Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 18:24

ஆபதோத்தாரண மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

விண்மழை தந்து களிப்பாய் போற்றி!
கண்ணிய நலமே காப்பாய்போற்றி!
ஞாலத் துயர்கள் தீர்ப்பாய் போற்றி!
கோல நல் வாழ்வே குறிப்பாய் போற்றி!
ஆற்றல் நல்ல வழி அருள்வாய் போற்றி!
போற்றி! போற்றி! உன் அடைக்கலம் போற்றி!


ஆபதோத்தாரண மூர்த்தி!

 

உலகத்து உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்களை அவ்வப்பொது எழுந்தருளிப் போக்க வல்ல சிவபெருமானைச் சுற்றிலும் தேவர்கள், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கிங்கரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசிகள், போக பூமியர் எனும் பதினெண் கணங்களும், நூல்களில் சொல்வதை உணர்ந்து இறைவனோடு ஒன்றி நிற்கின்ற பக்தி நிலைப் பரஞானர், அபர ஞானர்-பர ஞானத்திற்கு எதிர்ப்பு நிலையினர், யானை முகத்தான், .ஆறுபடை ஏந்திய தேவர் படைத்தலைவன் முருகன், அபிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி, மற்றும் சங்கு, சக்கரம், கதை, கட்கம், கோதண்டம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய திருமால், தாமரை இருக்கையில் இருந்து உயிர் ஆன்மாக்களை உருவாக்கும் பிரமதேவன், எண்ணிலா தெய்வப் பெண்டிர் குழாமும், சூரியன், சந்திரன், அங்கார்கன், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய கோள்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், அகத்தியர், ஆங்கிரசர், கௌதமர், காசிபர், புலத்தியர், மார்க்கண்டேயர், வசிட்டர், ஆகிய முனிவர்களும் மற்றுமுள்ள முனி புங்கவர்களும் நாற்புறமும் கூடம் கூட்டமாக் கூடிப் பணிந்து துன்பம் நேர்ந்த காலத்தில் அருள் பெறக் கருதி தொழுத போதெல்லாம் உருவெடுத்து தக்க சமயத்தில் ஆபத்திலிருந்து விடிவிப்பார்.ஆபதோத்தாரண மூர்த்தி!
கர்ம காரணங்களால் துன்பங்கள் நேர்கின்றன. அதை மாற்ற முடியாது என ஆன்மாக்களை கொண்ட மனிதர்கள் எந்த முயற்சியும் செய்யாது சும்மா இருந்து விடுகின்றனர். இது சரியன்று. கர்ம வினைகளுக்குத் தகுந்தவாறு துன்பங்கள் நேர்ந்தாலும் எந்த வினைக்கு எந்த பலன் என்பதை அறியாத நாம் அதை அறிந்த சர்வேசுவரனிடம் இறைவா என்னைக் காப்பாற்று என உளம் உருகி வேண்டினால் நம் இடுக்கண்களை களைந்து ஆபத்திலிருந்து விடுவிப்பார். அவரது பலவகைத் திருவுருவங்களையும் இத்தன்மையானது என விவரிக்க முடியாது. முனிவர் முதலானோர் ஆபத்துக் காலத்தில் தம் துயர் கூறி யாசிக்க அவர்கள் துன்பத்தை தொலைத்து அருள எழுந்த வடிவமே ஆபதோத்தாரண மூர்த்தி. முனிவர்கள் இடர் களைந்த வடிவம்.

#####

Read 3240 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:22
Login to post comments