Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:21

கங்காதரர், கங்காதரமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தீயின் மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியின் இரண்டாய் வதிந்தாய் போற்றி!
வெளியின் ஒன்றாய் விளங்கினாய் போற்றி!
உலகனைத்துமாய் ஒளிர்வாய் போற்றி!
உவந்தன் சரணம் அடைந்தோம் போற்றி!
செய்வினை முதலும் நீயே போற்றி!


கங்காதரர், கங்காதரமூர்த்தி!

 

கயிலையில் சிவபிரான் வீற்றிருக்கும்போது உமை விளையாட்டாக அவர் கண்களை மூட அனைத்துலகங்களுக்கும் பேரொளியாய் இருக்கும் பொருமானின் கண்கள் மூடப்பட்டதும் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. உயிர்கள் என்ன நடந்தது எனப்புரியாமல் தத்தளிக்க உயிர்களின் துன்பத்தைப் போக்க இறைவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து உலகம் ஒளிபெறச் செய்தார். திங்கள் செஞ்சுடர், தீ முதலிய சுடர்களுக்கும் ஒளியூட்டினார். தன் விளையாட்டு செயலால் நடந்ததை உணர்ந்த உமை விழிகளை மூடிய கரங்களை எடுத்தார். இருந்தாலும் அந்த நிகழ்வால் அச்சம் ஏற்பட்டு அவரது உடம்பில் வியர்வைத் துளிகள் தோன்றி கங்கை நீராகப் பெருக்கெடுக்க அந்த வேகத்திலிருந்து உயிர்களைக் காக்க சிவன் அந்த கங்கை நீரை தனது தலைச் சடையின் நுனியில் தரிக்க உலக உயிர்கள் நிம்மதி அடைந்தன. உயிர்களுக்கு ஈடில்லாத ஆனந்தம் தருபவர். இவ்வாறு கங்கையின் நீர்பெருக்கை தன் சிகையில் தரித்து அடக்கிய வடிவம்- கங்காதர மூர்த்தி.
சிவன் தன் இடக்காலை வளைத்து வலக்காலை நேராகத் தரையில் ஊன்றி நிற்கும் நிலை. உமையை முன் இடக்கையால் அனைத்தபடி கன்னத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் பாவனை. பின் வலக்கை மழுவுடன் கங்கை பொருந்திய சடையைத் தொட்டவாறும், இடக்கை மானுடனும் இருக்கும். உமையின் வலக்கால் நளினமாக ஓரளவு வளைந்து இடக்கால் நிமிர்ந்தும் இடக்கை மலரேந்தியும் வலக்கை தொங்கியவாறு காணப்படும். காட்சி: சிவாலயங்களில் தேவகோட்டத்தில்.

#####

Read 3972 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:06
Login to post comments