Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 20:01

கௌரிலீலா சமன்விதமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாச பாணி காக்க!


கௌரிலீலா சமன்விதமூர்த்தி!

 

சிவபெருமான் திருக்கயிலையில் இருந்தபோது உமை, இறைவா தங்களின் உண்மை நிலையை அறிய விரும்புகின்றேன். தாங்கள் உருவமற்றவர் என்றும் உருவங்கள் நிறைந்தவர் என்றும் கூறுவதன் விளக்கம் யாது என்றார்.
பிரம்மமாக இருக்கும்போது எனக்கு உருவம் கிடையாது. உலகத்து உயிர்களுக்கு அருள் புரியவேண்டும்போது உருவங்களை ஏற்கின்றேன். அவைகள் எல்லாம் நம் அருள் வடிவங்கள் என்று சிவன் கூறியதும், அருள் வடிவங்கள் என்றால் அவை என்னுடைய வடிவங்கள் என்றுதானே பொருள் என உமை விளையாட்டாக கூற, சிவன் என் எதிரில் உன்னைப் பற்றி நீ பெருமையாகப் பேசினாய். யாமே எல்லா இடத்திலும் இருந்து செயலாற்றினோம். அவ்வாறு செயலாற்றல் இல்லாமற்போனால் உலகம் முழுவதும் அறிவினை இழந்து செயலற்றுப் போகும் அதை இப்போது நேரடியாக காண்பாயாக எனக் கூறி திருமால், பிரம்மன் ஆகியோரின் உள்ளத்தில் பொருந்தியுள்ள அறிவினை அகற்றினார்.
தம் உள்ளத்தின் அறிவு அகன்றதும் திருமால், பிரம்மன் இருவரும் ஒன்றும் செய்ய முடியாமல் முடங்கினர். அதே சமயம் அனைத்து ஆன்மாக்களும் செயலிழந்த நிலையை அடைந்ததை தேவி கண்டாள். உண்மை நிலையைப் புரிந்த உமை இறைவா இவர்களை முன்புபோல் இயங்கச் செய்வீர்களாக என வேண்டினார். பெருமான் அவர்கள் மீண்டும் செயலாக்கம் கொள்ள அருள் புரிந்தார்.. தேவர்கள் எல்லாம் ஐயனே சிறிது காலம் நாங்கள் எந்தச் செயலினையும் செய்யாமல் இருந்ததற்கு எங்களை மன்னித்து அருளுக என்றனர். இந்தச் செயலிழப்பு உங்கள் தவறல்ல, அதற்கு உமையே காரணம். எனவே அவர் பூ உலகில் பிறந்து மீளவேண்டும் என அருளினார்.
தட்சன் தனக்கு உமையே மகளாகப் பிறக்கவேண்டும் என தவமிருந்ததனாலும், பெருமான் தட்சன் மகளாக உமை தற்போது பூ உலகில் பிறக்க அருளினார். மாசிமாத மக நட்சத்திரத்தன்று குழந்தையைக் கண்டெடுத்து தாட்சாயிணி எனப்பெயரிட்டு வளர்த்தனர். தாட்சாயிணி 12 ஆண்டுகாலம் கன்னி மாடத்தில் சிவனை நினைந்து தவமேற்கொள்ள பெருமான் வேதியர் வேடமிட்டு வந்து பெண்ணே! உன்பாலொரு வேட்கையில் வந்தோம், கொடுப்பதாகக் கூறு என்றார். அது முடியுமானால் தருதும் என்றார் தாட்சாயிணி. உண்ணை மணமுடிக்கும் எண்ணத்தில் யான் வந்துள்ளேன் அதற்கு இசைவு தறுவாய் என்றார். சினம் கொண்ட தாட்சாயிணி சிவனை மணக்கத் தவமிருக்கும் என்னிடம் இவ்வாறு கூறினாய் என அவரை விட்டினார்.
உடன் சிவன் தன் உருவைக்காட்ட அனைவரும் மகிழ்ந்தனர். தட்சனும் வேதியராய் வந்தது சிவன் என அறிந்து தன் மகளை மணம் முடித்துக் கொடுத்தான். மணம் முடிந்தவுடன் பெருமான் மறைந்து விட்டார். ஒரு நாள் பகல் பொழுதில் காளை வாகனராய் வந்து தேவியை கயிலைக்கு அழித்துச் சென்றார்.
சிவன் திருமணம் முடிந்ததும் மறைந்தற்கும் தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் தன்னை மதியாது தட்சாயணியைக் கயிலை மலைக்கு கூட்டிச் சென்றதற்கும் கோபங்கொண்டு அன்று முதல் சிவனை மதிக்காமல் இருந்து வந்தான் தட்சன்.
கௌரியாகிய உமா தேவியருடன் திருவிளையாடல் புரியும் நிலையே இது. உமையுடன் கேளிக்கைகள் திருவிளையாடல் புரியும் நிலையில் இருக்கும் வடிவம் கௌரி லீலா சமன்வித மூர்த்தி.

#####

Read 4529 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 05:03
Login to post comments