gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

பீடங்கள் (52)

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:45

சக்திபீடம்-51-ஷ/க்ஷம்

Written by

சக்திபீடம்-51-ஷ/க்ஷம்

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-51

அட்சரம் ஷ/க்ஷம்(முப்பத்தி ஐந்தாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் பிருந்தாவன்.
அட்சரதேவிகள் ஷ்மாதேவி/ மாயாமாலினீதேவி
அங்கம் கேசம்
பைரவர்/இறைவன் பூதேசமகாதேவ்
அங்கதேவி/ இறைவி உமா
பீடங்கள் சாயச்சத்ராயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் தலை உச்சிவரை
ஊர் பிருந்தாவன்
அருகில் யமுனைக்கரையில், மதுரா-10,தில்லி-126
மாகாணம்/நாடு உத்திரபிரதேசம்

இது சத்ரபுரம் பீடம் எனும் மகாசக்தி பீடம்.சித்தி அளிக்கும் தலம். பூதேச மகாதேவ் ஆலயத்தில் 50 படிகளில் கீழிறங்கி அங்குள்ள பாதாள அறையில் அம்மன் குடியிருப்பு. உமாதேவியாயிருந்து காத்யாயினி என்று அழைக்கப் படுகின்றாள்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவந்த நிறமேனி- ஐந்து முகங்கள்- சதுர் புஜங்கள்- வலது கரங்களில்- சூலம், அபய முத்திரை, இடது கரங்களில்- கட்கம், வர முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
க்ஷம் மாயா மாலிநீ தேவீ பஞ்சாந நவரஸ் திதா
பஞ்சாஸ்யா பாடலா தத்தே கட்க சூல வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:39

சக்திபீடம்-50-ள/ளம்

Written by

சக்திபீடம்-50-ள/ளம்
ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-50 

அட்சரம் ள/ளம்(முப்பத்து நான்காவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் சாயாபுரம் ஈங்கோய்மலை
அட்சரதேவிகள் பந்தமோகினிதேவி/ பந்தமோசனீதேவி
அங்கம் முகஜோதி
பைரவர்/இறைவன் சிவபபைரவர்/ வண்டுறைநாதர்
அங்கதேவி/ இறைவி லலிதாம்பிகை
பீடங்கள் ஓட்யாணாயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் இன உறுப்புவரை
ஊர் ஈங்கோய்மலை
அருகில் குளித்தலைஅருகில், திருச்சி-42, நாமக்கல்-41
மாகாணம்/நாடு தமிழ்நாடு

இது சாயாபுரம் பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்குள்ள மரகத லிங்கத்திற்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது அந்தஜோதி நிலைக் கண்ணாடியில் பிரதிபலிப்பதுபோல் பிரதிபலிக்கும். ஸ்ரீ லலிதாம்பிகையின் பீஜாக்ஷரம் தோன்றிய சாயாபுரம். மூல ஸ்தானத்தில் அம்மன் உருவத்திற்குப் பதிலாக பார்த்திவ மேரு பிரதிஷ்டை. வண்ண மலர்களால் பூஜை.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

பொன்னிற மேனி- பொன்னிற ஆடை- ஆறு கரங்களுடன் வலது கரங்களில்- அபய முத்திரை, அங்குசம், கத்தி, இடது கரங்களில்- சூலம், கேடயம், வர முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ளோ பந்த மோசிநீ தேவீ ஸ்வர்ணாபா கஜ ஸம் ஸ்திதா
ஷட் புஜாங்குச சூலாஸி கேட் தா நாபயாந் விதா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:35

சக்திபீடம்-49-ஹ/ஹம்

Written by

சக்திபீடம்-49-ஹ/ஹம்

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-49 

அட்சரம் ஹ/ஹம்(முப்பத்திமூன்றாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் த்ரிஸ்தானம்
அட்சரதேவிகள் ஹம்ஸவதிதேவி/ ஆத்யாயனீ
அங்கம் ரத்தநாளங்கள்
பைரவர்/இறைவன் யோகீசர்
அங்கதேவி/ இறைவி காளிகா
பீடங்கள் மகாலக்ஷ்மிபுராயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் இடது கால் நுனிவிரல்வரை
ஊர் நலஹாடி
அருகில் கொல்கத்த-228 கி.மீ. போல்பூர் வழி செல்லலாம்.
மாகாணம்/நாடு மே.வங்காளம்

இது த்ரிஸ்தானம் பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு திருக்கோசரம் ஸித்திக்கும். தேவியின் நாளங்களைக் காட்டும் சின்னமஸ்தா உருவம். இங்கு காளி பிண்டி என்ற உருண்டை வடிவில் காட்சி. திரிஸ்தானம் நல்ஹாடி என மாறியது. நல்ஹாடி ர.நி.-1 கி,மீ தூரத்தில் நல்ஹடேஸ்வரி ஆலயம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவந்த நிறமேனி- சிவப்பு வண்ண ஆடை- சதுர் புஜங்கள்- வலது கரங்களில் சின்முத்திரை, அபய முத்திரை, இடது கரங்களில்- தாமரை மலர், வர முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ஆத்யாயிநீ ஹகா ராக்யா மத்த மாதங்க வஹாநா
பாட லாபா கரைர் தத்தே சிதம் புஜ வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:29

சக்திபீடம்-48-ஸ/ஸம்

Written by

சக்திபீடம்-48-ஸ/ஸம்

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-48 

அட்சரம் ஸ/ஸம்(முப்பத்திரண்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)

தோன்றிய இடம் பஞ்சாப் மாநிலம்-விஸ்வாமுகி
அட்சரதேவிகள் சரஸ்வதிதேவி/ சித்தக்ரியாதேவி
அங்கம் இடதுஸ்தனம் 
பைரவர்/இறைவன் பீஷணர்
அங்கதேவி/ இறைவி திரிபுரமாலினி
பீடங்கள் ஹிரண்யபுராயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் வலது கால் நுனிவிரல்வரை
ஊர் ஜலந்தர்/ஜாலந்தர்
அருகில் கூர்ஜரம்
மாகாணம்/நாடு பஞ்சாப்

இது ஸ்ரீமகாலட்சுமிபுரம் பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு சர்வ சித்தி அடையலாம். இந்த ஆலயத்தை தேவி தலாப்- தேவி குளம் என அழைக்கின்றார்கள். பெரிய ஏரியாக இருந்தது சுருங்கி தற்போது குளம் ஆனது.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

இளஞ் சிவப்பு நிறமேனியில் சிவப்பு நிற ஆடை அணிந்து வலது கரங்களில் சின்முத்திரை, அபய முத்திரை, இடது கரங்களில்- தாமரை மலர், வர முத்திரயுடன் வெண் தாமரை மலரில் அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
ஸித்த க்ரியா ஸகா ராக்யா ஸிதாம் புஜ நிவாஸிநீ
பாடலாபா கரைர் தத்தே சிதம்புஜ வரபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:25

சக்திபீடம்-47-ஷ/ஷம்

Written by

சக்திபீடம்-47-ஷ/ஷம்

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-47 

அட்சரம் ஷ/ஷம்(முப்பத்தோராவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஹிரண்யபுரம்/ விராபம்/ ஜூவாலேஷ்வரம்/ மாகேஷ்வரம்
அட்சரதேவிகள் ஷண்டாதேவி/ அனுக்ரியாதேவி
அங்கம் இடதுகை பெருவிரல்
பைரவர்/இறைவன் அம்ருதாஷர்
அங்கதேவி/ இறைவி அம்பிகா
பீடங்கள் வாமனாயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் இடது கை நுனிவிரல்வரை
ஊர் மகேஷ்வர்
அருகில் விராட்,ஜெய்ப்பூரருகில்
மாகாணம்/நாடு ராஜஸ்தான்

இது ஹிரண்யபுரம் பீடம் எனும் மகாசக்தி பீடம். வாம மார்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவந்த நிறமேனி- மஞ்சள் நிற ஆடை- நான்கு கரங்களில் இரு தாமரை மலர்கள் மற்றும் வர- அபய முத்திரைகளுடன் ராஜஹம்ஸ வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ரக் தாபா நுக்ரியா தேவீ ராஜ ஹம்ஸ வரஸ் திதா
பீதாம்பரா கரைர் தத்தே பத்ம த்வய வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:14

சக்திபீடம்-46-ச/ஷம்

Written by

சக்திபீடம்-46-ச/ஷம்

ஓம்நமசிவய!

பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-46 

அட்சரம் ச/ஷம்(முப்பதாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஷிப்ரா நதிக் கரையில்- வாமனகிரி
அட்சரதேவிகள் ஸ்ரீதேவி/ மங்களகௌரிதேவி
அங்கம் மேலுதடு
பைரவர்/இறைவன் லம்பகர்ணர்/மகாகாளேஸ்வர்-4/12
அங்கதேவி/ இறைவி அவந்திதேவி/ சங்கரி
பீடங்கள் மகேந்தராயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் வலது கை நுனிவிரல்வரை
ஊர் மகாகாளம், உஜ்ஜயினி
அருகில் அவந்திகா/உஜ்ஜெயினி
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்

இது வாமனகிரி/ பைரவகிரி பீடம் எனும் மகாசக்தி பீடம். ஷிப்ரா நதிக் கரையில் உள்ள சிறிய குன்று. இங்கு செய்யப்படும் ஜபங்கள் பூர்ண சித்தி பெறும்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

ஒளிரும் பொன் நிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருகரங்களில் தாமரை மலர்கள், மற்ற இரு கைகளில் வர- அபய முத்திரையுடன் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
சாக்யா மங்கள கௌரீ து தப் தஜாம் பூநத ப்ரபா
ஸஹஸ்ர பத்ம பீடஸ்தா திவ்யாபரண பூஷிதா
சதுர் புஜா கரைர் தத்தே பத்ம த்வாய வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:10

சக்திபீடம்-45-வ/வம்

Written by

சக்திபீடம்-45-வ/வம்

ஓம்நமசிவய!

திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-45 

அட்சரம் வ/வம்(இருபத்தொன்பாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஒரிஸ்ஸாவின் மகேந்திரகிரி
அட்சரதேவிகள் வரதாதேவி/ நாராயணிதேவி
அங்கம் மூளை
பைரவர்/இறைவன் பைரவர்
அங்கதேவி/ இறைவி கபாலிபுவனேஸ்வரி
பீடங்கள் கிரிவராயை நம
51-ல் நம் உடலில் இடது தோள்பட்டை
ஊர் மகேந்திரகிரி
அருகில் மந்தஸா ரயில் நிலையமருகில்
மாகாணம்/நாடு ஒரிஸ்ஸா

இது கிரிவர அல்லது மகேந்திர பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு சக்தி மந்திரங்கள் ஸித்தி அடையும். இங்குள்ள பழங்குடி மக்கள் அன்னையை ஸ்தம்பேஸ்வரி, கம்பேஸ்வரி என வழிபட்டுள்ளனர்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

செந்நிற ஆடை—நான்கு கரங்களில் இரண்டில் தாமரை மலரும், மற்றவற்றில் வர- அபய முத்திரைகளுடன் பதமாசனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்-1:
வாக்யா நாராயணீ தேவீ ஸ்படிகாபாருணாம் சுகா
ஸ்புட பத்மா ஸநா த்த்தே பத் மத் வய வராபயாந்:
தியானஸ்லோகம்- 2:
உத்ய தினத் யுதி மிந்து கிரீடாம் துங்க குசாம் நயன த்ரய யுக்தாம்
ஸ்மேர முகீம் வரதாங்குச பாசா பீதி கராம் ப்ரபஜே புவனே சீம்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:06

சக்திபீடம்-44-ல/லம்

Written by

சக்திபீடம்-44-ல/லம்

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-44 

அட்சரம் ல/லம்(இருபத்தெட்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஜ்வாலாமுகி
அட்சரதேவிகள் லம்போஷ்டிதேவி/ மோஹினிதேவி
அங்கம் நாக்கு
பைரவர்/இறைவன் உன்மத்தர்
அங்கதேவி/ இறைவி தூமாவதி,ஜ்வாலாமுகி
பீடங்கள் மேரவே நம
51-ல் நம் உடலில் பிடாரி
ஊர் ஜ்வாலாமுகி
அருகில் காங்ராஅருகில்,தர்மசாலா-
மாகாணம்/நாடு இமாசல்பிரதேசம்

இது கிரி பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு ஜபித்தால் வாக்கு சக்தி ஏற்படும். தீச்சுடரே தேவியாக பாவிக்கப் பட்டு வழிபடப் படுகின்றாள். காலம் காலமாக பறையிலிருந்து தானாகவே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீச்சுடர். யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட யாகப் புகையே சக்தியாக மாறி தூமாவதியானது.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

பொன் நிறமேனி-ஆறு கரங்கள்- வலது கரங்களில் அபய முத்திரை, கத்தி, அங்குசம், இட்து கரங்களில்- சூலம், கேடயம், வர முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
வாத் மிகா மோஹிநீ தேவீ ஸ்வர்ணாபா கஜ ஸிம்ஹகா
ஷட் புஜாங்குச சூலாஸி கேட தாநா பயாந் விதா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:02

சக்திபீடம்-43-ர/ரம்

Written by

சக்திபீடம்-43-ர/ரம்

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-43 

அட்சரம் ர/ரம்(இருபத்தேழாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் புனித கயிலாய மலை
அட்சரதேவிகள் ரக்தாதேவி/ ரேஜுஷ்வலா/ ரேசிகாதேவி
அங்கம் நிணம்-தேகக்கொழுப்பு
பைரவர்/இறைவன் பைரவர்
அங்கதேவி/ இறைவி அர்த்தநாரீ
பீடங்கள் ஸ்ரீசைலாயை நம
51-ல் நம் உடலில் வலது தோள்பட்டை
ஊர் கயிலை
அருகில் மேற்கு திபெத்தின் அருகில்
மாகாணம்/நாடு திபெத்(வாஸவ லோகம்)

இது மேரு பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள் பலிக்கும். வடதுருவத்தை மகா மேரு என்பர். நம் கண்களுக்கு மேருவாக கட்சி தருவது கயிலைமலை.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

பச்சைநிற மேனி—சிவந்த நிற ஆடை- ஐந்து முகங்கள்- எட்டுக் கரங்கள்- வலது கரங்களில்- அபய முத்திரை, அங்குசம், சூலம், பாசம், இடது கரங்களில்- கட்கம், கேடயம், கதை, வர முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ரம் ரூபா ரேசிகா ச்யாமா ஸிம்ஹஸ்தா லோஹி தாம் சுகா
பஞ்சாஸ் யாஷ்ட கரைர் தத்தே தக்ஷ வாம க்ரமேண ஸா
கட்க கேடாங்குச கதா பாசம் சூல வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 15:58

சக்திபீடம்-42-ய/யம்

Written by

சக்திபீடம்-42-ய/யம்

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-42 

அட்சரம் ய/யம்(இருபத்தாறாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஸ்ரீசைலம்
அட்சரதேவிகள் யஷஸ்வினிதேவி/ தீபினோதேவி
அங்கம் பித்தம்
பைரவர்/இறைவன் ஸ்ம்பரானந்தர்/ மல்லிகார்ச்சுனர்-2/12
அங்கதேவி/ இறைவி மகாலட்சுமி/ பிரம்பராம்பிகை/ பிரமரம்பாள்
பீடங்கள் மலயாயை நம
51-ல் நம் உடலில் இதயம்
ஊர் ஸ்ரீசைலம்
அருகில் கர்னூல் அருகில்
மாகாணம்/நாடு ஆந்திரா

இது மலயா பீடம் எனும் மகாசக்தி பீடம். மாதவி பீடம் என்றும் அழைப்பர். வைஷ்ணவ மந்திரங்கள் உள்பட எல்லா மந்திரங்களும் சித்தியளிக்கும். சிவன் கோவிலை ஒட்டி மேற்புறம் அம்மன் சன்னதி-மகாலட்சுமி/ ப்ரமராம்பிகை அருள்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

எட்டு கரங்கள்- வலது கரங்களில் அம்பு, பாசம், சூலம் அபய முத்திரை, இடது கரங்களில்- வில், கேடயம், கத்தி, வர முத்திரையுடன் சிம்ம வகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
யாக் யேயம் தீபிநீ தேவீ ஸிம்ஹஸ் தாஷ்டபுஜா ஸிதா
சூல சாபேஷூ பாசாஸி கேடதா நாபயாந் விதா:

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27033695
All
27033695
Your IP: 3.149.233.72
2024-04-18 13:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg