்தால் திருடுவதை தொழிலாகக் கொண்டவன் போல் இல்லை, எதற்காக இவ்வாறு செய்தீர் என்றார், அடியார் மன்னிடம் தான் அடியவர்க்கு மகேசுவரபூசை செய்திட போதிய பொருள் இல்லாததால் திருட வந்தேன் என்றார். மன்னன் இவரல்லவா எனக்கு பொக்கிஷம். வேறு பொக்கிஷம் எதற்கு என தன் பண்டாரத்தை திறந்து உங்களுக்கு எவ்வளவு நெல், பொன் பொருள் வேண்டுமோ அனைத்தையும் எடுத்துச் சென்று தொண்டு செய்யுங்கள் என்றார். மற்ற அடியவர்களும் வேண்டியது பெற பறையறிவிப்பு செய்தார். பல ஆண்டுகள் அடியவர் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:09

இயற்பகைநாயனார்

8. இயற்பகைநாயனார்

பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். நமக்கு உரிமை இல்லாதவற்றை எல்லாம் என்னுடையது என நினைப்பது உலக இயல்பு. ஆனால் இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார்பால் அன்பும் நேசமும் கொண்டவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். உலக இயலுக்கு பகையானவர்.

இவ்வடியவரின் திறத்தை உலகுக்கு அறியச் செய்ய நினைத்து காமுகன் வேடம் பூண்டு புறப்பட்டார். இயற்பகை இல்லம் வந்தார். இயற்பகையாரே நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்கினும் இல்லை எனக் கூறாது வழங்கும் உம் வள்ளல் தன்மை பற்றித் தெரிந்தபின் உன்னிடம் ஒன்று வேண்டி வந்தேன் என்றார். அடியவரே என்ன தயக்கம். யாதாயிருந்தாலும் என்பக்கம் இருந்தால் அது எம்பிரான் அடியவர் உடமை. வேண்டியது கேள் என்றார்.

அடியவர் நீங்கள் தரலாம் என்றால் நான் கேட்கலாம் என்றவரிடம் கேளுங்கள் என்றார். ‘காதல் உன் மனைவியைத் தா’ என்றார் அடியவர். தன்னிடம் இருப்பதைக் கேட்டார் என மகிழ்வுற்று நான் தந்தேன் என்ற இயற்பகை, மனையிடம் சென்று ‘இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு கொடுத்தனம்’ என்றார். செய்தி கேட்ட மங்கை கலங்கினார். கணவரின் மனநிலை அறிந்து தெளிந்தார். அம்மையார் கணவன் சொல்லைக் காக்க முனைந்து தன் கணவரை வணங்கினார். அடியார் இவளை அழைத்துபோக பயமாயிருக்கின்றது ஊர் எல்லைவரை வழித்துணையாக வர இயற்பகையாரிடம் வேண்டு கோள் விடுத்தார். அவ்வறே வருகிறேன் என உடைவாளை எடுத்துக் கொண்டு துணைக்குச் சென்றார்.

இச்செயலை அறிந்த சுற்றத்தாரும் ஊர் மக்களும் அதை தடுக்க முடிவு கொண்டனர். தன் முடிவை சொன்ன இயற்பகையார் ஏற்றுக் கொள்ளாமல் தடுத்த அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அடியவரிடம் நீங்கள் புறப்படுங்கள் என்றார். அடியவரும் அம்மையாரும் ஒரு திசையிலும் இயற்பகையார் ஒருதிசையிலும் சென்றனர். எந்தவிதக் கவலையோ துன்பமோ இன்றிப் போகின்ற இயற்பகையாரைக் கண்ட அடியவர் வியந்து சொன்னார். ‘பொய்தரும் உள்ளம் இல்லான், பார்க்கிலன் போனான், அவரின் பற்றற்ற உள்ளத்தை பாராட்டுகிறார்.

இயற்பகை முனிவா நீவா என குரல் கேட்டுத் திரும்பினார் இயற்பகையார். பெருமான் வானில் வெள்ளிவிடைமீது தோன்றி உம் துனைவியோடு நம்முடன் வா என அருள் புரிந்தார்.

                                  ****** 

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:07

இளையான்குடி மாறநாயனார்

9. இளையான்குடி மாறநாயனார்

இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் பாலும் அளவிலாத அன்பு கொண்டவர். அன்னம் பாலிப்பு செய்வதை தன் பெருந்தொண்டாக கருதினார். ஆண்டவன் வழிபாடு ஆராதனை. அடியவர் வழிபாடு சமாராதனை என்பர். சம்-நன்றாக. விட்டை விட்டு வெளியில் வந்து பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது படைப்பார். அறுசுவை உணவு தயாரித்து அடியார் விரும்பும் உணவை பரிமாறி மகிழ்ந்து மகேசுவர வழிபாடு செய்து வந்தார்.

பெருமான் தம் அடியவர்கள் செல்வம் போய் தான் உண்ணாது வாழ்ந்தாலும் தங்கள் கொள்கையை விடமால் அடியவர்க்கு அமுது படைப்பார்கள் என்பதனை உலகுக்கு  மாற நாயனார் மூலம் எடுத்துரைக்க விரும்பினார். மாறன் வறுமையுற்றார். செல்வ வளம் சுருங்கியது. அவரின் மனம் சுருங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்ளை அடமானம் வைத்தும் தொண்டு செய்துவந்தார்.

தில்லையிலிருந்து அந்தணர் வடிவில் புறப்பட்ட பெருமான் மாரிக்காலத்து இரவில் மாறன் வீடு வந்து சேர்ந்தார். அங்கு மாறனும் அவர் துணைவியரும் உணவு உண்ணாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று ஈரமேனியைப் போக்க உதவினர். மாறன் நெஞ்சிலே ஈரம் கசிந்தது. மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி, கணவரிடம் இன்று நம் சிறுவயலில் விடுத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு அமுது படைக்கலாம் என்றார்,

நாயனார் வயல் வெளிக்குச் சென்று அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதப்பதை ஒன்று சேர்த்து கொண்டுவந்து மனைவியிடம் கொடுக்க அதை அவர் சமைக்க மழையினால் விறகு ஈரமாக இருப்பதை கணவருக்கு உணர்த்த அவர் வீட்டின் விட்டத்தை எடுத்து ஒடித்து கொடுத்தார். வீட்டின் பின்புறம் உள்ள குழிநிரம்பாத குறும் பயிரான கீரையைக் கொணர்ந்தார் மழையில் நனைந்தவாறே. இவற்றையெல்லாம் வந்த அடியரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தம் கணவரிடம் அடியவரை அமுது உண்ண அழைத்தார்.

அடியவர் மறைந்தார் அங்கு ஓர் சோதி தெரிய இருவரும் திகைத்து நின்றனர். அப்போது ‘நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல்வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்’ என அருள் செய்தார்.

******  

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 13:06

உருத்திரபசுபதி நாயனார்

10. உருத்திரபசுபதி நாயனார்

சோழநாட்டில் திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் பசுபதி பிறந்தார். வேதம் என்றால் அறிவு. ரிக் யஜுர் சாமம் அதர்வன என்ற நான்கில் அதர்வன மற்ற மூன்றின் தொகுப்பு. அதனால் வேதம் ‘த்ரயா’ என்பர். மூன்றினுள் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதமாகும். அது ஏழு காண்டங்களை உடையது. அதன் மையத்துள் உள்ள காண்டத்துள் 11 அனுவாகங்களை உடையது திரு உருத்திரம் என்பது. அது 101 வரிகளை உடையது. 51 வரியில் ‘சிவாய’ “சிவதரய” என்று திரு ஐந்தெழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படும். இவ் உருத்திரத்தை ஜெபித்ததால் உருத்திரப் பசுபதியார் என்ற பெயர் பெற்றார். அந்த ஊரில் உள்ள பொய்கையில் கழுத்தளவு நீரில் இந்த உருத்திர ஜபம் செய்து சிவ புரியை அடைந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932979
All
26932979
Your IP: 3.90.187.11
2024-03-29 03:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg