Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 18:59

.நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி/விஷபாகரண மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

புண்ணியநாதா போற்றி!
பூத விநாயகா போற்றி!
பெருச்சாளி வாகனா போற்றி!
பொல்லாப் பிள்ளையே போற்றி!


.நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி/விஷபாகரண மூர்த்தி!

 

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில் இருதரப்பிலும் பலர் மடிந்தனர். எனவே அவர்கள் இரு தரப்பினரும் பிரம்மனிடம் கலந்து ஆலோசித்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க முடிவெடுத்தனர். மந்தார மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடையும்போது அசுரர்கள் வாசுகியின் தலைப் பக்கமும் தேவர்கள் பாம்பின் வால் பக்கமும் இருக்க மந்தாரமலை சிறிதும் அசையாமல் கடலினுள் மூழ்கத் தொடங்கியது. அனைவரும் திகைக்க திருமால் ஆமை வடிவமெடுத்து மந்தாரமலையின் அடிப்பாகம் சென்று அதைத் தாங்கிக் கொண்டார். மீண்டும் கடையத் தொடங்கினர்.
பலகாலம் கடைந்ததால் கயிறாக இருந்த வாசுகி வருத்தம் ஆற்றாது தன் வாயினால் நஞ்சைக் கக்கியது. அந்த நஞ்சு பரவ ஆரம்பித்ததும் உலகை இருள் சூழ்ந்தது. அந்த நஞ்சைக் கட்டுப்படுத்த திருமால் முன்னே செல்ல அவர் உடல் கருநீலமானது. அனைவரும் சிவனை தஞ்சமடைந்தனர். சிவன் சுந்தரரிடம் அந்த நஞ்சை திரட்டி வருமாறு பணித்து அதை கையில் வாங்க அது சிறுத்தது. அதை சிவன் தன் வாயில் போட அருகில் இருந்த உமை அவர் கண்டத்தைப் பிடிக்க அந்த நஞ்சு சிவபெருமானின் கண்டத்திலேயே நின்றது. கண்டம் நீலமாக சிவபெருமான், நீலகண்டர், மணிகண்டர், சீகண்டர் என்ற பெயரைப் பெற்றார். மீண்டும் பாற்கடல் கடைந்து அமிர்தம் கடைந்தெடுக்கப் பட்டது.
மூன்று கண்களுடன், சடாமகுடம் தரித்தவராய், கரங்களில் மான், மழு, ஒருகரத்தில் நஞ்சு, ஒரு கரம் அருள் குறிப்பு, பர்வை நஞ்சின் மீதிருக்க இடதுபுறம் பார்வதி அவரைத் தடுக்கும் வண்னம் நின்ற நிலையில் இருப்பார்கள்.
ஆணவம் நீங்கி அமைதி உண்டாக திருக்கடைக்கண் அருள்பவர். அனைத்து உயிர்களும் துன்பம் அடையாமல் இருக்க நஞ்சை உண்ட பெருமான் வடிவம் நீலகண்டர். காட்சி: கழுகுமலை வெட்டுவான் கோவில் விமானம், மதுரை நந்தி மண்டபத் தூண், சுருட்டப் பள்ளியில் பள்ளிகொண்டவராக காட்சி.

#####

Read 6443 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:15
Login to post comments