Print this page
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:57

சிவ நிந்தை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

சிவ நிந்தை!

526. தெளிந்த ஞானத்தை உடையவர் சிந்தையின் உள்ளே உள்ள தேவர்களின் தலைவனான சிவபெருமானை நாடி அருள் பெறுவர். சிவபெருமான் எளிமையானவர் என்று கீழோர் இகழ்வாராயின் அது கிளியானது பூனையிடம் அகப்பட்டு அழிவது போல் ஆகும்.

527. கல் போல் முரட்டுத் தன்மையுடைய தேவரும் அசுரரும் காமத்தினால் கெட்டுப் போனவர்கள். அவர்தம் உடம்பில் அதோமுகத்தில் விளங்கும் உண்மைப் பொருளை உணரமாட்டார்கள்.. அன்பால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் பெருமானை உடல் எங்கும் தாங்கியவர்கள் அல்லாமல் மற்றவர்கள் தாங்க இயலாதவர்கள்.

528. அசுரர்களும் தேவர்களும் இறைவனை நிந்தித்து தீராத பகைமை கொண்டு அதிலிருந்து மீள முடியாமல் அழிந்தனர்.. இறைவனிடம் எந்த வகையில் பகை கொண்டாலும் அவனை அடைவது இயலாது. இறைவனிடம் போலியாக பகை கொண்டாலும் தீமை ஒன்றுக்கு பத்தாக மாறும்.

529. அந்தணராய் பிறந்தும் பெண் இன்பத்தையும் ஊடலையும் நினைத்து மர்பிலும் சிந்தையிலும் கலந்துள்ளவராதலாலும் தான் பிரமம் என்ற அறத்தில் உள்ளவராதலும் இறைவன் பற்றிய எண்ணத்தை உள்ளத்தில் கொள்ள மாட்டார்.

#####

Read 1784 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:22
Login to post comments