Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 09:56

உமாமகேசர்- உமேசர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏக தந்த விநாயகா போற்றி!
ஐங்கர விநாயகா போற்றி!
கண நாயகா போற்றி!
கணபதியே போற்றி!


உமாமகேசர்- உமேசர்!
மனக்குழப்பம் போக்கி / தடுத்து மணப்பேறு அளிப்பார். படைப்புத் தொழில் சிறப்பாக நடக்க உதவுதல். உமையோடு கூடி மகிழும் சிவன் உமாசகிதர், உமாமகேசுவரர் என அழைக்கப்படுவார். சிவனின் அருட் சக்தியே உமை. சிவம் வேறு சக்தி வேறில்லை. சிவன் அமைதி (Static) நிலை. சக்தி ஆற்றல் (Dynamic) நிலை. சிவனின் அருட்பண்பே சக்தி. உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களிலும் சக்தியும் சிவனும் நீக்கமற நிறைந்துள்ளார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழில்களையும் இயற்ற சிவன் இடப்பக்கம் உமையோடு பொருந்திய வடிவம்.
நான்முகன் தன் படைப்புத் தொழிலுக்கு உதவிட சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு மக்களை பெற்றார். ஆனால் அப்புதல்வர் நால்வரும் பிரமனுக்கு உதவாமல் தவத்தை மேற்கொண்டதால் பிரம்மனால் தனது படைப்புத் தொழிலை சரியாகச் செய்ய முடியவில்லை. திருமாலைச் சந்தித்து விவரங்களைக் கூற, அவர் பிரமன் சனகாதி முனிவர்களை அழைத்துக் கொண்டு கயிலைக்குச் சென்றார். அங்கு சிவன் அனைவரையும் தன் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்து சாம்பலாக்கினார்.
அப்போது அங்கே தனித்திருந்த பரம்பொருள் தன் வாமபாகத்திலுள்ள திருத்தோளைப் பார்க்க அங்கிருந்து அவரது சக்தி உமாதேவியாக வெளிப்பட்டாள். அவளைத் தன் இடப்பாகத்தில் இருத்திக் கொண்டு இருவருமாக திருமால், நான்முகன், நான்கு முனிவர்கள் ஆகியோரை உயிர்ப்பிக்கச் செய்தனர்.
யாம் முன்பு தனித்து இருந்ததன் காரணமாகப் படைப்புத் தொழில் சரியாக நடைபெறவில்லை. தற்போது சக்தியுடன் இணைந்து நின்றோம். இனிமேல் படைப்புத் தொழில் தடையின்றி நடைபெறும் என்று அருள் புரிய நான்முகன் தனியாக படைப்புத் தொழிலாற்றும் திறமையைப் பெற்றார்.
தன் கருணையை அம்பிகையாக்கி தன் இடப்பக்கத்திலே கொண்டு அபய வரதத்துடன் கூடிய தோற்றம் (அமர்ந்து / நின்றவண்ணம்) உமேச மூர்த்தியாகும். படைத்தல் தொழில் சீராக அமைய சிவனின் இடத்தோளிலிருந்து உமையை வெளிப்படுத்தி அருள் புரியும் திருக்கோலம்.
உமாமகேசர் ஒருமுகம் முக்கண்கள், நான்கு கைகளுடன் சுகாசனத்தில் அமர்ந்திருப்பார். பின்கைகளில் மானும் மழுவும், முன் வலக்கை காக்கும் கையாகவும் இடக்கை அருளும் கையாகவும் இருப்பார். உமை ஒருமுகம் இரு கைகளுடன் வலக்கையில் தாமரை மலருடன் அமர்ந்திருப்பார்.
புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேசுவர விரதம் கடைபிடிக்க வேண்டும். சித்திரை /மார்கழி வளர்பிறை அட்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி தொடங்கி ஐந்து நாட்கள் நோன்பாகவும் கொண்டாடலாம். காட்சி: திருவுடைமருதூர் மற்றும் தமிழகத்தின் பலகோவில்களில்

#####

Read 5045 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:00
Login to post comments