Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 18:29

க்ஷேத்ரபாலக மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஈசன் தந்தருள் மகனே ஜயஜய
உன்னிய கருமம் முடிப்பாய் ஜயஜய
ஊர்த்துவ சக்தி உகந்தாய் ஜயஜய
எம்பெருமானே இறைவா ஜயஜய
ஏழுலகுந்தொழ நின்றாய் ஜயஜய


க்ஷேத்ரபாலக மூர்த்தி!

 

பிரபஞ்சத்தில் அண்ட சராசரங்களும் இறைவனின் ஆணைப்படியே இயங்குகின்றன. பல கோடி உயிர்களை நான்முகனாகிப் படைப்பதும், திருமாலாகிக் காப்பதும், உருத்திரனாகி அழிப்பதும், மகேசுவரனாகி மறைப்பதும், சதாசிவனாகி அருள்வதும் இறைவன் சிவபெருமானே. ஆக்கல், காத்தல் அழித்தல் மறைத்தல், அருளுதல் ஆகிய ஐந்தொழில்களையும் பலவடிவங்களெடுத்து இயங்குகின்றார்.
பிரபஞ்சத்தில் உலகம் என்பது நாம் வாழும் பூமி மட்டுமல்ல. அதைப் போன்ற பல்வேறு வகையான உலகங்கள் உழலுகின்றன.
நாவலந்தீவு, உவர்க்கடல் இரண்டும் தனித்தனியே இலட்சம் யோசனை விரிவாகவும்,
இறலித்தீ, கருப்பஞ்சாறு கடல் இரண்டும் தனித்தனியே இரண்டு இலட்சம் யோசனை விரிவாகவும்,
இலவுத்தீவு, மதுக்கடல் இரண்டும் தனித்தனியே நான்கு இலட்சம் யோசனை விரிவாகவும்,
நெய்க்கடல், குசைத்தீவு இரண்டும் தனித்தனியே எட்டு இலட்சம் யோசனை விரிவாகவும்,
கிரவுஞ்சத் தீவு, தயிர்க்கடல் இரண்டும் தனித்தனியே பதினாறு இலட்சம் யோசனை விரிவாகவும்,
சாகத்தீவும், பாற்கடலும் இரண்டும் தனித்தனியே முப்பத்திரண்டு இலட்சம் யோசனை விரிவாகவும்,
புட்கரத்தீவும், சுத்த நீர்க்கடலும் இரண்டும் தனித்தனியே அறுபத்தி நான்கு இலட்சம் யோசனை விரிவாகவும்,
பொன்மயமான போக பூமியும் பத்துக்கோடி யோசனை விரிவாகவும்,
சக்கரவாள மலை பதினாயிரம் கோடி யோசனை விரிவாகவும்,
பெரும்புறக் கடல் ஒரு கோடியே இருபத்தேழு இலட்சம் யோசனை விரிவாகவும்,
இருளுலகம் கோடி யோசனை விரிவாகவும் இருக்கும்
அதில் நாற்பத்தொன்பது இலட்சம் யோசனை விரிவும், ஒரு கோடி யோசனை கனமும் கொண்ட அண்டச் சுவர்களை உடையது நம்அண்டம்.
மேருமலையின் நடுவிலிருந்து அண்டச் சுவர் வரையில் ஐம்பது கோடி யோசனையாகக் கீழ்த்திசை எல்லை விரிவாகவும் மற்ற மூன்று திசைகளும் இதைப்போன்றே அளவிற்கு விரிவானது. அகலம், நீளம், உயரம் அகிய மூன்றும் தனித்தனியே நூறு கோடி யோசனை அளாவாக உள்ள அண்டத்தில் ஊழிக்காலத்தில் மலையைப் போல் அலைகள் தோன்ற உலகத்தை வெள்ளம் சூழ்ந்தது.
நெடுங்காலம் ஆயுள் கொண்ட எட்டு மகா நாகங்களும், நவக்கிரகங்களும், தேவர்களும், இந்திரன் முதல் எண்திசை தெய்வங்களும், கற்பக மரமும், சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவரும், ஊர்வன, நீரில் வாழ்வன, பறப்பன, நாற்கால் விலங்குகள், தாவரங்கள், மானுடர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி இருளில் மூழ்கியது.
எல்லாம் அழிவுறும் நிலையில் பிரணவமே தோணி வடிவாக நிற்க அதில் சிவனும் உமையும் இருக்க அறமொன்று தவிர மற்றனைத்தும் அழியும் என்ற தத்துவத்தின்படி வருணன் சிவனைப் பணிந்தான். உலகைச் சூழ்ந்த நீரை தன்நுதல் வழியாக விலக்கினார் சிவபெருமான். மீண்டும் திசைக் காவலர்களை நிறுவி அனைவரையும் படைத்து அவரவர் பதவியில் இறுத்தினார்.
ஊழிக்காலத்தில் உலகை காத்தருளிய மூர்த்தி. உலகத்திற்கு ஊழிக்காலத்தில் உற்ற துன்பத்தை நீக்கி அருளிய வடிவம் க்ஷேத்ரபாலக மூர்த்தி. க்ஷேத்திரம்-பூமி. பாலகர்- காப்பவர்.

#####

Read 4160 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:25
Login to post comments