gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:04

கேவல சகல சுத்தம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

#####

கேவல சகல சுத்தம்!

2227. தன் உண்மையை அறிந்த தூயன், தான் ஒன்றையும் அறியாமல் கிடக்கும் கேவலன். இவர்களின் வேறான பலவகைப் பட்ட பரிப்பாகம் உள்ள சகலன் ஆகியோர்கள் முறையே சத்தையும் அசத்தையும் சதசத்தையும் உடனாகத் தத்தம் அறிவுக்கும் திறனுக்கும் ஏற்பப் பொருந்தி நிற்பர்.

2228. த்னக்கு பகைவனும் நண்பனும் தானே ஆவான். அங்ஙனம் தனக்கு உரிய மறுமைப் பயனும் இம்மைப் பயனும் தன்னாலே ஆகும். தான் செய்த புண்னியப் பாவச் செய்ல்களின் பயனை அனுபவிப்பவனும் தானே ஆவான். தனக்கு தலைவனும் தானே ஆவான்.

2229. கேவல நிலையில் கிடக்கும் உயிர் சுத்தமாயையில் பொருந்தி பின் பக்குவமாகின்ற உயிர் மாயையின் தொடர்பால் விளக்கம் பெற அறிவு உற்று முந்தைய வினைகளும் அவற்றை அடைவதற்குரியவைகளும் பெற்றுத் தாம் அடைந்த பாசத்தால் சகல நிலையை அடையும்.

2230. சகல நிலையில் கருவிகளுடனே வந்தவர் சகலர் ஆவார். அவர்கள் ஆகமங்களால் சொல்லப் பெறும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று வகையான மலங்களும் பொருந்தியவர்கள். நிகர் இல்லாத நான்முகன் திருமால் முதலாகவுள்ள தேவர்கள் இந்த உலகில் வாழும் மக்கள் புழு ஈறாகச் சகலர் ஆவர்.

2231. தூவா மாயையில் தங்கியிருக்கும் பிரளயகலர் பொருந்திய அந்த அசுதத மாயையே உடலாய் மற்ற மாயேயங்களை விட்ட தன்மையுடையவர். அவர்கள் சிவபெருமானைப் போன்ற சீகண்டரும் நூற்றெட்டு உருத்திரரும் ஆவார்கள்

2232. விஞ்ஞான கலர் கேவல நிலையின் ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர். அங்ஙனம் விளங்கும் அனந்தர் முதலிய வித்தியேசுரர் எண்மரும் சப்தகோடி மகா மந்திரர்களும் மந்திரேசர் பலரும் விஞ்ஞான கலர் ஆவர்.

2233. விஞ்ஞானகலரில் மிக்க பக்குவத்தைப் பெற்றுச் சிவத்தின் அருளுக்குப் பாத்திரமானவர் வலிமை ஒடுங்கிப் போகும் ஆணவ காரியமான விந்து நாதங்களைக் க்டந்து பிரணவ வடிவான சிவத்தில் இலயமாவர். அங்ஙனமாதலால் மலக் குற்றம் அற்ற சுத்த நிலையை எய்துவர்.

2234. ஆன்மாக்கள் மூன்று வகையாகவும் நான்கு வகையாகவும் உள்ளன. ஆராயும் போது இவை மாயையுடன் பொருந்தி விருப்பத்தைச் சார்கின்ற தன்மையால் ஆனவை என்றாலும் பக்குவம் அடைந்தபோது இச்சை முதலியவை எல்லாம் தாமே நீங்குபவை. அந்நிலையில் இறைவன் அருளைக் கூட்டி மலத்தை நீக்கி அருளினான்..

2235 .நிலை இல்லாத மண் முதல் நாதம் இருதியாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின் அறிவையும் விட்டு நீங்கி அவற்றுள் பற்றுச் சிறிதும் இல்லாது நீங்கவே எய்தப்பெறும் பொருளான சிவமே தானாகி நித்தியமாய் சரம் அசரம் என எங்குமாய்ப் பரவெளியுள்ளும் கலந்து சென்று அடையாமல் தானே வந்து அடையும் நிலை சுத்தாவத்தை ஆகும்.

2236. தொன்று தொட்டே பசு தத்துவத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஆன்மாவை அனாதியாயுள்ள ஐந்து மலங்களில் வருத்தும்படி செய்து அனாதியில் இருந்த கேவல நிலையினின்றும் நீக்கிச் சகல நிலையில் பொருந்தச் செய்து தொன்று தொட்டு பற்றிவரும் பிறவி நீங்க அந்த ஆன்மா தூயநிலையைப் பொருந்தியவன் ஆவான்.

2237. ஞானம் பற்றிப் பரவெளியைச் சென்று அடைந்தவர் தம் சுத்த கேவல நிலையில் கடந்த தற்பர சிவத்திடம் சுத்த துரிய்த்தே நம் அறிவு பொருந்த ஆன்மாவான தன்னிடம் சிவமாகிய பொருளை அறியும் உண்மையானவன்.

2238. நிலம் முதல் புருடன் ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கும். ஆன்மாவும் தூய நிலை அடைந்து தன் உண்மையை உணர்ந்து வீட்டை அடையும். சிவ தத்துவத்தில் உள்ள சுத்த வித்தை ம்கேசுரம் சதாக்கியம் என்னும் மூன்றும் பழமையான சத்தியிலும் ஐயனான சிவத்திலும் ஒடுங்கும். படைப்பு முறையில் சிவனிடமிருந்து சத்தியும் பிறவும் அங்ஙனமே தோன்றும்.

2239. தூய நிலையில் ஆன்ம தத்துவம் 24, புருடன் 1, வித்தியாதத்துவம் 6, ஆக 31 தத்துவங்களும் ஆன்மாவில் அடங்கும். உண்மையில் கண்டத்தில் விளங்கும் தூய வித்தையும் புருவ நடுவில் விளங்கும் மகேசுவரமும் தலைவரை விளங்கும். சதாசிவமும் ஆகிய மூன்றும் உண்மையான யோகத்தில் சுழுமுனைக்கு மேல் விளங்கும் சத்தி சிவ பகமாய்க் காணும்படி இருபத்தெட்டுத் தத்துவங்களும் அடங்கும்

2240. ஆணவ மலம் ஒன்று மட்டும் உடையவராய் மாயை கன்மங்களை அறியாதவர் விஞ்ஞான கலர் ஆவார். ஆணவத்துடன் மாயை உடையவர் பிரளயகலர். காணும் வடிவம் உடையவராய் உள் நோக்கம் இல்லாமல் வெளி நோக்கம் உடையவராய் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றும் பொருந்தியவர் சகலர்.

2241. விஞ்ஞான கலரிடை இருக்கும் குற்றம் ஆணவமலம். மாயையைப் பற்றிக் கொண்டு நிற்பது பிரளயகலரின் குற்றம். ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் பற்றிக் கொண்டிருப்பது சகலரின் மலக்குற்றம்.

2242. ஞான வடிவு நிலையில் கிளர்ச்சியுடைய விஞ்ஞானகலர் ஞனவடிவம் கிளர்ந்து எழும் நிலையில் விந்து சத்தியால் அங்குக் கேவலநிலையில் எல்லாச் சகல நிலையையும் பிரணவடிவ சத்தியை அறிந்து நிற்றல் உண்மையே ஆகும்.

2243. துவா மாயையில் பொருந்தியுள்ள பிரளயகலர் அம்மாயையும் அவரை வந்து தளைப்படுத்தாத வகையில் இருக்க ஆணவத்தோடு கூடிய நிலையில் விருப்பத்தை ஏற்படுத்தும் தூமாயை பொருந்த நிலைபேறுடைய நுற்றெட்டு ருத்திரர் ஆவார்.

2244. ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களுடன் கூடி அவற்றில் மயங்கி நிற்பவர் உண்மையான சகல ஆன்மாக்கள் ஆவர். அவர்கள் தேவர் அசுரர் மனிதர் மெய்ம்மை இல்லாத நான்முகன் விரிந்து மிதந்து கிடக்கும் புழு ஈறாக அம்முறையில் பிறவிக் குழியில் சிக்கிக் கட்டுப்படும் சகலர் ஆவர்.

2245. தூய நிலையில் பொருந்திய ச்கல இன ஆன்மாக்கள் மும்மலங்களில் நித்தமாகிய ஆணவமும் அநித்தமாகிய மாயை கனிமங்களும் நீங்க இவற்றில் தனித்தனியாய் நிலைபெற்ற ஆசையும் மயக்கம் உடைய இருளும் சிவக்கதிரவன் ஒளியால் தொடர்ந்து நீங்கிடத் தூயர் ஆவார்கள்.

2246. ஆன்மா பிரமம் ஆன சிவத்தின் ஞான வடிவாய் பொருந்துவதில் தனித்துள்ள வீடுபேற்றை அடையும். பிறப்ட்ட சகல நிலையில் கலை முதலிய தத்துவங்கள் பிரிவது அமையும். பிரணவத்தில் நின்று ஞானவடிவ தரிசனம் செய்வது தூய நிலையில் நின்மல சாக்கிரம் ஆகும். இம்முறையில் பிரமத்திடம் பொருந்துவது தன்னைத் தூய்மை செய்து கொள்வதாகும்.

2247. கேவல் நிலையில் உள்ள ஆன்மா அறிவில்லாமலும் உடம்பு இல்லாதவனாகவும் அராகாதி குணங்களுடன் பொருந்தாதன்வாகவும், கொள்கை ஒன்றும் இல்லாதவனாகவும் என்றும் உள்ளவனாகவும் கலை முதலிய அசுத்த மாயையைக் கூடாதவனாயும் தத்துவங்களுடன் பொருந்தி செயல் செய்யாதவனாகவும் இன்பம் அனுபவிக்க அறியாதவனாகவும் இருந்தும் இல்லாதவன் ஆகவும் ஆணவ மலத்தால் கூடப் பெற்றவனாகவும் உள்ளான்.

2248. ஒளி மண்டலமும் அதை மறைக்கும் மாயையும் அதை வெளிப்படுத்தும் கிரியையும் அதனால் விளையும் ஞானமும் உடலில் உள்ள சத்திக்கேற்ப அமையும் விந்து மண்டல ஒளியில் உண்மை ஞானத்தைப் பொருந்த்தும் பிரளயகலர் உலகில் பிறவிக்கு வந்த தூய ஆன்மாக்கள் ஆவர்.

2249. கேவலம் முதலிய நிலைகளின் வேறுபாட்டைச் சொன்னால், கேவலகேவலம், கேவலசகலம், கேவலதூய்மை என மூன்றும் கிளர்ச்சியுடைய ச்கலத்தில் சகலகேவலம், சகலசகலம், சகலதூய்மை என மூன்றும் மேலான தூய்மையில் தூயகேவலம், தூயசகலம், தூயதூய்மை என மூன்றுடன் ஆராய்பவர்க்கு நீங்காத ஒன்பது வகையாகும்.

2250. கேவலத்தில் கேவலம் கருவிகளை விட்டு உறங்குவது.போல் உள்ள நிலை. கேவலத்தில் சகலம் ஒளி மண்டலத்தில் அறிவு குன்றாதிருத்தல், கேவலத்தி;ல் தூய்மை கேடற்ற அகன்ற ஞானம் உடையவர்க்கு தன்னையும் உலகத்தையும் அறியும் நிலை. அந்நிலையில் சிவம் இவர்களுக்கு அருள் செய்வான்.

2251. சகலர்க்கு அறிவு ஆராய்ச்சியால் விழிப்பில் கருவி கரணங்கள் செயற்படாமல் உறங்குபவனைப் போல் விளங்கும். இது சகலத்தில் கேவலம் ஆகும். சகலர்க்கும் பொருந்தும் விழிப்பு நிலையே சகலத்தில் சகலம் ஆகும். விழிப்பு நிலையில் ஞானேந்திரியங்கள் பிரணவ ஒலியில் இலயமடையும். இது சகலத்தில் தூய்மை ஆகும். இவ்வாறு சகலத்தில் மூன்று இயல்பு பொருந்தும்.

2252. துய்மையில் தூய்மையவது ப்ழமையாய் உள்ள அனைத்துக் குற்றங்களையும் நீக்கும் மலம் ஆகும். தூய்மையில் கேவலமானது கரணங்களை விட்டு மலங்களைப் போக்குவிப்பதற்கு இறைவனது வியாபகத்தில் அலையில்லாத நீர்போல அடங்கி யிருத்தல். சுத்தத்தில் சகலம் தன்னையும் தலைவனையும் அறிந்து அவன் அருளில் நிற்றல் இவ்வாறு தூய்மை நிலையில் இம்மூன்று நிலைகள் உள்ளன.

2253. விழிப்பு சாக்கிரத்திலே புருவ நடுவில் சிவ தத்துவம் ஐந்தும் தொழிற்படும் நனவில் உண்டாகும் கனவில் பின் மூலையில் மகேசுரம் சதாக்கியம் சத்தி சிவம் என்னும் நான்கும் தொழிற்படும். விழிப்பு உறக்கத்தில் தலையின்மீது சதாக்கியம் சத்தி சிவம் என்னும் மூன்றும் தொழிற்படும். விழிப்பு பேர் உறக்கத்தில் நிராதாரத்தில் சத்தியும் சிவமும் என்ற இரண்டும் தொழிற்படும். விழிப்பு உயிர்படங்கலில் துவ்த சாந்த வெளியை அடைந்தபோது சிவம் ஒன்று மட்டுமே தொழிற்படும். இவ்வாறு மறைகளுக்கு ஆதியான சிவம் ஐம்மலம் பாசங்களினின்?றும் ஆன்மாக்களைப் பிரித்து ஆக்கம் தருவான்.

2254. ஆன்மா சாக்கிரததில் சிவத்துடன் பொருந்துகின்றது. அதனால் ஆன்மாவில் ஆணவ மலக்குற்றம் நீங்கும். சக்கிராதீதம் நாதாந்தமாகையால் நாத தத்துவம் தங்காமல் போகும். பரோபதியானால் உபாசாந்தமான நிறைவான அமைதி கிட்டும். நாததத்துவத்தைப் பற்றி நிற்கும் ஆன்மா மலங்களையும் அவற்றால் விளையும் குணங்களை நோக்காது.

2255. மலங்களில் கட்டுண்ட பெத்த நிலையும் அவற்றினின்று நீங்கிய முத்தி நிலையும் தன் இருப்பை உணரும் துரியமும் சுத்தாவத்தையில் உள்ள துரியாதீதமும் தோன்றாதபடி சிவன் சீவனை விழுங்கி விடும். என்று அவன் அருளால் உணர்ந்த பின்பு சீவனிடம் உள்கருவிகளின் செயலும் வெளிக் கருவிகளின் செயலும் இல்லாமல் போகும்.

2256. உயிர்கள் அடையும் கட்டுண்னும் நிலையும் முத்தியும் என்பவை சிவபெருமானின் அருளால் அமையும். அச் சிவபெருமானின் அருள் விளையாட்டோடு பொருந்தும் உயிர் இது சுத்த நிலைக்குச் செலுத்தும் நெறியாகும் என அடையும். இவ்வாறு அடையும் உயிர் இறைவனிடம் அறிவாய்த் திகழும்.

2257. ஆணவம் முதலிய ஐந்து மலங்களயுடைய சீவர்க்ள் தம்மைத் தாமே மதித்த சகலர் ஆவார். அன்னார் ஐந்து மலப் பாசங்களால் கட்டுண்டவராய்க் கொடிய வினைகளை துய்க்க வேண்டியவராய் விளங்குகின்றார்.. இவர்கள் வீட்டுலகை விரும்பாவல் தேவவுலகை விரும்பி அடைவர். இவர்கள் சிவத்தை அறியாதிருப்பினும் இவர்களைச் சிவம் அறிந்தே உள்ளார்.

2258. கேவல அதிதீதத்தில் ஆன்மாக்களைப் பிறவிக்குச் செலுத்த சிவசத்தி மாயையைக் கலக்கச் செய்யும். பின்பு துரிய நிலையில் அந்த ஆனமாவுக்கு விருப்பம்மானவற்றை உண்ணும் ஆசை ஏற்படும். அந்த ஆன்மாவின் விருப்புக்கேற்ப பிரமரந்திரமும் அதைச் சூழவுள்ள எட்டு நிலைகளும் சூக்குமமாய்ப் பொருந்தும். பின்பு குணம் என்ற மனோமய கோசம் இணைக்கபபட்ட போது நனவு நிலை ஏற்படும்.

2259. கேவல துரியாதீதத்தில் ஆணவ மலம் அகலாமல் நிற்கும். பின்பு துரியத்தில் மாயை பொருந்தும். கேவல சுழுத்தியில் பொய்யான கன்மங்கள் பிணிந்து நிற்கும். கேவல கனவில் மயேயங்கள் பொருந்தி. காணப்படும் நனவில் நிரோதாயி மற்றும் இங்ஙனம் ஐந்து மலங்களும் இவ்விதமாக ஆன்மாவைப் பற்றும்.

2260. அதீதத்தில் உள்ள சுத்த ஆன்மா சிவத்தை முதலாக அறிபவன் ஆகின்றான். அந்த ஆன்மாக்கள் படைப்புக்கு வரும் போது சுத்த மாயையில் தங்கிப் பிரமப் புழை விளங்கும் சுழுமுனையில் தங்கித் தவம் செய்ய வேண்டிய கருமத்தை உண்ர்ந்து எப்போதும் பராவத்தையில் பொருந்திய்வர் இவ்வுலகில் உள்ளவர்க்கு அருளைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் சகலத்தார்.

2261. மாயையில் காரியமான உடலைப் பெற்று எடுத்த உடம்புக்கு ஏற்றவாறு இன்பப் பொருள்களை அனுபவித்துப் பூதங்களைச் சார்ந்து மனம் முதலிய அந்தக் கரணங்களைப் பொருத்தி சத்தம் முதலிய தன்மாத்திரைகளீல் தங்கிக் கருவை அடைந்த சீவன் சகல அவத்தையில் தோன்றும்.

2262. ஞானம் கிரியை என்பவை ஒத்து விளங்கும் போது இன்பம் விளைக்கும் சிற்சத்தி பொருந்தி ஞானவடிவான தூய நிலை பொருத்தவே, அச்சமயம் தக்க குருவினால் உணர்த்தும்படி செய்து திருவருட் சத்தி பொருந்தி மூலம் நீங்கும். மீளவும் பிறவியை அடையாமல் இருப்பதே துரிய நிலை ஆகும்.

2263. முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக இருபத்தைந்து நிலைகளையும் அவற்றின் இறுதியான நின்மல துரியாதீதத்தை இச்சீவன் அடையச் சுத்த தத்துவத்துக்குரிய சுத்தவித்தை மகேசுவ்ரம் சதாசிவம் விந்து நாதம் என்னும் ஐந்தும் நீங்கும் ஒளியினை உடைய சீவன் பரமாகும் சிவத்திடம் உள்ளதாகும்.

2264. உடம்பில் வேறானது ஆன்மா. அத்தகைய ஆன்மா தான் ஒருவன் உளன் என்பதை அறியாமல் தன் உடம்பியே தான் என்று மயங்கி இருந்தான். நிராதரத்தில் உணர்வு சென்றபோது தான் ஒர் எளிய வடிவினன் என்பதை அறிந்தான். இந்த உடம்பைத் தாங்கி நிற்பதும் ஒளி என்று கண்டனன். அவ்வாறு உள்ள ஒளி உடல் சிவத்துடன் ஒன்றாவிடின் திரும்பவும் வந்து தன் வினைக்கீடாக அந்த ஆன்மா பிறப்பான்.

2265. நின்மல் சாக்கிராதீதம் கூடுமானல் அதைத் தோற்றுவித்த சுத்த தத்துவம் ஆனந்தத்தை ஏற்படுத்தும். எதிர் நோக்கியுள்ள பிறவி நீங்கும். பெருமையுடைய வீடுபேறு கிட்டும். அந்த அதீத நிலையில் நுண்மையான வாக்கும் மனமும் பொருந்த மாட்டா.

2266. நீரின் குளிர்ச்சியும் நெருப்பின் குணமான ஒளியும் அகண்ட வானத்துள் விளங்கும். ஆனால் அவற்றின் நெகிழ்ச்சியும் சுடும் தன்மையும் அவ்விடத்தில் இராது. விரிந்த வானத்தில் நீரும் நெருப்பும் எது என்று வினவினால் நீரின் தன்மையும் தீயின் தன்மையும் கலந்து அவ்வாறு ஆகும்.

2267. முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்தம் மிசிர மாயையோடு கூடிய வித்தயா தத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்தம் உடன் ஆன சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமாகும். இம்மூன்றையும் ஆன்மா அடையும்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்து பிரகிருதிமாயை அசுத்தமாயை சுத்தமாயை ஆன்மாவிடம் பொருந்தும்.

2268. அசுத்த மாயை செவிலித்தாயாகவும் சுத்தமாயை தாயாகவும் ஆக இவைபொருந்தும் வகையில் சிவம் தந்தையாய் அமைய ஆன்மா சகல நிலைகளைக் அடைந்து ஆராய்ந்து தெளிவு பெற்றபோது சுத்தமாயைப் பொருந்தி சுத்த மலத்தை அடையும்.

#####

Read 2010 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952010
All
26952010
Your IP: 44.204.99.5
2024-03-29 18:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg