gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

தர்மத்தின் வழி-நீதிமான்!

Written by

       ஒரு விவசாயி விநாயகப் பெருமானிடம் வந்து 'பகவானே, மழையை நம்பி பயிர் விதைத் திருகின்றேன். மழை பெய்யச் செய்யுங்கள். மழை பெய்தால் தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினார். சிறிது நேரத்தில் இன்னெருவர் வந்து 'பகவானே செங்கல் சூளை போட்டிருக்கின்றேன், மழைபெய்தால் என் வியாபாரம் கெட்டு விடும், ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடாது, மழை பெய்யாவிடில் உங்களுக்கு தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினான்.
       இருவிதமான வேண்டுகோள்கள். பிள்ளையார் யாருக்கு சாதகமாகச் செய்வார். அவர் மனைவி சித்தி, புத்தி இருவருக்கும் கருத்துவேறுபாடு. ஆளுக்கு ஒருவரை சார்ந்து பேசினர். பிள்ளையார் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் எனக்கு எப்படியும் தேங்காய் கிடைத்து விடும் எனச் சிரித்து, 'எல்லோரையும் வாழ்விக்க ஒருபொது நியதி உண்டு, விவசாயி சம்பாதிக்க மழைக்காலம் உள்ளது. சூளைக்காரன் சம்பாதிக்க வெய்யில் காலம் உள்ளது. அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன்படுத்தாமல் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற கடவுளின் துணை நாடுவது சரியன்று, எல்லோருக்கும் பொதுவானவர் கடவுள்' என்றார்.

விவேகம்-புத்திசாலித்தனம்!

Written by

         சிலருடைய சமயோசித செயல்களால் பல நன்மைகள் நடந்துள்ளதாக புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. தன்னுடைய விபரீத ஆசையால் இராவணன் நவக்கிரகங்களை சிறைப்பிடித்து தன்னுடைய சிம்மாசனத்தின் படிக்கட்டுகளாக அவர்களை உபயோகிக்க இதை அறிந்த நாரதர் இராவணனால் உலகில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வுகாண அவனிடம் வந்தார். என்னப்பா இப்படி? இது உன் வீரத்திற்கு அழகா? அவர்கள் முதுகு மீது நடந்து அரியாசணம் ஏறலாமா? அவர்களைத் திருப்ப படுக்க வைத்து மார்பின் மீது உன் கால்களை வைத்து ஏறி ஆசனத்தில் அமர்ந்தால் அதுதான் வீரமான செயல் என்றார்.
        இந்த யோசனை இலங்கை வேந்தனுக்கு மிகவும் பிடித்தது. எல்லா நவக்கிரகங்களையும் திருப்பிப் போட்டான். சனிபகவான் மார்புமீது முதன் முதலாக தன் காலை வைக்க அவர் உக்கிரப்பார்வை இராவணன் மீதுபட பீடித்தது சனி. சீதையை சிறைப் பிடித்ததிலிருந்து இராவணன் மரணகாலம் வரை தொடர்ந்தது. விவேகி நாரதரின் புத்திசாலித்தனமான சிறிய ஆலோசனையில் நல்லவர்களுக்கு நன்மையும் தீயோர்களுக்கு துயரும் தரும் நிகழ்வுகள் பல நடந்தேறியது.

பற்றற்ற துறவி!

Written by

        கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டு யாத்திரை புறப்பட்டனர். முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் ஒரு வைரக்கல் கிடப்பதைப் பார்த்து மனைவி காணநேர்ந்தால் அவளுக்கு ஆசை வந்திடும் என்றென்னி அதை புதக்க குழி தோண்டினான். அதை புதைக்கும் போது அங்கு வந்த மனைவி என்ன புதைக்கின்றீகள் எனக் கேட்டு மண்ணைத் தோண்டி வைரத்தைக் கண்டாள். தான் பார்த்தால் ஆசைகள் திருப்பி வந்து விடும் என்று கணவன் நினைத்தது புரிந்தது. உடனே சமாளித்துக் கொண்டு அன்பரே, வைரத்துக்கும் சாதாரண கல்லுக்கும் வித்தியாசம் தெரிவதாய் இருந்தால் ஏன் உலகத்தை துறந்து வந்தீர்கள் என்றார். தன்னைவிட தன் மனைவி பற்றற்ற துறவியாக மாறிவிட்டது கண்டார்.

நீயே பொக்கிஷம்!

Written by

        ஓர் இடத்தில் தூரத்திலுள்ள பொருளை பார்த்துக் கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஓர் பொக்கிஷம் உள்ளது எனக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு காலை நேரத்தில் வந்தான் ஒருவன். அவன் நிழல் அவனுக்குப் பின்னால் நீண்டு வீழ்ந்தது. நிழல் பகுதியை மணதில் கொண்டு தோண்ட ஆரம்பித்தான்.
         நன்பகலில் சூரியன் மேலெழுந்து அவன் நிழலை சுருக்கியது. நிழல் காலுக்கடியில் சென்றது. நிழலே இல்லை .அவன் காலையிலிருந்து தோண்டிய களைப்பினூடே ஏமாற்றம் சேர வருத்தமுற்று அழுகை வந்தது. அப்போது அங்கு வந்த பெரியவரிடம் அவன் விபரம்கூற அவர் 'நீ கேள்விபட்டது சரியே..  உன் நிழல் உன் காலடியில் உள்ள பொக்கிஷத்தை சரியாக கான்பிக்கின்றது. நீயே அந்த பொக்கிஷம், அது உன்னுள்ளே இருக்கின்றது என்றார்.

நிம்மதி எங்கே?

Written by

         மனதில் நிம்மதியும் தூக்கமும் இன்றி தவித்த ஒருவன் அருகில் இருந்த ஆசிரமத்தில் பெரியவரை சந்தித்தான். அவர் தேவையில்லா சுமைகளை சுமப்பதும், தெரியக்கூடாத ரகசியங்களை தெரிந்து கொள்வதாலும் நிம்மதி போய் விடுகின்றது. நீ முதலில் ஆசிரமத்தில் சாப்பிடு என்றார். சாப்பிட்டபின் ஒரு படுக்கையை காண்பித்து படுக்கச் சொன்னார்.
      அவனிடம் ஒரு கதை சொன்னார் பெரியவர். "ரயில் புறப்படும் போது அவசரமாக தலையில் சுமையுடன் ஒருவன் ஓடிவந்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டான். ரயில் புறப்பட்டது. ஆனால் அவன் தன் தலையிலிருந்த சுமையை மட்டும் கீழே இறக்கி வைக்கவில்லை. அருகிலிருந்தவர் அதை கீழே இறக்கி வைக்கச் சொன்னார். அவன் வேண்டாம். ரயில் என்னை மட்டும் சுமந்தால் போதும். என் சுமையை நான் சுமந்து கொள்வேன் என்றான். இதைக் கேட்ட படுத்திருந்தவன் சிரித்துவிட்டு, 'பைத்தியக்காரன்.. இரயிலை விட்டு இறங்கும் போது மூட்டையை தூக்கிக்கிட்டு இறங்கினால் போதாதா.. என்றான்'. உன்னைப்போல் அவனுக்கும் அது தெரியவில்லை என்றார் பெரியவர்.
        என்ன சொல்கிறீகள் என்றவனிடம் 'வாழ்க்கை என்பது ரயில் பயணம் போன்றது. பயணம் முழுவதும் சுமந்து கொண்டு செல்பவர்கள் நிம்மதியாக வாழமுடியாது, தேவை படுபனவற்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்'. என்றதும் அவனுக்கு புரிய ஆரம்பித்தது, தூக்கம் வந்தது. சுகமாக தூங்கினான்.  
       காலையில் எழுந்திருக்கும் போது பெரியவர் அருகில் இருக்கக் கண்டான். எழுந்து அந்த தலையணையை தூக்கு என்றார். அவ்வாறே செய்தவன் ஆ! வென்று அலறினான். தலையணை அடியில் ஓர் நாகம் சுருண்டிருந்தது. ஐயா.. என்றவனிடம் நீ.. உன் தலைக்கு அருகில் பாம்பு இருக்கிறது என்ற இரகசியம் உன் மனதிற்குத் தெரியாது.. அதனால் நிம்மதியாய் தூங்கினாய்.. இப்போது நிம்மதி எங்கிருக்கிறது என புரிந்து கொண்டிருப்பாய்." என்றார். எனவே சுமைகளும், இரகசியங்களும் இல்லா மனமே நிம்மதிகாணும்.

ஆசி மேலே!

Written by

         பூஜை செய்து வந்திருந்த பக்தர்களை வணங்கி பிரசாதத்துடன் பணத்தை தன் கைகளில் வைத்து கொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர். இதைக் கண்ட பக்தர் ஒருவர் ஐயா தங்கள் இப்படிச் செய்வதன் அர்த்தம் என்னவோ? எனக் கேட்டார். அவர் "தருகிற கை மேலே இருக்க வேண்டும், பெறுகிறவன் கை கீழே இருக்க வேண்டும், என்றதும் குழப்பமடைந்த அவர், "ஐயா. நீங்கள் தானே தருபவர். மற்றவர் பெற்றுக் கொள்பவர்தானே. நீங்கள் பொருட்களை உங்கள் கையில் வைத்து கீழே இருக்குமாறு செய்து மற்றவர் மேலே இருந்து எடுத்துக் கொள்ளுமாறு செய்கிறீகள். எப்படி? என மீண்டும் கேட்க அந்த அன்பர் "நீங்கள் நான் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை, நான் தரும் பொருள் அழியக்கூடியது. நான் தரும் பெருளை பெற்றுக் கொண்டு அவர்களின் கை எனக்கு ஆசியையும் அருளையும் தருகின்றது. ஆசியும் அருளும் தரும் கை மேலிருப்பது தானே முறை" என்றார்

வாழ்வில் வெற்றி!

Written by

         இரண்டு நண்பர்கள். ஒருவர் எப்போதும் எதையாவது உண்ணுபவர்- குண்டானவர். இன்னொருவர் தேவைபடும்போது அளவாக உண்ணுபவர்-ஒல்லியானவர். இருவரும் பயணம் மேற்கொண்டனர். யாத்திரை சென்றபோது உளவாளிகள் என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். உணவின்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.  உண்மை விபரம் தெரிந்து விடுவிக்க வந்தபோது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் ஏதுமின்றி சில நாட்கள் இருந்ததால் இறந்து விட்டார். தேவைப் படும்போது அளவாக உண்ணுபவர் உயிருடனிருந்தார். உணவில் ருசியை சமமாகத் தேடி உண்பவர்கள் வாழ்வில் சலிப்படைவது இல்லை.

நீதிமேல் பற்று!

Written by

       குளத்திலிருந்து குடிநீர் கொண்டு சென்ற பெண்ணை குடிகாரன் ஒருவன் கேலி செய்ய அந்தப் பெண் ஊர் நாட்டாமையிடம் முறையிட விசாரித்த நாட்டாமை அவ்வூரின் கோவிலில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் என தீர்ப்பானது. இதில் முக்கியத்துவம் என்ன வெனில் தீர்ப்பளித்த நாட்டாமை வேறு யாறுமில்லை. குடிகாரனின் மனைவியே! ''தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் இருப்பவர் என்ற முறையில் குற்றம் செய்தவருக்கு தண்டணையும், மனைவி என்ற முறையில் அவருக்காக அவர் செய்ய வேண்டிய பணியை நான் செய்கிறேன். இதை செய்யாவிட்டால் தீர்ப்புகளில் அர்த்தமில்லை என தன்னிடம் கேட்டவர்களிடம் சொன்னார்.

கண்பார்வையற்றவர்கள்!

Written by

      மன்னர் அக்பருக்கு உலகில் பார்வையற்றவர்கள் அதிகமா? குறைவா! பார்வையுள்ளவர்கள் அதிகமா? குறைவா! என்ற தன் சந்தேகத்தைக் கேட்க பீர்பால் அரசவையில் ஒரு துணியை எடுத்து தலையில் கட்டிக் கொண்டு இது என்ன என்றார். அனைவரும் 'தலைப்பாகை' என்றனர். பின் அதே துனியை தோளில் போட்டார். அனைவரும் 'துண்டு' என்றனர். பின் அதே துணியை எடுத்து இடையில் கட்ட அனைவரும் 'கோவணம்' என்றனர். உடனே பீர்பால் மன்னரே இவர்கள் அனைவரும் குருடர்கள். துணி என்று சொல்லாமல் வேறு பெயர்களை கூறியுள்ளனர். உலகில் குருடர்கள் அதிகமா? பார்வையுள்ளவர்கள் அதிகமா? என்ற கேள்விக்கு இதுதான் பதில் என்றார்.            நீங்கள் எப்படி! கண்ணிருந்தும் குருடர்களாய் இருக்காதீர்கள்!

அந்த இன்னொன்று! கற்பனை பயம்!

Written by

       மாடிப்பகுதியை வாடகைக்கு விடுபவர் எனக்கு சப்தம்னா அலர்ஜி. மாடியிலே தொம் தொம் என சப்தம் விழாமல் குடியிருக்க வேண்டும் என்று கூறியதை ஏற்று மாடிக்கு குடிபுகுந்தான் இளைஞன் ஒருவன். காலையில் சென்று இரவு வந்தான். திடுதிடுவென்று மாடிஏறினான். காலனிகளை கழற்றி வீசினான். அவை மூலையில் சென்று தொம் என விழுந்தது. விட்டுக்காரர் படப்படப்புடன் மேலே வந்தார். என்னப்பா ஒரு நாள் கூட ஆகவில்லை சென்னதை மறந்துவிட்டயே? என்றார். ஒ... மன்னிச்சிருங்கள்.. பழக்கதோஷம்.. இனிமே ஜாக்கிரதையாக இருக்கின்றேன் எனக் கூற பெரியவர் கீழே சென்றார். மறுநாள். இரவு பத்து மணிக்கு வந்தவன் கிடுகிடுவென மாடிக்கு சென்றான். பழக்க தோஷத்தில் ஒரு காலனியை கழற்றி தூக்கி எறிந்தான். அது தொம்மென்று விழுந்தது. அப்போது அவனுக்கு வீட்டுக்காரர் சென்னது ஞாபகம் வந்தது. ஆகா.. தப்பு செய்துவிட்டோமே.. இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைத்து இன்னொரு காலனியை மெள்ளக் கழற்றினான். அதைக் கையில் எடுத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து மூலைக்குச் சென்று சப்தமில்லாமல் கீழே வைத்தான். படுக்கையில் படுத்துக் கொண்டான். விடியற் காலம் 4மணிக்கு கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறக்க வீட்டுக்காரர் காதை பொத்திக் கொண்டு நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தான். ''என்னப்பா..ஒரு தடவை தொப் என்ற சப்தம் கேட்டது. அந்த இன்னொரு காலனியையும் சீக்கிரம் போட்டு விடேன். அந்த சத்தம் வரலையேனு ராத்திரி பூர காதை பொத்திக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்கேன்'' என்றார். இதைப் போலத்தான் நம்மில் பலர் எதையோ ஒன்றிற்காக பயந்து அது மீண்டும் நடந்து விடுமோ என்ற நினைவில் பயத்தில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றோம். வீணான கற்பனைகளால் குழப்பம் அடையாதீர்கள்!

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26929976
All
26929976
Your IP: 44.205.5.65
2024-03-28 19:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg