Print this page
சனிக்கிழமை, 11 November 2017 21:01

ஞானம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

ஞானம்! 

1.பக்தி ஞானம் என்பது சரியை –தேடுவது என்றாகும், 
2.கர்ம ஞானம் என்பது -கிரியை-தேடியதை அடைவது, 
3.தியான ஞானம் என்பது – ஞானம் தேடி அடைந்ததை உபயோகிப்பது, 
4.ஞான ஞானம் என்பது - ஞானத்தை உபயோகித்ததால் ஏற்படும் தெளிவு.

சத்குருவை தேடுவது சரியை, அவரிடம் உபதேசம் பெறுவது கிரியை, அதன்படி நடப்பது யோகம். அதனில் கிடைப்பது ஞானம். எரியும் விளக்கினை உற்றுப் பார்த்தால் திரிக்கும் எரியும் ஜோதிக்கும் இடையே கொஞ்சம் இருள் அதாவது கருமை ஒளிந்திருப்பது தெரியும். சிறியதாக இருக்கும் அந்த இருட்டு தீபஒளி அனைந்தால் முழுவதுமாக வளர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்துக் சூழ்ந்து கொள்ளும். ஞானமாகிய தீ எறியும்வரைதான் அஞ்ஞானம் ஒளிந்திருக்கும். ஞானம் நீங்கினால் அங்கே இருள் சூழும். அது அஞ்ஞானமாகும். ஞானஒளி என்பது அஞ்ஞான இருளைப் போக்கி அந்த இடத்தைப் பிரகாசிக்கச்செய்யும். உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் இருட்டாகிய அஞ்ஞானத்தினைப் போக்க அந்த இடத்தில் அதாவது மனதில் ஞானவிளக்கு ஏற்ற வேண்டும். பக்தி எனும் நெய்யினை ஊற்றி உயிர்கள் மீது அன்பு என்ற திரியை அதில் இட்டால் இறைவன் தீபமாகத் தோன்றி சுடர்விடுவான். இந்த ஞானவிளக்கு மனதில் உள்ள அஞ்ஞான இருளை அகற்றும். அந்த ஞானஒளியானது அந்த முகத்தில் பொலிவையும் அகத்தில் நித்தம் நித்தம் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தரும். பார்பவை எல்லாம் உயர்வாகவும் நடப்பன எல்லாம் நல்லவையாக இருக்கும். இருளாகிய வினைகள் சூழாமல் நிம்மதி நிறைந்த வாழ்வாக மலரும்.
முக்திபெற: நான்கு வழிகளை சொல்கின்றது வேதங்கள். 
1.சரியை (தாசமார்க்கம்) பலதொண்டுகள் செய்து இறைவன் அருளை பெறுதல்.
2.கிரியை (சத்புத்ரமார்க்கம்) இறைவனை அகமும் புறமும் பூஜித்து அருளைப் பெருதல். 
3.யோகம் (சகமார்க்கம்) தியானத்தின் மூலம் வீடுபேற்றை அடைவது.தகாது என்று வகுப்பது யமம், தகும் என்பது நியமம் என்ற விதிக்களுக்குட்பட்டது.
4.ஞானம் (சன்மார்க்கம்) குருவிடம் உபதேசம் பெற்று ஞானத்தால் ஆராதனை செய்து அருள். குருவின் மூலம் கற்பது-சிரவணம், கற்றவற்றை நினைவில் கொண்டுவருவது மனனம், அவற்றை தியானத்திருப்பது நிதித்தியாசனம் என 3 வித ஞான மார்க்கங்கள்.

&&&&&

Read 7968 times Last modified on சனிக்கிழமை, 24 November 2018 12:33
Login to post comments