Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 11:26

காமாந்தகர், காமதகனமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஞான விநாயகா போற்றி!
தந்திமுக விநாயகா போற்றி!
தத்துவ விநாயகா போற்றி!
தருண கணபதியே போற்றி!


காமாந்தகர், காமதகனமூர்த்தி!


தக்கனின் யாகத்தை வீரபத்திரர் அழித்தபின் கயிலையில் இறைவனைத் தொழுத அம்பிகை தக்கனின் மகளாக இருந்த உடலையும் பெயரையும் விரும்பவில்லை அவை நீங்க அருள் புரியக் கேட்டாள். இமவான் என்ற மலையரசன் விருப்பிற்கேற்ப அவர் மகளாகப் பிறக்க அருள் புரிந்தார். இமவான் அக்குழந்தையை பார்வதி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.
கயிலையில் அம்பிகையைப் பிரிந்த சிவன் மோன மூர்த்தியாகி யோகியாக தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் பொருள் இன்பம் வீடு பற்றிச் சொல்லாமல் சொல்லும் ஞான குருவாக எழுந்தருளியிருந்தார். அந்தக் கணம் தேவர்களுக்கும் மக்களுக்கும் பலயுகங்களாயின. பெருமான் உமையைப் பிரிந்து இருந்ததால் உயிர்கள் ஆண்பெண் உறவின்றி தவித்தன. உலக வளர்ச்சி தடைப்பட்டது.
இந்நிலையில் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் முதலிய அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்த அவர்கள் பிரமனுடன் கலந்தாலோசிக்க சிவன் பார்வதியை மணந்து ஒரு குமரனை அளிக்க சிவனின் தவநிலை கலைய வேண்டும் என முடிவெடுத்தனர்.
காமநினைவை உண்டாக்கும் தமரைப் பூ, உடலின் நிறத்தைப் பசலையாகும் மாம்பூ, வேறு உணர்வை நீக்கும் அசோகப் பூ, மயங்கச் செய்யும் முல்லைப் பூ, விரகதாபத்தால் ஆளைக் கொல்லும் நீலோற்பலப் பூ என்ற ஐந்து மலர் கனைகளை கரும்பு வில்லுடன் தென்றல் தேர்கொண்ட மன்மதனை சிவனின் தவநிலையைக் கலைத்து காமப்பற்றை விளைவிக்க இந்திரன், நான்முகன், திருமால் தேவர்கள் ஆகியோர் முடிவடுத்து மன்மதனை அனுப்பினர். நந்திதேவர் அனுமதிக்க மேற்புறம் சென்று இறைவன் மீது ஐந்து மலர்க் கனைகளையும் எய்தினான்.
மலர்கனைகள் மேனியில் பட்டதும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க அத்தீயில் காமன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவி இரதிதேவி சிவனிடம் தனக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டியதால் மன்மதனை அருவமாய் தன் தொழில் செய்ய அருள் புரிந்தார். மன்மதன் (மாரன்) - அனங்கன் தன் மனைவிக்கு மட்டும் உருவுடன் தோற்றமளிப்பான். உயிர்பெற்று எழுந்த மன்மதன் பலதலங்களில் லிங்கம் நிறுவி வழிபட்டான். (வில்லியனூர் காமேச்வரம், பூவாளூர் மன்மதேச்வரம், குத்தாலம் மன்மதேச்வரம், காஞ்சி காமேச்வரம் எனப்படும்)
காமனை எரித்ததால் காமதகன மூர்த்தி எனப்பட்டார். யோக தட்சிணா மூர்த்தி வடிவத்துடன் காமனின் வடிவமும் சேர்ந்து காணப்படும். சிவனுக்கு மூன்று கண்களும் நான்கு கைகளும், சடைமகுடம், கையில் நாகம், அக்கமாலை, கடகக் குறிப்பு, சூசிக் குறிப்பு ஆகியவற்றுடன் இருப்பர். சிவனின் உருவில் காமன் அரை பங்காக இருப்பர். பொன்மஞ்சள் நிற காமனுடன் இரதி, தேவபாகா, வசந்தா ஆகியோருடன் கையில் கரும்பு வில்லும் ஐவகை கனைகளும் இருக்கும்.
மெய்ஞானம் தோன்றச் செய்து திருவடியைச் சாரும் பக்குவம் உண்டாக்குவார். உலக நலனுக்காக தேவர்கள் வேண்டுதலுக்காக சிவன்மேல் காமகணை தொடுத்த மன்மதனை எரித்த வடிவம்*காமதகனமூர்த்தி. காட்சி: காஞ்சி-ஏகாம்பரேஸ்வர்ர், கங்கை கண்ட சோழபுரம்,

#####

Read 7101 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:05
Login to post comments