Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 09:24

ஹரிஹரர்-கேசவார்த்தமூர்த்தி-மாலொருபாகர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆகு வாகனா போற்றி!
ஆனை மாமுகனே போற்றி!
இளம் பிறை அணிந்தோய் போற்றி!
ஈசன் மைந்தனே போற்றி!

ஹரிஹரர்-கேசவார்த்தமூர்த்தி-மாலொருபாகர்!

திருமால் சிவனை நோக்கித் தவம் செய்து அனைவரையும் மயக்கும் சக்தியைப் பெற்றார். அப்போது எமக்கு இடப்பால் விளங்கும் அருட்சக்தியுமானாய் என்று சிவன் அருளினார். வலப்பாதி சிவன் இடபாதி மால் வடிவம் என ஒருபால் சிவனும், ஒருபால் மாலும் இணைந்து காட்சி தரும் வடிவம்.
ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட வடிவில் முகத்தின் வலப்பாகம் சிவனாகவும் இடப்பாகம் திருமாலாகவும், சிவமுகத்தில் உக்கிரமாக அரை நெற்றிக்கண் உடையதாக இருக்கும். வலது கரங்களில் மழுவும் காத்தற் குறிப்பும் காணப்படும். இடப்பக்க திருமால் முகம் அமைதியாக இருக்கும் இடது கரங்களில் சங்கு சக்ரம் அல்லது கதையும் கடக குறிப்பும் விளங்கும். வலது முன்காலில் பாம்பு போன்ற ஒரு தண்டையும், இடது முன்காலில் நவரத்தினங்கள் இழைத்த தண்டையுடன் சிவபாகம் வெண்ணிறமாகவும், திருமால் பாகம் பச்சை அல்லது நீலப்பழுப்பு வண்ணத்துடன் இருக்கும். இரு கால்களும் வளைவின்றி இருக்கும். இடப்பக்கம் கருடனும் வலப்பக்கம் நந்தியும் இருக்கும்.
சிவனும் திருமாலும் ஓரு உருவின் இரு கூருகளே. சக்தி உலகத்தைப் புரக்கும்- ஈதல் / காத்தல் செயலை செய்யும்போது தனது மாயா வல்லமையால் ஆடவ வடிவம் ஏற்று மாயன் என்னும் விஷ்ணுவாக விளங்குவாள். சங்கர நாராயணரை இடவலமாகப் பார்க்கும்போது ஹரிஅரன் எனலாம். காட்சி: சங்கரன்கோவில், ஹரிஹர் (தாவண்கெரே மாவட்டத்தில்). குடைவரைக்கோவில்- நாமக்கல், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களில். தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோவில் தேவகோட்டத்தில்.

&&&&&

Read 5134 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 19:30
Login to post comments