Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 18:35

அகோர அத்திர மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஐயா கணபதி நம்பியே ஜயஜய
ஒற்றை மருப்புடை வித்தகா ஜயஜய
ஓங்கிய ஆனைக் கன்றே ஜயஜய
ஒளவிய மில்லா அருளே ஜயஜய
அக்கரவஸ்த்து ஆனவா ஜயஜய


அகோர அத்திர மூர்த்தி!

 

சிவன் அருளால் பலவரங்கள் மூலம் உயர்ந்த பேரினையடைந்த சத்ததந்து தான் அடைந்த சிறப்புக்கு சிவனே காரணம் என்பதை மறந்து தனக்கு ஒருவரும் நிகரில்லை என்ற ஆணவத்துடன் ஓர் வேள்வி நடத்த முற்பட்டான். அவ்வேள்விக்கு பிரமன் முதலிய தேவர்களை அழைத்து சிவனை அழைக்காமல் யாகத்தை ஆரம்பிக்க சொன்னான். அங்கிருந்த திருமால் சிவனை வணங்கி நற்பேறுகளைப் பெற்ற நீ அவரில்லாமல் யாகத்தை நடத்துவது சரியன்று என்றார். அங்கிருந்த பிரமன் உள்பட ஏனைய தேவர்களும் அவனுக்கு அக்கருத்தையே வலியுறுத்தின போதிலும் சத்ததந்து அதை ஏற்கவில்லை. கோபங்கொண்ட அவனை சமாதானப்படுத்த பிரம்மன் யாகத்தை வேறுவழியில்லாமல் தொடங்கினான்.
நாரதர் திருக்கயிலைச் சென்று மகதி யாழ் மூலம் சாம வேதத்தை மீட்டினார். பின்னர் சிவபெருமானிடம் சத்ததந்து யாகம் பற்றி கூற பெருமான் மண்டலத்தை தேராகவும், உலகைச் சக்கரமாகவும், அக்னியை வில்லாகவும், சந்திரனை நாணாகவும் அமைத்து குமரனை அத்தேரை ஓட்டப்பணித்து வீரபத்திரரிடம் அக்கொடியவனை அழித்துவர ஆணயிட்டர்.
வீரபத்திரன் அகோர வடிவமெடுத்து பூத சேனைகள் புடைசூழ முருகன் தேரோட்ட யாகசாலையை அடைந்து இந்திரன் நான்முகன் சூரியன் ஆகியோரைத் தண்டித்து வருண அத்திரத்தால் யாகத்தை அழித்தார். எதிர்த்து போர் செய்யவந்த சத்ததந்துவை அகோர அஸ்த்திரத்தை ஏவிக் கொன்றார். சத்ததந்துவின் மனைவி கயிலை சென்று மாங்கல்ய பிச்சை கேட்க சிவன் அனைவரையும் மன்னித்து அவரவர்தம் பதவியில் இருக்க அருள் செய்தார்.
சிவனை அழைக்காமல் யாகம் நடத்திய சத்ததந்துவை வீரபத்திரர் மூலம் அகோர அஸ்த்திரத்தை ஏவி கொன்ற வடிவம் அகோர அத்திர மூர்த்தி

#####

Read 7037 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:26
Login to post comments