Print this page
சனிக்கிழமை, 11 November 2017 20:13

திருமுழுக்கு- அபிஷேகம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

திருமுழுக்கு- அபிஷேகம்!
பண்டைக்காலத்தில் 26 திரவியங்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது18 ஆகி அதுவும் குறைந்து 12 ஆகிவிட்டது. முக்கியமாக எள் எண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் என்ற முறைப்படி அபிஷேகம் செய்தால் அந்த விக்ரகத்தின் ஆற்றல் மந்திர யந்திரங்கள் சிலாரூபத்தில் இருத்திடும்போது அந்த ஆற்றலை நிலைக்கச் செய்யும். அபிஷேகங்களில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் மூன்றும் மிகச் சிறந்ததாகும். எந்த அபிஷேகம் செய்தாலும் குறைந்தது ஒரு நாழிகை அளவிற்கு செய்வது சிறப்பு. ஆகம விதிப்படி மூலவிக்ரகத்திற்கு நடத்தப்படும் அபிஷேகங்களில் சந்தனம், விபூதி, கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும்தான் பக்தர்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும். கற்சிலையாக இருக்கும் விக்ரகங்கள் அபிஷேகம் செய்யப்படுவதால் பிரபஞ்ச சக்திகளை ஒருங்கே ஈர்த்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பரவச் செய்கின்றது. அந்த ஆற்றலை நாம் அடைந்து புத்துணர்ச்சி பெறுதல் வேண்டும் என்பதற்காகவே இறைக்கு அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

சிவாலயப் பூஜைகளின் தத்துவம்-கிரியைகள்

அபிஷேகம்-சிருஷ்டி-படைத்தல்
நைவேத்யம்-ஸ்திதி-காத்தல்
பலி-சம்ஹாரம்-அழித்தல்
தீபாராதனை-திரோதானம்
ஹோமம்-அனுக்ரஹம்-அருளுதல்

&&&&&

Read 7666 times Last modified on திங்கட்கிழமை, 18 March 2019 09:48
Login to post comments