Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 03:09

மகாசதாசிவம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளே ஒப்பிலாப் போற்றி!
உயர்வற உயர்நலப் புகலே போற்றி!
எண்தோனவனின் செல்வா போற்றி!
இமயச் செல்விமகனே போற்றி!
காங்கேயன் மகிழ் தமையா போற்றி!
கற்பக மூர்த்தியாம் கடவுளே போற்றி!


மகாசதாசிவம்!

 

ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து முகத்தில் ஒவ்வொன்றுக்கும் ஐந்து முகங்கள் என 25 மகேஸ்வர வடிவ முகங்களுடன் சிவனின் அளவிலா ஆற்றலை உணர்த்துதல். துய்மையின் சிகரமாக விளங்கும் மகாசதாசிவர் 25 முகங்கள் 50 திருக்கைகள் கொண்ட போக, அதிகாரம் அடங்கிய மூர்த்தியாவார். கயிலையில் மலர்ந்த தாமரைமேல் எண்ணற்ற சூரியர்களிடத்தில் காணப்படும் பேரொளியை உடையவராய், வெண்ணீறு பூசி, பாம்பு பூணூல் அணிந்து, ஒவ்வொரு முகத்திலும் முக்கண்ணுடன் அமர்ந்திருப்பார். கயிலையிலிருந்து அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவர். அவரது 25 வலது கைகளில் அபயம், சக்கரம், சூலம், உளி, அம்பு, கதை, தாமரை, கத்தி, தோமரம், சத்தி, பிராசம், பரசு, பாம்பு, கலப்பை, அங்குசம், அக்கமாலை, சுரிகை(சிறுகத்தி), கொடி, தண்டம், வச்சிரம், குந்தம், அஸ்திகம் ஷட்ரம், ரம்பம், பிண்டி, பாலம் ஆகியனவும் 25 இடது கைகளில் வரதம், வில், மான், சங்கம், கேடயம், பாசம், கோடாரி, முத்தகம், உடுக்கை, மணி, சுவடி, உருத்திர வீணை, கபாலம், முண்டம், கட்வாங்கம், பூசுண்டி, பரிகம், பலகை, பட்டசம், பிரம்பு, கமண்டலம், அனல், கத்தரிக்கோல், உலக்கை, மயில்தோகை ஆகியனவும் வைத்திருப்பார். காட்சி: கோபுரங்களில் சுதைவடிவில்-மதுரை, காஞ்சிபுரம், வைத்தீஸ்வரன்கோவில், தில்லை.

#####

Read 4924 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:57
Login to post comments