Print this page
சனிக்கிழமை, 11 November 2017 20:59

யோகம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

யோகம்!

பொதுவாக யோகம் 1.மந்திரயோகம், 2.பரிசயோகம், 3.பாவயோகம், 4.ஞானயோகம், 5.மகாயோகம் என ஐந்து வகைப்படும்.
1.மந்திரயோகம்- பரமேஸ்வரனை அருமறை மந்திர ஜபத்தால் தியானம் செய்வது மந்திர யோகமாகும்.
2.பரிசயோகம்- தூய மாசு மருவற்ற உள்ளத்துடன் இரேசகம், பூரகம் இவற்றை யோகத்தில் செய்து கும்பக யோகத்தில் ஆத்மாவை நிறுத்துவது பரிசயோகம்.
3.பாவயோகம்- இரேசகம் என்பது மூச்சை மூக்கினால் புறத்தே விடுதல். பூரகம் என்பது பிராணாயாமம் செய்யும் முறையில் மூச்சை உள்ளுக்குள் இழுத்தல் ஆகும். உலக இச்சையானது மனதை அலைக்கழிக்கும். அதில் மனதை அலையவிடாமல் ஒருநிலைப்படுத்தி ஈசனைக் காணும்படி பயிலும் யோகம் பாவயோகம்.
4.ஞானயோகம்- தன்னையும் உலகத்தையும் பிரித்துப் பாராமல் ஒன்றான ஐக்கியத்தில் உள்ளும் புறமும் தன்னைக் காண்பது ஞானயோகம்.
5.மகாயோகம்- ஆதியாய் உறையும் பொருளை ஜோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாகி அப்பழுக்கற்ற தூயநெறியில் உணர்வது மகாயோகம்.
யோகத்தின் இந்த ஐந்து நிலைகளையும் உணர்ந்தால் அஷ்டமா சித்திகளை அறிந்த நிலையை அடையமுடியும். இத்தகைய யோக மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்கு தியான நிலையில் இருப்பவர்கள் முதலில் நான்முகனையும் நாராயணனையும் மனதில் தியானித்து பின்னர் ஈசனை உள்ளத்தில் இருத்தி தியானம் செய்ய வேண்டும்.

&&&&&

Read 8209 times Last modified on சனிக்கிழமை, 24 November 2018 12:30
Login to post comments