Print this page
சனிக்கிழமை, 27 July 2019 09:15

(அ) "நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#*#*#*#*#

 

11-(அ) "நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்!

நல்லதையே கேட்டு, நல்லதையே பார்த்து, நல்லதையே நினைக்கவேண்டி வழிபட கடைசியாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இப் பகுதி எல்லாவித செயல் பாட்டிலும் இனிமையை, வேகத்தை, நன்மையை புகுத்தச்சொல்லி ஒழுக்கத்தை அறிவுருத்துகிறது. நமது மூதாதயர்கள் நம்மை வாழ்த்தட்டும், நாம் பேசுவது நன்மை பயப்பதாக இருக்கட்டும் என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, நம் சனாதான நெறியின் பரந்த மனப்பான்மை வெளிப்படுகிறது.

சம.ஸ்கிருதம்::

இடா தேவஹுர் மனு யஜ்ஞனீர்ப்ருஹஸ்பதி ருக்தா மதானி ஷகும்சிஷத்விஷ்வேதேவா: ஸூக்தவச:ப்ருதிவி மாதர்மா மா ஹிக்ம்ஸீர் மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிச்யாமி மதுமதீம் தேவப்யோ வாசமுத்யாசக்ம் ஷுஷ்ரூஷேன்யாம் மனுஷ்யேப்யச்டம் மா தேவா அவந்து ஷோபாயை பிதரோனுமதந்து || ஒம் ஷாந்தி: ஒம் ஷாந்தி:ஒம் ஷாந்தி |
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!


கடவுள்களின் அன்பைப் பொழிய எழுப்பப் பாடப்படும் மறைப்பாடல்கள் இறைத் தன்மை பொருந்திய "காமதேனு" பசுமூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மனு அர்ப்பணிக்கப்பட்டவர். மகிழ்ச்சியை ஊட்டும் 'மதக்கோட்பாட்டு பாடலை ப்ரஹஸ்பதி நமக்கு அளித்தார். 'மறைப்பாடல்களில்' கூறப்பட்டுள்ள விஷ்வ தேவாஸும், பூமாதேவியும், எனக்கு துன்பம் தரவேண்டாம். என் எண்ணங்கள் இனிப்பானதாக இருக்கட்டும்; என்னுடைய செயல் திறன் இனிமையானதாக இருக்கட்டும்; அதன் முடிவு இனிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும்; என்னுடைய படைப்பு இனிமையானதாக இருக்கட்டும்; என்னுடைய பேச்சும், பாராட்டுதலும் இனிமையானதாக இருக்கட்டும்; நான் பேசும் ஒலிவடிவான பேச்சு கடவுள்களுக்கு இனிமையைத் தரட்டும்; யார் நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறார்களோ, அவர்களுக்கு என் பேச்சு இனிமையானதாக இருக்கட்டும்; கடவுள்கள் எனக்கு பேச்சுத்திறனின் ஒளியை என்னுள் படரச் செய்து, என் வார்த்தையை சுவையுள்ளதாக மாற்றட்டும். மூதாதையர்களும், பித்ருக்களும், மனநிறைவோடு என்னை வாழ்த்தி அருள் புரிவார்களாக.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

Read 3642 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:27
Login to post comments