gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 04 May 2020 11:24

பூரணசக்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!

#####

பூரணசக்தி!

1125. உலகங்களின் முடிவையும் அனைத்தும் முடியும் இடத்தையும் ஆராய்ந்து அறிந்தேன். அகில உலகங்களும் ஆதிப் பெருமான் சிவத்திடம் இலயம் அடைகின்றன. ஆணாகவும் பெண்ணாகவும் உள்ள பால் உணர்ச்சி முடியும் இடத்தையும் அறீந்தேன். சிவசத்தி எந்தெந்த இடத்தில் தொழிற்படுத்துகிறது என்பதையும் ஆராய்ந்து அறிந்தேன்.

1126. ஈசனை முடிவடையச் செய்யும் பராசக்தியை உயிர்கள் உணரவில்லை. குண்டலினி சக்தி பராசக்தியுடன் கூடி முழுமை பெற்றது. புண்ணியர்களின் கூட்டங்களைத் தன்னருளில் இருக்கச் செய்யும் கன்னி. உலகத்திற்கு கொண்டு வந்த முறைப்படி இலயம் அடையச் செய்பவள்.

4427. குண்டலினி சக்தி தலையைக் கடந்து நிராதன்க் கலைக்கு சென்ரால் மதம் உடைய ஐந்து ஆண் யானைகளாகிய புலன்களும் அவற்றைச் செலுத்தும் மனமும் உலக இயல்புடன் திருமாலும் பெண்ணுடன் கூடிய புணர்ச்சியில் விருப்புற்று விளங்கி பிரம்ம சக்தியான வாகீசுவரியும் அன்பால் பொருந்தும் கலவியுள் ஒன்றுபட்டு வேறுபாட்டை விடுவர்.

1028. இன்பக் கலவியில் எழும் ஆனந்தத்தில் நுழைய வல்லான் தந்தையான சிவனும் துன்பமயமான சுக்கில சுரோணிதச் சேர்க்கையில் விருப்பம் கொண்டு பந்தத்தை விளைவிக்கும் வீணாத்தண்டில் அம்மை பராசக்தியும் இருக்கின்றாள்.

1029. உடல் உறவினால் வந்த தாயும் தந்தைய்ம் உற்பத்திக்குக் காரணம் என்ற மயக்கம் நீங்கி இருப்பாயாக. சுத்த வித்யா மண்டலத்தில் சுத்த மாயையில் அம்மையும் உருத்திரரும் இருக்கின்றனர். அம்மை என்றும் நிலைபெற்று உன்னைப் பொருந்தி நாதத்தைத் தந்தருள்வாள். அவள் இருக்கும் ஒளிமண்டலமே நந்தி என்ற பெயரை உடையது.

1030. ஆதாரங்கள் மாலைபோல் இருக்கின்றன,. சுவதிட்டானத்தில் இருக்கும் நான்முகன் படைப்பாகிய உலகில் மக்கள் வாழும் ஆண்டுகள் நூறு. நான்முகனுடன் இருக்கும் கலைமகள் ஞானவாணியாக வாக்கீசுவரியாய் மேலே எழுந்தருளியுள்ளாள். படைப்பை விட்டு மேலே வரச் செய்தது பராசக்தியே ஆகும்.

1031. இறைவனின் நம்பிக்கை கொண்டு கவலைகள் நீங்கி ஒளிமண்டலத்தில் நிலைபெற்றவர் ஐயத்தை உடைய மனத்தை அடக்கி நாதத்தின் நுட்பமாக இருக்கும் பரத்தை அறிந்த பின்பு இறைவன் நீங்காமல் இருக்க ஆசனம் ஆவார்.

1032. அருளின் காரணமாக தானே மூலாதாரத்திலிருந்து எழுந்த சத்தி வான் மண்டலத்தில் புலப்படும்படியாக இருந்து சந்திர மண்டலத்தில் ஒளி பெறும் படியாக அமைத்தாள். செந்தேனைப் போல் இடைவிடாது எழும் ஒளியில் பராசக்தி நடனம் ஆடும் இடம் பொன்னம்பலம் என்பதை அறிவீர்.

1033. தன் மாத்திரைகளை அறியும் ஞானேந்திரியம் ஐந்தும் ஐம்பொறிகள் இல்லாது அறியும் அருள்சத்தியைச் சேர்ந்தால் நீங்காத அறிவை புரிவர். அருட்சத்தியை விடாமல் பற்றி நிற்பவரிடம் அவளும் பொருந்தி அவர் விருப்பத்தை நிறைவு படுத்துவாள்.

1034. சந்திரன் சூரியன் இயங்காத இடத்தில் மகிழ்ச்ச்சியைச் செய்யும் நாத சத்தியை விரும்பி ஆரவாரமின்றி அருளுடன் சேர்ந்திருந்தாள் பருவ வேறுபாடு இல்லாத இளைஞர் ஆவார்.

1035. வாலை பராசக்தியுடன் மேல் அணுகா விந்து நாதங்களைக் கடந்து முதல்நிலை அடைவதால் வீடு பேற்றுக்கு அமைந்த பாதையில் பராசக்தி இருப்பாள்.

1036. நாதாந்தத்தில் நிலைபெற்ற பராசத்தி சிவத்துடன் ஒன்றியபோது அவளே சீவர்களுடன் பொருந்திய இச்சையாகவும் விருப்பத்துடன் ஞானமாக விளங்குவாள். கீழ் நோக்குடன் கூடியிருந்த கிரியா சக்தி நல்லவற்றை உணர்ந்து நின்றபோது மூவரும் பொருந்திய சபையில் சிவமும் பொருந்திவிடும்.

1037. மணமும் மலரும் போல் சக்தியும் சிவனும் ஆன்மாவிலும் மற்றத் தத்துவங்களிலும் ஒத்துப் பொருந்தியதை உயிர்கள் உணரவில்லை. சத்தியும் சிவனும் சம்மான நிலையில் கலந்தபோது சத்தியுடன் ஒத்துள்ள சிந்தையை என்னிடம் வைத்து இறைவன் விளங்கினான்.

1038. சிந்தைக்குள் உலவும் சத்தி விந்து நாதங்களாக விரிவு அடைந்து சந்திர மண்டலத்திற்கு உரியவள். ஆறு ஆதாரங்களையும் கொண்டு விளங்குபவள். சத்துவ குணம் உடையவள். அ கரம் முதல் க்ஷ் கரம் வரை ஐம்பத்தோர் எழுத்துக்களிலும் உறைபவள்.

1039. சந்திர மண்டலத்தில் சிறந்து இருக்கும் சத்தி தன் வேகத்தைக் காட்டாமல் அமுதம் சுரக்கும் கொங்கைகளுக்கு கீழே இருப்பாள். இத்தகைய இரண்டு நிலைகளை அறிபவர் இல்லை. மனத் தெளிவு பெற்று புருவ நடுவில் இருக்கும் தீப ஒளியை உள்ளே காண்பவரின் சிந்தையில் ஊற்றைப் போல் இருப்பாள்.

1040. என்னை அடிமையாய் ஏற்றுக் கொண்டவள். தீ வடிவான உருத்திரன் மூலாதாரத்தில் இருக்கும் உருத்திர சோதி விந்து மண்டலத்தில் ஏறிச் சிறப்புர வீற்றிருப்பவள். இதை அறியாதவர் சென்று விடுங்கள். அறிந்தவர் அடயோகப்பயிற்சியாளர் ஆவர்.

1041. எல்லாவற்றிற்கும் மேலாக சத்தி உறையும் இடம் ஆறு இதழ் உடைய சுவாதிட்டானம். பூமிக்குமேல் இருநூற்றுப் பதினெட்டு உலகங்கள் இருக்கின்றன. சசிகரதளத்தில் புண்ணியத்தால் வந்து பூமி தத்துவத்தில் நாத சக்தியாக விளங்குகின்றாள்.

1042. பரமன் இருந்தபடி இருக்கும்போது நாதசத்தி மட்டும் செயலாற்றும். வல்லமை மிகுந்த சித்சத்தியாக இருக்கும் சோதி. அவள் வான் கூற்றில் உள்ள சமூகமாக இருப்பதால் உலகு சக்தியால் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.

1043. சுவதிட்டானத்தை இடமாகக் உடைய குண்டலி சத்தி மூலாதாரமான நான்கு இதழ்களுடன் மேல் உள்ள மணிபூர்கம் அனாகதம், விசிக்தி, ஆக்ஞை சசிகரதளம் ஆகிய ஐந்தையும் பொருந்தி ஒன்பது சத்தியாய் இருக்கும். தன் வழியாய் சுவாதிட்டானத்திலிருந்து படர்ந்து உள்வழி வீணாத்தண்டினுள் பேரொளியாய் செல்லும்.

1044. ஆதி சத்தியின் இருப்பிடம் சசிகரதளம். இந்த ஆற்றல் மற்றர சக்கரங்களில் உல்லது. உடலையும் சிதகாயாத்தையும் ஒன்றுபட இணைக்கும் சகசிரதளமான உச்சியை அடைய மேல் உந்தி தொழிற்படுவது நாற்கோணமும் முக்கோணமும் பொருந்திய மூலாதாரம்.

1045. சதுர வடிவான மூலாதாரத்தில் எழுந்த மூன்?று முளைபோல் விளங்கும் சத்தி ஆதாரச் சக்கரங்கள் எல்லாவற்ரிலும் பரவ சுழுமுனை நாடியின்மீது இருக்கும் பிரமரந்திரத்தை கடந்து உள்ளம் ஒளியை அடைய எல்லாச் சக்கரங்களிலும் பரவியிருந்தாள்.

1046. பூரண சத்தி பத்து திசைகளில் பத்து முகங்கலோடு எழுந்தருளியிருந்ததால் எல்லா திசைகளிலும் பரவியது. தலையை நோக்கிக் குவிந்து முத்துப் போல் சசிகர தளத்தில் திகழும் ஒளியை நோக்கித் தேன் போன்ற இனிமையை அளிக்கும் காம வாயு அதோ முகத்திலிருந்து நீர்போல் சசிகரதளத்தை அடைந்தது.

1047. அம்பை போன்ற கண்ணையும் கொம்பு போன்ற நுண்மையான இடையையும் மற்ற அழகுகளையும் உடைய சத்தி நறுமணம் கமழ்கின்ற செம்பொன் திருமேனியுடன் சிவத்தை நோக்கி அரிய உயிர்கட்கு இன்ப மொழியை நாள்தோறும் மொழிகின்றாள்

1048. பெருங்கடவுள் தன்மை பொருந்திய பிரண்வத்தில் இருக்கும் இன்பத்தை தருபவள் சத்தி. பவளம் போன்ற செந்நிற ஒளி அவள் உடுக்கும் ஆடையாகும். நிலத்திற்கு கீழ் கடந்துள்ள திருவடிகளை உடையவள். அகில அண்டங்களையும் கடந்து பரந்து செல்லக்கூடிய மூன்று சுடர்களையும் தன்னிடம் கொண்டவள்.

1049. உலகத் தலைவனாகிய இறைவனை தன் மேனியில் ஒருபக்கத்தில் புனைய வல்லவள். அண்ட கோடிகளை சங்கற்ப மாத்திரத்தில் உளேயே மாற்றம் செய்பவள். அனைத்து மண்டல ஒளியையும் தன்னிடம் கொண்டு அனைத்தையும் சுமக்கும் அவளை வாழ்த்துகின்றேன்.

1050. அன்பிற்கு இலக்கான புவனாபதி அம்மையே போற்றி. அடியேனின் அருந்தவத்து ஆற்றலினுள் நிற்பவள். என் சினத் தன்மையை மாற்றிச் சிற்றம்பலத்துள் இருக்கும் சிவந்த நிற ஒளிமயமானவ/ள். இயமனை விரட்டும் வலிமையுடையவள்.

1051. சுழுமுனையில் நாதமாக இருக்கும் இன்பத்தை தரும் சுந்தரி. அழகுடன் கூடிய திரிபுரை மங்கை. கங்கை ஆற்றினைப் போல் பெருகிவரும் துன்பங்களைப் போக்கி மலையாகிய சிகரத்தை அடைய அருள் செய்து அடியாரின் வினைகளைப் போக்கி விளங்கும் ஆதியான பரம் பொருள்.

1052. மெல்லிய நுட்பமான நாதத்தில் விளங்குபவள் சத்தி. பரகாயத்தில் பரந்துள்ள மெல்லிய துணுக்களால் ஆனவள், அனைவராலும் புகழப்படுபவள். வணங்குபவரின் பக்குவத்திற்கு ஏற்ப பயனை அளிப்பவள். பச்சை கொடியைப் போன்றவள். அற்பமான புகழில் விருப்பம் கொள்ளும் உடல் வலிமையைத் தந்து வலிமை மிக்க நாதமயமான பராசக்தி என் மனத்திலே புகுந்து அருளினாள்.

1053. அவ்வருளம்மையை ஸ்தாபித்தவன் என் இறைவன். சங்கற்பத்தால் உலகைப் படைக்கும்போது தானே மேலும் கீழுமாய் பரவி அப்பொருளாகவே இருந்து அந்தப் பொருளுக்கும் உயிரை அளித்தருள்பவள் அவளே.

1054. சிவத்தின் பெருமையை உணர்ந்து கொள்ளாதவர் அது இது எனப் பல தெய்வங்களை வழிபடுவர். முத்திப் பேறு அடைவதற்கு மூலகாரணமான பொருள் இது என அறியமாட்டார். குழலைப் போன்ற சித்ரணி என்ற நாடியில் இருக்கும் திருவருளம்மையின் அருளால் நிலையாய் ஆவது இதுவாகும் என அறியமாட்டார். இவர்கள் தெளிவு அடையாதவர்கள் ஆவர்.

#####

Read 1542 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26946526
All
26946526
Your IP: 52.90.235.91
2024-03-29 14:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg