Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 20:19

கூர்ம சம்ஹாரமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!
விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!


கூர்ம சம்ஹாரமூர்த்தி!

 

சாவா மூவா நிலைபெற அமுதம் உண்ணவேண்டித் தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைய, மந்தாரமலை நிலை பிறழாமலிருக்க திருமால் ஆமை வடிவம் கொண்டு அதைத் தாங்கிப் பிடித்தார். வாசுகி துயரம் தாங்காமல் நஞ்சை கக்க தேவ அசுரர்களைக் காக்க திருமால் முயல நஞ்சின் வேகத்தால் அவரது நிறம் கருமை நிறமானது. எம்பெருமான் சுந்தரர் மூலம் ஆலகாலத்தை எடுத்து தானே உண்டார், மீண்டும் கடைய பாற்கடலிலிருந்து மூதேவி தோன்ற அவளை வருணனுக்கு அளித்தனர். தண்டம் கமலத்துடன் தன்வந்திரி என்ற மருத்துவன் தோன்றினான். பின்னர் அறுபது கோடி மகளிர் தோன்ற அவர்கள் தேவலோகத்திற்கு அணுப்பப் பட்டனர். பின்னர் மது தோன்ற தேவர்கள் பருக அசுரர்கள் அதனைப் புறக்கணித்தனர். பின் தொடர்ந்து வந்த உச்சைச்சிரவம் என்ற குதிரையை இந்திரனுக்கும், கசுத்துவமணியை திருமாலுக்கும், பஞ்சதருக்கள், காமதேணு, சிந்தாமணி ஆகியவை இந்திரனுக்கும், சந்திரன் உலகிற்கு ஒளியூட்டவும், திருமகளை திருமாலுக்கும் அளித்தனர். இறுதியில் அமிர்தம் வந்தது. திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு மட்டும் வழங்க ஒரு அசுரன் மட்டும் அமிர்தம் அருந்த அதைக் கண்ட சூரிய சந்திரர்கள் திருமாலிடம் சொல்ல அவர் அந்த அசுரனின் தலையை வெட்ட அமிர்தம் அருந்தியதால் சாகாமல் உயிர் வாழ்ந்து சிவார்ச்சனை செய்து இராகு, கேது கோள்களாக மாறினர்.
இந்நிலையில் ஆமை உருக்கொண்ட மாயை கடல் ஏழையும் ஒன்றாக்கி அதன் வெள்ளம் உலகை அழிக்கும்படியாக கலக்கி உயிரினங்களை துன்புறுத்தலாயிற்று. இந்திரன் பிரம்மன் இருவரும் கயிலை சென்று சிவபெருமானிடம் பாற்கடலில் அமுதம் கடைய ஆமை வடிவம் கொண்ட திருமால் இன்னும் ஆவேசம் அடங்காமையால் உயிர்கள் துன்புருவதைத் தெரிவிக்க, சிவபெருமான் தன் கையிலிருந்த சூலப்படையால் ஆமையின் வயிற்றில் குத்தி அதன் இறைச்சியை குடைந்து எடுத்ததன் காரணமாக ஆமையின் வலிமை குன்றியது. அந்த ஆமை ஓட்டினை தேவர்கள் விருப்பப்படி தன் மார்பில் அணிந்து கொண்டார். சுய உணர்வு கொண்ட திருமால் சிவனைப் பணிந்து வைகுந்தம் சென்றார்.
அமுதம் கடைந்த பின் கூர்ம அவதாரத்தால் உலகிற்கு நேர்ந்த துன்பத்தினை போக்க கூர்மத்தின் அகந்தையை அடக்கிய வடிவம் கூர்ம சம்ஹாரமூர்த்தி

#####

Read 5423 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:55
Login to post comments