gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:15

அருள் ஒளி!

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

அருள் ஒளி!

1814. திருவருளே ஏற்ற துணையாகும் என்று அதில் அழுந்தித் தன் செயல் நீக்கப் பெறாதவர் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார். அத்தகையவர் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்ற ஐந்து மலங்களையும் நீங்குவதில்லை. அருளின் பெருமையை அறியாதவர் அதில் அழுந்தார். திருவருளால் தோன்றி அருளே கண்ணாக அறிபவரே அறிந்தவர்.

1815. குருநாதனான சிவன் மீண்டும் பிறவிக்கு வராத நெறியை அருளியவன். தெவிட்டாத இன்ப அமுதத்தை அருள் செய்தான். ஆயிரம் திருப்பெயரையுடைய பொருமானின் பயர்களில் ஒன்றான சிவ என்பதால் தெவிட்டாத இன்பத் திருவருட் கடலில் முழுகி ஆடுக என்று அருள் செய்தான்..

1816. உண்டாகின்ற ஆனந்தத்தால் ஆடியும் பாடியும் கண்ணீர் மல்கியும் அலறியும் சிவனின் பேரியல்பைத் தேடி நான் கண்டு கொண்டேன். கண்டு பொருந்திய அப்போதே வடிவம் அற்ற ஒளியை அளித்துத் தன் அருளால் எனக்குள் மேல் கீழ் உள் என்ற பாகுபாடு இல்லாது விளங்கினான்.

1817 .குருநாதன் ஆணவ மலத்தால் உண்டான பிறப்பும் அப்பிறப்பினால் உண்டான மாயா கரியங்களும் இடையில் வந்து பற்றிய பொய்க்கூட்டம் என்று தெளிந்து நீ இவற்றை நீங்கினாய் என்று திருவடி ஞானமளித்தான். அதலால் இதுகாறும் கற்றவற்றை விட்டு விட்டேன். அவனருளால் கிட்டிய நாதத்தை நான் பணிந்து அதன் வழியிலே சென்றேன்.

1818. ஞானம் என்னும் விளக்கை ஏற்றி எல்லை அற்ற பரம் பொருளை அறிந்து கொள்ளுங்கள். அப்பரம் பொருளின் முன்னம் மல மயா கன்மங்களாகிய உடலின் துன்பங்கள் யாவும் அகலும். மிக்க ஒளியை வெளிப்படுத்தும் ஒளி உடையவர் சிவ ஒளியும் தம் ஒளியும் கூடிக் கலந்து நிற்கத் திகழ்வர்.

1819. ஒளியும் இருளும் எக்காலத்தும் கெட ஒளியில் கலந்திருப்பவர்க்கு அருள் ஒளி நீங்காது. புறக்கண் எதையும் இருளில் அறியாமல் ஒளியில் அறிவது உலகியல் அது போன்று புறக் கண்ணுக்கு வேறான அகக்கண் விளங்கும்.. அண்டகோச அறிவில் இருள் நீங்கி உயிர் ஒளியைப் பெற்றால் சிவமாகும்.

1820. ஆணவத்தால் வெளியே திரிந்திரிந்த எனக்கு உன் பொன் ஒளியில் விளங்கும் நாதத்தை அளித்தாய். என் அண்டகோச ஒளியில் புகுந்து என்னை மலம் நீங்கப் பெற்றாவனாகச் செய்தாய். என் அறவாழ்வில் புகுந்து எனக்குக் கிட்டுவதற்குரிய அரிய அமுதத்தை அளித்தாய். நின் இத்திறம்தான் என்னே என்று மயங்கினேன்.

1821. அருள் எனப்படும் பரவெளி ஒன்றும் பெய்ப்பொருள் எனப்படும் புகும் இடம் ஒன்றும் வேறு வேறு என்ற மயக்கம் நீங்க என் மனத்தகத்தே புகுந்த பேரொளியைச் சிவம் என்று தெளிவீராக பின்னர் சிவசத்தி உண்டாகும்..

1822. இவ்வுலகில் சிவமானது பிறந்து இறாந்த கதை உண்டு என்றால் கூறுங்கள். செத்துப் பிற்க்கும் மற்றத் தெய்வகளை மெய்ப்பொருள் என் எண்ணுவதைக் கை விட்டு விடுங்கள். பருந்து வட்டமிடும் உடலை கீழே வீழ்த்தி அரிய உயிரைத் தெளிவடையச் செய்வோம். இந்த உண்மையை பிறர்க்கும் சொல்லுங்கள்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:13

திருவருள் வைப்பு!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

திருவருள் வைப்பு!

1792. அறிய வேண்டிய நெறி கதிரவ நெறி, திங்கள் நெறி என இரண்டாகும். இத்தகைய கதிரவன் கலை, திங்கள் கலை விளங்கவே உயிருக்கு உருவமான உடல் அமைந்தது. அருள் என்னும் தெய்வ சத்தியைப் பெறத் திங்கள் நெறி பற்றியவர்க்கு அறமும் கதிரவ நெறி பற்றியவர்க்குத் த்வமும் ஆக உள்ளன. இந்த இரு நெறியிலும் மனத்தின் பண்புக்கு ஏற்பப் போகப் பொருள்கள் உடலுக்கு அமையும்.

1793. ஊனக் கண்ணால் காண்பதற்கு அரியவன் மனத்தில் பாவித்து அறியவும் அரியவன், குரு மண்டலத்தில் விளங்கும் நந்தியும் தொடுவதற்கும் அணுகுவதற்கும் தொலைவில் இருப்பவனாய் தோன்றுவான். அவனையே வேண்டிக் கிடப்பவர்க்கு அகநோக்கில் விளக்கொளியாவான். அப்போது அவனையே செறிந்திருத்தலால் உள்ளத்தில் இருந்த அஞ்ஞானம் விலகும்.

1794. விளக்கொளியைப் பார்த்து நின்றபோது அகக் காட்சியில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்ப் பொருள்களும் கருவாய்த் தோன்றும். வெறுக்கத்தக்க ஆணவ இருள் நீங்கின் உயிர்க்குயிராய் இருக்கும் பரமன் உண்மையைக் காணலாம். அவ்வாறு அவனிடம் செறிந்த சிந்தையை ஆராயின் ஞானமே வடிவான காட்சி தோன்றித் தேவ வடிவு உண்டாகும்.

1795. ஞானத்தின் திருவடிவைத் தெளிந்து அறியாமையால் காலங்கள் வீணாய் கழிந்தன. எம் சிவனான தலைவன் தன் சொருப நிலையினின்றும் பெயர்ந்து குருவாய் வந்து காட்டிக் காண்பான் அங்ஙனம் உண்மை அறிவே துணையாய்ப் பொருந்தி உணர்பவரிடம் பொருந்தி விளங்கும் தன்மை உடையவன் சிவன்.

1796. உயிர்களைப் பிணித்திருக்கும் வினைகள் அழிந்தபின்பு ஒளிமயமான சிவன் தானே அறிவான். தான் அறியாது இருந்தும் என் பக்குவத்தை என் குருநாதனான அவன் அறிவான். ஆனால் ஊனே உருகி உணர்வு மயமான பொருளை அறிந்தபின் இறைவன் தேனைப் போல் நோயைப் போக்கி இன்பத்தை வழங்குவான்.

