gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உனது வாழ்நாள் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் சிந்தித்து என்ன பயன். மீதி இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி!

நட்சத்திரங்கள்! (28)

வியாழக்கிழமை, 08 March 2018 15:20

ரேவதி

Written by

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

 

ரேவதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சனி

வழிபடவேண்டிய பைரவர் தலம் சம்ஹாரபைரவர்-தாத்தையங்கார்பேட்டை

வழிபடவேண்டிய தெய்வம் கைலாசநாதர்-கருணாகரவல்லி.காருகுடி,துறையூரருகில், தாத்தாயங்கார்பேட்டை-2,

பலன்கள் ஜலரோக நிவாரண மூலிகை- நீர் சம்பந்தமான நோய் நீங்க வழிபாடு

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் நீலகண்டேஸ்வரர்-இலுப்பைபட்டு(மணல்மேடு),  மகாகாளேஸ்வரர்-இரும்பைமாகாளம், அனந்தபத்மநாபர்-திருவனந்தபுரம், அர்த்தநாரீஸ்வரர்-திருச்செங்கோடு

வழிபடவேண்டிய கிரகம் புதன்

நட்சத்திரத்திற்குரிய மரம் வேலம்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- குரோதன பைரவ பக்த

வழிபட வேண்டிய சித்தர்கள் ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி

வழிபடவேண்டிய நாயன்மார்கள் ஏயர்கோன் கலிக்கம நாயனர், களக்கம்ப நாயனார், வாயிலார் நாயனார்

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 15:17

உத்திரட்டாதி

Written by

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

 

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை காமதேனு

வழிபடவேண்டிய பைரவர் தலம் வெண்கலஓசைபைரவர்-சேங்கனூர்

வழிபடவேண்டிய தெய்வம் சகஸ்ரலஷ்மீஸ்வரர். தீயத்தூர்,ஆவுடையார்கோவில்-திருப்புனவாசல்சாலை

பலன்கள் ஆயுட்காலத்தில் மகாலட்சுமிகடாட்சம் வழிபாடு.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் புருஷேத்தமபெருமாள்-திருநாங்கூர், சகஸ்ரலட்சுமீஸ்வரர்-தீயாத்தூர் (ஆவுடையார்கோவில்), வைத்தியநாதசுவாமி-வைத்தீஸ்வரன் கோவில்.

வழிபடவேண்டிய கிரகம் சனி

நட்சத்திரத்திற்குரிய மரம் வில்வம்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- ருருரு பைரவ சேவக

வழிபட வேண்டிய சித்தர்கள் உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் , மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் –குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 15:03

பூரட்டாதி

Written by

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை குபேரன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் அஷ்டபுஜபைரவர்-கொக்கராயன்பேட்டை,தஞ்சை

வழிபடவேண்டிய தெய்வம் திருஆனேஸ்வரர்-காமாட்சி. ரங்கநாதபுரம். திருக்காட்டுப்பள்ளி அருகில்

பலன்கள் ஆயுட்காலத்தில் நல்வாழ்க்கை வழிபாடு.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் பிரம்மபுரீஸ்வரர்-திருக்குவளை (எட்டுக்குடி)

வழிபடவேண்டிய கிரகம் குரு(வியாழன்)

நட்சத்திரத்திற்குரிய மரம் மருதம்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- கோரரூப

வழிபட வேண்டிய சித்தர்கள் பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி.– திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் –திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம், ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் –பந்தனம்திட்டா. 
பூரட்டாதி 4 (மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.
$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 14:59

சதயம்

Written by

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

சதயம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை எமன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் சர்ப்பபைரவர்-சங்கரன்கோவில்

வழிபடவேண்டிய தெய்வம் அக்னீஸ்வரர்-கருந்தார்குழலி. திருப்புகலூர்,நன்னிலம்-நாகைசாலை.

பலன்கள் வாகீச சக்தி பெற திங்கள் ஹஸ்தம், அவிட்டம், சதயம் நட்சத்திரநாள் வழிபாடு

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் முருகன்-கடம்பனூர், ஆதிக்கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பவனநாதர்-கடம்பர்கோவில் (குளித்தலை) அமிர்தகடேஸ்வரர்-மேலக்கடம்பூர் (காட்டுமன்னர்கோவில்), மும்மூர்த்திகள்-பிச்சாண்டார் கோவில் (உத்தமர்கோவில்), வைகுந்தநாதர்-மதுரைகூடல்

வழிபடவேண்டிய கிரகம் ராகு

நட்சத்திரத்திற்குரிய மரம் விலா

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- பேருண்ட

வழிபட வேண்டிய சித்தர்கள் சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் திருநாவுக்கரச நாயனார், அப்பூதி நாயனார், தண்டி நாயனார், நரசிங்க முனையரைய நாயனார், கோட்செங்கட் சோழ நாயனார்,

$$$$$

 

வியாழக்கிழமை, 08 March 2018 14:55

அவிட்டம்

Written by

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே

 

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை வசுக்கள்

வழிபடவேண்டிய பைரவர் தலம் பலிபீடமூர்த்தி-அஷ்டபைரவர்,சீர்காழி

வழிபடவேண்டிய தெய்வம் பிரம்மஞானபுரீஸ்வரர்-புஷ்பவல்லி. கொற்கை,குடந்தைஅருகில்.

பலன்கள் சனி பிரதோஷ நாளில் சூக்கும நிலையில் பிரம்மா-சரஸ்வதி வழிபாடு.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் புஷ்பவனேஸ்வர்ர்-திருப்பூந்துருத்தி (கண்டியூர்), விருத்தகிரீஸ்வரர்-விருத்தாசலம், மருந்தீசர்-திருவான்மியூர், அக்னீஸ்வரர்-திருக்காட்டுப்பள்ளி(திருவையாறு), அக்னீஸ்வரர்-திருக்கொள்ளிக்காடு(கச்சனம்), வேதபுரீஸ்வரர்-திருமறைக்காடு(வேதாரண்யம்), மகுடேஸ்வரர்-கொடுமுடி (ஈரோடு)

வழிபடவேண்டிய கிரகம் செவ்வாய்

நட்சத்திரத்திற்குரிய மரம் மகிழம்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- சக்ரபாணி

வழிபட வேண்டிய சித்தர்கள் அவிட்டம்1,2 (மகரம்);
அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 14:52

திருவோணம்

Written by

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

 

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு

வழிபடவேண்டிய பைரவர் தலம் மாரிதாண்டபைரவர்-வைரவன்பட்டி

வழிபடவேண்டிய தெய்வம் பிரசன்ன வெங்கடேச பெருமாள்-திருபாற்கடல்-காவேரிபாக்கம்-4

பலன்கள் காதுகேளாதோர் வழிபாடு சிறப்பு

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் மகாலிங்கேஸ்வரர்-திருவிடைமருதூர், நீலகண்டேஸ்வரர்-திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டினம்), மாசிலாமணிநாதர்-திருமுல்லைவாயில் (ஆவடி), பிரசன்னவெங்கடேச பெருமாள்-திருபாற்கடல் (காவேரிப்பாக்கம்)

வழிபடவேண்டிய கிரகம் சந்திரன்

நட்சத்திரத்திற்குரிய மரம் பராய்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- கதாபரணி

வழிபட வேண்டிய சித்தர்கள் திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர்,, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம். ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.

$$$$$

 

வியாழக்கிழமை, 08 March 2018 14:47

உத்திராடம்

Written by

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

 

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை கணபதி

வழிபடவேண்டிய பைரவர் தலம் முத்தலைவேல்வடுகர்-கரூர்

வழிபடவேண்டிய தெய்வம் சுந்தரேசுவரர்-மீனாட்சி. கீழம்பூங்குடி-திருப்பத்தூர்-சிவகங்கைசாலை,ஒக்கூர்-3

பலன்கள் ஞாயிறு, உத்திராடம், சித்திரை மாதம் கூடும்நாள் நல்ல சுபமங்கள சித்திகள்

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் எழுத்தறிநாதேஸ்வரர்-திருஇன்னம்பூர், குருங்காலீஸ்வரர்-கோயம்பேடு, காங்கேஸ்வரர்-காங்கேயநல்லூர், தாந்தோன்றீஸ்வரர்-பேளூர் (சேலம்), மீனாட்சி சுந்தரேஸ்வரர்-கீழ்பூங்குடி (மேலூர்), சதுரங்க வல்லபநாதர்-திருப்பூவனூர் (மன்னார்குடி), கற்பகநாதர்-திருக்கடிக்குளம் (திருத்துறைப்பூண்டி), பூவனநாதர்-திருப்பூவனம் (மதுரை), நாராயணன்-திருக்கோஷ்டியூர், குற்றாலீஸ்வரர்-திருக்குற்றாலம்,

வழிபடவேண்டிய கிரகம் சூரியன்

நட்சத்திரத்திற்குரிய மரம் மா

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- ஊர்த்துவ சிகாபந்த

வழிபட வேண்டிய சித்தர்கள் உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

வழிபடவேண்டிய நாயன்மார்கள் ஏனாதி நாத நாயனார்,

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 14:43

பூராடம்

Written by

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

 

பூராடம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை வருணன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் வீரபைரவர்-அவினாசிஉடுகமங்கலம்

வழிபடவேண்டிய தெய்வம் ஆகாசபுரீஸ்வரர்-கடுவெளி,திருவையாறு-திருக்காட்டுப்பள்ளிசாலை

பலன்கள் ஆகாசவாஸ்து பூஜை தலம். கட்டிட தொழில் உள்ளோர் வழிபாடு சிறப்பு

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் அப்பிரதீஸ்வரர்-நகர் (லால்குடி), நடராஜர்-சபாநாயகர்-சிதம்பரம், மகாகாளேஸ்வரர்-இரும்பைமாகாளம் (திருச்சிற்றம்பலம் கூட்ரோடு)

வழிபடவேண்டிய கிரகம் சுக்கிரன்

நட்சத்திரத்திற்குரிய மரம் வஞ்சி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- மஹோதர

வழிபட வேண்டிய சித்தர்கள் பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம், (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் –ஆவுடையார் கோவில்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் சாக்கிய நாயனார், காரி நயனார், சிறப்புலி நாயனார்

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 14:40

மூலம்

Written by

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

 

மூலம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை ரிபுக்கள்

வழிபடவேண்டிய பைரவர் தலம் சட்டைநாதர்-சீர்காழி

வழிபடவேண்டிய தெய்வம் சிங்கீச்வரர்-மப்பேடு-சென்னை-தக்கோலம் சாலை ,

பலன்கள் பிரதோஷம், மாத சிவராத்திரி, நவமி, நட்சத்திரநாள், புதன்நாளில் வழிபாடு

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் மயூரநாதர்-மயிலாடுதுறை,ஆம்ரவனநாதர்-மாந்துறை (லால்குடி), தியாகேசர்-ஆச்சாள்புரம், ஆதிசேஷன்-பாமணி, மந்திபுரீஸ்வரர்-கோயிலூர் (திருத்துறைபூண்டி), பாண்டீஸ்வரர்-குலசேகரபட்டணம் (திருச்செந்தூர்), அகத்தீஸ்வரர்-பொழிச்சலூர் (பல்லாவரம்), சிங்கீஸ்வரர்-மப்பேடு (தக்கோலம்).

வழிபடவேண்டிய கிரகம் கேது

நட்சத்திரத்திற்குரிய மரம் பலாசு

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- பராக்ரம

வழிபட வேண்டிய சித்தர்கள் மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் குங்கிலியக் கலய நாயனார், முருக நாயனார், திருஞான சம்பந்தநாயனார், திருநீல நக்கர் நாயனார், மூர்க்க நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்,

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 14:35

கேட்டை

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

 

கேட்டை நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை இந்திரன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் கதாபைரவர்-திருவாவடுதுறை

வழிபடவேண்டிய தெய்வம் வரதராஜபெருமாள்-பசுபதிகோயில்-தஞ்சைகுடந்தைசாலை-12,

பலன்கள் ஞாயிற்றுக்கிழமை சேர்ந்தநாளில் அன்னதான வழிபாடு.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் கிருத்திவாசேஸ்வரர்-வழுவூர் (நெய்குப்பை), பிச்சாண்டேஸ்வரர்-பிட்சாண்டார்கோவில் (உத்தமர்கோவில்), வரதராஜபெருமாள்-பசுபதிகோவில் (தஞ்சை), தாருகாவனேஸ்வர்ர்-திருப்பராய்த்துறை (திருச்சி), அங்காளாபரமேஸ்வரி-பல்லடம்.

வழிபடவேண்டிய கிரகம் புதன்

நட்சத்திரத்திற்குரிய மரம் எருக்கு

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- சிங்கமுகாசுர இம்ச

வழிபட வேண்டிய சித்தர்கள் கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் கோட்புலி நாயனார், கலிய நாயனார்

$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15055687
All
15055687
Your IP: 172.69.63.101
2020-01-23 15:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg