gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

எட்டாம் தந்திரம் (33)

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:04

கேவல சகல சுத்தம்!

Written by

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

#####

கேவல சகல சுத்தம்!

2227. தன் உண்மையை அறிந்த தூயன், தான் ஒன்றையும் அறியாமல் கிடக்கும் கேவலன். இவர்களின் வேறான பலவகைப் பட்ட பரிப்பாகம் உள்ள சகலன் ஆகியோர்கள் முறையே சத்தையும் அசத்தையும் சதசத்தையும் உடனாகத் தத்தம் அறிவுக்கும் திறனுக்கும் ஏற்பப் பொருந்தி நிற்பர்.

2228. த்னக்கு பகைவனும் நண்பனும் தானே ஆவான். அங்ஙனம் தனக்கு உரிய மறுமைப் பயனும் இம்மைப் பயனும் தன்னாலே ஆகும். தான் செய்த புண்னியப் பாவச் செய்ல்களின் பயனை அனுபவிப்பவனும் தானே ஆவான். தனக்கு தலைவனும் தானே ஆவான்.

2229. கேவல நிலையில் கிடக்கும் உயிர் சுத்தமாயையில் பொருந்தி பின் பக்குவமாகின்ற உயிர் மாயையின் தொடர்பால் விளக்கம் பெற அறிவு உற்று முந்தைய வினைகளும் அவற்றை அடைவதற்குரியவைகளும் பெற்றுத் தாம் அடைந்த பாசத்தால் சகல நிலையை அடையும்.

2230. சகல நிலையில் கருவிகளுடனே வந்தவர் சகலர் ஆவார். அவர்கள் ஆகமங்களால் சொல்லப் பெறும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று வகையான மலங்களும் பொருந்தியவர்கள். நிகர் இல்லாத நான்முகன் திருமால் முதலாகவுள்ள தேவர்கள் இந்த உலகில் வாழும் மக்கள் புழு ஈறாகச் சகலர் ஆவர்.

2231. தூவா மாயையில் தங்கியிருக்கும் பிரளயகலர் பொருந்திய அந்த அசுதத மாயையே உடலாய் மற்ற மாயேயங்களை விட்ட தன்மையுடையவர். அவர்கள் சிவபெருமானைப் போன்ற சீகண்டரும் நூற்றெட்டு உருத்திரரும் ஆவார்கள்

2232. விஞ்ஞான கலர் கேவல நிலையின் ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர். அங்ஙனம் விளங்கும் அனந்தர் முதலிய வித்தியேசுரர் எண்மரும் சப்தகோடி மகா மந்திரர்களும் மந்திரேசர் பலரும் விஞ்ஞான கலர் ஆவர்.

2233. விஞ்ஞானகலரில் மிக்க பக்குவத்தைப் பெற்றுச் சிவத்தின் அருளுக்குப் பாத்திரமானவர் வலிமை ஒடுங்கிப் போகும் ஆணவ காரியமான விந்து நாதங்களைக் க்டந்து பிரணவ வடிவான சிவத்தில் இலயமாவர். அங்ஙனமாதலால் மலக் குற்றம் அற்ற சுத்த நிலையை எய்துவர்.

2234. ஆன்மாக்கள் மூன்று வகையாகவும் நான்கு வகையாகவும் உள்ளன. ஆராயும் போது இவை மாயையுடன் பொருந்தி விருப்பத்தைச் சார்கின்ற தன்மையால் ஆனவை என்றாலும் பக்குவம் அடைந்தபோது இச்சை முதலியவை எல்லாம் தாமே நீங்குபவை. அந்நிலையில் இறைவன் அருளைக் கூட்டி மலத்தை நீக்கி அருளினான்..

2235 .நிலை இல்லாத மண் முதல் நாதம் இருதியாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின் அறிவையும் விட்டு நீங்கி அவற்றுள் பற்றுச் சிறிதும் இல்லாது நீங்கவே எய்தப்பெறும் பொருளான சிவமே தானாகி நித்தியமாய் சரம் அசரம் என எங்குமாய்ப் பரவெளியுள்ளும் கலந்து சென்று அடையாமல் தானே வந்து அடையும் நிலை சுத்தாவத்தை ஆகும்.

2236. தொன்று தொட்டே பசு தத்துவத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஆன்மாவை அனாதியாயுள்ள ஐந்து மலங்களில் வருத்தும்படி செய்து அனாதியில் இருந்த கேவல நிலையினின்றும் நீக்கிச் சகல நிலையில் பொருந்தச் செய்து தொன்று தொட்டு பற்றிவரும் பிறவி நீங்க அந்த ஆன்மா தூயநிலையைப் பொருந்தியவன் ஆவான்.

2237. ஞானம் பற்றிப் பரவெளியைச் சென்று அடைந்தவர் தம் சுத்த கேவல நிலையில் கடந்த தற்பர சிவத்திடம் சுத்த துரிய்த்தே நம் அறிவு பொருந்த ஆன்மாவான தன்னிடம் சிவமாகிய பொருளை அறியும் உண்மையானவன்.

2238. நிலம் முதல் புருடன் ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கும். ஆன்மாவும் தூய நிலை அடைந்து தன் உண்மையை உணர்ந்து வீட்டை அடையும். சிவ தத்துவத்தில் உள்ள சுத்த வித்தை ம்கேசுரம் சதாக்கியம் என்னும் மூன்றும் பழமையான சத்தியிலும் ஐயனான சிவத்திலும் ஒடுங்கும். படைப்பு முறையில் சிவனிடமிருந்து சத்தியும் பிறவும் அங்ஙனமே தோன்றும்.

2239. தூய நிலையில் ஆன்ம தத்துவம் 24, புருடன் 1, வித்தியாதத்துவம் 6, ஆக 31 தத்துவங்களும் ஆன்மாவில் அடங்கும். உண்மையில் கண்டத்தில் விளங்கும் தூய வித்தையும் புருவ நடுவில் விளங்கும் மகேசுவரமும் தலைவரை விளங்கும். சதாசிவமும் ஆகிய மூன்றும் உண்மையான யோகத்தில் சுழுமுனைக்கு மேல் விளங்கும் சத்தி சிவ பகமாய்க் காணும்படி இருபத்தெட்டுத் தத்துவங்களும் அடங்கும்

2240. ஆணவ மலம் ஒன்று மட்டும் உடையவராய் மாயை கன்மங்களை அறியாதவர் விஞ்ஞான கலர் ஆவார். ஆணவத்துடன் மாயை உடையவர் பிரளயகலர். காணும் வடிவம் உடையவராய் உள் நோக்கம் இல்லாமல் வெளி நோக்கம் உடையவராய் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றும் பொருந்தியவர் சகலர்.

2241. விஞ்ஞான கலரிடை இருக்கும் குற்றம் ஆணவமலம். மாயையைப் பற்றிக் கொண்டு நிற்பது பிரளயகலரின் குற்றம். ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் பற்றிக் கொண்டிருப்பது சகலரின் மலக்குற்றம்.

2242. ஞான வடிவு நிலையில் கிளர்ச்சியுடைய விஞ்ஞானகலர் ஞனவடிவம் கிளர்ந்து எழும் நிலையில் விந்து சத்தியால் அங்குக் கேவலநிலையில் எல்லாச் சகல நிலையையும் பிரணவடிவ சத்தியை அறிந்து நிற்றல் உண்மையே ஆகும்.

2243. துவா மாயையில் பொருந்தியுள்ள பிரளயகலர் அம்மாயையும் அவரை வந்து தளைப்படுத்தாத வகையில் இருக்க ஆணவத்தோடு கூடிய நிலையில் விருப்பத்தை ஏற்படுத்தும் தூமாயை பொருந்த நிலைபேறுடைய நுற்றெட்டு ருத்திரர் ஆவார்.

2244. ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களுடன் கூடி அவற்றில் மயங்கி நிற்பவர் உண்மையான சகல ஆன்மாக்கள் ஆவர். அவர்கள் தேவர் அசுரர் மனிதர் மெய்ம்மை இல்லாத நான்முகன் விரிந்து மிதந்து கிடக்கும் புழு ஈறாக அம்முறையில் பிறவிக் குழியில் சிக்கிக் கட்டுப்படும் சகலர் ஆவர்.

2245. தூய நிலையில் பொருந்திய ச்கல இன ஆன்மாக்கள் மும்மலங்களில் நித்தமாகிய ஆணவமும் அநித்தமாகிய மாயை கனிமங்களும் நீங்க இவற்றில் தனித்தனியாய் நிலைபெற்ற ஆசையும் மயக்கம் உடைய இருளும் சிவக்கதிரவன் ஒளியால் தொடர்ந்து நீங்கிடத் தூயர் ஆவார்கள்.

2246. ஆன்மா பிரமம் ஆன சிவத்தின் ஞான வடிவாய் பொருந்துவதில் தனித்துள்ள வீடுபேற்றை அடையும். பிறப்ட்ட சகல நிலையில் கலை முதலிய தத்துவங்கள் பிரிவது அமையும். பிரணவத்தில் நின்று ஞானவடிவ தரிசனம் செய்வது தூய நிலையில் நின்மல சாக்கிரம் ஆகும். இம்முறையில் பிரமத்திடம் பொருந்துவது தன்னைத் தூய்மை செய்து கொள்வதாகும்.

2247. கேவல் நிலையில் உள்ள ஆன்மா அறிவில்லாமலும் உடம்பு இல்லாதவனாகவும் அராகாதி குணங்களுடன் பொருந்தாதன்வாகவும், கொள்கை ஒன்றும் இல்லாதவனாகவும் என்றும் உள்ளவனாகவும் கலை முதலிய அசுத்த மாயையைக் கூடாதவனாயும் தத்துவங்களுடன் பொருந்தி செயல் செய்யாதவனாகவும் இன்பம் அனுபவிக்க அறியாதவனாகவும் இருந்தும் இல்லாதவன் ஆகவும் ஆணவ மலத்தால் கூடப் பெற்றவனாகவும் உள்ளான்.

2248. ஒளி மண்டலமும் அதை மறைக்கும் மாயையும் அதை வெளிப்படுத்தும் கிரியையும் அதனால் விளையும் ஞானமும் உடலில் உள்ள சத்திக்கேற்ப அமையும் விந்து மண்டல ஒளியில் உண்மை ஞானத்தைப் பொருந்த்தும் பிரளயகலர் உலகில் பிறவிக்கு வந்த தூய ஆன்மாக்கள் ஆவர்.

2249. கேவலம் முதலிய நிலைகளின் வேறுபாட்டைச் சொன்னால், கேவலகேவலம், கேவலசகலம், கேவலதூய்மை என மூன்றும் கிளர்ச்சியுடைய ச்கலத்தில் சகலகேவலம், சகலசகலம், சகலதூய்மை என மூன்றும் மேலான தூய்மையில் தூயகேவலம், தூயசகலம், தூயதூய்மை என மூன்றுடன் ஆராய்பவர்க்கு நீங்காத ஒன்பது வகையாகும்.

2250. கேவலத்தில் கேவலம் கருவிகளை விட்டு உறங்குவது.போல் உள்ள நிலை. கேவலத்தில் சகலம் ஒளி மண்டலத்தில் அறிவு குன்றாதிருத்தல், கேவலத்தி;ல் தூய்மை கேடற்ற அகன்ற ஞானம் உடையவர்க்கு தன்னையும் உலகத்தையும் அறியும் நிலை. அந்நிலையில் சிவம் இவர்களுக்கு அருள் செய்வான்.

2251. சகலர்க்கு அறிவு ஆராய்ச்சியால் விழிப்பில் கருவி கரணங்கள் செயற்படாமல் உறங்குபவனைப் போல் விளங்கும். இது சகலத்தில் கேவலம் ஆகும். சகலர்க்கும் பொருந்தும் விழிப்பு நிலையே சகலத்தில் சகலம் ஆகும். விழிப்பு நிலையில் ஞானேந்திரியங்கள் பிரணவ ஒலியில் இலயமடையும். இது சகலத்தில் தூய்மை ஆகும். இவ்வாறு சகலத்தில் மூன்று இயல்பு பொருந்தும்.

2252. துய்மையில் தூய்மையவது ப்ழமையாய் உள்ள அனைத்துக் குற்றங்களையும் நீக்கும் மலம் ஆகும். தூய்மையில் கேவலமானது கரணங்களை விட்டு மலங்களைப் போக்குவிப்பதற்கு இறைவனது வியாபகத்தில் அலையில்லாத நீர்போல அடங்கி யிருத்தல். சுத்தத்தில் சகலம் தன்னையும் தலைவனையும் அறிந்து அவன் அருளில் நிற்றல் இவ்வாறு தூய்மை நிலையில் இம்மூன்று நிலைகள் உள்ளன.

2253. விழிப்பு சாக்கிரத்திலே புருவ நடுவில் சிவ தத்துவம் ஐந்தும் தொழிற்படும் நனவில் உண்டாகும் கனவில் பின் மூலையில் மகேசுரம் சதாக்கியம் சத்தி சிவம் என்னும் நான்கும் தொழிற்படும். விழிப்பு உறக்கத்தில் தலையின்மீது சதாக்கியம் சத்தி சிவம் என்னும் மூன்றும் தொழிற்படும். விழிப்பு பேர் உறக்கத்தில் நிராதாரத்தில் சத்தியும் சிவமும் என்ற இரண்டும் தொழிற்படும். விழிப்பு உயிர்படங்கலில் துவ்த சாந்த வெளியை அடைந்தபோது சிவம் ஒன்று மட்டுமே தொழிற்படும். இவ்வாறு மறைகளுக்கு ஆதியான சிவம் ஐம்மலம் பாசங்களினின்?றும் ஆன்மாக்களைப் பிரித்து ஆக்கம் தருவான்.

2254. ஆன்மா சாக்கிரததில் சிவத்துடன் பொருந்துகின்றது. அதனால் ஆன்மாவில் ஆணவ மலக்குற்றம் நீங்கும். சக்கிராதீதம் நாதாந்தமாகையால் நாத தத்துவம் தங்காமல் போகும். பரோபதியானால் உபாசாந்தமான நிறைவான அமைதி கிட்டும். நாததத்துவத்தைப் பற்றி நிற்கும் ஆன்மா மலங்களையும் அவற்றால் விளையும் குணங்களை நோக்காது.

2255. மலங்களில் கட்டுண்ட பெத்த நிலையும் அவற்றினின்று நீங்கிய முத்தி நிலையும் தன் இருப்பை உணரும் துரியமும் சுத்தாவத்தையில் உள்ள துரியாதீதமும் தோன்றாதபடி சிவன் சீவனை விழுங்கி விடும். என்று அவன் அருளால் உணர்ந்த பின்பு சீவனிடம் உள்கருவிகளின் செயலும் வெளிக் கருவிகளின் செயலும் இல்லாமல் போகும்.

2256. உயிர்கள் அடையும் கட்டுண்னும் நிலையும் முத்தியும் என்பவை சிவபெருமானின் அருளால் அமையும். அச் சிவபெருமானின் அருள் விளையாட்டோடு பொருந்தும் உயிர் இது சுத்த நிலைக்குச் செலுத்தும் நெறியாகும் என அடையும். இவ்வாறு அடையும் உயிர் இறைவனிடம் அறிவாய்த் திகழும்.

2257. ஆணவம் முதலிய ஐந்து மலங்களயுடைய சீவர்க்ள் தம்மைத் தாமே மதித்த சகலர் ஆவார். அன்னார் ஐந்து மலப் பாசங்களால் கட்டுண்டவராய்க் கொடிய வினைகளை துய்க்க வேண்டியவராய் விளங்குகின்றார்.. இவர்கள் வீட்டுலகை விரும்பாவல் தேவவுலகை விரும்பி அடைவர். இவர்கள் சிவத்தை அறியாதிருப்பினும் இவர்களைச் சிவம் அறிந்தே உள்ளார்.

2258. கேவல அதிதீதத்தில் ஆன்மாக்களைப் பிறவிக்குச் செலுத்த சிவசத்தி மாயையைக் கலக்கச் செய்யும். பின்பு துரிய நிலையில் அந்த ஆனமாவுக்கு விருப்பம்மானவற்றை உண்ணும் ஆசை ஏற்படும். அந்த ஆன்மாவின் விருப்புக்கேற்ப பிரமரந்திரமும் அதைச் சூழவுள்ள எட்டு நிலைகளும் சூக்குமமாய்ப் பொருந்தும். பின்பு குணம் என்ற மனோமய கோசம் இணைக்கபபட்ட போது நனவு நிலை ஏற்படும்.

2259. கேவல துரியாதீதத்தில் ஆணவ மலம் அகலாமல் நிற்கும். பின்பு துரியத்தில் மாயை பொருந்தும். கேவல சுழுத்தியில் பொய்யான கன்மங்கள் பிணிந்து நிற்கும். கேவல கனவில் மயேயங்கள் பொருந்தி. காணப்படும் நனவில் நிரோதாயி மற்றும் இங்ஙனம் ஐந்து மலங்களும் இவ்விதமாக ஆன்மாவைப் பற்றும்.

2260. அதீதத்தில் உள்ள சுத்த ஆன்மா சிவத்தை முதலாக அறிபவன் ஆகின்றான். அந்த ஆன்மாக்கள் படைப்புக்கு வரும் போது சுத்த மாயையில் தங்கிப் பிரமப் புழை விளங்கும் சுழுமுனையில் தங்கித் தவம் செய்ய வேண்டிய கருமத்தை உண்ர்ந்து எப்போதும் பராவத்தையில் பொருந்திய்வர் இவ்வுலகில் உள்ளவர்க்கு அருளைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் சகலத்தார்.

2261. மாயையில் காரியமான உடலைப் பெற்று எடுத்த உடம்புக்கு ஏற்றவாறு இன்பப் பொருள்களை அனுபவித்துப் பூதங்களைச் சார்ந்து மனம் முதலிய அந்தக் கரணங்களைப் பொருத்தி சத்தம் முதலிய தன்மாத்திரைகளீல் தங்கிக் கருவை அடைந்த சீவன் சகல அவத்தையில் தோன்றும்.

2262. ஞானம் கிரியை என்பவை ஒத்து விளங்கும் போது இன்பம் விளைக்கும் சிற்சத்தி பொருந்தி ஞானவடிவான தூய நிலை பொருத்தவே, அச்சமயம் தக்க குருவினால் உணர்த்தும்படி செய்து திருவருட் சத்தி பொருந்தி மூலம் நீங்கும். மீளவும் பிறவியை அடையாமல் இருப்பதே துரிய நிலை ஆகும்.

2263. முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக இருபத்தைந்து நிலைகளையும் அவற்றின் இறுதியான நின்மல துரியாதீதத்தை இச்சீவன் அடையச் சுத்த தத்துவத்துக்குரிய சுத்தவித்தை மகேசுவ்ரம் சதாசிவம் விந்து நாதம் என்னும் ஐந்தும் நீங்கும் ஒளியினை உடைய சீவன் பரமாகும் சிவத்திடம் உள்ளதாகும்.

2264. உடம்பில் வேறானது ஆன்மா. அத்தகைய ஆன்மா தான் ஒருவன் உளன் என்பதை அறியாமல் தன் உடம்பியே தான் என்று மயங்கி இருந்தான். நிராதரத்தில் உணர்வு சென்றபோது தான் ஒர் எளிய வடிவினன் என்பதை அறிந்தான். இந்த உடம்பைத் தாங்கி நிற்பதும் ஒளி என்று கண்டனன். அவ்வாறு உள்ள ஒளி உடல் சிவத்துடன் ஒன்றாவிடின் திரும்பவும் வந்து தன் வினைக்கீடாக அந்த ஆன்மா பிறப்பான்.

2265. நின்மல் சாக்கிராதீதம் கூடுமானல் அதைத் தோற்றுவித்த சுத்த தத்துவம் ஆனந்தத்தை ஏற்படுத்தும். எதிர் நோக்கியுள்ள பிறவி நீங்கும். பெருமையுடைய வீடுபேறு கிட்டும். அந்த அதீத நிலையில் நுண்மையான வாக்கும் மனமும் பொருந்த மாட்டா.

2266. நீரின் குளிர்ச்சியும் நெருப்பின் குணமான ஒளியும் அகண்ட வானத்துள் விளங்கும். ஆனால் அவற்றின் நெகிழ்ச்சியும் சுடும் தன்மையும் அவ்விடத்தில் இராது. விரிந்த வானத்தில் நீரும் நெருப்பும் எது என்று வினவினால் நீரின் தன்மையும் தீயின் தன்மையும் கலந்து அவ்வாறு ஆகும்.

2267. முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்தம் மிசிர மாயையோடு கூடிய வித்தயா தத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்தம் உடன் ஆன சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமாகும். இம்மூன்றையும் ஆன்மா அடையும்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்து பிரகிருதிமாயை அசுத்தமாயை சுத்தமாயை ஆன்மாவிடம் பொருந்தும்.

2268. அசுத்த மாயை செவிலித்தாயாகவும் சுத்தமாயை தாயாகவும் ஆக இவைபொருந்தும் வகையில் சிவம் தந்தையாய் அமைய ஆன்மா சகல நிலைகளைக் அடைந்து ஆராய்ந்து தெளிவு பெற்றபோது சுத்தமாயைப் பொருந்தி சுத்த மலத்தை அடையும்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:01

சுத்த நனவாதி பருவம்!

Written by

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

#####

சுத்த நனவாதி பருவம்!

2187. சுத்த சாக்கிரதம் முதலிய ஐந்து நிலைகளில் தூல தத்துவங்களே நுண்மையாத் தோன்றும். அத்தகைய இருபத்தைந்து தத்துவங்கள் விந்துவின் சத்தியாகும். தன் உயிரானது விந்து என்ற ஓளிமண்டலத்தினின்று வெளீப்பட்டு நனவில் கனவு போல் தூல தத்துவங்களைக் காணும் முறை இத்தன்மையன.

2188. நனவு நிலையில் துரியாதீதம் அடைந்தவர் குழந்தையைப் போல் கிடப்பார். நனவில் துரிய நிலை அடைந்தவர் தவழும் குழந்தைப்போல் சிறிது அறிவுள்ளவர் ஆவர். நனவில் உடலை உறங்கச் செய்பவர் வளர்ந்த பருவம் பெற்றவர் ஆவார், நனவில் கனவு நிலையில் உள்ளவர் ஒடுதல் போன்றச் செயலைச் செய்பவர் ஆவார்.

2189. நனவில் துரியாதீதம் சென்றவரிடம் கிரியை சிறந்து விளங்குவதால் சிவ தத்துவம் உணரப்படுவதாக இருக்கின்றது. அத்தகையவரிடம் பிரிவின்றிச் செறிந்திருக்கும் சுகருபமான யோகம் சிவத்தின் பொருளாலே ஆகும் அவரிடம் சிறந்த கல்வியும் நல்ல திருமேனியும் நற்குணங்களும் காணப்பெறும். அவர்களுடைய அறிவில் அண்ட கோசத்தில் அசைவனவும் அசையாதனவும் விளங்கும்.

2190. ஆதியான பரமசிவம் சிவம்சத்தி, சதாசிவம், குற்றம் இல்லதா மகேசன் சுத்தவித்தையான தத்துவமும் வித்தை கலை காலம் நியதி மாயை என்னும் தத்துவமும் முறைமையும் முடிவும் உடையனவாய் அமைந்துள்ளான் என்பதை அறிக.

2192. ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் உமியையும் தவிட்டையும் முளையையும் நிகர்க்கும். ஆன்மா சிவத்தைபோல் வியாபகம் பெறலாம். உமி முதலியவற்றால் மூடப்பட்டு உள்ளே இருக்கும் அரிசியைப்போல நிகழும். எனவே உன்னைச் சூழவுள்ள பாசத்தை நீக்கித் திருவடியைப் போற்றுவாயாக.

2193. பசுக்கள் பல நிறங்களை உடையனவாயினும் அவற்றின் பால் ஒரே நிறம் உடையன. அந்தப் பசுக்கள் பல ஆயினும் மேய்ப்பவன் ஒருவனே ஆவான். அம் மேய்பவன் மேய்ப்பதை நிறுத்தினால் பசுக்கள் அவனைச் சுற்றியே சூழ்ந்து அகலாமல் நிற்கும்..

2194. உடம்பில் உள்ள கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தி, அகங்காரம் என்ற அந்தக் கரணங்கள் அறியாமையைப் பொருந்திக் கெடும். அத்தகைய உயிரினது மயக்கம் மேலும் பெருகினால் அந்தவுயிர் நரகத்திலும் சென்று துயரம் அடையும்.

2195. துரியாதீதத்தை பொருத்திப் புருடன் கிடப்பது தன்னை அறியாத துரியாதீதம் ஆகும். கொப்பூழைப் புருடன் அடையும் போது பிரணவம் விளங்கும் அகரக் கலையைப் பொருந்தி நிற்பான். இதயத்தில் புருடன் சுழுத்தியை அடையும்போது காமிய வாசனையுடன் விளங்குவான். அவ்வாசனையே அனுபவங்களாக கனவு நனவு நிலைகளில் பொருந்தும்.

2196. சுத்த சாக்கிர நிலைகளில் கனவு இல்லை. சுத்தாவத்தை ஐந்தில் கனவில்லாச் சுழுத்தி பொருந்திய போது விந்து நாதம் உணரப்பெறும். அங்கு நன்றாக அனுபவிக்கப்படுகின்ற விந்து நாதங்களை மாயை ஆன்மாவுடன் சேர்க்கும். பின்பு நனவில் துரியமும் துரியாதீதமும் வந்து பொருந்தும்.

2197. முப்பத்தாறு தத்துவங்களில் உடல் சார்பான ஆன்ம தத்துவமும் புருடனும் ஆகிய இருபத்தைந்து தத்துவங்களும் நீங்கினால் சுத்த நனவு நிலை பொருந்தும். மேல் உள்ள வித்தியாதத்துவத்தில் உள்ள ஆறும் முன்புள்ள இருபத்தைந்தும் ஆக முப்பத்தொன்றும் நீங்கின் நனவில் கனவு உண்டாகும். இவற்றின்மேல் உள்ள வேறான சிவ தத்துவம் ஐந்தும் கழன்றபோது உறக்கம் உண்டாகும். இந்த நிலையில் எஞ்சியிருப்பது தூய மாயை ஒன்றேயாகும்.

2198. மாயையில் வந்த புருடன் நின்மலத் துரியத்தில் அந்தக் கூட்டத்தை நீத்துத் தானும் அங்கு இல்லையாகும். புருடனுக்கு அப்பால் உள்ள விந்து மண்டல ஒளியில் ஆன்மா விளங்கும். அப்படி விளங்க ஆன்மாவுக்கு இவ்வுடம்பால ஆகும் பயன் ஏதும் இலை.

2199. ஆன்மா சாக்கிரதத்தில் துரியாதீத நிலையிலே அறிவே வடிவானவனாம். அந்நிலையில் நனவில் அதீதம் புரிந்தால் சக்கிராதீத நிலையைக் கடந்து அறிவு மயமாய் உள ஆன்மா சிவச் சோதியில் கலந்து ஒளி மயமாய் விளங்குவான்.

2200. நனவில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து. கண்டத்தில் இருபத்தைந்து தத்துவங்களுடன் தொழிற்படும் நிலையைக் கனவு என்று மொழிவர். பொய்யான உடலை இடமாகக் கொண்ட புருடனோடு பிராணன் சித்தம் என்னும் மூன்றும் சுழுத்தியில் ஆகும். உடலை அறிந்து புருடனுடன் பிராணன் என்னும் இரண்டும் கொப்பூழில் பெருந்துதல் துரியம் ஆகும்.

2201. நனவில் புருடனுடன் பொருந்துவன ஐந்து தன்மத்திரைகள் மனம் புத்தி அகங்காரம் என்னும் எட்டு. கனவில் புருடனுடன் பொருந்துவன மனம் புத்தி அகங்காரம் என்னும் மூன்று. சுழுத்தியில் புருடனுடன் அகங்காரம் ஒன்று மட்டும் பொருந்திச் செயல்படும்.

2202. சாக்கிரத்தில் நனவு நிலையில் புலன் அறிவு சிறந்து விளங்கும். புலன்களுடன் தொடர்பு இல்லாமல் அவற்றின் வாதனைகளுடன் கூடியிருப்பது நனவில் கனவு நிலையாகும். அவ்வாதனைகளையும் மறந்து நிற்கும்போது நனவு உறக்கம் உண்டகும். எதையும் பற்றிய நாட்டம் இல்லாமை நனவில் பேர் உறக்கம். நனவில் அதீதத்துச் சிவானுபவம் ஒன்றே.

2203. கனவில் நனவு போல் காண்பது கனவில் நனவாகும். எல்லாவற்றையும் கண்டு அவற்றை மறப்பது கனவிலே கனவாகும். எல்லாவற்ரையும் கண்டும் காணாதிருப்பது கனவில் உறக்கம் ஆகும். கனவில் கண்டவற்றைக் கொண்டு காணாதவற்றை அனுமானத்தால் அறிவது கனவில் பேர் உறக்கம் ஆகும்.

2204. உறக்கத்தில் நனவு என்பது எதுவும் தோன்றாமல் உறங்குவது. உறக்கத்தில் கனவு என்பது ஆன்மா தன் இருப்பை மட்டும் தோன்ற விளங்குதல். உறக்கத்தில் உறக்கமாவது அறிவு அறிவால் அழிதல். உறக்கத்தில் பேர் உறக்கம் கூற இயலாத சூன்யம் ஆகும்.

2205. துரியத்தில் நனவு எனக் கூறப்படுவது நன்மையைத்தரும் சிவ உணர்வில் நிற்பது. துரியத்தில் கனவு என்பது தலைக்குமேல் சீவனை அண்டாகாயத்தில் அறிவது. துரியத்தில் சுழுத்தி என்பது தலைக்குமேல் உள்ள நிராதார வானத்தில் பொருந்துவதாகும். துரியத்தில் துரியம் என்பது எல்லாத் தத்துவங்களையும் கடந்தபோது தன்னைப் பரமாக உணர்வது.

2206. ஆன்ம அறிவு சிவ அறிவில் கூடி அறிவதை உணரும் நிலை அதிதீதத்தில் விழிப்பு நிலையாகும். அங்ஙனம் அறியும் அறிவு அறியும் இயல்பு மடங்கிச் சிந்தனை நீங்கியிருப்பது அதிதீதத்தில் கனவு ஆகும். ஆன்ம அறிவு சிவ அறிவில் அடங்கி அறிவதை விட்டு அதுவே தானாய் நிற்பது அதீதீதத்தில் சுழுத்தியாகும். தன் அறிவு வேறாக இன்றி இதைஅறிவாகவே ஆகும்போது அதிதீதத்தில் துரியம் ஆகும்.

2207. பரகாயம்போல் எங்கும் விளங்கும் நிலையை அடைந்தவன் ஐந்து மலங்களிலிருந்தும் விடுபட்டு ஞானமே தன் வடிவாய்ச் சிவத்தை விரும்பி அடைந்தவன். தான் எங்கும் நிற்கிற இயல்பையும் விட்டு மேலாய் விளங்கும் நுண்மை நிலையான பிரணவ உடலை எய்துவான்.

2208. முப்பத்தாறு தத்துவங்களுள் இருபத்தைந்து நீங்கிய போது சாக்கிரமும், ஆறு நீங்கிய போது கனவும், ஐந்து நீங்கியபோது சுழுத்தியும் முடிவை அடையும். இவையே நனவில் கனவு, கனவு உறாக்கம், ஆகும். பின்பு தூலமும் சூக்குமமும் சுத்தமயையாம். அத்துரிய நிலையில் தத்துவங்களுக்குத் தலைமை தாங்குபவனாய்தான் அவன் நிற்பான்.

2209. இந்த உண்மையை இவ்வளவு காலம் நான் அறியவில்லை. இதை உணர்ந்த பின்பு வேறு அறிவதற்கு எதுவும் இல்லை. அகண்ட வடிவான சிவமே முதல் என்றும் அஃது அறிவுக்கும் அறிவுருவாகும் என்றும் அறிந்தபின்பு இதுதான் நாம் அடையத் தக்கபேறு என்று அறிந்த இயல்பு உடையவன் ஆவேன்.

2210. சிவபெருமான் உயிருக்கு உயிராகியும் உருவமாகியும் அருவமாகியும் அயலாகியும் அயலிலிருந்து கூடும் பொருளாகவும் அறிவாகவும் எவ்விடத்தும் நிறைந்த பொருளாகவும் விரும்பும் சக்தியாகவும் நாதனாகவும் உலகம் உடம்பு கருவி என்பனவற்றை இயக்காமல் ஒழியின் அவை அனைத்தும் அஞ்ஞானத்தால் அறிவு பெறாது போகும்.

2211. இறைவன் தொன்று தொட்டே ஆன்மாக்களைப் பற்றிய மலமானது நீங்கும்படி ஆன்மாக்கள்மீது வைத்த அருளால் சத்தியுடன் பொருந்தி அவளுக்கு உயிராய் விளங்கி பாசத்தை விளைவிக்கும் ஐந்து மலக் கூட்டத்தையும் முப்பத்தாறு தத்துவ பேதங்களையும் படைத்தான். அவற்றை அனுபவிப்பதற்குரிய உள் கருவியும் புறக் கருவியும் உயிருடனே கூட்டி வைத்தனன்.

2212. சாக்கிரதீதத்தில் ஆணவமலமும் தன் உண்மை என்ற ஆன்மாவும் உள்ளன. சாக்கிராதீதத்துப் பொருந்திய ஒளியில் ஆன்மா சேர ஆஅக்கிரதீதத்தில் பொருந்திய ஆணவமலம் நீங்கப் பெற்றுத் திருவருளைப் பொருந்தி நின்றால் பரத்தின் உண்மை இவர்கலிடம் தங்கி நிலைக்கும்..

2213. ஆன்மாவுடன் மலம் கலந்திருப்பதால் சிவதத்துவம் விளங்கும் மாமாயை மறைந்துள்ளாள். மலத்தின் கலப்பால் தெளிவான ஞானம் விளங்கவில்லை. மலக் கலப்பாலே சிவனும் மறைந்திருந்தான். ஆன்மாவிடம் பொருந்திய மலக்குற்றம் அகன்றால் சுத்த வித்தை விளங்கும். மதி மண்டலம் ஒளி பெற்று விளங்கும்.

2214. நன்மை தீமை என்பனவற்றைப் பிரித்து அறிய இயலாத சிந்தையில் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று சிங்கங்கள் இருக்கின்றன. விடயங்களை மகிழ்ச்சியுடன் போய்ப் பற்றி வஞ்சகமாய் அவற்றை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும் அந்தக் கரணங்கள் என்னும் நரிக்குட்டிகள் நானகு உள்ளன. வெளிப் பொருளை அனுபவிக்கும் முறையில் வகைப் படுத்தி அனுபவிக்க முயலும் பொறிகளான யனைக் கன்று ஐந்து உள்ளன். வெளியிலும் உள்ளேயும் செலுத்துகின்ற இரு தன்மைகள் மனத்துக்கு உண்டு.

2215. பத்து வாயுக்களும் புரியட்டகமும் பொருந்திய உடம்பு வெளியுலகில் விரும்பிச் செல்லச் சிதறுண்டு எழும் உள்ளத்தை நீங்கள் அப்படி கேடு அடைந்து உடம்பு அழியும் முன் இறைவனை அடையும் உண்மை நெறியைப் பற்ரி நின்றால் மேலே கண்ட பதினெட்டும் அதிர்ச்சியை அடைய ஒப்பில்லாத ஆன்மாவின் தலைவனான சிவபெருமான் வெளிப்படுவான்.

2216. நனவில் ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என்னும் பத்தும் அவற்றின் செயல்களான பத்தும் நீங்கக் கனவில் புகுந்து அந்தக் கரணங்களுடன் முன் மூளையிலிருந்து சிந்திப்பதையும் வைத்து உள்ளம் என்னும் மனமண்டலத்தில் நிலைத்தால் நினைவு இராது. அப்போது ஆன்மா நின்மல-சுழுத்தியில்- உறக்கத்தில் பொருந்தும்.

2217. நின்மல உறக்கத்தில் பொருந்திய ஆன்மா குருவருளால் துரியாவத்தையில் பொருந்தி உலகில் நியமம் தாரணை முதலிய நிலைகளைப் பெற்றுத் துரியாதீதத்தில் துரியாதீதமான சமாதி நிலையில் கூடிச் சிலகாலம் தங்கிச் சென்று பரன் என்?ற பெயரைப் பெற்று மலநீக்கம் பெற்ற தூய ஆன்மாவாகும்.

2218. பரநிலையை அடைந்தவன் எல்லா அறிவும் பெற்று அனைத்து உலகும் ஒருசேர அனுபவித்து சதாசிவமான பெருமையுள்ள சத்தியின் திருமேனியான ஐந்தும் போய் அவற்றைக் கடந்த சிவனாய் பிரணவ உடலை அடைந்து சுயம்பிரகாச ஒளியாய் விளங்குவான்.

2219. உடலுள் உள்ள சந்திரன் ஞாயிறு, அக்கினி என்னும் மூன்று மண்டலங்களுள் மாயத்தைச் செய்கின்ற பெருமானைக் கண்டு உள்ளே எண்ணி நீங்கி மலர்ந்து விளங்கும் சகசிர்ரதளத்தைக் கடந்து மேலே போனபோது அண்டம் யாவும் தானாகவே உள்ளத்துள் விளங்கும்.

2220. ஞானெந்திரியம் எனும் பறவைகள் தங்களுக்கு ஒளிவரும் இடம் அறியாது திகைத்தன. திருவரு/ள் சத்தி இவர்தம் அறியாமையைப் நோக்கி உதவி செய்ய இயலாமல் மயங்கினள். எம் இறைவனான சிவன் இத்தகைய அறியாமையை உடையவரை மாற்றிட வகையறியாமல் உதவி செய்கின்றான். ஆயின் உண்மையை உணர்ந்தவர் தம் தலையில் அகலாமல் சிவத்தை துதித்துக் கொண்டு விளங்கினர்.

2221. சிவம் விளங்கும் நுண்மையை அறிந்து அறு ஆதாரங்களையும் மூன்று மண்டலங்களையும் செர்த்து ஒன்பது பிரிவுகளும் உடலுள் பொருந்துவதை அறிந்தேன். புவனங்கள் எல்லாவற்றுக்கும் தலைவனான பரம் பொருளை நாடி ஒன்பது மண்டலங்களையும் திருத்தி அமைத்தேன். சிவனை உள்ளத்தில் வருவிக்க அறிந்தேன். அவன் என் மனத்தையே பொருந்தி நிலையாய் நின்று விட்டான்.

2222. .உலகத்தில் உள்ள விளக்கை எண்ணெய் வார்த்துச் திரியிட்டு தூண்டுபவனின் செயலைப் போன்று மூலாதாரத்தில் உள்ள அக்கினி மண்டல ஒளி மூல சாதனையாய் ஆகும். அங்ஙனம் தூண்டப்பட்ட மூலாதாரத்தில் உள்ள அந்த ஒளி மற்றக் கதிரவன் சந்திரன் மண்டலங்கள் என்பனவற்றைக் கொண்டு பேரொளியாய் விளங்கும்.

2223. உள்நாட்டம் உடைய ஐம்பொறிகளை உடையவர்க்கு மண்டைக்கு மேலாக விளங்கும் மேல்முகமான சகசிரதளத்தில் வான் மண்டலத்தை ஆராயின் மேல் நோக்கிய அகத்தில் ஐம்பொறிகளும் கூடிய சத்தியில் அது கண்ணால் உள்ளத்தில் நாடிக் காண்கின்ர தனமை உடையது.

2224. எளிய க்ண்ணுக்குப் புலப்படாத பொருளையும் சிவன் அறிவான். சிவத்தைப் பொருத்தி அறியும் அறிவை அடையாதவன் தன் அறிவு நிரம்பியவன் ஆகமாட்டான். நிரம்பிய அறிவில்லாமல் ஐந்து அவத்தை படும் சீவனைத் தன்னோடு சேர்த்து அஃது அறியாமல் கண்காணித்து வரும் பேரறிவுடைய சிவனை அறிபவர் யார்.

2225. நின்மல சக்கிரத்தில் துரிய நிலையைப் பற்றிச் சொன்னோம். துரியாதீதம் உண்டாவது அரிதாகும். சாக்கிரம், கனவு, சுழுத்தி ஆகியவை கழியத்தக்கன. பின்பு துரியத்தில் காலபரமானது மிகப்பெரிய நிலையாகும். அரிய துரியாதீதம் மிகவும் கடந்த நிலையாகும்.

2226. அசுத்த மாயையில் அறிவுடைய ஆன்மா அதன் பகுதிகளில் நிலைகொண்டு பொருந்தும். சுத்த மயையில் ஆன்மா சிவ தத்துவத்தை அறிவதில் பொருந்தும். இவ்வுண்மையை அறியாத சகலர் கேவலாவத்தையைச் சேர்ந்து பல யோனிகளில் புகுந்து வருந்துவர். சுத்த மாயையுள் பொருந்தியுள்ளவர் நின்மலத் துரியத்தைக் கண்ட சீவனாவார்.


#####

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

#####

மத்திய சாக்கிராவத்தை!

2167. விழிப்பு நிலை விழிப்பு நிலையில் திரோதன் சத்தியால் ஆன்ம விளக்கம் அறிய இய்லாதபடி மறைக்கப்பட்டு நிற்கும். விழிப்பு நிலையில் கனவு நிலையில் ஆன்மா மாயா காரியங்களில் அழுந்தி நிற்கும். விழிப்பு நிலையில் சுழுத்தியில் உறக்கத்தில் கருவிகள் ஓய்வு அடைந்து விரும்பியதில் அதுவாக நிற்கும். விழிப்பு நிலையில் துரிய நிலையில் விரும்பிய பொருளில் அதுவாக நிற்றலை இழந்து மாயை வயப்பட்டு நிற்கும்.

2168. மாயை ஆன்மாக்களுக்குக் கலை முதலியவற்றைத் தூண்டி எழுப்பும். அதனால் இராகம் முதலியவற்றுக்கு ஏற்பச் சீவதுரியம் பொருந்தும். பின்பு சுழுத்தி கனவு நனவு ஆகிய நிலைகளைப் பொருந்திச் சகல நிலையில் உள்ள ஆன்மா ஆயினான்.

2169. பிறவியிலே குருடனும் இடைக்காலத்தில் குருட்னானவனும் என்னும் இருவரும் நடந்து செல்லும் போது முன்பு போன வழியை அறிந்து பொருந்திய தடியைச் கொண்டு வழியை அறிந்து நடப்பர். அங்ஙனமே மூன்று வகைப்பட்ட உயிர் இனங்களும் செயலில் பொருந்தும்.

2170. சிலந்திப் பூச்சு தான் கட்டிய வலையின் நடுவுள் பொருந்தியிருந்து நெருங்கி வரும் உயிர் இனங்களைப் பிடித்துத் தின்னும். அதைப் போல சிவபெருமானும் ஐம்பொறிகளும் வந்து பொருந்தும் மூளைப் பகுதியில் உடன் இருந்து சத்தம் முதலிய புலன்கள் ஐந்தையும் அனுபவிக்கின்றான்.

2171. வைக்க வேண்டியபடி இருபத்தைந்து தத்துவங்களைச் சாக்கிர நிலையில் வைத்து அவற்றையே உபாயமாகக் கொண்டு பொருந்தி எங்கும் உள்ள சிவன் பொருந்தியிருக்கின்றான். நான் அவனை பித்தன் என்றும் பெரியன் என்றும் பிறப்பில்லாதவன் என்றும் எப்போதும் விரும்பிப் போற்றி அவனது அருளைப் பெற்று உய்தி பெற்றேன்.

2172. ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்குடன் புருடன் என்ற தத்துவத்துக்கு வேறாக உள்ள இருபத்தைந்துடன் ஆன்மா, பிரமம், சொல்ல முடியாத வானம் என்பவனவற்றைச் சிறந்த தத்துவங்களாகப் பிரமவாதிகள் கண்டனர். இவ்வாறு வேறான இருபத்தெட்டும் வேதாந்ததுக்குரிய தத்துவங்கள் ஆகும்.

2173. ஆன்மா பொருத்தமாக உடலுள் இடைகலை பிங்கலை நாடிகளில் முறையாகப் பொருந்தி அங்குச் சத்துவ குணத்துடன் புகுந்து மூலாதாரம் முதலாக மூன்று முடிச்சுகளையும் கடந்து கலாதீதப் பொருளான சிவபெருமானின் திருவடிகளைக் காணலாம்.

2174. பத்து நாடிகளுள் நன்மையைத் தரும் பிராணன் முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக மேலே செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி இருக்கும். காமப் புணர்ச்சி பெறும் இன்பமும் நன்மையை நாடிய மனமும் இவ்வுட்லில் பொருந்தும்.

2175. ஆக வேண்டியவை ஆகும். போக வேண்டியவை போகும். வரவேண்டியவை வரும். ஆதலால் காக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு அனுபவத்தைத் தந்து சாட்சியாகக் கண்டிருப்பான். அதலால் இறைவன் தக்கபடி செய்யும் அருளாளன் ஆவான்.

2176. பத்துப் பொறிகளுடன் தொழில்கள் பத்தும் நான்கு அந்தக் கரணங்களும் இவை பொருந்திய சீவனும் தலையில் மோதும் பிராணனும் உண்மையான வானமும் மேல் முகத்தில் விளங்கும் பிரமமும் வேதாந்தத் தத்துவங்கள் இருபத்தெட்டு என எண்ணத் தக்கவனவாம்.

2177. விளக்கம் உடைய முப்பதுடன் பத்தாகிய முந்நூற்றைச் சேர்த்து அறுநூற்றை வன்மை ஆறை இரட்டிய முப்பதாறுடனே பெருக்குவதால் வரும் சுவாசம் 21600. மூச்சு நடந்தால் ஆணவம் முதலிய மலங்களும் வணங்கி நீங்கும் மூலவாயு மேல் எழுந்து விலங்கும்போது தத்துவஙகளும் அங்கங்கே நின்றிடும்.

2178. தத்துவங்களை வெவ்வேறாகக் கணக்கிட்டால் அவை நான்கு கோடியே நாறபத்தொண்ணாயிரத்து ஐந்நூறு என்று சிறப்பாய அடங்கும். அவற்றைப் பகுத்து தொகுத்தால் தொண்ணூற்று ஆறுள் அடங்கும். அவற்றை மேலும் சுருக்கினால் இருபத்தைந்துள் அடங்கும்.

2179. மாயையின் காரியம் ஆன தத்துவங்கள் பொதுவாகத் தொண்ணூற்று ஆறு ஆகும். அரிய சைவர் கொண்டுள்ளது முப்பத்தாறு தத்துவங்கள் வேதாந்திகளுக்கு இருபத்தெட்டு தத்துவங்கள் வைணவ சமயத்தார்க்கு இருபத்து நான்கு தத்துவம் மாயாவதிக்குரிய தத்துவம் இருபத்தைந்து.

2180. தத்துவங்களைத் தம் வசம் அடங்கி நிற்கும்படி செய்தால் மிகவும் சமர்த்தன் உடையவனாக விளக்கம் பெற்று விளங்கலாம். பிராண வெற்றி மற்றப் பொய்யான நெறி அகன்று விடும். அதை உணர்த்தும் நெறி அகார எழுத்து அறிவாகும்.

2181. முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மா பொருந்தாத போது அறிவற்றவை. அங்ஙனமிருந்தும் அவற்றை அறியும் என்னை நான் அறியாமல் இருந்தேன். என் குரு நீ அதை அறியும் ஆற்றல் வாய்ந்தவன் என்று உரைத்தான். அதனால் நான் அதை அறியும் ஆற்றல் உடையவன் என்பதை உணர்ந்தேன்.

2182. நனவில் நனவு முதலிய அவத்தையில் சிவ தத்துவம் ஐந்தும் பொருந்தும். அவற்றை மலத்தைக் கார்ணமாக உடைய இந்த நனவு முதலிய ஐந்து அவத்தைகளால் போக்கி இவற்றுடன் பொய்யான முப்பத்தாறு தத்துவங்களையும் அகற்றி ஆன்மா பிரணவநெறி நின்று சிவத்துடன் பொருந்தி நிற்கும்.

2183. நான்முகனுக்கு ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் உள்ளன. திருமாலுக்கு ஆணவம், கன்ம, மாயை திரோதாயி என்னு நான்கு மலங்கள் உள்ளன. உருத்திரனுக்கு ஆணவம் கன்மம் திரோதாயி என்ற மூன்று மலங்கள் உள்ளன. மகேசுவரனுக்கு ஆணவமும் திரோதாயும் உள்ளன. சதாசிவனுக்கு ஆணவம் ஒன்று மட்டும் உளது

#####

அத்துவாக்கள்!

2184. மெய்கள்- தத்துவங்கள் முப்பத்தாறு மந்திரங்கள் எழுவகையான முடிவைக் கொண்டன. உண்மையில் வழங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும். புவனங்கள் இருநூற்று இருபத்து நான்காகும். பதங்கள் என்பவை எண்பத்தொன்று. கலைகள் ஐந்து இவை படைப்பில் வந்தவை.

2185. திங்கள் கதிரவன் அக்கினி மும்மண்டலங்களின் நன்மையை அறிந்து மூலம் முதலாக மேலே செல்பவர் தங்களுடன் உடம்பில் உள்ள இருபத்தைந்து தத்துவங்களை அறிந்து கூடுவர். அவ்வாறு கூடிச் சகசிர தளத்தில் மேல் ஏறும் வழியை அறிந்து போய்த் தேடி அடைந்தபின் தத்துவங்களின் வழிச் செல்லாதவராய் விளங்கினர்.

2186. சாக்கிரத்தில் சாக்கிரம் முதலிய நிலைகளில் சிவ தத்துவ உணர்வை முதன்மையாகக் கொண்டு இந்தப் பருவுடலில் எல்லையான பிரமரந்தரம் வரை போய் அதன் மேல் உள்ள துரியாதீதம் ஆன துவாதசாந்தப் பெருவெளியில் கலந்து அன்பு வடிவான ஆனந்தக் கூத்தை கண்டு அந்த இன்பம் விளங்கும் சுத்த வித்தை முதலிய ஐந்தும் ஆன்மா சிவசத்தியோடு கூடிப் பொருந்தியிருக்கும்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 11:16

அவத்தை பேதம்- கீழாலவத்தை!

Written by

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!

#####

அவத்தை பேதம்- கீழாலவத்தை!

2142 இருபத்தைந்து கருவிகளுடன் சிவன் புருவ நடுவில் உள்ளபோது விழிப்பு நிலை ஆகும். பழகிய பதினான்கு கருவிகளுடன் சிவன் கழுத்தில் தங்கும்போது கனவு நிலையை அடையும். அழிவில்லாத புருடன் இதயத்தைப் பற்றியுள்ள போது உறக்கம் ஆகும். அழியாதவனான ஆன்மா உந்தியில் பொருந்தும்போது துரியம் ஆகும்.

2143. சாக்கிரத்தில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவதத்துவம் ஐந்துமாக அவற்றை அடுத்துக் கூறப்படும் கனவு நிலையில் மகேசுவரம் சாதாக்கியம் சத்தி ஐவம் என்ற இரண்டும் துரியாதீதத்தில் சிவம் ஒன்றுமாக அச்சிவம் முதலாய் தொழிற்படும். இப்படி சுத்தவித்தை முதலாகச் சிவம் ஈறாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

2144. ஞானேந்திரியம், கன்மேந்திரியம் பத்தும் அவற்றின் விடயங்களான சத்தாதி வசனமாதி பத்தும் மறை பொருளாக உள்ள் வாயுக்கள் பத்தும் அந்தக்காரணங்கள் நான்கும் இவற்றுடன் ஆன்மாவும் கூட முப்பத்தைந்தும் பந்தத்தைச் செய்கின்ற சாக்கிராவத்தையில் உள்ளனவாகும்.

2145. மண்ணின் நிறம் பசும் பொன் நிறம் நீர் வெண்ணிறம் உடையது தீ செந்நிறம் வாய்ந்தது. மேகம் போன்ற் கரிய நிறம் கொண்டது காற்று வானம் புகை நிறம் பொருந்தியது இவ்வகைப்பட்ட நிறங்களில் ஐம்பூதங்களும் மறைந்து நிற்கும்.

2146. ஐந்து பூதங்களும் ஐந்து பொறிகளும் உயிரைக் குற்றம்படச் செய்த புறக்கருவிகள் இவற்றுடன் சொல்லப்படும் மலம் காரணமாக விளையும் குணம் முதலாகக் கொண்ட சாக்கிராவத்தைக்குரிய கருவிகள் தொண்ணூற்றாறாகும்.

2147. சாக்கிரவத்துக்குரிய இடத்தைக் கூறுமிடத்து ஆன்ம தத்துவமான இருபத்தைந்து யானைகளும் வசனாதியாதியான காலாட்படையும் சத்தாதியான ஐந்து குதிரைகளும் புருடனும் ஆக முப்பத்தாறும் புருவ நடுவுள் பொருந்தும். வைகரியாதி வாக்குகளும் போய் அடைய நெடிய வாயில்க?ள் ஒன்பதாம்.

2148. பிராணவமய கோசமும் ம்னோமய கோசமும் அன்னமய கோசத்தைத் தழுவி நின்ற உடம்பில் உள்ள உயிரின் இயல்பை அறியார் உடம்புக்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பை அறியாதார் ஆவார். அவர்கள் மடத்தின் புகுந்த நாய் அலைவது போல் மயங்குவர்.

2149. அறிவிலிகள் உடலை நெடுநாள் வைத்திருக்க அறிய மட்டார்கள். ஆனால் உள்முகமும் வெளி முகமும் ஆகச் சென்று கொண்டிருக்கும் பிராண அபானனது இயக்கங்களை மாற்றி உள்மூகம் ஆக்கி விந்து வெற்றி பெற்றுச் சுழுமுனை வழியாகச் சிவனை அடையும் வழியை உணர்ந்து ஒளி வடிவாய்ப் பெற்ற உடல் என்றும் அழியாது நிலைத்திருக்கும்.

2150. கொப்பூழில் அடங்கியிருக்கும் அகரக்கலை சிறிது சிறிதாகப் பதினான்காவதான அநாசிருதையாக மாறும் உபாயத்தை என்னுள் சிவன் விளங்கி எனக்கு கூறியருளினான். அங்ஙனம் அளிக்கும் கலை ஞானத்தால் பொதுவான அறுபது தத்துவங்களையும் ஒளியில்லாமல் ஒன்றிய உள்ளத்தில் ஒளித்து வைத்தான்.

2151. மண் தத்துவமான சுவதிட்டான சக்கரத்துக்கு அருகில் நீரை முகமாகக் கொண்ட மணிப்பூரகம் உள்ளது. அந்த சுவாதிட்டானத்துக்கு அருகில் பொன் போன்ற மூலாக்கினியும் உள்ளது. இவ்விடத்துள்ள மூல வாயு மேலே போய் வானத்தைப் பொருத்தும். அப்போது மனம் புத்தி அகங்காரம் என்பனவற்றை நினைத்துக் கடந்தால் பூத வெற்றி உண்டாகும்.

2152. முதல் பூதமான வானுக்கு ஓசை என்ற ஒருமகன் அதினின்று உருக்கொண்ட காற்றுக்கு ஓசையும் ஊறுமான இரு மக்கள். காற்றினின்று வந்த தீயினுக்கு ஓசை, ஊறு, உருவம் என்ற மூன்று பிள்ளைகள். பின்பு நீர் என்ற பெண்ணுக்கு நான்கு பிள்ளைகள். கன்னியான பூமகளுக்கு ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்னும் ஐவர் மக்கள். இத்தகைய பிள்ளைகள் சிவத்துக்கும் சத்திக்கும் முதலில் இல்லை. அப்பெருமாட்டியே படைப்பைக் கருதியபோது ஐந்து பிரிவாய் பிரிந்து அவற்றின் வேறாயும் அவற்றின் ஊடேயும் நின்றாள்.

2153. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்களால் பெற்ற காட்சி ஐந்தும் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்ற கன்மேந்திரியங்கள் ஐந்தும், மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்?ற அந்தக்காரணம் நான்கும் ஒரு சேரக் கண்டபின்னர் பழைய மேலான விழிப்பு நிலையில் உலகமே தனாய் ஆன்மா நிற்கும்.

2154. அப்படி நின்றவன் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் பத்தையும் விட்டு ஒருமையுடைய அந்தக் கரணங்கள் நான்குடன் புருவ நடுவில் இந்தவுடலால் அனுபவித்த வாசனா ரூபமானவற்றை ஒளி மயமாகக் கழுத்துக்கு மேல் கனவாகக் கண்டான்.

2155. ஆன்மா முன் சொல்லப்பட்ட கண்ட தானத்தை விட்டுச் சித்தம் ஒன்றுடன் தனியே இதயத்தில் புகுந்த அகங்காரமும் தன் வலிமை குன்றிப் புத்தி தத்துவமும் கெட்டு ஒன்றையும் அறிய மாட்டாது மயக்கம் அடைந்து உலகத்தை அறியாத வியந்த நிலையில் உடல் தன்வசம் அற்ற நிலையில் கெடுதல் சுழுத்தியாகும்.

2156. உறக்கத்தின் நிலைக்களமான நெஞ்சத்தில் பிராணனும் சித்தமும் புருடனும் ஆகிய மூன்றும் தொழிற்படும். சித்தம் பிராணன் ஆகியவற்றால் உண்டான அறிவு நீங்க உந்திக் கமலத்தின் உள்ளே இருந்து பெருமையுடைய மூலப் பிரகிருதியுடன் புருடன் பொருந்தி இருந்தான்.

2157. கொப்பூழ்த் தாமரையை விட்டுக் கடந்து மூலாதாத்துத் துரியாதீத நிலையில் வான் மண்டல்த்துக்குப் போய் பூமியை விட்டு நாதமயமான சங்கற்ப வாசனையும் கடந்து உடலின் காரியமான அவத்தையை விட்டு ஊமனான ஆன்மா நின்றான்.

2158. பேச இயலாத எழுத்தான மகாரத்துடன் பேசும் எழுத்துக்களான அகார உகாரங்கள் பொருந்தில் ஆன்மா அதன் உறுப்புக்கள் அடங்குபவன் போல் ஐம்பொறிகளும் தொழிற்படாது அடங்கி விடும். அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளி பெற்று விளங்கும். அப்போது அகங்காரம் கெடும். அதனை நாம் அறியமாட்டோம்.

2159. பிரணவ யோகிகளின் துரியம் நின்மலச் சாக்கிரம் ஆகும். அங்குள்ள நீல் ஒளியில் வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரிய கன்மேந்திரிய அந்தக் காரணங்கள் செயற்படாமல் அடங்கி விடும். வேகமுடைய மூலவாயு வேகமாய் ஓடி வான் கூற்றை அடையும். இனித் துரியம் கடந்த துரியாதீத நிலை பற்றிக் கூற இயலாது.

2160 .எல்லா உயிர்களும் பக்குவம் அடையும் வரை அவற்றிடம் மறாமல் இருக்கும் ஐம்மலங்கள் சாக்கிரம் முதலிய ஐந்து நிலையை அடையும். உயிரின் வேறான மாயையால் விளைந்த உடல் கருவி முதலிய வற்றுக்கு முடிவு இல்லை. எல்லா உயிர்களும் பிறப்பு இறப்புகளில் அகப்பட்டு முடிவில்லாத வலிய வினையை துன்பம் அடைந்த வண்ணமே இருக்கும்.

2161. வினைப் பயனை நுகர்விக்கும் மாயையானது தன்னை வருத்தாதபடி சிவத்தின் அருளைப் பெற்றதே வீடுபேறாகும் வீடுபேறு அடையாது உயிர் கருவிலேயே திருவுடையவராய் பிறந்து எண்ணத்தக்க ஞானத்தினால் ஏற்படும் ஞானம்.

2162. அநாதி கேவல நிலையில் ஆணவம் சிறிதே கெட அதனால் கருவிகளுடன் கூடிய சகல நிலையில் உணர்வோன் அரிய செயல்களில் பொருந்திய நிலையான கேவல நிலைக்கு இப்படிச் சென்று மேன்மையற்ற ஐந்து அவத்தையை அடைவர்.

2163. பாடம் கற்பிக்கும்போது உறங்கும் மாணவரை அசிரியர் ஒளியுடைய பிரம்பால் தட்டி நழுப்புவர். அதை போன்று நேயப் பொருளான சிவனும் அநாதியாகவே ஆணவமலத் தொடர்புடையவரைச் சுத்த மாயையால் ஒளியை உண்டாகி எழுப்பிவான்.

2164. மேகத்துடன் பொருதிய வான் கங்கை குடத்தில் உள்ள நீரே ஆகும். என்பது அறிவற்றவன் மிக்க அறிவுடையவன்போல் சொல்லும் கூற்று. குறைவு இல்லாத பிரமமும் ஆன்மாவும் ஒன்று என்பதற்கு மாறாக இந்த உடலுக்குத் தலைவனான ஆன்மா பக்குவப்பட்டு நீங்கும்வரை ஐந்துஅவத்தைக்கு உட்படுக்கொண்டிருக்கும்.

2165. நிலத் தத்துவத்தை இடமாககொண்ட சீவன் மூலவாயுவுடன் பொருந்தி அழகான ஊர்த்துவ சகசிரதளத்தை அடைந்த போது அதற்குக் கீழ் நிலையில் உள்ள பிரமன் முதலிய ஐவரும் அவரைச் சார்ந்தவரும் நாத தத்துவத்துடன் பொருந்தி உறக்கத்தை அடைந்தனர்.

2166. புறக் கண்ணுக்குப் புலப்படாத மலத்தை சத்தாவத்தையில் புலப்படும் வண்ணம் மலக் குற்றத்துக்குரிய காரணத்தை நினைத்து நின்மல சாக்கிரத்தில் கண்களுக்குப் புலப்படாமல் இருந்த ஆணவம் முதலிய ஐந்து மலங்களையும் காட்சியில் கண்டு தமது முகத்துக்கு முன் விளங்கும் சிவத்துடன் பிரியாமல் நிறபதே அழியாத நிலையாகும்.

#####

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!

#####

உடலில் பஞ்ச பேதம்!

2122. உடம்பில் அன்னமய கோசம் என ஒன்று உண்டு. பல வினைகள் எனும் பொருளையுடைய பிரணாமய கோசம் ஒன்றும் உண்டு. இதுவன்றி ம்னோமய கோசம் என்றும் ஒன்று உண்டு.. அறிவு விளங்கும் மனோமய கோசம் உடம்பை விட்டு நீங்கினால் மாயப்பை ஆன இரண்டு உடலும் மண்ணுடன் மண்ணாய் கலந்து விடும்.

2123. சிவன் அமைத்தது தூல சூக்கும என்ற இரு கூறால் ஆன உடம்பு. இதில் சுத்தமான நுண்ணிய உடலைப் பற்றிச் சொல்லும்போது சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் மற்றும் புத்தி மனம் அகங்காரம் ஆகிய எட்டும் ஆன புரியட்ட உடலாகும்.

2124. எட்டில் தன்மாத்திரை களிலிருந்து ஐந்து பொறிகள் அமையும். அவற்றுடன் பொருந்திய புத்தி முதலிய அந்தக் காரணம் மூன்றும் உட்கருவிகள் ஆகும். இவற்றுடன் சேர்ந்த பாசத்தை உணர்வுமயமாய் விளங்கியப் பரு உடலில் கூட்டியும் பிரித்தும் சிவனருள்வான்.

2125. உடல், உண்ட உணவின் சாரம், குருதி, ஊன், தோல், நரம்பு, பொருந்திய எழும்பு, கொழுப்புடன் மூளை பரந்துள்ள சுக்கிலம் என்பனவற்றால் ஆனது. பாழான துரியத்தின் உருவமான மயக்கம் தரும் இந்த உடலை ஒரு பொருள் என்று சொல்ல முடியாது.

2126. சிவபெருமானின் திருவ்டிப் பெருமையை எவர் அறிவார். உடலை இடமாய்க் கொண்டு அவர் திகழ்வதை யார் அறிவார். அறுபது பொதுத் தத்துவங்களுடன் எட்டுச் சிறப்பு தத்துவங்களுடன் விளங்கும் இருவகை உடல்களையும் எவர் அறிவார். அவர் மூலாதாரத்திலிருந்து காப்பதை யார் அறிய வல்லார்.

2127. எட்டுச் சாண் அளவுடைய உடலில் அமைந்த கண் கால் முதலிய உறுப்புகளை அவ்வுடலில் மறைக்கின்ற ஒழுங்கில் நிண வழியாய் அறுபத்தெட்டு வடிவான வான் கூற்றை ஒன்று சேர்க்கின்ற நட்பால் பருவுடலும் அதைத் தாங்கிய நுண்ணுடலும் அமையும்.

2128. பருவுடம்புக்கும் பருவுடம்பல்லாத பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமயமான நான்கு உடம்புக்கும் உயிராக விளங்குவது சீவன் ஆகும். அந்தச் சீவன் பரத்துடன் நீங்காத சிவத்தில் ஒடுங்கும். அந்தப் பிரமமான சிவம் உடல் உயிரில் கலந்து வியாபித்திருப்பதைப் போல் சீவன் ஐந்து கோசங்களிலும் அடங்கியிருந்து தொழிற்படுவதையும் இவற்றைவிட்டு நீங்கும் முறையையும் யார் அறிவார்.

2129. மூலாதாரம் முதற்கொண்டு ஆறூ ஆதாரம் கடந்த சக்சிரதளத்தில் நடு நாடி வழியாய்ப் போய்க் கூடினால் பத்து வாயுக்களும் புரியட்டக உடலும் நன்றாக அடைக்கப் பட்டுவிடும். இவ்வகையான பதினெட்டுக் கலைகளும் சேர்ந்தது தான் சீவன். பரிச உணர்வுடன் கூடிய பருவுடலைக் கருதி நடத்துகின்றது.

2130. உண்மையில் காணப்படுகின்ற உடம்பையும் பொய்போல் காணப்படாமல் பொருந்திய பிராண மய கோசத்தையும் மூலாதாரம் முதலாகச் சொல்லும் சுழுமுனை உச்சியில் விளங்கும் ஒளி உடலையும் மூலவாயு கடக்கின்றபோது இவ்வுடல் காணப்படாது அடங்கும்.

2131. போர்க்குதிரை ஒன்று மிக்க வேகத்துடன் பாய்ந்து மீளல்போல் நுண்ணுடல் அண்மையிலும் தொலைவிலும் போய் மீள்கின்ற ஆற்றல் உடையது. உடலில் உள்ள பல நூலாடைகளை ஒவ்வொன்றாக நீக்கி அணிவதால் அவரது உடம்புக்குக் கெடுதல் வராதது போன்று நுண்ணுடலுக்கு கேடு இல்லாது போய் மீளும் தன்மை கொண்டது

2132. நாகப்பாம்பு தோலை விரித்து விட்டுச் செல்வதைப்போல் முட்டையில் உள்ள குஞ்சு அதை விட்டு வெளிவருது போல் கனவில் கண்டவை நனவில் விளங்காது மறந்து விடுவதுபோல் உடலைவிட்டு உயிர் போகும். சிவனது ஆணையால் உடம்பை விட்டுப் பிரிந்து அதன் தகுதிக்கு ஏற்ப நல்வினை தீவினைகளைச் சொர்க்கம் நரகங்களைப் பொருந்தும்.

2133. எடுத்த உடலின் பயனை அனுபவித்து உடலை விடுபவர் நுண்னுடலில் பொருந்தி நரகம் சொர்க்கப் பயனைத் துய்ப்பர். பழமையான வினை தொடர நுண்ணுடலைப் பற்றிவந்து பிறவுடலில் உலவும் நிறம் பொருந்திய யோகி மீண்டும் தன் உடலில் வந்து புகுவதைப் போன்று உடலை எடுத்துப் பிறந்தும் இறந்தும் பிறவிச் சக்கரத்தில் வருத்தப்படுவர்.

2134. அவனே தான் ஆன அந்நெறியில் நின்று பரம்பொருளைத் தன்னிடம் கண்டவர் உடலுக்கு இயல்பாய் வரும் இயலபை மாற்றிப் பரமம் என்ற மேலான நிலையை அடைவார். இவ்வாறு செய்யாத மற்ற உயிர்கள் அவரவர் வினைகளுக்குரிய பத நிலைகளைப் பெற்றுச் சொர்க்கம் நரகம் அடைந்து மீண்டும் இவ்வுலகில் பிறந்தும் வருந்துவர்.

2135. யோகிச் சிவத்தையே எண்ணியிருப்பதால் உடம்பு சிவதனுவாகும். உடல் தர்மத்தை மறந்திருத்தலால் ஞானிக்குரிய உடல் சிவத்தினுடையது. உச்சித்தலையின் மீது சித்தித்திருக்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் உடலாகும். மோனம் பிரணவ யோகத்தை முடித்தவர் ஆணவம் கன்மம் மயை ஆகிய மூன்றுமான உடம்பு கெட்டுச் சிவ சாயுச்சியத்தை அடைவர்,

2136. தெளிந்த அறிவினையுடைய விஞ்ஞானகலர்க்கு-ஒரு மனம் உடையவர் ஒன்றே உடம்பாகும். அறிவினைப் பெறும் பிரளயாகலர்க்கு-இருமனம் உடையவர் மாயையே உடலாகும். அஞ்ஞானத்துடன் விளைந்த போக போக்கியமே உடல் ஆகும் உண்மையான ஞானிக்கு அகண்ட சிவமே உடலாய் அமையும்.

2137. உடல் மலத்தால் ஆனது என்று உணர்ந்து இதனை ஒதுக்காத அறிவற்றவர். இதுவே சிறந்த இடம் என்று எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த உடலே நன்மை அளிப்பது என்று எண்ணியிருப்பாராயின் இவ்வுலகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி வந்து கொண்டே இருக்கும்.

2138. நல்ல மொழியைப் பேசும் வாக்கு வன்மையும் நல்லதையே எண்ணித் தெளியும் மனம் முதலியவும் உடையவர்கள் உள்ளத்தில் மலம் அற்ற சிவன் மெல்ல விளங்கியருள்வான். அங்ஙனம் அல்லாதவற்றைக் கேட்கும் செவியும் பேசும் வாக்கு முதலியனவும் நினைக்கும் மனமும் மெல்லப் பெறுபவர் சிவம் பிரகாசியாது வாட்டம் அடையும் முகம் கொண்டவரே ஆவர்.

#####

உடல் விடல்!

2139. இன்பம் தரும் காமத்தை உண்டாக்கும் பேச்சும் வான் கூற்றில் செல்லும் பிராணனும் அங்கு உண்டாகும் ஓசையும் ஊன் பொருந்திய உடலில் பொருந்தும் மனமும் தலையின்மீது நிலைபெறச் செய்ய உடம்பின் பிரக்ஞையும் போயவிடும்.

2140. அழியும் இயல்பை உடைய ஓர் உடம்பிலே உள்ள செவி, கண் முதலியவை அழியும் இயல்பு உடையவை. கால வயப்பட்டுச் செய்யும் விரதம் அறம், வைகரி வாக்கு, இடைகலை பிங்கலை நாடி ஆகியவையும் முடிவை அடைகின்றன. ஆகவே இவை அழிகின்ற உடம்புக்குத் தக்க துணையாகா.

2141. அரசு இலை போன்று விளங்கும் பெண்களின் இடையில் போகும் காம உணர்வு தனங்கள் பொருந்திய மார்பில் மூழ்கி வருத்தும். அப்படியாயின் மலை போல் அசையாத சிவத்தை முன்னிட்டுச் சித்தித்திருகின்றதாயின் சிறந்த ஒளியுடலைத் தாங்கி நிற்கும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26949156
All
26949156
Your IP: 34.201.19.151
2024-03-29 16:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg