Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 19:16

குருமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜயஜய
தத்துவ மறைதெரி வித்தகா ஜயஜய
நன்னெறி விக்கின விநாயக ஜயஜய
பள்ளியிலுறைதரும் பிள்ளாய் ஜயஜய
மன்றுளாடும் மணியே ஜயஜய


குருமூர்த்தி!

 

பாண்டிய நாட்டின் திருவாதவூரில் வாழ்ந்த திருவாதவூரார் இளம் வயதில் வேதம், ஆகமம் ஆகியவைகளில் தேர்வு பெற்றமையால் மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அவரை அழைத்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தைக் கொடுத்து அமைச்சராக்கினான். அமைச்சர் தொழிலை சிறப்பாகச் செய்தாலும் தனது சிவபக்தியினால் தினமும் திருவடி தொழுவதில் கவனம் செலுத்தி வந்தார், மன்னன் ஆணைப்படி கீழ் துறைமுகத்தில் குதிரைகள் வாங்க பெரும் பொருளோடு சென்றார் அமைச்சர்.
பரிபக்குவமுற்ற ஆன்மாக்களுக்குத் திருவருள் புரியும் எம்பெருமான் மனிட வடிவம் கொண்டு திருப்பெருந்துறையில் நந்தி, முனிகணங்கள் மாணாக்கராய் சூழ்ந்திருக்க குருந்த மரத்தடியில் குரு வடிவம் தாங்கி எழுந்தருளினார். திருவாதாவூரார் திருப்பெருந்துறை அடைந்த போது தன்னையும் அறியாமல் அன்பு உணர்ச்சி பெருக்கெடுப்பதை உணர்ந்தார்.
பேரருள் கூடும்போது ஒருவனின் வாழ்க்கை கண நேரத்தில் மாறி விடும். எந்தப் பணிக்கு தகுதியுடையவரோ அப்பணிக்குத் தக்கவாறு அவரது வாழ்க்கை மாற்றி அமைக்கப்படுகிறது. இறைவன்மேல் அன்பு கொண்ட திருவாதாவூரார் அவ்விடம் வந்ததும் குருவடிவம் கொண்டு காத்திருந்த சிவபெருமானின் அன்பு ஈர்த்ததை உணர்ந்தார். என்னுள் கலந்த சிவபெருமான் இவ்விடத்தில் இருக்கின்றாரோ என எண்ணினார். கண்டார் குருவை. திருவாதாவூராருக்கு ஞான உபதேசம் செய்து தீட்சை அளித்தார் சிவபெருமான். அதுமுதல் மாணிக்கவாசகர் எனப்பட்டார்.
ஆடித்திங்களில் புரவிகள் வரும் என காவலர்களை அனுப்பிவைத்துவிட்டு தான் வந்த வேலையை மறந்து திருப்பெருந்துறையில் தங்கி தன்னிடம் இருந்த பொருளை இறைப்பணிக்கும் அடியவர் நலனுக்கும் செலவிட்டு இறைவன் நினைவில் இருந்தார். ஆடியில் புரவிகள் வராததால் மன்னன் அனுப்பிய ஓலைக்கு பெருமான் அசரீரியாக கூறியவாறு ஆவணியில் வரும் என ஓலை விடுத்து, பின் கனவில் சிவன் தோன்றி ‘குதிரைகள் பின்வரும், நீ முன் செல்க’ எனப் பணிந்தமையால் மதுரையை அடைந்து அரசரிடம் ஆவணியில் குதிரைகள் வரும் எனச் சொல்லி இறைவன் வருகையை எதிர்பார்த்திருந்தர்.
பரிபக்குவம் அடையாத மாணிக்கவாசகருக்கு குருவாய்த் தோன்றி ஞான உபதேசம் செய்த வடிவம் குருவடிவம்.

#####

Read 4718 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:28
Login to post comments