1797. இவ்வுடம்பு தோன்றியபோதே ஒளியாயும் உயிர்ப்பாயும் இருக்கின்ற இறைவனை நான் அறிந்தே இருந்தேன். வான் மண்டலத்தில் வாழ்பவர்கள் இந்த உண்மையை அறியாமல் மயங்கி இருந்தனர். உடலின் உள்ளே உயிர்ப்பின் இய்க்கத்தை நடத்தும் ஒளிமிக்க கொழுந்தான் இறைவன் தான் அறியவில்லை என்றால் பின்பு யார் அறிந்து உதவ முடியும்.

1798. உல்கத்தார் அருளே எங்குமாக இருக்கின்றாது என்பதை அறியார். இறையருள் அறிபவர்க்கு அஃது அமுதம் போல் இனிமையைத் தரும் என்பதையும் உலகத்தார் எண்ணித் தெளியார். சத்தியே மிக நுட்பமாய்ப் படைப்புத் தொழில் முதலிய ஐந்தொழிலுக்கும் காரணமானது என்பதை நினைத்துப் பார்பதில்லை. அருட்சத்தியானது கண்ணாய் இருந்து எல்லாவற்றையும் ஒரு சேர கண்பதையும் உணரார்.

1799. அறிவின் உருவமான சிவத்திடம் பொருந்துவதற்கு ஏற்ற அறிவைத் தந்து கருவிகள் வழிப் புலன்களைப் பற்றும் ஆசையை உண்டாக்கி ஆன்ம அறிவுடனே திருவருளும் கலந்து கருவிகளுடன் பொருந்தாமல் கூடிப் புலனறிவு பெறும் தன்மையான் அறிவை அளித்து அடியவர் நடுவுள் இருக்கும் அருளை அளிக்கும் தன்மையுடையவர் சிவம் ஆயினர்.

1800. அருட் சத்தியால் பிறந்து வளர்ந்து அருளால் அழிந்து இளைப்பு நீங்கி மறைந்துள்ள அவனை ஒளிமயமான ஆனந்தம் அடையும்படி செய்து பின்பு அவன் தானே எழுந்தருளிக் குருமண்டலத்தை விளங்கச் செய்தான்.

1801. என் குருநாதன் தன் அருட்சத்தியால் இறப்பைக் தவிர்க்கும் ஒளி மண்டலத்தில் இட்டுத் திருவருட் சத்தியைப் பதிப்பித்து என்றும் ஒரேவிதமான அனபையும் அளித்து சிவபோகமாகிய அழுதையும் உண்ணச் செய்து அருளால் என் மனத்தில் எழுந்தருளினான்.

1802. அருள் என்னைப் பாசத்தில் பொருந்த்தி அனுபவிக்கச் செய்தது. அந்தப் பாசத்தினால் பற்றாகக் கொண்டுள்ள என்னை அதிலிருந்து வேறுபடுத்தியது, அந்த பாசத்தில் பற்று விட்டதும் அன்புப்பொருளான சிவத்துடன் கூடிய கூட்டத்தில் காட்சிப் பொருளுடன் பிரிவின்றி நிலைபெறச் செய்தது.

1803. பிறவிக்குக் காரணமான இருளைப் போக்கி ஒளியைத் தந்த பெருங்கருணை உடையவன், சிவனை இன்பத்துள் ஆழ்த்தி மறைக்காதபடி சத்தியை பதிப்பித்து மாதவன் உதவுவதால் குறையாத இயல்புடைய கடல் போன்ற கருணையாளன் மேலான பொருள்களுக்கு எல்லாம் மேலானவன். இத்தகைய இய்ல்புடை இறைவனை விரும்பினேன். இதனால் அவன் உறவாய் வந்து என் மனத்துள் புகுந்தான்.

1804. இறைவன் தன் அருளால் என் மனத்துள் புகுந்தான். அருள் இல்லாமல் இருளில் அழுந்தியிருப்பவர்க்கு மனம் புகுந்தாலும் அவரால் அறியப்படான். என் மனத்துள் புகுந்து ஆனந்த மயமாக்கிச் சிவமாகச் செய்தான். மனத்துள் புகுந்த காரணத்தால் நானும் ஆனந்த வடிவு பெற்றவன் ஆனேன்.

1805. ஆராயும் அறிவு மயமான ஆன்மாவுடன் அறியப்படாத மாமாயையும் மாயையின் காரியமான அந்தக் காரணங்களையும் ஐம்பூதங்களையும் இந்திரியக் கூட்டங்களையும் அவற்றுடன் பராசத்தி ஆதிசத்தி இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி ஆகிய ஐந்து சத்திகளையும் பொருந்தியது இறைவனின் திருவருட் செயல் ஆகும்.

1806. பூத காரியம் அனைத்தும் அருளால் நிகழ்வன. அவை மலக் குற்றத்தால் அசைவனவாகவும் அசையாதனவாகவு,ம் அருளில் நிலை பெற்றுள்ளன. இருள் எனவும் ஒளி எனவும் கூறுமாறு எங்கும் உள்ள இறைவன் தன் அருட்சத்தியே திருமேனியாகக் கொண்டு விளங்குவான். திருவருள் அன்றிச் சிவம் வேறாக இல்லை.

1807. சிவம் சத்தி மேலான விந்து நாதம், மேலான சதாசிவம் மகேசுவரன் உருத்திரன் பிறவியில் படும் திருமால், நான்முகன் ஈறாக ஒன்பது வேறுபட்ட வடிவங்களாய்ப் பிரிந்து ஏகனாய் ஒன்றியும் நடிப்பவன் சிவனே ஆவான்.

1808. குருட்டுத் தன்மையுடைய கண் உடையவர்க்குக் கதிரவன் முதலியவை விளங்க மாட்டா. தெளிந்த கண் உடையவர்க்குக் கதிரவன் ஒளியால் எங்கும் ஒளியாய்த் திகழும். அவை போன்று அருட்கண் என்ற பெயரையுடைய அரும் பொருளான சிவம் சத்தி விந்து நாதம் ஆகியவை தோன்றா. நெற்றிச் சக்கரம் திறந்தவர்க்குச் சிவன் தன் நான்கு அருவத் திருமேனிகளையும் உணர்ந்த்த முகத்தின் முன்பு தோன்றியருளுவான்.

1809. சிவத்தின் சத்தியே தனுகரண புவன போகங்களைப் படைக்கும். படைத்தவற்றைச் சத்தியே காக்கும். காத்தவற்றை அதுவே அழிக்கும். அழித்தவற்றை ஓய்வு தந்து அதுவே மறைக்கும். இவற்றுடன் கூடியவனே பரந்துள்ள பொருள்கள் யாவற்றுக்கும் மேலான தலைவனாக உள்ளான்.

1810. மேன்மையுடைய சிவம் சத்தி நாதம் விந்து என்னும் நான்கும் சிவத்துக்குரிய அருள் நிலையாகும். நீங்காத அருவுருவம் சதாசிவம் நிலை பெறுவதற்குரிய மகேசுவரம், அரன், அரி, நான்முகன், ஆகிய நான்கும் நீடிய உருநிலைகளாகும். அழியாத் இந்த ஒன்பதாயும் இவற்றைக் கடந்து நின்று இவை யாவற்றையும் இயக்குவதாயும் உள்ள பரமசிவம் ஒன்றேயாகும்.

1811. ஒப்பில்லாத தன்மையால் கேடற்ற சிவம் தானேயாக நிற்கின்றது. அதுபோல அவற்றின் உயிராக உயிர்களுடன் பொருந்தி அவற்றின் மனத்தே நேயப் பொருளான சிவம் துணை என்று கூறும்படி உடன் நின்று செலுத்தியது விளையாட்டே ஆகும்.

1812. அன்பினால் நிலை பெற்றுள்ள மலமற்ற சிவன் சத்தியுடன் கூடி அதனைத் தொழில்படச் செய்தான். அதனால் நாதம் தோன்றிய்து. விரிந்து நிவிருத்தி முதலாய் ஐந்து கலைகளைக் கூடி அழிவற்ற விந்துவாக விளயும்.

1813. எல்லாமாகப் பரவிப் பரவிந்து வடிவில் நிலைத்துள்ள சத்தியே அனைத்துத் தத்துவங்களிலும் நிறைந்து விளங்குகின்றாள் அவளிடமிருந்தே அசுத்த மாயையும் மேலான சுத்தமாயையும் விளைகின்றன. இந்த இரண்டு வகையான மாயையிலே தேவரும் விரிவாகக் கூறப்பட்ட பிரணவமும் அதன் வெவ்வேறான மந்திரங்களும் நான்கு வேதங்களும் எண்ணில்லாத அண்ட கோடிகளும் தோன்றும்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:12

சம்பிரதாயம்!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

சம்பிரதாயம்!

1778. குருவானவர் மாணவரின் உடல், பொருள், ஆவி மூன்றையும் நீருடன் சுத்தம் செய்ய ஏற்றுக்கொண்டு படர்ந்த வினையால் வரும் பற்றை அறுமாறு விழியால் பார்த்து மாணவனின் தலையில் கையை வைத்து திருவடி ஞானத்தை விளக்கி விரையக் கட்டினையுடைய பிறவியைப் போக்கியருளினான்.

1779. உயிரும் உடலும் ஒளிப்பொருளான வியப்புப் பொருந்திய பரமும் பொருந்திய பிராணனும் இவற்றை இயக்குகின்ற சிவமும் சத்தி முதலியவற்றை அறிந்து உய்யும்படி குருநாதன் ஆட்கொண்டனன்.

1780. மேற்குத் திக்கை ஒளிரச் செய்த குருநாதன் நாள்தோறும் என்னை இங்கு நினைப்பாயாக என்று உணர்த்திய அப்பொருள் உச்சிக்கு கீழேயும் உள்நாக்குக்கு மேலேயும் உள்ளது. இதுதான் மேலான பதமாகும். இதனை கையால் சொல்ல முடியாது.

1781. தான் விரும்பியபடியே எங்கும் அனுபவம் இல்லாது பிதற்றித் திரிந்து கொண்டிருந்த என்னை என்னிடம் உள்ள குற்றங்களை எல்லாம் அகற்றி பின் குருவான தன்னையும் மாணவனான என்னையும் சமமாகச் செய்தான். நாணயமாற்று வணிகம் முடிந்தது.

1782. இவ்வுலகத்தில் வாழும் பல உயிர்கட்கு எல்லாம் தலைவனான சிவன் உடனாய் இருக்கும் இயலபை இவ்வுலகத்தவர் சற்றும் அறியார். சுத்த மாயையின் மாறுபாட்டைப் போக்கி எல்லாவற்றையும் கருவாகக் கொண்ட சிவத்தை அறிந்து கொண்டேன்.

1783. வினைக்கு ஈடாய் உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற நினைவு கொண்டு தன் ஞான சத்தியால் விந்து நாதங்களான திருவடியை விரும்பிப் பதிப்பித்தும் பெருமை அற்ற உடலில் பற்றை ஒழித்து சிவம் சீவனில் கலந்து மறைந்து அவனே தானாய் விளங்கும்.

1784. எனக்கு பக்குவம் வந்தபோது அடிமையாய் ஏற்றுக்கொள்ள எண்ணியவன் எனது உயிர் பொருள் உடம்பின் கருவிக் கூட்டம் ஆகியவற்றை அவனுடையதாக்க் கொண்டான். வல்லமை யாவற்றையும் த்ந்தவனே எடுத்துக் கொள்வதால் என்னிடம் உள்ளவற்றை எடுத்துக் கொண்டான் எனச் சொல்வதற்கில்லை.

1785. குறியாக கொள்கின்ற உடலும் உடலை உடைய உயிரும் குடி நெறிப்பட இயங்கும் பிராணன் நிலைபெற்ற சிவன் இயமனால் நீக்கப்படும் உடம்பை எடுத்துக் கொண்டு இயல்பை உடம்புடன் கூடியிருக்கும்போதே அறிந்து பிரிக்க அறிந்து கொள்ளாதவர் பேயைப் போல அலைவர்,.

1786. சிவன் என்ற ஒளியை உணரும் இய்ல்பு உடையவர்க்கு எல்லா நுண்ணிய உலகங்களும் விளங்கும். அத்தகைய உணர்வு உடையவர் இந்த உலகத்தை அனுபவப் பொருளாய்க் காணாது சாட்சியாகக் காண்பதால் எத்தகைய துன்பமும் அவர்க்கு இல்லை. இவ்வாறு உணர்வு உடையவர்கள் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவர் ஆவார்.

1787. உடலது பரப்பில் அலந்து துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிக விரிந்து சிவத்துடன் பொருந்திக் குவிந்து சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடியிருந்த அன்பர்க்கு தூய்மையான அருள் சத்தியை பதிப்பித்த சிவபெருமானை என்ன் சொல்லி வாழ்த்த முடியும்.

1788. நான் என்றும் நீ என்றும் நீ வந்து அடைதல் என்?றும் வேறாகப் பிரிந்து உணரக்கூடிய நிலை இல்லை. உடலும் உடலில் உள்ள உயிரும் போல் நாம் உடனிருக்கு வானத்தில் இறைவன் வேறாக இருப்பதாக எண்ணில் வான் மண்டலத்துள் வந்து பொருந்தி நின்று மனிதர் அனுபவிக்கின்ற இனபங்களைத் தேன்பொல் சுவைத்து அழுந்தியிருப்பர்.

1789. சிவனைத் துவைத பாவனையில் வணங்கும் சரியை கிரியை வழிநிற்பவர் அவ் இறைவனை அறிய மாட்டார். காணப்படுபவனைக் காண்பவன் அறிந்தால் அது இரு பொருளாக இல்லாமல் ஒரே பொருளாகக் காண்பவனும் காட்சியும் ஒன்றாக ஓடும். இவ்வாறு சரியை வழியில் நிற்பவனும் ஒன்றாய் உணரின் காணப்படும் பொருளான சிவனும் காண்பவ்னும் ஒன்றாகச் சீவன் சிவமாய் விடும்.

1790. தான் இந்தச் சிவனே என்று எண்ணுபவனான சீவன் உடலால் இதனைத் தான் எனவே எப்போதும் நினைக்கும் உயிர்போல் உளன். அவன் வானில் பரவும் பெரிய மேகத்தைப் போல் அருள் காட்டுபவ்னாக இருக்கின்றான். அதனால் நான் வான் தலைவனாக ஆனேன்.

1791. பெருந்தனமை உடைய தான் என்ற சிவனும் யான் என்ற சீவனும் வேறாக ஒரு சமயத்தில் இருக்கவில்லை. அத்தன்மையை இறைவன் இயல்பாகவே அறிகின்றான். உண்மையாகவே உயிர்களைத் திருத்தம் எய்தச் செய்யும் சிவன் தம்மை உடல் உயிர்போல் பிரிவில்லாமல் பொருந்தியிருப்பான்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:11

சிவலிங்கம்!

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

சிவலிங்கம்!

1773. ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகம், நீர், வீசும் காற்று, காற்றினிறு தோன்றும் தீ என்னும் இந்த நான்கும் தத்தம் நிலையும் முறையே மாறாமல், ஒழுங்கு பெற நிலைத்திருப்பதற்குரிய வானமும் ஆகப் பரந்து விரிந்து விளங்குபவன் சிவன். அவனை ஒரு குறியில் வைத்து வணங்கும் முறையை யான் அறியேன்.

1774. எவ்விடத்தும் பரவி விளங்கும் இறைவனை ஓர் எல்லைக்குட்படுத்தி வணங்கும் ஓரு முறை உண்டு. பொங்கி வருகின்ற உணர்வான நீரையுடைய சுவதிட்டானமான மலரை ஏத்தி அவனது திருப்பெயரை நினைந்து உணர்பவர்களுக்கு சிவன் எங்கும் துளை செய்து கொண்டு போகமாட்டான்.

1775. எம் இறைவனை உலக முதல்வனாய் நான் கண்டேன். நான் அப்பெருமானின் திருவடிகளை நன்மை தருவன என்று அறிந்து தொழ ஐம்பொறிகளின் வழி அறிவு செல்லாமல் அவற்றைக் கடந்து சிவத்துடன் பொருந்தி இன்பம் அடைய அப்போது ஆதிப்பிரானான சிவன் தனது திருவருள் சத்தியைப் பதிப்பிப்பான்.

1776. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், பலத்தை அளிக்கும் சதாசிவன், பரநாதம், நன்மையைத் தருகின்ற சத்தி சிவன் என்ற வடிவமாய் பயன்களைத் தருகின்ற இலிங்கமே மேலான சிவமாகும்.

1777. மூலாதாரத்தினின்று நடு நாடி வழியாய் போகின்ற செவ்வொளியுடன் கூடி ஆவி எழுகின்றவரை உடலில் உள்ள ஆதார கலைகளிலும் உடலை விட்டு நீங்கிய நிராதாரக் கலைகளிலும் பொருந்துவதும் நீங்குவதுமாய் உள்ளத்தை நிறுத்திப் பழகுவதில் மேன்மையான சிவசக்தியானது உண்டாகும்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:10

ஞானலிங்கம்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

ஞானலிங்கம்!

1763. சிவன் உருவம் அருவம் அருவுருவம் என மூன்று வகையான திருமேனியைக் கொண்டவன். நிலைபெற்ற பல உயிர்க்குக் குருவாகும் தன்மையுடையவன். அவனே சதாசிவமாய்க் கற்பக மரம் போல் வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அளிப்பவன் ஆவான்.

1764 சதாசிவத்திற்குக் கீழ் உள்ள நானமுகன், திருமல், உருத்திரன், மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவம் உடையவர்கள். மெலே உள்ள நாதம் விந்து சத்தி சிவம் ஆகிய நால்வரும் அருவம் உடையவர்கள். நான்கில் நடுவே உள்ள சதாசிவம் அருவுருவமாய் உள்ளதால் இவ்வொன்பது வகையும் பரமசிவமே ஆகும்..

1765. தேவர் எல்லோர்க்கும் நாதனும் நான்கு திசைகளிலும் முகமுடையவனும் உருவ மூர்த்திகள் நால்வரையும் செலுத்துபவனும் உருவுக்கும் அருவத்துக்கும் இடையே உள்ள அருவுருவமான சதாசிவத்தை யார் பெருமான் என்று வணங்குகின்றாரோ அங்குப் பிரளயமாகிய சதாசிவம் தோன்றுவார். அப்படி அவரது திருவடியை அடையவும் கூடும்.

1766. ஆண்டு, திங்கள், நாள் என்ப்னவற்றைச் செய்கின்ற சிவக்கதிரவனான சதாசிவத்துடன் சத்தியை வழிபடினும், இருவரையும் வெவ்வேறாக எண்ணிடாது ஒருவராய் எண்ணித் தியானித்தாலும் பயன் ஒன்றேதான். ஆதலால் வினை நீங்க இவ்வாறு வணங்கினேன்.

1767. ஆதி பரம் பொருளான சதாசிவமே அவரவர் மண்டலத்தில் விளங்குவர்.. அவர் சோதியாக அடியவர் வணங்கும் பெருந் தெய்வமாகும். ஒவ்வொருவரின் அண்டா காயத்தில் நீதி வடிவாய் விளங்கும் பெருமை கொண்ட இறைவனாகும். அவர் எவரது உடலை இடமாகக் கொள்ளினும் மலம் அற்றவர் இத்தகைய என் இறையின் ஒரு பாதியில் பராசத்தி திகழ்கிறாள்.

1768. சத்திக்கு மேலே விளங்கும் பராசத்தி அண்ட கோச வெளியில் விளங்கும் வகையில் தூய்மையான சிவபதம் இங்கு ஏனைய தத்துவங்களில் தோய்வின்றி விளங்கும் வெளி உள்ளது அத்தன்மையுடையதாய் இறைவன் திருவடி விளங்கும். இவ்வெளிக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் ஒத்ததாயும் இருக்கும் சிவத்தின் உண்மையான நிலை.

1769. ஞானலிங்கம் என்ற ஒளி மயமான சதாசிவனை அறிந்தால் உலகம் எல்லாம் அங்கு நுண்மையாய் விளா\ங்குவது தெரியும். வல்லமை இருக்குமாயின் அழியாமல் இவ்வுலகில் இருத்தலும் கைகூடும். தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாய் பற்றின் சத்தி வடிவில் அமைந்த சிவம் சிந்தையிலே விளங்கும்.

1770. எம் தந்தையான சதாசிவத்தையும் என் அம்மையாகிய பிரணவ சத்திகளின் கூட்டத்தையும் முதன்மையாய்க் கருதி முறையாய் உணர்தலே ஞானமாகும். அவை பொருந்தியிருந்த புருவ நடுவில் விளங்குகின்ற விசாலாட்சியை இறைவன் உயர்ந்த இடத்தில் வைத்து விருப்புடன் விளங்கினன்.

1771. சத்தி சிவத்துடன் விளங்கும் தகுதிக்கு ஏற்ப உயிரின் நிலை விளங்கச் செய்து அதற்கேற்பச் சுத்தமாயை அசுத்த மாயை என்னும் கூட்டத்தில் சேர்ந்து உயிர் பக்குவம் ஆனபோது சுத்த மாயையில் விளங்கும் ஒளி மண்டலத்தை உணர்த்தி அதைக் கடக்கும்படி செய்து சீவனின் சித்தத்திலே சிவம் தங்கிச் சீவனை சிவம் உறையும் கோயிலாக ஆக்கும்.

1772. இவ்வுலகம் சிவசத்தியின் விளையாட்டாகும். வடிவம் உடைய அறிவான சிவமாகும். அறிவான சிவன் வடிவான சத்தியும் ஆகும். சத்தி சிவம் இல்லாமல் உடலுடைய உயிர்கள் ஒன்றும் நிலையில்லை. சத்தியே தேவைபட்டபோது சமைத்து எக்காலத்தும் வடிவம் பெறும்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:08

ஆத்துமலிங்கம்!

Written by

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

ஆத்துமலிங்கம்!

1753. அகாரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும் உகரம் சத்தி என்றும் அறிந்தால் அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.

1754. அண்ட கோளத்தில் வடிவமான படைப்புக் காரணமாயும் அதனுள் நிலைத்ததாயும் உள்ள விந்துவும் மேதை முதலிய சோடச கலைகள் ஆகிய நாதமும் அடுக்கு அடுக்காக விரிந்தன. ஆதாரமான விந்து உயர்ந்த இடமாகக் கொண்டு நிலை பெற்றுள்ளது. இவ்வகையாக உயர்ந்து செல்வதில் விந்து நாதங்களின் புணர்ச்சி உள்ளது.

1755. இயங்க இயலாத மலை, நிலம், செடி, முதலியவை சத்திசிவ சேர்க்கையாம். அசையும் இயல்புடைய உயிர்ப் பொருள்களும் சத்தி சிவ சேர்க்கையாம். அறிவான வான மண்டல நாதனான சதாசிவமும் சத்தி சிவப் புணர்ச்சியாம். திருக்கோவிலில் உள்ள தாவரங்களும் சத்தி சிவப் புணர்ச்சியாம்.

1756. சிவசத்தி வடிவான ஆத்தும லிங்கத்தில் அழகான பேரொளியைக் காணலாம். வான் கூற்றில் ஐம்பது எழுத்துக்களும் தோன்றும் இடம் அதுவே ஆகும். சகசிர தளத்தில் பொருந்தி விளங்கும் பேரொளியில் சத்தியுடன் அகர வாச்சியப் பொருளான சிவமும் அழகோடு கலந்து விளங்கும்.

1757. ஆத்மாவிடம் பொருந்திய விந்துவும் நாதமும் ஆன்மலிங்கம் ஆகும், இந்த விந்துவே நாதத்துக்கு இடமாய் இவ்விரண்டும் பொருந்தி ஆன்ம லிங்கமாகும். இந்த இரண்டையும் ஆதாராமாய்க் கொண்டே நான்முகன் முதலிய மூவரும் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்கின்றனர்.

1758. நல்ல ஆன்ம தத்துவமே சத்திக்குப் பீடம். வித்தியாதத்துவம் சத்திக்கு நல்ல கண்டம் பொருந்தும் சிவதத்துவம். சத்திக்கு நல்ல இலிங்கமாக விளங்கும். வானக் கூறான சதாசிவம் தத்துவமே நல்ல சத்தி மண்டலம்.

1759. சிவன் என் உள்ளத்துள் புகுந்து எனது உயிர் நிலை பெறும் வாழ்வில் மனத்துள் பேரின்பம் சுரக்கும் காலத்து நன்மை பெருக நான் என்னையும் நாதனையும் நாடும்போது என் தலையின் உச்சியில் விளங்கி அவன் ஆட்கொள்வான்.

1760. மேலானவற்றுள் மேலானவனும் என் தந்தை போன்றவனும் குளிர்ந்தபிறை சூடியவனும் அடியார் மனதில் கோவில் கொண்டு விளங்குபவனும் தேவர்கள் தலையினுள் ஒளீமயமாக விளங்கும் குண்டலியான தலைவனும் ஆன சிவம் என் உள்ளத்துள் நீங்காமல் எழுந்தருள்வான்.

1761. பசுவின் தன்மை கொண்ட் என் உள்ளத்தை கோயிலாய்க் கொண்டவன் பாம்பு அணிந்த சடையை உடையவன் அக்கினி நீர் பொருந்தப் பெற்றவன் செய்யும் புண்ணியம் அனைத்துமானவன் இத்தகைய இயல்புடைய இறைவன் தலைவன் அல்லன். நானே தலைவன் எனக் கூறுபவர் அறியாமை உடையவர்.

1762. தேவர்கள் சிவபெருமான் அங்கு நின்றான். இங்கு கிடந்தான் என்று எட்டு திக்குகளிலும் சென்று வணங்குவார்கள். அவன் என் உயிர்க்கு உயிராய் என் மனத்தில் பொருந்தி நின்றான். அத்தகைய எம் தலைவன் என்றும் வணங்கிக் கொண்டிருப்பேன்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:07

சதாசிவ லிங்கம்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

சதாசிவ லிங்கம்!

1730. திருவருளுடன் கூடிய இரு திருவடிகள் பூமிக்கு மேலாக புகழ்ந்து பேசப்படும் பத்துக் கைகள் திசைகள் எல்லாம் பரவி எழுவதாக எங்கும் பார்க்கும் முகங்கள் ஐந்தாக சிவந்த கண்கள் பதினைந்தாக நல்ல ஒளியையுடைய் முத்தின் நி’றத்துடன் குடிய சதாசிவத்தைத் துதிப்பீராக.

1731. நான்முகன் திருமால் உருத்திரன் இவர்கட்கு மேலான மகேசன் இவர்களுக்கு மேலான ஐந்து முகங்களையுடைய சதாசிவம் விந்து நாதம் ஆதார சத்தியான குண்டலினி முடிவாக உள்ள சிவன் என்னும் யாவும் பொதுவாக சதாசிவம் எனப்படும்.

1732. சதாசிவம் என்னும் சத்தியிடம் நிவிருத்தி பிரட்டை,, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகிய கலைகள் இடம் பெறும். இந்த ஐந்து கலைகள் சார்பாக சிவசூரியன் எழும். அதன் ஒளிக்கதிர் உள்ளும் புறமும் சூழ அண்ட கோசம் நிறைந்து விளங்கும். அந்த ஓளியில் எட்டுத் திக்குகளும் மேல் கீழ் என்ற இரு திசைகளும் பொருந்தி ஒரே ஒளிமயமாய் விளங்கும்.

1733. பத்துத் திக்குகளுடன் கூடியது அண்ட கோசம். அதில் சிட்சை, கற்பகம், வியாகரணம், சந்தோபிசிதம், நிருத்தம், சோதிடம் என்னும் ஆறு சாத்திர அறிவும் உளது. அங்கு இருக்கும் யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களீன் அறிவும் உண்டு. அங்குப் பொருந்திய சரியை முதலிய மார்க்கங்களுடன் சமய அறிவும் உண்டு.

1734. சமய்த்தில் கீழ் அவத்தைகள் ஐந்து மேல் அவத்தைகள் ஐந்து உண்டு. சமயத்தில் கதிரவனின் பன்னிரண்டு இராசிகளும் உண்டு. சமய்த்தில் பெருமை உடைய சந்திரகலை பதினாறும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் காண்ப்படும் உருவத்துக்கும் காண்ப்படாத அருவத்துக்கும் இடையே சதாசிவ நிலை இருக்கும்.

1735. சதாசிவப் பெருமானுக்கு உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்குப் பக்கம் உள்ள முகங்கள், உச்சிமுதல் முறையே வெண்பளிங்கு போன்றும் செவ்வரத்த மலரைப் போன்றும் பால் போன்றும் உள்ள இவ்வைந்து முகங்களும் எனக்கு அருள் செய்தன.

1736. சதாசிவத்திற்கு ஈசானம் முதலிய் ஐந்து முகங்கள். கண்கள் பதினைந்து, கைகள் பத்து. அவற்றில் பத்து வகைப் படைகள். இத்தகைய சதாசிவம் என் மனத்துள் புகுந்து நிறைந்து விளங்குகின்றான்.

1737. சிவசத்தி பூமியாகும். சதாசிவம் வானக் கூறாய்ப் பூமிக்கு மேலும் கீழும் பரவியுள்ள அண்ட கோள்களாகும். சத்தியும் சிவமும் மிக்குள்ள நிலைப் பெருளும் இயங்கும் பொருள் யாவும் சத்தி வடிவம். சதாசிவம் அருவம் ஆகும். இவ்வா/று சத்தியும் சிவமும் பொருந்திய தத்துவங்கள் முப்பத்தாறு ஆகும்.

1738. தத்துவம் என்பது அருவம் ஆகும். அது சரம் அசரமாய் விரிந்து நிற்கும் போது உருவம் ஆகும். உருவமாய் விரிந்தபோது சுகத்தின் விளக்கம் ஆகும். இவை அனைத்தும் எல்லாமாக விளங்கும் தத்துவம் எனப்படுவது சதாசிவமே.

1739. உள்ளத்தில் பொருந்திய சதாசிவமானவனைத் துதியுங்கள். வேறு வகையாகக் கூறும் நூல்களால் அறியப்படாமல் கடந்து விளங்குவான். தாம் மேல் ஏறுவதற்காகப் புகழும் தேவருடன் மாறுபட்டு நிற்பான். அத்தகைய இயல்புடையவன் என் மனத்தில் புகுந்து விள்ங்கினான்.

1740. கரிய நிறக் கழுத்தும், வலக்கையில் கொண்ட மழு என்ற ஆயுதமும் சுருண்ட சடையில் ஒளிரும் பிறைச்சந்திரனும் அருள் பொழியும் சிந்தையுடைய எம் ஆதியாகிய சதாசிவத்தை தெளிவுடைய என் உள்ளத்தில் தெளிந்திருந்தேன்.

1741. சீவர்களுக்கு அருள் செய்வதற்காகச் சத்தி நிற்கும் ஐந்து முகங்களைப் பற்றிக் கூறினால் வடதிசை நோக்கிய வாமதேவ முகம் சிறந்தது. இது சொல் இல்லாதது. மௌனமாக விளங்கும். கிழக்கு நோக்கிய தத்புருடமுகம் உடலில் உள்ள தத்துவங்களை இயக்குவது. சிரத்தைப் போன்றது. தெற்கு நோக்கிய அகோரம் தலையின் முடியில் வடகீழ்த்திசை நோக்கி விளங்குவது ஈசான முகம்.

1742. நாண் போனற ஈசானத்தைத் தலையின் நடுவில் சுட்ட வேண்டும். நாணுவின் தற்புருடத்தை முகத்தில் சுட்ட வேண்டும். காணும் அகோரத்தை இதயத்தில் சுட்ட வேண்டும். மாட்சிமையுடைய வாமத்தைக் குறியில் பொருந்த்த வேண்டும். சத்தியோசத்தை நல்ல அடிகளில் பதிக்க வேண்டும்.

1743. இதயம். தலை, முடி, கவசம், கண் ஆகியவை அங்கங்களாகும். இவற்றைக் குறிக்கின்ற மந்திரங்கள் வஞ்சனையற்ற சீவர்களுக்கு அறிவு விளக்கம் தரும். சுத்த மாயை, இவற்றின் நிறம் பச்சை, உடல் எல்லாம் ஒளி மயமானபோது சிவந்த ஒளியில் குண்டலினி சத்தி மின் ஒளிபோன்று விளங்குவாள். சதாசிவத்திடம் உள்ள பத்துப் படைக்கருவிகளும் உதய் சூரியனைப் போன்று ஒளி மயமாய் விளங்கும்.,

1744. இருதய மந்திரம் இறைவனுக்கு ஞான சத்தியாகும். சிரசு மந்திரம் வானத்தில் விளங்கும் பராசக்தி யாகும்.. சிகா மந்திரம் ஆதி சத்தியாம். அழகுடைய கவச மந்திரம் பல நிறங்களையுடைய இச்சா சத்தியாகும். நேத்திரம் கிரியா சத்தியாம்.

1745. குண்டலினி சக்தி நாற்கோண்மான மூலாதாரத்தில் உள்ளபோது சலதாரையை நோக்கியதாக உள்ளது. குண்டலினி கழுத்தை அடைந்தபோது உறக்க நிலை ஏற்படும். அது நெற்றியை அடைந்தபோது நீரோட்டம் போன்ற உணர்வாய் விளங்கும். இப்படி ஓலி வடிவாய் விளங்கும் சத்தி வடிவே சதாசிவம்.

1746. பெருமையுடைய சதாசிவத்தை எவ்வ்வளவு நேரம் தொழுதாலும் அவர் பஞசப் பிரம்மாகவே விளங்குவார். அவர் மூலவாயுவாய் எழுந்து ஆதாரங்கலை எல்லாம் கடந்து ஊர்த்துவ சக்கர தளத்தின் மீது சென்றபோது ஒன்பது நிலைக்ளிலும் பொருந்தி விளங்குவார்.

1747. உடம்பின் உள்ளும் அதைக் கடந்தும் உயிருடன் உடனாய்ப் பொருந்தியிருப்பது எப்போதும் எம் இறைவனுக்கு இயல்பு ஆகும். அந்த உணர்வு உண்டான போது சிவனின் திருவடியான சூரிய சந்திர கலையில் திருந்தித் தலைக்குமேல் செல்ல என் உள்ளத்துள் தியானித்து நின்று தொழுதேன்.

1748. உலகு முழுவதும் ஒளிப் பொருளானாய் விளங்கும் பரசிவத்தை அவன் அருளால் உணர்ந்தேன். அப்பொருமானைச் சீவர்களாகிய நாம் உய்யும் படி பூமி தத்துவத்திற்கும் கொண்டு வந்தேன். எனது மனம் என்ற கோவிலில் புனிதனான இறைவனைக் கூடினேன். அத்தூயமையே உருவாய் உள்ளவன் நாத வடிவாய்க் காட்சி தந்தான். சிவக்கதிரவனைப் பாட்டால் நான் பணிய அவன் ஒளியால் என்னுடன் கூடியிருந்தான்.

1749. அக்கினி மண்டலம் கதிரவன் மண்டலம் திங்கள் மண்டலம் என்பனவற்றுள் அக்கினி ஒளியுண்டாக ஒன்பது பேதத்தில் நடுவில் உள்ள சதாசிவம் பதினான்கு உலகங்களையும் தாங்கி நிற்கும். அந்தச் சதாசிவமே ஆதியாகவும் அந்தமாகவும் உடலில் சந்திர மண்டலம் விளங்க உதவும்.

1750. இயங்கும் ஒளியின் உடம்பு சிவலிங்கமாய்த் திகழும். அந்த உடம்பே சதாசிவமாய் அமையும். அந்த உடம்பே சதாசிவம் பொருந்திய சிவானந்த நிலையாகும். அந்த உடம்பே எல்லாவற்றுக்கும் மேலான சிவமாகும்.

1751. மேதா கலையான அகரத்தை சிவம் என்று எவரும் அறியமாட்டார்.. உகாரத்தால் குறிக்கப்படும் சத்தி எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்கும். இத்தகைய சிவமும் சத்தியும் பொருந்தி உலகமாய் இச்சிவசத்தி தலையைத் தாண்டியபோது நாத ஒலி ஏற்படுமாறு செய்தது.

1752. சதாசிவ லிங்கத்துக்கு பீடம் ஓங்காரம். இலிங்கத்தின் நல்ல கண்டம் மகாரம்.. இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம். சிவலிங்கத்தின் மேற்பகுதி அகாரம். விந்து, நாதம் ஆகும்.

#####

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####

அண்டலிங்கம்!

1712. உலகத்திற்கு காரணமான இலிங்கம் என்னும் பெயரை உடைய சிவத்தை யாரும் அறியார். எட்டுத்திக்கிலும் பரவியிருப்பது உலக லிங்கமே ஆகும். அறுபத்து நான்கு கலைகளையுடைய பிரண்வமும் இலிங்கமாகும். உலகம் முழுவதும் காரண நிலையில் சிவத்திடம் உள்ளதால் அதுவே சிவஇலிங்கம் என்ற வடிவம் ஆகும்.

1713. உலகத்தை படைக்க எண்ணிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சத்தியின் துணைக் கொண்டு இவ்வுலகத்தை தோற்றுவித்தான். குண்டலினி சத்தியின் ஆற்றலால் உலகு வடிவாய்க் காட்சி தருகின்றது. சிவசக்தியால் அவை உலகில் வேறு வேறு அறிவு பொருந்தியவாய் விளங்கும்.

1714. போகத்தையும் வீடு பேற்றையும் அதற்உரிய ஞானத்தையும் அதன் பயனான இன்பத்தையும் உடலையும் நிலம் முதலிய முப்பதாறு தத்துவங்களையும் கடந்து ஒன்றாக நிற்கும் நிலையையும் அருள்பவன் சதாசிவன். ஆகமங்க?ளால் உணர்த்தப் பெற்ற ஆறு அத்துவா மூர்த்தி சிவமே ஆகும்.

1715. எண்ணில்லாத தேவர்கள் என் இறைவனை வழிபட்டனர். நறுமணத்தை தாங்கி வரும் தென்றலைப் போன்ற வள்ளல் என்று வாழ்த்தினர். மகிழ்வுடன் ஆரவாரம் செய்தனர். ஆயினும் அவன் அண்டங்களைக் கடந்து நின்று காக்கின்/றான் என்ற உண்மையை அவர் அறியார்.

1716. ஒளிமிக்க சுடரான தீயும் நான்முகனும் திருமாலும் தேவகுருவும் ஒளிவடிவான கதிரவனுடன் இந்திரனும் ஆகிய இவர்களிடம் கண்ணின் ஒளிபோல் கலந்து நின்றும் மற்றத் தேவர்களிடம் உணர்வைப் பெருக்கும் சந்திர ஒளிபோலும் எல்லா இடங்களிலும் சிவம் நீக்கம் இல்லாது நிறைந்து விளங்கும்.

1717. சிவபெருமான் ஸ்தாபித்த இலிங்கத்துள் நின்றும் அருள் வல்லவன். அப்பெருமான் மேன்மையுடைய ஞானாகாயத்துடன் உள்ளவன் என்று எண்ணி வழிபடுபவர் இலர். ஞானாகாயத்துள் இருக்கின்றான் என்பதை அறிந்து வழிபடுபவர்க்கு ஆறு ஆதாரத்திலும் விளங்கும் குண்டலினியாய் அவன் விளங்குவான்.

1718. மிகவும் சிறந்த சிவாலாயத்தைப் பற்றி அறிந்து கொள்பவர்க்கு கருவறையின் மேல் விளங்கும் விமானமே பருலிங்கம். அதனுள் உள்ள சிவலிங்கம் நுண்மையுடைய லிங்கமாகும். இலிங்கத்திற்கு முன் உள்ள பலிபீடமே பத்திரலிங்கம்.

1719. முத்துடன், மாணிக்கமும், பவளமும் செதுக்கப்பட்ட மரக்கொம்பு கல் திருநீறு, மரகதம், சிவாகமம், சாதம், அரிசி என்பன்வையும், மலர், மணல் என்பவையும் சிவலிங்கம் அமைத்தற்குரியவையாகும்.

1720. இறுகிய தயிர், தூய நெய், பால், பசுஞ்சாணம், விளக்கிய செம்பு, அக்கினி, பாதரசம், சலம், நன்கு வெந்த செங்கல், அழகிய இலவம், பொன் என்பனவற்றால் அழகு விளங்கும் சிவலிங்கமாகக் கொள்க.

1721. வளமையுடைய படிகலிங்கம் அந்தணர் பூசை செய்யத் தக்கது. பொன்னால் ஆன் லிங்கம் மன்னர் பூசிக்கத் தக்கது. மரகதலிங்கம் குறைவற்ற வருவாயை உடைய வாணிகர் வழிபடுதற்குரியது. தொண்டு நெறியையுடைய வேளான் தொழில் உடையவர் வழிபடற்கு வாணலிங்கம் உரியது.

1722. சிவனை இலங்கத் திருமேனியில் உணர்ந்தவன் அப்பெருமானின் எங்கும் கலந்துள்ள தன்மையை ஆராய்ந்து எவ்வகையாலும் உணரமுடியாது நின்ற இறைவன், உண்மை அறிவால் மண், நீர், தீ, காற்று, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் கலந்திருப்பதை உணர்ந்தபோது என் உடலைக் கோயிலாக கொண்டு விளங்கினான்.

1723. முன்பு ஈட்டிய பாவங்களை நீக்குபவன் அனைத்தும் ஒடுங்குவதற்கு இடமாய் நின்ற புண்னியன். இத்தகைய சிவமே அகன்ற பிரபஞ்சமாய் அவற்றுள் மற்றவர் அறியாமல் கலந்திருக்கும் அவனை நாடியவர்க்கு அழியும் உடலுள் ஒளி செய்யும் பொருட்டு இடமாக கொண்டிருப்பவன் ஆவான்.

1724. ஆறு ஆதாரமாலையை அணிந்திருக்கும் திருவடி நிலம் ஆகும். ஒளியுடைய கங்கையாற்றை அணிந்த திருமுடி வானம் ஆகும், இவன் யாவற்றுள்ளும் கலந்திருக்கும் முறையில் அவனது உடம்பு வானமானது. இதுதான் ஆதிபகவானான சிவம். அண்டத்தை திருமேனியாகக் கொண்டு விளங்கும் தன்மையாகும்.

1725. நிலமாய் உள்ள சத்தி பீடத்தின் மீது விளங்கும் இலிங்கம் வானை அலாவி நிற்கும். அலை வீசும் கடலே திருமஞ்சன சாலையாகும். மலைமீது விளங்கும் மேகமே திருமஞ்சன நீராகும். வானத்தின் சிறு ஒளியாய் ஒளிரும் விண்மீன்களே அண்டலிங்கத்துக்குரிய மாலையாகும். அளவிடுதற்கு அரிய சிவத்துக்கு ஆடை எட்டுத் திசைகள் ஆகும்.

####

பிண்டலிங்கம்!

1726. மக்கள் உடலின் வடிவமே சிவலிங்க, ஆகும். மனித உடலும் உடலைச் சூழ்ந்துள்ள பகுதியும் அறிவாலயம். மக்கள் உடல் சதாசிவத்தின் வடிவத் திருமேனி. மக்கள் உடலில் உள்ள அசைவு எல்லாம் கூத்தப் பிரானின் கூத்தே ஆகும்.

1727. ஒன்று கூடும் முறையில் நிலம், நீரிலும், நீர் தீயிலும், தீ காற்றிலும், காற்று வானத்திலும் ஒடுங்கித் தூயமை பெற அப்படியே பூதங்களுக்கு காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன் மாத்திரைகளும் ஒடுங்கும்படி வன்மையை அருளும் ஐம்பூதத் தலைவன் சிவத்தை வணங்குங்கள். அவ்வாறு செய்யின் உடல் அழிந்தாலும் அழியாது மேலும் நுண்ணுடலில் நிலைபெற்று விளங்கும்.

1728. உடம்பு உண்டான போதே உடலுள் குடி புகுந்த ஐபூதத் தலைவர்களும் அவரவர் தொழிற்படும் நுழைவாயில் நின்று உயிருக்கு வேண்டிய அறிவை அளித்தருள்வர். அன்னை வீட்டில் புகுவது போல் விருப்பமுடன் தலைவன் என் உள்ளத்தில் புகவும் அந்த வாயில்களைத் தன்னுடையதாக்கிக் கொண்டு சிவம் ஆண்டருளினான்.

1729. பெருமையுடைய இறைவன் இவ்வுடலை அவன் விளங்குவதற்கு ஏற்ற கோயிலாகக் கொண்டான்,. நான்கு இதழ்களையுடைய மூலாதாரச் சக்கரத்தை இடமாய்க் கொண்டான். இவ்வுடலின் பத்து நாடிகளின் செயல்களையும் தான் ஏற்றுக் கொண்டான். புலன்கள் செயல் படாதவாறு வென்று வாயில் கொண்டான்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 11:56

ஆறு ஆதாரம்!

Written by

ஏழாம் தந்திரம்!

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

####

ஆறு ஆதாரம்!

1704. நான்கு இதழ் தாமரை வடிவான மூலாதாரம், ஆறு இதழ் தாமரை வடிவான சுவதிட்டானம், பத்து இதழ் தாமரை வடிவமான மணிபூரகம், பன்னிரண்டு இதழ் தாமரை வடிவமான அநாதகம், இவற்றுக்குமேல் இருக்கும் பதினாறு இதழ்தாமரை வடிவான விசுத்தி என்ற இந்த ஐந்து ஆதாரங்களையும் தரிசித்தபின் இரண்டு இதழ் தாமரை வடிவான ஆஞ்ஞையில் பழம் பொருளாகிய சிவத்தின் திருவடியைக் காணலாம்.

1705. நாத தத்துவத்தில் பன்னிரு கலைகளுடன் கூடியது சூரிய மண்டலம். மேதை முதலிய பதினாறு கலைகளுடன் கூடியது சந்திரமண்டலம். மேதை முதலான கலைகளில் நாதாந்தத்திற்கு மேல் விளங்குபவள் பராசக்தி. அறிவான பிரசாத நெறியில் வேற்றுமை இல்லாத அறிவால் சென்றால் மேதை முதலான ஆதாரம் கடந்த நிலையில் சிவன் விளங்குவான்.

1706. பிரசாத நெறியில் நின்று மேல் கீழ் என்ற பாகுபாட்டைக் கடந்து ஒரே ஒளியாய் காணும்போது அவனே தான் ஆன இறைமைக் குணங்கள் ஆறும் எங்கும் பரவிய பரம்பொரூள் கார்மேகம் தங்கும் கற்பக மரத்தைப்போன்று அருள் பொழிவான்.

1707. ஆறு ஆதாரங்களைத் தூய்மை செய்வதால் நாடி தூய்மை அடையும். மேலும் மேதை முதலாக உள்ள பதினாறு கலைகளின் முடிவில் வானத்தின் ஒளி ஏற்படும். அறிவாலயமான சாதகனின் ஆன்மாவில் வெளி நோக்குடைய ஐம்பொறிகள் அந்தக்கரணங்கள், புத்தி என்பன அவற்றின் கீழே இழுக்கின்ற இயல்பை விட்டு நிற்கும். இவ்வாறு நிற்பது சகமார்க்கம்- தோழமை நெரீயாகும்.

1708. மேதை முதலிய பதினாறு கலைகளில் பிரணவ தியானத்தில் நின்று தூண்டினால் குண்டலினி சத்தி முறையே மூலாதாரம் முதலிய இடங்களிலிருந்து மேலே சென்று அத்துவாவை உண்டாக்கும்.. வீரியத்தை இடமாகக் கொண்ட கலையை மடை மாற்றி மேலே ஏறச் செய்யின் ஆறு ஆதாரங்களிலும் ஒளி பெருகும் உடலில் இன்பம் விளையும்.

1709. ஆறு ஆதாரங்களை உடைய உடம்பில் மேலே கூறிய வண்ணம் அந்த அறு ஆதாரங்களை அறிந்து தியானம் செய்து மேல் ஏறுங்கள். அந்த ஆதாரங்களில் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் ஐம்பதையும் கடந்தபோது பொருந்திய ஆதாரமாக உள்ள ஓர் எழுத்து நாதமயம்னான ஓம் என்ற பிரணவம்.

1710. பருமையான உடலும் பிரிகின்ற அவ்வுடலுடன் போகும் நுணுடலும் பொருந்துவது நுண்மையாய் நாதத்தில் ஒடுங்கி விரியும் ஐம்பது எழுத்துக்களாலும் தத்துவங்களாலும் ஆகும். பிறவிக்கு ஆகும் உடம்புக்கு ஆறு ஆதாரங்களும் அவற்றை எல்லாம் கடந்த பிரணவமும் பொருந்தி அமையும்.

1711. இதயத் தாமரை மேலாகப் பதினாறு இதழ்களுடன் கூடிய விசுக்தியான தாமரை கழுத்திடத்து உள்ளது. அங்குதான் தூய அறிவான ஆன்மா சிவானந்தமே தனது வடிவாகப் போய் எங்கும் பொருந்திய அறிவாய் நீக்கம் இல்லாது நிறையும்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 11:52

ஏழாம் தந்திரம்

Written by

ஏழாம் தந்திரம்

#####

ஆறு ஆதாரம்!
அண்டலிங்கம்! பிண்டலிங்கம்!
சதாசிவ லிங்கம்!
ஆத்துமலிங்கம்!
ஞானலிங்கம்!
சிவலிங்கம்!
சம்பிரதாயம்!
திருவருள் வைப்பு!
அருள் ஒளி!
சிவபூசை!
குருபூசை!
மகேசுவர பூசை!
அடியார் பெருமை!
போசன விதி! பிட்சாவிதி!
முத்திரை பேதம்!
பூரணக் குகைநெறிச் சமாதி!
சமாதிக் கிரியை!
விந்து உற்பணம்!
விந்து சயம்-போக சரவோட்டம்!
ஆதித்த நிலை –அண்டாதித்தன்!
பிண்டாதித்தன்! மனவாதித்தன்!
ஞானாதித்தன்! சிவாதித்தன்!
பசுவிலக்கணம்- பிராணன்! புருடன்!
சிவன்! பசு!
போதன்!
ஐந்திரியம் அடக்கும் அருமை!
ஐந்து இந்திரியம் அடங்கும் முறைமை!
அசற்குரு நெறி!
சற்குரு நெறி!
கூடாஒழுக்கம்!
கேடுகண்டிரங்கல்!
இதோப தேசம்!

 

திருச்சிற்றம்பலம்

@#@#@#@#@#@#

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27039504
All
27039504
Your IP: 3.135.183.89
2024-04-19 09:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg