gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

நாவின் சொற்கள்!

Written by

      பஞ்சவடியில் ராம, இலக்குமண, சீதை இருந்தபோது, மாரீசன் மாயமானாக பொன்னிறத்தில் வந்ததை பார்த்து மயங்கிய சீதை, அது வேண்டும் என ராமனிடம் கேட்க, ராமன் சீதையை பார்த்துக்கொள்ள சொல்லி காட்டிற்குள் சென்றுவிட, ‘சீதா, இலக்குமணா’ என வஞ்சகமாக மாரீசன் அலற, சீதை இலக்குமணனை உடனே சென்று பார்க்கச் சொன்னபோது, அவர் சீதையை தனியே காட்டில் விட்டுச்செல்ல தயங்க, விதியின் செயல்பாட்டால், அதை தவறாக எடுத்துக் கொண்டு தகாத கடுமையான வார்த்தைகள் கூறியதே, இலக்குமணன் மனம் வேதனையடைந்து சீதையை தனியே விட்டுச் செல்லவும், சீதையை இராவணன் தூக்கிச்செல்லவும் வழிவகுத்தது.
    கடுஞ்சொற்கள் எவ்வளவு வறட்சியை அந்த இதயத்தில் தோற்றுவிக்கும். “தீயினாற் சுட்ட புண் உள்ளாரும், ஆறாதே நாவினால் சுட்டவடு” என வள்ளுவர் கூறியது மிகையாகாது. பல வருடங்கள் சென்ற பின்னும் சொல்லடிபட்ட இதயம் ஆறாத காயங்களை, இரணங்களை கொண்டிருக்கின்றது. தான் இறக்கும் தருவாயில் அம்பு படுக்கையில் படுத்திருக்கும்போது, தன் பேரன் யுதிஷ்டிரர், பீஷ்மர் வாழ்வில் அடைந்த வெற்றியைப்பற்றி கேட்டபோது ‘உன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்’ என்று பீஷ்மர் கூறியதாக புராணத்திலிருந்து நாம் அறிகிறோம்.

யாசித்தல்!

Written by

       நம்மிடம் இல்லாத ஒன்றை ஒருவரின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி பெறுவது யாசித்தல் ஆகும். அப்படி யாசிப்பது பெரிய இகழ்ச்சியாகும். குசேலர், கிருஷ்ணனின் ஆத்மார்த்த பால்ய சினேகிதன். குசேலர் மிகுந்த வறுமைக்குள்ளான போது யாரிடமும் யாசிக்காமல் வயல்களில் உதிர்ந்த நெல்லை சேகரித்து தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தார். நிலமை மோசமாக மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி பால்ய சிநேகிதன் மன்னன் கண்ணனை சென்று கானும்போதுக்கூட தன் வறுமைபற்றி ஏதும் பேசவில்லை. ஒன்றும் யாசிக்கவும் இல்லை. ஒரு குறிப்பும் காட்டவில்லை. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் குசேலரின் உணவு மூட்டையை கட்டியிருந்த துணியைப் பார்த்து அவரின் நிலைபுரிந்து உதவி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
  ஒருவனிடத்தில் ஒருபொருளை யாசிப்பவன் யாராயிருந்தாலும் கூனிக்குன்றிவிடுவான். இதை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு பரந்தாமன், தர்மத்தின் தலைவன் மகாபலியிடம் 3’ நிலம் கேட்டபோது குள்ள வாமண அவதாரம் எடுத்துள்ளார். யாசிப்பவர் தாழ்ந்துதான் செல்ல வேண்டியிருக்கும். இது உலக நியதி. பொருள் கொடுப்பவன் கை மேலேயும், அதைப் பெருபவன் கைகள் கீழே தாழ இருப்பதும் கண்கூடான மாற்ற முடியாத நியதிகள்.

நட்பு!

Written by

      எல்லா உயிர்களிடத்தும் தோழமை கொள்வதே நட்பின் இலக்கணம். எந்த ஓர் சூழலிலும் உண்மை நட்பு உதவிக்கு வரும்.
   கிருஷ்ணர் அவதாரமாக கருதப்பட்டாலும் அவர் அர்சுனன் மேல் அளவில்லா நட்பு கொண்டதும், அதனால் பஞ்ச பாண்டவர்களுக்கு தீங்கு நேரிட்டபோது எல்லாம், அர்ச்சுனனுடனிருந்து அவர்களுக்கு உதவியது மகாபாரதத்தின் வாயிலாக அறிவோம். கிருஷ்ணா அவதாரம் நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. குசேலரின் பால்ய நண்பர் கண்ணன் என்று அறிவோம். ஆழ்நட்பின் காரணமாக தன்னிலை பற்றி கண்ணனிடம் கூறாதபோதும், தன் நண்பனின் நிலையறிந்து கண்ணன் உதவி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
     பிசிராந்தையாரின் நட்பு இன்னும் ஒருபடி மேல். கண்ணால் கண்டு பழகாத நட்பு. கேள்வி ஞானமூலம் கொண்ட தீவிர நட்பு. இறக்கும் வரை சந்திக்காமல் அகநட்புடன் வாழ்ந்த நட்பு.
     சிலரின் நட்பு பலரை நல்ல மேலான உயர் நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் உடையது. தாமரையிலையில் விழும் நீர்த்துளி முத்துபோல் காட்சி கொடுக்கும். சிப்பிக்குள் விழும் நீர்த்துளி முத்தாக மறும். சூடான பரப்பில் விழும் நீர்த்துளியானது கண்ணுக்குத் தெரியாமல் மறையும் தன்மை கொண்டது. நல்ல நட்பு அறிவு குறைந்தவனை அறிவாளியாக்கிவிடும். செயல் பாட்டில் சுணக்கங்களை அகற்றும். சொற்களில் உண்மைகளைச் சேர்த்து, சுயமரியாதையுடன் வாழ வைக்க உதவி புரியும்.
     நம் அந்தரங்களைக்கூட உண்மையான நட்பிடம்தான் பகிர்ந்து கொள்ளமுடியும். இல்லையெனில் அந்தரங்கம் அந்தரத்தில் தொங்கவிடப்படும். சுயநலமில்லா நட்பை கண்டறிந்து அதை தக்கவைத்துக் கொள்ளவேண்டும். நிறைய நண்பர்கள் என்பதைவிட, நட்புக்கு இலக்கணமாக ஓரிருவர் இருந்தாலே போதும். நல்ல நண்பர்கள் அபூர்வமாக கிடைப்பார்கள். அந்த நட்பை காப்பாற்றத் தெரியவேண்டும்.

மனிதநேயம்!

Written by

      கோடீஸ்வரர் ராக்பெல்லர் அமெரிக்க மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டதற்கு காரணம், தான் வாழ்வில் முன்னேற, தன் செயல் அனைத்திலும் வெற்றி பெற, சாம, தான, பேத, தண்டம் என அனைத்து கொடிய வழிகளையும் பின்பற்றியதே. சுமார் ஐந்துலட்சம் டாலர் ஆண்டு வருமானம் பெற்ற அவருக்கு 53வயதில் உடல்நிலை மோசமானது. மருத்துவர் ஆலோசனைப்படி கஞ்சியும் பாலும் சாப்பிட்டார். எவ்வளவு இருந்து என்ன பயன். ஆனால் அவர் சுவாமி விவேகானந்தரை சந்தித்தபின் மாற்றம் கொண்டார். கறை படிந்த பணம் என பலரும் வாங்க மறுத்தும், கலங்காமல் தொடர்ந்து மக்களுக்கு மனித நேயத்துடன் தொண்டு செய்தார். மனநிம்மதி கொண்டார். உடல் ஆரோக்கியம் அடைந்து 92வயது வரை வாழ்ந்துள்ளார்.
       மோசமான ஓர் பணக்காரராயிருந்தவருக்கு, மனிதநேயம் கொண்டு கருணைஉள்ள பரோபகாரி என்ற நிலைக்குவந்த அந்த மனித ஆன்மாவிற்கு கிடைத்தது மனநிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியம். எனவே உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது அறிவாக இருந்தாலும் சரி, பணம், பொருளாக இருந்தாலும் சரி. அந்த மனிதநேயம் நீங்கள் கொண்டால், ஆன்மா நிம்மதி கொள்ளும்.

தேவை நிம்மதி!

Written by

      கனகம்-செல்வம், காமினி-பெண் ஆகியவை மன அமைதியை அழிப்பன. வாழ்வில் என்ன என்ன அடையவேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கும். ஒருவரை உனது வாழ்வின் தேவைகளை எழுதிக்கொடு என்றதும், மனதில் தோன்றிய ஆசைகளையெல்லாம் வரிசைப்படுத்தி மனைவி, பணம், புகழ், மதிப்பு ... இப்படி எழுதியவனுக்கு ஓர் சந்தேகம் வந்தது! எல்லாமும் எழுதி விட்டோமா என்று? அனைவரிடமும் காண்பித்தான். அனைவரும் ஒப்புக் கொள்ளும்படியாக எழுதியிருந்தான். சந்தோஷத்துடன் அந்த தேவைகளை கொடுக்க நினைத்தவன் ஒரு பெரியவரை சந்தித்தான். அவரிடமும் காண்பித்தான்.   அவர் எழுதியதை எல்லாம் படித்துவிட்டு, எல்லாம் சரி! இதில் எழுதியிருப்பதையெல்லாம் அடைந்தபின் நீ என்ன செய்யப் போகின்றாய்? என்ற கூற்றிற்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது அவர் எல்லாவற்றையும்விட மன அமைதியை நாடு! அதைத் தேடு! அது கிடைத்தால் நீ எல்லாவற்றிலும் வெற்றியடைவாய்! அப்படியின்றி எல்லாம் கிடைத்துவிட்டால் உனக்கு மன நிம்மதியிருக்காது என்றார். பாற்கடலை கடைந்தபோது கிடைத்த லட்சுமியின் அதி அழகால் ஸ்ரீமன்நாராயனுக்கு நிம்மதியும் உறக்கமும் பறிபோயின. பொன்னாசை அளவுக்கு மீறினால் நிம்மதிபோகும் என்பதை எடுத்துரைகின்றது ஸ்ரீநாராயணனின் அனந்த சயன காட்சி.
எனவே நிம்மதி, மனநிம்மதிதான் ஒருவருக்கு கிடைக்க முயற்சிக்க வேண்டும். மற்றவை கர்ம வினைப்படி அவரை வந்து சேரும். ஆன்மாவின் தன்மை உணர்ந்து அதற்கு உடல் ஒத்துழைப்பு அளித்தால் நிம்மதி நெஞ்சினுள்ளே இருப்பதை உணரலாம். தீவிர சிந்தனை யில் ஆழ்ந்தவன், அதிகமான செல்வம் அடைந்தவன், ஆபத்தை நெருங்கியவன் ஆகியோருக்கு நிம்மதி கெட்டுவிடும். உறக்கம் வராது.

கடமை!

Written by

        ஓர் படகு நிறைய பொருள்கள் ஏற்றி அக்கரை சொல்கின்றோம். அந்தப்படகு இத்தனை பாரங்களைச் சுமக்கின்றோமே என வருத்தப்படக்கூடாது. அது தன் கடமை என உணரவேண்டும். அதேசமயம் படகு ஓட்டையானால் அதில் சரக்கு ஏற்றமாட்டார்கள். ஓட்டை படகு என ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இதைப்போல்தான் மனித உடம்பும், உயிரும் குடும்ப பொறுப்புகளைச் சுமக்க வேண்டும். அதைவிடுத்து பொருப்புகளையும் கடமைகளையும் கண்டு வருந்தி உங்களுக்குள்ளே ஓட்டை போட்டுக் கொண்டால் படகுபோல் ஒதுக்கித் தள்ளி வைக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்டம்!

Written by

    அதிர்ஷ்டத்தைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் துளையிட்ட ஓர்காசு கிடைக்க அதிர்ஷ்டம் மிகுந்தது என நம்பி அதை தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். அந்த நாணயத்தால் தன் வெற்றி நிச்சயம் என் நம்பினான். எல்லோரும் பாராட்டும்படி வேலை செய்தான். எல்லா பிரச்சனைகளுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டான். தினமும் பணிக்குப் போகும்போது அந்த நாணயம் தன் சட்டைபையில் மனைவி வைத்துவிட்டாளா, இருக்கின்றதா என தடவிப்பார்த்து உறுதி செய்து நம்பிக்கை மகிழ்வுடன் சென்றான். வாழ்வில் பலபடிகள் முன்னேறினான்.
    ஒருநாள் தன் சட்டைப்பையில் உள்ள நாணயத்தை. தனக்கு வாழ்வில் முன்னேற உதவிய அதிர்ஷ்டத்தை எடுத்துப் பார்க்க விரும்பினான். அவன் மனைவி தடுத்தும் கேளாமல் எடுத்துப் பார்த்தான். அப்போது அந்த நாணயத்தில் துளையில்லை. அதிர்ந்து போனான். அதைப்பற்றி மனைவியிடம் கேட்டபோது, பலநாட்களுக்கு முன்னால் அந்த சட்டையை எடுத்து உதறியபோது அந்த நாணயம் உருண்டோடி காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் வருத்தப்படுவான் என நினைத்து ஓர் துளையில்லா நாணயத்தை சட்டைப் பையில் மற்றி மாற்றி வைத்துள்ளாள் என தெரியவந்தது.
    துளையிட்ட நணயம்- அதிர்ஷ்டமானது அது தன்னிடம் இருக்கின்றது என்ற நம்பிக்கை கொடுத்த பலம்தான் அவன் வெற்றிக்குக் காரணம். நாணயத்தில் ஏதுமில்லை! நம்பிக்கைதான் வேலை செய்திருக்கின்றது.
    இந்த நிகழ்வு நம்பிக்கை என்பது நீங்கள் ஒன்று உங்கள் மேல் வைப்பது, மற்றொன்று மற்றவர்கள் மேல் வைப்பது. உங்கள்மேல் நம்பிக்கையிருந்தாலும், உங்கள் செயலில் உறுதியான நம்பிக்கை இருந்தாலும் சூழ்நிலை என்ற ஒன்று உங்களை சிக்கலில் சிக்கவைத்திட வாய்ப்புண்டு.

ஆத்மார்ந்த நம்பிக்கை!

Written by

          நம்பிக்கை, மகத்தான செயல். ஒவ்வெருவருக்கும் தேவையான ஒன்று. அது மனத்தின் உறுதியை, வலிமையைக் காட்டும். செயலின் வெற்றி நம்பிக்கையின் அடிப்படையில்தான். நம்பிக்கைக்கு ஊக்கம், உற்சாகம் வேண்டும். இவை எல்லாம் எங்கிருந்து பெறப்படுகின்றது? நம் உடலிருந்துதான். உடல், மன ஆரோக்கியம் தான் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் அடிப்படை.
          மகாபாரதத்தின் சூத்திரதாரியாக ஸ்ரீகிருஷ்ணர் விளங்குகின்றார். அந்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்திருந்தால் தர்மன் சூதாட்டத்தில் தோற்றிருக்க முடியாது. இந்தக்கதை சூதாட்டத்தின் பாதிப்புக் கதையாகவும் இருந்திருக்காது. கர்மபலன்படி தர்மன் தான் சூதாடுவது கண்ணனுக்கு தெரியக்கூடாது என நினைத்ததால் அவரிடம் சொல்லவில்லை. சூதாட்டத்தின் தாக்கம் ஏற்பட்டபோது அவரின் உதவியும் கிடைக்கவில்லை.
          துரியோதனன் தனக்கு சூதாடவராது என்பதால் சகுனியை தனக்கு பதிலாக நியமித்த போதும், தருமன் கண்ணமேல் நம்பிக்கை வைக்கவில்லை. தன்மேல் தனக்குத் தெரியாத ஒன்றின்மேல் நம்பிக்கை கொண்டான். தவறு செய்தான். அவனோடு சேர்ந்த அனைவரும் தண்டனை அடைந்தனர்.
          திரௌபதியை துச்சாதனன் துகிலுரிக்க முற்படும்போது அவள் தன் உடைகளைப் பற்றிக் கொண்டு கண்ணா! என்று அழைத்தாள். அப்போது அவள் தன் கரங்களை நம்பினாள்! நிலைமை மோசமானபோது தன் கரங்களை உயர்த்தி உள்ளார்ந்த நம்பிக்கையுடன் மனதின் அடித்தளத்திலிருந்து அழைக்க கண்ணன் வந்தான் உதவி கிடைத்தது.
          எனவே எந்த செயலும் நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். ஆத்மார்த்தமான நம்பிக்கையே வெற்றி பெற உதவிடும்! உதவி கிடைக்கும்.

சங்கிலி உதவி!

Written by

        ஒரு பையன் படிக்கும் பள்ளியில் உலகை மாற்ற விரும்பும் திட்டம் ஒன்றினை தயாரித்து விளக்க அவர்தம் ஆசிரியர் கூறுகிறார். எல்லோரும் அவரவர் கற்பனைக்கேற்ப கூறுகின்றனர். ஒருவன், நாம் முகம் தெரியாத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். அந்த மூவர் தனக்குத் தெரிந்த மூன்று பேருக்கு உதவும்படியாகச் சொல்லவேண்டும்.
       அவர்கள் இதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தால், இரண்டு வாரங்களில் 47லட்சத்து, 82ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர். என்பதாகும். இந்த திட்டத்தை மாணவர்கள் கேலி செய்ய, ஓரு ஆசிரியர் பாராட்டுகின்றார். அந்த மாணவன் இதை செயல்படுத்த முயற்சிக்கின்றான். உதவும் கரங்களின் சங்கிலி உருவாகின்றது. அம்மாவிற்கு இந்த செயல்கள் பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி பல துன்பங்களுக்கு ஆளாகின்றான்.
       ஆனால் இந்த சங்கிலி அமைப்பினால் பலனடைந்த பத்திரிக்கையாளன் ஒருவன் எளிமையான இந்த திட்டத்தை புகழ்ந்து எழுதத் தொடங்க, திட்டம் வெற்றிபெற ஆரம்பிக்கின்றது. ஓர் ஆள் தன்னால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்தால் போதும். உலகம் மாறிவிடும் என்பதே என்பதே இதன் கருத்து. இந்தமுறையில் உதவிகள் அனைவருக்கும் கிடைத்தால் அதன் செயலாக்கம் சிறப்பல்லவா!

இளமை-ஆசை-பேராசை!

Written by

     ஆசை பூர்த்தியாவதற்காக நம் செயல்கள் நம்மை ஆட்டிவைக்கின்றது. ஆனந்தம் வேண்டும் என்பதற்காக நம் செயல்கள் இருந்தாலும், அது ஒரு துக்கமில்லா சந்தோஷமாக இருத்தல் வேண்டும். அந்த சந்தோஷங்களும் தற்காலிகமாக மறைந்துவிடக்கூடியதாக இருக்கக் கூடாது.
    மகாபாரத நிகழ்வில் யாயாதி மன்னன், சுக்ராச்சார்யாரின் மகள் தேவயாணையை மணந்தான். இல்வாழ்வில் தேவயணையின் தோழியுடன் கலந்தான். இதை அறிந்த சுக்ராச்சாரியார் இளமையில் கிழட்டுத்தன்மை என சாபமிட்டார். கிழட்டுத்தன்மையை இளைஞர் ஒருவருக்கு அளித்து இளமை பெறலாம் என்ற விமோசனத்தின் பேரில், தன் மகன்கள் நால்வரும் மறுத்தபின், கடைசி மகன் பூருவிடமிருந்து இளமை பெற்றான். இன்பத்தின் வகைதேடி, எல்லைதேடி வகை வகையாக அனுபவித்தும் அவனின் ஆசை அடங்கவில்லை.
       விரும்பியதை தேடித் தேடி அனுபவித்தும் ஆசை அடங்காமல் மேலும் மேலும் ஆசை அதிகமாக ஆவதை உணர்ந்தான் மன்னன் யாயாதி. அனுபவித்து ஆசையை தீர்ப்பது என்பது முடிவில்லாதது, அது நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கும் செயல் என புரிந்து, தன் மகன் புருவை அழைத்து அவனிடம் பெற்ற இளமையை மீண்டும் அவனுக்கு அளித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
      துன்பத்திற்கு தீர்வு ஆசையை அனுபவிப்பது இல்லை, அதை அடியோடு ஒழித்து மறந்துவிடுவதுதான் சிறப்பு. எல்லா துக்கங்களுக்கும் ஆசையே காரணம். ஆனால் ஆசை இல்லாமல் போனால் மனித வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். ஆசைகள் இயல்புதன்மையுடன் அடங்கவேண்டும். அடக்கலாகாது. அடக்குதலின் விளைவு பேராசையே! வாழ்வில் உனக்கு தேவையானவற்றின் மீது ஆசை வை. பேராசை கொள்ளாதே!

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27031347
All
27031347
Your IP: 44.201.97.0
2024-04-17 21:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg