gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

திதிகள் (16)

புதன்கிழமை, 06 June 2018 12:51

பௌர்ணமி திதி!

Written by

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

&&&&&

 

பௌர்ணமி திதி!

திதிக்குரிய விநாயகர்- நித்ய கணபதி, தர்ப்பைப் புல்லை நனைத்த நீரை அருந்தவும். பூர்ணிமா எனப்படும் இது சந்திரனின் நாள். அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்தவன் சந்திரன். உண்ணாமல் நோன்பு செல்வ வளம் கிட்டும். வானியல் ரீதியாக சில நட்சத்திரங்கள் சந்திரனோடு சேர்ந்து சில கதிர் வீச்சுகளை பூமியை நோக்கி வீசுகின்றன. பௌர்ணமி தினத்தன்று அந்த கதிர் வீச்சுகள் அதிகமாக இருக்கும். சித்திரையில் வரும் பௌர்ணமி-சித்ராபௌர்ணமி மிகவும் கீர்த்தி பெற்றது. ஏனெனில் அன்று சந்திரன் தனது 64 கிரணங்களையும் முழுமையாக வீசிப் பிரகாசிபார். வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப் பூசம் ஆகிய நாட்களும் மிகச் சிறப்பானவை.

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம். உத்திரம் 2.3,4-ம் பாதங்கள் கன்னிராசிக்குரியது. கன்னி ராசிக்கு அதிபதி புதன் சூரியனோடு சேர்ந்து மீனராசியில் இருக்கும்போது புதனுக்கு உரிய கன்னி ராசியில் உத்திர நட்சத்திரத்தில் சந்திரன் அமைந்திருக்கும் நாளே பங்குனிமாத பௌர்ணமி தினம். சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பௌர்ணமி நாளன்று புதனும் சேர்ந்து கொள்வதால் பங்குனி உத்திர நாளுக்கு பல சிறப்புகள் உண்டாகின்றது.

சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத்தை துவக்கியபின் தைமாதத்தில் அவரது பலம் அதிகரிக்கும். குருவின் நட்சத்திரமான பூசத்தில் சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும்போது குரு, சந்திரன், சூரியன் ஆகியவரின் பார்வைகள்- கதிர்வீச்சுகள் முழுமையாக மக்களுக்கு கிடக்கும். அதுவே தைப்பூச நன்னாள்.

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:49

சதுர்தசி திதி!

Written by

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

&&&&&

 

சதுர்தசி திதி!

திதிக்குரிய விநாயகர்- விஜய கணபதி, பார்லி உணவு- ருத்திரருக்குரிய நாள். பங்குனிமாத சதுர்தசியன்று திரிபுரார்களைக் கொல்வதற்கு முன் சிவனும் கடலைக் குடிப்பதற்குமுன் அகத்தியரும் அவிக்ன விரதத்தை கணேசர்மீது பூஜைகள் செய்து ஆரம்பித்து விக்னமின்றி வெற்றி பெற்றனர்.

மாசி மாத தேய்பிறைச் சதுர்தசி- மகாசிவராத்திரி. மாதந்தோறும் தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி. அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- யோக சிவராத்திரி.

கிருத யுகத்தில் வைகாசி மாத சுக்லபட்ச சதுர்த்தசி நாளில் சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷவேளையில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்துள்ளது

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:47

திரயோதசி திதி!

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

&&&&&

 

திரயோதசி திதி!

திதிக்குரிய விநாயகர்-- மகா கணபதி பிரம்மன் தரும தேவதையை சாந்தப்படுத்திய நாள். கோமயம் அருந்தவும்

ஆனிமாதம் திரியோதசி நாள் ஆரம்பித்து தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் சாவித்ரி விரதம்- காரடையான் நோன்பு கடைபிடித்தால் சர்வ நலனும் வளமும் தரக்கூடியது, பிரம்ம லோகம் அடைவர். விரதத்தின் போது 14 வகை பழங்கள் நைவேத்தியம் செய்து தானம் செய்யவேண்டும்

அன்னை உமை ஈசனைப் பிரிய நேர்ந்த போது பெருமானை அடைய வேண்டும் என விரதம் கடைபிடித்த மூன்றாவது நாள் சிவன் தோன்றி அழகிகளில் அழகி என்ற பொருளில் காமாட்சி என்றழைத்து ஏற்றுக் கொண்டார். தேவருலகப் பெண்கள் தங்களின் கணவர்களின் கண்களுக்கு தாங்கள் எப்போதும் அழகிகளாக இருக்கவும் அவர்களுக்கு எந்த உடல் நலக்குறைவும் ஏற்படக்கூடாது என்று அன்னையிடம் வேண்ட உமை இந்த காரமடையான் நோன்பை கடைபிடித்தால் சகல பாக்கியங்களும் கிட்டும் என்றருளினார்.

சாவித்ரி விரத பலன்:பாராசர முனிவர் ஆலோசனைப்படி மாத்ர நாட்டு மன்னன் அசுவபதி சாவித்ரி விரதம் செய்ய அவன்முன் தோன்றிய சாவித்ரி மன்னன் மனைவி மாலதிக்கு தன் அம்சமாக ஒர் மகளாக ஜனிக்க அருள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சாவித்ரி மணப் பருவத்தில் துயிமதிதேசன் மகன் சத்யவானின் குணவிசேஷங்களைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்காமலேயே காதல் கொண்டாள். அவன் அற்ப ஆயுள் உள்ளவன் என நாரதர் சொல்லியும் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சத்யவானின் பெற்றோர்கள் பார்வை இழந்து நாட்டையும் இழந்து காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்திருக்க அவர்களுடன் சாவித்ரியும் வாழ்ந்திருந்தாள். தேவகன்னியருக்கு அன்னை உமா உபதேசித்த காமாட்சி விரதத்தை நாரதர் சொல்லியபடி தொடர்ந்து மூன்று பகல் மூன்று இரவு உறங்காமல் இறைவனை வழிபட்டு ஒருமுறை மட்டும் உணவு உண்டு கடினமான விரத முறைகளை மேற்கொண்டாள்.

காட்டில் தனக்கு கிடைத்த அறுகம்புல், அரச இலைகள் ஆகியவற்றைப் பூவாகவும், காட்டில் விளைந்த கார் அரிசியையும் அவரையும் கொண்டு செய்த அடையையே நெய்வேத்தியமாக வைத்து நோன்பிருந்தாள். இதனை மக்கள் மங்கள கௌரி விரதம் என்பர்.

நான்காம் நாள் காட்டிற்கு விறகு வெட்டச் சென்றபோது சத்தியவான் மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தான். சாவித்ரிதேவியின் உண்மையான பக்தையான சாவித்திரிக்கு யமன் சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டுச் செல்வது தெரிந்தது. அம்பாளின் அருளினால் யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியிடம் நான் எடுத்துச் செல்லும் உயிரைத் தவிர யாரும் என்னுடன் வரக்கூடாது என யமன் சொல்லியும் ஏதேதோ பேசிக் கொண்டே சாவித்ரியும் உடன் சென்றாள். சாவித்ரியின் வேண்டுகோளைக் கேட்ட யமன் சத்யவானின் உயிரைத் தவிர வேறு 3 வரங்கள் கொடுப்பதாகக் கூற, என்னுடைய தாய் தந்தையர் நாட்டை ஆள ஒர் மகனும், மாமனார் மாமியார் இழந்த பார்வையை மீண்டும் பெற்று ராஜ்யத்தை ஆள வேண்டும் எனச் சொல்லி மூன்றாவதாக எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்றாள்.

மூன்று வரங்களையும் சிறிதும் யோசியாமல் அளித்த யமன் இன்னும் ஏன் என் பின்னால் வருகின்றாய் எனக் கேட்க, தர்ம சீலரே, வாக்குத் தவறாத உத்தமரே நீங்கள் வாக்களித்தபடி கற்புடைய மகளிரின் உத்தம குணப்படி என் கணவருடன் வாழ்ந்தால் தானே எனக்கு குழந்தை பிறக்கும். ஆனால் என் கணவரின் உயிரை நீங்கள் கவர்ந்து செல்கின்றீர்களே என்றாள். அப்போது தான் தான் யோசியாமல் வாக்களித்து விட்டது புரிந்த யமன் வாக்குத் தவறாமல் இருக்க சத்தியவானின் உயிரை திரும்பி அளித்தான்.

மாசிக் கயிறு பாசி படியும் என்பர். திருமணமான பெண்கள் மாசி மாதத்தில் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டால் அவர்களது கணவனின் ஆயுள் பாசிபடியும் வரை பலகாலம் நீடிக்கும் என்பது வழக்கமானது.

பெண்கள் சாவித்திரி விரதம் கடைபிடித்து காமாட்சி அம்மன் அருளால் தீர்க்க சுமங்கலிகளாக சகல சௌபாக்யங்களுடன் வாழ வாழ்த்தும் குருஸ்ரீ.

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:45

துவாதசி திதி!

Written by

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

&&&&&

 

துவாதசி திதி!

திதிக்குரிய விநாயகர்- லக்ஷ்மி கணபதி, லட்சுமி விஷ்ணுவின் பத்தினியான நாள். கீரை ஆகாரம் சாப்பிடவும்.

ஏகாதசி, துவாதசி இரண்டும் சிறப்பான நாட்கள். ஏகாதசி நாள் விரதம் இருந்து துவாதசியன்று அகத்தி, நெல்லி சேர்த்த உணவு உண்பது சிறப்பு. இது துவாதசி பாரணை எனப்படும். விஷ்ணு நெல்லி மரமாக உருவெடுத்தபோது அவருடன் எப்போதும் வாசம் செய்யும் லட்சுமி அந்தமரத்தில் நெல்லிக்கனியாக இருந்ததால் ஏகதாசி விரதம் இருந்த மறுநாள் துவாதசியன்று நெல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். ஏகாதசி மரணம் துவாதசி தகனம் என்பது பழமொழி. வாயுவின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீநாராயணன் விஷ்ணு வாக ஆன நாள்-

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:43

ஏகாதசி திதி!

Written by

ஓம்நமசிவய!

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!


&&&&&

 

ஏகாதசி திதி!

திதிக்குரிய விநாயகர்- ஹேரம்ப கணபதி. பால் ஆகாரம் சாப்பிடவும்- நிதிபதியான குபேரனை பிரம்மா தோற்றுவித்த நாள். பழம் மட்டும் உண்டு குபேர பூஜை. வைகுண்ட ஏகாதசி விசேடமானது- விஷ்ணுவிற்குரியது.

ஏகாதசி-மார்கழி-வளர்பிறை-வைகுண்டஏகாதசி பலன்- ஜாங்காசுரன் என்ற முரன் பெண்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் இழைத்து வந்தான். அவனது துன்பங்கள் தொடரவே மாகாவிஷ்னுவிடம் முறையிட அவருக்கும் அசுரன் முரனுக்கும் 1000 ஆண்டுகள் வரை போர் நீடித்தது. ஒருநாள் களைப்படைந்தது போல் நடித்த திருமால் அருகில் இருந்த பத்ரிகாசிரமத்தில் ஓய்வெடுப்பது போல் பாசாங்கு செய்தார். அவர் உறங்குவதாக நினைத்த முரன் வாளால் வெட்டவர விஷ்ணுவின் உடலிலிருந்த சக்தி வெளிப்பட்டு தன் பார்வையாலேயே அசுரனை எரித்தது. அன்று தனுர்மாத சுக்லபட்ச ஏகாதசியில் நீ என்னுள்ளிருந்து அவதரித்ததால் இந்த திதி உனக்குரியதாகும். உன்பெயர் இனி ஏகாதசி என்பதாகும் என்றார். தூக்கமின்றி விழிப்புடன் பெருமாளைக் காத்ததுபோல் கண்விழித்து பெருமாள் நாமத்தை ஏகாதசியன்று உச்சரித்து விரதம் இருப்போர்க்கு வைகுண்ட முழுபலன்.

சொர்க்கவாசல்- திரேத யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததும் வைகுண்டத்தின் வயில் காப்போர்களான ஜெயனும் விஜயனும் வைகுண்ட வாயிலை மூடி கலியுகம் பிறந்துவிட்டதால் பொய் புரட்டு வஞ்சம் ஆகியன நிறைந்து உயிர்கள் ஏதும் வைகுண்டத்திற்கு வராது என்பதால் கதவை மூடிவிட்டோம் என்றனர். கலியுகத்தில் நம்மாழ்வார் போன்ற ஞானிகளும் அவரைப் பின்பற்றி பக்தர்களும் வருவார்கள் அவர்களுக்குகாக கதவை திறந்து வையுங்கள் என்றார் விஷ்ணு. வைகுண்ட ஏகாதசியன்று உங்களது அர்ச்சாவதார மேனியுடன் சொர்க்கவாசல் புகுந்து வருபவர்களுக்கு வைகுண்டத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். இதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என ஜெய, விஜயர்கள் வேண்ட அவர்கள் விருப்பபடி வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதால் ஏகாதசி விரதமிருந்து சொர்க்கவாசல் வழி சொல்வோர் வைகுண்ட பாக்கியம் பெறுவர்.

ருக்மாங்கதன் என்ற அரசன் தன் நாட்டு மக்கள் இக, பர வாழ்வு இரண்டிலும் நிம்மதிகாண வேண்டும் என்று ஆவல்கொண்டு அதற்கு வழி வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது என்று முடிவுகொண்டு தன் நாட்டு மக்கள் மாதா மாதம் ஏகாதசி விரதமும், வைகுண்ட ஏகாதசி விரதமும் கண்டிப்பாய் அனுஷ்டிக்க வேண்டும் என்று சட்டம் போட்டான். அதனால் மக்கள் அனைவரும் விரதமிருந்ததால் பூமியில் மக்கள் அனைவரும் வைகுண்டம் சென்றனர். முன் ஜன்ம கர்ம வினைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அவரவர் தலை யெழுத்தை எழுதுகின்றேன். ஆனால் இங்கு அனைவரும் விரதமிருந்து அந்த வினைகளைக் களைந்து விடுகின்றனர். ஒருவர்கூட நரகத்திற்கு செல்லவில்லையாததால் பூமியின் சமநிலை இவ்வாறு பாதிப்பது நல்லதல்ல என்று பிரம்மன் விஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணு ருக்மாங்கதனிடம் உன் எண்ணம் நன்மையானதுதான். ஆனால் யாருக்கு சொர்க்கம் செல்ல வேண்டும் என்றிருக்கின்றதோ அவர்கள் மட்டும் விரதங்களை அனுஷ்டிக்குமாறு நீ சட்டத்தை மாற்று என்றார். மக்கள் அவரவர் விருப்ப்ப்படி விரதமிருந்து சொர்க்கம் சென்றதால் பூமியில் சமநிலை ஏற்பட்டது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஏகாதசி விரதங்கள் கடைபிடிப்போருக்கு வெற்றி, செல்வம், ஆரோக்கியம், நிம்மதி கிடைத்து பாவ வினைகள் அழிந்து வைகுண்டப் பதவி கிட்டும்.

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:41

தசமி திதி!

Written by

ஓம்நமசிவய!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

&&&&&


தசமி திதி!

திதிக்குரிய விநாயகர்- க்ஷிப்ர கணபதி. பால் ஆகாரம் சாப்பிடவும்- பிரம்மாவல் தோற்றுவிக்கபட்ட பத்து தேவியர்களை தயிர் மட்டும் உண்டு பூஜை செய்வது சிறப்பு. பத்து தேவியர்களும் பத்து திசைகளை குறிப்பது ஆகும். அவர்களுக்கு 1. பூர்வா-இந்திரன், 2. பச்சிமா-வருணன், 3. உத்திரம்-குபேரன், 4. தக்ஷிணம்-யமன், 5. ஊர்த்தும்-சுவாயம்பு, 6.அத்வம்- சேஷநாகம், 7. ஆக்னேயம்-அக்னி, 8. நைருதி-நிருதி, 9. ஈசானம்- சங்கரன், 10. வாயவ்யம்- வாயு என பத்து தேவர்களை பிரம்மா மணம் செய்து வைத்தார்.

சுக்லபட்ச பிரதமையில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி. அசுரர்களை வதம் செய்வதற்காக பகல் நேரத்தில் அவர்களுடன் போரிடும் அம்பிகை ஒய்வெடுக்கும் இரவு நேரத்தில் அம்பிகையை உற்சாகமூட்டும் விதமாகத் துதித்து போற்றிடும் தினங்களே நவராத்திரி. நவம் –புதுமையான, ராத்ரம்- மங்களம். வாழ்வில் பழைய வினைகளைப் போக்கி தற்போதைய செயல்களுக்கு ஏற்ப மங்களமான நன்மைகளைப் பெறுவதற்காக அம்பிகையை வழிபடும் அந்த இரவுகளே நவராத்திரி. தன்னை வணங்கிடும் பக்தர்களின் மனதில் இருந்து தாமஸ குணத்தினால் ஏற்படும் தீவினைகளை நீக்கும் நாட்கள் நவராத்திரி. நவராத்திரியில் வரும் தசமியே விஜயதசமி. மகிசாசூரனை வதம் செய்த இந்நாள் விஜயதசமி. இந்நாளில் தொடங்கும் எல்லா நல்ல காரியங்களும் வெற்றியுடன் முடியும்.

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:39

நவமி திதி!

Written by

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

&&&&&


நவமி திதி!

திதிக்குரிய விநாயகர்- விக்ன கணபதி, அக்னியில் சமைக்காத உணவு- விருத்திரன் என்ற அசுரன் கடல் நுரையால் இந்திரனால் கொல்லப்பட்டான். மறுபிறவில் முற்பிறப்பில் நடந்ததைபற்றி அறிந்ததும் விருத்திரன் இந்திரனைக் கொல்லத் துடித்தான். வேட்ரவதி ஆறு பெண்ணாக வடிவெடுக்க அவளை மணந்த விருத்திரனுக்கு வெட்ராசுரன் பிறந்தான். தேவர்களுக்கு பரம விரோதியான இவன் மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படாதவன். பிரம்மா காயத்திரி ஜபத்தை கங்கை கரையில் செய்து கொண்டிருந்தபோது தேவர்கள் அங்குவந்து முறையிட்டனர். அப்போது காயத்திரிதேவி தோன்றி வெட்ராசூரனுடன் பல ஆண்டு போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்த நாள்.

பொதுவாக நவமி திதி ஆகாது எனச் சொல்லுவர். நல்ல காரியத்திலிருந்து விலக்கிவிடுவர். இதனால் வருந்திய திதியின் தேவதை பிரம்மனிடம் சென்று முறையிட. உலகம் போற்றும் அவதாரம் உன் திதியில்தான் நடைபெற இருக்கின்றது என ஆறுதல் கூறினார். ஸ்ரீ ராமர் பிறந்த நாள். இராமவதாரம் நவமியில் நடந்து ஸ்ரீராமநவமி எனப் புகழ்பெற்றது. பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதி- புனர்பூச நடசத்திரத்தில் பிறந்தார் ராமர்- ஸ்ரீராமநவமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பு. ஐப்பசி நவமி விஷேச பலன்.

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:36

அஷ்டமி திதி!

Written by

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!


&&&&&

 

அஷ்டமி திதி!

திதிக்குரிய விநாயகர்- உச்சிஷ்ட கணபதி, பருப்பு பொடிப்போன்ற சாதம்-- அந்தகன் அசுரன் அழிவிற்கு காரணமான எட்டு மாதர்கள் தோன்றிய நாள். அவர்களுக்காக அம்பாள் அந்தகனுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற நாள். அஷ்ட மாதர்களை பூஜிப்பது விசேஷம்.

பொதுவாக அஷ்டமி, திதி ஆகாது எனச் சொல்லுவர். நல்ல காரியத்திலிருந்து விலக்கிவிடுவர். இதனால் வருந்திய திதியின் தேவதை பிரம்மனிடம் சென்று முறையிட உலகம் போற்றும் அவதாரம் உன் திதியில்தான் நடைபெற இருக்கின்றன என அவர் ஆறுதல் கூறினார். அதன்படி கிருஷ்ணாவதாரம் அஷ்டமியில் நடக்க அது கோகுலாஷ்டமி என சிறப்புற்றது. ஆவணிமாதம் பௌர்ணமியை அடுத்து வரும் அஞ்டமி தினம் கிருஷ்ணர் பிறந்தநாள் கிருஷ்ணஜெயந்தி/ கோகுலாஷ்டமி நாளாகும். ஆகாதது என்றில்லை எதுவும் இப்பூமியில்

உமை விளையாட்டாக சிவபெருமானின் மூன்று கண்களையும் பொத்தியதால், உலகம் இருண்டது. அது ஒரு கணம் என்றாலும் உலகிற்கு ஒரு ஊழிக்காலமானது. அந்த காலத்தில் ஓர் அசுரன் உருவானான். இருளில் பிறந்து கரிய நிறம் உடையவனாக இருந்ததால் அவனுக்கு அந்தகன் என்று அழைக்கப்பட்டான். சிவனிடம் தான் பெற்ற வரங்களினால் அகந்தை கொண்டு அமரர்களைத் துன்புறத்த அவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவகணங்களுக்கு ஆணையிட்டு அந்தகனை அழிக்கச் சொன்னார். சிவகணங்களால் அந்தகனை அழிக்க முடியவில்லை ஆதலால் பெருமானே போர் தொடுத்தார். தரையில் வீழ்ந்த அந்தகன் குருதியிலிருந்து ஆயிரக்கணக்கான அந்தகர்கள் தோன்றி யுத்தம் புரிந்தனர். அவ்வாறு தோன்றியவர்களைத் தம் சக்ரப்படையால் திருமால் கொன்றார்.

அந்தகன் உடம்பிலிருந்து விழும் குருதியினை தடுத்து நிறுத்த பெருமான் யோகேசுவரியை உண்டாக்க அவருள் சப்தமாதர் (பிராமி, மகேசுவரி, வைணவி, வராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி) என்ற ஏழு சக்திகளும் உறைந்து அந்தகனின் இரத்தம் பூமியில் விழாமல் அழித்தது. சூல நுனியால் குத்தப்பட்டு துன்பமுற்ற அந்தகன் தன் பிழை பொறுக்க வேண்டியதால் அவனுக்கு சிவஞானத்தை அளித்து சிவகணத்தின் தலைவனாக்கினார்.

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:31

சப்தமி திதி!

Written by

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!


&&&&&

 

சப்தமி திதி!

திதிக்குரிய விநாயகர்--சித்தி கணபதி, சூரியனுக்குகந்த நளான இன்று பாயாச நெய்வேத்தியம். வில்வ ஆகாரம் செய்யவும். கார்த்திகை சுக்ல சப்தமியில் விரதத்தை துவங்கலாம். நான்கு மாதம் அனுஷ்டிக்க வேண்டும். மாசி சப்தமி- விசேஷ பலன்களைத் தரும். வளார்பிறை சப்தமியிலோ அல்லது சங்கராந்தி கிரகணம் முடிந்த பிறகோ விரதத்தை தொடங்கி அக்னியை சூரிய ஜோதியாக பாவித்து ஹோமம் செய்யவும். 12 மாதங்களில் 12 ஆதித்தியர்களைப் பூஜை செய்தால் வருடம் முழுவதும் சூரியனைப் பூஜித்த பலன், சூரியனுக்கு பூஜை- ரதசப்தமி- மாசிமாத சுக்ல பக்ஷ பஞ்சமியன்று ஒரு பொழுது விரதமிருந்து மறுநாள் சஷ்டியன்று இரவு ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, அடுத்த நாள் சப்தமியன்று பாரணை செய்து சூரிய நாராயணருக்கு பூஜை செய்து எளியோர்க்கு உணவு அளித்திடல் வேண்டும்.

சப்தமிவிரத பலன்- தட்சனின் பெண்களில் திதி, அதிதி என்ற இருவரை காஸ்யபருக்கு மணம் செய்து கொடுத்தார். திருமணம் நடந்து முடிந்தபின் ஒரு பெரிய முட்டை- அண்டம் உண்டானது. பல நாட்கள் ஆனபின்னும் எந்த உயிரும் தோன்றவில்லை. முட்டை கெட்டுவிட்டது என அதிதி காஸ்யபரிடம் சொல்ல முட்டை-அண்டம் இறக்கவில்லை மிருதா என்றார் காஸ்யபர். அவரின் வாக்கு சத்ய வாக்கு. முட்டையை உடைத்துக் கொண்டு உயிர் ஜனித்தது. மிருத்தா, அண்டம் என்ற இரு வார்த்தைகளை அடக்கி மார்த்தாண்டன் எனப் பெயர் வைத்தார். இந்த மார்த்தாண்டனே சூரியன், பரிதி, பகலவன், கதிரவன், ஒளிக்கடவுள். அந்த நாளே சப்தமி.

தேவ சிற்பி விஸ்வகர்மாவின் மகள் சம்க்ஞா சூரியனின் மனைவியானாள். யமன், யமுனை, சாவர்ணிமனு என 3 குழந்தைகள் பிறந்தன. சூரியனின் வெப்பத்தை தாங்கமுடியாமல் சம்க்ஞா தன் கண்களை மூட அதை அவமதிப்பாக கருதிய சூரியன் உலகில் பிறப்பவர்கள் இறப்பதற்கு காரணமான ஒருவனை பெறுவாய் எனச் சாபம் தந்தான். யமன் பிறந்து. காலதேவனானான். இதனால் பயந்த சம்க்ஞா தன் கண்களை மூடிக் கொள்ளாமல் மூடி மூடித் திறந்ததனால் ஒரிடத்தில் நில்லாமல் ஓடும் நதியான யமுனையை பெற்றாள் சூரியனின் அன்பு பேரொளியாக இருந்ததால் தொடர்ந்து மெல்லியான சம்க்ஞாவில் தாங்க முடியவில்லை. தான் கருகி விடுவோம் எனப் பயந்த சம்க்ஞா தன்னைபோல தன் நிழலில் சாயா என்ற பெண்ணைத் தோற்றுவித்து தன் தந்தையிடம் சென்று விட்டாள். இந்த ரகசியத்தை சூரியன் கண்டு பிடிக்கும் வரை யாரிடமும் சொல்ல மாட்டேன் என சாயா உறுதி அளித்தாள்

சாயாவை தன் மனைவியாக நினைத்து சூரியன் பழக அவளுக்கு க்ருதச்ரவா-சனி க்ருதசர்மா-சாவர்ணுமனு, தபதி, விஷ்டி என்று 4 குழந்தைகள் பிறந்தன. சாயாவுக்கு தனக்கென குழந்தைகள் பிறந்ததும் அவளின் செயல்களில் மாற்றம் கொண்டாள். இரு பெண் குழந்தைகளுக்கும் சண்டைவர இருவரும் ஒருவரை ஒருவர் நதியாகப் போக சாபமிட்டனர். தன் மகள் தபதி நதியாக மாற சாபமிட்ட யமுனையை பழிதீர்க்க எண்ணி அண்ணன் யமனை துன்புறுத்த அவன் அவளை உதைக்க காலைத்தூக்க தூக்கிய காலை தரையில் வைத்ததும் புழுக்களும் கிருமிகளும் உன் காலை கபளீகரம் செய்யும் என சாபமிட்டாள் சாயா. தன் தாயாக இருப்பவரின் மாற்றத்தைக் கூறி தான் தாயை உதைக்க காலைத் தூக்கியதற்காக வருத்தப்பட்டு, தாய் தன்னை சபித்ததை தந்தையிடம் கூரினார். யமனே. தாயிட்ட சாபத்தை மாற்றமுடியாது என்றாலும் உன் கால்களை கிருமிகளும் புழுக்களும் கபளீகாரம் செய்து அழுகாமல் இருக்க வரம் தந்தார் சூரியன்.

பின்னர் உண்மையைச் சொல் என மனைவியிடம் கேட்க அவள் உன்மையை மறைவின்றி கூறிவிட்டாள். தன் மாமனார் தேவ சிற்பி விஸ்வகர்மாவிடம் சென்று தன் மனைவி தன் வெப்பம் தாங்காமல் தன்னை விட்டுப் பிரிந்தது அறிந்து அது பற்றி ஆலோசனை நடத்தினார். சூரியனுடன் தன் மகள் வாழ வேண்டும் என்பதற்காக விஸ்வகர்மா சூரியமண்டலத்தை தன் சாணைச் சக்கரத்தில் வைத்து தேய்த்து சூரியனின் தேஜஸில் எட்டில் ஒரு பங்கை குறைத்து சில மாற்றங்களை செய்து. அவரின் வெப்பத்தைக் குறைத்தார். அப்படிக் குறைத்த சூரிய மண்டலத்திலிருந்து விஷ்ணுவிற்கு சக்கரத்தையும், சிவனுக்கு சூலத்தையும், சுப்ரமணியருக்கு வேலையும் குபேரனுக்கு சிபிகை ஆயுதத்தையும் செய்து கொடுத்தார்.

தந்தை வீட்டில் தொடர்ந்து இருக்க தந்தை சந்தேகப்படுவதை அறிந்த சம்க்ஞா வீட்டை விட்டு வெளியேறி குதிரை உருக்கொண்டு வனத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள் என்பதை அறிந்து தானும் குதிரை வடிவு கொண்டு அங்கு சென்று அவளை சந்தித்தான். மனைவியை சமாதானப் படுத்தினார். அப்போது அவர்களுக்குப் பிறந்தவர்களே அஸ்வினி குமாரர்கள் எனப்படும் தேவருலக மருத்துவர்கள். இவர்களே மகாபாரத பஞ்ச பாண்டவர்களில் நகுல சகாதேவர்களின் தந்தையர் ஆவார்கள்.

சூரியன் தன் மனைவி சம்க்ஞாவை சந்தித்ததும் மீண்டும் குடும்பம் நடத்த தொடங்கியதும் இந்த சப்தமி திதியன்றுதான்.

சத்ராஜித் என்பவன் சூரிய பகவானை பூஜை செய்ய ஸ்யமந்தக மணி சூரிய பிரசாதமாகக் கிடைத்தது. சத்ராஜித்தின் தம்பி அந்த மணியை அணிந்து காட்டிற்குச் சென்றான். காட்டில் அவன் சிங்கத்தால் கொல்லப்பட அந்தச் சிங்கம் ஒரு கரடியினால் கொல்லப்பட ஸ்யமந்தக மணி கரடி வசமானது. பகை காரணமாக தன்தம்பியைக் கொன்று மணியை கிருஷ்ணன் திருடி விட்டார் என சத்ராஜித் புகார் சொல்ல அந்த அபவாதத்திலிருந்து தப்பிக்க கிருஷ்ணன் காட்டிற்குச் சென்று அந்த மணியைத் தேட ஆரம்பித்தார். கரடி குகையைக் கண்டு அங்கு சென்று கரடியைக் கொல்லும்போது அது ராமா என அலற அந்தக் கரடி சாதாரணக் கரடியல்ல .தன் ராமா அவதாரத்தின்போது உதவி செய்த ஜாம்பவான் எனப் புரிந்து கொண்டார். கரடியும் கிருஷ்ணரின் ஸ்பரிசத்தால் புரிந்து கொண்டு ஸ்யமந்தக மணியைக் கொடுத்து தன் மகள் ஜாம்பவியை கிருஷ்ணருக்கு மணம் முடித்து கொடுத்தார். நாடு திரும்பிய கிருஷ்ணர் ஸ்யமந்தக மணியை சத்ராஜிடம் கொடுக்க அவர் அம்மணியை கிருஷ்ணரிடம் கொடுத்து தன் மகள் சத்ய பாமாவை திருமணம் செய்வித்தான். கிருஷ்ணன் ஜாம்பவதிக்குப் பிறந்தவன் சாம்பன்.

சாம்பன் தன் தந்தையை நோக்கி, எந்த தெய்வத்தை வணங்கினால் நினைத்த பலன்கள் கிடைக்கும், உலகில் உள்ள ஐஸ்வர்யங்களை எப்வாறு துக்கமின்றி பெறலாம், வரக்கூடிய இடர்களை எவ்வறு தவிர்க்கலாம், நோயால் அவதிப்படுவதைக் கண்டால் வாழ்க்கையே வேண்டாம் எனத்தோன்றுகின்றது இகத்தில் பொன்னும் பரத்தில் முக்தியும் பெற வழி என்ன! என்று பல கேள்விகளைக் கேட்க, கிருஷ்ணர் தெய்வத்தை ஆராதனை செய்வதே கஷ்டங்களை குறைத்து பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்றார், தெய்வங்களை மனதால் மட்டுமே உணர முடியும்.

பிரத்யட்ச தெய்வம் எல்லோருக்கும் கண்கண்ட தெய்வம் சூரிய நாராயணன். இந்த உலகம் நேரில் பார்க்கும் பெரிய தெய்வம் அவர். அவர் உதயமானால் உலகம் விழித்திருக்கும். அவர் மறைந்தால் உலகம் அஸ்தமித்து இருளில் மூழ்கும். சத்ய, த்ரேதா, த்வாபர, கலி என்ற நான்கு யுகங்களும் இவரின் கணக்கு. கிரகங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், ராசி, ஆதித்யன், ருதுக்கள், வசு, வாயு, அக்னி, அசுவினி குமாரர்கள், இந்திரன், பிரஜாபதி, திசைகள் எல்லாம் அவரால்தான் இயக்கம் பெறுகின்றது. அந்தச் சூரியனுக்குகந்த நாள் சப்தமி.

12 ஆதித்தியர்கள். மாசிசப்தமி-வருணன், பங்குனி-சூரியன், சித்திரை-விசாகன், வைகாசி-தாதா, ஆனி-இந்திரன், ஆஷாட-ஆடி-ரவி, ஆவணி-நபு, புரட்டாசி-யமன், ஐப்பசி-பர்ஜயன், கார்த்திகை-த்விஷ்டா, மார்கழி-மித்ரன், தை-விஷ்ணு.

சூரிய ரதத்திற்கு ஒரே சக்கரம்- காலச்சக்கரம்
மூன்று நாபிகள்
நடுப்பகுதி- குடம்
மூன்று மேகலைகள்- காலை, நடுப்பகல், பிற்பகல்
வெளிவட்டம் 6 சுற்றுக் கட்டைகள்-6 ருதுக்கள்- வசந்தருது-பழுப்பு நிறம், க்ரீஷ்மருது-பொன்நிறம், வர்ஷருது-வெள்ளைநிறம், சரத்ருது-கருமை நிறம், ஹேமந்த ருது-தாமிரவர்ணம், சிசிர ருது-சிவப்புநிறம்- இந்த நிறங்கள் மழை பொழிவின் விளைவைக் காட்டும்.
வருணன் தேரோட்டி
ஏழு குதிரைகள்- காயத்ரி, பிருஹதி உஷ்னிக், ஜகதி, திருஷ்டிப், அனுஷ்டுப், பங்கதி என்ற எழு சத்தங்கள்

தேவர்கள் தங்களது தேஜஸை சூரியனிடமிருந்து பெறுகின்றனர். உதயத்தில் இந்திரன் பூஜை செய்ய, மதியத்தில் யமன் பூஜை செய்ய, அஸ்தமனத்தில் வருணன் பூஜை செய்ய, இரவில் சந்திரன் பூஜை செய்கின்றார்கள்.

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். சுக்ல பட்சத்தில் சந்திரனின் கிரணங்கள் விருத்தியடைவதற்கும் கிருஷ்ணபட்சத்தில் சந்திரன் கிரணங்கள் தேய்வடைவதற்கும் காரணம் சூரியனின் சக்தி ஆதாரம். சந்திரன் மூலம் சிருஷ்டி தழைத்து பெருகுவதால்தான் மூலிகைச் செடிகளும் மருந்துவ செடிகளும் வளர்கின்றது. தாணியங்கள், உணவுப் பொருட்கள், காய் கறிகள் கிடைக்கின்றன.

கிரியா யோகத்தின் மூலம் சூரியனின் அருளைப் பெறலாம். மனதில் சூரியனை நினைத்து, பஜனைசெய்து, பாடல்பாடி, பாராயணம் செய்து, ஆன்மாவிற்குள் சூரியன் இருப்பதாக நினைத்து நமஸ்காரம் செய்து, அன்று என்ன செய்தாலும் அது சூரியனுக்கு செய்வதாக நினைத்துச் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சூரியனைக் காண்பதே கிரியா யோகம்.

ஆதித்ய ஹ்ருதய விரதம்- சங்கராந்தி ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று அந்த விரதத்தை துவங்க வேண்டும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படித்து சூர்ய பூஜை செய்க. அஸ்தமந்ததிற்குப்பின் வேத வல்லுனருக்கு உணவு அளித்து உபசரிக்க. வெள்ளரிக்காய் கலந்த அன்னம் உண்டு தரையில் படுக்க. 108 நாட்கள் தொடர்ந்து செய்க. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம்.

போரில் மனம் தளர்ந்த இராமனிடம் அகத்தியர் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை சொல்லச் சொல்லி அவரின் கஷ்டங்களை தீர்க்க உதவினார்.

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 12:26

சஷ்டி திதி!

Written by

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

&&&&&

 

சஷ்டி திதி!

திதிக்குரிய விநாயகர்- துவிஜ கணபதி. முருகனுக்குந்த இந்நாளில். பழம் மட்டும் உண்டு பூஜை. காய்கறிகள் சாப்பிடவும். முருகன் தேவரின் சேனாபதி ஆன நாள். புரட்டாசி சஷ்டி விசேஷ பலன் தரும். சஷ்டியில் உபவாசம் இருந்தால் கருப்பையில் கரு உண்டாகும்- ஐப்பசி வளார்பிறை சஷ்டியில் ஷண்முகனை நினைந்து விரதம்- சந்தான பாக்யம் கிடைக்கும். சர்வமங்களம் சேரும். சஷ்டி விரதம் என்பது ஐப்பசி மாதம் அமாவசையிலிருந்து தொடங்கி வளர்பிறை ஆறாவது நாள் சஷ்டி அன்று நிறைவு. சஷ்டி தேவி- தேவர்கள் அசுரர்கள் போரில் முருகன் தேவர்களின் படைத் தளபதியாகப் பொருப்பேற்று களத்தில் செய்த வீரத்தின் அழகைக் கண்ட மகாவிஷ்ணுவின் கண்ணில் ஆனந்தக்கண்ணீர் நிலத்தில் சிந்த அது ஒரு பெண் வடிவமானது. மக்களுக்கு ஆனந்தத்தையும் நலத்தையும் அருள வல்லவள் என மகாலட்சுமி ஆசீர்வதித்தாள். அமாவாசைக்கு அடுத்த ஆறாம் நாள் தோன்றியதாள் சஷ்டி எனப் பெயர் சூட்டினர். ஐராவதம் அப்பெண் குழந்தையை தேவேந்திரனிடம் கொடுக்க இந்திரனும் இந்திராணியும் சஷ்டி தேவியை தங்கள் மகளாகப் பாவித்து வளர்த்தனர். சஷ்டி தேவி வீரத்துடன் தேவர்கள் படையிலிருந்து போர் புரிந்தாள். தேவர்கள் சேனையில் இணைந்து போரிட்டதால் தேவசேனா எனப்பட்டாள். இந்திரன் தேவசேனாவை முருகனுக்கு மணம் செய்துவித்தான். இந்நிகழ்வே சூர சம்ஹார நிழ்வின் இறுதியில் தெய்வானையின் திருக்கல்யண வைபவம் நடைபெறுகின்றது. பெண்களுக்கும் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்களது குழைந்தைக்கும் பாதுகாப்பு அளிப்பவள்

$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27039871
All
27039871
Your IP: 3.21.248.119
2024-04-19 10:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg