gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

செய்த பிழை, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. குற்றத்திலிருந்து விடுதலை பெற்றாலும், குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும்!

காகபுசண்ட சித்தர்

Written by

காகபுசண்டர் சித்தர்

 

காகபுசுண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்தார். காக்கை உருவெடுத்து பல இடங்களைப் சுற்றிப் பார்த்து பல விஷயங்களைக் கண்டறிந்தார். வரரிஷியின் சாபத்தால் சந்திரகுலத்தில் பிறந்தார். பெரும் தவசிந்தனையுள்ளவர். அறிவிற் சிறந்தவர். பிரளயகாலங்களில் அவிட்ட நட்சத்திர பதவியில் வாழ்வார் ஆதலினால் இவரை காகபுசுண்டர் என்பர்

சிவபெருமான் கயிலையில் எழுந்தருளியிருந்த தேவர்கள் சித்தர்களை நோக்கி இந்த உலகம் பிரளய காலத்தில் அழிந்தால் நாம் எங்கு இருப்போம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஐவர்களும் எங்கே இருப்பார்கள் தெரியுமா என்றார். திருமாலுக்குத் தெரியும் என மார்கண்டேயர் சென்னார்.

திருமால் சொன்னார். பிரளயத்தில் எல்லாம் அழிந்துபோயின. ஆழிலைமேல் பள்ளி கொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. நான் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என்னுடைய சுதர்சன சக்கரம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. அபோது அங்கு வந்த காகபுசுண்டர் என் சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதையும் தாண்டி சென்றார். அவர் மிகவும் வல்லவர். அவரே இதற்கு சரியான பதில் சொல்லமுடியும் என்றார்.

வசிட்டர் மூலமாக புசுண்டரை அழைத்து சிவன் அவரிடம் கேட்க, புசுண்டர் தாம் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்ததையும் ஒவ்வொரு பிரளயத்திற்குப் பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதையும் பார்த்ததாகவும் கூறினார். தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல் ஆழமரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களைக் கண்டதாகவும் கூறினார்.

காகபுசுண்டர் இல்லறமாயினும் துறவறமாயினும் மனத்தில் மாசின்றி ஒழுக வேண்டும். அப்படி ஒழுகா விட்டால் செய்யும் பிற செயல் பகட்டாகத் தெரியும். காகபுசுண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்து அங்கேயே சமாதியடைந்தார்.

காகபுசுண்டர் வைத்தியம், புசுண்டர் நாடி, என் ஜோதிடம், காகபுசுண்டர் ஞானம் 80, காக புசுண்டர் உபநிடதம் 31, காகபுசுண்டர் காவியம் 33, காகபுசுண்டர் குறள் 16, என்ற வேத நுல்களை எழுதினார். காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காகபுசுண்டர் யோகஞானம் சமாதி முறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர்கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி என்பன பற்றியெல்லாம் இவரின் நூலில் கூறப்பட்டுள்ளது.

காகபுசுண்டர் தியானப்பூசைக்கு

“காலச்சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய மகாஞானியே

யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும் காக்கை

சுவாமியே, மும்மூர்த்திகள் போற்றும் புஜண்டரே

உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய்”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் காகபுசுண்டர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு ஐந்து முக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து நீலோத்பலம், நீல சங்கு, தவனம், மரு மலர்களால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

அசுரர்களை அழிப்பவரே போற்றி

அன்னப்பிரியரே போற்றி

சனீஸ்வரபகவானின் நண்பரே போற்றி

சிவசக்தி ஐக்கியத்தை தரிசிப்பவரே போற்றி

தேவர்களை காப்பவரே போற்றி

நாரதகானப்பிரியரே போற்றி

நோய்களுக்கு மருந்தே போற்றி

பாவத்தை போக்குபவரே போற்றி

மகா ருத்திரரே போற்றி

மானஸா தேவியை வணங்குபவரே போற்றி

ஸ்ரீ ராமரை பூஜிப்பவரே போற்றி

ஸ்ரீம், ஹரீம், லம், நமஹ, ஸ்வம் பீஜாட்சரா வாசியே போற்றி.

நிவேதனமாக வறுத்தகடலை இவற்றுடன் மஞ்சள் வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

வியாழன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக குரு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். பணப்பிரச்சனை, புத்திரப் பாக்கிய கோளாறு, அரசாங்க பிரச்சனை ஆகியவை நீங்கும். வியாபார நஷ்டம் விலகி லட்சுமி கடாட்சம் பெருகும். குடல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கல் வழக்குகள் தீரும். வறுமை அகல வேலை வாய்ப்பு கிட்டும்.

“ஓம் ஸ்ரீம், ஹரீம், லம், நமஹ, ஸ்வம் ஸ்ரீ காக புசுண்டர் சுவாமியே போற்றி”

                                ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

18461043
All
18461043
Your IP: 172.68.65.240
2020-08-11 09:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg