Print this page
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:03

பெரியாரைத் துணைக் கோடல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

#####


பெரியாரைத் துணைக் கோடல்!


.543. யாத்திரை செய்பவருடன் சேர்ந்து நானும் நடைப் பயணம் செய்வேன். பாடுபவரின் ஒலியைச் செவி வழி கேட்டு இன்புறுவேன். உள்ளத்தில் இறையை தேடி அடையவல்லார்க்கு அருளும் மகாதேவர் பிரானோடும் பொருந்தும் வல்லமை உடையார் திருவடியை நானும் பொருந்தி நிற்பேன்.

544. படரக் கொம்பு இல்லாமல் துவண்டு விளங்கும் தளிரைப் போல் வாட்டம் அடையினும் மன உறுதி உடையவர் உள்ளத்தில் அன்பு வைத்து அந்த வழி செல்வதில்லை. நெஞ்சமே! தனித்து துயரப்பட்டிருந்து என்ன செய்யப் போகின்றாய்! பெரியாரை நாடி நான் செல்லும்போது உடன் வருவாயாக!

545. உண்மையை விரும்பும் சான்றோர் தேவதேவனை விரும்பி அவனுடன் பொருந்துவர். அவர் எல்லாவற்றையும் கடந்து சிவ தத்துவத்தில் நிற்பர். நல்ல நெறியில் ஒழுகி அடைந்தவர்க்கும் உபதேசம் செய்கின்ற பெரியோருடன் கூடியிருப்பது பேரின்பமாகும்.

546. பெரியோருடன் கூடியவர் சிவனின் உறவினராய் உலகநடையில் ஒழுகுபவர்களால் புகழப்படாதவனான எம்பெருமான் திருவடியை அடைவர்.. அமைதியாய் ஆன்மாவின் சிவனைத் துதிப்பவர்க்கு அருள் செய்கின்ற பெருமானை அடைந்து அந்நெறியில் இரண்டறக் கலந்து நிற்பதும் பெரியார் கூட்டத்தில்தான்.

547. எல்லாம் உடையவனான சிவபெருமானின் அடியார்க்கு அடியாராய் உள்ளவர்களுடன் கூடி சோதியில் கலந்து சிவபுரத்தில் பொருந்தி நிற்பவர் என்னைக் கண்டு பெருமானிடம் விண்னப்பம் செய்ய, சிவன் என்னை அழைத்து வருமாறு பணிக்க கடைவாயிலில் உள்ளவர் அடைக்கல முத்திரை காட்டி அழைத்தனர்.

548. சன்றோரைக் கூட வல்லபவன் அருமையானவன். பெருமையுடைய ஞானம் வாய்க்கப் பெற்றவனோ பிறவிச் சூழலிருந்து நீங்க பெறுவான். உரிமையுடன் பழகும் தன்மையிலே வல்லான் சிவனை உள்ளத்தில் உணர்ந்து அழிவில்லாமல் வாழ்வான்.. அருமை பெருமையுடைய பெரியோரின் துணையைப் பெறுவது பெறும் பேறு ஆகும்.

#####

Read 1869 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:25
Login to post comments