Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 09:16

சுகாசனர்-நல்லிருக்கை நாதர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அங்குச தாரா போற்றி!
அரவ நாணோய் போற்றி!
அர்க்க விநாயக போற்றி!
அன்பு கணபதி போற்றி!

சுகாசனர்-நல்லிருக்கை நாதர்!
சர்வேசுவரி தட்சனின் மகளாகத் தோன்றி தட்சனின் விருப்பிற்ணங்க தவம் செய்து சிவனை மணந்தாள். அதன்பின் தட்சன் சிவநிந்தை செய்ததால் அவனால் வளர்க்கப்பட்ட தன் உடலை நீக்கி அவனின் மகள் என்பதாள் பெற்ற தாட்சாயணி என்ற பெயரையும் மாற்ற சிவனிடம் வேண்டுகோள் வைக்க அவர் அருள் புரிந்து இமயவான் மன்னனுக்கு மகளாகத் தோன்றி உமை என்னும் பெயருடன் வளர்ந்து தவம்செய்து மீண்டும் சிவனை கைபற்றினாள். ஒருநாள் தனக்கு மந்திர தீட்சை அளித்து சிவாகமங்களை உபதேசிக்க வேண்டினார். பின்னர் சிவனின் இடப்புறம் அமர்ந்து பிரணவ மந்திரத்தின் பொருள், தோற்றம், பெயர்க் காரணம், அதன் தேவன், வழிபடும் முறை போன்றவைகளை கூற வேண்டினாள். உமாவின் விருப்பத்திற்கு இணங்கி சிவாகமங்களை உபதேசித்தல்.
பிரணவப் பொருளே சிவனின் சொரூபம். எல்லா விதைகளுக்கும் விதை போன்றது. மிக சூட்சமம் ஆனது. உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படும் அதுவே பரப்பிரம்மம் ஆகும். ஏகாட்சரம் என்றும் ஆதி மந்திரம் என்றும் சொல்லலாம்.
‘அ’ கர, ’உ’ கார, ’ம’ காரங்களாகிய மூன்றும் சேர்ந்து உச்சரிக்கப்படுவது பிரணவம். அதிலிருந்து வேதங்கள் தோன்றின. ‘அ’காரம் ரஜோகுணத்துடன் நான்முகனாக உற்பத்தியைச் செய்யும். ‘உ’காரம் சத்துவ குணத்துடன் விஷ்ணு ரூபமாகி உலகத்தைக் காக்கும். ‘ம’காரம் தமோ குணத்துடன் ருத்திரனாகிய புருஷ்னாக உலகத்தை சங்கரிக்கும். பிந்து (விந்து) மகேசுவர சொரூபமாக திரோபாவத்தை-மறைத்தலைச் செய்யும். நாதம் சதாசிவ ரூபமாக எல்லாவற்றையும் அருளும். சதாசிவ மூர்த்தியாக விளங்கும் மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம், குரு, சீடன் எனும் ஆறுவகைச் சாதனங்களால் சிவனை அறிந்து ஐக்கியமாக வேண்டும் அதற்காண மந்திரம், தியானம் ஆகியவற்றை உமைக்கு விளக்கினார் சிவன். இதய கமலத்தில் ஆதார சக்தி முதல் அந்தராகாசத்தில் ‘ஓம்’ எனும் ஏகாட்சர சொரூபியாக பிரம்மத்தையே தியானிப்பவர்கள் சிவ ஞானத்தை உணர்ந்து சிவகதியடைவர். குருவைத் தியானித்து வணங்கி அவர்மூலம் உபதேசம் பெற்று தூய்மையாக பிரணவத்தை உச்சரித்து பஞ்சாட்சரம் செபித்து முறைப்படி பஞ்சாவரண பூசை செய்ய வேண்டும் என உபதேசித்தார். சிவன் உபதேசித்த வேதசிவாகமப் பொருளை தன் அருள் முகத்தால் பிற ஆன்மாக்களுக்கு அம்பிகை உணர்த்தினாள்.
சிவன் இவ்வடிவில் ஆறு திருக்கரங்களுடன் மான், பாம்பு, செபமாலை, தண்டம், சின்முத்திரை, அபயமுத்திரை அருளுகின்றார். காட்சி: திருவெண்காடு, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம்.

&&&&&

Read 6553 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 19:28
Login to post comments