Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 19:17

அசுவாரூட மூர்த்தி- குதிரையேறுச் செல்வர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இயங்கிய ஞானக் குன்றே ஜயஜய
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் ஜயஜய
இலகக் கொம்பொன்றேந்தினோய் ஜயஜய
வஞ்சனை பலவும் தீர்ப்பாய் ஜயஜய


அசுவாரூட மூர்த்தி- குதிரையேறுச் செல்வர்!

 

திருப்பெருந்துறையை விட்டு மதுரை திரும்பிய மணிக்கவாசகர் தன் இல்லம் சென்றார். உறவினர்கள் அவர் நிலை அறிந்து அவருக்கு அறிவுரை கூறினர். அரசன் ஆனைப்படி செய்யாததால் உங்கள் பெருமைக்கு இழுக்கு ஏற்படும் என்றனர். என்ன நேர்ந்தாலும் கவலையில்லை, நான் எம்பெருமானை மறவேன் என்றார். மன்னன் குதிரைகள் ஏன் வரவில்லை என்றார். இன்னும் மூன்று நாட்களில் வரும் என்றார்.
அவ்வாறு மூன்று நாட்களில் குதிரைகள் வராததால் மன்னன் மாணிக்கவாசகரை சிறையிலிட்டு துன்புறுத்த, மாணிக்கவாசகர் இறைவனைத் துதிக்க, இறைவன் நந்தி முதலான கணங்களை அழைத்துக் காட்டில் திரியும் நரிகளைப் பரிகளாக்கி நீங்கள் அவற்றை நடத்தும் சேவர்களாக உரு மாறுங்கள் என்றார். சிவபெருமான் தானே குதிரைகளை ஓட்டுபவனாக மதுரைக்குச் சென்றார். குதிரைகள் வந்தும் மன்னன் மாணிக்கவாசகரை விடுவித்தான். குதிரை வல்லுநர்கள் அந்தக் குதிரைகளின் திடம் மற்றும் சுழியை ஆரய்ந்து மன்னா, நாம் கொடுத்த விலையைவிட பன்மடங்கு மதிப்புக் கொண்ட உயர்சாதிக் குதிரைகள் இவை என்றனர். குதிரைகள் லாயத்தில் கட்டப்பட்டது. சிவனார் தன் பரிவாரங்களுடன் மறைந்தார்.
இரவில் புதிய குதிரைகள் கனைப்பதற்குப் பதிலாக ஊளையிட்டுப் பழைய குதிரைகளை கடித்துக் குதறி காட்டுக்குள் ஓடி மறைந்தது. மீண்டும் மாணிக்கவாசகர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் வைகை ஆற்றில் நீர் நிலைக் குன்றி மக்கள் துன்பமடைந்தனர். மக்கள் துன்பம் தீர மாணிக்கவாசகர் இறைவனைப் பிரார்த்தித்தார். இறைவன் அருளால் வைகையில் வெள்ளம் கரைபுறண்டு ஓடியது. ஆற்றின் கரைகளை பலப்படுத்த வீட்டிற்கு ஒருவர் கட்டாயம் வர வேண்டும் என மன்னன் கட்டளையிட்டான். அப்போது பிட்டு விற்கும் மூதாட்டி தனி ஆளாக இருந்ததால் தனக்குப் பதிலாக பணியாற்ற ஆளின்றி வருந்தி சிவபெருமானை வேண்டினாள். அந்த மூதாட்டியின் வேண்டு கோளுக்கிணங்கி சிவன் கூலியாளாக வந்து கூலியாகப் பிட்டு தரச்சொல்லி சாப்பிட்டு வைகை சென்றவர் வேலையைச் செய்யாமல் படுத்து உறங்கினார். கோபம் கொண்ட மன்னன் பிரம்பால் அவன் முகில் அடிக்க அந்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் பட பாண்டியன் ஆச்சரியப்பட்டான்.
அப்போது விண்ணிலிருந்து வாதவூராரை விடுவிக்க என்ற ஒலி கேட்க மன்னன் அவரை விடுவித்து மன்னிப்பு கேட்டான். அரசன் கொடுத்த பொருட்களை சிவப்பணிக்கே செலவிட்டார் மாணிக்கவாசகர்.
திருவாதாவூரார் துன்பம் அடையக்கூடாது என்பதற்காக நரிகளைப் பரிகளாக்கி தானே குதிரைத் தலைவனாக மதுரை மன்னனிடம் சென்று புரவிகளை ஒப்படைத்த வடிவம் அசுவாரூட மூர்த்தி.

#####

Read 4642 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:45
Login to post comments